VIN - 13
அடுப்பிலிருந்த சட்டியினுள் ஒரு கப் கருப்பட்டி அதனுடன் ஒரு கப் தண்ணீர், ஏலக்காய்த்தூள், பட்டை ,கராம்பு ஆகியவற்றை சேர்த்து எல்லாம் நன்றாக கரைந்த பின்னர், அதைவடிகட்டி எடுத்துக் கொண்டார் அமுதா.
ஏற்கனவே முட்டைகளை உடைத்து ஊற்றி நன்றாக பீட்செய்து வைத்திருந்த பாத்திரத்தினுள் அந்த வடிகட்டிய கருப்பட்டிப்பாகு மற்றும் கெட்டியான தேங்காய்ப்பால் சேர்த்துக்கொண்டவர் கலவையை நன்கு அடித்துக்கலக்கினார்.
"ஷோபா, அந்த இட்லி சட்டியக் கழுவி எடு"
சமையற்கட்டில் சாய்ந்து நின்று, கைகளைக் கட்டியவாறு அம்மா செய்யும் அனைத்தையும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த மகளுக்கு, வேலை கொடுத்தார் அமுதா.
அவள் எடுத்துத்தந்த இட்லிசட்டியில் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைத்தவர், வட்டிலாப்பக் கலவையுள்ள பாத்திரத்தை அலுமினிய ஃபொய்ல் கவரினால் நன்றாக மூடி, சட்டியினுள்ளே வைத்து அடுப்பைப் பற்றவைத்தார்.
"என்னம்மா, எல்லாம் முடிஞ்சுதானே. அப்ப நான் போகட்டா?"அம்மாவிடம் கேட்டாள் ஷோபா.
"என்ன அவசரம், செய்த முறையைல்லாம் ஒழுங்காப்பாத்தியா நீ?"
"ஓமோம். பாத்தனான்"
"வருண் தம்பிக்கு வட்டிலப்பம் நல்ல விருப்பமென்டு யாழினிப்பிள்ள சொல்லிச்சுத் தானே. நான் இதெல்லாம் சாப்பிடுறேல்லயே என்டுட்டு அசட்டத்தனமா இருக்காம, அடிக்கடி செஞ்சு குடுக்கணும். சரியா..?"
"இப்ப என்னம்மா, இவ்வளோ சாமானையும் சேத்து, நல்லா கலக்கிப்போட்டு அவியவிட்டா வட்டிலப்பம் வந்துடும் தானே. இதெல்லாஞ் செய்யலாம், செய்யலாம். கல்யாணம் முடிச்சு விருந்துக்கு வந்த பிள்ளைக்கு சமையல் கிளாஸ் எடுத்ததுபோதும். இப்ப ஆளவிடுங்களேன்" கெஞ்சலாய்க் கேட்டவள், அமுதா போ என்பதாக கண்களைக் காட்டவும் அறைக்கு வந்து
பாத்ரூம் சென்று, தொள தொள டிஷர்ட்-ப்ளாஸோ பேன்ட்டை மாட்டிக்கொண்டு கட்டிலுக்கு வந்தாள்.
மாமியாரின் மதிய விருந்து கொடுத்த மயக்கத்தினால், நல்ல உறக்கத்தில் இருந்தான் அவளது கணவன்.
சத்தமெழுப்பாமல் அவனருகில் படுத்தவள், போனில் ஃபேஸ்புக்கினைத் திறக்க முதலாவது ரீலிலே ,
"ரொம்பவே ஈஸி அண்ட் சிம்பிளான வட்டிலாப்ப ரெசிபியத்தான் இன்னைக்கு நாம பாக்கப் போறோம்..."என்று ஆரம்பித்தார் ஒரு பெண்மணி.
'ஒரே வைஃபை இணைப்பினைப் பயன்படுத்துபவர்கள், அடிக்கடி நிகழ்நிலையில் மெசேஜ் பண்ணிக்கொள்ளும் நபர்கள், எப்போதோ ஊடலை(Bluetooth), பகிரலை(Hotspot) இணைப்பிலிருந்தவர்கள் போன்றோரை, தானாகவே "நெருங்கிய தொடர்புடையவர்கள்" எனக்கருதிக்கொண்டு டிக்டாக், இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக், யூடியூப் முதலிய செயலிகள், அவர்களுக்கு அதேமாதிரியான விஷயங்கள் பிடிக்குமென ஊகித்து, ஒருவரின் இணையத்தேடல்கள் சார்ந்த பதிவுகளை மற்றவரின் ஃபீடிலும் பரிந்துரைக்குமாம்.' என்று எங்கோ.. அல்காரிதம் (Algorithm) பற்றி வாசித்தது நினைவுக்கு வந்தது.
' அதுசரி, அம்மா அவங்கட போன்ல பாத்திருப்பாங்க. என்ன க்விக்கா நமக்கும் காட்டுது ' என வியந்துகொண்டவள் அடுத்த ரீலுக்குத் தாவினாள்.
"Wanna move on from a married ex? Here's how... " என்றவாறு நுனிநாக்கு ஆங்கிலத்தில் வாழ்க்கைக்கு வழிகாட்ட வந்தான் வெள்ளைக்காரனொருவன்.
'ஐயோ! இதெல்லாம் முன்னொரு காலத்தில தேடினேன்தான். ஆனா இப்போ ஏன்டா ரெக்கமண்ட் பண்றீங்க' நொந்துகொண்டாள் ஷோபா.
வருண் லேசாய் அசைந்து, திரும்பிப்படுக்கவும் உடனே போனை வைத்தவள், 'இப்பத்தான் கல்யாணமும் பண்ணியாச்சே. இனிமே இதெல்லாம் வேணாம். நல்ல ஹோல்சமான கன்டன்ட்டாவே காட்டுங்கடாப்பா..' என்று மார்க் மற்றும் குழுவினரிடம் மானசீகமாய்க் கோரிக்கை வைத்துவிட்டு, தானும் தூங்கிப்போனாள்.
***********************
மாலையானதும் கடற்கரைக்கு செல்லலாமென இருவரும் முடிவு செய்திருந்தனர். முன்பே தயாராகிய வருண், ஷோபனாவுக்காக காத்திருந்தான்.
குளியலறையின் உள்ளிருந்து வெளிப்பட்டவளை, இளம் ஒலிவ் நிற ஆர்கான்சா ஷல்வார் பாந்தமாய்த் தழுவியிருந்தது.
ஏற்கனவே அணிந்திருந்த உடைகளை நாற்காலியில் தூக்கிப்போட்டவள், ஷோலினை தோளின் ஒருபக்கமாய்ப் தொங்கவிட்டு, ஒருமுறை கண்ணாடியைப் பார்த்துக்கொண்ட பின் "போவமா...?" என வருணிடம் கேட்டாள்.
பதில் மொழியாது , கைகளைக் கட்டியபடி நின்றுகொண்டு அவளைக் கொஞ்சமே கொஞ்சமாய் முறைத்துப் பார்த்தான் அவன்.
"என்ன?" என்று கேட்டாள் ஷோபா.
"இதென்ன?"
அவன் சுட்டுவிரல் காட்டிய திசையைப் பார்த்துவிட்டு,
"கதிர" என்றாள்.
"அது எனக்கு தெரியாதா?"
"ம்ச்ச், அப்ப எதக் கேக்குறீங்க?"
"கட்டில், கதிரையில எல்லாம் உடுப்புக்கள இப்படி அள்ளிப்போடுறது எனக்குப் பிடிக்காத பழக்கம்" பிடித்தமின்மையை முகத்திலும் காட்டியபடி சொன்னான் வருண்.
"ஹலோ! நாங்க எப்பவுமே இப்படி போடுறதில்ல. ஒருசில அவசரமான சந்தர்ப்பங்கள்ல.."
"இல்லம்மா, பிழையா சொல்றிங்க. சோம்பேறித்தனமான சந்தர்ப்பங்கள்ல என்டாத்தான் சரியா வரும்." அவளை இடையிட்டுத் திருத்தினான்.
"ஓஹோ... நாம பீச்சுக்குப் போகாம கோவிலுக்குப் போவமா?" சம்பந்தமில்லாமல் கேட்டாள் அவள்.
"ஏ..ன்?"
"அதூ... கடவுளே! நான் கேக்காமலேயே, அச்சுஅசலா எங்கம்மா குணத்துல ஒருத்தர ஹஸ்பண்ட்டா தந்திருக்கிங்களே. உங்களுக்கு கோடானக் கோடி நன்றிகள், என்டு சூட்டோடசூடா தேங்க் பண்ணத்தான்." சீரியஸாக சொன்னாள் ஷோபா.
எழுந்த புன்னகையை அடக்கிக்கொண்டவன்,
"ஹேய்! NEAT ROOM REFLECTS A NEAT MIND அப்டி கேள்விப்பட்டதில்லையா நீ? ரூம்ல எந்த பென்டிங் வேலையுமே இருக்கக்கூடாது; நம்ம எப்ப என்டர் பண்ணாலும் ஒரு பொசிட்டிவ் வைப் குடுக்குற மாதிரி இருக்கணும். அப்பதான் எதத்தொட்டாலும் எல்லாமே நல்லா நடக்கும்." என வருண் பிலோசோபித்த விஷயங்களை சரியாக, தவறாய் விளங்கிக் கொண்டாள் ஷோபா.
"என்ன எல்லாம்.. "தயங்கிய இதழ்களுடன் இணைந்து கன்னங்கள், கண்கள், புருவங்கள் எல்லாமே அவனிடம் கேள்வி கேட்டன.
"ஐயோ ஷோபா!" அவளது புரிதலில் வெளிப்படையாக தலையிலடித்துக் கொண்டவன்,
"நான் டிசைன் பண்றதத்தான்டி சொன்னன். அம்மா தாயே! நீ எங்கேயும் எதையும் எப்பிடியும் போடு. என்ன ஆளவிடு. " என்று அறையிலிருந்து வெளியேறி இருந்தான்.
"வருண் கொஞ்சம் நில்... " என்று அவன் மனையாள் தொடங்கியது காற்றில்தான் கரைந்தது.
மின்னற்கதியில் அறையை சீர்செய்துவிட்டு, வெளியே வந்தாள். மாமனாருடன் பேசிக்கொண்டிருந்தான் வருண்.
"இந்தா ஷோபா வந்தாச்சு. கார்லயா போகப் போறீங்க?" நேசன் கேட்கவும்,
"வெயிலில்ல தானே மாமா. ஸ்கூட்டிலயே போறம்." என்றான் வருண்.
சமையலறையிலிருந்து சிறிய ஹாட்பாக்ஸோடு வெளியே வந்த அமுதா, "போனவுடனே சாப்பிடுங்க" என அதை ஷோபாவிடம் கொடுத்தார்.
அவர்களிடம் சொல்லிக்கொண்டு வருணும் ஷோபனாவும் புறப்பட்டார்கள்.
கேட்டுக்கு வெளியே வந்ததும் ஸ்கூட்டியை சட்டென்று நிறுத்திவிட்டு, பின்னால் உட்கார்ந்திருந்தவனிடம் திரும்பிய ஷோபா "சொரி வருண்." என கண்களை சுருக்கி, கெஞ்சலாய்க் சொன்ன அழகில், வருண் ஒரு நொடி ஸ்தம்பித்துவிட்டான்.
உடனேயே தெளிந்தவன், " ஓகே ஓகே. நீ லேட் பண்ணாம எடு. போவம்" என்றான்.
விடுமுறைக் காலம் முடிந்தபடியால், வாகனங்கள் ஓரளவு குறைவாகவே இருந்தாலும் பைக்கை மிதமான வேகத்தில் நிதானமாகவே ஓட்டினாள் ஷோபா.
பின்னால் அமர்ந்திருந்தவனுக்கு இதை சொல்லலாமா? வேண்டாமா? என்று ஒரே யோசனை. மூளையின் பெரும்பான்மையான வேண்டாம் உபதேசங்களுக்கு பின்னர், 'சொல்லுவம்' என வாய்திறந்தான்.
"ஷோபா, இந்த.. ஷல்வார்ல நல்லாருக்க."
"ஆ.. என்ன.. இன்னும் ஸ்பீடா போனா நல்லா இருக்குமா?"சரியாக அந்தவேளை பார்த்து லொரியொன்று கடந்து போனதால் இரைச்சலில் அவன் சொன்னது தெளிவாக கேட்கவில்லை அவளுக்கு.
'ஹ்ம்ம்.. நல்ல்ல விஷயம்!'
"இல்லையில்ல. இப்படி போனாலே போதும்."இந்தமுறை அவளுக்குக் கேட்கும்படி கத்தி சொன்னான் அவன்.
கல்லடிப் பாலத்தின் வாயிலில் பைக்கை நிறுத்தியிருந்தாள். கல்லடியையும் மட்டக்களப்பையும் இணைக்கும் இப்பாலம் 'லேடி மனிங் பாலம்' எனவும் அழைக்கப்படுகிறது.பிரித்தானியர் காலத்தில் கட்டப்பட்ட இது, ஒரு காலத்தில் இலங்கையின் நீளமான பாலமாக விளங்கியது. பாடும் மீன்களின் புராணக் கதை இப்பாலத்தின் தனிச்சிறப்பு. 2013இல் புதிய இருவழிப் பாலம் போக்குவரத்துக்குத் திறக்கப்பட்ட பின்னர்,பழைய பாலத்தின் வழியாக பாதசாரிகள் மற்றும் சைக்கிள்களுக்கு மட்டுமே அனுமதியளிக்கப்படுகிறது.
இருவரும் பழைய பாலத்தின் வழியாக நடக்கலாயினர்.
"வாங்க, செல்பி எடுப்போம்."போனை உயர்த்திப்பிடித்தபடி ஷோபா அழைக்கவும், அவளருகில் வந்து நின்றான் வருண்.
எடுத்து முடிந்ததும் போட்டோவை பார்த்தவள், "ஹ்ம்ம்... நல்லா வந்திருக்கு. ஸ்டேட்டஸ்ல வைக்கப்போறன். நம்மளோட முதல் செல்பி , நீங்களே ஒரு கெப்ஷன் சொல்லுங்களன்." என்று கேட்க,
"உன்ட விருப்பம். நீயே ஏதாச்சும் போடு"அவனது கைபேசியில் எதையோ பார்த்தவாறு, அலட்சிய தொனியில் பதிலளித்தவன் மீது, சின்னதாய்க் கோபம் எழுந்தது ஷோபாவுக்கு.
பின்னர் ஏதோ நிறைய யோசித்தவள்,
"சரி, என்ட விருப்பம் தானே?" எனக் கேட்டாள்.
"ம்ம்.."
"அப்ப, இப்படி போடுறன்-இந்தக் கல்லடி பாலம் பழசோ பழசு. இவர் ஹஸ்பண்ட் வேலைக்குப் புதுசோ புதுசு" எவ்வளவு முயற்சித்தும், சொல்லும் போது அவளுக்கே சிரிப்புவந்து விட்டது.
அவனும் குபீர் சிரிப்பு சிரித்தவன், சுட்டுவிரலால் கவனம் காட்டினான்.
****************
பீச்சுக்கு சென்றதும் வருண் வட்டிலப்பத்தை காலி செய்யத் தொடங்கினான். ஷோபனா தனக்கு சூடான இறால் வடை வாங்கிக் கொண்டாள். அதுமுடிய இருவரும் ஐஸ்கிரீம் சுவைத்தார்கள்-வெனிலா ஃப்ளேவர். அவ்வப்போது கடலையும் போட்டுக் கொண்டார்கள். வறுத்த கொண்டைக்கடலையை சொன்னேன்.
போஜனப்படலம் முடிந்ததும் ,ஷோபா செருப்பை கையில் பிடித்தபடி மணலில் மெதுவாக நடந்தாள். அவளருகே வருணும். சில சமயம். பேசினார்கள். சில சமயம் பேசவே இல்லை.
நடக்க நடக்க, அவர்களின் காலடிச்சுவடுகளை அலை வந்து மெதுவாக அழித்துக் கொண்டிருந்தது. அதைப் பற்றிய பிரக்ஞையின்றி மணலில் மேலும் மேலும் பாதச்சுவடுகளைப் பதித்தபடி முன்னேறிக் கொண்டிருந்தார்கள் இருவரும்.