VIN-21
Nuwara Dream Archs.
மீட்டிங்ரூமின் கதவை தள்ளிக் கொண்டு வெளியே வந்த வருணின் முகத்தில் அப்பட்டமான களைப்பு தெரிந்தது. லேப்டாப்பை தன்மேசையில் வைத்துவிட்டு குமரனையும் அழைத்துக் கொண்டு அந்தக் கட்டத்தின் கீழ்த்தளத்தில் இருந்த காபி ஷாப்பிற்கு சென்றான்.
சில நிமிடங்களில் வெண்டிங் மிஷினின் சூடான மசாலா டீ அவர்களது மேசையை வந்தடைந்தது. ஆளுக்கு ஒரு கப்பை எடுத்துக் கொண்டனர்.
பக்கச்சுவரில் தொங்கிய நாட்காட்டிமீது வருணின் கண்கள் சென்று நின்றன. அதைப்பார்க்க வசதியாக நாற்காலியில் சற்றே திரும்பி அமர்ந்தவன், பார்வையை அதில் பதித்தபடியே டீயை மிடறு மிடறாய் அருந்தினான்.
"தம்பி..!! எந்தக் கலண்டர்ல பார்த்தாலும் மாசத்துக்கு ஒரு ஃபுல் மூன்தான். உங்களுக்கு ஒருநாள் லீவுதான்" கிண்டல் வழியும் குரலில் சொன்ன குமரன்பக்கமாய் திரும்பி, ஒரு பார்வை பார்த்துவிட்டு, பதில் ஏதும் மொழியாமல் குடித்துமுடித்த பேப்பர் கப்பின் விளிம்புவழியே ஒற்றை விரலை நகர்த்தத் தொடங்கியிருந்த வருண், சில நிமிட மௌனத்தின் பின்னர் "மச்சான் டேய்..." என்று இழுவையாய் ஆரம்பிக்கவும்,
"சொல்லு மச்சான், என்ன ஹெல்ப் பண்ணனும்??" உடனடிக் கேள்வி வந்தது குமரனிடமிருந்து.
"நாளைக்கு ப்ரோபரா ப்ரொபோஸ் பண்ணுவமென்டு பாக்குறேன். ரிங் வாங்கிட்டேன்டா. வேற என்ன கிஃப்ட் குடுக்கலாம் என்டு ஒரு ஐடியா தாவன்." குனிந்து பேப்பர் கப்பிலே பார்வையைப் பதித்தபடி கேட்ட நண்பனைப் பார்க்க சிரிப்பாக இருந்தாலும் வெளிக்காட்டாமல்,
"ஓ... அப்படியா சங்கதி..?? நாளைக்கு வேணும் என..." முகவாயை தடவிக் கொண்டு பலத்த யோசனையில் ஆழ்ந்த குமரன், "கவிதை.. கவித ஒன்டு எழுதிக் குடுடா..." என்றான் தீர்மானமாய் .
"கவிதையா..! கிரிஞ்சா இருக்காதாடா..?"
"ஓஹோ!! அப்படிப்பாத்தா... ரிங் போட்டு ப்ரொபோஸ் பண்றது மட்டும்??? டேய்... நீ இந்த வேண்டாத ஆராய்ச்சியெல்லாம் விட்டுட்டு சொல்றத செய். எந்தக்காலம் எண்டாலும் கவித இல்லாம ஒரு லவ் ஸ்டோரி இருக்காது."
குமரன் சொல்லவும், கீழ்த் தாடையை இடம்வலமாக அசைத்து ஏதோ சிந்தித்த வருண் பின், "ஓகேடா... " என்றுவிட்டு ஜீன்ஸ் பக்கெட்டிலிருந்த அவனது ஃபோனைக் கையில் எடுக்கவும், அதைப் பறித்துக் கொண்டான் குமரன்.
"AIலாம் யூஸ் பண்ணாம, சொந்த மூளைய பயன்படுத்தி வரிவரியா... செதுக்கிக் குடுக்கனும்டா. "
" எனக்கு அதெல்லாம் வராதேடா.." வருண் நெற்றியை சொறிந்தான்.
"வரும்.. வரனும். நீயும் எழுது. நானும் எழுதித்தாரேன். இரண்டையும் மிக்ஸ் பண்ணி மாஸ் பண்ணுவோம். இப்ப கெதிய வா.. உடனே போய் வேலைய ஆரம்பிப்போம்." குமரன் சொன்ன கையோடு இருவரும் அலுவலகத்துக்கு சென்று ஆளுக்கொரு A4 பேப்பரை எடுத்துக்கொண்டு, தத்தம் இருக்கைகளில் அமர்ந்தனர் .
மீட்டிங் முடிந்ததும், சீனியர் ஆர்க்கிடெக்ட் சம்பத் எங்கோ வெளியில் சென்றிருந்தது பெரியதொரு சௌகரியம் ஆகிப்போனது இருவருக்கும்.
நண்பர்கள் இருவரும் பேப்பர் மற்றும் பேனையுடன் மல்லுக்கட்டத் தொடங்கி, அரைமணி நேரம் கழிந்திருக்கும்...
குமரன் எழுந்தவன், மெதுவாய் வருணருகில் வந்துநின்று அவன் தாளில் பார்வையை பதித்துவிட்டு,
"நானே எழுதிட்டேன். லவ்வர் பாய், நீ என்னடா வெறும் பேப்பரை வச்சிக் கொண்டிருக்காய்..? ஒரு பிள்ளையார் சுழிய என்டாலும் போட்டு வச்சிருக்கலாமே" நக்கலாய் சொல்லி வாய்விட்டு நகைத்தான்.
"உனக்கென்னப்பா!! வரிசையா நாலஞ்சு செமத்தியான செருப்படிகள் வாங்கியிருக்க. பல எக்ஸப் பாத்த கை அது... பக்கம் பக்கமா எழுதி தள்ளிருப்ப. நாங்க எல்லாம் வேலைக்குப் புதுசுதானே! அதான் இப்படி நொண்டிட்டு நிக்கிறம்..." வருண் முகத்தை பாவம் போல் வைத்து சொன்னான் .
குமரன் முறைப்புடன் இருக்கைக்கு செல்வதற்காய் திரும்பவும், அதற்கு விடாமல் அவனின் கைப்பிடித்து தடுத்த வருண், "இப்படி பட்பட்டென்டு கோவிச்சா ஆகுமா குமரா? எங்க, உண்ட கவிதைய தா.. ஷோபாக்கு அதையே குடுப்பம்." என்று கேட்க,
"வேணாமேடா.. அது வெறும் எடுத்துக்காட்டுத்தான் "
என்று இழுத்தான் குமரன்.
" அததான்டா நானும் சொல்றேன். எழுதினத எடுத்துக்காட்டு."
அப்போதும் குமரன் மறுதலிக்கவும், வருண் எழுந்து, அவன் கையிலிருந்த தாளைப்பறித்து தொண்டையை செருமிவிட்டு நாடக பாணியில் வாசிக்கத் தொடங்கினான்.
'ஒரு அலை நீ.. கலை நீ..
அழகிய நிலவு நீ..
நிழலிலும் ஜொலிக்..'
இவ்வளவோடு நிறுத்திவிட்டு மீதமிருந்ததை வாசிக்காமல் குமரனை மேலிருந்து கீழாக ஒரு லுக்கு விட்டவன்,
"இதானா டியூட், நீங்க சொந்தமூளையப் பயன்படுத்தி வரிவரியா செதுக்கினது?" என்று நக்கலாய் கேட்டான்.
"ஐயோ டியூட்! நான் தான் சொன்னனே... இது வெறும் எடுத்துக்காட்டு. இனித்தான் நான் எழுதிக்காட்டப் போறேன்."
"அதுக்குள்ள சம்பத் சேர் வந்து ரெண்டுபேருக்கும் காட்டுக் காட்டென்டு காட்டிருவேர். நீங்க கவலையே படாம, முதல்ல வேலைய பாருங்க. நான் நாளைக்கு கவிதையோட வாரன்." என்று நண்பனை அனுப்பிவிட்டு அலுவலகவேலையில் ஆழ்ந்தான் வருண்.
****************
"ஹைர ஹைர ஹைரப்பா...
ஹைர ஹைர ஹைரப்பா...
பிஃப்டி கேஜி தாஜ் மஹால்
எனக்கே எனக்கா...
பிளைட்டில் வந்த நந்தவனம்
எனக்கே எனக்கா..."
டிவியில் சத்தமாய் ஒலித்துக் கொண்டிருந்த பாடலின் தாளத்திற்கேற்ப உற்சாகமாக ஆடிக் கொண்டிருந்தாள் ஷோபனா.
ஆட்டத்துக்கு விதிகளோ, ஸ்டெப்ஸ்களோ எதுவுமின்றி மனதில் தோன்றியதை எல்லாம் உடல்மொழியாக மாற்றியவள், அப்படியும் இப்படியுமாக வளைந்து நெளிந்து குதூகலித்தாள்.
அவளருகே நின்றிருந்த ஆராக்குட்டியும், மாமியின் ஒவ்வொரு அசைவையும் தீவிரமாக கவனித்து அப்படியே நகலெடுக்க முயன்று கொண்டிருந்தது.
அத்தை குதித்தால் இவளும் குதித்தாள். அத்தை சுழன்றால் இவளும் தன்னால் முடிந்த வேகத்தில் இரண்டு சுற்று சுற்றினாள். சின்னஞ்சிறு கால்களால் குதித்துக் கும்மாளமிட்டாள்.
" ...உன்னை எடுத்து உடுத்திக்கலாமா..."
பாடலின் வரிகள் உச்சம் தொட்ட நேரம், ஜூஸ் ட்ரேயுடன் கிச்சனில் இருந்து வெளியே வந்தாள் யாழினி.
அவளைக் கண்டதும் ஷோபனாவின் குறும்பு இன்னும் கூடியது.
"..பட்டுப் பூவே குட்டித் தீவே..."
என்று பாடியபடியே கண்களை சுருக்கி சிரித்தவள், நேராக யாழினியை நோக்கி நகர்ந்தாள்.
"விரல் இடை தொட வரம் கொடம்மா..."
என்ற வரியோடு அவளது இடுப்பை நோக்கி கைகளை நீட்டவும்,
இதை எதிர்பார்க்காத யாழினி, "அடியேய்! (g)கிளாஸ்டீ.. கிளாஸ்! கிளாஸ்.." என்று அலறியவாறே அனிச்சையாக இரண்டடி பின்னால் நகர்ந்து, ட்ரேயை தலைக்கு மேல் உயர்த்திக் காட்டினாள்.
ஷோபனா வயிறுகுலுங்கி சிரித்தவள், பாடலின் இசைக்கேற்ப தலையை அசைத்தபடியே ட்ரேயை மெதுவாக வாங்கி, பக்கத்தில் இருந்த ஸ்டூலில் பத்திரமாக வைத்தாள்.
அடுத்த நொடி, யாழினியின் கையை பற்றவும், அவளும் மறுக்கவெல்லாம் இல்லை. முந்தானையை இடுப்பில் சொருகிக்கொண்டு அவர்களுடன் இணைந்து கொண்டாள். ஆரா குட்டி இருவருக்கும் நடுவில் புகுந்து துள்ளிக்குதித்தாள்.
பாட்டு முடிந்து ஏதோ விளம்பரம் ஓடத்தொடங்கியது.
மூவரும் மூச்சு வாங்கி, வியர்த்து, ஒருவரை ஒருவர் பார்த்து விழுந்து விழுந்து சிரித்தார்கள். பின்னர் சோபாவில் சரிந்தார்கள்.
ஜூஸை எடுத்து நீட்ட, ஷோபனா கிளாஸை வாங்கி ஒரே மூச்சில் குடித்துவிட்டு, அவளை சிரிப்புடன் பார்த்தாள்.
யாழினி தலையை ஆட்டி கண்களால் 'என்ன' என்று கேட்க, புன்னகை முகமாகத் தோளைக் குலுக்கினாள் ஷோபா.
"ஒன்டுமே இல்லையா? எனக்கென்னவோ நாளைக்கு வர இருந்த யாரோ இண்டைக்கே வரப்போறாங்க போலத் தோனுதே..." ஒரு மார்க்கமாய் இழுத்தாள் யாழினி. குரலில் குறும்பு இழைந்தோடியது.
"அதெல்...லாம் நாளைக்குத்தான் வருவாங்க. நாங்க சும்மா ஜோலிக்கு ஆட்டம் போட்டம். எனடா செல்லம்.." ஆராவின் கன்னங்களை கிள்ளி கொஞ்சினாள் ஷோபனா.
"ஹேய்..நீ ஹெப்பி தானே??"
"அதுலென்ன சந்தேகம்?? I'm Super Duper Happy!!." கண்கள் மின்ன உடன்பதில் தந்தவளைப் பார்க்க, யாழினி முகத்திலும் புன்னகைப் பூ. ஷோபனாவின் முகவளைவைக் காற்றில் அளந்து விரல்கள் குவித்துக் கொஞ்சினாள் யாழினி.
ஷோபனாவும் பறக்கும் முத்தமொன்றை பரிசளித்தாள் யாழினிக்கு.
"என்னடி கழுத்துல சிவந்து போயிருக்கு? " யாழினி கேட்க,
" தெரியலக்கா... காலைல தான் நானும் கவனிச்சேன். ஏதும் பூச்சி கடிச்சிருக்கும் போல..." அவ்விடத்தை கைகளால் தடவிக்கொண்டே பதிலளித்தாள் ஷோபனா.
"ஓஹோ!! பூச்சியா...? எப்படிம்மா, அந்த பூச்சிக்கு ஒரு இருவத்தெட்டு வயசிருக்குமா?" யாழினியின் குரல் முழுக்க விஷமம் கொட்டிக்கிடந்தது.
"அ-க்-கா...!! " ஷோபனா சிணுக்கத்துடன் செல்லமாய் கடிந்தவள், அவளின் தொடையிலேயே நறுக்கெனக் கிள்ளியும்விட்டாள்.
"சும்மாடி. கிடந்து நெளியாத நீ.." என்றாள் யாழினி கேலி சிரிப்புடன்.
"போங்க, நான் போப்பறன்." முறுக்கிகொண்டு எழுந்தாள் ஷோபா.
"இதென்ன.. எங்கட ஒரே ஒரு மச்சாளோட நான் தனகக்கூடாதா? இப்படி கோவிச்சா எப்டிடாப்பா!!" யாழினி பொய்யாய் சோகராகம் பாட,
"நீங்க தாராளமாத்தான் தனகலாம். நான் கோவிக்கெல்லாம் இல்ல. ஆட்டம்போட்டதுல மேலெல்லாம் கசகசன்டு கிடக்கு. வீட்ட போய் குளிச்சாத்தான் சரிவரும். அப்ப, பொய்ட்டு வரட்டா நான்?" யாழினியின் நாடியைப் பற்றி அனுமதி கேட்டாள். ஸ்கூல் முடிந்ததும் யாழினியோடு வீட்டுக்கு வந்தவள், இப்போது கிளம்ப தயாரானாள்.
"ஓகே. ஓகே. கவனமா போய்ட்டு வாங்க."
அவளிடம் விடை பெற்றுக்கொண்டு வெளியே வந்த ஷோபனா ஸ்கூட்டியை கிளப்பியவள், மாலை நேரப்போக்குவரத்தில் கலந்து சாலையில் விரைந்தாள்.
வீட்டை அடைய இன்னும் சில கிலோமீட்டர்களே இருந்த வேளை, சாலையோரம் சைக்கிளை மிதித்துச் சென்ற ஓரளவு பரிச்சயமான உருவம்கண்டு ஹார்னை ஒலித்து, கை காட்டினாள். அவனும் பார்த்ததும் சட்டென்று பிரேக் அடித்து நிறுத்தியிருந்தான்.
"அருள் தானே?? எங்க.. கிளாஸ் முடிஞ்சா போராய்??"
"ஓமக்கா.. ஓம் டீச்சர்." என்னவென்று விளிப்பது எனத்தெரியாமல் தடுமாறினான்.
"பரவால்ல. அக்கா என்டே கூப்பிடு. அபி எங்க?? வீட்ட பொயிட்டானா??" ஹெல்மட்டை கழட்டியபடியே கேட்டாள்.
"இல்லக்கா. அவன் கிளாஸ் முடிஞ்சா சரணாக்களோட சேந்து ஃபுட்பால் விளையாடப் போயிடுவான். நான் டீம்ல இல்ல. அதனால வீட்ட போறேன்."
"ஓஹ்.. ஓகே." என்று தலையசைத்தவள் சில நொடி அமைதிக்குப் பின்னர்,
"அபிக்கு என்ன பிரச்சன?" என நேரடியாகக் கேட்டாள்.
"பிரச்சினையா?? அப்டியெல்லாம் ஒன்டுமில்லையே..." மழுப்பலாய் சொன்னான் அருள்.
"ஏய்!! ஃபிரண்ட காப்பாத்தப் பாக்குறாய் என?" சிரித்தபடி கேட்டாலும் பார்வை கூர்மையாகவே இருந்தது.
"இல்லக்கா. ஒன்டும் இ..."
மீண்டும் அதே பல்லவியையே பாடவந்தவனை,
"பொய் சொல்லக்கூடாது அருள்." ஷோபனாவின் குரலில் இருந்த கண்டிப்பு இடைநிறுத்தியது.
"அபி கொஞ்சநாளா ஆளே சரியில்லை. கேப்பமென்டு வீட்டபோனா.. ஒன்டு, போய் படுக்கிறான். இல்லாட்டி திடீர் ட்யூஷன் க்ளாஸ்கு வெளிக்கிட்டு பறக்குறான். இதுதான் விஷயமென்டு தெரியாம விசராக்கிடக்கு எனக்கு. என்னென்டு சொன்னியென்டா மனசுக்குக் கொஞ்சம் ஆறுதலா இருக்கும். அதான் கேட்குறன். ஏதாச்சும் லவ் இஷ்ஷுஸ் எண்டாக்கூட பரவால்ல. உன்ட ஃப்ரண்ட அப்படியெல்லாம் உடனே பிரிச்சிவிட்ற மாட்டேன்.. பிளீஸ் சொல்லு." அவள் சற்று இரங்கலாய்க் கேட்டதில் அருள், மனமிளகி திருவாய் மலர்ந்தருளினான்.
"அது.. லவ்.. லவ்தானக்கா. அவனுக்கு மதுவ நல்ல விருப்பமா இருந்தது. அவளுக்கும் தான். இப்ப கணநாளா ரெண்டு பேரும் கதைக்கிறல்ல. அதுலதான் ஒரு மாதிரியா இருக்கான். மத்தபடி வேற ஒரு பிரச்சனையும் இல்லக்கா." தயங்கி தயங்கி சொல்லியிருந்தான்.
"அந்தப்பிள்ளைட வீட்ட தெரிஞ்சி ஏதும் பிரச்சனயா?" ஷோபனா உடனே கேட்டாள்.
" ஐயோ, அப்படி எல்லாம் ஒன்டும் இல்லக்கா. நான் ஏன்டா கதைக்கிறல என்டு கேட்க, 'இனி இதெல்லாம் தேவையில்லடா. முதல்ல படிப்ப பாப்போம்' என்டு சொல்லவும், நானும் விட்டுட்டனக்கா. எனக்கு மதுவ அவ்வளவா பிடிக்காது." கடைசியில் உதடு பிதுக்கியபடி
அருள் அவ்வாறு சொல்லியதில் ஷோபனாவுக்கு சின்னதாய் சிரிப்பு வந்தது.
" ஓகே.. உண்மையா இவ்வளவு தானே? வேற ஒன்டும் இல்லையே.. உன்ன நம்பலாமா?" உறுதிப்படுத்திக் கொள்ள மீண்டும் கேட்டாள்.
" சத்தியமா அக்கா. ஆனா... நான்தான் இதெல்லாம் சொல்லித்தந்தன்டு மாட்டிவிட்ராதீங்க பிளீஸ்."
" சே.. சே.. இப்ப ஒண்டும் கேக்க மாட்டான். பூனைக்குட்டி தானாவே வெளிலவரட்டும். அதுவரைக்கும் அவர்ட போக்கிலேயே விடுவம். நீயும் எதுவும் காட்டிக்கொள்ளாத " என்று அவனை அனுப்பிவிட்டு வீட்டுக்கு வந்தாள்.
***************
அடுத்த நாள்...
நேரம் சரியாக இரவு பத்து நாற்பத்தெட்டு.
எட்டு மணியளவில் தடைப்பட்டிருந்த மின்சாரம் இன்னும் வந்திருக்கவில்லை.
அமுதாவும் நேசனும் அன்று அதிகாலையிலேயே கொழும்புக்குச் சென்றிருந்தனர். வீட்டில் ஷோபனா மட்டுமே தனியாக இருந்தாள்.
திறந்திருந்த வாசற்கதவின் வழியே குளிர்ந்த இராக்காற்று வீட்டிற்குள் நுழைந்துகொண்டிருந்தது. அதனோடு போட்டிபோடுவது போல நிலவின் வெளிச்சமும் ஹாலை நிரப்பியிருந்தது.
நீள்சோபாவில் குப்புறப்படுத்தபடி கைப்பேசியை நோண்டிக்கொண்டிருந்தவள், வாசலில் கார் வந்து நிற்கும் சத்தம் கேட்டதும் சட்டென்று எழுந்தாள்.
அடுத்த நொடியே அவளது கால்கள் வாசலை நோக்கி விரைந்தன.
காரை நிறுத்திய வருண், டேஷ்போர்டின் மீது கவனமாக வைக்கப்பட்டிருந்த ஃப்ரேமை எடுத்தான்.
ஒரு கணம் அதை பார்த்தவன், பிறகு தன் பைக்குள் வைத்துக்கொண்டான்.
அன்று காலை அலுவலகத்திற்குள் நுழைந்ததுமே, இரவு முழுக்க விழித்திருந்து எழுதியிருந்த அந்தவரிகளை எடுத்துக்கொண்டு குமரனிடம் நீட்டியிருந்தான்.
"ஏதோ என்னால முடிஞ்சது..."
என்று தயக்கத்துடன் சொன்னவனிடம்,
"ஹ்ம்ம்... இது ஓகேதான் டா."
என்று வாசித்துக்கொண்டே தலையாட்டிய குமரன்,
"ஆனா இப்படியே பேப்பரா கொண்டு போய் குடுத்துறாத. உன் ஹேண்ட் ரைட்டிங் டெக்ஸ்ச்சர் மாறாம ஃப்ரேம் பண்ணிக் குடுப்போம். அப்ப மார்க்ஸ் கொஞ்சம் கூட கிடைக்கிறதுக்கு சான்ஸ் இருக்கு."
என்று கண் சிமிட்டியபடி ஆலோசனை சொல்லியிருந்தான்.
அதன் விளைவுதான் இப்போது அவன் பைக்குள் பத்திரமாக இருந்தது.
ஒற்றைத் தோளில் பையை மாட்டிக்கொண்டு காரிலிருந்து இறங்கியவனுக்கு, நிலவொளியில் நின்ற ஷோபனா தேவதையாகவே தெரிந்தாள்.
மென்நாவல் நிற இரவுடையில், காற்றில் லேசாக அசைந்த கூந்தலுடன் நின்றிருந்தவளைப் பார்த்தவனின் உதட்டோரம் தானாகப் புன்னகை மலர்ந்தது.
அவனைக் கண்டதும் ஷோபனாவின் முகமும் மலர்ந்தது.
தலையைச் சற்றே சரித்தபடி, கையை லேசாக அசைத்தவள்,
"ஹாய்!!"என்றாள்.
அந்த ஒரு வார்த்தையிலேயே நாள்முழுக்க காத்திருந்த மகிழ்ச்சி ஒட்டிக்கொண்டு நின்றது.
"ஹலோ மெடம்.!!"
என்று புருவத்தை உயர்த்தியவன்,
"லாங் டைம் நோ சீ..."
என்று குறும்பாக இழுத்தான்.
ஷோபனாவின் இதழ்களில் சிரிப்பு விரிந்தது.
அவளருகே வந்தவன் இயல்பாக அவளது தோளைச் சுற்றிக் கை போட்டபடி அவளோடு சேர்ந்து நடந்தான்.
"எத்தனை மணிக்குக் கரண்ட் கட்டானது?"
"ஒரு... எட்டு மணி மாதிரி. பவர் கட் டூ ஹவர்ஸ்னுதான் சொன்னாங்க. ஆனா இன்னும் வரல."
பேசிக்கொண்டே இருவரும் வீட்டுக்குள் நுழைந்தனர்.
ஷோபனா அவனை முன்னால் நடக்கவிட்டபடி கதவை மூடித் தாழிட்டுக் கொண்டிருந்தாள்.
"இருட்டுக்க பாத்து... கவனமா—"
அவள் சொல்லி முடிப்பதற்குள்,
"ஸ்ஸ்... ஆஹ்..." வலியோடு வருணின் குரல் எழுந்தது.
அவசரமாகத் திரும்பிப் பார்த்தவள், டைனிங் டேபிளின் ஓரத்தில் முழங்காலை பலமாக இடித்துக்கொண்டு நின்றவனைக்கண்டு பதறி ஓடிவந்தாள்.
வருணுக்கு நல்ல அடி. வலியில் முகம் சுருங்கிப்போயிருந்தது. ஒரு கையை டேபிளின் மீது ஊன்றியபடி, கண்களை இறுக மூடி, மற்றொரு கையால் முழங்காலைத் தேய்த்துக்கொண்டிருந்தான்.
அவன் தோளைத் தாங்கிக்கொண்டு அழைத்துவந்து சோஃபாவில் அமர வைத்தாள்.
"கொஞ்சம் இருங்க..."
என்று சொல்லிவிட்டு விரைவாக அம்மாவின் அறைக்குள்ளே ஓடியவள், சில நொடிகளில் ஒரு சிறிய தைலப் பாட்டிலுடன் திரும்பி வந்தாள்.
வருண் அருகே மண்டியிட்டு அமர்ந்து முழங்காலில் மெதுவாகத் தைலத்தைத் தடவியபின், கவனமாக அழுத்தித் தேய்த்துவிட்டாள்.
"இப்ப ஓகேவா..?"
உதடுகள் இரண்டையும் அழுத்தமாய் மடித்திருந்தவன் "ஹ்ம்ம்.." என்று தலையாட்டினான்.
அதற்குள் மின்சாரமும் வந்திருந்தது.
ஷோபனா கிச்சனுக்குள் நுழைந்து இருவருக்கும் டீ போட்டு எடுத்து வந்தாள். குடித்து முடித்ததும், அவன் அடிபட்ட முழங்காலில் லேசாய் கைவைத்து "இன்னும் நோவிருக்கா?" என்று கவலையாய் உதடுகள் குவித்து கேட்கவும்,
"கொஞ்சம்.."என்றவன், அப்படியே அவளது கையை மெதுவாகப் பற்றிக்கொண்டான்.
ஷோபனா அவன் முகத்தை நோக்கினாள்.
உடலைச் சற்றுச் சரித்தவன், ஜீன்ஸ் பாக்கெட்டுக்குள் கைவிட்டு ஒரு சிறிய வெல்வெட் பெட்டியை வெளியே எடுத்தான். அதைத் திறந்தபோது, உள்ளே இருந்த ஒற்றைக்கல் மோதிரம் மின்னியது.
அவளின் விரலைப் பற்றியவன், மெதுவாக அந்த மோதிரத்தை அணிவித்துவிட்டான்.
ஷோபனாவின் விழிகள் வியப்பில் விரிய இதழ்களில் ஒரு குறுநகை மலர்ந்தது. அந்தப் புன்னகையோடு அவன் முகத்தையே கேள்வியாகப் பார்த்தாள்.
"முட்டி போட்டு ப்ரபோஸ் பண்றதுதான் பிளான். அதுக்கு கடுமையா பிராக்டீசும் பண்ணிட்டு வந்தேன். கடைசில இப்டி ஆகிப்போச்சு..." முகத்தை சோகமாய் வைத்துக்கொண்டு சொன்னவனைப் பார்க்க சிரிப்பாய் இருந்தது அவளுக்கு.
வாயில் கைவைத்து சிரிக்கவும் செய்தாள்.
"பரவால்ல. இருந்தே சொல்லுங்க. "
"சொல்றேன்... ஒருக்கா என்ட பேக எடுத்து தாரியா?" டைனிங் டேபிளின் மேலிருந்த அவனது பையைக் காட்ட, ஷோபனா எடுத்துக் கொடுத்தாள்.
பையைத் திறந்தவன் அதிலிருந்த ஃப்ரேமை வெளியே எடுத்து அவளிடம் நீட்டினான்.
ஆர்வத்துடன் அதை வாங்கிக்கொண்டவள் எழுதப்பட்டிருந்த வரிகளை வாசிக்கத் தொடங்கினாள்.
தொடக்கத்தில் முணுமுணுத்துக் கொண்டிருந்த அவளது உதடுகள், சில நொடிகளில் மூடிக்கொண்டன. பின்பு வெவ்வேறு விதமாய் நெளிந்தும் வளைந்தும் அழகழகாய் புன்னகை பூத்தன.
கண்களிலும் ஆயிரம் பாவனைகள் வந்து போயின.
அமர்ந்திருந்தவன் அவள் முகத்தையே கண்ணெடுக்காமல் கவனித்துப் பார்த்திருந்தான்.
இடையில் ஒருமுறை அவன் முகம் பார்த்தவளின் கண்களில் கண்ணீரின் பளபளப்பு. அந்த நெகிழ்ச்சி எந்த வரிக்கானது என்பதை அவன் அறிந்திருந்தான்.
முழுதாக முடித்துவிட்டு ஒன்றும் சொல்லாமல் அவனையே பார்த்திருந்தவளிடம்,
"என்ன மெடம் இப்படி பார்த்தா.. நான் என்ன என்டு நினைக்கிறது? பிடிச்சிருக்கா பிடிக்கலையா ஏதாச்சும் வாய தொறந்து சொல்லணும்..." என்று சொன்னான் வருண். அவனது குரலில் அவளது பதிலுக்கான எதிர்பார்ப்பு வெளிப்படையாகவே தெரிந்தது.

Last edited: