• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

மொழியின் இலக்கணம் நீயடா - 53

Vishakini

Moderator
Staff member

அத்தியாயம் - 53

அவளிடமிருந்து விலகிய அகரன் அவளை அமர வைத்து "எனக்காக இவ்வளவு செய்திருக்கற நீ, எப்போ இருந்து என்னை லவ் பண்ற அம்மு? அந்த லவ்வை எப்ப தெரிஞ்சுக்கிட்ட?" அவளது கரத்தைப் பற்றி அறிந்து கொள்ளும் ஆர்வத்துடன் கேட்டான்.

அவனை கண்களில் காதலுடன் திரும்பிப் பார்த்த அமிர்தா,"சரியா சொல்லத் தெரியல அகரா. மே பி.. நீ எங்கிட்ட முதன்முதலா பேச வந்தியே அப்பவே என் மனசுல உம்மேல ஈர்ப்பு வந்துடுச்சுனு நினைக்கிறேன்." என்றதும் அவன் ஆச்சர்யமாக பார்த்தான்.

"முத்ராவும் நீயும் லவ் பண்றதா அவள் சொன்னப்பவே என் மனசு ரொம்ப ஹெவியாகிடுச்சு. ஏன்னு காரணம் புரியல. அவ என்னை மிரட்டுன பிறகு உங்கூட பேசாம இருந்தேனே, அப்ப தான் என்னை நானே உணர்ந்தேன்.
அப்ப எல்லாம் உங்கிட்ட பேசச் சொல்லி என் மனசு பாடாப்படுத்தும்."

"எங்கே அப்படி உன்னோட நான் பேசி அதால உங்க காதலுக்கு பிரச்சனை வரக்கூடாதுனு என்னை கன்ட்ரோல் பண்ணிட்டு இருந்தேன். அதெல்லாம் என்னை நினைச்சு நானே பயந்த நாட்கள்!" என்றவள் அன்றைய நாட்களின் நினைவில் இருந்தாள்.

"ஆனா, நீ முத்ராவை இல்ல வேற யாரையுமே லவ் பண்ற ஐடியாவுல இல்லனு தருண் சொன்ன பிறகு, என் மனசுல பூத்த உணர்வுகளை உங்கிட்ட சொல்லவே ரொம்ப பயந்தேன். "

"ஒருவேளை நான் உன்னை லவ் பண்றதா சொல்லி, கோபத்துல நீ மொத்தமா என்னை விட்டு விலகி போயிட்டா.. அதை என்னால தாங்க முடியாது அகரா." அதே கலக்கத்தில் அவள் பேச அவளது கரத்தில் அழுத்தம் கொடுத்தான் அகரன்.

"அதனால தான் நட்புங்கற எல்லை கோட்டுலேயே நின்னேன். படிப்பு முடிஞ்சு நான் வேலைக்கு போனதும் அப்பா அலையன்ஸ் பார்க்கத் தொடங்க, என்னோட அடுத்த சோதனை காலம் ஆரம்பிச்சது."

"நீ என்னைப் பற்றி என்ன ஸ்டேட்ல இருக்கறனு தெரியாம, என்னோட காதலையும் உங்கிட்ட வெளிப்படுத்த முடியாம.. அப்பாவை சமாளிக்க ரொம்ப திணறிட்டு இருந்தேன். அப்ப தான் நீ நியூயார்க் போன." அகரன் அவளையே தான் பார்த்திருந்தான்.

ஒருத்தி தன்மீது காதல் கொண்டு இத்தனை ஆண்டுகள் தவம் கிடக்க அதைக்கூட அறியாமலிருந்து இருக்கிறேனே என்று தன்னையே திட்டிக் கொண்டிருந்தான்.

" சரி.. நீ காதலிக்கிறத சொல்லிட்ட, ஆனா நான் உன்னைத்தான் லவ் பண்றேன்னு அதெப்படி அவ்வளவு உறுதியா தெரியும்? வீட்ல எல்லாம் பேசி சம்மதிக்க வச்சிருக்கிற. சப்போஸ் நான் உன்னை லவ் பண்ணலனு சொல்லி இருந்தா?.." கேள்வியாக நிறுத்தினான்.

அவனது முகத்தைப் பார்த்த அமிர்தா அவனது கன்னத்தை வலிக்காமல் கிள்ளி," அதான் ஸாரு கண்ணுல டன் கணக்குல பொறாமை வழிஞ்சதே! அப்பவே எனக்கு ஓரளவு கன்ஃபர்ம் ஆகிடுச்சு." என்றவளின் பேச்சில் அவன் குழப்பமாகப் பார்த்தான்.

"நீ நியூயார்க் போனபிறகு ஒருமுறை என்னை ரொம்ப மிஸ் பண்றதா வாய் விட்டே புலம்புன, அதோட நவீன்கிட்ட நான் சிரிச்சு பேசும் போதெல்லாம் உன் முகத்துல எள்ளும் கொள்ளும் வெடிக்குமே." என்றவள் சிரிக்க, "அவ்வளவு அப்பட்டமா தெரிஞ்சதா!?" அவன் ஆச்சர்யமாக வினவினான்.

ஆமென்று தலையசைத்தவள், "அநேகமா நவீன் என்னை விரும்பறதா உங்கிட்ட சொன்ன பிறகு தான் அவன் இல்லாத நேரமா இங்க கால் செய்திருப்ப, கரெக்டா?" சிறு சிரிப்புடன் அவள் கேட்க, அவனோ அசடு வழிய தலையசைத்தான்.

"ம்ம்.. ஆமா! ஆனாலும் சில நேரம் எப்படியோ வந்துடுவான். அவன் உங்கிட்ட சிரிச்சு பேசும்போது எனக்கு ஏன்னே தெரியாம அவ்வளவு கோபம் வந்தது. சரி, எப்படியோ ஊருக்கு போகும்போது அவனை கழட்டி விட்டு வரலாம்னு இருந்தா, கூடவே வர்றேன் சொல்லி வந்துட்டான்." எரிச்சலாக சொன்னவன்,

"இங்க வந்தும் அவன் உங்கிட்ட அப்படி சிரிச்சி பேசுறான், அதுக்கு தகுந்தாற்போல நீயும் அவன்ட்ட சிரிக்க சிரிக்க பேசுனியா, அதோட எஃபெக்ட் தான் அன்னிக்கு உங்கிட்ட கோபமா கத்திட்டேன்." வருத்தமாக முடித்தான்.

"உன்னை திட்டிட்டு எனக்கு மனசே சரியில்ல. அப்ப தான் உன்னை நான் லவ் பண்றதையே உணர்ந்தேன். சரி எதுவானாலும் உன் விருப்பப்படி நடக்கட்டும்னு ஒருவழியா என்னை நானே சமாதானம் செய்து உன் வீட்டுக்கு வந்தா, "

"அவன் அப்பவே அந்த பேச்சை எடுப்பான்னு எதிர்பார்க்கல. அதுக்கு உங்கப்பா யோசிச்சு சொல்றேன்னு வேற சொல்ல, 'எல்லாம் முடிஞ்சது'னு ஆகிடுச்சு எனக்கு. வலி.. அவ்வளவு வலி.." அன்றைய தினத்தை எண்ணி வலியுடன் கூறினான்.

"நீ வேற உன் அப்பா பேச்சை மீற மாட்டியே, ஸோ..ரொம்ப பயந்தேன். அதுக்கு அப்றம் என்னால இயல்பா இருக்க முடியல அம்மு!" அந்த வலியின் தாக்கத்தை இப்போதும் உணர்வது போல அவன் நடுங்க, அவனது கரத்தை ஆறுதலாக அழுத்திப் பிடித்தாள் அமிர்தா.

அதன்பிறகு அவளது தந்தை நவீனை அழைத்து அவள் சம்மதித்து விட்டதாக சொன்னதும், நவீனிடம் பேச வேண்டும் என்று அவள் சொன்னதாகவும் கூறியதைக் கேட்டு சுத்தமாக மனமுடைந்து போனதைக் கூறினான்.

"என்னால உன்னை அவனோட சேர்த்து வைச்சு பார்க்க முடியாது. அதனால தான் மால்ல நீ வந்ததும் நான் கிளம்பிட்டேன்." என்றவனிடம் அன்று அவனது கண்களில் தென்பட்ட உணர்வில் தான் அவனது காதலை உறுதிபடுத்தியதாக கூறினாள் அவள்.

நேரம் போவது தெரியாமல் இருவரும் உரையாடிக் கொண்டிருக்க," அம்மு! வந்து மதிய சாப்பாட்டையாவது சாப்பிட சொல்லுடா." கதவிற்கு வெளியே தமிழின் குரல் கேட்க, அவளை விட்டு விலகி, "அச்சச்சோ அம்மா வேற கோபமா இருக்காங்க!" பதறியவனைக் கண்டு, சிரித்தாள் அமிர்தா.

உடனே அறையிலிருந்து வெளியே வந்த அகரன் தாயை அணைக்க, "ஒன்னும் கொஞ்ச வேணாம் போ!" அவள் முறுக்கிக் கொண்டு செல்ல.. மேலும் சிறிது நேரம் தமிழிடம் கெஞ்சி கொஞ்சி ஒருவழியாக சமாதானம் செய்தான்.
 
Top Bottom