அத்தியாயம் - 24
காலையில் சற்று முன்னதாக வந்த சில மாணவர்கள் ஆங்காங்கே அமர்ந்து அன்றைய வகுப்புகளில் நடக்கவிருப்பதைப் பற்றி பேசிக் கொண்டிருக்க, வழக்கம் போல் வகுப்பிற்குள் நுழைந்தாள் முத்ரா.
இன்று அகரன் சீக்கிரமே வந்திருப்பதை கண்டு புருவம் உயர்த்தியவள் கவனிக்காதது போல அவனைத் தாண்டிச் செல்ல "முத்ரா!" அவளது பெயரைச் சொல்லி அழைத்து அவளை தேக்கினான் அகரன்.
அவனாக அவளை அழைத்ததில் மகிழ்ந்தவள் "சொல்லு அகரன்." முகம் மலர வினவிட, " உங்கள்ட்ட கொஞ்சம் தனியா பேசனும்." என்றான் அகரன்.
சற்று தள்ளி அவர்களது இருக்கையில் அமர்ந்திருந்த நித்யாவிடம் புருவம் உயர்த்தி காட்டியவள், "ஓ கண்டிப்பா! ஈவினிங் க்ளாஸ் முடிஞ்சதும் ஸ்கூல் பக்கத்துல இருக்க கெஃபேக்கு போகலாமா? கொஞ்சம் ப்ரைவஸி இருக்கும்." அவனிடம் ஆர்வமாகக் கேட்டான்.
முகத்தில் எந்த உணர்வையும் காட்டாதவன், "அதெல்லாம் வேணாம். இதோ, அங்க போய் பேசலாம்." என்றவன் வகுப்பிற்கு வெளியே படிக்கட்டுகள் தொடங்கும் இடத்தில் சற்று தள்ளி ஒரு இடத்தை காட்டினான்.
அவர்களது வகுப்பிற்கு அடுத்து வகுப்புகள் இல்லாததால் அங்கு யாரும் அச்சமயம் வர வாய்ப்பில்லை. வகுப்பிற்குள் வைத்து பேசினால் மற்றவர்களின் கவனத்திற்கு வரும் என்பதாலேயே அந்த இடத்தை காட்டினான்.
அதற்கு பெரிதாக தலையசைத்து மனதிற்குள் கர்வமாக புன்னகைத்த முத்ரா சரியென்று அவன் சொன்ன இடத்திற்கு வர, "எம்மேல உங்களுக்கு எதாவது இன்ட்ரஸ்ட் எதுவும் இருக்கா?!" முகத்தில் எந்த உணர்வும் இல்லாமல் எந்த முகாந்திரமும் இல்லாமல் பட்டென கேட்டான் அகரன்.
"நான் முதல்ல இருந்தே உங்கிட்ட பேசி பழகினதுல அது உனக்கு புரியவே இல்லையா அகரன்? " அவளும் சளைக்காமல் உடனே கேட்டுவிட, அதுவரை இலகுவாக இருந்த அவனது முகம் மாறியது.
"ஓஓ.. எனக்கு அது தெரியல. அன்ட் எனக்கு லவ்ல எல்லாம் இன்ட்ரஸ்ட் இல்ல. என்னோட லட்சியம் வேற. அதுக்கான பாதையில இதுமாதிரி டைவர்ஷன்க்கு எல்லாம் எனக்கு நேரமில்ல முத்ரா. அதனால நீங்க வேற யாரையாவது விரும்புங்க." என்றதும் அவள் முகம் கோபத்தில் சிவந்தது.
மேலும், "க்ளாஸ்ல இருக்கற மத்த எல்லார் கூடவும் பழகற மாதிரி தான் உங்கள்ட்டயும் பேசி பழகுனேன். பட் நீங்க இப்படி ஒரு இன்டென்ஷன்ல தான் பழகுறீங்கனு தெரியாது." அகரன் சொன்ன சொற்கள் அவளது கோபத்திற்கு தீனி போட்டது.
"தெரிஞ்சிருந்தா முதல்லேயே இதெல்லாம் செட் ஆகாதுன்னு சொல்லி அப்பவே உங்களுக்கு விளக்கி இருப்பேன். உங்க மனசுல இப்படி ஒரு தாட் வர்ற மாதிரி நான் எப்பயாவது பிகேவ் பண்ணி இருந்தா, ஐ ம் ஸாரி!" என்றவன் அவ்வளவு தான் பேச்சு என்பது போல வகுப்பிற்குள் செல்ல திரும்பி விட்டு,
"அஸ் எ ஃப்ரெண்டா நீங்க எப்பவும் எங்கூட பேசலாம். பட் எங்கூட யார் யாரெல்லாம் பேசனும் பழகனும்னு நீங்க டிசைட் பண்ண வேண்டிய அவசியம் இல்ல." அழுத்தமான பார்வையோடு கூறிவிட்டு சென்று விட்டான்.
அமிர்தாவை மிரட்டியதை அவன் கண்டு கொண்டான் என்பதை உணர்ந்த முத்ராவிற்கு, அவளுக்கு ஆதரவாக இவன் பேசுவதாக எண்ணி அவள்மீது மேலும் வன்மம் ஏற, அங்கேயே நின்று மனதிற்குள் கொதித்துக் கொண்டிருந்தாள்.
அத்தோடு, 'எவ்ளோ திமிரு இருந்தா எல்லாரையும் போல என்னையே 'பத்தோட பதினொன்னு அத்தோட நீ ஒன்னு'ன்ற மாதிரி சொல்லிட்டு போவான்!?' மனதிற்குள் அவன்மீது கோபம் கொண்டு கொதித்தவள்,
'உனக்கு நான் அவ்ளோ மட்டமா போயிட்டேனாடா? இடியட்! இவனை எல்லாம் நான் பார்க்கறதே அவனுக்கு கிடைச்ச அதிர்ஷ்டம். இதுல நீ.. என்னை வேணாம்னு சொல்லிட்டு போற. உனக்கு நான் யாருன்னு காட்டறேன்.'
'இந்த முத்ரா நினைச்சதை செய்யாம விட்டதில்லை. இதுக்காக நீ ரொம்ப.. ரொம்பவே வருத்தப்படுவ அகரா!' கோபத்தில் கொதித்தவள் அவன் மீதும் மனதிற்குள் வன்மம் கொண்டு கொப்பளித்தாள்.
அகரன் வகுப்பிற்கு வந்தபிறகு கூட முத்ரா உள்ளே வராமல் இருக்க, வெளியே அவளைத் தேடி வந்து பார்த்த நித்யா அங்கேயே நின்ற முத்ராவை கண்டு குழப்பத்துடன் அவளிடம் நெருங்கி, "என்னாச்சு முத்ரா?!" எனக் கேட்டாள்.
அதுவரை அகரனின் பேச்சில் கொதித்துக் கொண்டிருந்தவள் சட்டென தன் முகத்தை மாற்றிக் கொண்டு இன்ஸ்டன்ட் வெட்கப் புன்னகையுடன்,
"அவன் என்னை லவ் பண்றானாம். அதைச் சொல்லத் தான் தனியா கூட்டிட்டு வந்து இருக்கான். ஈவினிங் ஸ்கூல் முடியறதுக்குள்ள என்னோட முடிவை கேட்குறான்." என்று முழு டைனோசரை டிஷ்யூ பேப்பர் கொண்டு மூடி மறைத்தாள்.
முத்ரா சொன்னதைக் கேட்டு முதலில் கண்கள் அகல விரித்த நித்யா பிறகு அவளை நம்பாத பார்வைப் பார்க்க "நீ நம்பலையா? இரு உனக்கு இப்பவே ப்ரூவ் பண்றேன்." என்றவள் அவளை அழைத்துக் கொண்டு வகுப்பிற்குள் வந்து அகரன் முன் நின்றாள்.
"நீ சொன்னது எனக்கு புரிஞ்சது அகரன். எனக்கு ஓகே தான்." சிறு சிரிப்புடன் முத்ரா சொல்லி தன் கையை நீட்ட, புன்னகையுடன் அவளது கைப்பற்றி குலுக்கிய அகரன், "என்னோட ஃபீலிங்ஸை புரிஞ்சுக்கிட்டதுக்கு ரொம்ப தேங்க்ஸ் முத்ரா!" என்றதை திறந்த வாய் மூடாமல் பார்த்திருந்தாள் நித்யா.
அதற்கு மேல் அங்கிருந்தால் அவன் எதாவது உளறி விடுவான் என்பதால் நித்யாவை இழுத்துக் கொண்டு தங்களது இடத்திற்கு வந்து அமர்ந்து விட்ட முத்ரா அகரனை குரோதத்துடன் பார்த்தவள் நித்யா கவனிக்கும் முன் சட்டென இயல்பாக மாறி விட்டாள்.
அகரனின் அருகிலிருந்த தருண், "என்னாச்சு மச்சான்?" எனக் கேட்க, "ஒன்னுமில்லடா. எடுத்துச் சொன்னேன், புரிஞ்சுக்கிட்டாங்க போல. சரி அதை விடு இன்னிக்கு கெமிஸ்ட்ரி லேப் இருக்கு. லேப் கோட் கொண்டு வந்தியா?" முத்ராவின் பேச்சை இயல்பாக கடந்து விட்டு அடுத்த விசயத்திற்கு வந்து விட்டான் அகரன்.