20. தாமரை இலையுள் உறை தண்ணீராய்..!!

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

STN - 72

Active member
Staff member
Jan 20, 2026
137
164
43
Chennai
உறை நீர் - 20

"உன்னை நான் கல்யாணம் பண்ணிக்கணும்னு நினைக்கிறதுக்கு காரணம் பரிதாபமும் இல்லை கடமையும் இல்லை.. ஒரே காரணம்தான்.. சிம்பிள்.. உன்னை எனக்கு பிடிச்சிருக்கு.." என்று தோள்களை குலுக்கி அசாதாரணமாக அவன் சொல்ல அவனை கேலியாய் இதழ் வளைத்து புருவம் உயர்த்தி ஒரு பார்வை பார்த்தாள் நவ்யா..

"ஆஹான்.. அப்படியா? எனக்கு தெரிஞ்சு சுனிதாவை கல்யாணம் பண்ண நிச்சயம் பண்ணும்போதும் அவங்க கிட்டயும் இதே வார்த்தையை தான் சொல்லி இருப்பீங்க.. இல்லையா?"

"ம்ம்.. இதுக்கு பதில் சுனிதா சொன்னதே தான்.. அவகிட்ட வேண்டாம்ன்னு சொல்ற அளவுக்கு எந்த குறையும் இல்லை.. என்னோட வெல்விஷர் சோமசுந்தரம் சார் சொன்னதுனால மறுக்காம இந்த கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டேன்.. அவ்வளவுதான்.. மத்தபடி எங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் ஆகப் போகுதுங்கிற நினைப்பு இருந்தது.. அதை தாண்டி எங்க ரெண்டு பேருக்குமே வேற எந்த எண்ணமும் இருந்ததில்லை.. இதை உன்னால நம்பமுடியலைன்னா நான் என்ன சொல்றது.." உதட்டை பிதுக்கி தோளை ஏற்றி இறக்கினான்.

"அது எப்படி திடீர்னு?" அவள் ஏதோ தொடங்க

"ஒருத்தர பிடிக்கிறதுக்கு அவங்களோட ஆயிரம் வருஷம் வாழணும்னு அவசியம் இல்ல நவி.. ஒரு நிமிஷம் அவங்களோட இருந்தாலே போதும்.. இன்னும் உனக்கு நல்லா புரிய வைக்கணும்னா இதுவரைக்கும் என் கூட ஷாப்பிங் மூவி பீச்னு எங்க கூப்பிட்டாலும் ஏதோ ஒரு வேலை இருக்குன்னு சொல்லி அவாய்ட் பண்ணிட்டு இருந்தான் தமிழ்.. ஆனா நீ வந்ததுல இருந்து தன்னோட வேலை எல்லாம் விட்டுட்டு உனக்கு என்ன வேணும்ன்னு யோசிச்சு யோசிச்சு என்னையும் கடைக்கு கூட்டிட்டு போய் உனக்கு டிரஸ் அக்சஸரீஸ்னு எல்லாமே வாங்கி அதுவும் அவனே செலக்ட் பண்ணி வாங்கி என் மூலமா உனக்கு கொடுக்க வச்சான்.. அதிலேயே அவனுக்கு உன்னை ரொம்ப பிடிச்சிருக்குன்னு நான் புரிஞ்சுக்கிட்டேன்.. இதை அவனா அவன் வாயால சொல்லணும்னு தான் நான் வெயிட் பண்ணிட்டு இருந்தேன்.. இப்பவும் அவனை உனக்கு புரியலன்னா இதுக்கு மேலயும் உனக்கு எப்படி புரிய வைக்கிறதுன்னு எனக்கு தெரியல.."

அப்படி சுனிதா சொன்னதும் யோசனையாய் நின்ற நவ்யாவின் கையை சட்டென பிடித்த தமிழ் "என்னோட வா.. உன்கிட்ட கொஞ்சம் தனியா பேசணும்.." என்று சொல்லி அவனுடைய அறைக்கு அவளை அழைத்துப் போனான்..

உள்ளே சென்று கதவை அடைத்தவன் அங்கே நின்றிருந்தவளின் அருகில் மெல்ல மெல்ல அடி வைத்துச் சென்று அவள் கன்னத்தை தாங்க கையை நீட்ட சட்டென தலையை பின்னே இழுத்துக் கொண்டாள் நவ்யா..

"சர்ர்ரி.. நான் உன்னை தொடல.. ஆனா நான் சொல்றதை கொஞ்சம் கேளு.. புரிஞ்சுக்க முயற்சி பண்ணு.. முதன்முதல்ல உன்னை பார்த்ததுல இருந்தே எனக்கு உன் மேல ஒரு வித அட்ராக்ஷன் இருந்தது.. எனக்கே அந்த ஃபீலிங் புதுசு தான்.. அது என்ன ஏன்னு எனக்கே புரியல.. ஹாஸ்பிடல்ல நீ உன்னோட இன்னொரு கையை கட் பண்ணிக்க இருந்தப்போ அதை பார்த்து எனக்கு உயிரே போயிடுச்சு.. அப்படி விபரீதமா உன்னை ஏதும் செய்யவிடாம தடுத்த அப்புறம் தான் எனக்கு மூச்சே வந்தது.. அப்ப கூட ஒரு உயிர் போறதை பாத்துட்டு இருக்க முடியாம வந்த படபடப்புன்னு தான் அதை நினைச்சேன்.. அப்புறம் நீ என் வீட்டுக்கு வர மாட்டேன்னு சொன்னப்போ உன்னை எப்படியாவது இந்த வீட்டுக்கு வர வைக்கணும்ன்னு ஹாஸ்பிடலுக்கு என் அம்மாவை கூட்டிட்டு வந்தேன்.. என் சர்வீஸ்ல நாங்க இந்த மாதிரி எத்தனையோ பொண்ணுங்கள சேவ் பண்ணி தெய்வானை ட்ரஸ்ட் மூலமா அவங்களுக்கான வாழ்க்கையை ஏற்படுத்திக் கொடுத்திருக்கோம்.. ஆனா யார்கிட்டயும் எனக்கு இப்படி ஒரு நினைப்பு தோணுணது இல்ல.." என்றவன்

"சுனிதாவை பத்தி சொல்லணும்னா அவளை ஒரு ஃபிரண்டா தான் நான் இதுவரைக்கும் பாத்துட்டு இருந்திருக்கேன்.. அதை தாண்டி அவளை பத்தி என் மனசுல வேற எதுவும் இல்ல.. அவளுக்கும் அப்படித் தான்.. வேற வழி இல்லாம கல்யாணம் செஞ்சுக்க போறோமேன்னு அவ என்னை நெருங்கறதுக்கு எவ்வளவோ முறை ட்ரை பண்ணப்பவும் அதுக்கு நான் ஒரு ரியாக்ஷன் கூட காட்ட மாட்டேங்கறேன்னு தான் அவளோட புலம்பலே.." என்றவனை பார்த்தவளின் கண்களில் ஆயிரம் கேள்விகள்..

"ம்ம்.. எனக்கு புரியுது.. திடீர்னு நான் இப்படி சொல்லுவேன்னு நீ எதிர்பார்த்து இருக்க மாட்ட.. சொல்ல போனா நான் இப்படி சொல்லுவேன்னு நானே எதிர்பார்க்கல.. இந்த நிமிஷம் நான் உன்கிட்ட இப்படி பேசிக்கிட்டு இருக்கிறது எனக்கே ஷாக் தான்.." என்றவன் இதழில் மெல்லிய புன்னகை..

"ஆனா நான் பேசுற விஷயத்துல பொய்யில்லை.. ஒவ்வொரு முறை நீ அழும்போதும் எனக்குள்ள ஏதோ ஒன்னு உடைஞ்சு போற மாதிரி இருக்கும்‌‌.. உன்னோட அந்த அழுகையை எப்படியாவது நிறுத்தணும்.. உன் முகத்தில எப்படியாவது ஒரு சின்ன சிரிப்பையாவது பார்த்துடணும்னு தான் நீ இங்க வந்த நாளிலிருந்து என் மனசுல இருந்தது.. சுனிதா சொல்ற மாதிரி உனக்கு வேணுங்கறதெல்லாம் நானே பார்த்து பார்த்து வாங்கினேன்.. உன்னோட ஒவ்வொரு அசைவுலயும் என் கவனம் இருந்தது.. நீ இந்த வீட்டை விட்டு போனப்போ உன்னை தேடி அலைஞ்ச அந்த நேரம் உன்னை தொலைச்சிட்டனோன்னு அப்படி ஒரு டென்ஷன் எனக்குள்ள.. உன்னை பார்த்ததும் உன்னை தூக்கிட்டு போன அந்த ஆள கொன்னே போடுற அளவுக்கு அவ்வளவு வெறி வந்துச்சு.. ஆனா நான் போலீஸ்காரன்.. யாருக்காகவும் அப்படி என் நிதானத்தை இழந்துட முடியாது.."

"ஆனா..?" அவள் ஏதோ கேட்க முனைய

"அது வரைக்கும் என்னோட அந்த ஃபீலிங் எனக்கு மட்டுமே சொந்தமா இருந்தது.. அப்பதான் நீ என் மாமாவோட பொண்ணுன்னு நீ சொன்ன அந்த வார்த்தை.. அதுக்கப்புறம் உன் மேல எனக்கு ஏற்பட்டிருக்கிற இந்த ஃபீலிங்கை சொல்றதுக்கு எனக்கு எந்த தடையும் இருக்கல.. உன்னை நான் கல்யாணம் பண்ணிக்கறதுக்கு உன் மேல ஏற்பட்ட பரிதாபமோ இல்ல கடமையோ காரணம் இல்லை.. உன்னை நான் கல்யாணம் பண்ணணும்னு நினைக்க உன் மேல எனக்கு இருக்கிற முழு விருப்பம்.. நேசம்.. லவ்.. எப்படி வேணா சொல்லிக்கலாம்.. அந்த அழகான உணர்வு மட்டும்தான் காரணம்.. இப்ப கூட உனக்கு என்னை பிடிக்கலைன்னா நீ இந்த கல்யாணத்தை வேண்டாம்ன்னு சொல்லிவிடலாம்.. நான் உன்னை ஃபோர்ஸ் பண்ணல.. ஆனா இதுக்கு அப்புறம் நான் வேற யாரையும்.." என்றவன் தலையை இடவலமாக ஆட்டி "ம்ஹூம்.." என்றான்..

அவளோ அவன் சொன்னதற்கு எப்படி எதிர்வினை ஆற்றுவது என்று கூட தெரியாமல் அப்படியே அவனை உருத்து விழித்தபடி சிலையாக நின்றாள்.

"இப்பவும் நீ.. இல்ல எனக்கு இந்த மாதிரி ஒரு தப்பு நடந்திருக்கு.. அதனால உங்களை கல்யாணம் பண்ணிக்கிற தகுதி எனக்கு இல்லன்னோ இல்ல.. என்ன இருந்தாலும் உங்களுக்கு இன்னொரு பொண்ணோட கல்யாணம் ஃபிக்ஸ் ஆயிடுச்சு.. அதை கெடுத்து உங்களை நான் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்.. அப்படின்னோ பேசுனா இதுக்கு அப்புறம் உங்க அம்மாவை நீ குத்தம் சொல்றதை நிறுத்திடு.. உனக்கும் அவங்களுக்கும் எந்த வித்தியாசமும் இல்லாம போய்டும்.. என்னை கல்யாணம் பண்ணிக்கிட்டா என்னோட காதல் இந்த வீட்டோட பாதுகாப்பு என்னை சார்ந்த உறவுகளோட அன்பு அதோட சூர்யா கார்த்தி ரெண்டு பேருக்கும் நல்ல எதிர்காலம் பாதுகாப்பு இது எல்லாமே கிடைக்கும்.. காரணமே இல்லாம உனக்கும் என்னை பிடிச்சிருக்கற பட்சத்துல இது எல்லாத்தையும் தியாகம் பண்ணிட்டு போவேன்னு நீ சொன்னா.. போ.. ஆனா அதுக்கப்புறம் உங்க அம்மா செஞ்சது தப்புன்னு சொல்லாத.. ஏன்னா அதையே தான் இப்ப நீயும் பண்ணிக்கிட்டு இருக்கே.." என்றவன் அவள் அமைதியாக தலை குனிந்து நிற்க

"நான் உன் பதிலுக்காக காத்துகிட்டு இருக்கேன்.. இப்ப சொல்லு.. உனக்கு என்னை புடிச்சிருக்கா இல்லையா?" என்று கேட்டான்..

என்ன சொல்வாள் அவள்? அவனை எந்த பெண்ணுக்காவது பிடிக்காமல் போகுமா? ஒரு ஆணுக்கு உரிய இலக்கணத்தை அவனிடத்தில் கண்டவளுக்கு பிடிக்கவில்லை என்று சொல்ல நா எழவில்லை.. அழகான ஆண்மகன் அதுவும் கம்பீரமாய் நேர்மையாய் அவள் முன்னே அவளுக்கான நேசத்தை ஏந்திக்கொண்டு அவளுடைய
பதிலுக்காக காத்திருக்கிறான்..

ஒவ்வொரு முறையும் அவன் சொல்வது போல அவளுக்கான பாதுகாப்பையும் பார்வையாலேயே அவன் கடத்திய அரவணைப்பையும் உணர்ந்து தான் இருந்தாள்.. அதுவும் அவளை அவன் தோளில் தூக்கி வந்த போதும் அவனை அவள் அத்தான் என்று அழைத்த போதும் உள்ளுக்குள் அவளுக்கு ஏற்பட்ட உணர்வு.. அதை அவளாலேயே விளங்கிக் கொள்ள முடியவில்லை.. பெண்ணவளால் உணர மட்டுமே முடிந்தது..

விழிகள் அலை பாய அவள் குழப்பத்தோடு நின்று இருக்க தன் கண்ணை ஏறிட்டும் பார்க்க முடியாமல் நின்றிருப்பவளை நாடி பிடித்து நிமிர்த்திய தமிழ்..

"எனக்கு தெரியும்.. நம்ம ரெண்டு பேருக்கும் இருக்கிற ஏஜ் டிஃபரென்ஸ் ரொம்ப அதிகம்.. ஆனா என்னை பொறுத்த வரைக்கும் ஏஜ் இஸ் ஜஸ்ட் எ நம்பர்.. நம்ம ஒருத்தர் மேல ஒருத்தர் வச்சிருக்கற விருப்பம் தான் முக்கியம்.. இப்பவும் உனக்கு பிடிக்கலைன்னு நீ சொன்னா இது வேண்டாம்.. இனிமே உன் வாழ்க்கையில எதுக்காகவும் யாரும் உன்னை கட்டாயப்படுத்த மாட்டாங்க.. உன் வாழ்க்கைக்கான முடிவை நீ சுதந்திரமா எடுக்கலாம்.. ஆனாலும் நீ என்னை பிடிக்கலைன்னு சொன்னா எனக்கு அது கஷ்டமா தான் இருக்கும்.. இல்லன்னு சொல்ல மாட்டேன்.." என்றவனின் பார்வையை அதற்கு மேல் சந்திக்க முடியாமல் தலை குனிந்து நின்றிருந்தவள் கண்களின் கண்ணீர் துளிகள் அவள் கன்னம் தீண்டியது..

அவள் முகத்தை நிமிர்த்தியவன் "என்னடா..?" என்று ஆதூரமாய் கனிவோடு கேட்க
கண்களை துடைத்துக் கொண்டே அவனில் இருந்து சற்றே தள்ளி நின்றவள்..

"இல்லத்தான்.. இது வேண்டாம்.. இது நடக்காது.. என்னால உங்களுக்கு எந்த சந்தோஷமும் கொடுக்க முடியாது.. கணவன் மனைவிக்கான அடிப்படை உறவை கூட மத்த பெண்கள் மாதிரி என்னால சாதாரணமாக கடக்க முடியுமான்னு தெரியல.. ஒவ்வொரு முறையும் அந்த மிருகம் என்னை வதைச்சது தான் எனக்கு ஞாபகம் வரும்.. உங்கள மாதிரி ஒரு நல்லவருக்கு வாழ்க்கையில நிறைய சந்தோஷங்கள் கிடைக்கணும்.. என்னால அதை கொடுக்க முடியாது.. என் மனநிலமை அதுக்கு என்னை அனுமதிக்காது.."

"ம்ம்.. உனக்காக வாழ்க்கையில கடைசி வரைக்கும் செக்ஸே இல்லாம என்னால இருந்துட முடியும்னு நான் டயலாக் எல்லாம் பேச மாட்டேன்.. அதெல்லாம் ஒரு மனுசனோட பேசிக் நீட்.. அது இல்லாம இருக்க முடியாது தான்.. ஆனா அதே சமயம் என்னால அதுக்காக காத்திருக்க முடியும்.. உடனே அப்படி ஒன்னு நடக்கணும்னு நான் சொல்ல மாட்டேன்.. டைம் ஹீல்ஸ்.. நிச்சயமா உன் மனநிலைல மாற்றம் வரும்.. அப்படி வர்ற வரைக்கும் நான் காத்திருப்பேன்.."

"அதான் வேண்டாம்னு சொல்றேன்.. எதுக்கு..? நீங்க எதுக்கு காத்திருக்கணும்? உங்களுக்காக ஏற்கனவே ஒரு பொண்ணு கல்யாணத்துக்காக காத்திருக்கா.. அவளை கல்யாணம் பண்ணிக்கிட்டு சந்தோஷமா இருக்கிறதை விட்டுட்டு எனக்காக காத்திருந்து உங்க வாழ்க்கையை நீங்க வீணாக்கிக்க வேண்டாம்.. என் மனநிலை சரியாயிட்டா ஓகே தான்.. ஒருவேளை சரியாகவே இல்லைன்னா.. வேண்டாம் அத்தான்.. என்னால இதுக்கு சம்மதிக்க முடியாது.. என்னை விட்டுடுங்க.." அவள் இறுகிய குரலில் அழுத்தமாய் சொல்ல அதற்கு மேல் அவளை கட்டாயப்படுத்த அவன் மனமும் இடம் கொடுக்கவில்லை..

"சரி.. நீ என்னை கல்யாணம் பண்ணிக்க வேண்டாம்.. ஆனா நான் கேட்ட கேள்விக்கு நீ இன்னும் பதில் சொல்லல உனக்கு என்னை பிடிச்சிருக்கா?"

அவள் பதிலுக்காய் அவன் ஆவலோடு அவளையே பார்த்துக் கொண்டிருக்க அந்த கேள்விக்கு சட்டென பதில் சொல்லமுடியாமல் கண்ணீரோடு நின்றிருந்தவள் சிறு தயக்கத்தோடு மேலும் கீழுமாய் தலையாட்டினாள்..

"ரொம்ப பிடிச்சிருக்கு அத்தான்.." மிக சன்னமான ரகசிய குரலில் கரகரப்பாக காற்றினூடே வெளிவந்தது அவள் விருப்பத்தை தெரிவிக்கும் வார்த்தைகள்..

அவன் முகத்தில் அது பெரிய புன்னகையை வரவழைத்திருந்தது.. அதற்கு மேல் அவனுக்கு அவளிடம் இருந்து வேறு எதுவும் தெரிய வேண்டியிருக்கவில்லை..

ஆனந்த ஆர்ப்பரிப்போடு சட்டென அவள் கன்னத்தை தாங்கியவன் "இது போதும் எனக்கு.." என்றபடி அவள் கைப் பிடி
த்து அறையை விட்டு வெளியே அழைத்து வந்தான்..

நீர் உறையும்..
 
Author: STN - 72
Article Title: 20. தாமரை இலையுள் உறை தண்ணீராய்..!!
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

Sudhakar

Member
Apr 20, 2026
56
46
18

தமிழ் 🔥🔥🔥🔥👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻
 
  • Love
Reactions: STN - 72

STN - 72

Active member
Staff member
Jan 20, 2026
137
164
43
Chennai
டக்குனு தமிழ் ஓட மாற்றம் ஏனோ ஏற்க முடியல என்னால்.....
தமிழ் சுனிதா வை விரும்பல.. அவளோட அரேஞ்ச்டு மேரேஜ் தான்.. ஒருத்தரோட ஒருத்தர் அவங்களால ஃப்ரெண்ட்ஸா பழக முடிஞ்சுதே தவிர ஒரு கல்யாணத்துக்கு தேவையான ஈர்ப்பு இல்ல.. ஆனா நிலாவை பார்த்ததுமே அவன் அவளை ரொம்ப உரிமையோட ஹேண்டில் பண்றான்.. அவ கிட்ட இயல்பா ஒரு அட்ராக்ஷன் ஏற்படுது.. அதனால் தான் அவளை வெளியே போக விடக்கூடாதுன்னு உறுதியாக இருக்கான் தமிழ்..