• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

மை டியர் ராவணா வித் லவ் சீதா - 9

Vishakini

Moderator
Staff member
அத்தியாயம் 9

பயத்தில் படுத்திருந்த ராவணன் சீதாவை இறுக்கமாக அணைத்து கொண்டு உறங்கினான் ஒரு கட்டத்தில்..

இம்மியளவு கூட அவனை நகர்த்த முடியாமல் தவித்துக் கொண்டிருந்தாள்.

சரி நீ கீழேயே படுத்துக்க நான் மேலே போய் படுத்துகிறேன் பயப்பட வேண்டாம் என்று சொல்லிவிட்டு தப்பிக்கலாம் என பார்த்தால் அதுக்கும் இவன் வழி விட மாட்டேங்குறான் இங்கே தான் இருந்தாகணும் அப்படின்னு சொல்றான் வேற வழி இல்லாம இங்க தூங்கலாம் என்று பார்த்தால் கையை காலை தூக்கி மேலே போட்டு என்னை இம்சை பண்றானே..

இப்போ போதாத குறைக்கு கை காலை அசைக்கக்கூட முடியவில்லை என்னமோ பூட்டு போட்டு பூட்டின மாதிரி கைகள் அப்படியே சிக்கி கிடக்கு இவன்கிட்ட.. இப்ப என்ன பண்றதுன்னு தெரியலையே ஆண்டவா என்று நினைத்துக் கொண்டாள் அவள்..

அவன் கைகளுக்குள் அவள் சிறை பட்டு கிடந்தாள்.. அவள் கழுத்து வளைவில் முகம் புதைத்து குழந்தை போல் துயில் கொண்டிருக்கும் ராவணனை பார்க்கையில் அவளுக்கு ஒரு பக்கம் கோபம் பொத்துக் கொண்டு வந்தது..

இன்னொரு பக்கம் என்னவோ அவள் மனதிற்குள் இனம் புரியாத ஒரு உணர்வு தோன்றியது.. இன்னதென்று அவளால் அதை வகையறுக்க முடியவில்லை..

அவனை விலக்கவும் முடியாமல் நெருங்கி இருக்கவும் முடியாமல் தவித்துக் கொண்டிருந்தாள்..

எப்போதடா விடியும் என்று விடியும் வரை காத்திருந்தாள் அவள்..

ஒரு கட்டத்தில் அவளும் கண்ணயர்ந்து விட தன்னை மறந்து அவளும் அவன் அணைப்பிற்குள் அடங்கினாள்..

விடிய காலை 5 மணி..

தன் கை வளைவுக்குள் உறங்கிக் கொண்டிருந்த சீதாவை பார்த்ததும் ஒரு நிமிடம் உறைந்து போனான் ராவணன்..!!

இதற்கு முன் அவள் முகத்தை பார்க்காமல் எல்லாம் இல்லை.. பார்த்திருக்கிறான் தான்..

ஆனால் இப்பொழுது , அதுவும் அதிகாலை வேளையில் அவன் கை வளைவுக்குள் நிலவு மகள் போல் உறங்கிக் கொண்டிருக்கும் அவளை பார்க்கையில் அவன் மனதிற்குள் ஏதோ ஒரு உணர்வு குறுகுறுக்க தொடங்கியது..

ஜென்ம ஜென்மமாய் இந்த முகத்தை பார்த்து ரசித்தது போன்ற உணர்வு தோன்றியது அவனுக்கு.

சிப்பி போன்ற அவள் விழிகள் மூடி இருக்க.. பளபளக்கும் தேன் இதழ்கள் லேசாக பிளந்திருந்தது முத்துப் பற்கள் மின்ன..

ஆப்பிள் போன்ற அவளுடைய இரு கன்னங்களையும் கையில் ஏந்தி முத்தாட தோன்றியது அவன் மனதிற்கு..

" அடக்கடவுளே இது என்ன விசித்திரமான உணர்வு?? இந்த பெண்ணை நான் சந்தித்து முழுதாக இரண்டு நாட்கள் கூட ஆகவில்லை அதற்குள் இவளிடம் ஏன் எனக்கு இப்படியெல்லாம் தோன்றுகிறது?? இது தவறல்லவா ஆமாம் மாபெரும் தவறுதான்.. மனநலம் சரியில்லாத ஒரு பெண்ணை மனதளவில் கூட தவறாக நினைப்பது மாபெரும் பிழை தான்", என்று தனக்குத்தானே அறிவுரை கூறிக் கொண்டு அவளை பாவமாக ஒரு பார்வை பார்த்தான்.

மெதுவாக அவள் தலையை பிடித்து தலையணையில் வைத்து அவளுக்கு போர்வை போர்த்தி விட்டான்.

ஃபேன் காற்றிற்கு அசைந்தாடும் அவளுடைய நெற்றியில் உள்ள சுருள் முடி அவள் வதனத்தை மேலும் அழகாக காட்டியது..

சத்தம் இல்லாமல் அடி மீது அடி வைத்து அவன் நகர்ந்து போக.. அவள் அறியாத வண்ணம் அவளை ரசித்துக்கொண்டே அந்த அறையை விட்டு வெளியேறினான் ராவணன்..

சில மணி நேரங்கள் கழித்து அதாவது சரியாக எட்டு மணிக்கு கண்விழித்த சீதா.. அருகில் ராவணன் இல்லாததை கண்டு பதட்டமானாள்..!!

பெட்ரூமில் இருந்து வெளியே வந்தவள் ஹால் மற்றும் கிச்சன் வீட்டை சுற்றி உள்ள காம்பவுண்ட் பாத்ரூம் என்று எல்லா இடங்களிலும் அவனைத் தேடிப் பார்த்தாள்..

ஆனால் அவனை எங்கும் காணவில்லை..

" இவன் கூட இருக்கும் பொழுதே ஏகப்பட்ட பிரச்சனைகளை இழுத்துட்டு வந்துடுவான் அதை சமாளிக்கிறதுக்கு நமக்கு உடம்புல தெம்பு இருக்காது இந்த லட்சணத்தில் இந்த நேரத்தில் தனியாக எங்கே போய் தொலைஞ்சான்னு தெரியலையே இப்போ நான் எங்கே போய் அவனை தேடுவது??", என்று தலையில் கை வைத்த வண்ணம் சோபாவில் அப்படியே அமர்ந்து விட்டாள் சீதா சோர்வாக.

ஒருவேளை மொட்டை மாடியில் இருப்பானோ??

மத்த இடத்திலும் தேடியாயிற்று.. அங்கெல்லாம் இல்லை.. இருக்கும் மீதி ஒரே ஒரு இடம் அது மட்டும் தான் பேசாம அங்கேயும் போய் பார்த்துடலாம் ஒரு தடவை என மனதிற்குள் நினைத்துக் கொண்டவள் வேகமாக படிகளை ஏறி மாடிக்குச் சென்றாள்..

தடதடவென்று படபடக்கும் நெஞ்சோடு மாடிப்படி ஏறி வேக வேகமாக வந்த காரணத்தினால் என்னவோ அவளின் நெஞ்சு கூடு அதிர்ந்தது..!!

இடது கையால் நெஞ்சை பிடித்துக் கொண்டு வலது கையை இடுப்பிற்கு அணை கொடுத்தபடி மூச்சு வாங்க நின்றிருந்தவளின் கண்கள் அப்போதுதான் ஆசுவாசத்துடன் மெதுவாக மூடிக் திறந்தது இமை குடைகளை..

அவள் நினைத்தது போலவே இந்திர ராவணன் அங்கே தான் இருந்தான்..!!

ஆனால் அங்கே அவள் கண்ட காட்சியை பார்த்துவிட்டு ஒரு நொடி அவளின் இதயம் நின்று தான் போய்விட்டது..!!

காலை நேரத்தில் சூரியன் தங்கம் போல் ஜொலித்துக் கொண்டிருக்க அவன் கதிர்வீச்சால் அங்கே நின்று கொண்டிருந்த இந்திர ராவணனின் உடல் தகதகத்தது வேர்வை துளிகளால்..!!

வெற்று மார்போடு இடையில் சுற்றிய துவாலையோடு அங்கே கம்பீரமாக நின்று கொண்டிருந்தான் அவன்..!!

முறுக்கேரிய அவனுடைய உடல் போருக்கு தயாராக நிற்பது போல் நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு சுற்றிலும் தெரிந்த காட்சிகளை அதிசயத்தோடு வேடிக்கை பார்த்த வண்ணம் நின்று கொண்டிருந்தான்..

அழுத்தமாக தரையில் பதிந்திருந்த அவனுடைய பாதங்களில் ஒட்டிக்கொண்டிருந்த நீர் துளிகள் வழிந்து ஓடியது..

மெதுவாக நடந்து சென்று அவனை நெருங்கினாள்...

காலை வெயில் கொளுத்திக் கொண்டிருக்க அதன் வெப்பத்தை தாங்க முடியாமல் அவன் மேனி எங்கும் வேர்வை அருவி போல் புரண்டு ஓடியது..

சிக்ஸ் பேக் வைத்தது போன்ற அவனுடைய தேகத்தை கண்ணிமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள்..

"வாவ்வ்வ்......!!", என மனதிற்குள் சொல்லிக் கொண்டாள் அவனுடைய கம்பீரமான தோற்றத்தை பார்த்து ஜொள்ளு வழிந்து கொண்டே..!!

செப்பு இதழ்கள் பிளந்தபடி , கண்கள் இரண்டும் அதிர்ச்சியில் விரிந்த வாக்கில் அந்த ஹேண்ட்ஸம் ஹீரோவை இவளுடைய கண்கள் விழுங்கி கொண்டிருந்தது தீரா காதல் தேடலால்..!!

அவளின் வருகை உணர்ந்த ராவணன் மெதுவாக திரும்பி அவளை ஒரு பார்வை பார்த்தான்..

அவ்வளவுதான்......!!

மின்சாரம் பாய்ந்தது போல சொக்கி தான் போனாள் அந்த இளங்குமரி..

" அடேங்கப்பா.. ஹை வோல்டேஜ் கரண்ட்டை மொத்தமாக உடலில் பாய்ச்சியது போல இது என்ன அவன் கண்களை என்னால் நேருக்கு நேர் சந்திக்க கூட முடியவில்லை?? அவன் கண்களும், "என்ன மொத்தமாக கவுந்துட்டியா??".. என்பது போல் என்னை நக்கல் அடிக்கும் அவனுடைய கம்பீரத் தோற்றமும் என் கண்களை அங்கும் இங்கும் அசைவிடாமல் செய்கிறதே.. இதுக்கு முன்னாடி அழகான ஆண்களை பார்த்ததே இல்லையா என்ன ?? இவன் என்ன பெரிய பேரழகனா?? என்றால் அப்படி ஒன்றும் கிடையாது ஆனால் ஏதோ ஒரு மாயம் இருக்கிறது இவனிடம்.. அதுவும் இப்போ இவன் நிக்கிற இந்த போசில் சத்தியமா என்னோட கண்களை எந்த பக்கமும் திருப்ப கூட முடியல.. ஓ மை காட்..ஒருத்தன் இத்தனை அழகாக கம்பீரமாய் இருக்க முடியுமா என்ன??", என்று அவளுடைய மனம் அவனைப் பார்த்து நொடிக்கு நொடி ஆச்சரியப்பட்டுக் கொண்டே இருந்தது..!!

" பங்கமா இப்படி அவனை சைட் அடிக்கிறியே சீதா கொஞ்சம் கூட நல்லா இல்ல", என்று அவளுடைய மனசாட்சி அவளை எத்தனை முறை எச்சரித்தாலும் அவளுடைய மனம் மீண்டும் மீண்டும் ராவணன் புறமே திரும்பியது..

" நீ சொல்ற எல்லா மண்ணாங்கட்டியும் எனக்கு தெரியுது.. ஆனா என்னுடைய கண்ணை அவனை விட்டு அந்தப் பக்கம் இந்த பக்கம் கொஞ்சம் கூட அசைக்க முடியல.. ஹீ இஸ் சோ ஹாட்..", என தன் மனசாட்சிக்கு பதில் கூறிக்கொண்டே அவனை நோக்கி மெதுவாக நடந்துவள் தன்னையும் மீறி அவன் மார்பில் தன் பஞ்சு போன்ற கரங்களை பதித்தாள்..

"மார்பில் அம்பு குத்தி இருந்தால் கூட இத்தனை தாக்கம் இருந்திருக்காதோ என்னவோ.. ஆனால் இந்த பேதையின் கரங்கள் நெஞ்சில் பட்டவுடன் இத்தனை தாக்கம் உண்டாகிறதே.. இந்த நேரம் பார்த்து தான் கவசத்தை கழட்டி வைக்கும் சந்தர்ப்பம் வாய்க்க வேண்டுமா??", என்று மனதிற்குள் நொந்து கொண்டான் ராவணன்.

அவளுடைய தீண்டலில் அவனும் ஒரு நொடி உறைந்து தான் போய்விட்டான்..❤❤

அவன் நெஞ்சில் பதிந்திருந்த அவளுடைய கரங்கள் மெதுவாக அவன் கழுத்தை நோக்கி பயணித்தது..

வலது கை அவன் கழுத்தை வளைத்திருக்க.. இடது கை அவன் இடையை பிடித்திருந்தது..

தன்னுடைய சுய கட்டுப்பாட்டை இழந்து, தான் என்ன செய்கிறோம் என்பதையும் மறந்து அவனை நெருங்கியவள் மெதுவாக அவனை அணைக்கத் தொடங்கினாள்..

"நில் பெண்ணே.. என்ன காரியம் செய்கிறாய்??", என்று அவளை எச்சரித்து விட்டு பின்னே நகரத்தான் அவன் எண்ணினான்..

ஆனால் செயல்படுத்த முடியவில்லையே..!!

இருவரும் ஒருவரை மறந்து ஒருவர் மொட்டை மாடியில் கொளுத்தும் வெயிலில் கொஞ்சம் கூட சூடு சொரணை இல்லாமலே சைட் அடித்துக் கொண்டிருந்தனர்..!!

" சீதையே.. நா.. நான்.. என்.. எனக்கு..", பக்கம் பக்கமாக வசனம் பேசும் ராவணனுக்கு இன்று என்னவோ வார்த்தைகளுக்கு பஞ்சமாக போய்விட்டது போல..

அவனுடைய கரகரப்பான குரல் காதின் அருகில் கேட்ட பிறகுதான் சுயநினைவிற்கு வந்தாள் சீதா..

உடனே பதட்டத்தோடு வேகமாக அவனிடமிருந்து விலகி ஒரு அடி பின்னாடி நகர்ந்தாள்.

" என்ன இது ராவணா ஏன் இப்படி வந்து நிக்கிற யாராவது பார்த்தால் என்ன ஆகிறது?? உன்னுடைய டிரஸ் எங்க??"

" என்ன சொல்கிறாய் எனக்கு ஒன்றும் புரியவில்லையே"

" அது சரி.. உன்னுடைய மேலாடை எங்கே??"

" அதுவா குளித்து முடித்துவிட்டு உடைமாற்றலாம் என்று பார்த்தேன் ஆனால் இங்கே என்னுடைய உடைகள் எதுவும் இல்லையே.. அங்கே இருந்த இந்த துவாலையை தான் எடுத்து சுற்றிக் கொண்டேன் நான் என்ன செய்வது??", என்றான் குழப்பத்தோடு.

அப்பொழுதுதான் முழுதாக அவனை கவனித்தாள்..

அட ஆமாம்.. குளித்து விட்டு துவாலையை எடுத்து இடுப்பில் சுற்றிக் கொண்டு நேராக மொட்டைமாடி வந்து விட்டான் போல.. இவன் கிட்ட வேற டிரஸ் கூட இல்லையே இதை நாம யோசிக்காமல் விட்டு விட்டோமே.. என்று யோசித்தவள்..

அடுத்த நொடி கண்கள் பளிச்சிட அவனுடைய கைகளை பிடித்து இழுத்துக் கொண்டு கீழே சென்றாள் சீதா..!!

- தொடரும்..

 
Top Bottom