உறை நீர் - 22
"தப்பான இடத்துல இருந்து வந்ததனாலேயே இந்த மாதிரி ஒரு நல்ல குடும்பத்துக்குள்ள வாழறதுக்கு கூட எனக்கு தகுதி இல்லைன்னு சொன்னாங்க இல்ல.. அவங்க முன்னாடி என் கல்யாணம் திருவிழா மாதிரி நடக்கணும்.. அவங்க பார்த்து ஆச்சரிய படுற அளவுக்கு நான் உங்களோட வாழ்ந்து காட்டணும்.. அதுதான் அவங்க பேசுனதுக்கெல்லாம் நான் கொடுக்கிற சரியான பதிலடியா இருக்கும்.." சற்றும் தடுமாற்றம் இல்லாமல் தெளிவாய் சொன்னாள் நவ்யா..
"வாவ்.. சூப்பர்.. அய்யய்யோ இப்படியே போனா நான் உன்னோட பெரிய ஃபேன் ஆயிடுவேன் போலிருக்கே.. இந்த சீரியல்ல எல்லாம் வர பாவப்பட்ட ஹீரோயின்னு ஒன்னை நெனச்சா நீ பெரிய ஆக்சன் ஹீரோயினா இல்ல மாறிக்கிட்டு இருக்க.. பலே பலே.. கலக்குற நவி.." என்று சொல்லி நவ்யாவை தன்னோடு சேர்த்து அணைத்துக் கொண்டாள் சுனிதா..
அந்த அணைப்பில் வெகுவாய் உருகி கரைந்து தான் போனாள் நவ்யா.. இப்படி ஒரு தன்னம்பிக்கை அவள் பெற்றதே இந்த சுனிதாவிடம் இருந்து தானே.. ஒவ்வொரு முறையும் அவள் பேசும்போது அதில் எத்தனை தெளிவு.. அவளிடம் கற்றுக்கொள்ள தனக்கு நிறைய இருக்கிறது என்று உணர்ந்தவள் அந்த அணைப்பை இன்னும் இறுக்கி கொண்டாள்..
"சிந்து ரியா ரெண்டு பேரும் அவங்களுக்கு நான் எந்த வகையிலும் குறைவில்லன்னு உணரணும்.."
"ஓகே.. அதுல ஒரு லாஜிக் இருக்கு.. ஆனா மாமாவும் பூமா அத்தையும் கணவன் மனைவியா வாழுற வீட்ல அவங்க கூட வாழ மாட்டேன்னு சொல்ற நீ அவங்க ரெண்டு பேரும் உன் கல்யாணத்தை பாக்கணும்னு சொல்றது.. புரியலயே." அரசி கேட்க
"அது அவங்களுக்காக இல்ல.. தன்னோட தங்கச்சி வாழ்க்கையும் அவங்களோட பிள்ளைங்க வாழ்க்கையும் சீரும் சிறப்புமா எந்த சங்கடமும் இல்லாம இருக்கணும்னு தானே எந்த காலத்திலேயும் நான் இந்த குடும்பத்தை தேடி வந்துடக் கூடாதுன்னு தானே எங்க அம்மா இந்த குடும்பத்தை விட்டு என்னை விலக்கி வச்சாங்க? இது நான் அவங்களுக்கு தர்ற பதிலடி.. அவங்க தங்கச்சி அவங்க புருஷன் ரெண்டு பேரோட ஆசீர்வாதத்தோட கல்யாணம் பண்ணிட்டு அந்த குடும்பத்துக்குள்ளே நான் நுழையறதை இந்த உலகத்தில இல்லைன்னாலும் எங்கிருந்தாவது எங்க அம்மா பார்ப்பாங்க.. பார்க்கணும்.. அவங்க என்னதான் இந்த குடும்பத்தை விட்டு என்னை விலக்கி வச்சு என் வாழ்க்கையையே ஒன்னும் இல்லாம ஆக்கினாலும் இந்த குடும்பத்திலேயே என்னை கௌரவமா வாழ வைக்க என் தமிழ் அத்தான் இருக்காருங்கறதை அவங்க பாக்கணும்.."
அவள் சொல்வதைக் கேட்ட தமிழுக்கு மனதில் அப்படி ஒரு வலி.. அந்த நரகத்திலிருந்து காப்பாற்ற ஒருவரும் இல்லாமல் உறவுகளை எவ்வளவு தேடி இருக்கிறாள்.. பாசத்திற்காக விட்டுக் கொடுக்கிறேன் என்ற பெயரில் இந்தப் பெண்ணை தான் என்ன பாடு படுத்தி இருக்கிறாள் இவளுடைய அன்னை..
"நானே உன்னை கேட்கணும்னு நினைச்சேன் நவி.. உங்க அம்மா தங்கைக்கு நல்ல வாழ்க்கை கிடைக்கணும்னு மாமாவை விட்டு உன்னையும் கூட்டிக்கிட்டு போயிட்டாங்க.. அதுக்கப்புறம் எங்க தேடியும் அவங்க கிடைக்கலன்னு சொல்றாரு மாமா.. நீ ஒரு நாள் கூட அப்பா வேணும்னு கேக்கலையா? கேட்டிருப்ப தானே? உன்னை எப்படி அவங்க சமாதானப்படுத்தினாங்க..?"
ஒரு ஜீவனற்ற சிரிப்பை உதிர்த்தாள் நவ்யா..
நவ்யா தன் தந்தையை பற்றி கேட்கும் போதெல்லாம் எதிர்காலத்தில் கூட அவரை தேடி அவள் போய் விடவேக்கூடாது என்பதற்காக தங்களுக்கு தெரியாமல் அவளுடைய அப்பாவுக்கு இன்னொரு குடும்பம் இருந்ததாகவும் அதை மறைத்து தங்களோடு வாழ்ந்து கொண்டிருந்த துரோகி அவர் என்றும் அந்த துரோகத்தை தாங்கமுடியாமலேயே தான் அவரை பிரிந்து வந்து விட்டதாகவும் நவ்யாவும் எந்த காலத்திலும் அவரை தேடி போகக் கூடாது என்றும் சொல்லி சொல்லி அவளை வளர்த்தாள் சீதா..
நவ்யா இதை சொன்னதும் அங்கிருந்த மூவருக்குமே சீதாவின் மேல் அவ்வளவு கோவம் வந்தது.. தங்கை மீது பாசம் இருக்க வேண்டியதுதான்.. ஆனால் அதற்காக தன் மகளின் வாழ்க்கையை பலி கொடுப்பது எவ்விதத்தில் சரியாகும். ஒரு தமக்கையாய் தன் கடமையை சரியாக செய்ய வேண்டும் என்று நினைத்தவள் ஒரு தாயாய் தன் மகளுக்கு நல்ல வாழ்க்கையை ஏற்படுத்திக் கொடுக்க தவறி விட்டாளே.. அவளுக்கு தந்தையின் அன்பை முற்றிலுமாக கிடைக்க விடாமல் செய்து விட்டாளே..
"நாங்க மும்பைல இருந்தப்ப திடீர்னு ஒரு நாள் வீட்டுக்கு படபடன்னு வந்த அம்மா அப்பா வீட்டுலருந்து யாரோ அங்க அவங்களை பார்த்துட்டதாவும் இனிமே அங்க இருக்க கூடாதுன்னும் சொல்லி அங்க இருந்து ஒரு ஆசிரமத்துக்கு கூட்டிட்டு போனாங்க.. அதுக்கப்புறம் அந்த ஆசிரமத்தில தான் இருந்தேன்.. அங்க தான் படிச்சேன்.. அங்க தான் வளர்ந்தேன்.. அங்க போய் சேர்க்கும் போது எந்த காலத்துலயும் உங்க அப்பா வீட்டுக்காரங்க உன்னை தேடி கண்டுபிடிக்க கூடாதுன்னு சொல்லி என் பெயரை நிலான்னு மாத்தி சொன்னாங்க.."
"மும்பையா?"
"இல்ல அப்போ என்னை சமாளிக்கிறதுக்காக அப்படி சொல்லி இருக்காங்க.. ஆனா அவங்களை அங்க பார்த்தது மாயன்.. டில்லி பாபுவோட அப்பா.. அம்மாவை பார்த்ததும் அவங்கள மறுபடியும் எப்படியாவது தொழிலுக்கு கொண்டு வந்துடனும்னு ட்ரை பண்ணி இருக்கான்.. ஆனா அவன் கிட்ட இருந்து தப்பிச்சு வந்து என்னையும் கூட்டிட்டு இங்க பாண்டிச்சேரி பக்கத்துல இருக்கற ஆசிரமத்துக்கு வந்துட்டாங்க.. அவங்க பேரை மாத்துனதுக்கு கூட அதுதான் காரணம் போல.. இதை டில்லி பாபுவே என்னை கூட்டிட்டு வந்து சித்திரவதை பண்ணப்ப என் கிட்ட பெருமையா சொல்லிக்கிட்டான்.."
டில்லி பாபு அவள் தலை முடியை கொத்தாய் பிடித்தபடி பேசியது இன்னும் கூட அவள் செவிகளில் நாராசமாய் ஒலித்துக் கொண்டிருந்தது.. 'உன் அம்மா அன்னைக்கு என் அப்பா கிட்ட இருந்து தப்பிச்சிட்டா.. ஆனா சேர்த்து வச்சு நீ வந்து வசமா சிக்கிக்கிட்ட.. உன்னை வச்சு உன் அம்மாவால இழுந்ததை மொத்தமா வசூல் பண்ணிடுவேன்..' அசிங்கமாய் பல்லை இளித்தபடி அவன் சொன்னது இன்னும் கூட அவள் கண் முன் தோன்றி அருவருப்பை தந்தது.
"என்னை ஆசிரமத்தில விட்டுட்டு அம்மா வேலைக்காக போறேன்னு சொல்லி வேற இடத்துக்கு போயிட்டாங்க.. அப்பப்ப வருவாங்க.. என்னை பாப்பாங்க.. சில சமயம் எங்கிருந்தோ ஃபோன்ல பேசுவாங்க.. ஆனா நான் அம்மாவும் இல்லாம அப்பாவும் இல்லாம ஆசிரமத்துல தனியாத்தான் வளர்ந்தேன்.. ஒரு மூணு வருஷத்துக்கு முன்னாடி ஒன்றரை வயசு கார்த்திக்கை கொண்டு வந்து ஆசிரமத்தில விட்டுட்டு இனிமே இவன் உன் தம்பின்னு சொல்லி என் கையில புடிச்சு கொடுத்து அவனை பத்திரமா பாத்துக்கணும்னு சொன்னாங்க.. அப்ப அவனையும் விட்டுட்டு போனவங்கதான்.. அதுக்கு அப்புறம் அவங்ளும் திரும்பி வரல.. அவங்க கிட்ட இருந்து ஃபோனும் வரல.."
"அதுக்கப்பறம் அவங்க சீரியஸா ஹாஸ்பிடல்ல இருக்காங்கன்ற நியூஸ் தான் எங்களை தேடி வந்தது.. டில்லி பாபு ஆசிரமத்துக்கு வந்து விஷயத்தை சொல்லிட்டு எங்க அம்மாவை பார்க்க என்னை கூட்டிட்டு போகணும்னு கேட்டான்.. அவன் முதியோர்களுக்கான ட்ரஸ்ட் உன்ன நடத்துறதாவும் அது மூலமா தான் என் அம்மாக்கு ஹெல்ப் பண்ணதாவும் சொன்னான்.
ஆனா அப்பவும் அந்த ஆசிரமத்துப் பெரியவர் அவனோட என்னை நம்பி அனுப்பல.. என் கூட இன்னொரு வயசான சிஸ்டர் நிர்மலாவை துணைக்கு அனுப்பி வச்சாரு.. கார்த்திக்கும் என்னை விட்டு இருக்க முடியாம என்னோட வந்துட்டான்.."
மருத்துவமனையில் உடல்நிலை சரி இல்லாமல் பேச்சு மூச்சற்று கிடந்தாள் சீதா..
தன் அம்மாவை அவள் பார்த்து மூன்று வருடங்களாகி இருந்தன. அவ்வளவு நாட்களுக்கு பிறகு அவளை இப்படியா சந்திக்க வேண்டும் என்று ஐ சி யு அறையின் கண்ணாடி துவாரத்தின் வழியே தன் அன்னையை பார்த்தபடி மௌனமாய் கதறினாள் அவள்..
நிர்மலாவையும்
அவளையும் அந்த மருத்துவமனையின் பக்கத்தில் இருந்த வீட்டை ஒரு வாரத்துக்கு வாடகைக்கு எடுத்து அங்கு அவர்களை தங்க வைத்தான் டில்லி பாபு.. அங்கு ஏற்கனவே ஒரு பெண்மணி இருந்தாள்.. அந்த பெண்மணியோடு அங்கு தான் அவள் அம்மா தங்கிக் கொண்டிருந்தாள் என்று அவர்கள் இருவரையும் நம்ப வைத்தான் அவன்..
அந்த வீட்டில் இருந்த பெண்மணி கிரிஜா அவளை கண்ணும் கருத்துமாக இன்னொரு அன்னையாகவே மாறி பார்த்துக்கொள்ள அதைப் பார்த்த நிர்மலா அவரின் அன்பை சிலாகித்துப் பேசினாள்..
'இவ சீதாவோட பொண்ணுனா எனக்கும் பொண்ணு தான்.. அவ என்னோட க்ளோஸ் ஃப்ரெண்ட்.. நாங்க ரெண்டு பேரும் ஊருல பக்கத்து பக்கத்து வீட்ல இருந்தோம்.. அப்புறம் இந்த டிரஸ்ட் மூலமா தான் மீட் பண்ணிக்கிட்டோம்.. அவளுக்கு எப்பவும் அவ பொண்ணை பத்தி தான் கவலை.. ஏதோ காரணத்துக்காக அவளை தான் கூட வச்சிருக்க முடியலன்னு ரொம்ப ஃபீல் பண்ணுவா.. ஆனா இப்படி படியிலிருந்து விழுந்து அவளுக்கு அடிபடும்னு நாங்க எதிர்பார்க்கவே இல்லை.. நீங்க நிலாவை இங்கே விட்டுட்டு போங்க..நிலா கூட இருந்தா சீக்கிரம் சீதா கண்ணு முழிச்சிடுவா.. நான் இவளை பத்திரமா பார்த்துக்கிறேன்.. உங்களுக்கு ஆசிரமத்துல நிறைய வேலை இருக்கும்.. நீங்க போய் அதை பாருங்க.. உங்களை அங்க இருந்து ஃபோன் பண்ணி கூப்பிட்டுக்கிட்டே இருக்காங்க போல.." என்று நயமாக பேசினாள் கிரிஜா..
இருவருமே அந்தப் பெண்மணியின் பேச்சில் ஏமாந்து தான் போனார்கள்.. கிரிஜா சொன்னது போல் ஆசிரமத்தில் இருந்து நிர்மலாவுக்கு வேலை விஷயமாக அழைப்பு வந்து கொண்டே தான் இருந்தது.. அவர் அந்த ஆசிரம டிரஸ்டில் நடத்திக் கொண்டு இருந்த பள்ளியில் ஆசிரியராக பணி புரிந்து கொண்டிருந்தார்..
அதனால் நான்கு நாட்களுக்கு மேல் அவரால் அங்கு இருக்க முடியவில்லை.. நான்கு நாட்களுக்கு பிறகு நவ்யாவை அங்கே கிரிஜாவின் பொறுப்பில் விட்டுவிட்டு ஆஷ்ரமத்திற்கு திரும்ப சென்று விட்டார் நிர்மலா..
அடுத்த நாள் அந்த வீட்டிற்குள் வந்த டில்லி பாபுவின் சுயரூபம் வெளிச்சமாகி இருந்தது நவ்யாவுக்கு..
அவள் அன்னை பற்றி ஆதியிலிருந்து அந்தம் வரை எல்லாவற்றையும் சொன்னவன் அடுத்த நிமிடம் அவளை கடத்திக் கொண்டு விபச்சாரம் நடந்துக் கொண்டு இருந்த அந்த விடுதிக்கு வந்திருந்தான்.
அங்கு அவளுக்கு பல கொடுமைகள் நடந்தது.. இதனிடையே அவள் அம்மா இறந்து விட்டாள் என்று சொல்லி கடைசியாக அவளை பார்க்க கூட அனுமதிக்கவில்லை அந்த கிராதகர்கள்..
அவளை சித்திரவதைக்கு உள்ளாக்கி அவளையும் விபச்சார தொழிலில் ஈடுபடுத்தினார்கள் அந்த கயவர்கள்..
அதன் பிறகு அவள் அங்கு இருந்த ஒரு மாதம் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு இரவும் உயிர் போய் உயிர் வந்தது அவளுக்கு..
நீர் உறையும்..

Last edited:
Author: STN - 72
Article Title: 22. தாமரை இலையுள் உறை தண்ணீராய்..!!
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.