உறை நீர் - 16
"என்னங்க.. ப்ளீஸ் அந்த குழந்தையை எப்படியாவது.." சீதா கெஞ்ச
"ஒரு குழந்தையை எவனாவது ஏதாவது செஞ்சுக்கட்டும்னு விடுற அளவுக்கு நான் ஒன்னும் கொடுமைக்காரன் கிடையாது.. இப்போ அக்கா மாமா வந்துடுவாங்க .. அவங்க வந்ததும் மாமாவை கூட்டிட்டு போறேன்.. முதல்ல அந்த நாய் எங்க இருக்கான்னு கண்டுபிடிக்கணும்.."
முகம் இறுக்கமாய் தான் இருந்தது அவனுக்கு.. மொத்தமாய் காளிங்கனை அறுத்து போடும் அளவுக்கு கொலை வெறியில் இருந்தான் ஜகன்நாதன்..
"சரி அப்ப நீங்க அவங்களுக்கு வெயிட் பண்ணிக்கிட்டு இங்கேயே இருங்க.. நான் வீட்டுக்கு போய் குளிச்சுட்டு ட்ரஸ் சேஞ்ச் பண்ணிட்டு நவிக்குட்டியை பார்த்துக்கறேன்.. பூமாவோட அண்ணி இருக்கட்டும்.." என்றாள்.
"ம்ம்.. சரி.. நீ போய்ட்டு வா.. ஆனா உன்கிட்ட இன்னொரு விஷயம் சொல்லணும்.. அக்காக்கும் மாமாவுக்கும் நான் உன்னை கல்யாணம் பண்ணிக்கிட்டது தெரியும்.. நான் சொல்லிட்டேன்.. அதனால அவங்க பாத்துடுவாங்கன்னு பயந்து நீ வீட்டுக்கு ஓட வேணாம்.."
அவனை அதிர்ந்து பார்த்தவள் "அப்போ நவி குட்டி பத்தி.." என்று அவனை அவள் கேள்வியாய் பார்க்க
"ம்ம்.. தெரியும்.. நவி குட்டி பத்தியும் அவங்களுக்கு தெரியும்.." என்றவனை கலங்கிய விழிகளோடு பார்த்தவள் "நான் வேண்டான்னு சொன்னேன்ல?" என்க
"எனக்கு வேணும்னு தோணுச்சு.." என்றான் அழுத்தமாய்..
அதற்கு மேல் அவள் என்ன பேசிவிட முடியும்? சரி கிளம்புகிறேன் என்று அவனுக்கு தலையசைத்து விட்டு அவள் திரும்பிய நேரம் பூமா உறக்கத்தில் ஏதோ முனகினாள்..
சட்டென இருவரும் அவளை திரும்பி பார்க்க "ஐயோ.. வேணாம் விட்டுடுங்க.. ப்ளீஸ்.. வலிக்குது.. என்னால முடியல.. உடம்பெல்லாம் ரணமா இருக்கு.. வேணாம்.. சொன்னா கேளுங்க.. ப்ளீஸ்ங்க.. என்னால வலி தாங்க முடியல.. விட்டுடுங்க.. விட்டுடுங்க.. " மெல்ல முனகத் தொடங்கியவள் சத்தம் கொஞ்சம் கொஞ்சமாய் அலறலாய் மாறியது..
அவள் அலறலை கேட்டு இருவரும் உறைந்தே போனார்கள்.. அவள் நிலையை கண்கொண்டு காண முடியவில்லை அவர்களால்.. முகம் எல்லாம் வேர்த்திருக்க கைகள் அந்த மெத்தை விரிப்பை இறுக்கமாய் பற்றி இருக்க தலையை இடவலமாய் ஆட்டியபடி அவள் அந்த ராட்சசனிடம் விடுதலைக்காக இறைஞ்சி கொண்டிருந்த காட்சி இருவர் நெஞ்சையும் கூறு போட்டது..
பக்கத்திலிருந்த செவிலியும் "மேடம்.. ஒன்னும் இல்ல.. கொஞ்சம் அமைதியா இருங்க.." என்று சொல்லிக் கொண்டே இருந்தவள் திடீரென அவள் உடல் தூக்கி போட ஆரம்பிக்கவும்
"ஐயோ அவங்களை கொஞ்சம் பார்த்துக்கோங்க.. நான் போய் டாக்டரை கூட்டிட்டு வரேன்.." என்று சொல்லிவிட்டு போனார்..
காளிங்கனுடைய நினைவு அவளுக்கு மன அழுத்தத்தை அதிகரிக்க செய்ய வலிப்பு வந்து விட்டிருந்தது அவளுக்கு..
என்ன செய்வது என்று தெரியாமல் சீதா ஒரு பக்கமும் ஜெகநாதன் ஒரு பக்கமும் அவள் கைகளைப் பிடித்துக் கொண்டு அவள் தலையை வருடியபடி "பூமா பூமா இங்க பாருமா.. ஒன்னும் இல்ல.. ஒன்னும் இல்ல.. நீ இப்ப பத்திரமா இருக்கடா.." என்று இருவரும் மாறி மாறி அவளை சமாதானப்படுத்திக் கொண்டிருக்க இருவர் கண்களுமே அவள் நிலையை கண்டு தாங்காமல் கலங்கிவிட்டிருந்தது..
சீதாவோ உடைந்தே போனாள்.. மருத்துவர் வந்து பூமாவுக்கு மருந்து கொடுத்து அவள் உடல்நிலை கொஞ்சம் சீரானதும் "அவங்க ரெஸ்ட் எடுக்கணும்.. நீங்க கொஞ்சம் வெளியில இருங்க .." என்று சொல்ல இருவரும் வெளியே வந்தார்கள்..
வெளிய வந்த அடுத்த நிமிடம் ஜெகநாதனின் மார்பில் புதைந்து கதறினாள் சீதா..
"ஐயோ.. இதுக்காங்க நான் இவ்வளவு கஷ்டப்பட்டேன்.. கடைசில நான் இப்படியா அவளை பார்க்கணும்..? அவ வாழ்க்கையை எப்படி கெடுத்து வச்சிருக்கான்னு பாருங்க.. என்னால அவளை பார்க்கவே முடியலைங்க. இவளை எப்படிங்க சரி பண்ண போறோம்? பயமா இருக்குங்க.."
அவள் அவனிடம் தன் நிலை சொல்லி புலம்பி விட்டாள்.. ஆனால் ஜெகநாதனும் கலங்கித்தானே போயிருந்தான்.. அவனால் சீதாவிடம் அப்படி வெளிப்படையாய் பேசி விடவும் முடியவில்லை.. அவளை அந்த நிலையில் பார்த்தது அவனையும் ஆட்டித்தான் வைத்திருந்தது..
சற்று நேரத்தில் வெளியே வந்த மருத்துவர் "அவங்க கடந்த காலத்தை அவங்களால மறக்கவே முடியல.. அவங்களுக்கு கவுன்சிலிங் அரேஞ்ச் பண்றேன்.. அவங்க யாரோட இருக்கும் போது ரொம்ப அமைதியா இருக்காங்களோ அவங்க கூடயே இருங்க.. இப்போதைக்கு அவங்கள அமைதியா வச்சிருக்கிறது தான் ரொம்ப முக்கியம்.. அவங்களுக்கு தலையில அடிபட்டு இருக்கு.. அவங்க உயிருக்கு ஆபத்தில்லன்னாலும் இவ்ளோ ஸ்ட்ரெஸ் எடுத்துக்கிட்டாங்கன்னா எது வேணாலும் நடக்குறதுக்கு வாய்ப்பு இருக்கு.. அவங்க கோமாக்கு கூட போகலாம்.. இப்படி டென்ஷன் ஆகும்போதெல்லாம் அவங்களுக்கு தூக்க மருந்து கொடுத்து தூங்க வைக்க முடியாது.. இந்த தூக்க மருந்தை யாராவது ஒருத்தர் ரீப்ளேஸ் பண்ணித் தான் ஆகணும்.."
அவர் சொல்லிவிட்டு செல்ல அதே நேரம் சிவனேசனும் தெய்வானையுடன் வந்து சேர்ந்திருந்தார்..
சீதாவை பார்த்தவுடனே முகம் மலர்ந்து போனார்கள் இருவரும்.. அதுவும் தெய்வானை சீதாவின் அருகில் வந்து "எங்க என் தம்பி ஒத்தையாவே நின்னுடுவானோன்னு நினைச்சேன்.. உன்னை மாதிரி ஒரு நல்ல துணை அவனோட வாழணுங்கறதுக்காக தான் கடவுள் அவனுக்கு இவ்ளோ கஷ்டத்தை கொடுத்தார் போல.. நீங்க ரெண்டு பேரும் சந்தோஷமா இருக்கீங்க இல்ல..?"
"ம்ம்.. நல்லா இருக்கோம் அண்ணி.. நான் வீடு வரைக்கும் போயிட்டு வரேன் மதியம் நவ்யா வீட்டுக்கு வந்துருவா.. பூமா வேற என்னை பார்த்தாலே ரொம்ப ஆக்ரோஷமா மாறிடறா.. ஏதாவது பண்ணிக்குவாளோன்னு பயமா இருக்கு.. உங்களுக்கு ஏதாவது எடுத்துட்டு வரணுமா அண்ணி..?"
சீதா கேட்க அவள் கன்னத்தை வாஞ்சையாய் வருடியவள் "எனக்கு வேற எதுவும் வேண்டாம்.. நவி குட்டியை பார்த்தா போதும்.. மதியம் போல இங்க உங்க அண்ணனையும் ஜெகனையும் இருக்க சொல்லிட்டு வீட்டுக்கு வரேன்.. அவளோட கொஞ்ச நேரம் விளையாடிட்டு வரேனே ப்ளீஸ்.. அவளை பாக்கணும்னு ரொம்ப ஆசையா இருக்கு.."
தெய்வானை கெஞ்சி கேட்க மறுக்க முடியவில்லை சீதாவால்..
"சரி அண்ணி.. இப்போ நான் கிளம்பட்டுமா?" என்று அவள் கேட்க "போயிட்டு வாம்மா" என்று அவள் தலையை வருடி அனுப்பி வைத்தாள் தெய்வானை..
அடுத்த அரை மணி நேரத்தில் பூமா மறுபடியும் கண் விழிக்க உள்ளே சென்று மூவரும் அவர்களை பார்க்க போக தெய்வானையை கண்டதும் தலையில் அடித்துக் கொண்டு மறுபடியும் கதறி அழ தொடங்கினாள் அவள்.. அவளுக்கோ அவர்களை ஏறெடுத்தும் பார்க்கவே முடியவில்லை.. எத்தனை பாடுபடுத்தினோம் அவர்களை என்று தான் செய்ததெல்லாம் நினைவுக்கு வந்து மனதை அரித்தது அவளுக்கு..
"அண்ணி அண்ணி.. நீங்க ஏன் இங்க வந்தீங்க? உங்களை எல்லாம் பார்க்கிற தகுதி கூட எனக்கு கிடையாது.. இவ்வளவு நல்ல குடும்பம் நல்ல மனுஷங்க கிடைச்சும் திமிர் பிடிச்சு போனேன் இல்ல.. அதுக்கான தண்டனை தான் இதெல்லாம்.. நான் இப்படியே செத்துப் போறேன்.. என்னை விட்டுடுங்க.." என்று கதறி அழுதவளை தெய்வானைக்கும் காண முடியவில்லை..
எப்படி இருந்தவள்..
யாருக்கும் பணியாமல் எப்போதும் கண்களில் ஒரு திமிரோடு மிடுக்காய் வலம் வருபவள் இப்போது அடுத்தவரை காண முடியாமல் கூனி குறுகி உடம்பெல்லாம் அடிபட்டு மிதிபட்டு ரணப்பட்டு சின்னாபின்னமாகி சில்லு சில்லாய் சிதறிப் போய் இருக்கிறாள்.. ஒருபுறம் இதெல்லாம் தேவையா இவளுக்கு என்று தோன்றினாலும் மறுபுறம் தெய்வானையின் இயல்பான குணமே அவளை வாரி அணைத்துக் கொள்ளப் போனது..
ஆனால் அவளுக்கு தெய்வானையை நிமிர்ந்தும் பார்க்க முடியவில்லை.. தனக்குள்ளேயே தன்னை சுருக்கிக் கொண்டு குறுகி கால்களை மடித்துக் கொண்டு முட்டியில் தலை கவிழ்த்து "இங்கே இருந்து போய்டுங்க ..என்னால உங்களை எல்லாம் பார்க்க கூட முடியல.. ரொம்ப அவமானமா இருக்கு.. ப்ளீஸ்.. இங்கிருந்து போயிருங்க.. இல்ல.. என்னை ஒரேயடியா கொன்னு போட்டுடுங்க.. என்னால முடியல.." என்று தான் படுத்து இருந்த கட்டிலில் ஒரு ஓரமாக ஒடுங்கி அமர்ந்தபடி இருந்தவளை எப்படி கையாள்வது என்று அங்கு இருந்த யாருக்குமே தெரியவில்லை..
சிவனேசனுக்கும் ஜகந்நாதனுக்கும் அவள் அழுகையை கண்ட நொடி மனம் எல்லாம் பாரம் ஏறியது.. சிறிது நேரத்தில் சிவனேசனை வெளியே அழைத்துக் கொண்டு வந்த ஜெகநாதன் ரியாவை பற்றிய முழு விஷயத்தை அவரிடம் சொல்லி "நாம போயி ரியாவை கண்டுபிடிக்கணும்.. அதுக்கு முதல்ல அந்த காளிங்கன் எங்க போனான்னு தேடணும்.."
சிவநேசனும் தலையாட்டி "போலாம்.. ஆனா இங்க பூமாவை பாத்துக்க தெய்வானையை மட்டும் தனியா விட்டுட்டு போறது சரியா வராது.. சொல்றேன்னு தப்பா நினைக்காத ஜெகன்.. இப்போதைக்கு அவளுக்கு உன் துணை வேணும்.. உன்னை தவிர யார் கூட இருந்தாலும் அவளால அவங்களோட இயல்பா இருக்க முடியாது.. எனக்கு தெரியும்.. சீதாவை கல்யாணம் பண்ண பிறகு உனக்கு இது ரொம்ப உறுத்தலா இருக்கும்.. ஆனா சீதாவே நீ இப்போ அவளுக்கு பக்கபலமா இருக்கணும்னு தான் நினைப்பா.. அதனால நீ பூமாவோட இரு.. காளிங்கனை தேடி ரியாவை கண்டுபிடிக்கிற வேலையை நான் பாத்துக்குறேன்.. இங்க இருக்குற ஆளுங்கள வச்சு நான் பண்ணிக்கிறேன்.. நீ உள்ள போயி பூமாவை பாத்துக்கோ.." என்று சொன்னவர் ரியாவை தேடுவதற்காக கிளம்பிவிட்டார்..
அவர் அவ்வளவு சொல்லியும் ஜெகந்நாதன் அந்த அறைக்கு உள்ளே செல்லவே இல்லை.. அறைக்கு வெளியில் தான் அமர்ந்திருந்தான்.. ஆனால் வெகு நேரம் அறைக்குள் இருக்க முடியாமல் வெளியே வந்த தெய்வானை
"ஜகா ..கொஞ்சம் உள்ள போய் அவளை பாருடா.. ரொம்ப அடிபட்டு இருக்கா.. அந்த சிஸ்டர் கிட்ட கேட்டேன்.. வெளியில சொல்ல முடியாத அளவுக்கு கொடுமை அனுபவிச்சிருக்கா.. அவ தப்பு பண்ணாதான்.. இல்லைன்னு சொல்லல.. ஆனா அதைவிட பல மடங்கு தண்டனை அனுபவிச்சிட்டா.. மனசளவுல ரொம்ப பாதிக்கப்பட்டிருக்கா.. இப்படியே விட்டா ஒன்னு அவளுக்கு மனநிலை பாதிக்கப்படும்.. இல்லைன்னா உயிரை விட்டுடுவா.. வேணாம்டா.. அவளை நம்பி இரண்டு குழந்தைங்க இருக்காங்க .. அவங்களுக்காகவாது அவ உயிரோட இருக்கணும்.. இப்போ சிந்து கிட்ட அவங்க அம்மா அப்பா ரெண்டு பேரும் வெளியூர்ல எங்கேயோ இருக்காங்கன்னு சொல்லி வச்சிருக்கேன்.. இவளுக்கு ஏதாவது ஆச்சுன்னா சிந்துவுக்கு பதில் சொல்ல முடியாது.. சிந்துவுக்காகவும் ரியாவுக்காகவும் அவ உயிரோட இருக்கணும்.. அதுக்கு நீதான்டா அவளுக்கு ஹெல்ப் பண்ணனும்.. அவ கூட இருடா.. அவளுக்கு சரியாகற வரைக்கும் தான்.. அவளுக்கு சரியான அப்புறம் நீ பழையபடி சீதாவோடயே இரு, நான் பூமாவை என்னோட கூட்டிட்டு போறேன்.. அவ சிந்து ரியா மூணு பேரும் என்னோடயே இருக்கட்டும்.. ஆனா அதுவரைக்கும் அவளுக்கு எதுவும் ஆகாம காப்பாத்தி கொடுடா.."
தெய்வானை சொன்னதை கேட்டவன் "அக்கா.. ப்ளீஸ்.. நீயாவது புரிஞ்சுக்கோ.. அவ என்னை பழைய மாதிரியே பார்க்கிறாக்கா.. எனக்கும் சீதாக்கும் கல்யாணம் ஆனது கூட அவளுக்கு தெரியாது.. நான் அவளை கல்யாணம் பண்ணிக்கிட்டேன்.. ஆனா அவ என்னை விட்டுட்டு போன அப்புறம் என்னைக்கு சீதாவை கல்யாணம் பண்ணினேனோ அதுக்கப்புறம் சீதா மட்டும் தான் எனக்கு பொண்டாட்டின்னு இருக்கேன்.. அந்த பழைய கண்ணோட்டத்தில பூமாவை என்னால பார்க்க முடியாது.. ஆனா பூமா என்னை பழைய படி பாக்குறாக்கா.. என்னால.. இது முடியாது கா.. ப்ளீஸ் புரிஞ்சுக்க.."
"புரியுதுடா.. ஆனா இப்ப அவ உயிர் முக்கியம்.. அவளோட மனநிலை முக்கியம்.. ஒரு மாசம் இல்லனா ரெண்டு மாசம்.. அவளுக்கு நல்லா சரியாகிற வரைக்கும் அவ கூட இரு.. புருஷனா நீ எதுவும் பண்ண வேண்டாம்.. ஒரு ஃபிரண்டா ஒரு மனுஷனா அவளுக்கு உதவி பண்ணுன்னு தான் சொல்றேன்.. உன் மனசுல சீதா தான் இருக்கா.. எப்பவும் அவ தான் இருப்பா.. அப்புறம் அவ கூட இருக்கறதுனால அதுல எதுவும் மாற்றம் வரப்போகுதா என்ன? நீ எதுக்கு பயப்படுற?" தெய்வானை கேட்க அதற்கு பதில் சொல்ல முடியவில்லை ஜெகந்நாதனால்..
ஆனால் மனம் இன்னும் கூட அவர் சொல்வதை ஏற்கவில்லை.. ஏதோ விபரீதம் நிகழப் போகி
றது என்று பயமுறுத்திக் கொண்டிருந்தது அவனுடைய உள்ளுணர்வு..
நீர் உறையும்..

Author: STN - 72
Article Title: 16. தாமரை இலையுள் உறை தண்ணீராய்..!!
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.