18. தாமரை இலையுள் உறை தண்ணீராய்..!!

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

STN - 72

Active member
Staff member
Jan 20, 2026
137
164
43
Chennai
உறை நீர் - 18

சீதா உறைந்து நின்ற ஜகந்நாதனிடமிருந்து தொலைபேசி ரிஸீவரை வாங்கியவள் "என்ன அண்ணி ஆச்சு?" என்று பதட்டமாக கேட்க

தெய்வானை "சீதா நாங்க எங்களோட வர்றதுக்கு ஜகா சம்மதிக்கலைன்னு ரூமுக்கு வெளியில எங்களுக்குள்ள பேசிக்கிட்டு இருந்தோம்.. அதே நேரம் ரூமை வெட்டு வெளியில வர்றதுக்காக கதவை திறந்த பூமா அதை கேட்டுட்டா.. அங்கயே மயக்கம் போட்டு விழுந்துட்டா.. கொஞ்சம் கொஞ்சமா அவளுக்கு பல்ஸ் குறைஞ்சுக்கிட்டு இருக்கு‌‌.. டாக்டர் என்ன என்னவோ சொல்றாரு.. பயமா இருக்கு சீதா.." என்றாள்.

சட்டென ஜெகந்நாதன் பக்கம் திரும்பியவள் "நீங்க உடனே ஹாஸ்பிடல் கிளம்பி போங்க.." என்று சொல்ல அவனோ "முடியாது.. நான் போக மாட்டேன்.. இப்ப நான் அங்க போனா எல்லாமே நாசமா போயிடும்.." என்று அடம் பிடிக்க அவ்வளவுதான்..

சமையல் அறைக்குள் சென்று அவள் கதவை தாழிட்டு கொள்ள திடுக்கிட்டு திரும்பி பார்த்தான் ஜகன்.. அவளோ வேகவேகமாய் அங்கே இருந்த மண்ணெண்ணெய் கேனை எடுத்து அதிலிருந்த எண்ணெயை தன் தலையில் ஊற்றிக் கொண்டாள்..

"ஏய் சீதா.. என்னடி பண்ற? பைத்தியம் பிடிச்சிருக்கா உனக்கு?" என்று கேட்க

"ஆமா.. பைத்தியம் தான் பிடிச்சிருக்கு.. என் தங்கச்சி உயிர் போய்க்கிட்டு இருக்கு.. உங்களுக்கு அப்ப கூட கவலை இல்ல இல்ல..? நான் இருந்தா தானே என்னோட இருக்கணும்னு அடம் பிடிப்பீங்க.. நான் ஒரேடியா போயிடுறேன்.. அதுக்கப்புறம் என் கடைசி ஆசைக்காகவாவது என் தங்கச்சியோட போய் இருப்பீங்க இல்ல..?" என்று தீப்பெட்டியை கையில் எடுக்க அரண்டு போனான் அவன் அவளின் அதிரடியில்..

"ஹேய்.. லூசு மாதிரி ஏதாவது பண்ணி தொலைக்காத டி,. சொன்னா புரிஞ்சுக்கோ சீதா.. அவ என்னை பழைய படி புருஷனா பார்க்கிறா.. அவளுக்கு நம்ம ரெண்டு பேருக்கும் கல்யாணம் ஆனது கூட தெரியாது.. நான் அவளை அந்த மாதிரி பாக்கவே முடியாது.. உன்னைத் தவிர வேற யாரையும் அந்த மாதிரி பார்க்கவும் மாட்டேன்.. எனக்கு எவ்ளோ சங்கடமா இருக்குன்னு உனக்கு புரியுதா இல்லையா? என்னால இதை பண்ண முடியாதுடி.. ஒவ்வொரு முறையும் அவ பக்கத்துல இருக்கும் போதெல்லாம் நெருப்பு மேல நிக்கற மாதிரி எனக்கு ஃபீல் ஆகுது.. சொன்னா கேளு.. அடம் பிடிக்காத.." மன்றாடினான் அவன்.

"அவ எப்படி வேணா நினைச்சுட்டு போகட்டுங்க.. எனக்கு உங்க மேல நம்பிக்கை இருக்கு.. நீங்க என்ன நடந்தாலும் எனக்கு துரோகம் பண்ண மாட்டீங்க.. எனக்கு தெரியும்.. அப்படியே நீங்க சொல்ற மாதிரி ஏதாவது நடந்தாலும் எனக்கு கவலை இல்லை அவளும் உங்க பொண்டாட்டி தானே..?"

அவள் சொல்லி முடித்த நொடி சுட்டு விரலை அவள் புறம் நீட்டி"ஏஇஇய்.." என்று கர்ஜித்தான் ஜெகந்நாதன்.

"இப்படியே பேசிக்கிட்டு இருந்த.. நானே கொன்னுடுவேன்டி உன்னை.. அவளோட மறுபடி என்னை வாழ வைக்கணும் அப்படி இப்படின்னு உனக்கு ஏதாவது நினைப்பு இருந்தா அதை இப்பவே அழிச்சிடு.. அவளோட மறுபடியும் வாழறதுக்கு நான் செத்துருவேன்.."

"அப்போ அவ உயிர் போனாலும் பரவால்ல.. என்னோட நீங்க சந்தோஷமா வாழணும்.. அப்படித்தானே..? உங்களுக்கு வேணும்னா அப்படி வாழ முடியும்.. ஆனா அவ உயிர் போறதை பார்த்துக்கிட்டு என்னால உங்களோட சந்தோஷமா நிம்மதியா வாழ முடியாது.. நான் போயிடுறேன்.. அப்புறம் நீங்க அவளோட வாழறீங்களோ தனியா வாழறீங்களோ உங்க இஷ்டம்.. எனக்கு அதை பத்தி கவலை இல்லை.." சொன்னவள் தீக்குச்சியை கொளுத்த ஒரு நொடியில் உயிரே போய் இருந்தது ஜெகன்நாதனுக்கு..

"போறேன்.. போய் தொலையறேன்.. ஆனா இப்படி செஞ்சதுக்கு நீ ரொம்ப வருத்தப்படுவ சீதா.. அவ செத்துடுவான்னு பயந்து என்னை அங்க அனுப்பற இல்ல? போறேன்டி.. அங்க நீயும் இல்லாம அவ டார்ச்சர் தாங்க முடியாம நான் ஒரேயடியா போய் சேர்ந்துட்டேன்னு நியூஸ் வர்றப்போ தான் உனக்கு என் வலி புரிய போகுது.. அப்ப கிடந்து அழு.. காலம் முழுக்க அழு.."

அந்த சமையலறையின் ஜன்னல் கம்பியை பிடித்துக் கொண்டு தலை குனிந்து மனதை கொன்று விட்டு அந்த வார்த்தைகளை சொல்லி இருந்தான் அவன்..

சீதாவுக்கோ அந்த வார்த்தைகளை தாங்க முடியவில்லை.. அப்படியே அந்த தீக்குச்சியை தூக்கி போட்டுவிட்டு கதவை திறந்து கொண்டு வெளியே ஓடி வந்து தாவி அவனை அணைத்தாள்..

"என்னை மன்னிச்சிடுங்க.. எனக்கு வேற வழி தெரியல.. என்னால பூமா கஷ்டப்படுறதை பார்க்க முடியலைங்க.. நவ்யா மாதிரி அவளும் எனக்கு ஒரு பொண்ணு தாங்க.. அவளுக்கு அம்மாவா இருந்து வளர்த்து இருக்கேன்.. என் கண் முன்ன அவளை எப்படிங்க சாக விட முடியும்? எனக்காக கொஞ்ச நாள் அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க ப்ளீஸ்.."

விரக்தியாய் ஒரு புன்னகையை சிந்தியவன் "ம்ஹூம்.. எனக்கு என்னவோ நமக்குள்ள இந்த பிரிவு நிரந்தரமாகிடுமோன்னு பயமா இருக்கு டி.. எந்த காலத்திலேயும் என்னை விட்டுட்டு போக மாட்ட இல்ல..?" அவளிடம் மீண்டும் மீண்டும் இதே கேள்வியை அன்று முழுதும் கேட்டுக் கொண்டிருந்தான் ஜெகந்நாதன்..

மருத்துவமனைக்கு சென்று பூமாவின் பக்கத்தில் அமர்ந்து அவள் கையைப் பிடித்து அவள் பெயரை அவன் அழைத்த மறுகணமே பூமாவிற்கு உடல் நிலை சீராக தொடங்கியது..

நடு இரவில் பூமா உறங்கிய பிறகு வீட்டுக்கு வந்தவன் அன்று இரவு முழுவதும் சீதாவை தன் அணைப்பில் இருந்து விலகவே விடவில்லை..

அந்த ஜென்மத்துக்கான முழு காதலையும் அந்த ஒரு இரவிலே அவளிடம் கொட்டிக் தீர்ப்பது போல் அவளோடு ஒட்டிக் கிடந்தான் அன்றைய நாள்..

அடுத்த நாள் காலை உயிரற்ற நடை பிணமாய் சிவனேசன் வீட்டுக்கு பயணத்தை தொடங்கி இருந்தான் ஜெகந்நாதன்..

அவன் முகத்தில் ஒரு தெளிவில்லை.. புன்னகை இல்லை.. ஒளி இல்லை.. யாரோ தன்னை அடித்து துன்புறுத்தி கட்டி இழுத்து போவது போல தான் உணர்ந்து கொண்டிருந்தான் அவன்..

அவனுக்கு நேர் மாறாக பூமாவின் முகமோ மலர்ந்திருந்தது.. கிளம்பும் போது அவன் கையைப் பிடித்தவள் தான்.. விடவே இல்லை அவனை.. அவனுடனே ஒட்டிக் கொண்டிருந்தாள்..

மறைந்திருந்து பூமாவின் மலர்ந்த முகத்தை பார்த்த சீதாவின் மனதிலும் ஒரு பெரும் நிறைவு.. அன்று அவள் முகத்தில் இருக்கும் புன்னகை என்றென்றும் அப்படியே தங்க வேண்டும் என்று வேண்டினாள்..

ரியாவையும் அழைத்துக் கொண்டு சிவனேசன் வீட்டுக்கு புறப்பட்டு சென்றனர் அவர்கள் அனைவரும்..

ஆனால் அதன் பிறகு நிகழ்ந்தது தான் ஜெகந்நாதன் பயந்ததற்கு ஏற்றார் போலவே இருந்தது..

நான்கு நாட்கள் ஓடியிருந்தன.. ஒரு நிலையில் பூமா தன்னை எல்லை மீறி நெருங்குவதை பொறுக்க முடியாமல் அவளிடம் உண்மையை சொல்லி இருந்தான் ஜெகன்நாதன்..

முதல் போலவே அவளுக்கு மயக்கம் வந்ததுதான்.. ஆனால் சிறிது நேரத்திலேயே கண் விழித்திருந்தாள் பூமா..

மயங்கியவளை மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றிருந்த அதே நேரம் தினமும் தொலைபேசி மூலம் அழைத்து பூமாவோடு அந்நேரத்தில் பேசுவதை வழக்கமாக வைத்திருந்த சீதா அழைக்க சிவனேசன் சொல்லிவிட்டு சென்றபடி தெய்வானை பூமா வெளியே சென்று இருக்கிறாள் என்று சமாளிக்க முனைந்தாலும் அவள் குரலில் இருந்த தடுமாற்றத்தை கண்டு கொண்டாள் சீதா..

"அண்ணி உண்மைய சொல்லுங்க.. பூமாக்கு என்ன ஆச்சு..?" என்று மிரட்ட நிகழ்ந்தது அத்தனையும் அவளிடம் சொல்லி இருந்தாள் தெய்வானை..

மருத்துவமனையில் கண்விழித்ததும் உடனடியாக தன் அக்காவை தேடிப் போக ஜெகந்நாதனை பூமா அவசரப்படுத்த அடுத்த நிமிடமே அங்கிருந்து கிளம்பி இருந்தான் ஜெகநாதன்.. ஆனால் என்ன பயன்? பூமாவுக்கு விபரீதமா எதுவும் நிகழவில்லை என்பது சீதாவுக்கு தெரியாதே..

அதுவரை தன் தங்கைக்காக வாழ்க்கையை பணயம் வைத்த சீதா அப்போதும் தன் குழந்தையை பற்றியும் யோசிக்காது திரும்ப தன் வாழ்க்கையை பூமாவின் உயிர் காக்க பணயம் வைக்க துணிந்திருந்தாள்..

ஜகன்நாதன் அவளை தேடி வரும்போது அந்த வீட்டில் அவள் இல்லை.. "இனி பூமா தான் உங்கள் வாழ்க்கை" என்று மனசாட்சியே இல்லாமல் ஒரு கடிதம் எழுதி வைத்துவிட்டு தன் மகளையும் அழைத்துக் கொண்டு அங்கிருந்து சென்று இருந்தாள்..

தன்னை எந்த காலத்திலும் தேடக்கூடாது என்றும் அப்படி தேடினால் இந்த உலகத்திலேயே எங்கும் கிடைக்காத அளவுக்கு வெகு தூரம் போய்விடுவேன் என்றும் உயிரை விடுவதாக மிரட்டல் வேறு அதில்.. வெறுத்தே போனான் ஜெகன்நாதன்.. அவள் தன்னை விட்டு போய்விட்டாள் என்ற வருத்தத்தை விட தன் மகளையும் தன்னையும் பிரித்து விட்டாளே என்ற ஆத்திரம் தான் அதிகமாக இருந்தது அவனுக்கு.

அவள் வாழ்க்கையை முடிவு செய்ய அவளுக்கு உரிமை இருக்கிறது.. ஆனால் நவ்யா அவர்கள் இருவருக்குமே மகள் தானே..? அவளுக்கு தந்தை என்ற ஒரு உறவை இல்லாமல் செய்ய அவளுக்கு என்ன உரிமை இருக்கிறது? அந்த கோபத்துடனே இருந்தவன் அவள் கடிதத்தில் எழுதி இருந்ததை கவனத்தில் எடுக்காமல் அவளை சல்லடைப் போட்டு தேடிக் கொண்டுதான் இருந்தான்..

ஆனால் அவள் தான் ஊரை பேரை எல்லாவற்றையும் மாற்றி இருந்தாளே.. தன் பேரை மேனகா என்று மாற்றியவள் மகளின் பெயரை நிலா என்றும் மாற்றி இருந்தாள்..

இந்த மேனகா என்ற பெயர் ஏற்கனவே மாயன் அவளை கடத்திச் சென்றபோது அவளுக்கு வைத்த பெயர் என்று ஏதோ ஒரு நாளில் ஜகன்நாதனிடம் பகிர்ந்து இருந்தாள்.. ஆனால் அந்த பெயரை தன்னை மறைத்துக் கொள்வதற்காக மாற்றி வைத்துக் கொள்வாள் என்பது அவன் எதிர்பார்க்காத ஒன்று..

அந்த நிகழ்வுக்குப் பிறகு இன்று வரை ஜகன்நாதன் சிந்து ரியாவிற்கு தகப்பனாய் வாழ்ந்து கொண்டிருக்கிறான்.. பூமாவுக்கு ஒரு நல்ல நண்பனாய் வாழ்ந்து கொண்டிருக்கிறான்.. சிந்து ரியா முன்னால் பூமாவின் கணவனாய் நடித்துக் கொண்டிருக்கிறான்..

இன்று அவன் பெற்ற மகள் அவனை விரோதியாய் பார்த்து நிற்கிறாள்..

தன் சீதா அந்தக் கடிதத்தில் எழுதியது போலவே இந்த உலகத்திலேயே இல்லாமல் போய்விட்டாள்.. துடித்துப் போனான் அவன்..

தன் அக்காளின் மடியில் புதைந்து உடைந்து அழுதான்.. சிவனேசனாலும் தெய்வானையாலும் பூமாவாலும் அவனை சமாதானப்படுத்தவே முடியவில்லை.. அவனை ஊருக்கு திரும்பி அழைத்து வருவதற்குள் படாத பாடு பட்டுப் போயினர் மூவரும்..

இங்கு வந்தவன் இப்போது தன் மகளிடம் ஒரு தந்தைக்கான உரிமையை இறைஞ்சி நிற்கிறான்..

நிகழ்ந்த கதையைக் கேட்டு துடித்து போனாள் நிலா.. ஏற்கனவே தன் அன்னையின் மீது அளவு கடந்த கோபமும் வெறுப்பும் இருந்தது அவளுக்கு.. அது இப்போது பன்மடங்கு அதிகமாகி இருந்தது..

பெற்ற மகள் என்றும் பார்க்காமல் தங்கையின் வாழ்வுக்காக தன் வாழ்க்கையை கெடுத்ததும் இல்லாமல் தன் தந்தையையும் தன்னிடம் இருந்து பிரித்து தன்னை ஒரு ஆசிரமத்தில் அநாதையாக விட்டாளே என்று கண் முன்னே இல்லாதவளின் மீது கொலைவெறி ஆத்திரம் பொங்கியது அவளுக்கு..

அந்த நொடி ஒரு முடிவெடுத்தாள் அவள்..

"இதோ இந்த பூமா சிந்து ரியா.. இவங்க மூணு பேருக்காகத் தானே எங்க அம்மா இல்லாத ஆட்டம் எல்லாம் ஆடுனாங்க.. என் வாழ்க்கையை கெடுத்து குட்டிச்சுவரா ஆக்குனாங்க.. இனி இவங்க இருக்கிற இடத்துல நானும் இருக்க மாட்டேன்.. என் அப்பாவையும் இருக்க விட மாட்டேன்.. அப்படி என் அப்பா இவங்களோட தான் இருக்கணும்னு விரும்பினாருன்னா என்னோட அவருக்கு இருக்குற உறவு இதோட முடிஞ்சுடும்.. இந்த வீட்ல அவங்களை ஆதரிச்சுட்டு இருக்குறவங்களோட பாதுகாப்பும் எனக்கு தேவையில்லை.. நான் எங்க போறேன் என்ன பண்றேன்.. இதை பத்தி இங்க இருக்கிற யாரும் அதுக்கு அப்புறம் கவலை படக் கூடாது.."

அவள் பார்வையிலும் பேச்சிலும் உறுதி இருந்தது..

அத்தனை வருடங்களுக்குப் பிறகு தன் தந்தையை பார்த்திருக்கிறாள்.. ஆனாலும் ஓடி சென்று அவரைக் கட்டி அணைக்க தோன்றும் தன் உணர்வுகளை அடக்கிக் கொண்டு உறுதியாக நின்ற இடத்திலேயே கல் போல் இருந்தவளின் பார்வை
யிலும் பேச்சிலும் இருந்த தீட்சண்யமும் அனலும் அங்கிருந்த அனைவரையுமே சுட்டது..

நீர் உறையும்..
 
Author: STN - 72
Article Title: 18. தாமரை இலையுள் உறை தண்ணீராய்..!!
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

Sudhakar

Member
Apr 20, 2026
56
46
18

நிலா இப்ப தான் கரெக்டா யோசிச்சு கரெக்டா பேசுறா👌🏻👌🏻👌🏻👌🏻🔥🔥🔥எதுக்கு வேண்டி இவளோ பண்ணின சீதா தன் மகளை பத்தி கொஞ்சம் கூட யோசிக்கலை தானே😡😡😡😡அப்ப அவளை பத்தி யோசிக்க ஒண்ணுமே இல்லை😡😡😡
நிலா தயவு செய்து இந்த முடிவுல ஸ்ட்ராங் ஆக இருக்கணும்🥰🥰🥰
 
  • Love
Reactions: STN - 72

STN - 72

Active member
Staff member
Jan 20, 2026
137
164
43
Chennai
நிலா இப்ப தான் கரெக்டா யோசிச்சு கரெக்டா பேசுறா👌🏻👌🏻👌🏻👌🏻🔥🔥🔥எதுக்கு வேண்டி இவளோ பண்ணின சீதா தன் மகளை பத்தி கொஞ்சம் கூட யோசிக்கலை தானே😡😡😡😡அப்ப அவளை பத்தி யோசிக்க ஒண்ணுமே இல்லை😡😡😡
நிலா தயவு செய்து இந்த முடிவுல ஸ்ட்ராங் ஆக இருக்கணும்🥰🥰🥰
இருப்பா.. டவுட்டே இல்ல..
 
  • Like
Reactions: Sudhakar

Gowri Karthikeyan

Well-known member
May 5, 2026
1,289
383
83
Chennai
நிலா இஸ் ரைட்......
ரியா யார் பெண்ணுனே தெரியல.....அவளை தங்க தட்டில் வளர்ப்பிங்க......

ஆன சிவனேசனுக்கு அவங்களை கண்டு பிடிக்க முடியலையா....இவளோ வருஷம் ஆகியும்?????

இப்பவும் நிலா தமிழ் கண்ணில் படலைனா....நீங்க எல்லாம் ஒரே குடும்பமா ஹேப்பி யா இருந்து இருப்பீங்க இல்ல?????

இந்த மூதேவி திருந்திட்டா????? அப்பறம் ஏன் அந்த ரியாவையும் அப்படியே வளர்த்து வெச்சி இருக்கு?????

தெய்வா.....இவளோ நல்லவங்கால நீங்க?????

அந்த கொரங்கை காப்பாத்தா எல்லாம் ஒப்பிக்கணுமா?????

எல்லாத்துக்கு மேல சீதா....ச்சீ.....இவங்க நல்ல அம்மாவும் இல்ல, மனைவியும் இல்ல.....
 
  • Like
Reactions: STN - 72

STN - 72

Active member
Staff member
Jan 20, 2026
137
164
43
Chennai
நிலா இஸ் ரைட்......
ரியா யார் பெண்ணுனே தெரியல.....அவளை தங்க தட்டில் வளர்ப்பிங்க......

ஆன சிவனேசனுக்கு அவங்களை கண்டு பிடிக்க முடியலையா....இவளோ வருஷம் ஆகியும்?????

இப்பவும் நிலா தமிழ் கண்ணில் படலைனா....நீங்க எல்லாம் ஒரே குடும்பமா ஹேப்பி யா இருந்து இருப்பீங்க இல்ல?????

இந்த மூதேவி திருந்திட்டா????? அப்பறம் ஏன் அந்த ரியாவையும் அப்படியே வளர்த்து வெச்சி இருக்கு?????

தெய்வா.....இவளோ நல்லவங்கால நீங்க?????

அந்த கொரங்கை காப்பாத்தா எல்லாம் ஒப்பிக்கணுமா?????

எல்லாத்துக்கு மேல சீதா....ச்சீ.....இவங்க நல்ல அம்மாவும் இல்ல, மனைவியும் இல்ல.....
ரொம்ப சரி. அவங்க அக்காவா மட்டும் தான் இருந்திருக்காங்க..🙄
 
Gaya Naga

Well-known member
Mar 2, 2026
245
282
63
Hyderabad
Super Nila..I really appreciate your decision.சீதாக்கு தான் நல்லவனு பேர் வாங்கற பைத்தியம் இருக்கும் போல.அதுக்கு இப்படியா?பாவம் நிலாவும் எவ்ளோ கஷ்டப்பட்டுட்டா!!!
 
  • Love
Reactions: STN - 72

STN - 72

Active member
Staff member
Jan 20, 2026
137
164
43
Chennai
Super Nila..I really appreciate your decision.சீதாக்கு தான் நல்லவனு பேர் வாங்கற பைத்தியம் இருக்கும் போல.அதுக்கு இப்படியா?பாவம் நிலாவும் எவ்ளோ கஷ்டப்பட்டுட்டா!!!
ஆமாம்.. சீதா ஒரு சைக்கோ தியாகி..🤪