அத்தியாயம் - 9
தலைமீது கைவைத்து முகத்தை மறைத்தபடி அகத்தியன் படுத்திருக்க, அவனையே ஒரு சங்கடமானப் பார்வையோடு அசையாது பார்த்திருந்த தமிழின்
மனதில் சற்று நேரத்திற்கு முன்பு நடந்தது ஓடியது.
இரவு உணவின்போது விசாலம் சொன்னதையே யோசித்தபடி அமைதியாக இருந்த அகத்தியனின் மௌனம், அவருக்கு கோபமாகத் தெரிய உணவை முடித்தபிறகு சமையலறைக்கு வந்த மகளை ஒருபிடி பிடித்துவிட்டார்.
"ஏன்டி போனா போன இடம், வந்தா வந்த இடம் உட்கார்ந்துடுவியா? மாப்ள எவ்ளோ நேரம் தனியா எங்களோடவே பேசிட்டு இருப்பாரு. போனவ ஒன்னு அவரையும் கூட்டிட்டு போய் இருக்கனும், இல்ல சீக்கிரமாவது வீட்டுக்கு வந்திருக்கனும்."
"இப்ப பாரு நீ இவ்ளோ நேரமா இல்லாததால மாப்ள உம்முனு இருக்காரு. போய் அவர்ட்ட என்னனு கேட்டு சமாதானம் செய்யி. நல்ல மனுசன்! அவர் மனசு கோணாம நடந்துக்க தமிழும்மா. " திட்டியபடி தொடங்கியவர் சற்று ஆதங்கமாக முடிக்க, தாய் கூறியபிறகு தான் தமிழ் அவனைப் பற்றி யோசித்தாள்.
உண்மைதானே! அவனுக்கு இங்கே இவர்களை விட்டால் வேறு இடமோ ஆட்களோ யாரையும் அதிகம் தெரியாதே. அப்படி இருக்கையில் நெடுநாளைய தோழியை கண்டதும் பேச்சுவாக்கில் நேரம் போனதே தெரியாமல் தான் அப்படியே அங்கே இருந்து விட்டதில் தவறிழைத்ததாக உணர்ந்தாள்.
அதை ஊர்ஜிதம் செய்வது போல அகத்தியனும் அவளிடம் எப்போதும் போல கனிவாக எதையும் பேசாமல் அமைதியாக இருப்பதில் மனம் சுணங்கிப் போனாள் தமிழ்.
அதென்னவோ அவனது இயல்பான புன்னகை முகம் காணவில்லை என்றால் அவளது மனதைப் போட்டு என்னவோ பிசைகிறது. அவளது மனமே 'எல்லாம் உன்னால தான்! நீ அவரை யோசிக்காம விட்டுட்டு போனதால தான் அவர் இப்படி இருக்காரு.' என அவளை சாடுகிறது.
"ஸாரிங்க." திடுமெனக் கேட்ட அவள் குரலில் தன் சித்தனையிலிருந்து கலைந்த அகத்தியன் குழப்பமாக "எதுக்கு?!" எனக் கேட்டது அவனது கோபமாகத்தான் அவளுக்கு தெரிந்தது.
அவளது தோழியைக் காணச் சென்று தாமதமாக வீட்டிற்கு வந்ததைச் சொல்லி அதற்காக ஸாரி கேட்டதாக அவள் சொல்லவும், " இதிலென்ன இருக்கு. உன் ஃப்ரெண்டை நீ பார்க்கப் போன." இதில் மன்னிக்க என்ன இருக்கிறது என்று அவனுக்கு இன்னமும் புரியாமல் பதிலளித்தான்.
அவன் இயல்பாகக் கேட்ட விதம் அவளுக்கு கோபமாகத் தெரிய, அதிலும் எப்போதும் போல அவளை அழைக்காதது மற்றும் கனிவாக பேசாதது அனைத்தையும் அவள் மனம் குறித்துக் கொண்டது.
அதில் முணுக்கென்று கண்ணீர் எட்டிப் பார்க்க, அந்த அரையிருளில் அகத்தியனுக்கு அது தெரியாமல் போனது. சில நொடிகள் தனது சிந்தனையை விடுத்து அவள் எதாவது பேசுவாள் என்று எதிர்பார்த்து அமைதியாக இருந்தான்.
அவள் பேசவில்லை என்றதும் உறங்கி விட்டாளோ என்றெண்ணி அவனும் அமைதியாகவே இருக்க, ஏசியின் சத்தத்தை மீறி விசும்பல் சத்தம் கேட்டதும், பட்டென்று அருகிலிருந்த இரவு விளக்கை உயிர்ப்பிக்க, அதை எதிர்பாராதவள் கண்ணீரைத் துடைக்கும் முன்பு அவளது கண்ணீர் அவனது பார்வையில் பட்டுவிட்டது.
அதைக்கண்டு பதறியவன் , "என்னாச்சுடா? எதாவது பிரச்சனையா? ஏன் அழுதுட்டு இருக்கம்மா?" தன் கரம் கொண்டு அவளது கண்ணீரை துடைத்தபடிக் கேட்க, விசயத்தை விளக்குவதற்குள் அழுகை பொங்கி விட்டது அவளுக்கு.
அவள் சொன்னதைக் கேட்டவனுக்கு ஹையோ என்றிருந்தது. "இதுக்குப் போய் யாராவது சின்னப்புள்ள மாதிரி அழுவாங்களா?" கேலிச் செய்தவன், தான் ஏதோ சிந்தனையில் இருந்ததால் அப்படி பதிலளித்ததாகச் சொல்ல அவள் அதை நம்ப வேண்டுமே!.
அவன் பொய் கூறுவதாகச் சொல்லி மூக்குறுஞ்சல் வேறு. அவளது செய்கையில் அவன் புன்னகைக்க அவளுக்கு அப்போது தான் அழுகையே மட்டுப்பட்டது.
அவளை அருகே வருமாறு கை நீட்டி அழைத்தவன் புஜத்தில் வாகாக வந்து நெருங்கிப் படுத்துக் கொண்டவள் அவன்மீது ஒட்டிக் கொள்ள அவனுக்கு தான் ஹார்மோன்கள் கூத்தாடத் தொடங்கியது.
எனினும் அவளது மனநிலை புரிந்து சட்டென சுதாரித்தவன், "எனக்கு உம்மேல கோபமெல்லாம் ஒன்னுமில்ல கண்ணம்மா. வீணா மனசைப் போட்டு குழப்பாம தூங்குடா." அவளது கேசத்தை வருடிவிட்டவன் காதலுடன் மென்மையாக நெற்றியில் முத்தமிட்டான்.
அவன் பேச்சில் கட்டுண்ட தமிழுக்கு அவனது இயல்பான பேச்சைக் கேட்ட பிறகுதான் மனம் அமைதியானது. அந்த இதமான வருடலும், அவளது அமைதியான மனமும் அவளை உறக்கத்தில் ஆழ்த்த அப்படியே உறங்கி இருந்தாள்.
அவள் உறங்கிய பிறகும் தன் கைவளைவிலேயே வைத்திருந்த அகத்தியனுக்கு மனம் ஒருமாதிரி மகிழ்வாக இருந்தது. தனது சிறு முக மாற்றம் கூட அவளைப் பாதிக்கிறது என்றெண்ணி உள்ளூர மகிழ்ந்தவன், மனதில் விரைவில் அனைத்தும் சரிசெய்ய வேண்டும் என்ற உறுதி வலுப்பட்டது.
மறுநாள், அவனுடன் இருந்த தமிழ் மாலை வெளியே செல்லலாம் என்று அருகிலிருந்த கோவிலுக்கு அழைத்துச் செல்ல, எதிர்பாராத விதமாக அங்கே கௌசல்யாவை சந்திக்க நேர்ந்தது.
கர்ப்பிணிப்பெண் என்பதால் மாலை நடைப்பயிற்சிக்காக அவள் தன் தாயுடன் கோவிலுக்கு வந்திருக்க, அகத்தியனுக்கு அவளை அறிமுகப்படுத்தி வைத்தாள் தமிழ்.
அகத்தியனைக் கண்டதும் நேற்று தன் தோழியின் வாயிலாக அவனது குணத்தைப் பற்றி அறிந்தவள் உள்ளார்ந்த அன்புடன் 'அண்ணா!' என்றழைத்துப் பேச, அவனும் கௌசியுடன் பாசமாகப் பேசினான்.
கௌசல்யாவின் தாய் லலிதா, அவர்களை விருந்திற்கு தங்கள் வீட்டிற்கு வருமாறு மீண்டும் மீண்டும் வலியுறுத்த அடுத்த முறை வரும்போது கண்டிப்பாக அவர்கள் வீட்டிற்கு வருவதாகக் கூறி சமாளித்தான்.
அதன்பிறகு சிறிது நேரம் பேசியபடி இருக்க, ஏதோ நினைவு வந்தவர் போல, "தமிழு எங்கூட கொஞ்சம் வாயேன்." என்று அவளை வெளியே அழைத்துச் சென்றார் லலிதா.
இதுதான் சரியான தருணம் என்று அகத்தியன் தமிழின் தோழியான கௌசல்யாவிடம், " நீங்க என்னை அண்ணானு சொல்றது உண்மையா இருந்தா, இந்த அண்ணன் உரிமையா உங்கள்ட்ட ஒன்னு கேட்டா தப்பா எடுக்காம பதில் சொல்றியாம்மா?" எனக் கேட்டான்.
"என்ன அண்ணா பீடிகை எல்லாம் பலமா இருக்கு? ஆண்கள்னாலே வெறுப்பா பேசிட்டு இருந்த தமிழு ஒருத்தரைப் பற்றி பூரிப்பா பேசுறாள்னா நீங்க எந்தளவு அவ மனசை மாத்தி இருக்கீங்க. உங்க மேல எனக்கு ரொம்ப மரியாதை. அதனால தயங்காம என்னக் கேட்கனுமோ தாராளமா கேளுங்க." புன்சிரிப்புடன் கூறினாள் கௌசி.
"மொழியும் நீங்களும் ஸ்கூல், காலேஜ் எல்லாம் ஒன்னா தானே இருந்திருக்கீங்க. அவளுக்கு எதாவது குறிப்பிட்டு சொல்லும்படி, ஐ மீன் அவளை ஹர்ட் பண்ற மாதிரி எதாவது இன்சிடன்ட் நடந்து இருக்கா?" அதை எப்படி விளக்கமாகக் கேட்பதறியாமல் வார்த்தைகளைத் தேர்ந்தெடுத்துப் போட்டுக் கேட்டான் அகத்தியன். ஆனால் அவளுக்கு அது புரிய வேண்டுமே!
அவனது கேள்வியில் அவள் விழிக்க, ஒரு பெருமூச்சு விட்டவன்,"அது வந்து, யாராவது பசங்களால அவ மனசு கஷ்டப்படுற மாதிரி எதாவது நடந்து இருக்கான்னு கேட்கறேன்மா." சிறு தயக்கத்துடன் வேகமாகக் கேட்டு முடித்தான்.
அவனது கேள்வியில் அவள் புருவங்கள் சுருங்கப் பார்க்க, சற்று சுருக்கமாக பள்ளியில் ஏற்பட்ட சம்பவத்தையும் அதற்கு அவளது எதிர்வினைப் பற்றியும் கூறியவன், "நான் அவளை தப்பா நினைச்சு எதுவும் கேட்கலம்மா. அவளோட மனசுக்குள்ள ஏதோ இருக்கு. அது என்னனு தெரிஞ்சு சரிசெய்யத்தான் கேட்கறேன்." தனது தரப்பைக் கூறினான்.
"தமிழ் உண்மையிலேயே கொடுத்து வைச்சவ அண்ணா." புன்னகையுடன் கூறிய கௌசல்யா, "நான் உங்கள தப்பா எதுவும் நினைக்கல. ஆனா" சில நொடிகள் யோசித்து விட்டு அவர்கள் ஐந்தாம் வகுப்பு பயிலும் போது, புதிதாக வந்து சேர்ந்த பெரிய இடத்து பையன் அவளை விரும்புவதாகச் சொல்லி அவளைச் சுற்றிச்சுற்றி வந்தான்.
"அவன் ஏற்கெனவே வேற ரெண்டு ஸ்கூல்ல ஒழுங்கு நடவடிக்கை எடுத்து மாறிமாறி வந்தவன்தான். தமிழுக்கு அவனை சுத்தமா பிடிக்காது. அவன் தொல்லை தாங்காம அடுத்த வருசமே கேர்ள்ஸ் ஸ்கூல் சேர்ந்துட்டா. அவ ஸ்கூல் மாறவும் எங்க வீட்ல அடம் பிடிச்சு நானும் அவளோட மாறிட்டேன்."
" மற்றபடி ஸ்கூல் காலேஜ் எல்லாமே லேடீஸ் தான். அதோட எவனாவது அவளைப் பார்த்தாலே அவ விட்ற அறையில் பயந்தே ரோட்ல எவனும் அவகிட்ட வம்பு செய்ய மாட்டான். எனக்கு தெரிஞ்சு குறிப்பிட்டு சொல்ற மாதிரி வேற எந்த இன்சிடன்ட்டும் நடந்தது இல்லண்ணா." முழுவதும் கூறி முடித்தாள்.
கௌசல்யா கூறியதை உள்வாங்கிய அகத்தியன் சிந்தனை முகமாக இருக்க,"நான் ஒன்னு சொல்லட்டுமா? நீங்க பேசாம அவகிட்டயே நேரடியா கேட்டுடுங்க. அவளுக்கு உங்கள ரொம்ப பிடிச்சிருக்கு. கண்டிப்பா உங்ககிட்ட எதையும் மறைக்க மாட்டா." தோழியைப் பற்றி அறிந்தவள் அவனுக்கு ஆலோசனை வழங்கினாள்.
"ம்க்கும். அன்னிக்கு ஒருநாள் நான் அமைதியா இருந்ததுக்கே அவ அவ்ளோ சென்சிடிவ்ஆ மாறிட்டா. அவகிட்ட கேட்டா அவளா எதையாவது நினைச்சு குழப்பிட்டு இருப்பாம்மா. சரி என்ன செய்றதுனு நான் பார்க்கிறேன் அன்ட் தேங்க்ஸ். அப்றம் இதை," அவன் இழுக்க, அவளிடம் கண்டிப்பா சொல்ல மாட்டேன் என அவள் உறுதியளித்தாள்.
அகத்தியனின் திட்டப்படி விடுமுறை போட்டு ஊருக்கு வந்ததில் எந்தவொரு முன்னேற்றமும் இன்றி தோல்வியில் முடிந்தது.
தமிழை கடைக்கு அழைத்துச் சென்ற லலிதா, ஒரு தொட்டிலை வாங்கி அங்கிருந்த வேண்டுதல் மரத்தில் கட்டச் சொல்லி "சீக்கிரமே நீயும் கௌசி மாதிரி புள்ள உண்டாகனும் தமிழு."
"இது ரொம்ப சக்திவாய்ந்த கோவில். இங்க இப்படி வேண்டுதல் வைச்சு தொட்டில் கட்டுனா கண்டிப்பா நடக்கும்." என விளக்கி அவளை ஆசிர்வதிக்க, மனதில் மூண்ட கலக்கத்தை மறைத்து புன்னகைக்க பெரும்பாடு பட்டாள் தமிழ்.