உறை நீர் - 27
"அப்பறம் நவி.. இன்னொரு விஷயம்.. இன்னைக்கு ரிசப்ஷன் முடிஞ்சு வீட்டுக்கு போனதும் அம்மாவை உனக்கு தனி ரூம் கொடுக்க சொல்லிடறேன்.. கல்யாணம் ஆயிட்டதனால நம்ம ரெண்டு பேரும் ஒரே ரூம்ல இருக்கணும்னு அவசியம் இல்ல.. உன்னோட கவனம் மொத்தம் இப்ப உன் படிப்புல தான் இருக்கணும்.. இவ்வளவு அவசரமா இந்த கல்யாணம் நடந்தது உன் பாதுகாப்புக்காக தான்.. நீ இந்த வீட்டிலேயே நிரந்தரமா இருக்கணும்ன்ற ஒரே காரணத்துக்காக.. என்னோட ரூமுக்கு பக்கத்தில தான் உன்னோட ரூம்.. உனக்கு வேணும்னா அங்கேயே சூர்யாவும் கார்த்தியும் கூட தங்கிக்கட்டும்.."
அவன் சொன்னதைக் கேட்டு திகைத்தவள் தன் திகைப்பை மறைத்துக் கொண்டு "சரி அத்தான்" என்று மெதுவாக தலையாட்டினாள்..
"ஏய்.. ஏன் திடீர்னு மூஞ்சி லைட்டே இல்லாம டல்லாயிடுச்சு.. உன்னோட லைஃப் கோல் ரீச் பண்றதை நெனைச்சு டென்ஷனா இருக்கா? ஒரு டென்ஷனும் இல்லடா.. எனக்கு தெரியும்.. என் நவி ரொம்ப பிரில்லியன்ட்.. நெனச்சதெல்லாம் சாதிப்பா.. டென்ஷன் இல்லாம கூலா இரு.. இப்போதைக்கு நல்லா தூங்கி எழும்பு.. ஓகேவா..? ஈவினிங் என் தேவதையை ரிஸப்ஷன்ல பார்க்கிறேன் என்று சொல்லி அழகாய் ஒரு முழு நிறை புன்னகையை தந்துவிட்டு அங்கிருந்து சென்று விட்டான்..
அதன் பிறகு உறக்கத்தை தொலைத்தாள் நவி.. அவன் சொன்ன சில வார்த்தைகள் என் நவி.. என் தேவதை.. நினைத்து நினைத்து மனதிற்குள்ளே பூரித்துப் போனாள் அவள்.. அடுத்த ஒரு மணி நேரத்தில் அழகு நிலையத்திலிருந்து பெண்கள் வந்துவிட அழகு படுத்துகிறேன் பேர்வழி என்று அவளை பாடு படுத்தி அலங்காரத்தை முடித்து வைக்க மாலை வரவேற்புக்கு ஒருவழியாக வந்து சேர்ந்தாள்..
மேடையில் அவளின் அத்தான்.. அவன் அணிந்திருந்த தங்க நிறத்தில் வேலைபாடுகள் செய்யப்பட்ட வெள்ளை நிற ஷெர்வாணியும் அவன் உயரத்திற்கு நிமிர்வுக்கும் பாந்தமாய் பொருந்தி இருந்தது.. தூரத்திலிருந்து அவனைப் பார்த்துக் கொண்டிருந்த விழிகள் அவன் கண்களை சந்தித்த நேரம் சட்டென வெட்கத்தில் தழைந்து கொண்டது.. அவ்வப்போது ஒரு நொடி கண்களை ஏறெடுத்து அவனைப் பார்ப்பதும் தழைப்பதுமாக இருந்தாள் நவ்யா..
அழகு தேவதையாய் தன் உடைக்கு இணையான வெள்ளை நிற லெஹங்காவில் மெல்ல அடி மேல் அடி வைத்து பூமிக்கும் நோகாமல் நடந்து வந்தவளை முழுதாய் கொள்ளை இட்டது அவளவனின் விழிகள்.. இமைக்கவும் முடியவில்லை அவனால்.. ஆடவனின் விழிகள் அச்சடித்தார் போல் அவளிலேயே அழுந்தப் பதிந்திருந்தன..
பக்கத்தில் வந்து நின்றவளை கண்களால் கபளீகரம் செய்து கொண்டு இருந்தான் கள்வன் அவன்.. அவளுடன் கூட நடந்து வந்த சூர்யாவும் "அய்யோ மாமா.. விட்டா இப்படியே நவியை முழுங்கிடுவீங்க போல.. எல்லாரும் பாக்குறாங்க மாமா.. மிச்சத்தை நைட் ரூமுக்கு வருவால்ல.. அப்ப வச்சுக்கோங்க.." என்று கேலி செய்ய
அவனும் சற்றே தடுமாற்றத்துடன் வேறு பக்கம் சிரமப்பட்டு பார்வையை திருப்பிக் கொண்டான்.. மனமோ ஒரு புறம் அவள் தன் மாமன் மகளாய் தன்னுடனேயே வளர்ந்து இருக்க கூடாதா? இப்போது இவ்வளவு சிரமமாய் இருந்திருக்காதோ என்று புலம்பி தள்ளியது..
அவளிலிருந்து இன்னும் பல வருடங்கள் தள்ளி இருந்து அவள் முன்னேற்றத்திற்கு வழி விட வேண்டும் என்று மனதில் கங்கணம் கட்டிக் கொண்டவனோ இப்போது அதை முழுதாய் நிறைவேற்ற முடியுமா என்று கவலை அரிக்க பெரிதாய் அவஸ்தை கொண்டான்..
"பெருசா அவகிட்ட பேசும் போது பெரிய மனுஷன் கணக்கா தனித்தனி ரூம்ல இருக்கலாம்.. படிப்பை மட்டும் பாருன்னு அப்படியே உத்தம சிகாமணி மாதிரி பேசினேன்.. ஆனா சத்தியமா முடியுமான்னு சந்தேகமா இருக்கு" தனக்குள் புலம்பினான் காதலன் அவன்.
இருவரும் மாலை மாற்றிக்கொண்டார்கள்.. வரிசையில் வந்து நின்றவர்களை தமிழ் நவ்யாவுக்கு அறிமுகம் செய்து வைத்தார்.. நவ்யாவை காணாமல் போன தன் மாமனின் மகள் என்று அறிமுகப்படுத்தினான் அவன்.. அவளிடம் பலவாறு பேசி அதற்கு சம்மதமும் வாங்கி இருந்தான்.. வேறு வழியின்று வெளி உலகத்திற்கு மட்டும் அவளை ஜெகநாதனின் மகள் என்று அறிமுகப்படுத்த ஒப்புக்கொண்டாள்..
ஆனால் எந்த நிலையிலும் அவரை அப்பாவென அழைக்க மாட்டேன் என்று எடுத்திருந்த தன் உறுதியிலிருந்து அவள் மாறவே இல்லை..
பல வருடங்களுக்குப் பிறகு எல்லோரும் அவளை மரியாதையுடன் மதிப்போடும் பார்க்க ஒரு பெருமித உணர்ச்சியின் பிரவாகமே பொங்கி எழுந்தது அவளுக்குள்.
வரவேற்பு முடிந்து உணவு நேரமும் முடிந்தது.. வீட்டிற்கு வந்தவர்களை ஆரத்தி சுற்றி திருஷ்டி எடுத்து வரவேற்றார் தெய்வானை..
மணமக்களுக்கு பாலும் பழமும் கொடுத்து பூஜை அறைக்கு அழைத்துச் சென்று நவ்யாவை விளக்கேற்ற வைத்தார் தெய்வானை..
அதே நேரம் அவள் பின்னாலேயே அவளை நோட்டமிட்டு கொண்டே சென்ற ரியாவை பார்த்த சுனிதா "சிகப்பு காயின் போகுது.. பின்னாடியே கருப்பு காயினும் ஃபாலோ பண்ணுதே.. என்னவோ சரி இல்லையே.." என்றபடி ரியாவின் பின்னால் சென்றாள்..
நவ்யாவை சமையல் அறைக்கு அழைத்துப் போன தெய்வானை அம்மாடி தமிழ் என்கிட்ட விஷயத்தை சொன்னான்.. புருஷன் பொண்டாட்டி எப்பவும் ஒண்ணா தான் இருக்கணும்.. அவன் ஆயிரம் சொன்னாலும் அவன் சொன்ன மாதிரி உங்க ரெண்டு பேரையும் தனித்தனியா விட முடியாது.. நீயும் அவனும் இப்ப வாழ்க்கை ஆரம்பிக்க வேண்டாம்னா தொடங்காதீங்க.. ஆனா அது உங்களை தாண்டி வேற யாருக்கும் தெரிய வேண்டாம்.."
"இல்ல அத்தை.. தனி ரூம் வேணும்னு நான் கேட்கல.. அவர்தான் சொன்னாரு.. எனக்கும் அதுல அவ்வளவா உடன்பாடு இல்லை.."
அவள் சொன்னதும் அவள் கன்னத்தை வழித்து திருஷ்டி கழித்த தெய்வானை "இந்த வயசிலேயே நல்லா பக்குவமா யோசிக்கிறடா.. ரொம்ப சந்தோஷமா இருக்கு நீ எனக்கு மருமகளா வந்தது.. இரு பாலை காய்ச்சி தரேன்.. எடுத்துக்கிட்டு அவன் ரூமுக்கே போ.." என்று சொல்லி அவர் பாலை அடுப்பில் வைக்கப் போக அதே நேரம் சமையல் அறைக்குள் வந்தாள் ரியா..
"அத்தை அத்தானே இவ கூட ஒண்ணா இருக்க பிடிக்காம தனியா இருக்கலாம்னு சொல்லிட்டாரு.. நீங்க எதுக்கு இவளை அவர் ரூம்க்கு அனுப்பி அவரை கஷ்டப்படுத்துறீங்க?" என்றவள் பின்னாலேயே வந்த சுனிதா
"சில பேர் காது சரியான கழுதைக்காது அத்தை.. எவ்வளவு வாங்குனாலும் அந்த காதும் வாயும் மட்டும் அடங்கவே மாட்டேங்குது.. காது தேவையில்லாததெல்லாம் ஒட்டு கேட்குது.. வாய் கண்டதையும் பேசி தேவையில்லாம அடுத்தவங்க கிட்ட வாங்கி கட்டிக்கறதையே பொழப்பா வச்சிருக்கு.." என்க
ரியாவோ "ஏய் நான் என் அத்தை கிட்ட பேசிகிட்டு இருக்கேன்.. உனக்கு என்ன இங்க வேலை.. இப்பதான் உனக்கும் இந்த வீட்டுக்கும் எந்த சம்பந்தமும் இல்லன்னு ஆயிடுச்சில்ல..? வெளியே போ.." என்றாள்.
"பார்றா.. எனக்கும் இந்த வீட்டுக்கும் சம்பந்தம் இல்லையா? ஆமா உனக்கும் இந்த வீட்டுக்கும் என்னம்மா சம்பந்தம்? கொஞ்சம் வெளக்குறியா..?"
அவள் நக்கலாக கேட்க ரியாவின் முகமோ இருண்டு போனது..
"அத்தை.. பாத்தீங்களா.. உங்க முன்னாடியே என்ன பேசறான்னு..?" என்று கேட்டவளிடம்
"ரியா நீ நவ்யா கிட்ட ஒழுங்கா பேசி இருந்தா சுனிதாவும் உன் கிட்ட சரியா பேசி இருப்பா.. சுனிதா யாருன்னு கேக்குற? இன்னும் சோமசுந்தரம் அண்ணன் இந்த வீட்டோட சம்பந்தப்பட்டவர் தான்.. நவ்யா நீ சிந்து நீங்க எல்லாம் எப்படியோ அப்படித்தான் சுனிதாவும் எனக்கு.. அவளை அவமானப்படுத்தி பேசினா என்னை அவமானப்படுத்தி பேசுற மாதிரி.. இனிமே இப்படி பேசுற வேலை வெச்சுக்காதே.. இல்லனா உனக்கு தான் மதிப்பும் மரியாதையும் குறைஞ்சு போகும்.." என்றவர்
"நான் பாலை சூடு பண்றேன்.. நீ எடுத்துக்கொண்டு போ நவி.." என்று தெய்வானை சொல்ல
"ஏன் அத்தை.. என்னமோ இந்த கீழ் போர்ஷன் பக்கம் வரவே மாட்டேன்.. மாடியில அத்தானோட மட்டும் தான் இருப்பேன்.. அப்படி இப்படின்னு யாரோ சவால் விட்டாங்க.. இப்போ சமையல் ரூம் வரைக்கும் வந்து நிக்கிறாங்க.." என்று அப்போதும் வாய் குறையாமல் அவள் பேசிக்கொண்டே போக
சுனிதா "இவ அடங்க மாட்டா.. இன்னிக்கி அடி வாங்காம போக மாட்டா போல.." என்று யோசித்துக் கொண்டே இருந்த நேரம்..
நவ்யா ரியாவிடம் வந்து "ஹலோ என்னை கேக்க வேண்டிய கேள்வியை என்னையே கேளு.. நானே பதில் சொல்றேன்.. எங்க அப்பாவுக்கு மகளா உங்கம்மா இருக்கிற இடத்தில தங்க மாட்டேன்னு சொன்னேன் தான்.. ஆனா இது என் புகுந்த வீடு.. இந்த வீட்டில எங்க போகவும் என்ன செய்யவும் எனக்கு உரிமை இருக்கு.. எனக்கு தோணுச்சுன்னா நான் எங்க வேணா போவேன்.. என்ன வேணா செய்வேன்.." என்று தெய்வானை பக்கம் திரும்பி
"அத்தை கொஞ்சம் வழி விடுங்க.. நானே பாலை அடுப்புல வச்சு காய்ச்சுறேன்" என்று சொல்லி பாலை அடுப்பில வைத்து காய்ச்ச தொடங்கினாள்..
அங்கே பால் காய காய இங்கே ரியாவின் வயிறும் பற்றி எரிந்து காய்ந்தது..
சுனிதா களுக்கென சிரித்தவள் "தேவையா? நெத்தியடி.. இதுக்கு மேலயும் இங்க நின்னு அசிங்கப்பட போறியா ரியா..?" என்று கேட்க அதற்கு மேல் அங்கு நிற்க முடியாமல் வெளியேறினாள் ரியா..
தெய்வானை மருமகளிடம் "சாரிமா அவ பேசினதுக்கு நான் உன்கிட்ட மன்னிப்பு கேட்கிறேன்.." என்க
"அட ஏன் அத்தை.. இதெல்லாம் எதிர்பார்த்து தான் நான் இந்த கல்யாணத்தை செஞ்சுக்கிட்டேன்.. எனக்கு மாமா.. நீங்க.. அரசி சுனிதா முக்கியமா அத்தான்.. இவ்வளவு பேரு என் மேல அவ்ளோ அன்பை பொழியும் போது இந்த மாதிரி ஒன்னு ரெண்டு பேர் இருக்கிறது ஒரு விஷயமே இல்ல.. ஈஸியா கடந்து போய்டலாம்.. என்று சிரித்தவள் பால் காய்ந்ததும் அதை அணைத்துவிட்டு அதை ஒரு சொம்பில் ஊற்றி ஒரு குவளையை எடுத்து அதன் மேல் கவிழ்த்து "நான் அத்தான் ரூம்கே போறேன்.." என்றாள்..
"அடி கண்ணம்மா உன் பொறுமையால நீ எல்லாரையும் ஜெயிச்சிருவே.." என்று அவள் நாடியை பிடித்து சொல்ல சுனிதாவும்
"அத்தை.. ஒரு விஷயம் தெரியுமா? நீங்க கிரேட் எஸ்க்கேப்.. இவளுக்கு பதிலா நான் மட்டும் உங்க மருமகளா வந்திருந்தேன்னு வச்சுக்கோங்க.. இத்தனை நேரம் ரத்த கண்ணீர் வடிச்சிருப்பீங்க.." என்க
அதைக் கேட்ட அங்கிருந்த எல்லோருமே சிரித்தார்கள்..
தமிழின் அறை வாசல் வரை சுனிதாவும் அரசியும் அவளை கொண்டு வந்து விட கதவைத் தட்டிய சுனிதா "இதுக்கு அப்புறம் நாங்க இங்க நின்னுகிட்டு இருந்தா சரியா இருக்காது.. இங்க பாரு.. சந்தோஷமா இரு.. நீங்க வாழ்க்கையை ஆரம்பிக்கிறீங்களோ இல்லையோ பழசை எல்லாம் தூக்கி எறிஞ்சிட்டு மனசுல எந்த ஸ்ட்ரெசும் இல்லாம ஃப்ரீயா இருங்க.. இத்தனை நாள் நீ வாழாத வாழ்க்கையை மனசை திறந்து வாழு.. எது தோணினாலும் செய்.. எதுக்கும் தயங்காதே.. உன் மனசு சரின்னு சொன்னா அதை செய்யறதுல தப்பே இல்ல.." என்றவளை இறுக்கமாக அணைத்துக் கொண்டாள் நவ்யா..
"இதெல்லாம் உள்ள போய் வச்சுக்கோமா" என்று சுனிதா கேலி செய்ய அரசியோடு அந்த
அறையை விட்டு விலகி சென்ற நேரம் கதவை திறந்தான் தமிழ்..
நீர் உறையும்..

Author: STN - 72
Article Title: 27. தாமரை இலையுள் உறை தண்ணீராய்..!!
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.