• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

வழியிலே இதயத்தின் நிழலாய் - 07

ஷாரிகா

Moderator
Staff member
VIN - 7 (1)

"யாழி, நான் ஏதாச்சும் ஹெல்ப் பண்ணவா..?" சமையலறையில் அங்குமிங்கும் சுழன்றபடி வேலை பார்த்துக்கொண்டிருந்த மனைவியிடம் கேட்டான் சிவா.

"எல்லாமே செஞ்சாச்சு. இந்தா, இப்ப முடிஞ்சிரும் சமையல்வேல." அடுப்பிலிருந்த சட்டியில் அகப்பையால் கிளறியபடியே பதில்சொன்னாள் யாழினி.

" எனக்கு க்ளாஸ் லீவான நாள்லயாவது ஏதாச்சும் செய்றேனே. மரக்கறிய என்டாலும் தா. கட் பண்ணி தர்றன்." ஏதோ கோரிக்கை வைப்பதைப்போல கேட்டவனைத் திரும்பிப்பார்த்து,

"அதெல்லாம் நான் அப்பவே செஞ்சிட்டேன். நீங்க கொஞ்சம் சும்மா என்டு இருங்களன்." என்றாள் சலிப்பாய்.

"வருஷக்கணக்கா சும்மாவேதானே இருக்கன். நான் நடக்காம விட்டதுக்கும் சேர்த்து நீதான் ஓடிட்டே இருக்க. என்ட மனத்திருப்திக்கு, நாலு வெங்காயத்தையாவது அரியிறேனே." மெலிதாய் வலி தடவிய குரலில் கேட்டவனிடம் வேகமாக வந்தவள்,

" இந்தாங்க. தேவையில்லாத கத கதைக்காம கெதியா தரணும் இப்ப" என்று, அவன் கையில் கத்தி மற்றும் இரு வெங்காயங்களைக் கொடுத்துவிட்டுப் போனாள். சிவா மிக முனைப்புடன் கொடுக்கப்பட்ட வேலையை செய்யத் தொடங்கினான்.

திடீரென அவன் முன்னே வந்து நின்ற ஷோபனா, கையிலிருந்த பேனாவை ஒலிவாங்கியைப்போல் பாவித்து ''தன்காதல் மனைவிக்காக வெங்காயம் நறுக்கும் இந்தக் கணவனைப் பாராட்டலாமே.. ஃப்ரே..ண்ட்ஸ்." என்றாள் ஒரு தொகுப்பாளினின் பாணியில்.

சிவா நகைப்புடன் "ஹேய் ஷோபனா! எப்ப வந்த? என்ன... அதுக்குள்ள க்ளாஸ் முடிஞ்சா?"

"நீங்க வெங்காயம் கேட்டு அழுதுட்டு இருந்தீங்களே.. அப்பவே வந்துட்டண்ணா. ஆதிக்கு ஒரு ஆக்டிவிட்டி குடுத்துட்டு, சும்மா.. தண்ணி குடிப்பமே என்டு வந்தேன்." சொன்னவள், அவன் அரிந்து முடித்திருக்கவும் அதை எடுத்துக்கொண்டு யாழினியிடம் கொடுத்துவிட்டு, தண்ணீர்ப் போத்தலுக்காய் ஃப்ரிட்ஜ்ஜினைத் திறந்தாள்.

" ஹேய்! உனட்ட கேக்க நினைச்சிருந்தனான்.இப்பதான் ஞாபகத்துக்கு வருது.வருண எப்டி தெரியும் உனக்கு?" கேட்டாள் யாழினி.

" ஜோ...ஜோனத்தன்ட ஃப்ரெண்ட் என்டு."

" ஜோ.ஜோனத்தன் யாரு?"

ஷோபா பல்லைக்கடித்தபடி
"ஆ...ஹ் மோனிஷாட புருசன்ன்"

"ஆ.மோனிஷா யாருடி?"
பாத்திரங்களை கழுவுவதில் கவனமாயிருந்த யாழினி, மற்றவளின் பாவனையெல்லாம் கவனிக்கவில்லை. ஒவ்வொன்றாக கேட்டாள்.

" ஐயோ அக்கா... அது என்ட எக்ஸ்ஸ்."கூறிவிட்டு முகத்தை அஷ்டகோணலாக்கினாள் ஷோபனா.

" ஓஹோ...ம்ம்ம்... இப்பதான் எல்லாம் விளங்குது. நேத்து அவன்ட்ட கேட்டத்துக்கு பதிலே சொல்லாம போனான். அதால வருண்தான் உன்ட ஆள் என்டு நினைச்சிட்டேன் நான்." சொன்ன யாழினியை, இடுப்பில் கைவைத்து நன்றாக முறைத்துவிட்டு, ஆதியிடம் சென்றாள் ஷோபனா.

*****

இரு மாதங்கள் கடந்திருந்தன.

இப்போது ஆதி பாடசாலை செல்கிறான். இருந்தாலும் ஷோபா, சனி ஞாயிறுகளில் யாழினியின் வீட்டுக்கு வருவதை நிறுத்தவில்லை. இத்தனை நாட்களில் வருணை மூன்று தடவைகள் சந்தித்திருப்பாள். ஒவ்வொரு முறையும் 'ஹாய், எப்டி இருக்கீங்க, நல்லாருக்கேன் நீங்க' இப்படியாக அரைத்த மாவையே இருவரும் மாறி மாறி அரைப்பார்கள். ஆனால், இப்போது ஷோபாவுக்கு தயக்கமெல்லாம் இல்லாமல் போயிருந்தது.

'ஆர்க்கிடெக்சர் டிகிரி முடித்துவிட்டு, தற்போது கண்டியின் தனியார் நிறுவனமொன்றில் ஆர்க்கிடெக்சுரல் ட்ரெய்னியாக (Architectural Trainee) இருக்கும் வருண், விடுமுறைக்கு இங்கே வந்தால் மிக உதவியாக இருப்பானாம். சிவாவை பிசியோதெரபி-கிளினிக் தொடங்கி பீச், பார்க் , தியேட்டர் முதலிய எல்லாவற்றுக்கும் கூட்டிச்செல்வானாம். நல்ல தம்பி (தங்கக்கம்பி)' என்பதாக யாழினிதான் சிலநேரங்களில் வருணைப்பற்றி புகழ்பாடுவாள்.

அன்று,
ஷோபாவின் ஸ்கூட்டி நிஜமாகவே ஸ்டார்ட் வரமாட்டேன் என்றது. அந்நேரம் அக்கா வீட்டில் நின்றிருந்த வருண், என்னவெனப் பார்த்து சரிசெய்து கொடுத்தான்.

"தேங்க்யூ.."என்றவள், மேலும் எதுவோ அவனிடம் சொல்ல வருவது போலிருக்கவும், கேவியாய் அவள் முகம் பார்த்து நின்றான்.

"அது வந்து, ஜோனத்தன் பேசினவனா?" ஷோபனா சாதாரணமாய்க் கேட்டு விட்டாலும், அங்கிருந்து என்னவரப்போகிறதோ என உள்ளே பதற்றமாகவே இருக்கவும், உடனே,

"நான் மூவ் ஒன்லாம் ஆகிட்டன். இப்ப நம்ம ஃப்ரெண்ட்ஸ் தானே... அதனால சும்மா கேட்டன்." என்றாள் அவசரமாய்.

" மலேஷியா போன புதுசுல ஒருதடவ பேசினான். அதுக்கு பிறகு இல்ல."
எப்போதும் போல, ஒற்றைப் புருவஉயர்த்தலின் பின்னே வந்தது பதில்.

"ஓ.." சுரத்தின்றி வந்தது ஷோபனாவிடமிருந்து.

"இப்ப நம்ம ஃப்ரெண்ட்ஸ் தானே. அதனால, என்னையும் மறந்துட்டான் போல." என அவளைப்போலவே கூறியவன் முகத்தில் லேசாய் புன்னகையின் சாயல்.

அவளுமே சிரித்தவள், "ஓகே... இனிமே உங்கள்ட்ட அவனப்பத்தி கேட்டனென்டா.... ப்ச் கேக்க மாட்டன்."

"பாப்போம்." என்றவனிடம், தலையசைத்து விடைபெற்றுக்கொண்டு வீட்டிற்கு விரைந்தாள் ஷோபனா.
 
VIN - 7 (2)

இன்று தயாளதேவியின் 60ஆவது
பிறந்தநாள் என்பதால் பின்னேரம் சித்திவீட்டில், சின்ன கேக்வெட்டும் பார்ட்டி வைத்திருந்தார்கள். முன்னதாகவே சென்ற ஷோபா, அம்மம்மாவிடம் பேசிவிட்டு தம்பிமாரைத் தேடினாள். கபிஷ் மட்டும் முன்வீட்டு சின்னஞ்சிறிசுகளுடன் விளையாடிக் கொண்டிருந்தான். அபியைத்தான் வெளியில் காணவில்லை.

"அபி எங்க சித்தி?" கிச்சனில் வேலையாக நின்றவரிடம் போய்க்கேட்டாள்.

" அவனப்பத்தி கதைக்காதையடி. அவன் செஞ்ச வேல என்னென்டு தெரியுமா உனக்கு? வகுப்பு பெடியலோட சேர்ந்து டியூஷன்ல சிகரெட் பிடிச்சிருக்கான். சேர் கோலெடுத்தோனே துடிச்சி போயிட்டன் பிள்ள. சித்தப்பா நல்லா அடிச்சிப்போட்டார். பாவம், சரியா அழுதவன். ஒருக்கா ரூமுக்க போய்ப்பாக்குரியாமா?" கோபமாய் தொடங்கி வருத்தத்தில் முடித்திருந்தார் அபியின் அன்னை.

சித்தி சொன்னவற்றை உள்வாங்கிக்கொள்ளவே சற்று நிமிடங்கள் தேவைப்பட்டது ஷோபாவுக்கு. ஒரு நீண்ட பெருமூச்சுடன் அபித்ரனின் அறையை நோக்கி நடந்தாள்.
கட்டிலில் தலையைக் குனிந்து அமர்ந்திருந்தவனுக்கு அருகில் போய் இருந்தவள் அவனிடம் எதுவுமே கேட்கவில்லை.

"சொரி அக்கா."

"..."

" நான் முதல்ல வேணாமென்டுதான் சொன்னனான். எல்லாரும் சேர்ந்து, ஒன்டு வாங்கி சும்மா குடிச்சுப் பாப்போம், ஒருக்கா தானே என்டவும்..."

பதில் பேசாது, 'உன்னிடமிருந்து இதை எதிர்பார்க்கவில்லை' என்பதாக அவனை ஓர் அடிபட்ட பார்வை பார்த்தாள்.

" ஐயோ! இனி சத்தியமா இந்தவேல செய்ய மாட்டன். மன்னிக்க மாட்டியா ஷோபா..?"

" நீ செஞ்சதுக்கு உன்னோட அவ்ளோ கோவமும் மனவருத்தமாவும் இருக்கு அபி. இப்ப உன்ன பனிஷ் பண்றதவிட இன்னொருக்கா செய்யாம தடுக்கிறது தான் முக்கியம். எங்கட அபி இனி இப்டி வேலைகள் செய்ய மாட்டான். நான் நம்புறன். சரியா..?"

சரி என்பதாய் மேலும்கீழுமாக தலையசைத்தவன்,
"எங்க நீயும் கதைக்க மாட்டியோ என்டு பயந்துட்டே இருந்தன்."

"சரி. வா, கீழ கேக் வெட்ட போறாங்க."

" இல்ல அக்கா. எனக்கு ஒரு மாதிரியா இருக்கு..."

" என்ட செல்லமெல்லோ...வாங்க போவம். அம்மம்மா நீ இல்லாட்டி கவலப்படுவாங்க. வா, வா." என அவனின் கைப்பிடித்து வலுக்கட்டாயமாக இழுத்துச்சென்றாள்.
*****
எல்லோரும் அங்கேயே இரவுணவையும் முடித்துவிட்டு ஒன்றாய் அமர்ந்திருந்தார்கள். மதியழகனுடன் பேசிக்கொண்டிருந்த நேசனிடம், எதையோ கூறும்படி கண்களைக் காட்டினார் அமுதா.

" எல்லாருக்கும் ஒரு குட் நியூஸ். ஷோபாக்கு மாப்பிள்ளை பாத்து இருக்கம். பெயர் வசீகரன். பார்மசிஸ்ட்டா இருக்கிறேர். சொந்தமா ரெண்டு பார்மசியும் வெச்சிருக்கிறார். இந்தாங்க, இதான் ஃபோட்டோ." சொல்லி முடித்து, தயாளதேவியிடம் போனை நீட்டினார்.

'என்னம்மா இது..?'
சிணுங்கலுடன் அமுதாவைப் பார்த்தாள் ஷோபா.

" இங்க என்ன பார்வ? ஊருக்கு வந்தோனேயே பாக்குறதென்டு ஏற்கனவே கதச்சதுதானே. நல்ல பெடியன். உனக்கும் பிடிக்கும்." என்ற அமுதா, போனை அவளிடம் நீட்டினார்.

"பெடியன் வடிவா இருக்கான். நல்ல குணமும் என்டா சரி தானே. என்னமா ஷோபா.. வேற எதுவுமென்டாலும் சொல்லுங்க. எங்கேயும் விருப்பமிருக்கா பிள்ளைக்கு?" பேத்தியிடம் கேட்டார் தயாள தேவி.

"அதெல்லாம் ஒன்டும் இல்ல அம்மம்மா. "

" பிறகென்னடி, ஓமென்டு சொல்லி கெதியா கல்யாணசாப்பாடு போடு பாப்போம்." குஷியாக சொன்னார் அகிலா.

ஷோபாவுக்கு தலைவலிப்பது போலிருந்தது. அப்பாவின் முகத்தைப் பார்த்தாள்.

"முதல்ல பாத்ததே இதாம்மா. அவங்களுக்கும் நல்ல விருப்பம். இதே சரியா வரட்டும் அப்ப சொல்லுவமென்டு இருந்தன். பிடிக்காட்டி சொல்லு. வேற பாக்குறதென்டா பாப்போம்."

" இல்லப்பா, ஓகே தான்."

" அவங்க இன்னும் ரெண்டு மாசத்துல கல்யாணத்த வைப்பமா என்டு கேட்குறாங்க. பின்னுக்கு தள்ளிப் போடுறதுக்கு இவ ஒன்டும் சின்னப்பிள்ள இல்லையே. நாங்களும் சரி என்டு சொல்லிட்டம்."

" ஓமோம். எக்சாம் வர்றத்துக்குள்ள டக்கென்டு வைங்க பெரியம்மா. அப்ப என்ன இனி ஒரே கொண்டாட்டம் தான்..." அபியும் காலையில் நடந்தது மறந்து சந்தோஷமாய் கூச்சலிட்டான்.

சித்தப்பா, சித்தி, அம்மம்மா எல்லோரின் சந்தோஷப்
பகிர்வுகளையும் அமைதியாக பார்த்திருந்தாள் ஷோபா.
 
Last edited:
Top Bottom