அத்தியாயம் 7
ஆறடி உயரத்திற்கும் சற்று அதிகமான உயரத்தில் ஆஜானுபாகுவாக நின்று கொண்டிருக்கும் ராவணனின் கைப்பிடிக்குள் சிறிய கொடி போன்ற தேகத்துடன் மெல்லிய பூந்தளிராய் தஞ்சம் அடைந்திருந்தாள் சீதா ..!!
இருவரின் மூச்சுக்காற்றும் போர் புரிந்து கொண்டிருந்தது..!!
ஆழ்கடலில் மூழ்கி முத்தெடுப்பது போல் அவளுடைய கருவிழிகளில் கொஞ்சம் கொஞ்சமாக மூழ்கிக் கொண்டிருந்தான் இந்திர ராவணன்..
மீன் விழிகளால் வலை வீசி அவன் விழிகளை ஈர்த்து கொண்டிருந்தாள் சீதா..
அவள் கண்களில் நிலை குத்தி நின்ற அவனுடைய பார்வை சற்று விலகி கீழிறங்கி அவளுடைய தேனிதழ்களை மொய்த்தது..
பளபளக்கும் அவளின் செவ்விதழ்கள் அவனை சுண்டி இழுத்தது..
இது என்ன மாயம் இவளை பார்க்கும் பொழுது எனக்குள் பல மாற்றங்கள் நிகழ்கிறதே ?? என்னால் இவளை விட்டு விலக முடியவில்லை என் கை விரல்கள் கூட அசைய மறுக்கிறதே.. அது ஏன்??
காந்தத்தை ஈர்க்கும் இரும்பு போல இவளை நோக்கி என் விழிகளும் விரல்களும் ஈர்க்க படுகிறதே.. இதை என்னால் தடுக்க கூட முடியவில்லை..
முன்பின் அறியாத ஒரு பெண்ணிடம் இத்தனை நெருக்கமாக நிற்பதே பெரிய குற்றம்.. எப்படியாவது இவளிடமிருந்து விலகி நிற்க வேண்டும் என்று அவனுடைய மனம் எச்சரிக்கை செய்தது..
ஆனால் அந்த எச்சரிக்கையையும் மீறி அவனுடைய இதழ்கள் எப்பொழுதோ அவளுடைய இதழ்களை நோக்கி குனிந்திருந்தது..
முறுக்கு மீசையுடன் தடிமனான அவனுடைய இதழ்கள் பஞ்சு போன்ற அவளின் செவ்விதழ்களை ருசிக்க தொடங்கியிருந்தது..
நடப்பதெல்லாம் கனவா நினைவா என்று உணர்வதற்கு முன்பாகவே அவனுடைய தீண்டல் அவளுக்குள் மெய்சிலிர்க்க வைத்திருந்தது..
அவளும் தன்னை மறந்து அவனுடன் இணைந்து கொண்டாள் அந்த முத்த போரில்..!!
லேசாக இதழ் முத்தம் வைத்து விட்டு விலக நினைத்த அவனின் இதழ்களை விடாமல் கவ்வி சென்றது அவளின் இதழ்கள் ..!!
மெல்லிய முத்தத்தை பரிசளித்துக் கொண்டிருந்த ராவணனின் இதழ்களை வன்மையாக தீண்டிய சீதாவின் இதழ்களைக் கண்டு ஒரு நொடி திகைத்தான் இந்திர ராவணன்..!!
நிஜமாகவே இவள் பெண் தானா?? இல்லை ரத்தத்தை உறிஞ்சும் பேயா?? என் இதழ்களை இப்படி காயப்படுத்துகிறாளே.. ??
இத்தனை நேரமாக ஏதோ கனவில் மிதந்து கொண்டிருப்பது போன்ற உணர்வு ஏற்பட்டது இப்பொழுது இவள் செய்த செயலால் அனைத்தும் தலைகீழானது அவனுக்கு..!!
உடனே அவளிடமிருந்து விடுபடுவதற்காக முயற்சி செய்தான் அவன்..
கண்களை மூடி கனவில் சஞ்சரிப்பவள் போல தன்னை மறந்து அந்த இதழ் முத்த போரில் ஈடுபட்டுக் கொண்டிருந்தவரிஅவன் நினைவுகள் எங்கோ சென்றது..
இவனைப் பார்த்த கனம் முதல் அவளுடைய ஹார்மோன்கள் தாறுமாறாக வேலை செய்ய தொடங்கிவிட்டது அதை அவளே சரியாக உணர கூட இல்லை.. ஆனால் அவனைப் பார்த்த மாத்திரத்தில் இதய துடிப்பு மட்டும் அதிகரித்தது..
அவனுடைய கம்பீரமான நடையா ?? அல்லது அவளிடம் அவன் காட்டிய சிறு சிறு அக்கறையான பேச்சுகளா?? எது அவளை ஈர்த்தது என்று அவளாலயே சரியாக புரிந்து கொள்ள முடியவில்லை ஆனால் ஏதோ ஒரு விதத்தில் அவளுடைய மனம் அவனிடம் தன்னை கொஞ்சம் கொஞ்சமாக இழந்து கொண்டிருந்தது..
இப்பொழுதும் கூட அவனுடைய நெருக்கத்தால் அவள் மனதிற்குள் ஏற்பட்ட மாற்றங்களை தடுக்க இயலாமல் தன்னிலை மறந்து முத்த மழை பொழிந்து கொண்டிருந்தாள் அவள்..
பிறகு ஒரு வழியாக வலுக்கட்டாயமாக அவளை பிடித்து தள்ளி நிப்பாட்டிய ராவணனை விசித்திரமாக பார்த்து வைத்தாள்.
" பெண்ணே.. என்ன ஆயிற்று உனக்கு?? எதற்காக இப்படி செய்தாய் ஏதோ தன்னிலை மறந்து நான் உன்னை நெருங்கி விட்டேன் ஆனால் அதற்காக என்னை இப்படியா தண்டிப்பது ??என்னை தண்டிக்க வேண்டும் என்று நினைத்திருந்தால் நேருக்கு நேராக நீ என்னுடன் போரிட்டிருக்கலாம்.. வாள் சண்டை போட்டிருக்கலாம்.. அதை விட்டுவிட்டு எதற்காக இப்படி என் இதழ்களை காயப்படுத்தினாய்..??", என்று அப்பாவித்தனமாக அவளிடம் அவன் கேள்வி கேட்கவும் இவளுக்கு அப்பொழுதுதான்.. தான் என்ன காரியம் செய்தோம் என்பதே நினைவுக்கு வந்தது..
ஒரு பெண்ணாக இருந்து கொண்டு ஆணிடம் இப்படியா நடந்து கொள்வது ?? அதுவும் முன்பின் அறியாத இவனிடம் எதற்காக நாம் இப்படி நடந்து கொண்டோம்?? வலுக்கட்டாயமாக அவனிடம் , தானா இப்படி ஒரு காரியம் செய்தோம்?? என்று நினைத்து நினைத்து மாய்ந்து போனாள் அவள்..
தன்னுடைய கட்டுப்பாட்டை மீறி அவனிடம் எல்லை தாண்டி பழகுவது போல அவளுக்கு தோன்றியது இதுவரை தனக்குள் இப்படி ஒரு மாற்றத்தை அவள் ஒரு நாளும் உணர்ந்தது கிடையாது மிகவும் பலமாக அவளின் மனதை தாக்கியிருக்கிறது இவனுடைய நினைவுகள் என்பதை மட்டும் அவள் புரிந்து கொண்டாள் சீதா..
அவனுடன் அவள் பழகி முழுதாக ஒரு நாள் கூட இல்லை.. ஆனால் மனம் முழுக்க அவன் வியாபித்திருப்பது போல தோன்றியது அவளுக்கு..
கண்ணில் தோன்றிய பதட்டத்துடன் குழப்பமாக நின்று கொண்டிருந்தவனை உற்றுப் பார்க்கும் பொழுது தான் அவன் இதழில் ஏற்பட்டிருந்த காயத்தை கண்டாள்..
அந்த காயத்திற்கு காரணம் தான் தான் என்பதை அறிந்து கொண்ட போது அவளுக்கு வெக்கமாக இருந்தது..
" மானங்கெட்டவளே.. போயும் போயும் இப்படியா நடந்துப்ப?? முன்ன பின்ன தெரியாத ஒருத்தன் கிட்ட அதுவும் இந்த பைத்தியக்காரன் கிட்ட போய் இப்படி நடந்துக்கிட்டியே உனக்கு கொஞ்சமாவது அறிவிருக்கா எதனால இப்படி பண்ண?? அப்படி என்ன இவன் உன்னுடைய மனச கவர்ந்து இழுத்துட்டான் காந்தம் போல.. ??
பார்த்து பேசி பழக ஆரம்பிச்சு முழுசா 24 மணி நேரம் கூட ஆகல ஆனால் அதுக்குள்ள உன்னுடைய 24 பல்லும் அவன் உதட்டுல பதிஞ்சிருக்கு.. மானங்கெட்டவளே மானங்கெட்டவளே.. !!
அவன் என்ன கலியுக மன்னனா?? இல்ல வானத்திலிருந்து இறங்கி குதித்த தேவ தூதனா?? அவனைப் பார்த்த மாத்திரத்தில் உன்னுடைய மனசு கழண்டு உருண்டு ஓடி அவன் கிட்ட ஒட்டிக்கிச்சு போஸ்டர் மாதிரி??", என்று அவளுடைய மனம் அவளை காரி துப்பியது..
" ஐ அம் சாரி.. என்னை மன்னிச்சுடுங்க நான்.. இது.. அது.. வந்து.. நான் எப்படி.. இந்த மாதிரி நடந்தது என்று எனக்கே தெரியல", என்று சொல்லிவிட்டு அவன் கண்களை நேருக்கு நேராக சந்திக்க முடியாமல் வெட்கத்தாலும் அவமானத்தாலும் அங்கிருந்து பக்கத்து அறைக்குள் ஓடி மறைந்து கொண்டாள் அவள்.
அவளுடைய விசித்திரமான நடவடிக்கையும் பேச்சும் குழப்பமும் பதட்டமான அவளின் கண்களும் நடுக்கம் நிறைந்த அவளுடைய விரல்களையும் கூர்மையாக கவனித்துக் கொண்டிருந்த ராவணனின் மனதில் ஒன்று மட்டும் தான் இப்பொழுது தோன்றியது..
" பாவம் மனநலம் பாதிக்கப்பட்ட பெண் போலிருக்கிறது அதனால்தான் இப்படி எல்லாம் நடந்து கொள்கிறாளோ என்னவோ??", என்று மனதிற்குள் அவளை நினைத்து பரிதாபப்பட்டான் அவன்..!!
வேகமாக அறைக்குள் வந்து கதவை சாற்றி கொண்டு கட்டிலில் குப்புற படுத்து கொண்டாள் சீதா..
பதட்டத்தில் அவளுக்கு மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கியது..
மீண்டும் மீண்டும் அவனை கட்டியணைத்து முத்தமிட்ட காட்சிகள் அனைத்தும் அவள் கண்முன்னே வந்து வந்து போனது..
தானாகவே வெட்கத்தில் அவளுடைய முகம் சிவந்து போனது உடனே இரு கைகள் கொண்டு தன் முகத்தை மூடி மறைத்து கொண்டாள்..
இரவு ஒன்பது மணி..
வீட்டின் காலிங் பெல் ஒலித்தது வாசலில்..
யாராக இருக்கக்கூடும் என்று யோசித்தவள் சற்று முன்பு உணவுக்காக ஆர்டர் கொடுத்தது ஞாபகத்திற்கு வரவும் மிக வேகமாக சென்று கதவை திறக்க ஓடினாள்..
அதற்குள் ஹாலிலிருந்த சோபாவில் படுத்துறங்கிக் கொண்டிருந்த ராவணன் காலிங் பெல் சத்தத்தில் அலறியடித்துக் கொண்டு எழுந்தான்..
" போர் முரசு கொட்டுகிறது போல எதிரி நாட்டுப் மன்னன் வந்துவிட்டான் அவனை சும்மா விட கூடாது", என்று இடையில் சொருகி வைத்திருந்த வாளை எடுத்தான்..
அதற்குள் சீதா, வாசல் கதவை திறந்திருக்க கையில் பார்சலுடன் அங்கே நின்று கொண்டிருந்தான் ஒருவன்..
கண்ணிமைக்கும் நேரத்தில் வாளுடன் அவன் முன்னே சென்று நின்றான் ராவணன்..!!
"ஏய்.. அற்ப மானிடா..எதிரி நாட்டு சிப்பாய் தானே நீ.. மாறுவேடத்தில் வந்தால் எமக்கு அடையாளம் தெரியாதா?? இதோ இப்போதே உன்னை இரண்டாக பிளக்க போகிறேன்..", என்று கூறி வாளை எடுத்து அவன் முகத்தின் முன்பு சென்று சுழற்றினான்..
அந்த ஃபுட் டெலிவரி செய்ய வந்த ஆள் இவனுடைய பராக்கிரமத்தை கண்டு அரண்டு போனான்..!!
"அய்யோ மேடம்.. மேடம்.. பிளீஸ் காப்பாத்துங்க..",என்று அலறினான் அவன்.
உடனே குறுக்கே புகுந்து ராவணனின் கையை இறுக பற்றி வேறு பக்கம் அவனை திருப்பினாள்.
"சீதா.. விடு என்னை.. அவனை இன்று துவம்சம் செய்யாமல் விட மாட்டேன் நான்..", என்று திமிறி கொண்டு போனான் அவன்.
"அய்யோ.. விட்டு தொலையேன்டா.. ஏன்டா இப்படி பண்ற?? டேய் இந்தர்..", என்று அதட்டினாள் அவனை.
முதல் முறையாக தன் பெயரை அவள் உச்சரித்த போது அவனுக்கு மெய் சிலிர்த்தது..!!
அதுவும் இந்தர் என்று அவள் அழைத்தது அவனுக்கு வித்தியாசமாக பட்டது.. விசித்திரமாக அவளை ஒரு பார்வை பார்த்து வைத்தான்.
அவளின் தொடுகையிலும் அவளின் அழைப்பிலும் உறைந்து போனது அவன் உணர்வுகள்..!!
அதுவரை சீற்றமாக பேசிக் கொண்டிருந்தவன் அதன் பிறகு அப்படியே அமைதியாகி விட்டான்.
நிச்சயமாக இவனால் இப்பொழுது எந்தவித ஆபத்தும் நேராது என்பதை அறிந்து கொண்ட பிறகுதான் அவள் அவனை விடுவித்தாள் அதன் பிறகு மெதுவாக அடி மீது அடி வைத்து வாசல் அருகே சென்று அந்த பார்சலை பெற்றுக்கொண்டு ஒருமுறை அவனை திரும்பி பார்த்துக் கொண்டாள் எச்சரிக்கையாக..
ஆனால் அவன் நின்ற இடத்தை விட்டு நகர கூட இல்லை..
" சாரி நீங்க எதுவும் நினைச்சுக்காதீங்க", என்று டெலிவரி செய்ய வந்த நபரிடம் மன்னிப்பை கேட்டாள்.
" என்ன மேடம் இது உள்ளே நுழைஞ்சதும் இந்தாளு இப்படியெல்லாம் பண்றாரு என்னமோ நாடக கம்பெனிக்குள் நுழைஞ்ச மாதிரி இருந்தது.. அவனும் அவன் டிரஸ்ஸும் .அவன் பேச்சும்.. ஆளே ஒரு மார்க்கமா இருக்கானே?? இவனை எதுக்கு வீட்டுக்குள்ள வச்சிருக்கீங்க முதல்ல பைத்தியக்கார ஆஸ்பத்திரியில் கொண்டு போய் சேர்த்துடுங்க", என்று கூறி அவன் சென்று விட்டான்.
அங்கே கொண்டு போய் சேர்ப்பதற்கும் தான் வழியில்லாமல் போய்விட்டதே.. அங்கிருந்தும் தப்பித்து வந்து விட்டான் இதுக்கு மேல் என்னதான் பண்றது இவனை வச்சுக்கிட்டு என்று புலம்பினாள் மனதிற்குள் சீதா.
இரவு உணவுக்காக ஆன்லைனில் ஆர்டர் செய்திருந்தாள்..
வந்த உணவை பெறுவதற்கு முன்பாகவே வயிற்றை கலக்கி விட்டது அவளுக்கு அவன் செய்த செயலால்..
பார்சலை ஒரு கையில் வைத்துக் கொண்டு இந்தரை மறுக்கையில் பிடித்துக் கொண்டு நேராக டைனிங் டேபிளுக்கு சென்றாள் சீதா.
பொட்டலங்களை பிரித்து டேபிள் மீது வைத்து விட்டு ஒரு தட்டில் அவனுக்கு வேண்டிய உணவை எடுத்து பரிமாறி அவனை சாப்பிட சொன்னாள்..
இரவு உணவுக்காக அவள் ஆர்டர் செய்திருந்த உணவு என்னவோ பீட்சா தான்..!!
அதை விசித்திரமாக ஒரு பார்வை பார்த்து வைத்தான் அவன்..
"என்ன இது முக்கோண வடிவில் சின்னச் சின்னதாக என்னமோ இருக்கிறதே??"
"இதுதான் பீட்சா"
"என்ன??", என்று புரியாமல் விழித்தான் அவன்.
அது சரி இவனுக்கு இதெல்லாம் ஒன்னும் புரியாதா இதுக்கெல்லாம் விளக்கம் கொடுத்துட்டு இருந்தா சரி வராது.. எப்படியாவது இவனை சாப்பிட வச்சுடனும் இல்லனா விளக்கம் கேட்டு நம்மள சாவடிச்சிடுவான் என்று நினைத்துக் கொண்டு..
" இன்னும் என்ன பார்த்துட்டிருக்க?? சீக்கிரம் சாப்பிடு" என்று கூறினாள்.
பதில் பேசாமல் மீண்டும் அந்த பீட்சாவையும் அவளையும் மாறி மாறி பார்த்தான்.
இதற்கு மேல் கேள்வி கேட்பதில் எந்த பயனும் இல்லை என்று உணர்ந்து கொண்டவன் அந்த பீட்சாவை கையில் எடுத்து உண்ண தொடங்கினான்.
ஆனால் அவனால் சரியாக உண்ண முடியவில்லை வஒரு வாய் தான் சாப்பிட்டிருப்பான் அதற்குள் அதிலிருந்த சீஸ் மொத்தமும் நார் நாராக வரவும் அதை பார்த்து அதிர்ந்து போனான் அவன்..!!
" ஐயோ சீதா.. இதை நீ சாப்பிட வேண்டாம் இங்கே பார் இந்த உணவு கெட்டுப் போய்விட்டது போல அதனால் தான் இப்படி நார் நாராக வருகிறது.. கெட்டுப்போன உணவு பொருட்கள் தான் இப்படி இருக்கும் யாரோ உன்னை நன்றாக மாற்றிவிட்டார்கள் இதை நீ சாப்பிடாதே உன் உடலுக்கு தான் உபாதை வரும்", என்றான் பதறிப் போய் அவள் கையில் இருந்த பீட்சாவை தட்டி விட்டு.
" டேய் லூசு என்னடா பண்ற?? சாப்பிடுறதுக்காக நான் ஆர்டர் பண்ண ஒரே சாப்பாடு இதுதான் இப்போ இதையும் கீழே தட்டி விட்டுட்ட இனிமே எதை நான் சாப்பிடுவது கொஞ்சமாவது உனக்கு அறிவிருக்கா??", என்று கடிந்து கொண்டாள் அவள்.
" உனக்கு மிகவும் பசிக்கிறதா சீதா சற்று பொறு.. நானே உனக்கு உணவை தயாரித்து தருகிறேன் ஆனால் இப்படி கெட்டுப் போன உணவுகளை நீ தயவு செய்து சாப்பிட வேண்டாம்.. ஒரு நிமிடம் பொறு", என்று கூறியவன் உடனே அந்த வீடு முழுக்க சுற்றி வந்தான்.
பிறகு வீட்டின் அருகில் உள்ள மரத்தின் மீது ஏற தொடங்கினான் இந்திர ராவணன் சரசரவென்று..!!
- தொடரும்..

Last edited: