VIN- 12
அந்தப் பிரதான வீதியின் ஒரு பக்கத்தில் கண்ணுக்கு விருந்தாய் கடற்கரை. மறுபக்கத்தில் வரிசையாக அணிவகுத்து நின்ற மண்டபங்களுள் ஒன்றில்தான் வருண்-ஷோபனாவின் திருமண வரவேற்பு நிகழ்ந்து கொண்டிருந்தது.
"சேர், கொஞ்சம் க்ளோசா நில்லுங்க"
அந்த போட்டோகிராபர் அண்ணா கூறவும், ஷோபனாவை சற்று நெருங்கி நின்றான் வருண்.
"இப்பவும் கேப் தெரியுதே.. என்ன, ரெண்டு பேரும் யானை பொயிட்டுவாரத்துக்கா வழிவிட்டு நிக்கிறீங்க?"
கேட்ட யாழினியை, மாப்பிள்ளையும் மணப்பெண்ணும் ஒருசேர முறைத்தனர்.
"ஐயோ! இது நான் சொல்லல. வந்தாக்கள் அப்படித்தான் கதைக்கிறாங்களாம்"என்று படுமொக்கையாய் சமாளித்தாள் அவள்.
நேரம் இரவு ஒன்பதை எட்டியபொழுதில், வந்தோர் அனைவரும் வாழ்த்திக் கிளம்பியிருக்க மணமக்களின் குடும்பத்தினர் மட்டுமே மண்டபத்தில். எல்லோருமாய் சேர்ந்துநின்று ஒரு ஃபேமிலி போட்டோ எடுத்துக்கொண்டு அவர்களுமே புறப்பட ஆயத்தமாயினர்.
காரில் ஏறியமர்ந்ததும் கண்ணாடியை இறக்கிவிட்டவளின் முகத்தில் மோதிய கடற்காற்றின் குளுமையைக் கண்கள் மூடி அனுபவித்தாள் ஷோபா. பக்கத்தில் அமர்ந்திருந்தவனின் சென்ட் வாசனை நாசியில் சேரவும் கண்களைத் திறந்தவள், அவன்புறம் திரும்பவில்லை.
கால்மணிநேர கார்ப்பயணம் முழுக்கவும், மௌனமொழி பேசிக்கொண்டே வீடு வந்தடைந்தனர் இருவரும்.
அம்மா,அப்பா புறப்படுகையில் சிறுபிள்ளையென அழத்தொடங்கி விட்டவளுக்கு சமாதானம் சொல்லிக் கொண்டேயிருந்தாலும் அமுதாவின் கண்ணீரும் நின்றபாடில்லை. கண்கள் கலங்க தங்கையை அணைத்துக் கொண்டான் சங்கர். அக்காவின் கையைப் பிடித்தபடி நின்ற அபியும் விட்டால் அழுதுவிடுவான் போலிருந்தது. அமைதியாகப் பார்த்துக்கொண்டு நின்றிருந்தான் வருண்.
ஒருவாறு அவளைத்தேற்றிவிட்டு, எல்லோரும் விடைபெற்றுக்கொண்டனர்.
அவர்களை வழியனுப்பிவிட்டு வருணும் ஷோபாவும் அறைக்குள் வந்தனர்.
"டென் மினிட்ஸ்" என்றுவிட்டு குளியலறைக்குள் புகுந்து கொண்டான் அவன்.
நகைகளை ஒவ்வொன்றாக கழட்டிவிட்டு தலையலங்காரத்தையும் கலைத்துக் கொண்டை போட்டுக்கொண்டவள், அவன் அறையை வலம்வந்தாள்.
இன்று பூராகவும், மணமேடையில் யாராவது பக்கத்தில் நின்று கொண்டே இருந்ததனால், இருவருக்குமிடையில் பிரத்தியேகமான பேச்சுக்கள் எதுவும் இருக்கவில்லை. இப்போது அவனுடன் தனித்துவிடப்பட்டதும் அவளுள் புதிதாக ஏதோ ஒரு உணர்வு. 'இவன்தான் இனி' என்று நினைக்கையில் மயிர்கூச்செரிந்தது பெண்ணுக்கு.
குளியலறையிலிருந்து வெளியே வந்தவனின் முகம்பார்த்து சின்னதாய் புன்னகைத்தாள் ஷோபனா.
"முகத்தில அவ்ளோ டயர்ட் தெரியுது. பிரஷ்ஷாகிட்டு வந்து தூங்கலாமே" வருண் சொல்லவும்,
"ம்ஹூம்.." மறுப்பாய் தலையசைத்தவாறே கட்டிலில் அமர்ந்து, முதுகுக்கு தலையணை கொடுத்து கால்களை நீட்டி சாய்ந்து கொண்டவள்,
"கொஞ்சம் பேசலாமே" என்றாள்.
அவளைப் பார்த்தவாறு எதிர்ப்புறமாய், கால்மடக்கி அமர்ந்து கொண்டவன்
"அப்டியா..? என்ன பேசுறது..?"
"ஹ்ம்ம்... உங்கட வேல, எக்ஸாம் அதப்பத்தி சொல்லுங்க"
என்றவள் எழுந்த கொட்டாவியை கையை வைத்து மறைத்தாள்.
"அது...இப்ப வெறும் ட்ரெய்னிதான் நான்."
"ம்ம்"
"Architect license எடுக்குறத்துக்கு ரெஜிஸ்டர் பண்ணவேணும்"
"(ஹ்ம்)...."
"அதுக்கு, ட்ரெய்னிங் முடிய SLIA எக்ஸாம் எழுதனும்"
"...."
"ஹ்ம்ம். குட் நைட் ஷோபனா. இல்ல,குட்நைட் ஷோபா" அப்படியே சரிந்து, தூங்கிவிட்டிருந்தவளிடம் சொல்லிக் கொண்டவன், சிறிது நேரம் போனை நோண்டிவிட்டு தானும் தூங்கியிருந்தான்.
*************
அறைக்கதவு அடைக்கப்படும் சத்தம், எங்கோ தூரத்தில் கேட்பது போலிருந்தது ஷோபனாவுக்கு. ஆழ்ந்த உறக்கத்தின் விளிம்பில் இருந்தவள், அந்த ஓசையில் மெல்லக் கலைந்தாள். அறையில் வருணைக் காணவில்லை. அவன்தான் கதவை மூடி சென்றிருக்க வேண்டும். எழுந்துபோய்க் குளித்துவிட்டு வந்தாள்.
'ஐயோ! நைட் கதைப்பமென்டு கேட்டுப்போட்டு ஊருக்குமுந்தி படுத்துட்டியேடி ஷோபா. சரியான கும்பகர்ணியென்டு நினச்சிருப்பேர். இப்ப எப்பிடி அவர்ட முகத்தில முழிக்கிறது?' சிணுங்கிய மனதினை சமன்செய்யும் வழியறியாது அறையை அங்குமிங்கும் அளந்துதிரிந்தாள். வெளியில் அரவம் கேட்கவும் ஓடிச்சென்று அவனது ஸ்டடிடேபிள் முன்னே அமர்ந்தவள், கையில் அகப்பட்ட ஒரு புத்தகத்தை எடுத்துக்கொண்டாள்.
கதவைத்திறந்து அறையில் நுழைந்தவன்புறமாய்த் திரும்பாமல், கையிலிருந்த புத்தகத்தை தீவிரமாய் வாசிப்பதைப்போல் பாவனை செய்தவளருகில் வந்து நின்று பார்த்தவன்,
"உங்கட எக்ஸ நினைச்சி, ஏதும் ஃபீல் பண்றீங்களா என்ன?" எனக் கேட்டது தான் தாமதம். மேசையிலிருந்த ஸ்டீல் ரூலரை எடுத்துக்கொண்டு எழுந்தவள், அவன் தோற்பட்டையிலே பளீரென ஒன்று கொடுத்திருந்தாள்.
"ஸ்ஸ்ஆ.." எனச் சத்தமிட்டவன், 'வலிக்குது' என்பதாக அவள் முகம் பார்த்துவிட்டு, அடிவிழுந்த இடத்தில் நன்றாகத் தேய்த்துவிட்டான்.
"நல்..லா நோகட்டும். இங்க பாருங்க, இனிமேப்பட்டு எக்ஸ் வை ஸட் என்டேதாச்சும் கதவந்துச்சோ... கைல இருக்கிறதாலயே டமால் டமால்னு விழும். சொல்லிப்போட்டன் நான்"
அவள் மிரட்டலில் "அடேங்கப்பா!" எனப்புருவமுயர்த்தி அதிசயித்துக் கொண்டவன்,
"இனி வாயிலருந்து ஏபிசிடி கூட வராதுங்க டீச்சர்" முகத்தை பாவமாய் வைத்துக்கொண்டு சத்தியம் செய்வதுபோல் தலையில் கைவைத்து சொன்னான்.
அவன் செய்கையால், அவள் வதனத்தில் மலர்ந்த முறுவல்.
"சொரி ஷோபனா. நேத்து என்ட வேலையப்பத்தி ரெண்டு வார்த்தை கதைக்கமுதல் தூங்கின ஆள் நீங்க. அந்தக்கட்டுப் புத்தகத்த இதுவர நானே தூக்கிப் படிச்சதில்ல. நான் உள்ள வந்தது தெரிஞ்சும் அதப்படிக்கிற மாதிரி நீங்க ஆக்ட் பண்ணவும், சும்மா விளையாடினன்."
"ஓ... நேத்து சரியான டயர்ட் தானே.. அதுதான் தூங்கிட்டேன்." அசடுவழிந்தாள் ஷோபனா.
அறைக்கதவைத் தட்டும் சத்தம் கேட்கவும், திறந்தால் யாழினி நின்றிருந்தாள்.
"Good morning, Shoba Madam! Here’s your Cardamom tea and Milk biscuits."
"Thank you... Thank you..." எனப் புன்னகை முகமாகக் கூறியவாறே, யாழினி நீட்டிய ட்ரேயினை வாங்கி, மேசைமேல் வைத்தாள் ஷோபா.
"உங்கட ஹஸ்பண்டுக்கும் ஒரு தேங்க்யூவ, சொல்லுங்கம்மா. 'ஷோபாக்கு பிஸ்கட் இல்லாமலுக்கு விடியக்காலம டீ இறங்காதுடா' என்டு சொல்லி முடிக்கிறத்துக்குள்ள பைக் எடுத்துக்கொண்டு புதுமாப்பிள்ள கடைக்கு பறந்துட்டேர். " யாழினி சொல்லவும்,
அவனை ஓர் பார்வை பார்த்துவிட்டு, "உண்மையாவா?" என்று அவளிடம் கேட்டாள் ஷோபா.
"உண்மையாத்தான்டி. அதுசரி, இதென்ன கைல அடிமட்டத்தோட நிக்கிறாய்? ஓ... ஹஸ்ஸுக்கு ஹெல்ப் பண்றிங்களோ. குரூப் வே..ர்க்? நடக்கட்டும். நடக்கட்டும்." என்றுவிட்டு ஒருமாதிரியாய் தலையாட்டியபடி வெளியேறினாள்.
யாழினி சென்றதும் மெல்லமாய் நடந்து அவனருகில் வந்தவள், "ஐயோ! ஒரு நல்ல மனுஷனுக்கு அவசரப்பட்டு அடிச்சிட்டன் போலயே. சொரீ..."என்று கையிலிருந்த ரூலரினாலேயே அவன் தோள்பட்டையை மெதுவாகத் தடவிவிட்டாள்.
வருணுக்கு வெட்கமும் புன்னகையும் கலந்த ஏதோ ஓர் புதிய உணர்வு. அதைக் காட்டிடாமலிருக்க, பின்னங்கழுத்தை தடவியவாறு வேறுபக்கம் பார்வையை திருப்பிக்கொண்டான்.
"என்ன இது, வெக்கமா?"வாயில் கை வைத்து சிரித்தாள் அவள்.
"சரி சரி உங்கள மன்னிச்சாச்சு. இந்தாங்க, டீ ஆறமுந்தி குடிங்க" என்று எதுவும் நடவாத பாவனையோடு அவளிடம் டீயை எடுத்துக் கொடுத்தான்.
"இந்த வாங்க போங்க வேணாமே." அவள் சொல்ல,
வருண், சரி என்பதாக லேசாய்த் தலையாட்டிவிட்டு இடக்கைப் பெருவிரலையும் உயர்த்திக் காட்டினான்.
இரு நிமிடங்கள் சென்றிருக்கும்.
"ஏன், ஓம் என்டனிங்க?" திடீரென்று அவன் முகம்பார்த்து வினவினாள் ஷோபா.
"என்னத்துக்கு, பிஸ்கட் வாங்குறதுக்கா?"
"ப்ச், இல்ல. கல்யாணத்துக்கு."
"ஓஹ்..."
" சொல்லுங்களேன்"
"சொல்ல ஏலாது. அதுவும், முதல்நாளே ஹஸ்பன்ட அடிச்சித்துவச்ச வைஃப்கு சொல்லவே ஏலாது" மறுப்பாய்த் தலையசைத்தான் அவன்.
கண்களை சுருக்கி வருணை முறைத்தாள் அவள்.
"அப்பாட பிரண்ட் ஒரால் பேமிலியா இன்டைக்குத்தான் வந்துருக்காங்க. நாமளும் சாப்பிட ஹோலுக்குத்தான் போகணும். இப்ப என்னோட... வர்றியா? இல்லையென்டா முறச்சி முடிச்சிட்டு ஆறுதலா வர்றியா?" இயல்பாய் ஒருமைக்குத் தாவியிருந்தான் .
"இருங்க வர்றன்."என்று வருணோடு கூடநடந்தாள் அவன் மனையாள்.
மீண்டும் மீண்டும் புலனத்துக்குள் நுழைவதும், தன்னுடைய ஸ்டேட்டஸ்ஸினைத் தட்டித்தட்டிப் பார்ப்பதுமாகவே இருந்தான் அபி. நேற்றைய தினம் அக்காவின் திருமணத்தில் எடுத்த போட்டோவினைத்தான் ஸ்டேட்டஸில் பதிவேற்றியிருந்தான். அந்த போட்டோவிலிருப்பது பள்ளி செல்லும் மாணவன் என்று சொன்னால் யாரும் நம்பமாட்டார்கள். வெள்ளை வேட்டி, வெளிர் பச்சைநிற ஷேர்ட் அணிந்து அழகானதோர் வாலிபனாய்த் தெரிந்தான் அபித்ரன்.
ஸ்டேட்டஸைப் பார்த்தவர்கள் அனைவரும் பச்சை நிற இதயத்தை அள்ளி வீசியிருந்தனர். ஆனால்... அவள் இன்னும் பார்க்கவில்லையே.
பத்து நிமிடங்களில் அவன் டியூஷனுக்கு ஓடவேண்டும். போனை எடுத்துச் செல்லவும் முடியாது. அவனே அம்மாவின் போனை வைத்துத்தான் ஓட்டிக் கொண்டிருக்கிறான். இன்னும் ஒரு மணித்தியாலத்தில் அவனது ஸ்டேட்டஸ் அதுவாகவே மறைந்துவிடும். அவள் பார்த்திருக்கிறாளா இல்லையா என்றும் தெரிந்துகொள்ள வழியில்லை.
வாடிப்போன முகத்துடனே மந்தகதியில் தயாராகி முடித்தான் அபி. 'அம்மாட்ட குடுக்குறத்துக்கு முதல், ஒரே ஒரு தரம் பாப்பமே' என்றெண்ணி போனை எடுக்கவும் 'Madhu Liked Your Status' என்று வந்து விழுந்தது. பார்த்தவன் முகத்தில் ஆயிரம் வோல்ட் பல்ப்பின் பிரகாசம்.
மூன்றே துள்ளல்களில் மாடிப்படியைக் கடந்து, கீழேசென்றிருந்தான். றெக்கை கட்டிப் பறந்தது அபியின் சைக்கிள்

************

Last edited: