அத்தியாயம் 2
நலம் மருத்துவமனை..
இரண்டு அடுக்கு தளம் கொண்ட சிறிய மருத்துவமனை தான்.
அருந்ததியின் வீட்டில் இருந்து சற்று தூரத்தில் இருக்கும் இந்த மருத்துவமனைக்குத் தான் அடிக்கடி வருவாள்.
வீட்டில் யாருக்கும் உடல் உபாதை ஏற்பட்டால் கூட இங்கு தான் அழைத்து வருவாள்.
அப்படித்தான் இன்றும் தாமரையை அழைத்து வந்து இருக்கின்றாள் அருந்ததி.
"என்னடி. காலையிலேயே இவ்ளோ கூட்டமா இருக்கு. இங்கயே லேட் ஆகிரும் போலயே.." என்று அருகில் இருந்த தாமரையிடம் பேசிக் கொண்டிருந்த நேரத்தில், அப்பொழுது அவளின் அருகில் வந்து நின்ற ஆடவனிடம், "டாக்டர் வந்துட்டாரா.. இல்லையாங்க.. இல்லை நீங்க இப்போதான் வாரீங்களா??" என்று கேட்டிட,
அந்த ஆடவன் சத்தம் வந்த திசையில் திரும்பிப் பார்க்க, ஒரு நொடி அவனது கண்கள் விரிந்து சுருங்க, பின் எதுவும் பேசாமல், அவளை ஒரு பார்வை பார்த்து விட்டு உள்ளே முன்னோக்கி நடந்தான்.
"இவன் என்ன.. ஒண்ணுமே பேசாம போறான்." என்று உள்ளுக்குள் நினைத்தவள், "ஹலோ.. ஏதாவது பதில் சொல்லிட்டு போ மேன்.." என்று ஆடவனின் முதுகைப் பார்த்து கொஞ்சம் சத்தமாகத் தான் கேட்டாள்.
அவனோ நெற்றியை நீவியபடி கேட்டும் கேட்காததும் போல உள்ளே சென்று விட்டான்.
"ரொம்பத்தான்.." என்று உதட்டை சுழித்த அருந்ததி, தாமரையை ஒரு இடத்தில் அமர வைத்தவள் அவளுக்கான டோக்கனை வாங்கிக் கொண்டாள்.
"நீ அப்படியே கண்ணை மூடி உக்காந்துட்டு இரு. உன் நம்பர் வரவும் சொல்றேன். உள்ள போலாம்.." என்று அவளை அமர வைத்து விட்டு வந்தவள்,
அலைப்பேசியை எடுத்து, ஒரு எண்ணிற்கு தொடர்பு கொண்டாள்.
அந்தப் பக்கம் எடுக்கப்பட்டதும், "ஹலோ.. சார்.. குட் மார்னிங். எனக்கு ஒரு ஒன் ஹௌர் பெர்மிஸ்ஸின் வேணும் சார். " என்று கூற,
அந்தப் பக்கம் கேட்ட கேள்வியில், "நான் ஹாஸ்பிடல் வந்து இருக்கேன் சார்." என்றாள்.
"என்னமா என்ன பிரச்சனை??" அந்தப் பக்கம்.
"சார் எனக்கு எதுவும் இல்லை. என் தங்கச்சிக்குத் தான் கொஞ்சம் ஹெல்த் இஸ்சுக்கே. அதான் கூட்டிட்டு வந்து இருக்கேன்." என்றிட,
"ஓகே மா. முடிச்சிட்டு வாங்க.." என்று அவளிடம் கூறப்பட்டது.
அவளும் முகத்தில் தோன்றிய மென் புன்னகையுடன், "ஓகே சார்.. தேங்க்யூ.." என்று கூறியவள், அலைப்பேசியை அணைத்து விட்டு, தாமரையைப் பார்க்க, அவளோ அயர்ந்து போய் படுத்து இருந்தாள்.
ஆட்கள் அதிகமாக இருந்தாலும், இரு மருத்துவர்கள் பார்ப்பதால், இங்கு மாற்றி இங்கு என சென்று கொண்டிருந்தனர்.
அதனால் வெகு விரைவாக இவர்களின் எண்ணும் வந்து சேர்ந்தது.
எதிர்ப் பக்கம் இருக்கும் அறையில் இருந்து அழைப்பு மணி வந்திட, அருந்ததி தாமரையை மெல்ல எழுப்பி அழைத்துச் சென்றாள்.
கதவை தட்டி விட்டு, உள்ளே செல்ல மருத்துவரும், வந்து இருந்த நோயாளியைப் பார்ப்பதற்கு தலையை நிமிர்த்திப் பார்க்க,
அருந்ததியைத் தான் முதலில் பார்த்தார்.
மருத்துவரைப் பார்த்தவளின் கண்கள் அகல விரிந்தன.
பின் ஒருவாறு தன்னை சமாளித்துக் கொண்டு, தாமரையை அமர வைத்தவள், அவள் அருகிலேயே இவள் நின்று கொண்டாள்.
தாமரையை பரிசோதித்த மருத்துவர், "நல்லா மூச்சை இழுத்து விடுங்க.." என்று கூறிட அவளும் அதே போல செய்தாள்.
"காய்ச்சல் கொஞ்சம் அதிகமாத்தான் இருக்கு. நான் இப்போ டேப்லெட்ஸ் மட்டும் எழுதித் தரேன். அதை சாப்பிடுங்க. சரி ஆகலனா, மூணு நாள் கழிச்சி திரும்ப வாங்க.." என்று மருந்துச் சீட்டை தாமரையிடம் நீட்ட, அவள் வாங்கி அருந்ததியிடம் கொடுத்தாள்.
தாமரையை அழைத்துக் கொண்டு கிளம்பும் முன், மருத்துவரைப் பார்த்து, "யாருனு தெரியாம வெளிய உங்ககிட்ட அப்படி பேசிட்டேன். சாரி.." என்றாள்.
அவளை அழுத்தமாக பார்த்தவன் வேறு எதுவும் பேசாமல் "ம்ம்ம்.." என்று மட்டுமே பதில் கூறினான்.
அவளும் ஒரு வித உணர்வுடனே அவளுக்குத் தேவையான மருந்துகளை வாங்கி தாமரையிடம் கொடுத்து விட்டு, ஆட்டோ ஒன்றை பிடித்து அவளை வீட்டிற்கு அனுப்பி வைத்தாள்.
அருந்ததியும் அங்கிருந்து தான் ஆசிரியராக வேலை செய்யும் பள்ளிக்கு வண்டியைச் செலுத்தினாள்.
இதனை எல்லாம் தனது அறையின் ஜன்னல் வழியாக பார்த்துக் கொண்டிருந்தான் அவன்.
அவன் தான் விஷ்வா. நலம் மருத்துவமனையின் மருத்துவ மேற்பார்வையாளர்.
நலம் மருத்துவமனை, நகரத்தின் முக்கிய பிரதான இடங்களில் எல்லாம் விரிந்து இருந்தது.
அதன் நிர்வாக இயக்குனர் அவனின் தந்தை காசிராஜன்.
விஷ்வா மருத்துவ படிப்பு படித்ததால், ஒவ்வொரு இடங்களில் இருக்கும் நலம் மருத்துவமனைக்கு மேற்பார்வையிடச் செல்லுவான்.
மருத்துவர்கள் மற்றும் மருத்துவ சேவைகளை கண்காணிக்கவும், நோயாளியின் சிகிச்சை தரத்தை உறுதி செய்யவும், அவசரநிலை மேலாண்மையை சிறப்பாக செயல் ஆற்றவும் தொடர்ந்து அதற்கான நடைமுறைகளை விஷ்வா கவனித்து வருகின்றான்.
அவ்வப்போது, வந்து இருக்கும் நோயாளிகளையும் பார்ப்பது உண்டு.
அப்படித்தான் இன்று இந்த கிளைக்கு வந்தது.
ஆரம்பத்தில் இருந்தே இந்தப் பகுதியில் இருக்கும் நலம் மருத்துவமனை இரண்டு தளங்கள் கொண்ட சிறிய மருத்துவமனை தான்.
பிற்காலத்தில் அதனை விரிவு படுத்திக் கொள்ளலாம் என்று நினைத்து இருந்தார் காசிராஜன்.
அவன் பொறுப்பை மேற்கொண்ட பின்னர் இப்பொழுது தான் முதன்முறை வருகிறான்.
வந்ததும் அவனுக்கு இப்படி ஒரு அதிர்ச்சி.
விஷ்வாவின் எண்ணம் முழுவதும் அருந்ததியே ஆக்கிரமித்து இருந்தாள். சில வருடங்களுக்குப் பிறகு அவளைப் பார்க்கின்றான்.
"அவளுக்கு நான் யாருனு அடையாளம் தெரியலயா?? இல்லை என்னை மறந்துட்டாளா??" என்று நினைத்தவன், உடனே
"ஒரு வேளை தெரிஞ்சா மட்டும் என்ன பண்ணி இருப்பா.." என்று கேள்வியும் கேட்டுக் கொள்ள, அதற்கான பதில் எதுவும் இல்லாததால் அவனது முகம் உணர்ச்சிகளை துடைத்து வைத்தது போல இருந்தது.
"அருந்ததி..." என்ற அவளின் பெயரை உச்சரித்தவனின் கைகள், தானாக அவன் இடது புற மார்பிற்கு மேலே தடவிக் கொண்டது.
அவளின் நினைவில் இருந்தவன், ஒரு பெருமூச்சுடன் அதை ஓரம் தள்ளி வைத்து விட்டு அடுத்த நோயாளியை உள்ளே வரவழைத்து அவர்களுக்கு பார்க்க ஆரம்பித்தான்.
இங்கே அருந்ததி, விஷ்வாவைத் தான் நினைத்துக்கொண்டே வண்டியை ஓட்டினாள்.
"இதுக்கு முன்ன பார்த்த போல இருக்கே.. ஆனா டக்குனு நியாபகம் வரல. பட் அந்தக் கண்ணு... என்னைப் பார்த்த பார்வை.. அதுல ஏதோ இருந்துச்சு.." என்று நினைத்தவாறே பள்ளிக்கும் வந்து சேர்ந்தாள்.
அவனைப் பற்றிய ஆராய்ச்சியை அப்படியே ஓரம் தள்ளி விட்டு, அவளது வகுப்பிற்குள் நுழைந்து தனது பணியைத் தொடங்கினாள்.
இங்கே விஷ்வா வெகு நாட்கள் கழித்து அவளைப் பார்த்ததால், அவளின் நினைவில் இருந்து வெளிவர முடியாமல் தவித்தவன், தலைமை மருத்துவரிடம் கூறி விட்டு அங்கிருந்து கிளம்பிச் சென்றான்.
காரை ஓட்டிச் சென்றவனின் எண்ணத்தில், சிரித்த படி அவளே வந்து சென்றாள்.
காரை ஓரமாக நிறுத்தி விட்டு, ஸ்டியரிங் மேலேயே தலையை சாய்த்தவன், "நெஜமாவே என்னை மறந்துட்டாளா??" என்று உள்ளுக்குள் ஆயிரம் முறை அந்த கேள்வியைக் கேட்டுக் கொண்டான்.
ஒவ்வொரு முறையும் அந்தக் கேள்வியை கேட்கும் போது எல்லாம் அவன் உள்ளுக்குள் ஏற்பட்ட வலி அவனுக்குத் தான் தெரியும்.
ஒரு வழியாக தன்னை நிதானத்திற்கு கொண்டு வந்தவன், காரை ஸ்டார்ட் செய்து வீட்டிற்கே கிளம்பிச் சென்றான்.
------------------------------
வீட்டிற்கு வந்த தாமரை, மருத்துவர் பரிந்துரை செய்த, மருந்தை எடுத்துக் கொண்டு, சிறிது நேரம் கண் அயர்ந்தாள்.
காலையில் அவளும் அருந்ததியும் வேலையை முடித்து விட்டதால், இப்பொழுது அவள் ஓய்வு எடுக்க அவளுக்கு தோதாக இருந்தது.
அவளின் சித்தப்பா வடிவேலன், அப்பொழுது தான் வயலுக்கு போய் விட்டு வந்தார்.
அவர் எப்பொழுதும் காலையில் ஒன்று கம்மங்கூழ் அல்லது கேப்பைக்கூழ் தான் எடுத்துக் கொள்வார்.
அப்படி இல்லையென்றால் பழைய சாதம் எடுத்துக் கொள்வார்.
இந்த இட்லி தோசை இடியாப்பம் பொங்கல் பூரி எல்லாம் எங்காவது வெளியில் சென்றால் தான். மத்தபடி வீட்டில் எப்பொழுதும் கூழ் தான்.
காலை கழுவி விட்டு வந்த வடிவேலன், வீட்டிற்குள் நுழைந்ததும் முன் அறை சோபாவில் அமர்ந்து இருந்த தன் மனைவியிடம், "பசங்க கிளம்பியாச்சா.." என்று கேட்டிட,
"ம்ம். கிளம்பிட்டாங்க.." என்றார்.
"தாமரை என்ன பண்றா.??" என்று முகத்தை தன் மேல் போட்டு இருந்த துண்டினால் துடைத்தவாறு கேட்க,
"அவ உள்ள படுத்துட்டு இருக்கா.. "
"ஏன் என்ன ஆச்சு." கேட்டபடி சோபாவில் அமர்ந்தார்.
"அவளுக்கு கொஞ்சம் உடம்பு காய்ச்சலா இருக்கு. அதான் படுத்துட்டு இருக்கா.." என்று கூறிட,
"அப்படியா.. சரி நான் சாப்பிட்டு அவளை ஹாஸ்பிடல் கூட்டிட்டு போய்ட்டு வரேன். "
"ம்ம்க்கும். எத்தனை தடவை தான் ஹாஸ்பிடலுக்கு கூட்டிட்டுப் போவீங்க. உங்க மக, வேலைக்குப் போகும் போதே கூட்டிட்டு போய்ட்டா. அவளும் பார்த்துட்டு ஆட்டோ பிடிச்சி வீட்டுக்கு வந்துட்டா.. அவளுக்கு ஒன்னுனா மட்டும் எல்லாரும் கூடி வந்துருங்க.." என்று அங்களாய்ப்புடன் கூற,
வடிவேலோ தன் மகளை நினைத்து பெருமிதம் கொண்டார்.
"சரி சாப்பிட எடுத்து வை. நான் குளிச்சிட்டு வரேன்.." என்று மனைவியிடம் கூறி விட்டு, தாமரையை காணச் சென்றார்.
அவளை மருந்தின் வீரியத்தில் அயர்ந்து தூங்கிக் கொண்டிருக்க, நெற்றியில் கையை வைத்து பார்த்தவர், மேற்கொண்டு எதுவும் தொந்தரவு செய்யாமல் அப்படியே அங்கிருந்து வெளியேறிச் சென்றார்.
குளித்து விட்டு, சாப்பிட வந்து அமர்ந்த வடிவேலன் மனைவி சொர்ணத்திடம், "நம்ம சிங்காரத்தை வரச் சொல்லி இருக்கேன். நீ அருந்ததி, தாமரை ரெண்டு பேரு ஜாதகத்தையும் எடுத்து வை." கூழை வாயில் ஊற்றியபடி சொர்ணத்திடம் கூறினார்.
"எதுக்கு தாமரை ஜாதகம்??" என்று உள்ளுக்குள் உண்டான கோவத்தை அடக்கியபடி கேட்டார் சொர்ணம்.
"எதுக்கு கொடுப்பாங்க. அவளுக்கும் வரன் பாக்க தான்.." என்றார் வடிவேலன்.
"முதல்ல அருந்ததிக்கு முடிச்சிட்டு அதுக்கு அப்புறம் ஒரு மூணு வருஷம் கழிச்சி பண்ணக்கூடாதா அவளுக்கு??" என்று அடக்கப்பட்ட கோபத்துடன் கேட்டார்.
"இங்கப் பாரு சொர்ணம். அருந்ததிக்கும் தாமரைக்கும் ஒரு வருஷம் தான் வித்தியாசம். இப்போ அருந்ததிக்கு பாக்கும் போது சேர்த்து கொடுத்து வச்சா தேவலனு எனக்குத் தோணுது. இன்னும் மூணு வருஷம் நாலு வருஷம்னு இங்கயே அவளை வச்சிக்கிட்டு வேலை வாங்கிக்கிட்டு இருக்கணும்னு நினைக்காத.
அவளுக்கு அமையும் போது அமையட்டும்.
ஒரு வேளை, அருந்ததிக்கு முன்னாடியே தாமரைக்கு அமஞ்சா கூட அவளுக்கு முதல்ல கல்யாணம் பண்ணி வச்சிருவேன். " என்று தீர்க்கமாகவும் அழுத்தமாகவும் அவரது மனைவியை பார்த்து கூறி விட்டு, கூழ் குடித்த பாத்திரத்தில் அப்படியே கையை கழுவி விட்டுச் சென்றார்.
எழுந்து சென்ற கணவனின் முதுகையே பல்லைக் கடித்தபடி கோவம் பொங்க பார்த்துக் கொண்டிருந்தார் அவரது மனையாள்.
மோட்சம் தொடரும்...