உறை நீர் - 28
"நவி நீ என்ன இங்க.. சரி.. பரவால்ல வா.." என்று அவளை உள்ளே அழைத்தவன் கட்டிலில் சென்று அமர்ந்து அவளை பக்கத்தில் அமர சொன்னான்..
அப்போதுதான் அவள் கையில் இருந்த பால் சொம்பை பார்த்தவன் "இது என்ன?" என்று கேட்க
"அத்தை தான் வாழ்க்கையை தொடங்கறிங்களோ இல்லையோ வெளியில யாருக்கும் தெரிய வேண்டாம்.. ரெண்டு பேரும் உங்க ரூமுக்குள்ளேயே உங்க ரெண்டு பேருக்குள்ள இருக்குற ரகசியமா அதை வச்சுக்கோங்கன்னு சொன்னாங்க.. எனக்கும் அதுதான் சரின்னு பட்டுச்சு அதனால.."
"இந்த அம்மா இருக்காங்களே.."
"இல்ல அவங்க சரியா தான் சொன்னாங்க.. நீங்கதான் புரியாம.."
"ஓ.. இப்ப அப்படியா? மாமியாரும் மருமகளும் சேர்த்துட்டீங்களா? ம்ம்.. இனி என் பாடு திண்டாட்டம் தான்.."
"அவங்க சொல்றதும் கரெக்ட் தானே அத்தான்..?" என்று அவள் மெதுவாக இழுக்க
"சரி அதை விடு.. நானே உன் கிட்ட சில விஷயங்கள் பேசணும்னு நினைச்சேன்.. நீயே இங்க வந்துட்டே.. உனக்கு தூக்கம் வருதா?" என்று அவன் கேட்க
அவளை அறியாமல் ஒரு விரக்தி சிரிப்பு அவள் இதழ்களில்..
"நான் நைட்ல ஒழுங்கா தூங்கி மூணு மாசம் ஆச்சு அத்தான்.. இங்க வந்த நாளா தான் ராத்திரில நிம்மதியா தூங்குறதுனா என்னன்னு ரொம்ப நாளைக்கு அப்புறம் உணர்ந்துக்கிட்டேன்.. "
அவள் வார்த்தைகள் அவனுக்கும் வலித்தது தான்.
"சரி இனிமே அதெல்லாம் மறந்துடலாம்.. நான் உன்கிட்ட ஒரு விஷயம் பேசணும்னு சொன்னேன்ல..? இப்படி உட்காரு.. நிதானமா பேசலாம்.." என்று தன் பக்கத்தில் அவளை அமர வைத்தவன் அங்கே வைத்திருந்த தன் மடிக்கணினி அருகில் இருந்த சில காகிதங்களை எடுத்து வந்து அவளிடம் கொடுத்து
"இதுல இங்க இருக்கிற லா காலேஜஸோட அப்ளிகேஷன் ஃபார்ம்ஸ் இருக்கு.. எல்லாத்தையும் ஃபில் பண்ணி கொடு.. இன்னைக்கு நைட் இதுதான் வேலை.. இதை முடிச்சப்புறம் நாளைக்கு எல்லா காலேஜ்லையும் அப்ளை பண்ணிடுவோம்.. அப்பறம் உன் சர்ட்டிஃபிக்கேட்ஸ் எல்லாம்.." என்று கேட்க
"எல்லாம் ஆசிரமத்துல இருக்கு அத்தான்.. ஆனா எனக்கு அங்க போக விருப்பம் இல்ல.. சூர்யா.. கார்த்தியை தவிர என் பழைய நினைவுகள் எதுவுமே எனக்கு வேண்டாம்னு நினைக்கிறேன்.." என்றாள்..
"சரி.. நீ போகவேண்டாம்.. நான் வாங்கிட்டு வர்றேன்.." என்றவன் அப்படியே அவளோடு அமர்ந்து எல்லா விண்ணப்பங்களையும் நிரப்ப உதவி செய்தான்..
ஒரு மணி நேரத்திற்கு பிறகு எல்லா விண்ணப்பங்களையும் நிரப்பி முடிக்க அவளுக்கோ தூக்கம் கண்ணை சுழற்றியது.. அப்படியே அவன் தோளில் சாய்ந்தாள் உறக்க கலக்கத்தில்..
"ஏய் நவி தூக்கம் வருதா? கொஞ்சம் இரு.." என்றவன் அந்த விண்ணப்பங்களை அப்படியே எடுத்து வைத்துவிட்டு தலையணை மேல் அவளை படுக்க வைத்து
"தூங்கு.. காலையில் எழுந்து பேசிக்கலாம்.." என்று சொல்லி அங்கிருந்த நீள்விருக்கையில் படுக்க தன் தலையணையையும் போர்வையும் எடுத்துக் கொண்டு திரும்ப.. அவன் கையைப் பிடித்தாள் நவ்யா..
"அத்தான் உங்களுக்கு என் மேல கோவமே இல்லையா? கோவம் இல்லனாலும் அட்லீஸ்ட் வருத்தம்? ஒரு ஹக் ஒரு கிஸ் எதுவுமே இல்ல.. சரி படிக்கணும் தான்.. நிறைய அச்சீவ் பண்ணனும்.. இல்லன்னு சொல்லல.. ஆனா இப்படி கல்யாணம் பண்ணிக்கிட்டும் தனியா இருக்கறது.." என்று அவள் இழுக்க
அவள் பக்கத்தில் அமர்ந்தவன் "என்னடா இப்படி எல்லாம் சொல்ற? எனக்கு என்ன வயசாயிடுச்சா? எனக்கும் உனக்கும் ஏஜ் டிஃபரென்ஸ் அதிகம் தான்.. ஆனா உனக்கு இப்ப 18 வயசு.. உன்ன விட நான் எட்டு வயசு பெரியவன்.. அவ்வளவுதான்.. எனக்கு 26 வயசு தான் ஆகுது.. நமக்கு இன்னும் நிறைய டைம் இருக்குடா.. நீ எதுக்கு இப்படி எல்லாம் யோசிக்கிற? பேசாம படுத்துக்க.. நல்லா தூங்கு.. ஸ்வீட் ட்ரீம்ஸ் டா கண்ணம்மா.."
"இல்லத்தான்.. எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு.."
"இப்ப என்ன உன்னை ஹக் பண்ணி கிஸ் பண்ணனும்.. அப்போ உனக்கு நிம்மதியா ஆயிடுமா?" என்றவன் கேட்க இடவலமாய் தலையாட்டினாள்..
"பின்ன என்ன தான்டா வேணும்..?" என்று அவள் கன்னத்தை அவன் வருட.. அவனீ நெற்றியோடு நெற்றி முட்டியவள் "என்னால உங்களுக்கு சொல்லி புரிய வைக்க முடியாது அத்தான்.. ப்ளீஸ் நான் இப்போ செய்யுற விஷயத்துக்கு சாரி.." என்றவள் அவனிடம் இருந்து தள்ளி நின்று சட்டென தன் மேலாடையை கழட்டினாள்..
அதிர்ந்து போனான் ஒரு நொடி.. "ஏய் என்னமா பண்ற?" கேட்டவன் அடுத்த நொடியே அவளைப் பார்த்து உள்ளுக்குள் நொறுங்கியே போனான்..
கழுத்து வரை அவன் அதுவரை எண்ணியது போல் தேவதையாய் தான் இருந்தாள் அவள்.. கழுத்தின் கீழே அவள் உள்ளாடை அவள் அந்தரங்கங்களை மறைத்திருந்தாலும் சுற்றி இருந்த இடங்கள் அத்தனையிலும் சிகரெட் சூடு பட்ட தழும்புகள்.. ஆழமான பற் தடங்கள்.. சில இடங்களில் புண்ணாகி புரையோடிப் போயிருக்க மருத்துவமனையில் கொடுத்த மருந்தில் சில காயங்கள் ஆறி இருந்தன.. ஆனால் இன்னும் கூட ஆறாத காயங்கள் நிறைய இருந்தன..
துடித்துவிட்டான் அவன்.. "நவீஈஈ என்று அவளை அணைக்க போக அவள் உடலில் அவன் கை பட்டதும் அவளுக்கு சுருக்கென்ற வலி..
"ஸ்ஸ்.." என்று கத்தியவளை விட்டு விலகியவன் மெல்ல அவள் கை பிடித்து வந்து படுக்க வைத்து "அரசி கொடுத்த மெடிசின் எங்கடா இருக்கு?" என்று சொன்னவனுக்கு வார்த்தைகள் கூட சரியாக வெளிவராமல் தொண்டை அடைந்து குரலும் கரகரத்து போயிருந்தது..
அவளும் அங்கே வைத்திருந்த அவள் பையை காண்பித்தாள்..
உயிரே காய்ந்து போனது அவனுக்கு.. தன்னவளை முதலிரவில் இப்படியா பார்க்க வேண்டும்? ஏன் இந்த நிலைமை அவளுக்கு? அவளின் இந்த நிலைக்கு காரணமானவனுக்கே நிச்சயம் சரியான தண்டனை கொடுக்க வேண்டும்.." என்று மனதில் முடித்துக் கொண்டான்..
அவளுக்கு இட வேண்டிய மருந்தை எடுத்து வந்தவன் அந்த களிம்பை எடுத்து அவளின் ஒவ்வொரு காயத்தின் மீதும் வைக்க பெண்ணவளும் சில காயங்களுக்கு மருந்து வைக்கும் போது வலியில் துடித்து போனாள்.. அவன் கண்களில் இருந்து ஒவ்வொரு முறை அவள் துடிக்கும் போதும் ஒரு கண்ணீர் துளி அவள் மீது விழுந்து அவள் மேனியை ஈரமாக்கியது..
"நானே போட்டுக்கிறேன் அத்தான்.." என்று அவள் சொல்ல தடுத்தவன் விழிகளோ சிவந்து போய் இருந்தது..
"இல்லடா நான் போடுறேன்.. நான் தான் போடணும்.. உன் வலி என்னன்னு எனக்கு புரியணும் .. அதுக்கு காரணமானவனை.." என்று பல்லை கடித்தவன் முகத்தில் அவ்வளவு சீற்றம் ..
"ஆமா.. அவன் ஒரு போலீஸ்காரன்னு சொன்னே.. அவனைப் பத்தி வேற ஏதாவது அடையாளம் சொல்ல முடியுமா? ஏதாவது மார்க்ஸ் அடையாளம்.. " என்று அவளை அவன் விசாரிக்க
"அவன் முகத்துல கன்னத்துல பெரிய தழும்பு இருக்கும் அத்தான்.. அதுல பெருசா தையல் போட்டிருந்தான்.. என்ன கொடுமை படுத்தும்போதெல்லாம் அந்த தழும்பை தொட்டுப் பார்த்து யாரோ ஒரு பொண்ணை திட்டிகிட்டு தான் அந்த கோபத்தை எல்லாம் என் மேல காட்டுனான்"
அவள் சொன்னதில் திடுக்கிட்டு போனவன் தன் கைபேசியை எடுத்து அதிலிருந்த ஒரு புகைப்படத்தை அவளிடம் காட்டினான்..
"நவீ.. அந்த ஆள் இவனானு பாத்து சொல்லு.." என்க அதிர்ந்து போனாள் அந்த புகைப்படத்தை பார்த்து.
"இவனே தான்.. அத்தான்.." கண்கள் விரிய மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க அந்த புகைப்படத்தை பார்த்து அரண்டு போயிருந்தாள் பெண்ணவள்.
அவளை அணைத்து முதுகை வருடி கொடுத்து ஆசிவாசப்படுத்தியவன் "ரிலாக்ஸ் நவி.. இனிமே அவன் உன் நிழலை கூட தொட முடியாது.. நான் இருக்கேன் டா.." என்று அவளிடம் அமைதியாக பேசினானே தவிர அவன் மனமோ அளவில்லாமல் கொந்தளித்துக் கொண்டிருந்தது அந்த கயவனை நினைத்து..
அவளை இந்த கதிக்கு ஆளாக்கியவன் கையில் கிடைத்தால் ஒரேயடியாய் கொன்று போட்டு விடுவானோ என்று கூட தோன்றியது நவ்யாவுக்கு.. அதில் சிறிது பயமும் எடுத்தது அவளுக்கு.. ஆனால் அவள் அத்தான் மீது அவளுக்கு நம்பிக்கை உண்டு. நேர்மைக்கு புறம்பாக எதுவும் செய்ய மாட்டான் அவன் என்று தெரியும்..
அவள் உடலில் இருந்து காயங்களுக்கு மருந்திட்டதும் இறுக்கமான ஆடைகளை தளர்த்தி தன் சட்டை ஒன்றை அவளுக்கு அணிவித்தான்.
"இது கொஞ்சம் லூசா இருக்கும்டா.. உனக்கு கொஞ்சம் ஃப்ரீயா கம்ஃபர்டபிளா இருக்கும்.. தூங்குடா.."
"எப்படி அத்தான் தூங்குவேன்.. உங்களை இப்படி அழ வெச்சுட்டேனே.. சாரி அத்தான்.. எவ்வளவு நல்ல மூடுல வந்தீங்க..?"
"இனிமே நல்ல மூடு கெட்ட மூடு சந்தோஷம் வருத்தம் இதெல்லாம் நமக்குள்ள மாறி மாறி வரும்.. எனக்காக நீயும் உனக்காக நானும் சந்தோஷப்படுறதும் வேதனைப்படுறதும் இருந்தா தான் நாம புருஷன் பொண்டாட்டி.. சரி போதும்.. ரொம்ப நேரமாயிடுச்சு.. தூங்கு.. அப்பவே தூங்கி வழிஞ்ச நீ.." என்று அந்த உரையாடலை அத்துடன் நிறுத்த முயன்றான்.
"அத்தான் நான் உங்க மடில படுத்துக்கவா?" என்றுஅவள் கேட்க "இதை கேட்கணுமாடா?" என்று சொல்லிஅவளை அப்படியே சரித்து தன் மடியில் தாங்கிக் கொண்டான்..
அவன் மடியில் படுத்தவள் இன்னும் வசதியாக அவனுள் புதைந்து ஆழ்ந்த உறங்கிப் போக அவள் தலையை மெல்ல வருடியவன் அவள் உச்சந்தலையில் மெலிதாய் முத்தமிட்டான்..
"எவ்வளவு கஷ்டப்பட்டிருக்க நீ.. ஆனா இந்த கஷ்டத்துக்கு காரணமான அந்த நாய்களை நான் சும்மாவே விடமாட்டேன்.. நீ பட்ட வலியை விட பல மடங்கு வலியை அவனுங்க அனுபவிக்கனும்.. அனுபவிப்பானுங்க.." என்றான்..
நவ்யா உறங்கிய பிறகு அவளை பக்கத்தில் படுக்க வைத்தவன் தானும் அவள் அருகிலேயே படுத்து கொண்டான்.. அவள் நிம்மதியாக உறங்கி இருந்தாள்.. ஆனால் அவனுக்கு தான் உறக்கம் போனது..
"உன் வலியை மட்டும் இல்ல உன் வலிக்கு காரணமானவனையும் அழிச்சுட்டு தான் உன்னை தொடுவேன் நவ்யா.. அதுவரைக்கும் உன்னை தொட்டு உனக்கு வலியை கொடுக்க மாட்டேன்.. உன் உடம்புல ஏற்பட்டிருக்கற காயத்தோட வலி இந்த மருந்துல சரியாகிடும்.. ஆனா உன் மனசுல இருக்கற காயத்தோட வலி அந்த அரக்கனை அழிச்சா தான் சரியாகும்.. நிச்சயம் அவனை அழிப்பேன்.."
"அதுக்கப்புறம் இந்த வலி இதை கொடுத்த ஆளு.. உன்னோட வேதனை.. பழைய வாழ்க்கையோட நினைவுகள்.. எல்லாமே மறந்து போற அளவுக்கு உன்னை காதலிப்பேன் உன்னோட இந்த அத்தான்.. அப்ப இன்னிக்கு என் சட்டை இருக்கற இடத்துலே நான் இருப்பேன்.. இதை விட இறுக்கமா.." உறங்கிக் கொண்டிருந்தவளிடம் பேசிக் கொண்டிருந்தான்..
உறக்கம் வரவில்லை.. ஆனாலும் கண் மூடி பலவித சிந்தனையிலேயே கடத்தி இருந்தான் அந்த இரவை அவன்..
நீர் உறையும்..