• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

மை டியர் ராவணா - 4

நிதனிபிரபு

Administrator
Staff member
அத்தியாயம் 4


கடமை முடிந்தது என்கிற நோக்கில் இந்திர ராவணனை மனநோயாளி ஆஸ்பத்திரியில் சேர்த்து விட்டு சீதா எப்படியோ சென்று விட்டாள்..


ஆனால் அவனை அங்கே வைத்துக் கொண்டு அனைவரும் படாத பாடு பட்டார்கள்..


முதல் வேலையாக அவனை முழுதாக பரிசோதிக்க வேண்டும் என்று அவனை அழைத்துச் சென்று பெட்டில் படுக்க வைத்தனர்..


எங்கேயும் அவன் ஓடிவிடாதபடி இரண்டு பக்கமும் நர்சுகள் அவனுடைய கைகளை இறுக்கமாக பற்றி கொண்டனர்..


இரு கால்களையும் அங்கே வேலை பார்த்துக் கொண்டிருக்கும் கம்பவுண்டர் பற்றி கொண்டார்..


" எத்தனையோ பேஷண்டுகளை பார்த்திருக்கேன் ஆனால் இந்த கேஸ் ரொம்ப வித்தியாசமா இருக்கு என்னால சமாளிக்கவே முடியல.. காலங்காத்தால வந்து கழுத்தை அறுக்கிறான் யார்யா இவன்??", என்று கேட்டு அலுத்து கொண்டார் அந்த கம்பவுண்டர்.


" அதுதான் தெரியல வந்த உடனே டாக்டரை பார்த்து கலாய்க்க ஆரம்பிச்சிட்டாரு இவர்.. நிஜமாகவே இவருக்கு உடம்பு சரி இல்லையா இல்ல உடம்பு சரியில்லாத மாதிரி நடிக்கிறாரா அப்படின்னு தெரியல பாக்குற பார்வையை பாருங்க..", என்று இரண்டு நர்சுகளும் அவனை பார்த்து ஜாடை பேசினர்.


" ஏய் பேசாம இருங்க டாக்டர் வராரு..", என்று கம்பவுண்டர் சொன்னவுடன் அடுத்த நிமிடமே நர்ஸ்கள் இருவரும் அமைதியாகிவிட்டனர்.


உள்ளே நுழைந்த டாக்டர் அவனுடைய இதயத்துடிப்பை செக் செய்வதற்காக ஸ்டெத்தஸ்கோப்பை எடுத்து அவன் மார்பின் மீது வைத்தார்..


" அரண்மனையில் ஒட்டடை அடிப்பவன் தானே நீ ?? எதற்காக இப்பொழுது இங்கே என்னை கொண்டு வந்து படுக்க வைத்திருக்கிறாய்?? கழுத்தில் கத்தி வைத்துக் கொல்ல போகிறாயா?? இது என்ன மார்பின் மீது எதையோ வைத்திருக்கிறாய் ?? ஆமாம் ரதத்தில் இருக்க வேண்டிய சக்கரம் எப்படி விட்டதில் சுழல்கிறது?? அதுவும் வேகமாக.. ஒருவேளை அந்து போய் என் தலையில் விழுந்து விடுமோ??", என்று மேலே கைகாட்டி கேள்வி கேட்டான் ராவணன்.


இவன் சொல்லவும்.. என்னத்தை இப்படி கைகாட்டி கூறுகிறான் என்று அனைவரும் ஆச்சரியத்துடன் மேலே பார்த்தால்..


அங்கே ஃபேன் வேகமாக சுழன்று கொண்டிருந்தது..!!


" சார் அந்த பைத்தியம் ஃபேனை பார்த்து தான் ரதத்தில் இருக்கும் சக்கரம் அப்படின்னு சொல்லுது", என்றார் கம்பவுண்டர் சிரித்துக் கொண்டே..


" என்ன ஆரோக்கியம் இப்படி பேசுறீங்க ?? நம்ம ஹாஸ்பிடலில் அட்மிட் ஆகும் ஒவ்வொரு பேஷண்டையும் இப்படித்தான் நடத்துறீங்களா?? யாரையும் மரியாதை குறைவாக நடத்தக்கூடாது என்று ஏற்கனவே சொல்லி இருக்கேன் இல்லையா?? மறந்து போயிடுச்சா உங்களுக்கு??", என்று கண்டித்தார் அவரை.


" மன்னிச்சுடுங்க சார்.."


அவனின் இதயத்துடிப்பு முதல் பிபி சுகர் வரை அனைத்தையும் செக் செய்து விட்டு அவனுக்கு தனியாக ஒரு ரூம் கொடுத்து அங்கே தங்க வைத்தார்கள்..


அவனுடைய பேச்சும் செயல்பாடுகளும் வித்தியாசமாக இருக்க போய் இந்த நிலை வந்தது..


" என்னுடைய சீதை எங்கே?? அவள் இல்லாமல் என்னால் இங்கு இருக்க முடியாது இந்த உலகம் வித்தியாசமாக இருக்கிறது.. ரதத்தில் இருக்க வேண்டிய சக்கரங்கள் விட்டதில் சுழல்கிறது.. தெருவில் குதிரை இல்லாமல் தேர்கள் ஓடுகிறது.. ஆடை என்கிற பெயரில் கிழிந்த துணியை அணிந்து கொண்டு மக்கள் நடமாடுகிறார்கள்.. வேற்று மொழியை பேசிக்கொண்டு இதுதான் தமிழ் மொழி என்கிறார்கள்.. என்னால் இங்கே இருக்க முடியவில்லை.. எனக்கு ஒன்றும் விளங்கவும் இல்லை.. என்னை போக விடுங்கள் தயவுகூர்ந்து..", என்று பிதற்றிக் கொண்டே இருந்தான் அவன் வெகு நேரமாக..


ஆனால் அதை காதில் வாங்கிக் கொள்ளத்தான் அங்கே ஆட்கள் இல்லை..


சிறிது நேரம் கழித்து அவனுக்கு ஒரு தட்டில் உணவை வைத்து எடுத்து வந்து கொடுத்தாள் ஒரு நர்ஸ்..


" பணி பெண்ணே என்ன இது??"


"ம்ம் மத்தியான சாப்பாடு பார்த்தா தெரியல..", என்று முகத்தை சுழித்து கொண்டு பதில் கூறினால் அவள்.


" ஓஹோ உணவா??"


உடனே ஆமாம் என்று வேகமாக தலையாட்டினாள் அவள்.


அப்பாடா பைத்தியம் சீக்கிரமா புரிஞ்சுக்கிச்ச.. இன்னும் எத்தனை கேள்வி கேட்டு என்னை கொல்லுமோன்னு பயந்தேன் நல்லவேளை, என்று நினைத்துக் கொண்டு அவள் அங்கிருந்து நகர முற்பட..


தட்டில்.. தயிர் சாதம் மற்றும் வெள்ளை சாதம், கூடவே சாம்பார் பொட்டலம், ரசப்பொட்டலம் ,காய்கறி என்று தனித்தனியாக வைத்துக் கொடுத்திருந்தனர்..


அதை பார்த்ததும் அதிர்ச்சியில் ராவணனின் கண்கள் விரிவடைந்தது..!!


" பணி பெண்ணே நில்.. இது என்ன திரவம் போலிருக்கிறது அதையும் ஏதோ பையில் போட்டு அடைத்து கொடுத்திருக்கிறீர்கள் ?? இந்த திரவத்தை நான் எப்படி சாப்பிடுவது ??"


" வாயில் வச்சு கடிச்ச தின்னு.. கேட்கிறான் பாரு கேள்வி", என்று சொல்லி அவள் தலையில் அடித்துக் கொண்டாள்..


அவள் சொன்னதை உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருந்த ராவணன் உடனே அந்த சாம்பார் பொட்டலத்தை வாயில் வைத்து கடிக்க..


உள்ளிருந்த சாம்பார் எதிரில் நின்று கொண்டிருந்த நர்சின் முகத்தில் பீய்ச்சி கொண்டு அடித்தது..!!


சாம்பாரால் அபிஷேகம் செய்தது போல அவருடைய முகம் முழுக்க காய்கறிகளும் கருவேப்பிலையும் இருந்தது..


" அச்சச்சோ நீர் சொன்னது போலத்தான் நான் வாயில் வைத்து கடித்தேன் ஆனால் பாருங்கள் உங்கள் முகத்தில் அபிஷேகம் ஆகிவிட்டது.."


" உனக்கு போய் சாப்பாடு எடுத்துட்டு வந்தேன் பாரு என் புத்தியை சொல்லணும்", என்று தலையில் அடித்துக் கொண்டு வேகமாக அந்த நர்ஸ் பாத்ரூம் நோக்கி ஓடினார் முகத்தை கழுவ..


தட்டில் சாப்பிடுவதற்காக வைத்திருந்த ஸ்பூனை வினோதமாக பார்த்தான் ராவணன்.


இது என்ன படகிலிருக்கும் துடுப்பு போல இருக்கிறது?? அதுவும் உலோகத்தாலான துடுப்பு போல.. இதை வைத்து நான் என்ன செய்வது?? என அதை திருப்பி திருப்பி பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தான் வெகு நேரம்..


ராவணனை ஆஸ்பத்திரியில் விட்டு விட்டு வந்த பிறகு வீட்டிற்கு வந்ததும் முதல் வேலையாக தன் பெற்றோருக்கு போன் செய்து இப்படி ஒரு வித்தியாசமான நபரை சந்தித்தேன் என்று கூறி அந்த விஷயத்தை பகிர்ந்து கொண்டாள் சீதா.


சிறிது நேரம் அவர்களோடு பேசிக் கொண்டிருந்து விட்டு அவள் தன் உணவை சாப்பிட்டாள்.


சாப்பிடும் பொழுதே அவளுடைய நினைவு ராவணனை நோக்கி ஓடியது..


நான் என்னவோ இங்க ருசியா சாப்பிட்டுட்டு இருக்கேன் அங்கே அந்த ஆள் என்னென்ன ரகளை பண்றானோ தெரியலையே..?? சாப்பிட்டானா இல்லையா இல்லை அவனை சாப்பிட வைப்பதற்கு எல்லோரும் கஷ்டப்பட்டார்களா?? இந்நேரம் அவன் என்ன பண்ணிட்டிருப்பான்?? பேசாம ஹாஸ்பிடலுக்கு போன் பண்ணி கேட்கலாமா அவன் எப்படி இருக்கான்னு..?? என்று அவளுடைய மனம் தரிக்கட்டு ஓடியது..


வேண்டாம் வேண்டாம்.. யாரோ எவரோ ரோட்டில் தான் பார்த்தேன் அவனை.. அவனுக்கும் எனக்கும் என்ன சம்பந்தமிருக்கு??


டிராஃபிக் போலீஸ் கேட்டாருங்கிற ஒரு காரணத்துக்காக அதுவும் அவருக்கு உதவி செய்யும் நோக்கில் தான் அவனைக் கொண்டு போய் அந்த ஆஸ்பத்திரியில் சேர்த்து விட்டேன்.


அதுக்குள் எனக்கு ஏகப்பட்ட பிரச்சனைகளை அவன் உண்டாக்கிட்டான்.. இந்த லட்சணத்தில் மறுபடியும் அவனைப் பற்றி விசாரிக்க போய் அவன் அங்கே ஏதாவது ரகளை செஞ்சிருந்தா அம்மா தாயே நீ கூட்டிட்டு வந்து விட்ட ஆள் ரொம்ப ரகளை பண்றான் நீயே கூட்டிட்டு போயிருன்னு, என்கிட்ட சொல்லிட்டா என்ன பண்றது ?? வேறு வினையே வேண்டாம்.. நான் ஃபோன் பண்ணவே மாட்டேன் அவன் எப்படியோ போகட்டும், என்று நினைத்துக் கொண்டே மிக வேகமாக சாப்பிட்டவிட்டு ஒரு குட்டி தூக்கம் போடலாம் என்று கட்டிலில் படுத்தாள்..


எப்பொழுது தூக்கம் வந்து அவள் படுத்தாலும் அவள் கனவில் வருவது எல்லாம் ஹாலிவுட் ஹீரோக்களும் பாலிவுட் ஹீரோக்களும் தான்.. ஆனால் இன்று என்னவோ வித்தியாசமாக அவள் காலையில் பார்த்த அந்த ராவணன் தான் வந்தான்..


அதுவும் கையில் வாளோடு..!!


அந்த வாளை எடுத்து அவள் கழுத்தில் வைத்து அவளுடைய இதழ்களை அவன் விரல்களால் வருடினான்..


" பெண்ணே நிஜமாகவே இது உன்னுடைய இதழ்களா அல்லது ரோஜாவின் இதழ்களா?? இத்தனை மென்மையாக இருக்கிறது?? ", என்று அவன் கிறக்கத்தோடு கூறவும்..


பதிலுக்கு அவனை பிடித்து தள்ளிவிடாமல் அவளும் அவனோடு ஒன்றிக்கொண்டு அவன் கன்னங்களை வருடினாள்..


முறுக்கிய அவனுடைய மீசையும், அடர்ந்த புருவங்களும் கூர்மையான விழிகளையும் கண்டு சொக்கி போனாள் பெண்ணவள்..


அவனுடைய கூர்மையான நாசி இவளை பார்த்து, "சண்டைக்கு வந்து பார்" என்று அழைப்பது போலிருந்தது அவளுக்கு..


உடனே அவன் மூக்கோடு இவள் மூக்குரசி நின்றாள்..


தடித்த அவனுடைய உதடுகள் இவளுடைய இதழ்களை பார்த்து, "எனக்கு பசிக்கிறது.. நீ எனக்கு உடனே வேண்டும்", என்பது போல் காட்சியளித்தது அவள் கண்களுக்கு..


உடனே அவன் இதழ்களை நோக்கி அவளுடைய இதழ்களை பொருத்தினாள்.. அவன் உயரத்திற்கு சற்று எம்பி தான்..!!


பெண்ணின் இதழ்களில் தேனை அருந்துவதற்காக காத்திருந்தவனின் இதழ்களில் தேனை கண்டுபிடித்து அதை ருசி பார்த்துக் கொண்டிருந்தாள் அந்த சீதை..💓💓


மெல்லிய முத்தத்தை பரிசாக அளிக்கலாம் என்று அவளை நோக்கி குனிந்தவனின் இதழ்கள் அவள் இதழ்களுக்குள் சிறைப்பட்டு கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தான் ராவணன்..!!


பாவம் பெண்ணவள் ஃபிரெஞ்ச் கிஸ் ட்ரை பண்ணலாம் என்று நினைத்திருப்பாள் போல.. அதனால் அவனுடைய இதழ்களை ஆழமாக அவள் சுவைத்துக் கொண்டிருக்கும்பொழுதே அவளை வேகமாக தள்ளிவிட்டான் இந்திர ராவணன்..!!


" பெண்ணே..!! என்ன இது?? என் இதழ்களில் இதமாய் முத்தமளிப்பாய் என்று பார்த்தால் உன் பற்களால் கடித்து என்னை காயப்படுத்த நினைக்கிறாய்.. உன்னிடமிருந்து இப்படி ஒரு வன்மத்தை நான் எதிர்பார்க்கவில்லை..", என்று கூறி அவளை ஏற இறங்க ஒரு பார்வை பார்த்தான் அவன்..


" ஐயோ இது தான் ஃபிரெஞ்ச் கிஸ்.. இது கூட தெரியாம இருக்க பாரு உன்னையெல்லாம் என்ன பண்றதுன்னு தெரியல ஆசையா கிட்ட வரும்போது இப்படி பண்ணிட்டியே.. ஸ்டுப்பிட்..", என்று வாய்க்கு வந்தபடி அவனை திட்டி தீர்த்தாள்..


" நீ கூறுவது ஒன்றும் எனக்கு விளங்கவில்லை பெண்ணே.."


" உனக்கு எது தான் விளங்கிருக்கு?? எல்லாம் என் தலையெழுத்து", என்று கூறி தலையில் அடித்துக் கொண்டாள்..


" இப்போதென்ன நீ விருப்பப்பட்டபடியே உனக்கு முத்தமளிக்க வேண்டும் அப்படித்தானே?? சரி வா உன் ஆசையை நான் நிறைவேற்றுகிறேன்", என்று அவன் கூறவும் இவளும் ஆசையோடு அவனைப் பார்க்க..


அவன் அவள் இதழ்களை நோக்கி குனிந்து அவள் செய்தது போலவே இவனும் முயற்சி செய்து முத்தம் பதிக்க போய்..


கடைசியில்..


அவனுடைய கூர்மையான பற்கள் பதிந்து அவளுடைய இதழ்களிலிருந்து ரத்தம் காட்டாறு போல கொட்டியது..!!


வலி தாங்க முடியாமல் சீதா "ஐயோ அம்மா", என்று அலறிய வண்ணம் விழுந்தடித்துக் கொண்டு எழுந்துமர்ந்தாள் அவள்..!!


" அடச்ச.. வெறும் கனவா?? பயந்தே போயிட்டேன்.. ஆமா இந்த லூசு எதுக்கு என் கனவுல வர்றான்?? அதுவும் அவன் கூட நான் ரொமான்ஸ் பண்றதா?? நெவர்.. ", என்று சிந்திக்க தொடங்கி கடைசியில் குழம்பியே போய்விட்டாள் அவள்..!!


- தொடரும்..
 
Last edited:
Top Bottom