1. தாமரை இலையுள் உறை தண்ணீராய்..!!

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

STN - 72

Active member
Staff member
Jan 20, 2026
137
164
43
Chennai
உறைநீர் - 1

அந்தப் பெரிய கட்டடத்தில் பல அறைகள் இருந்தன. மிகவும் பழமையான கட்டடம் தான் அது.. ஒரு தங்கும் விடுதி போல தான் காட்சி அளித்தது அந்த இடம். ஆனால் எல்லோருக்குமே தெரியும்.. அது ஒரு பாவப்பட்ட கட்டிடம்.. பல பெண்களின் சாபங்களை.. கண்ணீர் துளிகளை.. வேதனைகளை.. துயரங்களை.. அலறல்களை சுமந்திருக்கும் இருளடிக்கப்பட்ட கட்டிடம்.. அங்கு இருந்த பருவ மங்கைகளுக்கு எதிர்காலம் என்று ஒன்று இல்லை என ஆக்கி மொத்தமாக அவர்களை உடலாலும் மனதாலும் கொன்று அழித்துவிட்ட ஒரு எமலோகமாய் நரக கூடாரமாய் நிமிர்ந்து நின்று கோரமாய் சிரித்திருந்தது அந்த கட்டிடம்..

அங்கு நான்காவது தளத்தில் இருந்த ஒரு அறையில் உயிரையே வெறுத்தபடி அமர்ந்திருந்தாள் ஒருத்தி.. 18 வயதே நிரம்பிய இளம் யுவதி.. மனதில் இரத்த துளிகள் சிந்திக் கொண்டிருக்க அதன் எதிரொலியாய் அவள் கண்ணில் உப்பு நீர் துளிகள் வழிந்து கொண்டிருந்தன..

அந்தக் கண்ணீர் துளிகளை நிறுத்தவும் தோன்றாமல் முற்றுமாய் அதை அழிக்கவும் முடியாமல் எதிரே சுவற்றை வெறித்துப் பார்த்தபடி அமர்ந்திருந்தாள் அவள்.. அவள் நிலா..

பொதுவாய் நிலவு இரவில் பிரகாசித்திருக்கும்.. ஆனால் இந்த நிலாவோ இரவு வரவே கூடாது என்று பிரார்த்தனை செய்துக் கொண்டிருந்தது.. தான் பிறர் கண்ணுக்கு தெரியவே தெரியாத அமாவாசை சந்திரனாய் எங்கேயாவது முழுவதுமாய் மறைந்து புதைந்து விட மாட்டோமா என்று ஏங்கி தவித்துக் கொண்டிருந்தாள் பெண் அவள்..

இந்த ஒரு மாதமாக ஒவ்வொரு நாளும் செத்து செத்துப் பிழைக்கிறாள் அவள்.. மூன்று மாதத்திற்கு முன்னால் நோய்வாய்ப்பட்டு படுத்த படுக்கையாகி ஒரு மாதத்திற்கு முன்னால் தன்னை விட்டு பிரிந்த தன் தாயை ஏதோ தன் உலக மகா எதிரியை ஏசுவது போல ஏசி கொண்டு இருந்தாள் அந்நேரம்..

ஒருவேளை இப்போது அவள் தாய் உயிரோடு வந்தால் கூட இன்னொரு முறை அவளை துண்டு துண்டாய் அறுத்து கொலை செய்வதற்கும் தயங்க மாட்டாள் இந்த மகள். அவ்வளவு கோபம்.. வெறுப்பு.. அருவருப்பு.. ஆத்திரம்.. என அத்தனை எதிர்மறை உணர்வுகளும் இருந்தது அவளுக்கு அந்த தாயின் மீது..

"நீ எல்லாம் ஒரு அம்மாவா? முதல்ல நீ எல்லாம் ஒரு பொண்ணா? முதல் முதல்ல இந்த இடத்துக்கு உன்னை இழுத்துட்டு வந்தப்பவே உயிரை விட்டிருந்தேன்னா நாங்க இன்னிக்கு இவ்ளோ கஷ்டப்பட மாட்டோம்ல? உன்னால தினம் தினம் செத்துகிட்டு இருக்கேன்.. உள்ளுக்குள்ள ஒவ்வொரு நாளும் சுக்கு நூறா உடைஞ்சிக்கிட்டு இருக்கேன். அம்மான்கிறவ தெய்வத்துக்கு சமம்ன்னு சொல்லுவாங்க.. ஆனா கடவுள் எனக்கு மட்டும் ஏன் இப்படி ஒரு கேவலமான பிறவியை அம்மாவா கொடுக்கணும்..? இந்த மாதிரி ஒரு கேவலமான வாழ்க்கையை நீ வாழ்ந்ததும் இல்லாம என்னையும் வாழ வச்சிட்டியேடி.. ராட்சசி.. உயிரைக் கூட விட முடியாத அளவுக்கு என்னை இப்படி ஒரு அரக்க கும்பலுக்கு நடுவுல விட்டுட்டு போயிட்டியே.. இன்னைக்கு போனவ இங்க வந்த முதல் நாளே போயிருந்தேன்னா நான் யாரோ ஒரு நல்லவனுக்கு பொறந்து நிம்மதியா இருந்திருப்பேன்ல..? ஐயோ என்னால முடியலை மா.. உடம்பெல்லாம் எரியுது மா.. ரொம்ப வலிக்குது மா.. ஏன்மா இந்த சாக்கடைக்குள்ள என்னை தள்ளிட்டு போன? இதுக்கு பேசாம நீ என்னை கொன்னுட்டு போயிருக்கலாம்.."

இப்படியே புலம்பிக் கொண்டிருந்தவள்.. ஏதோ தோன்ற தன் பையில் இருந்த ஒரு சிறிய கையடக்கமான கூரிய கத்தியை எடுத்து தன் கையின் மணிக்கட்டின் மேலே அதை வைத்து தன் மணிக்கட்டையும் அந்த கத்தியையும் மாறி மாறி பார்த்து வெறித்திருந்தாள்..

அப்படியே தன் கையை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தவளுக்கு தனிச்சையாய் கண்களில் இருந்து சுயபச்சாதாபத்தில் கண்ணீர் துளிகள் உருண்டு ஓடின..

இயலாமையில் தளர்ந்து போனவள் மணிக்கட்டை வெட்டி கொள்ளப் போன கையை விலக்கி தன் பக்கவாட்டில் கட்டிலின் விளிம்பில் வைத்து அழுத்தினாள்.. தலையை குனிந்த படி தன் இழிநிலையை தாள முடியாமல் சத்தம் இன்றி கதறினாள் அவள்..

"என்னால உயிரையும் விட முடியாது.. நான் மட்டும் தான்னா இந்நேரம் என் இருப்பே யாருக்கும் தெரியாத படி நான் அழிஞ்சு போய் ஒரு மாசம் ஆகி இருக்கும்.. ஆனா இங்கே நான் மட்டும் இல்லையே.. இப்படி கை விட முடியாத இன்னொரு சுமையையும் என் தலையில கட்டிட்டு போயிட்டியே.. அடி சண்டாளி.. ஏன்டி இப்படி பண்ண..?"

சத்தம் போட்டு கதறி அழக் கூட முடியாத நிலையில் அவள் உள்ளுக்குள்ளேயே உருகித்தான் போனாள்.. இனி ஒருவன் கை தன் மேல் படுவதற்கு முன்னால் இப்படியே மெழுகு போல இந்த வேதனைத் தீயில் உருகி சாம்பலாய் கருகிப் போய் விட மாட்டோமா என்ற எண்ணம் தான் அவளுக்கு..

திடீரென மனதில் தன் தோழி சூர்யாவின் நினைப்பு வந்தது..

"இல்ல.. சூர்யா இருக்கா.. கார்த்திக்கை அவ பார்த்துப்பா.. என்னால இந்த கொடுமையை தாங்கி இனி மேல வாழ முடியாது.. இந்த ஒரு மாசமும் அந்த கேடு கெட்டவன் என்னை தொடும் போது ஒவ்வொரு முறையும் ஏதோ சாக்கடைக்குள்ள மூழ்கி எழுந்துக்கிட்ட மாதிரி அருவருப்பா.. ச்சீய்.."

ஒரு மாதமாக தன்னை குத்தகைக்கு எடுத்தது போல் தினமும் தன்னை தேடி வரும் அந்த காமக்கொடூரனின் முகம் கண்ணில் தோன்றிய போது தன் மேனியில் ஏதோ கம்பளிப் பூச்சி ஊர்வது போல் ஒரு உணர்வு அவளுக்குள்..

பல்லை இளித்துக் கொண்டு ஒவ்வொரு நாளும் மகள் வயதை ஒத்திருக்கும் அவளை கண்களில் காமவெறி கொண்டு நெருங்கி வரும் அந்த கிழட்டு காமாந்தகன் அவள் உடலில் கூடல் என்ற பெயரில் நடத்தும் சித்திரவதைகளை நினைக்கும் போதே அரண்டு போனாள் பாவை அவள்..

உயிரிழந்த பிரேதம் போல அவன் காம களியாட்டம் முடியும் வரை அப்படியே படுத்து கிடப்பாள். அவன் காம விளையாட்டுக்கு வலி தாங்க முடியாமல் அவளிடமிருந்து சற்றே ஏதாவது சிறிய எதிர்ப்பு வந்தாலும் அந்த அரக்கனின் சித்திரவதைகள் மும்மடங்காகும்..

பிணந்தின்னி கழுகாக அந்த ஆளுக்கு தினம் தினம் இரையாகும் இந்த வாழ்க்கையை வேறு வழி இல்லாமல் பல்லை கடித்து பொறுத்துக் கொண்டிருந்தாள்.. இன்றோ இந்தத் தொடர் கதையின் அடுத்த அத்தியாயம்..

முந்தைய நாளோடு அவனின் குத்தகை நேரம் முடிந்து இருந்தது போல.. இன்று வேறொருவன் அவளை குத்தகைக்கு எடுத்திருந்தான்.. இன்றைய பலி அவனுக்காக..

"நேத்து வரைக்கும் அவன்.. இன்னிக்கு இன்னொருத்தன்.. முடியாது.. இனிமே என்னால இப்படி ஒரு அசிங்கமான வாழ்க்கையை வாழ முடியாது.. இந்த வாழ்க்கை எனக்கு வேண்டாம்.. கார்த்தி ஆம்பள புள்ள.. எப்படியாவது நல்லபடியா பொழைச்சிப்பான்.. எனக்கு இந்த முடிவு தான் சரி.."

தனக்குள் ஒரு முடிவுக்கு வந்தவள் கத்தியை எடுத்து தன் கையை அறுத்துக் கொள்ளப் போன சமயம்.. தடார் என கதவை திறந்து கொண்டு உள்ளே வந்தான் அந்த ஆறடி ஆண்மகன்.. அதுவும் காக்கிச்சட்டையில்.. அவன்
தமிழ்ச்செல்வன் ஐபிஎஸ்..

நீர் உறையும்..
 
Last edited by a moderator:

Author: STN - 72
Article Title: 1. தாமரை இலையுள் உறை தண்ணீராய்..!!
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

Sudhakar

Member
Apr 20, 2026
56
46
18

நிலா தான் ஹீரோயினி யா???🤔🤔🤔🤔அச்சோ பாவம் முதல் epi யே இப்படி மனம் கணக்க வைக்குது😭😭😭
 
  • Love
Reactions: STN - 72

STN - 72

Active member
Staff member
Jan 20, 2026
137
164
43
Chennai
நிலா தான் ஹீரோயினி யா???🤔🤔🤔🤔அச்சோ பாவம் முதல் epi யே இப்படி மனம் கணக்க வைக்குது😭😭😭
கதை முடியும் போது கனம் குறைந்திருக்கும் தங்கமே🥰
 
  • Love
Reactions: Sudhakar