இலக்கியாவின் சோர்ந்த தோற்றமும் கண்ணீரும் அஜியை மிகவும் கவலைகொள்ள வைத்தது. இருபத்தியிரண்டு வயதுதான். ஆனாலும் பல விசயங்களில் நல்ல முதிர்வோடு நடந்துகொள்வதைப் பார்த்து வியந்திருக்கிறாள், அஜி.
அஜி, மாறனைத் திருமணம் செய்தபின்னர் வெளிநாடு வந்தவள், ஐந்து வருடங்களுக்கு முன்னர். யாழ்ப்பாணத்திலிருக்கையில், வெளிநாட்டுப் பிள்ளைகள் அவர்களின் வளர்ப்பு என்ற கதை வருகையில் பொதுவாகவே அப்படி இப்படி என்றெல்லாம் நினைப்பதுவும் கதைப்பதுவும் உண்டே. அவர்களின் உணவிலிருந்து உடை, நடத்தை, பழக்கவழக்கங்கள் என்றெல்லாம் விமர்சிப்பதும் உண்டு. சொந்த மொழி தெரியாது, நம் கலாச்சாரம் அறியாது, எல்லா அடையாளங்களையும் தொலைத்துவிட்டு மேலை நாட்டு நாகரிகத்தில் மூழ்கிக் கிடப்பதுபோன்றதொரு மாயவலை அவர்கள் மீது வீசப்படுவதும் உண்டே!
அப்படிக் கேட்டுக் கேட்டு வளர்ந்த அஜி, தன் கணவன் வீட்டுச் சொந்தத்தில் உள்ள இளையவர்களைப் பார்த்தபின்னர் உண்மையிலும் வியந்திருந்தாள். அதை வாய்விட்டே மலரிடமும் கூறியிருந்தாள். கேட்டுவிட்டு வாய்விட்டுச் சிரித்திருந்தார், மலர்.
"நான் வெளிநாடு வரேக்க அம்பது வயது பிள்ளை. அதுவரைக்கும் நம்மட பழக்க வழக்கங்களில ஊறிபோயிருந்த நான் இண்டைக்கும் என்ன விலை எண்டாலும் தமிழ்க் கடையில மீன், மரக்கறி வாங்கிச் சமைச்சாத் தான் செமிக்கும் எண்டளவில தானே இருக்கிறன். அப்படி இங்க வந்திருக்கிற சனமெல்லாம் நினைக்கப் போய்த்தான் இண்டைக்கு நம்மட ஊர் போல இங்கயும் இருக்க முடியுது.
அப்படி இருக்க, பிள்ளைகளிட வளர்ப்பு மட்டும் எப்பிடி மாறும் சொல்லு பார்ப்பம்? என்ர சின்னப் பேரன், அதுதான் உன்ர மகன் கவினத் தவிர மிச்சவே என்ர பார்வையில வளர்ந்த பிள்ளைகள். உன்ர மனுசன யாழ்ப்பணத்தில எப்பிடி வளர்த்தனோ அப்பிடித்தான் அவையளையும் வளர்த்தன்.
என்னைப் போல வயசான மனுசர் இல்லாத வீடுகளிலும் வேலைக்குப் போற தாய் தகப்பன் கண்ணில எண்ணெய் ஊற்றிக்கொண்டு கவனமாய்ப் பிள்ள வளர்க்கிறவை தெரியுமோ? அப்படியிருக்க, அங்க இங்க கண்டபடியும் வளருதுகள் தான். அதுகள் இங்க எண்டில்ல எங்க இருந்தாலும் கண்டபடிதான் வாழுங்கள். இப்ப ஊர்ல என்ன திறமே யோசிச்சுப்பார். ஒரு பக்கம் கண்ணும் கருத்துமா வளருதுகள். கிடைக்கிற ஒவ்வொரு சந்தர்ப்பங்களையும் எவ்வளவு முடியுமோ அவ்வளவுக்குப் பயன்படுத்தி நல்ல மனுசரா நேர் சீரா இருக்குது எண்டால், இன்னொருபக்கம் தறுதலைக் கூட்டம் குடியும் கூத்துமா எல்லா அலையுதுகள்? சீரழிஞ்சு திரியேல்லை எண்டு உன்னால சொல்ல முடியுமா சொல்லு பார்ப்பம்?" என்று கேட்ட போது அவளால் அதை மறுக்கவே முடியவில்லை.
"அப்பிடித்தான் எல்லா எல்லா இடமும். இதுக்க அவனவன் பொசிப்பும் எரிச்சலும் கொண்டு அலைஞ்சு வெளிநாட்டான் உள்நாட்டான், கனடாக்காரன், அமெரிக்காக்காரன், லண்டன் பிரான்ஸ்காரன் அப்பிடி இப்பிடி மாறி மாறி சேற்றை வாரித் தெளிக்க வேண்டியதுதான். " என்றிருந்தார் மலர்.
மாறி மாறி அத்தனை பேர் கண்டிப்பும் அறிவுரையுமாகக் கதைக்கக் கதைக்கக் கண்ணீர் விட்டாளேயொழிய ஒரு வார்த்தை கதைக்கவில்லை, இலக்கியா. அதைப் பார்க்கப் பாவமாக இருந்தது, அஜிக்கு. அவளாக இருந்தால் விருட்டென்று எழுந்து சென்று அறைக்கதவை அடித்துச் சாத்திவிட்டுச் சரி முடங்கி இருப்பாள்.
அவளைப்போலவே மலருக்கும் இருந்திருக்கும் போல! "சரி சரி... இனி எல்லாரும் போய் உங்கட உங்கட வேலைகளைப் பாருங்க. திரும்ப திரும்ப சொன்னதையே சொல்லிக்கொண்டு. என்ர குஞ்சு ஏதோ ஆசையில போய்ட்டாள். இப்பிடியாகுமெண்டு தெரிஞ்சிருந்தாப் போகப் போறாளா என்ன? இனிமேல் எது செய்யமுதலும் ஒண்டுக்குப் பாத்தா யோசிப்பாள் எல்லா? விடுங்கோ!" கடிந்து கொண்டே இலக்கியாவின் அருகில் வந்தமர்ந்தார்.
"சொல்லுறனே...போங்கோ! அவரவர் வேலைகளைப் பாருங்க!" மீண்டும் ஒரு அதட்டலில் எல்லாரும் கலைந்து சென்றார்கள்.
மலர் அமர்ந்த மறுகணம் இலக்கியாவின் தலை அவர் மடிக்குள் புதைந்துகொண்டது. பரிவோடு பேத்தியின் தலையை வருடிக்கொடுத்தார், மலர்.
அப்போது உள்ளே நுழைந்தா சுதர்சனும் மாறனும், "என்னப்பு அந்தத் தம்பியக் கண்டீங்களா?" மலர் கேட்க, "இல்லம்மா, நாங்க போகேக்க அங்க ஒருத்தரும் இல்ல; போய்ட்டார் போல!" என்றபடி அமர்ந்தார்கள்.
"ஓ!" என்ற மலர், மாறனின் பார்வை இலக்கியாவில் கோபத்தோடு படியவும், "நீ எழும்பு பிள்ள, உள்ள போய் உன்ர அலுவலப் பார்!" என்றதும் மெல்ல எழுந்து அறைக்குள் புகுந்துகொண்டாளவள்.
மதியம் கடந்து மழை விட்டிருந்தது. காற்றும் தணிந்திருந்தது. மதிய உணவை முடித்துக்கொண்ட வேகத்தில் பெரியவர்களோடு நான்கைந்து பேராகச் சேர்ந்து போட்டிங் போயிருந்தார்கள், இளையவர்கள். கண்ணுக்கெட்டிய தூரத்தில் கானோ வலித்தார்கள். இலக்கியா மட்டும் அறைக்குள் அடைந்து கிடந்தாள்.
"இலக்கிம்மா, ரெண்டு மணியாகுது எழும்பிச் சாப்பிடு!" தாய் எழுப்ப எழும்பியவள், தாயின் கண்டிப்பில் கொஞ்சமாக உள்ளே தள்ளினான்.
"வந்ததே ஒரு கிழமைக்கு. அதில இதெல்லாம் தேவையா? இப்பப் பார், எல்லாரும் சந்தோசமா இருக்க, நீ மட்டும் தனிய அறைக்குள்ள இருக்கிற." கடிந்து கொண்ட தாய், "வந்து வெளில இரு! காச்சல் இல்லையே!" தொட்டுப்பார்த்தவர், "இப்பத் தலையிடி ஏதும் இல்லையே!" பரிவோடு கேட்டு, மகள் முகத்தை வருடினார்.
"இல்லம்மா...தலையிடி காச்சல் எல்லாம் இல்ல. ஆனா உடம்பு கையெல்லாம் பயங்கரமா வலிக்குது. இன்னும் கொஞ்சநேரம் படுக்கப் போறன்." மீண்டும் கட்டிலில் சுருண்டு விட்டாள்.
"எதிர்க்காத்தில துடுப்பு வலிச்சதால தான் கை நோ. அதெல்லாம் சுகம் வந்திரும்." என்ற தாய், "கொஞ்ச நேரம் வெளில வந்திரு!" மீண்டும் அழைத்தார்.
"கொஞ்சத்தில் வாறன் மா." அவள் சொன்னதும், "நாங்க முன்னுக்கு மரத்தடியில தான் இருக்கிறம் கொஞ்ச நேரத்தில வா." என்றுவிட்டு அவர் விலக, அப்படியே படுத்திருந்தவளால் காலையில் நடந்த நிகழ்விலிருந்து அவ்வளவு சுலபமாக வெளிவர முடியவில்லை.
அந்த நேரம் தான் அனுபவித்த தவிப்பும் பயமும் சேர்ந்து அலைக்கழிக்க, அதேநேரம் பெயர் கூடத் தெரியாத அந்த உருவமும் சேர்ந்து நினைவிலாடியது. அப்படி நினைவில் வரவில்லையென்றால் தானே அதிசயம்? காலையில், அந்தக் கணம் அவள் அனுபவித்த பயங்கரத்திலிருந்து மீட்டது அவன் தானே?
மெல்ல நகர்ந்த கரம் கைபேசியை கைப்பற்றியது. காலையிலிருந்து பலதடவைகள் எடுத்துக் பார்க்க நினைத்துவிட்டு ஏனோ வேண்டாமென்று ஒதுக்கிவிட்டு இருந்தவள், இப்போது அப்படியில்லாது வாட்ஸ்ப்பை திறந்தாள்.
அவன் கைபேசியிலிருந்து அனுப்பிய புகைப்படம் மங்கலாகத் தெரிந்தது. புதிய எண்ணாச்சே! இவளின் அனுமதிக்காகக் காத்திருந்தது. கணம் கூடத் தாமதியாது 'போட் மேன்' என்று போட்டுச் சேமித்தவள் இதழ்களில் குறுநகை!
அவன் படத்தைப் பெரிதாக்கிப் பார்க்க, அந்த நகைப்போ விரிந்தது. புகைப்படம் எடுப்பாள் என்றெல்லாம் கொஞ்சம் எதிர்பார்க்கவில்லையே அவன். அந்த அதிர்வும் எரிச்சலுமாக “ஏய்” என்றிருந்தான். அப்போதுதான் புகைப்படம் கிளிக்காகியிருக்க வேண்டும். சிலகணங்கள் பார்த்திருந்தவளுக்கு அப்போதுதான் அவன் ஒன்லைனில் நிற்பது தெரிந்தது.
'என்ன பெயர் எண்டு சரி கேட்பமா? ஒரு நன்றி கூட சொல்லாமல் வந்திட்டேனே. நன்றி எண்டு போட்டுவிடுவமா?' தன்னை மறந்து எழுந்த ஆசைக்குக் கடும் மறுப்புத் தெரிவித்த வேகத்தில், கைபேசியை வைத்துவிட்டாள்.
அவன் பார்வைகள் ஒவ்வொன்றாக நினைவில் வர வர அவன் தொடர்பு வேண்டவே வேண்டாம் என்ற எண்ணமே வலுத்தது. அதேநேரம், கைபேசியிலிருந்து அவன் இலக்கத்தைத் தூக்கியெறியவும் முடியவில்லை.
'பச்! இதில இருந்தா இப்பிடித்தான் கண்டதையும் யோசிக்கச் சொல்லும்.' எழுந்து, தாய், சித்தி ஆட்கள் அமர்ந்திருந்த இடம் நோக்கி நடந்தாளவள்.
அன்று மாலையில், பக்கத்துக் கொட்டேஜில் காரொன்று வந்து நின்றது. வெளிப்புறத்தில் அமர்ந்திருந்த இலக்கியாவின் பார்வை ஒரே பாய்ச்சலாக அங்கு தாவியது. அவன் தான்! மனதுள் பலத்த எதிர்பார்ப்பு முளைத்திட்டு.
கறுப்புக் கண்ணாடிகளால் உள்ளிருப்போரைப் பார்க்கவியவில்லை. இறங்கும் வரை, ஓட்டுநர் பக்கக் கதவோரமாக நிலைத்து நின்றது, அவள் பார்வை.
"இந்தாத் திரும்பவும் வந்திருக்கீனம்; ஒருவேள அந்தத் தம்பி தானோ! ஒருக்கா நாலு வார்த்தை கதைக்க வேணும்." சுதர்சன் சொல்ல, "ஓமண்ணா..." என்றார், நாதன்.
இப்படி, அங்கமர்ந்திருந்தவர்களின் பார்வையெல்லாம் அக்காரிலிருக்க, முன்பக்கதிலிருந்து முதலில் இறங்கியது, ஒர் இளம் பெண்.
இலக்கியாவின் நெற்றி சுருங்கியது. 'அப்ப...கலியாணம் செய்த ஆளோ!' என்ற எண்ணத்தோடு! ஏனென்றில்லாது இதயம் வேகமாக, அதுவும் அறம் புறமாகத் துடித்தது. விசுக்கென்று எழுந்துவிட்டாள். அவ்வளவு பேருக்கும் இடையில் இயல்பாக இருக்க முடியும் போலத் தோன்றவில்லை.
'இப்ப அவன் ஆராக இருந்தா என்ன? கலியாணம் செய்திருந்தா என்ன? இல்லையெண்டா என்ன? எனக்கு என்ன விசரா பிடிச்சிட்டு!' மனதுள் நிலையாக நிற்க முயன்றாலும், அங்கிருந்து அகன்று விறுவிறுவென்று வீடு நோக்கி நடந்தவளுக்கு, அவளையுமறியாது கடைசியாக அவன் தலையில் கைவைத்த கணமும் அவன் பார்வையும் நினைவிலாடின. சர்ரென்று விழிகள் கலங்கிப் போக, தன்னிலே வெகுவாகவே கோபம் கொண்டாளவள்.
"இந்தத் தம்பியா இலக்கி? இப்பவே கதைச்சிருவம்." என்றெழுந்தபடி கேட்டார் அவள் தந்தை.
முகத்தைச் சரிபண்ணவே முடியாதிருந்தாலும் எதுவுமே செய்யமுடியாத நிலையில், விழிகளைச் சிமிட்டிச் சுரக்க முயன்ற விழிநீரை உள்ளிழுத்தபடி மெல்லத் திரும்பிப் பார்த்தாள்.
அங்கோ... மனதுள் சட்டென்று தொய்ந்துவிட்டாள், பெரும் ஆறுதல் மூச்சோடு!
"இது...இவர் வேற ஆளப்பா!" அவசரமாக வார்த்தைகள் உதிர்ந்திருந்தன. மறுநொடி, ஒரே ஓட்டமாக உள்ளே புகுந்து எதிர்ப்பட்ட தமக்கையில் மோதி, "ஏன்டி! கண் என்ன பிடறியிலா இருக்கு? எங்க இப்பிடி ஓடுற?" அவளிடம் ஏச்சு வாங்கி, "அது...அவசரமா டொய்லட்டுக்கு அக்கா!" சொல்லிக்கொண்டே அறைக்குள் புகுந்த வேகத்தில் தொப்பென்று கட்டிலில் குப்புற விழுந்திருந்தாள்.
'எனக்கு உண்மையா விசர் பிடிச்சிட்டு!' திரும்ப திரும்ப தன்னையே தான் கடிந்து கொண்டாலும், 'வேணவே வேணாம்; இது எல்லாம் எங்க கொண்டு போய்விடுமோ!' என நினைத்து ஒதுக்கிடத்தான் முயன்றாள். அது எங்கே? சிறு சந்தர்ப்பம் கிடைத்திட்டாலும் போதுமென்று புதிது புதிதாக உணர வைக்கின்றதே!
அடுத்தடுத்த நாட்களில், "கானோவில போனதோடு எல்லாம் போதுமெண்டு ஆகிட்டுப் போல! இலக்கிம்மா அத மறந்திட்டு வழமைபோல கலகலப்பா இரடா!" பெரியவர்கள் சொல்லும் வகையில் ஒருவிதமான அமைதியில் நடமாடினாள், அவள்.
"அதானே அக்கா...வாங்கோ!" ஒவ்வொன்றுக்கும் இளையவர்கள் வற்புறுத்தி இழுக்க வேண்டியிருந்தது. அதில் ஓரளவுக்கு இயல்பாகினாலும் மனம் மட்டும் பழைய இலக்கியாவாகேன் என்கின்றதே!
இடையில் ஒருநாள் ஒட்டோவா ‘பாலிமண்ட் ஹில்ஸ்’ போய் வந்திருந்தார்கள்.
இன்னுமொருநாள், மொன்றியல் சென்று சுற்றிவிட்டு ‘வைட் சேர்ச்’சுக்கும் சென்று வந்தார்கள். அப்படிப் போகப் புறப்பட்ட போது அத்தம்பதியோடு சில நிமிடங்கள் உரையாடும் சந்தர்ப்பம் வரவே, அன்று நடந்ததைச் சொல்லியிருந்தார், மலர்.
"உங்கட சொந்தக்காரத் தம்பியோ அவர்? பேர் கூடத் தெரியாது. நாங்க நன்றி சொன்னம் எண்டு சொல்லி விடுங்க!" என்றும் கூறியிருந்தார்.
அவர்களும், "ஓ! 'யாழ் ட்ராவல்'சில வேல செய்யிற பெடியன் போல! இங்க நாங்க வர முதல் ஒழுங்கு செய்ய ஒரு பெடியனை அனுப்ப வேணும் எண்டு சொல்லி இருந்தவே… அவரா இருக்கும்." என்றிருந்தார்கள்.
வீட்டினர் அதோடு அந்தக்கதையை விட்டுவிட்டார்கள். அவர்கள் வீட்டுப்பிள்ளை மட்டும் அதை விட்டுவிடவே இல்லையென்றதை மட்டும் அறியவில்லை.

Last edited:
Author: ரோசி கஜன்
Article Title: ரோசி கஜனின் இயற்கை- 7
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.