• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

வழியிலே இதயத்தின் நிழலாய் 6 - (2)

ஷாரிகா

Moderator
Staff member
VIN - 6(2)
நேரம் முன்பகல் 11:30 மணி.
யாழினிக்காக காத்திருந்து பார்த்தவள், ஆதியிடம் போவதாக சொல்லிவிட்டு வெளியே வந்தாள். அப்போது யாழினியின் கார் உள்ளே நுழைந்தது.அதன் பின்னாலேயே பைக்கில் வருண்.
அவனைக் கண்டமாத்திரத்தில் வேகமாய் சென்று ஸ்கூட்டியில் அமர்ந்துகொண்டு, அவசர அவசரமாய் திறப்பைப் பொருத்திவிட்டு ஸ்டார்ட் பண்ணிப்பார்த்தாள். வரவில்லை. சிறு துவங்கல் ஒலி கூட இல்லை...
அவன் பார்த்துவிடுவானோ என்ற பதட்டத்தில் அங்கே பார்ப்பதும், இங்கே மீண்டும் மீண்டும் முயற்சிப்பதுமாக இருந்தாள். ம்ஹும்.. வரவே இல்லை.
மாறாக, அந்த வருண்தான், வேகநடையில் பைக்குடன் மல்லுக்கட்டிக் கொண்டிருந்தவளை நோக்கி வந்து கொண்டிருந்தான்.
'ஐயோ... இந்த ஸ்கூட்டி வேற இன்டைக்கென்டு இப்டி சதிபண்ணுதே...' நொந்து நூடுல்ஸாகிய மனத்துடன், ஸ்கூட்டியிலிருந்து இறங்கி அந்த பக்கமாய் நின்றுகொண்டாள்.
அருகே வந்து வண்டியை என்னவென்று பார்த்தவன், கொடுப்புக்குள் அடக்கிய சிரிப்புடன் அவளை ஓர் பார்வை பார்த்தான். அவன் சிரிப்பில், ஷோபனாவுக்கு எரிச்சல், பாதம் தொடங்கி கால், வயிறு , கைகள் கடந்து தலையில் ஏறுவதற்குள்ளாக,
வருண் அவனது கையைநீட்டி பைக் கீயைத் திருப்பிவிட்டு, "இப்ப வரும் ஸ்டார்ட்." என்றானே பார்க்கலாம்.
திறப்பைப் பொருத்தியவள் அவசரத்தில் திருப்ப மறந்திருக்கிறாள். அதன் பின்னரும்கூட கவனிக்கவில்லை.
பிறகென்ன, இந்தப்பக்கம் 'ஒரே.. அசிங்கமாப்போச்சு குமாரு' மொமென்ட் தான்.. அசிங்கப்படதில் அசடுவழிந்து கொண்டிருந்த முகத்தை அவனுக்குக் காட்டாது, எங்கோ பார்த்தபடி நின்றாள்.
அதற்குள், வரும்வழியிலேயே தூங்கியிருந்த ஆராவை, கட்டிலில் கிடத்திவிட்டு வந்த யாழினி வருணை வருமாறு அழைத்தாள்.
யாழினியிடம் வருவதாக தலையசைத்தவன்,
"இந்..த அளவுக்குப் பயமென்டு ஆதி சொல்லலையே... ஒரேநாள்லயே இல்லையில்ல, ஒருமணிநேரத்துலேயே ஒருத்தர்ட கரக்டெரே இதுதானென்டு முடிவுபன்றது சரியா டீ..ச்சர்?" என்று கேட்டுவிட்டே யாழினியிடம் சென்றான்.
அக்காவும் தம்பியுமாக சேர்ந்து சிவாவைத்தூக்கி சக்கரநாற்காலியில் அமர்த்தினர். வருண் வீல்சேரைத் தள்ளிக்கொண்டு வீட்டிற்குள் செல்ல, யாழினி ஏதோ இரண்டு பேக்குகளோடு நடந்தவள், ஷோபாவை உள்ளே வருமாறு அழைத்துவிட்டு வீட்டினுள் சென்றிருந்தாள்.
ஷோபனாவுக்கு அம்மாவோ அப்பாவோ யாருமே மனம் நோகும்படி திட்டியதில்லை. ஒருவேளை காதல் விவகாரம் தெரிந்திருந்தால், அடி உதைகள் விழுந்திருக்கலாம். அண்ணா தெரிந்தும் கூட நன்றாகத்தான் நடந்தான்.
திடீரென ஒரு புதியவன் குற்றவாளிக்கூண்டில் நிறுத்தியது மிகவும் பாதித்திருந்தது பெண்ணை. அதையும்விட அவன் முட்டாளைப் பார்ப்பது போல் பார்த்த பார்வையில் தன்மானம் வெகுவாக அடிவாங்கிவிட்டதாக கருதினாள். அவனுக்குப் பயம் என்றில்லை, தவிர்க்கவே எண்ணினாள்.
ஆனால், அவன் அன்று மன்னிப்புக்கேட்ட பின்னும் அதனைப் பிடித்துக்கொண்டே தொங்கியது சரியில்லை. அதுவும் இன்றைக்கு, தான் சற்று ஓவராகப் பண்ணியதாகவே தோன்றியது ஷோபாவுக்கு.
யாழினியிடம் சொல்லிவிட்டு செல்லலாம் என்று உள்ளே வந்தவளை,
"இரு ஷோபா. ஜூஸ் குடிச்சிட்டுப் போகலாம்." என யாழினி அழைத்தாள்.
"இல்லக்கா. லேட்டாகிட்டு. நாளைக்கு குடிப்பமே..அப்ப நான் போயிட்டுவாரன்"
"சரி ஓகேமா. கவனமா போங்க." என யாழினி சொன்னதும்,
வெளியே செல்வதற்காய் இரண்டு அடிகள் வைத்திருந்த ஷோபா, சட்டென்று நின்றுதிரும்பி, தமக்கையருகே நின்றிருந்த வருணிடம்,
"பொய்ட்டு வாரன், வருண்." என்று மென்புன்னகையுடன் கூறியிருந்தாள்.
அவன் முதலில் புருவமுயர்த்தி, பின் தலையசைத்து விடைகொடுத்ததும் மீண்டும் வாசல் நோக்கி நடக்கத் தொடங்கினாள் ஷோபா.
தம்பியை ஓர் மார்க்கமாகப் பார்த்தவாறே 'என்ன ' என்பதாக கண்களால் வினவினாள் யாழினி. லேசான தோள்குலுக்கலுடன் அறைக்குள் சென்றான் வருண்.
போய்க் கட்டிலில் விழுந்தவனுக்கு ஷோபனாவின் எண்ணம்தான். அன்று பஸ் ஹோல்ட்டில் அவள் அமர்ந்திருந்த விதம் இன்றும் நினைவிருக்கிறது.
காரினுள்ளிருந்து போன் பேசிக்கொண்டிருந்தவன், சேர்ச்சினுள் அவள் தயங்கித்தயங்கி வரும்போதே கண்டுவிட்டான். வந்தவள் சட்டென்று கலங்கித்திரும்பி வேகமாய் வெளியேற, பார்த்துக் கொண்டிருந்தவனுக்கு என்னவோ போலானது.
அவளும் ஒருவகையில் பாவம் தானே! ஜோனத்தன் ஒருவேளை அவளிடம் திருமணத்தைப் பற்றிக் கூறியிருக்க, மெசேஜ் போட்டிருக்க மாட்டாளோ, என்னவோ...நேற்று அவளை மட்டுமே குற்றவாளியாக்கி பேசியது பெரும் தவறு.
உடனே மன்னிப்புக்கேட்க வேண்டுமென நினைத்தான். ' இதற்குள் ஆட்டோ பிடித்திருக்க முடியாது. எப்படியும் பஸ் ஹோல்ட்டில் காத்திருக்கலாம்' என்பதாக கணித்தே அங்கு வந்திருந்தான்; மன்னிப்புக் கேட்டிருந்தான்.
எல்லாம் நினைத்துப் பார்த்தவன், 'இதுக்குமேல ஒன்டும் செய்யேலாது' என்றெண்ணி, எண்ணங்களை விரட்டிவிட்டு ஒரு குட்டித்தூக்கம் போடுவதற்காய் விழிகள் மூடிக்கொண்டான்.
 
Top Bottom