• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

மொழியின் இலக்கணம் நீயடா - 21

Vishakini

Moderator
Staff member

அத்தியாயம் - 21

நித்யாவை கோபத்துடன் திரும்பிப் பார்த்த முத்ரா, "ஜஸ்ட் ஷட்டப்!" என்று வார்த்தைகள் மென்று துப்பி மிரட்ட, "ம்க்கும்!ரொம்பத்தான். போவியா! எனக்கென்ன வந்துச்சு!?" வாய்க்குள் முனகியபடி அவள் திரும்பிக் கொண்டாள்.

அவள் திரும்பியதும் தன் பார்வையை அகரன் மற்றும் அம்முவின் பக்கம் திருப்பியவள் அமிர்தாவை எரிக்கும் பார்வை பாரத்திருந்தாள்.

அகரனின் அணுகுமுறை அமிர்தாவை சற்று இலகுவாக உணர வைக்க, "நான் பொறந்து வளர்ந்தது எல்லாம் நார்த் இண்டியா தான். அதனால எனக்கு தமிழ் கரெக்ட்ஆ பேச வராது. நான் சொல்றது எதாவது தப்பா கன்வே ஆகிட்டா, ரொம்ப முஷ்கில். அதான் யார்ட்டயும் பேசலை." அவள் பேசாத காரணத்தை தயக்கத்துடன் விளக்கினாள்.

"டோன்ட் வொர்ரி. உங்களுக்கு லாங்குவேஜ் ஸ்ட்ரகிள் இருக்குனு தெரிஞ்சா கண்டிப்பா நம்ம ஃப்ரெண்ட்ஸ் புரிஞ்சுப்பாங்க. அப்படி புரியாதவங்கள இக்னோர் பண்ணிட்டு போயிடுங்க. சிம்பிள்." தோள்களைக் குலுக்கி அவன் சொல்ல சரியென தலையசைத்தாள் அவள்.

"ஓகே! இங்க உங்களுக்கு முதல் நண்பனா நான் இருக்கேன். எங்கிட்ட எதாவது ஷேர் பண்றதுனா தாராளமா பண்ணலாம். ரொம்ப நேரம் நாம மட்டும் பேசிட்டு இருந்தா, இங்க மத்தவங்களுக்கு வித்தியாசமா தெரியும். அதனால இப்போதைக்கு பை!" என்றவன் தனது இருக்கைக்கு செல்ல முனைந்தான்.

அதுவரை அவர்கள் பேசுவதை பொறாமையுடன் பார்த்துக் கொண்டிருந்த முத்ரா அவன் அவளது இருக்கையை தாண்டும் போது "அகரன்!"என்றழைக்க, நின்று அவளைத் திரும்பிப் பார்த்தான்.

அவளது பெயர் சட்டென அவனது நினைவிற்கு வரவில்லை அதனால் அவளை கேள்வியாக பார்க்க, "முத்ரா. ஏன் எங்கூட எல்லாம் பேச மாட்டியா? அவளைப் போல அம்மாஞ்சியா இருந்தா தான் நீயே போய் பேசுவியா?" தன் பெயரைச் சொல்லிவிட்டு வினவினாள்.

யாரிடமும் துவேஷம் கொள்ளாத அகரன் அவளது கேள்வியை இயல்பாக எடுத்துக் கொண்டு, "ஸாரி! எல்லார் பேரும் கேட்டதுல உங்க நேம் ஞாபகம் இல்ல. அன்ட் அவங்க லோன்லியா இருக்கற மாதிரி தோணுச்சு, அதான் ஜஸ்ட் ஒரு ஃப்ரெண்ட்லி டாக் அவ்ளோ தான்." தோள்களைக் குலுக்கி சொன்னவன் தனது இடத்திற்கு சென்று விட்டான்.

அவளிடம் இத்தனை நேரம் கதையடித்தவனுக்கு தன்னிடம் பேச எதுவுமே இல்லையா!? என்ற கோபம் அவளுள் புசுபுசுவென ஏற, அதற்கு தூபம் போட்டது நித்யாவின் பேச்சு.

"உம்பேர் கூட ஞாபகம் இல்லையாம். இவ பேரே அவனுக்கு தெரியலை இதுல வந்த முதல் நாளே அவன்தான் இவளோட ஆளுனு சவால் வேற." கேலி செய்து சிரித்தாள் நித்யா.

அவளது கேலியில் பல்லைக் கடித்த முத்ரா, இதுவரை இம்மாதிரி எதையும் எதிர்பார்த்து இருந்தது இல்லை. அவள் மனதால் நினைப்பதை மறுநாளே அவள் கையில் கிடைக்கச் செய்யும் செல்வந்தரை தகப்பனாகக் கொண்டவள்.

அதீத பணமும் அதனால் அனைத்தையும் செய்து விடலாம் என்ற அவளது தகப்பனின் குணமும் அவளுள் ஊறிப் போனதில் இப்படி புத்தி வீங்கிப் போய் இருக்கிறாள்.

இதைவிட பெரிய பள்ளியில் பணத்தைக் கட்ட அவளது தகப்பன் தயாராக இருந்தாலும் கூட, பனிரெண்டாம் வகுப்பில் தங்களது தரத்தைக் குறைக்க விரும்பாத பள்ளிகள் பத்தாம் வகுப்பில் அவள் எடுத்த மதிப்பெண்களை பார்த்து நிராகரித்து விட, இந்த பள்ளியில் மட்டும் தான் அவரது பணத்தைக் கண்டு சேர்த்துக் கொண்டனர்.

அவளுமே படித்து பெரும் மதிப்பெண் பெற்று சாதிக்கவெல்லாம் பள்ளிக்கு வரவில்லை. பள்ளிப்படிப்பைக் கூட முடிக்காமல் இருந்தால் அவளது முதுகிற்கு பின்னால் விழும் ஏளனப் பார்வைகளை தவிர்க்க, பெயருக்காக ஒரு டிகிரியையாவது வாங்க வேண்டும்.

அதற்கு பள்ளிப்படிப்பை தட்டுத் தடுமாறியாவது தேர்ச்சி பெற வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே. மற்றபடி பொழுது போக்கிற்காக மட்டுமே பள்ளிக்கு வருகிறாள்.

அப்படி வந்த இடத்தில் அகரனைக் கண்டு அனைத்து மாணவிகளும் வழிவதில் அவனை தன்னை மட்டுமே சுற்ற வைக்க வேண்டும் என்ற வெறி அப்போதே அவளது மனதில் பிறந்து விட்டது. அவளது தகுதிக்கு குறைச்சலான யாரிடமும் அவள் பேசுவது கூட கிடையாது.

அப்படி இருக்கும்போது வகுப்பிற்குள் வருவதற்கு முன்பாகவே அந்த வகுப்பு மாணவ மாணவிகள் அனைவரின் தகுதியை அறிந்தவள் நித்யா ஓரளவு மேல்மட்ட குடும்பத்தை சேர்ந்தவள் என்பதால் தான் அவளிடமே பேசுகிறாள்.

அனைவரின் பெயர்களும் அவர்களது குடும்பத் தகுதியும் அறிந்த போது கூட அகரன் என்ற பெயரை கடந்து போயிருந்தாள். ஆனால் அவனது வசீகரத்தில் மொத்த பெண்களும் விழுந்ததில் இனி அவன் எனக்கு மட்டுந்தான் என்ற கர்வம்.

தந்தையின் பணி மாற்றத்தால் வடநாட்டில் இருந்து வந்த அமிர்தவல்லி பற்றிய விபரங்கள் கூட அவளுக்கு தெரியும். ஆனால் அதெல்லாம் பெரிதாக கண்டு கொள்ளவில்லை முத்ரா.

தற்போது அகரன் அவளிடம் மட்டும் இத்தனை நேரம் சிரித்துப் பேசியவன் இவளிடம் கத்தரித்தாற் போல் பேசியதில் பிபி எகிறியது. நீயெல்லாம் ஒரு ஆளா? போடா! என்று கடந்து விட எண்ணியவளை நித்யாவின் கேலி உசுப்பி விட்டது.

'அவ பெரிய இவளா? அவளை ஓட ஓட விரட்டி விட்டுட்டு உன்னைய முத்ரா முத்ரா'னு என் பின்னாலேயே சுத்த வைக்கிறேன். உனக்கு அப்பத் தெரியும் நான் யாருன்னு.' அவனிடம் மனதிற்குள் சவாலே விட்டுக் கொண்டாள்.
 
Top Bottom