உறை நீர் - 21
திருமணத்திற்கு அவள் சம்மதிக்கவில்லை என்பதை மட்டும் வெளியே வந்து தமிழ் சொன்னான்.. அவன் வாய் தான் அப்படி சொல்லியதே தவிர அவன் முகத்தில் இருந்த ஒளியோ வேறு கதை சொல்லியது..
ஓரளவுக்கு அனுமானத்தில் என்னவாக இருக்கும் என்று புரிந்து கொண்ட சுனிதா நவ்யாவின் கையைப் பிடித்து "அம்மாடி.. நவி தாயே.. தயவு செஞ்சு எனக்கு இந்த கல்யாணத்திலிருந்து விடுதலை கொடுத்துடு ஆத்தா.. உனக்கு நூறு குடம் பாலபிஷேகம் பண்றேன்.. உனக்கு புண்ணியமா போகும்.. நான் சொன்ன மாதிரி ஒரு ஹஸ்பண்ட் லவ்வர் இதுக்கெல்லாம் என் மனசுல இருக்குற எக்ஸ்பெக்டேஷனே வேற.. எனக்கு தினமும் பூ சாக்லெட்ஸ் கிஃப்ட்ஸ்னு ஏதாவது கொடுத்துட்டே இருக்கணும்.. தினமும் எங்கேயாவது வெளியில கூட்டிட்டு போகணும்.. என் பின்னாடியே சுத்தணும்.. எனக்கு என்ன என்ன வேணும்னு தெரிஞ்சு நான் அதைக் கேக்கறதுக்கு முன்னாடி புரிஞ்சுகிட்டு அதெல்லாம் வாங்கி கொடுக்கணும்.. ஹான்.. அப்பறம் முக்கியமான ஒன்னு.. நான் கோவிச்சுக்கிட்டு போனா என்னை சமாதானப்படுத்த ட்ரை பண்ணனும்.. ஒருவேளை நான் சமாதானம் ஆகலனா அப்படியே என்னை கைல தூக்கி வச்சிக்கிட்டு என்னை கெஞ்சி கொஞ்சி அடாவடியா மிரட்டியாவது வழிக்கு கொண்டு வரணும்.. முதல்ல என் கண்ணை பாத்து ஆசையா உன்னை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு.. ஐ லவ் யூன்னு ஒரு நாளைக்கு ஒரு முப்பது தடவையாவது சொல்லணும்.. என் அழகை வர்ணிச்சுக்கிட்டே இருக்கணும்.. எவனாவது என்னை கிண்டல் பண்ணா அவன் மொத்தமா காலி ஆகுற அளவுக்கு அடிச்சு துவைச்சு போடணும்.. அந்தளவுக்கு என் மேல பைத்தியமா பொஸஸிவ்வா இருக்கணும்.. இது எதையுமே இதுவரைக்கும் உன் அத்தான் எனக்கு பண்ணதில்லை.."
அவள் சொன்னதைக் கேட்டு திடுக்கிட்டாள் நவ்யா..
ஏனென்றால் சுனிதா சொன்னவைகளில் பெரும்பாலும் அவளுக்காக அந்த சிறிய கால இடைவெளியில் தமிழ் செய்திருந்தான்..
"அப்படின்னா உங்களுக்கு பிடிக்காம தான் இந்த கல்யாணத்துக்கு சம்மதம் சொன்னீங்களா?"
அவள் இறுகிய முகத்தோடு சுனிதாவை கேட்க "நான் புடிக்காம சம்மதம் சொன்னேன்னு எப்ப உன்கிட்ட சொன்னேன்.. தமிழோட ஹைட்டு வெயிட்டு அவனோட ஃபிஸிக் இதெல்லாம் பார்த்து எந்த பெண்ணாவது அவனை வேணாம்னு சொல்வாளா? ஒரு ஹேண்ட்ஸம் மேனுக்கான அத்தனை லுக்கும் இருக்கிறவன் அவன்.. அவனை பிடிச்சு தான் இந்த கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டேன்.. ஆனா கல்யாணம் பண்ணிக்க போற பொண்ணா எனக்குன்னு ஒரு எக்ஸ்பெக்டேஷன் இருக்குமில்ல..? அதுவும் ஒத்து போகணுமே.. அவனோட பழக பழக தான் அவன் எப்படிப்பட்ட சாமியாருன்னு புரிஞ்சது.. சத்தியமா சொல்றேன்.. இந்த கல்யாணத்துல என்னால சர்வைவ் பண்ண முடியாதுன்னு எனக்கு கொஞ்ச நாள்லயே புரிஞ்சுடுச்சு.. அப்படியே நாங்க கல்யாணம் பண்ணி இருந்தா ஒரு வருஷமோ ரெண்டு வருஷமோ அதுக்கப்புறம் நிச்சயமா ரெண்டு பேரும் பிரிஞ்சு இருப்போம்.."
அவள் சொன்னதைக் கேட்டவள் "நீங்க என்ன சொன்னாலும் சரி என்னால இவரை கல்யாணம் பண்ணிக்க முடியாது.."
"இது என்ன வறட்டு பிடிவாதம்? உனக்கு தமிழை பிடிக்கலையா?" என்று சுனிதா கேட்க
"அது அது.." என்று அவள் தடுமாறிய விதத்திலேயே அவள் விருப்பத்தை புரிந்து கொண்டாள் சுனிதா..
"சோ உனக்கு தமிழை பிடிச்சும் இருக்கு.. அப்புறம் எதுக்கு இந்த கல்யாணம் வேணாம்னு சொல்ற? ஒரு வேலிட் ரீசன் சொல்லு.."
அவ்வளவு பேர் முன்னிலையில் அதை எப்படி சொல்வது என்று தெரியாமல் கையை பிசைந்து கொண்டு நின்று இருந்தாள் நவ்யா..
சுனிதாவும் உளவியல் படித்தவளாயிற்றே.. நவ்யாவின் தவிப்பு அவளுக்கு புரியாதா என்ன?
சட்டென அங்கு இருந்த அனைவரின் பக்கமும் திரும்பியவள் "தயவு செஞ்சு நீங்க எல்லாரும் ஒரு அஞ்சு நிமிஷம் எங்களை தனியா பேச விட முடியுமா?" என்று கேட்க
அவள் அரசி தமிழ் நவ்யா சூர்யா கார்த்தி இவர்களை தவிர மற்றவர்கள் அந்த இடத்தை விட்டு அவர்களுக்கு தனிமை கொடுத்து அகன்றார்கள்..
நவ்யாவை இருக்கையில் தன் அருகில் அமர வைத்த சுனிதா "இப்ப சொல்லு.. என்ன பிரச்சினை ?" என்று அவள் கையை பிடித்த படி கேட்க
அவள் இன்னும் கூட குழப்பத்தோடு கையை பிசைந்தபடி தவித்துக் கொண்டிருந்ததை பார்த்த தமிழ் அவள் உள்ளே சொல்லியவற்றை தானே சுனிதாவிடம் சொன்னான்..
"ம்ம்.. புரியுது.. முதல் விஷயம் ரெண்டு பேருக்கும் ஒருத்தரை ஒருத்தர் பிடிச்சிருக்கு.. அதுதான் முக்கியம்.. இங்க பாரு நவி.. தமிழ் எப்படியும் உன்னை தவிர வேற யாரையும் கல்யாணம் பண்ணிக்க போறதில்லை.. இப்படியே ரெண்டு பேரும் தனித்தனியா இருக்கிறதுக்கு நீ அவனை கல்யாணம் பண்ணிக்கிட்டா அவனோட பாதுகாப்புல இந்த வீட்ல இருக்கலாம் .. நிச்சயமா தமிழ் ஒரு மிருகம் கிடையாது.. அவனுக்கு பொறுமை ரொம்ப அதிகம்.. அவன் உனக்காக உன் மனசு மாறுற வரைக்கும் காத்திருப்பான்.. உனக்கு கவுன்சிலிங் செஷன்ஸ்க்கு ஏற்பாடு பண்றேன்.. அவனை கல்யாணம் பண்ணிக்கிட்டு இந்த வீட்ல இயல்பா ஒரு வாழ்க்கையை நீ வாழ வாழ பழசெல்லாம் உனக்கு மறந்து போகும்.. நிச்சயம் கொஞ்ச காலத்துல உன்னால தமிழோட எல்லாரை மாதிரியும் அழகான வாழ்க்கையை வாழ முடியும்"
"இல்ல.. எனக்கு 18 வயசு தான் ஆகுது நான் இப்பதான் ப்ளஸ்டூ முடிச்சிருக்கேன்.. எனக்கு நிறைய வேலை இருக்கு.. நான் எங்கேயாவது பார்ட் டைம்ல வேலை செஞ்சு நானும் படிச்சு என் தம்பியையும் படிக்க வைக்கணும்.. இந்த வீட்ல பூமாவோட புருஷனோட மகளா இருந்துட்டு என்னால அதை பண்ண முடியாது.. இந்த வீட்ல இருந்தா என் நிம்மதி போயிடும்.. அதுவும் இவரை கல்யாணம் பண்ணிக்கிட்டா ஒருவித குற்ற உணர்ச்சி தான் எனக்கு இருக்கும்.. வேண்டாம்.. நான் கிளம்புறேன்.."
"நவி.. இப்ப என்ன உனக்கு படிக்கணும் வேலைக்கு போகணும் உன் தம்பியை படிக்க வைக்கணும்.. அவ்வளவு தானே..? நம்ம கல்யாணம் பண்ணிக்கலாம்.. இந்த கல்யாணம் உனக்கு பாதுகாப்பு கொடுக்கும்ங்கற ஒரே காரணத்துக்காக தான்.. என் பொண்டாட்டியா நீ இருந்தா உன் மேல கைய வைக்க எவனுக்கும் தைரியம் இருக்காது.. மத்தபடி இன்னைக்கே நாம வாழ்க்கையை ஆரம்பிக்கணும்னு நான் சொல்லல.. நீ உன் கடமையை எல்லாம் முடிச்சிட்டு வா.. உன் மனநிலையும் மாறட்டும்.. அது வரைக்கும் நான் வெயிட் பண்ணுவேன்.." அமைதியாய் அதேசமயம் உறுதியாய் பேசினான் தமிழ்..
"இல்ல என்னால முடியாது.. எனக்கு இந்த வீடு வேண்டாம்.. என்னால எந்த காலத்திலயும் என்னை பெத்தவளையும் அவ தங்கச்சியையும் மன்னிக்கவே முடியாது.. அவங்க தங்கச்சி வாழற வீடு எனக்கு வேண்டவே வேண்டாம்.. அவங்களோட வாழற என்னை பெத்தவரும் எனக்கு வேண்டாம்.. எந்த காலத்திலயும் அவரை நான் அப்பான்னு கூப்பிட மாட்டேன்" என்று உறுதியாக சொன்னவளை ஆழ்ந்து பார்த்த அரசி
"ஓகே.. அவ்வளவுதானே..? நீ மாமாவை அப்பான்னு கூப்பிட வேண்டாம்.. இந்த வீட்ல மாடில அண்ணாவோட ரூம் இருக்கு.. அங்கே கிச்சனும் இருக்கு.. அவங்க எல்லாருமே கீழே தான் இருக்காங்க.. சோ நீ அவங்களை மீட் பண்ண வேண்டிய அவசியம் கூட கிடையாது.. மாடியில் இருந்து நேரா வெளியில போறதுக்கு ஆக்சஸ்ஸூம் இருக்கு.. நீ அங்க இருந்துட்டு படிக்கலாம் உன் தம்பியையும் படிக்க வைக்கலாம் உன்னோட சூர்யாவும் இருக்கணும்னா இருக்கட்டும்.. அதுவும் ஓகே தான்.. நீங்க வெளியில போனீங்கன்னா உங்களுக்கு பாதுகாப்பு கிடையாது.. அதனால தயவு செஞ்சு இந்த கல்யாணத்துக்கு ஒத்துக்க.." என்றாள்.
"நிச்சயமா உன்னை எனக்கு புடிச்சு தான் நான் இந்த கல்யாணம் பண்ணிக்கணும்னு சொல்றேன் நவி.. இது உனக்கு இப்ப நல்லாவே புரிஞ்சு இருக்கும்.. இதுக்கு மேல உனக்கு என்னை கல்யாணம் பண்றதுல என்ன பிரச்னை நவி?"
அவன் கேட்டதும் அதற்கு மேல் அவனை தவிக்க விட அவளுக்கும் மனம் ஒப்பவில்லை.. தலையை குனிந்த படி மேலும் கீழும் தலையை ஆட்டியவள் "கல்யாணம் பண்ணிக்கலாம் அத்தான்.." என்றாள்..
அவளை சுற்றி இருந்த சுனிதா அரசி சூர்யா அனைவருக்கும் அவள் வார்த்தைகளில் குதூகலத்துடன் கூடிய மகிழ்ச்சி தொற்றிக் கொண்டது.. அங்கே நின்றிருந்த ஒருவனுக்கோ உச்சி குளிர்ந்து படபடப்பில் இதயம் எங்கே வெளியே குதித்து விடுமோ என்ற நிலைதான்..
மனம் நிறைந்த அழகான புன்னகை அவன் இதழ்களில்.. அவன் இதயத்துடிப்போ அதிரடியாய் உள்ளுக்குள் தம் தம் என சந்தோஷ முரசுக் கொட்டுவது போல் இடி இடி என முழங்கியது..
ஆனால் இன்னும் கூட நவ்யாவின் முகத்தில் மெல்லிய சோகத்தின் ரேகை இழையோடுவதாய் தெரிய
அவள் அருகே வந்த தமிழ் அவள் கன்னம் தாங்கி "ஹேய் நவி.. இன்னும் என்னடா ஏதோ கவலையா இருக்க..? இப்ப கூட உன் முகம் தெளிவா இல்லையே.." என்று கேட்க
"அத்தான்.. உங்களை கல்யாணம் பண்ணிக்க போறது எனக்கு சந்தோஷம்தான்.. நீங்க என்னை மனசார விரும்புகிறீங்கன்னு எனக்கு புரியுது.. ஆனா ஊரு உறவைக் கூட்டி மேளம் கொட்டி கல்யாண மேடையில வச்சு எல்லாருக்கும் உங்களுக்கு மனைவியாக போறவளை அறிமுகப்படுத்தி ஜாம் ஜாம்ன்னே கல்யாணம் நடக்கணும்னு தானே கனவெல்லாம் வச்சிருந்திருப்பீங்க.. ஆனா என்னை மாதிரி ஒருத்திய கல்யாணம் பண்ணும் போது இப்படி எல்லாம் உங்களால பண்ண முடியாது இல்ல..? சிம்பிளா கோவில்ல வச்சு தானே கல்யாணம் பண்ண முடியும்..? என்னால தானே.. என்னை விரும்பினதனால தானே.. உங்களுக்கு இந்த நிலைமை.." அவள் குரலில் அவ்வளவு வேதனையின் சாயல்..
"ஏன்..? எதுக்கு சிம்பிளா கல்யாணம் பண்ணனும்? எங்க அம்மா அப்பா என் கல்யாணத்தை நீ முதல்ல சொன்ன மாதிரி ஊரு உறவு எல்லாம் கூப்பிட்டு சும்மா ஜாம் ஜாம்ன்னு பண்ணனும்னு தான் நினைச்சுட்டு இருந்தாங்க.. இப்பவும் அதுல கொஞ்சம் கூட மாற்றம் இல்லாம அப்படியே தான் நடக்கும்.. எல்லாரையும் கூப்பிட்டு கல்யாணம் ரிசப்ஷன் ஏன் அதுக்கு முன்னாடி நடக்க வேண்டிய மெஹந்தி சங்கீத்னு ஒரு கல்யாணத்துல என்ன எல்லாம் இருக்குமோ அது அத்தனையும் நம்ம கல்யாணத்துலயும் இருக்கும்.."
"என்ன சொல்றீங்க அத்தான்.. அவ்வளவு பேரையும் கூப்பிட்டு கல்யாணம் பண்ணா உங்க காது படவே என்னை பத்தி ஏதேதோ தப்புத் தப்பா பேசுவாங்க.."
"பேசட்டும்.. அத பத்தி யாரு கவலைப்பட போறா? உன்மேல எந்த தப்பும் இல்லைன்னு எனக்கு தெரியும்.. நீ எவ்வளவு சுத்தமானவன்னு அங்க வர்ற ஒவ்வொருத்தர் கிட்டயும் போய் ப்ரூவ் பண்ணி சர்டிஃபிகேட் வாங்கணும்னு எந்த அவசியமும் இல்லை.. வர்றவங்க தப்பா ஏதாவது பேசினாங்கன்னா அவங்க வாயை எப்படி மூட வைக்கணும்னு எனக்கு தெரியும்.. அதையும் தாண்டி பேசுனாங்கன்னா அதை நாம எதுக்கு காதுல வாங்கணும்? நமக்கு சம்பந்தம் இல்லாத விஷயத்தை நம்ம ஓவர் லுக் பண்ணி போகுற மாதிரி இதையும் ஓவர் லுக் பண்ணி போக வேண்டியது தான்.. அதனால நிச்சயமா ஊரைக் கூட்டி முறைப்படி இந்த கல்யாணம் நடக்கும்.. கல்யாணம் பண்ணி ஹாப்பியா இருக்கலாம்.." தமிழ் உறுதி கொடுக்க அவள் கண்களும் மகிழ்ச்சியில் கலங்கித் தான் போனது..
"ஆனா இந்தக் கல்யாணத்துக்கு.."
அவள் தொடர்ந்து பேசும் முன்னரே "தெரியும் .. இந்த கல்யாணத்துக்கு மாமா பூமா அத்தை சிந்து ரியா இவங்க நாலு பேரும் வரக்கூடாது.. அதுதானே?"
"இல்ல.. வேற யாரு வந்தாலும் வரலனாலும் அவங்க நாலு பேரும் நிச்சயமா வரணும்.." சற்றும் தடுமாற்றம் இல்லாமல் தெளிவாய் சொன்னாள் நவ்யா..
நீர் உறையும்..

Author: STN - 72
Article Title: 21. தாமரை இலையுள் உறை தண்ணீராய்..!!
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.