VIN-5
ஷோபா ஆட்டோவிலிருந்து இறங்கும்போதே யாழினி கேட்டருகில் வந்துவிட்டிருந்தாள். அவளை முகம்முழுக்க புன்னகையுடன் வரவேற்று, வீட்டுக்குள் அழைத்துச்சென்று, அமரவைத்தவள்,
ஷோபனாவின் அருகே அமர்ந்துகொண்டு அவளை உற்றுப்பார்த்து,
''அவ எங்க..?'' என கேட்கவும்,
ஷோபா புரியாமல் ''யாரு..?'' என்க,
''அதான், அன்டைக்கு நல்ல சந்தோஷமா.., சிரிச்ச முகத்தோட ஸ்கூலுக்கு வந்தாவே... அவ..''
அவள் விளையாட்டாக கேட்டிருப்பது புரியவும், புன்னகைக்க முயன்றவளுக்கு, அன்றைய நாளின் அதிசந்தோஷத்துக்கான காரணம் அழையாமல் நினைவுக்கு வர, தன்னையறியாமல் கண்கள் கலங்கிவிட்டன.
பார்த்துக்கொண்டிருந்த யாழினி, "ஐயோ..! என்னம்மா இது? ஏதாவது பிரச்சனையா..?" என சற்றுக் கவலையாய் கேட்டாள்.
''......''
இதழ்களை இறுக்கமாக மூடிக்கொண்டபடியும், கீழுதட்டை பற்களால் அழுத்தியபடியும், அடிக்கொரு தடவை இமைகளை சிமிட்டிய வண்ணமுமாக அழுதுவிடாதிருக்க பெரிதும் போராடிக் கொண்டிருந்தவள், மெதுவாய் அருகிலிருந்தவளின் கையை ஏதுவாகப்பற்றிக் கொண்டாள். யாழினி எதுவும் கேட்காது, அவளருகில் அமைதியாகவே அமர்ந்திருந்தாள்.
நிமிடங்கள் தாமதித்து கையைப் பிரித்துக்கொண்ட ஷோபா, கைக்குட்டையால் முகத்தை ஒருமுறை துடைத்துவிட்டு, யாழினியைப் பார்த்து, சிவந்திருந்த முகத்துடன் மெலிதாக முறுவலித்தாள்.
அவள் தலையை ஒருமுறை தடவிக்கொடுத்தவள்,
''இரு வாரன்...'' என கிச்சனுக்குள் சென்று, ஒரு ஜூஸ் நிரம்பிய கண்ணாடித்தம்ளருடன் வந்தாள்.
''ஐயோ.. இப்ப குடிக்...'' ஏதோ மறுப்பாய் ஷோபா ஆரம்பிக்கும் போதே,
''எந்தக்கதையும் இல்லாம குடிச்சி முடிக்கோணும்..'' என்று தம்ளரை அவள் கையில் திணித்தாள் யாழினி.
''ம்ம்... வித்தியாசமா, நல்லா இருக்கே... ''
'' மிக்ஸ்ட் ஜூஸ் - வோட்டர்மெலன் , பைனப்பிள், பப்பாயா.. கடைசியா, எந்த கவலையையும் (விரல்களால் சொடக்கிட்டு-) 'இப்டி' என்றதுக்குள்ள இல்லாம செய்ற, ஒரு அற்புதமா....ன, அதிசயமா...ன சஞ்சீவி மருந்தொன்டையும் கலந்திருந்தனே... வேல செய்தா? ''
யாழினி கூறியதன் தோரணையில், வாய்விட்டு நகைத்த ஷோபா,
''அந்த அற்புதமா....ன, அதிசயமா...ன மருந்து நல்லாவே வேல செய்தக்கா.
அக்கா என்டலாம் தானே..?''
''தாராளமா. அக்கா, கொக்கா, வாடி, போடி எல்லா..ம் சொல்லலாம். அதுக்கு முதல், நீ ஓகேயா என்டு சொல்லு.'' யாழினி கேட்கவும்,
''ஓகேயா என்டா.... இப்ப ஓகே தான். ஒரு இத்துப்போன லவ் ஃபெய்லியர் கதை தான், வேற ஒன்டும் இல்லக்கா.. அதவிடுங்க, எப்பவும் இப்டி கலகலன்டு தான் இருப்பீங்களா? ''
யாழினி பதில் சொல்வதற்குள்
அவளின் போன் அழைத்தது. எடுத்துப்பேசியவள்,
'' மிஸ்டர் ஹஸ்பன்ட்ட இருந்து அழைப்பு. இரு போய்ட்டு வாறன்.'' என அறைக்குள் சென்றாள்.
சிறிது நேரத்தில் அறையிலிருந்து இருவரும் வெளிவந்தனர். சக்கரநாற்காலியில் உட்கார்ந்திருந்த யாழினியின் கணவனைப் பார்த்த ஷோபாவுக்கு சட்டென்று நெஞ்சில் இனம்புரியா வலியான உணர்வொன்று.
அவளை நெருங்கியதும்,
"ஹாய்! ஐம் மிஸ்டர் யாழினி." என்ற கணவனின் தோளில் செல்லமாய் தட்டிவிட்டு,
"சேரோட பெயர் அவருக்கு புடிக்காது. அதால.. 'சிவஞானம்' என்டு யார்ட்டயும் உடனே சொல்ல மாட்டேர். ஆனா, எனக்கு எல்லார்ட்டயும் சொல்ற அளவுக்குப் பிடிக்கும்." என்ற யாழினியை அவன் முறைத்து விட்டு, ஷோபாவிடம் திரும்ப,
''ஹாய் அண்ணா.'' என்ற ஷோபாவிற்கு அதற்கு பிறகு அவனிடம் என்ன பேச என்று தெரியவில்லை. யாழினியின் கணவனை இந்த நிலையில் பார்க்க மிகக்கஷ்டமாக இருந்தது அவளுக்கு. இருவரின் முகத்தையும் மாறி மாறி பார்த்துக்கொண்டு நின்றாள்.
''ஷோபனா டீச்சருக்கு ஒண்டும் தெரியா போலயே.. சொல்லல்லையா நீ..?'' மனைவியிடம் கேட்டான் சிவா.
"இவ்ளோ நேரம் வேறவிஷயம் கதைச்சிட்டு இருந்தானங்க. அதான் மறந்துட்டன்.அதென்னென்டா.. அப்ப எனக்கு ஆராதனா வயித்துல, ஆறுமாசம். அந்த டைம்லதான் இவருக்கு ஆக்சிடன்ட் நடந்..."
"ஆறு இல்ல. நாலுமாசம்." இடையிட்டான் சிவா.
'' ஓமோம், நாலு தான்.. ஆக்சிடென்ட்ல சிவாக்கு (Lumbar Spinalcord Injury) இடுப்பு முள்ளந்தண்டுல இன்ஜுரி ஆகி..ட்ரீட்மென்ட் , பிசியோ(Physio) எல்லாம் முடிச்சிட்டு வீட்டுக்கு கூட்டிவரவே டென் மன்த்ஸ் ஆயிட்டுது. ''
"நீங்க இப்ப இவளோ வொர்ரி பண்ண வேணாம் ஷோபனா. அந்த நேரத்துல கஷ்டமா தான் இருந்தது. ரெண்டு பேர்ட ஃபேமிலியும் நல்ல சப்போட்டா இருந்தாங்க. இப்ப நல்லா இருக்கம். எல்லாம் யாழினியின் கிருபையோ.. கிருபை.'' சொல்லி முடித்தவன், மனைவியைப் புன்னகையோடு பார்த்தான்.
பதிலுக்கு முறுவலித்துவிட்டு, '' வீட்ட இருந்துகொண்டு A/L ஸ்டூடன்ட்ஸ்கு ஒன்லைன்ல பிசிக்ஸ் க்ளாஸ் செய்றேர். முன்ன சாதாரண சிவில் என்ஜினியரா இருந்த சிவஞானம் இப்ப ‘ The Inspiring Physics Teacher சிவா ’வாக ப்ரமோஷன் வாங்கிட்டேர்.'' என்ற யாழினியின் குரலில் கேலி இருந்தாலும், முகத்தில் சந்தோஷமும் பெருமையும் வழிந்தன.
இருவரின் பேச்சினையும் மெல்லிய வியப்புடன் ரசித்திருந்த ஷோபனா,
" நான்தான் அவசரப்பட்டு கவலப்பட்டுட்டன் போலயே..ரெண்டு பேரையும் பாக்க அவ்ளோ அழகா இருக்கு. எப்போவும் இப்டியே இருக்கனும்'' என்றுகூறி இரு கைகளையும் உயர்த்தி ஆசி வழங்குவது போல் பாவனை செய்தவள்,
''பிள்ளைகள் எங்க அக்கா?" எனக்கேட்டாள்.
"ஆரா விடியவே அவங்கட அம்மம்மா வீட்ட பொய்ட்டா. ஆதி நித்திரை. சாப்பிட்டு அவன்ட்ட போவம்." யாழினி கூற, சரி என்பதாக தலையசைத்தாள்.
மூவரும் பேசிக்கொண்டே சாப்பிட்டார்கள். இப்போது ஷோபனாவின் மனநிலை, நன்றாக ருசித்து, ரசித்து, வழித்து வயிறு நிறைய உண்ணுமளவிற்கு முற்றிலும் மாறி இருந்தது.
ஷோபா சாப்பிட்ட பாத்திரங்களை எடுத்துவைக்க, யாழினி அவற்றைக்கழுவி வைத்துக் கொண்டிருந்தாள். சிவாவின் அறையிலிருந்து அவனது கைப்பேசியில் அழைப்புவரும் ஒலி கேட்பது போலிருக்கவும், யாழினி நகரப்போக,
'' இருங்கக்கா, நா போய் எடுத்து குடுக்குறன்'' என்ற ஷோபனா அறைக்குள் நுழைந்தாள். அதற்குள் அழைப்பு நின்றிருந்தது. மேசையிலிருந்த போனை எடுத்துக்கொண்டாள்.
நல்ல விசாலமான அறை அது. அதிக பொருட்கள் இல்லாமல் எளிமையாக இருந்தது. கட்டில், அதற்கருகே ஒரு மேசை, ஒரு சிறிய அலுமாரி... அவ்வளவுதான். கட்டிலுக்கு எதிரே சுவற்றில் Quote ஒன்று பெரிதாக ஃபிரேமிட்டு தொங்கவிடப் பட்டிருந்தது.
வெள்ளைநிறப் பின்னணியில், கரிய நிறத்தில் பெரிய எழுத்துகளால் எழுதப்பட்டிருந்த, அந்த ஆங்கில வாசகத்தைப் படித்துப் பார்த்தவளுக்கு சிவாவை நினைத்து பிரம்மிப்பாக இருந்தது.
SOME PEOPLE SEE THE GLASS HALF-FULL.
OTHERS SEE THE THE GLASS HALF-EMPTY.
THE ENLIGHTENED ARE SIMPLY GRATEFUL TO HAVE A GLASS.
_ Mark Desvaux _
சில சந்தர்ப்பங்களில், வாழ்க்கையின் நல்ல விஷயங்களைப் பார்த்து சந்தோஷமாய் திருப்திப்பட்டுக்கொள்ளும் ஓப்டிமிஸ்ட்டாகவும் (OPTIMIST) , தனக்கு நடக்கும் கெட்டதை மட்டுமே வைத்து கவலைப்பட்டு அவநம்பிக்கைகொள்ளும் பெசிமிஸ்ட்டாகவும்(PESSIMIST) நடந்திருக்கிறாள் ஷோபா.
ஆனால் சிலர் வாழ்வதையே வாய்ப்பாக , ஆசிர்வாதமாக எண்ணி எவ்வளவு நேர்மறைத்தன்மையான மனநிலையில் வாழ நினைக்கிறார்கள் ; முயற்சிக்கிறார்கள். ஒரு சுண்டைக்காய் சைஸ் பிரச்சனைய வெச்சிட்டு அவள் படும்பாடென்ன; லீட்டர் லீட்டராய் அழுது வடிப்பதென்ன..
''மாறனும் ஷோபா. மாறனும்." சத்தமாக தனக்குத்தானே சொல்லிக்கொண்டு, ஹோலுக்கு சென்று சிவாவிடம் போனைக் கொடுத்தாள்.
*****
ஷோபா, அதன் பிறகு சிறிது நேரம் ஆதியோடு செலவழித்தவள், ஒரு மூன்று மணியளவில் கிளம்பத் தயாராகி, யாழினியிடம் சொல்ல வந்தாள்.
''யாழி அக்கா, நான் போகனும். சாப்பாடு சூப்பரா இருந்திச்சு. அண்ட் எல்லாத்துக்குமே தாங்க்ஸ்..."
''ஷோபா இங்கப்பாரு, ஒருவிஷயம் வேணுமென்டு நினைச்சா கடைசி வர போராடனும். வேணாமென்டு முடிவெடுத்தா அத முழுசா விட்டுறனும். விளங்குதா...?" யாழினி சொன்னதும்,
ஷோபனா , தனது வாயில் கைவைத்துக் கொண்டாள் . அவளைப் புரியாமல் பார்த்துவிட்டு, ''என்ன?'' என கேட்டாள் யாழினி.
''இதே.. மாதிரி, இதே.. டோன்லயே முந்தநாள் ஒருத்தர் எனக்கு சொன்னவரக்கா.. அதான் கொஞ்சம் ஷாக் ஆகிட்டன்.''
'' நீ அழுமூஞ்சியா சுத்திட்டு இருந்தியென்டா.. எல்லாரும்தான் வந்து அட்வைஸ் பண்ணுவான்.அழுதுடைம் வேஸ்ட் பண்ணாமலுக்கு, தேவையில்லாத ஆணியென்டா கழட்டிப்போட்டுட்டு வழியப்பாத்து நட. உன்ட வாழ்க்க, நாங்க ஒரு அளவுக்குத்தான் சொல்லஏலும்.'' சற்று கறாராகவே பேசி முடித்தாள் யாழினி.
''சரி அக்கா '' எனத்தலையை தலையை ஆட்டியவள்,
ஹார்ன்சத்தம் கேட்டு ''பாய்.. சிவா அண்ணாட்டையும் சொல்லுங்க '' என்று வெளியே ஓடிவந்து ஆட்டோவிற்குள் ஏறிக்கொண்டாள்.
அவள் வரும்போதிருந்த மனநிலை என்ன, இப்போதுள்ள மனநிலை என்ன. நினைத்துப் பார்த்தவளுக்கு அறிமுகமாகி அடுத்த சந்திப்பில் அக்காவாகி நிற்கும் யாழினி, யாழினி-வீடு தந்த மாற்றம் பிடித்திருந்தது.
இறக்கைகளின் பாரம் மறந்து பறந்து திரியும், புதியதோர் நேர்மறை உலகில் தன்னையும் பறக்கச்செய்யும், இந்த அக்காக்குருவியின் கூட்டை மிகவும் பிடித்திருந்தது ஷோபாவுக்கு.