உறைநீர் - 10
ஒவ்வொரு முறையும் அவள் அறையில் அவளுக்கு துணையாக பூமாவும் தெய்வானையும் இருக்கும்போது அவளை கேள்விகளால் துளைத்துக் கொண்டே இருந்தார்கள்..
"உன் அம்மா பேர் என்ன? நீ எப்ப அந்த இடத்துக்கு வந்த? அதுக்கு முன்னாடி நீ எங்க இருந்த?" அடுக்கடுக்காய் அவர்கள் கேள்விகள் கேட்க அவளுக்கோ அந்தக் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் மூச்சு திணறிப் போனது..
அவளுக்கு அவர்கள் கேட்கும் எதற்குமே பதில் சொல்ல விருப்பமில்லை.. அந்த வீட்டிலிருந்து கிளம்ப வேண்டும் என்ற குறியிலேயே இருந்தாள் அவள்.. தன்னுடைய இந்த நிலைமைக்கு காரணம் அவருடைய கணவர் தான் என்று பூமாவுக்கு தெரிந்தால் விளைவுகள் எப்படி இருக்குமோ என்று பயந்தாள்..
ஆனாலும் அவள் அன்னையின் பெயரை அழுத்தமாக அவர்கள் திரும்பத் திரும்ப கேட்க நிலாவோ வாயை திறக்கவில்லை அவர்களிடம்..
"அவங்க அம்மா பேர் மேனகா.. அவங்க மூணு மாசத்துக்கு முன்னாடி மாடிபடியிலிருந்து கீழே விழுந்து தலையில அடிபட்டு ஒரு மாசம் முன்னாடி இறந்தும் போயிட்டாங்க.. இத்தனை நாள் இவ ஒரு ஆஷ்ரமத்துல தான் இருந்தா.. அவங்க அம்மாக்கு உடம்பு சரியில்லன்னு அவங்களை பார்க்க வந்து தான் இங்க சிக்கிக்கிட்டா.."
நிலாவின் முறைப்புக்கிடையே சூர்யா அவளைப் பற்றி தனக்குத் தெரிந்த அத்தனையும் அவர்களிடம் சொல்லி இருந்தாள்..
தெய்வானை பூமாவை பார்த்து தலையை இடவலமாய் ஆட்ட பூமா தெய்வானை இருவரிடமும் ஏனோ ஒரு நிம்மதி பெருமூச்சு.. அதன் பிறகு அவளை மேலும் கேள்வி கேட்டுக் குடையவில்லை இருவரும்.. அன்றோடு அவளிடம் தாங்கள் மேற்கொண்டிருந்த விசாரணையை நிறுத்திக் கொண்டிருந்தார்கள்..
ஆனாலும் நிலாவுக்கு அந்த வீட்டில் இருப்புக் கொள்ளவில்லை.. ஏற்கனவே பூமாவின் மகள்கள் வந்து பேசிய பேச்சில் ஆட்டம் கண்டு போயிருந்தாள் நிலா..
அந்த இடத்திலிருந்து தப்பித்தால் போதும் என்கிற மனநிலையில் இருந்தவள் சூர்யாவிடம் கேட்க அவளோ முற்றிலுமாக அங்கிருந்து கிளம்ப மறுத்து விட்டாள்..
அவளிடம் தன் நிலைமையை சொன்னால் தனக்காக நியாயம் கேட்கிறேன் பேர்வழி என அந்த வீட்டில் பெரிய பிரளயத்தையே உண்டாக்கி விடுவாள் என்று யோசனையாக இருந்தது நிலாவுக்கு..
வேறு வழியின்றி சூர்யாவையும் கார்த்தியையும் அந்த வீட்டிலேயே விட்டுவிட்டு தான் மட்டும் யாருக்கும் தெரியாமல் கிளம்பி வெளியே வந்திருந்தாள் நிலா..
அவள் கிளம்பிய நேரம் அரசி நல்ல உறக்கத்தில் இருந்தாள்.. ஆனால் அந்த வீட்டில் தன் அறையில் உறங்கிக் கொண்டிருந்த தமிழ் அப்படி ஒரு ஆழ்ந்த உறக்கம் கொண்டிடுவானா என்ன? போலீஸ்காரன் ஆயிற்றே.. எப்போதும் அவன் ஆழ் மனது உஷாராக விழிப்பு நிலையில் தான் இருக்கும்.. வீட்டின் வாயிற் கதவை யாரோ அந்த பின்னிரவில் திறக்கும் சிறிய சத்தமே அவனை விழிப்பு நிலைக்கு கொண்டு வந்தது..
படுக்கையை விட்டு எழுந்தவன் வேகமாக கீழே இறங்கி வர அவன் எதிர்பார்த்தது போலவே வாயிற் கதவு லேசாக திறந்திருந்தது..
அதை பார்த்தவன் சற்றும் தாமதிக்கவே இல்லை.. நிலாவின் அறைக்குள் எட்டி பார்க்க அங்கு நிலா இல்லாமல் போகவும் தமிழரசியை எழுப்பி "அரசி நிலா வீட்டை விட்டு வெளிய போயிட்டா.. நான் போய் பார்க்கறேன்.. நீ இவங்க ரெண்டு பேரையும் பாத்துக்க.." என்று சொல்லிவிட்டு புயல் போன்ற வேகத்தில் தன் ஜீப்பை எடுத்துக் கொண்டு புறப்பட்டான்..
இருட்டில் பார்வையை கூர்மையாக்கி சாலையின் இரு பக்கமும் ஆராய்ந்து கொண்டே போனவனுக்கு வெகு நேரம் ஆகியும் கண்களுக்கு அவள் சிக்கவில்லை.. வீட்டின் இருபுறம் இருந்த வழிகளிலும் பார்த்து விட்டான்..
'அது எப்படி.. அவள் நடந்து தான் போயிருந்தாள்.. ஓட்டமாய் ஓடி இருந்தாலும் இத்தனை தூரத்துக்கு மேல் அவளால் போயிருக்க முடியாதே..' என்று யோசித்தவனுக்கு உள்ளுக்குள் தோன்றிய நினைப்பில் உடலில் ஒரு அதிர்வு.
அடுத்த நொடி வண்டியை வேகம் எடுத்தான் அவன்.. சிறிது தொலைவு போனதும் முன்னால் ஒரு ஆம்னி வேன் சென்று கொண்டிருந்தது..
சட்டென தெளிந்தவன் வேகம் எடுத்து அந்த ஆம்னி வேன் முன்னால் போய் அதை மறித்தார் போல் ஜீப்பை நிறுத்தினான்..
ஜீப்பிலிருந்து இறங்கி வேனை நோக்கி அவன் சென்ற நேரத்திற்கிடையில் அந்த வேனை ஓட்டிக் கொண்டிருந்தவன் அதை பக்கவாட்டில் நகர்த்தி வேகம் எடுக்க பார்க்க அதற்குள் வேனின் பக்கவாட்டிற்கு சென்று அந்த டிரைவரின் சட்டை காலரை பிடித்த படி வேன் கூடவே ஓடியவன் "நிறுத்துடா வேனை.. இப்ப நிறுத்தலை அப்படியே இழுத்து கீழே போட்டு கொன்னுடுவேன் உன்னை.." என்று சொல்ல பயந்து போய் அவனும் வேனை நிறுத்தினான்..
அவன் பக்கத்தில் அமர்ந்திருந்தவனோ "டேய் நிறுத்தாத.. ஓட்டுடா.." என்று சொல்ல அதற்குள் அந்த டிரைவர் தமிழின் காலுக்கு கீழே கிடந்தான்.. வேன் தாறுமாறாய் ஓடி சாலை ஓரம் இருந்த ஒரு மரத்தில் மோதி நின்றது.
டிரைவரின் பக்கத்தில் அமர்ந்திருந்தவன் அந்த இடைவெளியில் வேனில் இருந்து இறங்கி வேறு பக்கமாய் ஓட்டம் எடுத்திருந்தான்..
அவன் பின்னால் சிறிது தூரம் ஓடிய தமிழ் ஏதோ தோன்ற திரும்பி பார்க்க வேனின் பின் இருக்கையில் இருந்து மயக்கமாக இருந்த நிலாவை தோளில் சாய்த்தபடி இறங்கி தமிழுக்கு எதிர்பக்கமாக வேகமாய் நடந்து கொண்டிருந்தான் 60 வயது மதிக்கத்தக்க ஒரு ஆள்..
அவனை நோக்கி தமிழ் ஓட தமிழ் வருவதை பார்த்துவிட்டிருந்தான் அந்த ஆள்.. நடுச்சாலையில் நிலாவை அப்படியே கிடத்திவிட்டு தப்பித்து ஓடி இருந்தான் அந்த கேடு கெட்டவன்..
"ஹேய்.. ஹேய்.. நில்லுடா பொறுக்கி.." என்று கத்திக்கொண்டே நிலாவை நோக்கி ஓடிய தமிழ் தன் கைபேசியில் இருந்து யாரையோ அழைத்து "மதன்.. நான் அனுப்பற லொகேஷனை நோட் பண்ணிக்க.. சுத்தி இருக்கிற அத்தனை சிசிடிவி கேமரா ரெக்கார்டிங்ஸூம் எனக்கு வேணும்.. ரெண்டு மணியிலிருந்து மூணு மணிக்குள்ள இருக்கிற அத்தனை ரெக்கார்டிங்ஸையும் கலெக்ட் பண்ணிக்கிட்டு மார்னிங்
சிக்ஸ் ஓ க்ளாக் வீட்டுக்கு வந்துரு.." என்றான்..
"டன் டா மச்சான்.. என்ன ஆச்சுடா? ஏதாவது மேஜர் ப்ராப்ளமா?"
"ம்ம்.. அந்த டில்லி பாபு கேஸ் தான்.. இப்ப டைம் இல்ல.. நான் உனக்கு மார்னிங் வரும்போது எல்லாம் சொல்றேன்.. இப்போதைக்கு இந்த ரெக்கார்டிங்ஸ் மட்டும் எப்படியாவது கலெக்ட் பண்ணி எடுத்துட்டு வா.."
அவனுக்கு லொகேஷன் அனுப்பி விட்டு கீழே கிடந்த நிலாவை கையில் அள்ளிக் கொண்டான்.. அவளை ஜீப்பின் பின் இருக்கையில் கிடத்தி பக்கத்திலேயே அமர்ந்து முகத்தில் தண்ணீர் தெளித்து துடைத்து விட அப்போதும் அவள் கண்விழிக்காது போகவும் தமிழின் முகத்தில் கவலைப் படர்ந்தது.. சிறிது பதட்டத்துடனேயே அவள் கண் விழிக்க காத்திருந்தான் தமிழ்..
அவள் முகத்தையே ஆழ்ந்து பார்த்திருந்தவனுக்கோ அவளுக்குள் என்னென்ன ரகசியங்கள் ஒளிந்துக் கிடக்கிறதோ என்று புதிராகத்தான் இருந்தது.. தன் குடும்பத்திற்கும் அவளுக்கும் ஏதோ ஒரு இணைப்புச் சங்கிலி இருக்கிறது என்று அவன் மனம் அடித்துச் சொல்லியது..
பத்து நிமிடங்கள் சென்ற பிறகு மெதுவாகக் கண் விழித்தாள் நிலா.. மெல்ல இமை திறந்து எதிரில் அமர்ந்திருந்த தமிழை கண்டவள் "நீங்களா? அந்த ஆளு.." என்று பதட்டத்தோடு கேட்டபடியே இருக்கையில் நிமிர்ந்து எழுந்து அமர
"நிலா.. டென்ஷன் ஆகாத.. அவன் ஓடிட்டான்.. நீ சேஃபா தான் இருக்க இப்ப.. உனக்கு ஒன்னும் இல்லையே.. வீட்டுக்கு போலாமா?" என்க
"இல்ல.. இல்ல.. நான் அந்த வீட்டுக்கு மறுபடியும் வரமாட்டேன்.. அந்த துரோகி இருக்கிற வீட்ல என்னால இருக்க முடியாது.. நான் இன்னிக்கு இந்த நிலைமைல இருக்கேன்னா அதுக்கு காரணமே அவன்தான்.. நான் அங்க இருந்தா உங்க குடும்பத்துக்கு நல்லது இல்ல.. ப்ளீஸ்.. என்னை இப்படியே போக விட்டுடுங்க.. நான் எங்கேயாவது போயிடுறேன்.."
"என்னது போயிடறியா? வாட் த ஹெல்.. ஆர் யூ க்ரேஸி..? உனக்கு என்ன பைத்தியமா புடிச்சிருக்கு..? அந்த ஆளு கழுகு மாதிரி உன் பின்னாடியே சுத்திட்டு இருக்கான்.. நீ இப்ப எங்க போனாலும் உன்னை தேடி பிடிச்சு மறுபடியும் பழைய இடத்துக்கு கூட்டிட்டு போகப் பார்ப்பாங்க.. அதுக்கப்புறம்.."
"என்ன.. அதுக்கப்புறம் பழையபடி ஒரு ஒரு நாளுக்கு ஒரு ஆள் வந்து.." என்றவளுக்கு அதற்கு மேல் பேச முடியவில்லை.. தன் முகத்தை கைகளால் மூடிக்கொண்டு கரைந்தாள்..
அவனுக்கு அவளை எப்படி சமாதானப்படுத்தி வீட்டுக்கு அழைத்துப் போவது என்று தெரியவில்லை..
"நிலா.. நி...லா.." இரண்டாவது முறை அழுத்தமாய் அவளை அழைத்தவன் "இங்க பாரு என்னை.. இப்போ உன்னை கடத்த பார்த்தானே அந்த ஆளு யாருன்னு உனக்கு தெரியுமா?" என்று அவன் கேட்க அழுகையில் கேவியபடியே "அ..அவன் மா...மாயன்.. டில்லி பாபுவோட அப்பா.." என்றாள்..
அந்த மாயனின் நோக்கம் என்ன என்று தெளிவாகவே புரிந்தது தமிழுக்கு..
"ம்ம்.. ஆமா நீ இப்ப துரோகினு சொன்னியே.. அது எங்க மாமாவை தானே சொன்ன?" என்று அவன் அவளை கூர்ந்து பார்த்து கேட்க
"பின்ன.. அந்த ஆளை வேற எப்படி சொல்ல முடியும்.. என்னை நானே வெறுக்கிற அளவுக்கு இப்படி ஒரு அறுவருப்பான ஜென்மமா நான் மாறுனதுக்கு முழுக்க முழுக்க அவன் தான் காரணம்.." கொஞ்சம் கொஞ்சமாய் தளர்ந்திருந்த அவள் குரல் கோவத்தில் சற்று சத்தமாகவே ஒலித்தது..
"நீ சொல்றதை கேட்டா என் மாமா தான் இந்த ஒரு மாசமா உன்னோட இருந்த அந்த வயசான போலீஸ்.." என்று அவன் முடிக்கவில்லை.. அவனை அறைந்திருந்தாள் அவள்..
அவன் அவளை அதிர்ந்து பார்க்க "வாயை மூடுங்க.. இன்னொரு முறை இப்படி பேசாதீங்க.. அப்பறம் நடக்கிறதே வேற.. அவர் என்னை பெத்தவர்.. என் அப்பா.. என் அம்மாவோட புருஷன்னு சொல்லிக்கிட்டு அவங்களை ஏமாத்தி அவங்களுக்கு பச்சையா துரோகம் செஞ்சவர்.. அந்த துரோகிக்கு என்னிக்குமே என் வாழ்க்கையில இடம் கிடையாது.. அவரு மட்டும் சரியா இருந்திருந்தாருன்னா இன்னிக்கு நானும் என் அம்மாவும் இப்படி அந்த நரகத்துல சீரழிஞ்சு இருக்கமாட்டோம்"
கோவம் ஆத்திரம் ஆற்றாமை என அவள் விழிகளில் உணர்வுகள் மாறி மாறி கொந்தளித்துக் கொண்டிருந்தன.. அவள் சொன்னதைக் கேட்டு அப்படியே திகைத்து அமர்ந்திருந்தான் தமிழ்..
நீர் உறையும்..

Last edited by a moderator:
Author: STN - 72
Article Title: 10. தாமரை இலையுள் உறை தண்ணீராய்..!!
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.