• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

மொழியின் இலக்கணம் நீயடா - 42

Vishakini

Moderator
Staff member

அத்தியாயம் - 42

"இந்தாங்க ஆன்ட்டி ஸ்வீட்! நீங்க இல்லனா நான் இந்தளவு மார்க் எடுத்திருக்க முடியாது." முகம் கொள்ளா புன்னகையுடன் தமிழுக்கு இனிப்பை நீட்டிய அமிர்தா,

"நைட் டின்னர் எங்க வீட்ல தான், அம்மா சொல்லிட்டாங்க. அங்கிள் வந்ததும் எல்லோரும் வந்துடுங்க. நான் போய் பாட்டியை பார்த்துட்டு வர்றேன்." துள்ளலுடன் ஓடியவளை புன்சிரிப்புடன் கண்டிருந்தாள் தமிழ்.

அமிர்தா மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு திரும்பியதுமே நடந்த நிகழ்வுகளை மறந்து விட்டு படிப்பில் கவனம் செலுத்துங்கள் என்று அறிவுரைத்த தமிழ் தினமு‌ம் அகரனோடு சேர்த்து அவளையும் அமர வைத்து சொல்லிக் கொடுத்து படிக்க வைத்தாள்.

இதனால் இரு வீட்டினர் இடையே நல்ல நட்பு உண்டானது. பொதுத் தேர்வு முடிந்த பிறகும் கூட கம்ப்யூட்டர் கோர்ஸ் சிலதை பரிந்துரைத்த தமிழ், அதற்கான வகுப்புகள் பற்றி அவளுக்கு அறிவுரைத்தாள்.

அமிர்தா அவ்வப்போது அகரனின் வீட்டிற்கு வந்து சென்றதில் துளசியுடன் நல்ல நெருக்கம் உண்டாகி விட்டது. அந்த வீட்டில் பெண் பிள்ளை இல்லாத வெற்றிடம் அமிர்தாவால் பூர்த்தியானது.

அமிர்தாவின் பெற்றோருக்கு தன் மகளிடம் கூட மரியாதையாக பேசும் அகரனின் குணத்தைக் கண்டு இந்த பிள்ளையை எப்படி எல்லாம் சித்தரிக்க முயன்றாள் அந்தப் பெண் என்று தோன்றியது.

அதேசமயம் ஆங்காரம் அழிவைத் தரும் என்பதற்கு உதாரணமாகிப் போனாளே! என்று அவளது தற்போதைய நிலையை நினைத்தும் சற்று வருத்தமாகவும் இருந்தது.

பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாகி அகரன் பள்ளியில் முதல் மதிப்பெண் மாணவனாக தேர்ச்சி அடைய, அமிர்தாவும் நல்ல மதிப்பெண்கள் எடுத்து தேர்ந்தாள். அதற்காக அகரனின் குடும்பத்தை அழைத்து விருந்து வைக்க முடிவு செய்தனர் அமிர்தாவின் பெற்றோர்.

துளசியுடன் பேசிவிட்டு ஆசிர்வாதம் வாங்கி வந்த அமிர்தா, "அகரன் வீட்டுல இல்லையா ஆன்ட்டி?" அவன் இருந்தால் இந்நேரம் வெளியே வந்திருப்பானே என்ற குழப்பத்துடன் கேட்டாள் அமிர்தா.

"அவன் காலேஜ்ல போய் விசாரிக்க போய் இருக்கான். நீ முதல்ல வானத்துல இருந்து இறங்கி கொஞ்சம் இந்த ஸோஃபால உட்காரு. இதோ ரெண்டே நிமிசம் வந்துடறேன்." என்ற தமிழ் உடனே சென்று அவசரமாக பாயாசம் செய்து அவளை குடிக்க வைத்து சிறிது நேரம் பேசியபிறகு வீட்டிற்கு அனுப்பி வைத்தாள்.

நாட்கள் வேகமாக நகர, அகரன் மருத்துவப் படிப்பிலும், அமிர்தா பொறியியல் கல்லூரியிலும் சேர்ந்து படிக்கத் தொடங்கினர்.

இதற்கிடையே மருத்துவமனையில் இருந்த முத்ராவிற்கு பார்வை நரம்புகள் பாதிக்கப்பட்டதால் அவளது பார்வை பறி போன நிலையில் கை, கால் எலும்புகள் கூட மாதங்களாகி விட்டது.

அந்த இடைப்பட்ட காலத்தில் எப்போதும் தாய் மீது பெரிதாக பாசம் இல்லாத முத்ராவிற்கு தற்போது அவரது அக்கறையும் பாசமும் சேர்ந்த கவனிப்பு உள்ளுக்குள் குற்ற உணர்வைத் தர பெரிதும் மாறிப் போயிருந்தாள்.

ஒரு பெண்ணாக இருந்தும் இன்னொரு பெண்ணை அத்தனை கேவலமாக நடத்திய மகளை எண்ணி கோபத்தில் அடித்து விட்டதாக கூறி அழுத தந்தையின் கண்ணீரோடு அவர் கூறிய படிப்பின் முக்கியத்துவம் அவளது காதில் விழுந்து கருத்தில் பதிந்தது.

இப்பொழுது எல்லாம் மிகவும் அமைதியாகி விட்டாள். நிதானமாக யோசிக்கிறாள். தன் மீது உயிரை வைத்திருக்கும் தந்தைக்காக தனது படிப்பை கண்டிப்பாக முடித்தே ஆக வேண்டும் என்ற எண்ணம் தோன்றும் அதேசமயம் அவளது பார்வை இழப்பு தற்போது பெரும் தடையாக இருந்தது.

அவள் பேசவில்லை என்றாலும் தினமும் அவளுடன் இயல்பாக உரையாடும் பிரபாகரனிடம் ஒருநாள், " நான் பிளஸ்டூ முடிக்கலாம்னு தான் நினைக்கிறேன்ப்பா. ஆனா இப்ப என்னால எதுவுமே செய்ய முடியாத குருடியா போயிட்டேனே." மனதின் குமுறலை வார்த்தைகளாக கொட்டி விட்டாள்.

"அப்படி எல்லாம் சொல்லாத முத்து! உனக்கு சீக்கிரமே கண்ணு கிடைச்சுடும். அப்பா அதுக்கான எல்லாமும் செய்துட்டு தான் இருக்கேன். நீ படிக்கனும்னா அதுக்கு கூட ஆளை ரெடி பண்றேன்." மகள் பேசியதில் மகிழ்ந்தாலும் அவளது நிலையை எண்ணி எழுந்த வருத்தத்தை மறைத்துக் கொண்டு கூறினார்.

அதன்படி அவளுக்கு வீட்டிலிருந்தே படிக்கும்படி ஒரு டீச்சரையும் பாடம் சொல்லித்தர அமர்த்தி, அடுத்து வந்த பரீட்சைக்கு தயார் செய்ய, அவளும் சிரத்தையாக படித்தாள்.

தேர்வுகளுக்காக அவளுக்கு ஸ்க்ரைப்பர் அமர்த்தி எழுத படிவங்கள் பூர்த்தி செய்திருக்க, அதற்காக அமிர்தா வருவாள் என முத்ரா எதிர்பார்க்கவில்லை. அதுவும் வந்தவள், "ஹாய் முத்ரா!" அவளிடம் இயல்பாக பேசுவாள் என சுத்தமாக நினைக்கவில்லை.

சிறிது நேரம் எங்கோ பார்த்தபடி மௌனமாக இருந்த முத்ராவிற்கு தனது செயல் தவறென்று என்றோ புரிந்து விட்டது. ஆனால் அமிர்தாவை சந்தித்து மன்னிப்பு கேட்க ஏதோ ஒன்று தடுத்தது.

இன்று அவளே வந்து இயல்பாக பேசவும் முத்ராவிற்கு கண்கள் கலங்க, "ஸ..ஸாரி அமிர்தா!" சிறு தடுமாற்றதோடு கேட்க, 'அதெல்லாம் மறந்து விடு' என்று அந்த விசயத்தை கடந்து விட்டாள் அமிர்தா.

முத்ராவின் செயலால் முதலில் அரண்டு இருந்தவள்தான். ஆனால் தற்போது அவளது நிலையை அறிந்த பிறகு அமிர்தாவிற்கு அவளை எண்ணி வருத்தமாக மட்டுமே இருந்தது.

முத்ராவிற்கு தான்தான் ஸ்க்ரைப்பராக வருகிறோம் என்று தெரிந்த பிறகு அவளுக்காக நேர்மையாகவே அனைத்து தேர்வுகளையும் எழுதி கொடுத்தாள் அமிர்தா. அதன்பிறகு விரைவிலேயே அவள் குணமாக இறைவனை வேண்டுகிறேன் எனக்கூறி முத்ராவிடம் விடை பெற்றாள்.
 

ஷமீம்

Active member
முத்ராவை நினைத்தால் கஷ்டமாக தான் இருக்கு.. ஆனால் செய்த தப்புக்கு இறைவன் தண்டனை கொடுக்காமல் விடுவதில்லை.. இனியாவது நல்ல விதமாக நடக்கணும்..
 
Top Bottom