• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

2. தாமரை இலையுள் உறை தண்ணீராய்..!!

STN - 72

New member
Staff member
உறை நீர் - 2

உள்ளே நுழைந்த தமிழ்ச்செல்வன் நிலாவின் செயலில் அதிர்ந்து போய் "ஹேய்.. ஸ்டாப்.. டோன்ட் யூ டேர்.." என்க அவனை நிமிர்ந்து பார்த்த நிலாவோ அவன் சுதாரித்து வினையாற்றுவதற்குள் சட்டென தன் கையில் வைத்திருந்த கத்தியால் மணிக்கட்டை அறுத்து இருந்தாள்.

"ஷிட்.." என்றவனின் குரல் தலை கிறுகிறுக்க மயங்கிக் கொண்டிருந்தவளுக்கு எங்கேயோ கிணற்றுக்குள் இருந்து கேட்டது போல் இருந்தது..

வேகமாய் வந்து அவள் கையில் மேலும் இரத்தம் போகாதபடி முதலுதவி செய்தவன் அவளை கையில் ஏந்தி கொண்டு அந்த அறையை விட்டு வெளியே வந்து அந்த அறைகளின் வரிசை முடிவில் இருந்த மாடி படியை நோக்கி அசுர வேகத்தில் ஓடி சென்றான்..

அவன் கையில் அரை மயக்கத்தில் இருந்த நிலாவோ "கார்த்திக்.. சாரிடா.. அக்காவை மன்னிச்சுடுடா.. சாரி டா.. க்கா.. கார்த்தியை பார்த்துக்க சூர்யா.. ஸ்ஸ்..சூர்யா.." என்று அரை மயக்க நிலையில் புலம்பிக் கொண்டிருந்தாள்..

சரியாக அவன் கீழ் தளத்தை நோக்கி அவளை தூக்கிக்கொண்டு படியிறங்கும் நேரம் மேலிருந்து ஒரு நான்கு வயது குழந்தையை தூக்கிக் கொண்டு வந்த பெண்ணொருத்தி

"ஐயோ நிலா.. என்னடி பண்ணி வெச்சிருக்க..? ஏன்டி இப்படி பண்ண?" என்று கதறிய படி தமிழ்ச்செல்வனின் அருகில் வந்து நிலாவின் தலையில் கை வைத்து வருடியபடி

"சார்.. அவளை எப்படியாவது காப்பாத்திடுங்க சார்.. உங்க அம்மா செத்து போனப்பவே எங்கேயாவது நீ ஓடி போயிருக்கணும் டி.. அந்த ராட்சசன் இப்படி உன் உயிருக்கே உலை வச்சுட்டானே.." என்று ஏதேதோ பிதற்றிக் கொண்டிருந்தவளை புருவம் சுருக்கி பார்த்தான் தமிழ்ச்செல்வன்..

அவன் கால்களோ அத்தனை கலவரத்திலும் வேகமாக படி இறங்கிக் கொண்டிருந்தது.. சில நொடிகளில் நான்காவது தளத்தில் இருந்து இரண்டாவது தளத்திற்கு வந்திருந்தான் அவன்..

அந்த சிறுவன் "அக்கா.. அக்கா.. என்னக்கா ஆச்சு? ஏந்திருக்கா.. எந்திரிஇஇ.." என்று நிலாவை கன்னத்தில் தட்டி எழுப்பிக் கொண்டிருந்தான்..

இருவரையும் பார்த்தபடி இறங்கிக் கொண்டிருந்த தமிழ்ச்செல்வன் "நீங்கதான் சூர்யாவா?" என்று கேட்க தன் பெயர் அவனுக்கு எப்படி தெரியும் என்று அவள் அதிர்ந்து பார்த்திருக்க அவள் மேலும் அதிர்வுறும் விதமாக "இந்த பையன் தான் கார்த்தியா?" என்று தன் அடுத்த கேள்வியை கேட்டிருந்தான் அவன்..

"உங்களுக்கு எப்படி எங்க ரெண்டு பேர் பேர் பேரும் தெரியும்?" என்று அவள் கேட்டுக் கொண்டிருக்கும் போதே அரை மயக்கத்தில் இருந்த நிலா மறுபடியும் "ஸ்ஸ்..சூர்யா க்..கா..கார்த்தி" என்று உளறிக் கொண்டிருக்க சூர்யாவுக்கு விஷயம் புரிந்தது..

"ஏன் சார்.. ஏற்கனவே நாங்களே ரொம்ப நொந்து போயிருக்கோம்.. இதுல நீங்க வேற எங்களை அரெஸ்ட் பண்ணி ஏற்கனவே நெருப்புல பொசுங்கிக்கிட்டு இருக்குறவங்கள ஏன் சார் இன்னும் கத்தியால குத்தி கிழிச்சு ரணமாக்குற மாதிரி எல்லார் முன்னாடியும் காட்சிப் பொருளா நிக்க வச்சு சாவடிக்கிறீங்க? இதுல உங்களுக்கு என்ன கிடைக்குது சார்? இந்த அவமானத்துக்கு பயந்து தான் அவ இப்படி ஒரு முடிவு எடுத்துருக்கணும்.." என்று தன் பாட்டிற்கு பேசிக்கொண்டே வந்தவளை திரும்பி ஒரு பார்வை தான் பார்த்தான் தமிழ்ச்செல்வன்..

அவளோ அடுத்த வார்த்தை பேச முடியாது கப்சிப்பென அடங்கிப் போனாள்..

அவன் வேகமாக நிலாவை தூக்கிக்கொண்டு படி இறங்க அவளுக்கோ கார்த்திக்கை தன் தோளில் சுமந்த படி அவன் வேகத்துக்கு ஈடாக இறங்குவது மிகவும் சிரமமாய் இருந்தது.. மேலும் கீழுமாய் மூச்சு வாங்க "சார் சார்.." என்று அரற்றிக் கொண்டே வந்தவளை ஒரு நொடி நின்று தீவிரமாய் முறைத்தவன் கீழ்தளத்துக்கு வந்திருந்தான்..

"இப்படியே நீ கேக்கறதுக்கெல்லாம் நான் பதில் சொல்லிக்கிட்டு இருந்தேன்னா உன் ஃபிரண்டு மேல டிக்கெட் வாங்கிடுவா.. பரவாயில்லையா? கொஞ்ச நேரம் வாய மூடிட்டு இரு.." என்றவன் விறுவிறுவென நடந்து நிலாவை தன் ஜீப்பில் கிடத்தி சூர்யாவையும் குழந்தையுடன் வண்டியில் ஏறச் சொன்னான்..

அதேசமயம் அவனுடன் வந்த இன்ஸ்பெக்டர் மகளிர் காவல் அதிகாரி எல்லோரும் மற்றவர்களை கைது செய்து அங்கே அழைத்து வந்திருக்க அவர்களின் நடுவே நிலா சூர்யா போன்று பல இளம் பெண்களை கடத்தி வந்து கொடுமை செய்து துன்புறுத்தி பாலியல் தொழில் ஈடுபடுத்தும் அந்த கொடூரனும் காவலர்களால் கைது செய்யப்பட்டு இழுத்து வரப்பட்டிருந்தான்..

அவர்கள் கைகளில் அடங்காமல் திமிறியப்படி தமிழ்ச்செல்வனை கொலை வெறியோடு பார்த்திருந்தான் அவன்.. இதற்கெல்லாம் அசருபவனா தமிழ்ச்செல்வன்..? இப்படி எத்தனை பேரை பார்த்திருப்பான் தன் பணி அனுபவத்தில்..

இன்னும் சிறிது நேரம் தமிழ்ச்செல்வன் அவனை பார்த்திருந்த பார்வை தொடர்ந்து இருந்தால் அவன் பொசுங்கி சாம்பல் ஆகி இருப்பானோ என்னவோ.. அப்படி ஒரு தீப்பார்வை அவனிடம் இருந்து..

"இவங்க எல்லாரையும் நீங்க ஸ்டேஷனுக்கு கூட்டிட்டு போங்க.. நான் இவங்களை ஹாஸ்பிடல்ல சேர்த்துட்டு ஸ்டேஷனுக்கு வரேன்.." சொல்லிவிட்டு வண்டியில் ஏறி மருத்துவமனை நோக்கி செலுத்தினான் தமிழ்..

சூர்யாவும் நிலாவை கண்டு அவ்வப்போது புலம்புவதற்கு வாய் திறக்க ஒவ்வொரு முறையும் அவன் திரும்பி அவளை பார்த்து முறைத்த முறைப்பிலேயே மொத்தமாய் அடங்கிப் போனாள் அவள்..

மருத்துவமனையில் நிலாவை பரிசோதித்த மருத்துவர் "மிஸ்டர் தமிழ்செல்வன்.. அவங்களுக்கு ரொம்ப பிளட் லாஸ் ஆகல.. அவங்க கைய கட் பண்ணிக்கிட்ட உடனேயே நீங்க பார்த்து ஃபர்ஸ்ட் எய்ட் கொடுத்து பிளட் வரத ஸ்டாப் பண்ணிட்டீங்க.. அதனால அவங்களுக்கு ஒன்னும் பெருசா ஆபத்து இல்லை.. ஸ்ட்ரெஸ்ல தான் மயக்கமா இருக்காங்க.. இன்னொரு பத்து நிமிஷத்துல கான்சியஸ் வந்துரும்.. அப்புறம் நீங்க அவங்களை கூட்டிட்டு போகலாம்.." என்றார் மருத்துவர்..

"என்னது.. ஃபர்ஸ்ட் எய்ட் கொடுத்திருக்கானா? இவன் அரெஸ்ட் பண்ண போனதால தானே என் நிலா கைய கட் பண்ணிட்டா.. இவரே அடிப்பாராமாம்.. அப்புறம் இவரே மருந்து போடுவாராமாம்.. இதுக்காக இவனை திட்டுனதெல்லாம் நான் வாபஸ் வாங்க மாட்டேன்.. இன்னும் நல்லா திட்டுவேன்.. எங்களை எல்லாம் இந்த கேவலமான நிலைமைக்கு ஆளாக்குன அந்த சிட்டி பாபுவை மொத்தமா போட்டு தள்ளாம ஏற்கனவே நொந்து போய் இருக்கிற எங்களை அரஸ்ட் பண்றானுங்க.. பத்திரிகைக்காரங்க முன்னாடி கோர்ட்லன்னு நிக்க வெச்சு மேல மேல அசிங்கப்படுத்துறானுங்க.. இவனுங்கள எல்லாம் கழுவி ஊத்துறதுல தப்பே இல்ல.." அவள் உதட்டை சுழித்து முணுமுணுத்தாலும் அத்தனையும் அவனுக்கு தெளிவாகவே கேட்டது..

அவளை நோக்கி சிட்டிகை இட்டவன் "ஹலோ.. நான் அரஸ்ட் பண்ண போனதினால உன் ஃபிரண்டு கைய கட் பண்ணிக்கல.. முன்னாடியே கைய கட் பண்ண கத்தியை வச்சிக்கிட்டு ரெடியா தான் இருந்தா.. நான் உள்ள போனதும் என்னை பார்த்ததும் கட் பண்ணிக்கிட்டா.. என்ன நடந்ததுன்னு தெரியாம ஓவரா பேசாத.. வாயை கிழிச்சிடுவேன் பார்த்துக்க.." என்றவன் தலை திருப்பி படுத்திருந்த நிலாவை ஆழ்ந்து பார்த்தான்..

"ஐயையோ.. முன்னாடியே கைய கட் பண்ணிக்க போனாளா? இவளுக்கு ஏன் இந்த வேலை? கொஞ்சம் ஓவரா தான் பேசிட்டோமோ.. காவல் தெய்வத்துக்கு பயங்கரமா கோவம் வந்துருச்சு போல.. டெர்ரர் பீசா இருக்கான்.. ஒழுங்கா வாய்க்கு ஜிப்பை போட்டு மூடுடி சூர்யா.. இல்லைன்னா உன் கதை கந்தல் ஆயிடும்.." என்று தன்னை தானே அதட்டி அடக்கி வைத்தாள் சூர்யா

"சரி.. உன் ஃபிரண்டை பத்திரமா பாத்துக்க.. நான் ஸ்டேஷன் வரைக்கும் போக வேண்டி இருக்கு.. கைல செல்ஃபோன் இருக்கா?" அவன் கேட்டதும் "இருக்கு.." என்றாள் சூர்யா.

"ம்ம்.. அதைக் குடு.." என்று அவன் கேட்க தன் கைப்பையில் இருந்த கைபேசியை எடுத்து அவனிடம் நீட்டினாள்..

அதில் தன் எண்ணை பதிவு செய்து தனக்கு மிஸ்டு கால் கொடுத்தவன் "இந்த நம்பரை சேவ் பண்ணி வச்சுக்கோ.. நிலா கண்ணு முழிச்சா எனக்கு இன்ஃபார்ம் பண்ணனும்.." சொல்லிவிட்டு விடுவிடுவென அங்கிருந்து போயிருந்தான்..

அந்தக் காவல் நிலையத்தில் அந்த விடுதியில் இருந்து அழைத்து வரப்பட்ட பெண்கள் வரிசையாக அமர்ந்திருக்க அவர்களை ஆட்டி வைக்கும் சிட்டி பாபு தனியாக உட்கார வைக்கப்பட்டிருந்தான்..

தட் தட் என்ற பூட்ஸ் காலின் எதிரொலியோடு உள்ளே நுழைந்த தமிழ்ச்செல்வனை பார்த்தவன் முதலில் ஆத்திரத்தோடு முறைத்தாலும் அடுத்த கணமே அவன் இதழ் கேலியாய் வளைந்தது..

அவனையே கூர்மையாய் பார்த்திருந்த தமிழை கேலி புன்னகையை மாற்றாமல் பார்த்தவன் "என்ன.. என்னை அரஸ்ட் பண்ணி பெரிய சாதனை பண்ணிட்டதா நினைப்பா? இன்னும் 24 மணி நேரம்.. அதுக்குள்ள நான் வெளியே போயிருவேன்.. உன்னால ஒன்னும் பு**** முடியாது.. இந்த பொண்ணுங்களே நான் எதுவுமே பண்ணலன்னு சாட்சி சொல்லுவாங்க பாக்குறியா?" என்றவனை போல் மெலிதாக இதழ் வளைக்கவில்லை தமிழ்..

சத்தமாக சிரித்துக் கொண்டு ஏளனமாய் அவனை பார்த்தவன் தன் நெற்றியில் விரல் வைத்து நீவி மேற்கண்ணால் அவனை பார்த்தபடி "ஏன்டா.. என்னை பார்த்தா ஏதாவது சொத்தை போலீஸ் மாதிரி தெரியுதா உனக்கு? இந்த பொண்ணுங்களை கடத்துனது அவங்கள இந்த மாதிரி தொழில்ல ஈடுபடுத்துனதுன்னு இதுக்கெல்லாம் ஆதாரமே இல்லாம உன் மேல கேஸை போடுவேன்னு நெனச்சியா? நீ நெனச்சாலும் வெளியில வர முடியாது.. சரியான ஆதாரமில்லாம உன் மேல கைய வைக்க நான் ஒன்னும் ஊனாபானா கிடையாது.. தமிழ்ச்செல்வன்.. தமிழ்ச்செல்வன்.. ஐபிஎஸ்.. நீ என்ன வேணா செஞ்சுக்க.. நீ எப்படி வெளியில வரன்னு நானும் பார்க்கிறேன்.." என்றவன் அவன் வயிற்றிலேயே ஓங்கி தன் பூட்ஸ் காலால் எட்டி உதைக்க அப்படியே பின்னே தலைகீழாய் விழுந்தான் சிட்டிபாபு..

"அரசி.." என்று அவன் சத்தமாய் அழைக்க கைதான பெண்களின் மத்தியில் இருந்து அழகான ஒரு பெண் எழுந்து வந்தாள்..

"வெல்டன் டா அரசி.. கொடுத்த வேலையை பெர்ஃபெக்ட்டா பண்ணிட்டே.. என் தங்கைன்னு ப்ரூவ் பண்ணிட்டடா.." என்று அவள் தலை மேல் கையை வைத்து ஆட்டி "ம்ம்.. இதுக்கு
உனக்கு ஒரு பெரிய ட்ரீட் இருக்கு.." என்றான் அவன்.

நீர் உறையும்..
 
Top Bottom