• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

ரோசி கஜனின் இயற்கை - 10

ரோசி கஜன்

Administrator
Staff member
நயாகராவைச் சென்றடைய முதலே, அங்கு என்ன என்ன செய்வதென்ற திட்டமிடல் முடிந்திருந்தது. ஏற்கனவே சென்ற இடமென்பதால் எல்லோரும் ஒரேயிடத்தில் நேரம் செலவிடாது, இளையவர்கள் விருப்பத்திற்கேற்ப நேரம் செலவிடலாமென்ற நோக்கில் யார் யார் எங்கு போவதென்று கதைத்துக்கொண்டார்கள்.

மாறன், கவினோடு இளையவர்களில் ஆண்கள் கார் ரேஸிங் செல்வதென்ற முடிவுக்கு வந்திருந்தார்கள். நாதனும் அவர்களோடு செல்வதென்றிருந்தார்.

பெண்களில், அஜி நயாகரா வருவது முதல் முறையென்பதால், "என்னதான் அமெரிக்காட பக்கமா போட்டில ஃபோல்ஸ்க்குக் கிட்டப் போறது எண்டாலும் இந்தப் பக்கமிருந்து பார்க்க வேணாமா? நானும் அஜியும் அங்க போறம்." என்றார், நாதனின் மனைவி ரதி.

"எத்தனை தடவைகள் வந்தாலும் நாங்களும் ஃபோல்ஸ் பார்க்க வருவமே!" கவி, இலக்கியாவையும் சேர்த்துக்கொண்டு சொல்ல, இலக்கியாவோ இவர்களின் எந்தவிதமான உரையாடலிலும் கலக்காது சற்றே தள்ளி நின்றிருந்தாள். அவள் பார்வை, விரைந்து கலகலத்துச் செல்லும் சனத்திரளில் இலக்கின்றி தத்தித் தாவித் திரிந்தது. மிக்க கட்டுப்பாட்டோடு இறுகி நின்றாளவள், 'மறந்தும் அவனைப் பார்த்துவிடாதே!' மனதுள் மீண்டும் மீண்டும் கட்டளையிட்டபடி.

தான் அனுப்பிய குறுஞ்செய்தி பார்த்ததும் முறைத்தவள்தான், அதன் பின்னர் தன்புறமாகத் திரும்பவேயில்லை என்பதை அவதானிக்காதிருக்குமா வேந்தனின் பார்வை!

சரி, அங்குதான் கண்ணை முடிக்கிடந்தாள்; உண்மையாகவே நித்திரை கொண்டும் இருக்கலாமே; இறங்கிய பிறகும் இப்படி நின்றால்?

முகம் இறுக்கிப் போயிற்று அவனுக்கு! அடுத்த கணமே இயல்பாகிவிட்டான். சில கணங்களேயென்றாலும், அவன் மீதான அவளின் மனதின் தேடலை, விழிகளால், அதில் துளிர்த்த கண்ணீரால் உணர்த்தவில்லையா அவள்?

‘பயப்படுறாள்! நிச்சயம் என்னில்.’ விருப்பமேயில்லையென்றாலும் உண்மை அதுதான் என்றது அவனுள்ளம். அதோடு, மொத்தக் குடும்பமும் கூடியிருக்க, கண்டதும் இவனை விரும்பிவிட்டேன் என்று சொல்ல முடியுமா என்ன?

'எல்லாருமே உன்னைப்போல இருக்க வேணுமெண்டில்ல வேந்தன்' அவளுக்காகவே வாதாடியாது, அவனுள்ளம். இருந்தாலும், இதேநிலையில் அவளின் முழு நேசத்தை வாங்கிவிடவேண்டும் என்றும் பிடிவாதம் கொண்டு நின்றதும் அதே உள்ளம் தான்.

"இலக்கி என்ன வாறியா? இல்லாட்டி அம்மா ஆக்களோட அக்குவாரியம் போகப் போறியா?" கவி தோளில் தட்டத் திரும்பியவள், "ஆங்! என்னக்கா?" முழித்தாள்.

"ஏய் என்னடி! உண்மையாவே என்னடி?" கவிதான்.

"அவள் இன்னும் நித்திரையாள எழும்பேல்ல!" தலையில் தட்டிவிட்டு, “அப்ப நாம போவம்." மகனைக் கையில் பற்றிக்கொண்டான், மாறன்.

"இங்க பாருங்க, எல்லாரும் ஒன்றரை ரெண்டுக்கு இந்த இடத்துக்கு வாற மாதிரிப் பார்த்துக் கொள்ளுங்க. அப்பத்தான் இங்கயே சாப்பிட்டுட்டு மூன்றரை போலச் சரி போடர் கடக்கலாம்." என்ற நாதன், "என்ன தம்பி சொல்லுறீங்க?" வேந்தனிடம் கேட்டார்.

திரும்பிப் பார்க்க வேண்டும் போலிருந்தது, இலக்கியாவுக்கு, அந்தத் தம்பியைத் தான். அந்த ஆசைக்கு நச்சென்று குட்டுக் கொடுத்துவிட்டு நகர முயன்றாள்.

"ஓம் அங்கிள், மூன்றரை நாலுக்குச் சரி அங்கால போனால் போட்டிங் போயிட்டு ஹோட்டல் போகலாம்." என்றவன், "தம்பி நீங்களும் எங்களோட வாங்கோவன்." என்றவருக்கு, "இல்ல அங்கிள், நீங்க போயிட்டு வாங்க; நான் இதில பக்கத்தில தான் நிப்பன்; இல்லாட்டியும் என்ர நம்பர் உங்களிட்ட இருக்குத் தானே?" என்று சொல்லிவிட்டான்.

"சரி நாமளும் போகலாம்." இலக்கியாவின் கரத்தைப் பற்றிக்கொண்ட அஜி, “பிள்ள கவனம் மாறன்." கணவனிடம் சொல்லிவிட்டு நடக்க, கவியும் ரதியும் சேர்ந்து கொண்டார்கள்.

"நாங்களும் போயிட்டு வாறம்." சிவா ராஜியின் மகள், அக்குவாரியம் செல்ல ஆசைப்படவே சுகுணாவும் அவளுமாக அந்தப் பக்கமாக நடந்தார்கள்.

அச்சுற்றமெங்கும் நயாகரா நீரவீழ்ச்சிகள் தம் இருப்பை உணர்த்தி நின்றன, தம்மை நாடி வந்தோரை ஆர்ப்பரிப்போடு வரவேற்கும் முகமாக!

வட அமெரிக்க ‘லேக் இயரி’லிருந்து (Lake Erie) பாய்ந்தோடி வந்த நயாகரா ஆறு, ‘கனடா ஃபோல்ஸ்’ எனப்படும் ‘ஹோர்ஸ் ஷு ஃபோல்ஸ்’ மூலம் வஞ்சகமின்றிப் பொங்கிப் பாய்ந்ததென்றால், ஒன்றுசேர விடேனென்று அருகில் சட்டமாக அமைந்துவிட்ட ‘கோட் ஐலன்ட்’ (Goat Island) இனால் பிரிந்திருந்தாலும், நீரை வாரிக் கொட்டுவதிலோ அள்ளித் தெறிக்கவிட்ட இரம்மியத்திலோ துளியும் குறை வைக்காது பாய்ந்தது, ‘பிரைடல் வேல் ஃபோல்ஸ்’. இதனோடு ஒட்டி உறவாட விடேனென்று தம்மைப் பிரித்து நிற்கும் ‘லூனா ஐலண்டை’ (Luna Island) பலம் கொண்ட மட்டும் மோதினாலும் சரிவில் ஹோவென்று பாய்ந்து கண்ணுக்கு விருந்து வைத்தது, ‘அமெரிக்கன் ஃபோல்ஸ்’.

இம்மூன்றும் போட்டிபோட்டுக்கொண்டெழுப்பிய இரைச்சலை செமிமடுத்துணர்ந்தபடி, அந்நீரின் குளிர்ச்சி மெல்ல வீசிய காற்றில் கலந்து உடலில் ஏற்படுத்திய சிலிர்ப்போடு முன்னேறினார்கள், நால்வரும்.

"ஃபோல்ஸ்க்கு நிறையத் தூரமா நடக்கோணும்?" விழிகளைச் சுழற்றியபடி வந்த அஜி கேட்க, "இல்ல...ஒரு பத்து நிமிச நடைதான் சித்தி." என்றாள் இலக்கியா.

"சின்னப்பிள்ளைகளைளோட இங்க வந்தா ஒரு நாலைஞ்சு நாட்களுக்கு நிண்டால் போதும், பொழுது நல்லாப் போகும். ஃபோல்ஸ அடிப்படையா வச்சு எல்லாப் பொழுதுபோக்குக்களும் சாப்பாடுகளும் தங்குமிட வசதிகளுமாக இருக்குது இந்த டவுன்." சொல்லிக்கொண்டே, ஆவலோடு பார்த்து நடந்தாள், அஜி.

"ஓம்! நாலைஞ்சு முறை வந்திட்டம், பாக்க பாக்க அலுக்கிற இடமில்ல. சின்னாக்களுக்கு எண்டே நிறைய இடங்களும் இருக்கு." ஆமோதித்தாள், இலக்கியா.

இப்படிக் கதைத்தபடி, முன்னால் செல்லும் கவி, ரதியைத் தொடர்ந்து அஜியோடு நடந்தாலும் இலக்கியாவின் பார்வையோ, பின்னால் திரும்பித் துழாவிட முனைப்போடு நின்று அடம்பிடித்தது.

‘கட்டாயம் வருவான்’ மனம் அடித்துச் சொன்னது. அவன் மட்டில் முன்னுக்குப் பின்னாக நடக்க நினைக்கும் உள்ளத்தை என்ன சொல்வதாம்? அடிக்கடி ஏற்பட்டுவிடும் மனதுக்கும் மூளைக்குமான இழுபறியில் இரண்டும் ஒன்றையொன்று தாக்கி விழுத்த முயன்றாலும், இதுவரை, வெற்றி வாய்ப்புகள் சமமாகத் தான் தொங்கி நிற்கின்றன. இப்படியே போனால்? இச்சிலநாட்களிலேயே, அதுவும் இன்று சிலமணித்துளிகளில் இவள் களைத்தும் போனாள்.

'திரும்பக் கூடாது; அவனுக்கு வீணாக இசைவு கொடுப்பது போலாகாதா?' என்ன இப்பிடி முட்டாள் போல நடக்க நினைக்கிறன்' கடிந்து கொண்டாள்.

‘என்னவோ கெட்டவன் எண்ட மாதிரியே நினைக்கிற இலக்கி! அவன் அப்பிடியானவன் இல்ல!' வரிந்துகட்டிக்கொண்டு நின்றதும் அவளுள்ளம் தான். அதேவேகத்தில் திரும்பியவள் விழிகள் அவசரத்தோடு சுற்றத்தைத் துலாவின. அவனுரு எங்குமே தென்படவில்லை.

'டிரைவ் பண்ணிக்கொண்டு வந்தவனுக்குக் களைப்பு இராதா என்ன? எந்தநேரமும் சந்தேகமும் முறைப்புமாகப் பார்க்கிற உனக்குப் பின்னால வாறதுதான் வேலையா என்ன?' முணுமுணுத்த உள்ளம் முகத்தைக் கூம்பிப் போகச் செய்திட்டு. இருந்தபோதும் அஜி கேட்ட கேள்விகளுக்குப் பதில் சொன்னபடி முன்னேறினாள்.

மேலும் வாசிக்க....


10 (2)

10 (3)
 
Last edited:

Goms

Well-known member
இலக்கியின் தவிப்பும், பயமும் பார்க்க ரொம்ப பாவமா இருக்கு 😍 😍 😍 ரெண்டு கிழமை எப்படி வேந்தனை சமாளிக்கப் போறா?😜

எப்பா ராஜா, கொஞ்சம் அடக்கிதான் வாசியேன். முதல் நாளே ஆரம்பிச்சிட்டியே 😜
 
Top Bottom