• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

5. தாமரை இலையுள் உறை தண்ணீராய்..!!

STN - 72

New member
Staff member
உறை நீர் - 5

"அய்யய்யோ அவ கிட்ட பேசறதா? டாக்டர்.. ப்ளீஸ்.. நான் இங்க வந்த விஷயம் கூட அவளுக்கு தெரிய வேண்டாம்.. நீங்களா ஸ்லாட் கேக்குற மாதிரி கேட்டுடுங்க.. அந்த சுறுசுறுவத்தி என்னை பார்த்தான்னா உடம்பு பிடியா பிடிச்சுக்குவா.. என் காதுல ரத்தம் வந்துரும் டாக்டர்.."

அவ்வளவு நேரமாய் கம்பீரமாய் பேசிக் கொண்டிருந்த தமிழ் பாவமாய் முகத்தை வைத்து கெஞ்சுவதை பார்த்து அங்கிருந்த அத்தனை பேருக்குமே வினோதமாயும் இருந்தது. அதே சமயம் அவன் நிலையை பார்த்து கொஞ்சம் பாவமாகவும் இருந்தது.

"என்ன சார் இப்படி சொல்றீங்க? மிஸ்.சுனிதாவோட எக்ஸ்பெக்டேஷனும் கரெக்ட் தானே? உங்களை கல்யாணம் பண்ணிக்க போற பொண்ணு.. அவங்களோட டைம் ஸ்பென்ட் பண்ணணும்னு எதிர்ப்பார்ப்பாங்க தானே.. அது மட்டும் இல்லாம அவங்க கிட்ட நான் சொல்லலன்னாலும் உங்க தங்கச்சி சொல்லிடுவாங்க.. நீங்க இங்க வந்துட்டு போனதை பத்தி முழு விவரமும் எப்படியும் சுனிதாக்கு தெரிஞ்சுடும்.. அப்புறம் நீங்க மட்டும் இல்லாம நானும் சுனிதா கிட்ட வாங்கி கட்டிக்கணும்.. ஏன் அவர் இங்க வந்தப்போ என்கிட்ட சொல்லலன்னு கேட்டு என்னை ஒரு பிடி பிடிச்சுடுவாங்க.."

"ப்ச்.. ம்ம்.. நீங்க சொல்றதும் கரெக்ட் தான்.. சரி.. என்னை கேட்கும் போது நான் சமாளிச்சுக்கிறேன்.. நீங்க நான் இங்க வந்துட்டு போனதை சொல்லுங்க.. ஆனா ப்ளீஸ்.. நான் இங்க இருந்து போன அப்புறம் சொல்லுங்க.. கேட்டா நான் கிளம்பி போனதே உங்களுக்கு தெரியாதுன்னு சொல்லிருங்க.. ப்ளீஸ் டாக்டர்.." மறுபடியும் கெஞ்சினான் அவன்.

'என்னடா இது? இவ்வளவு நேரம் இவனை பாக்கவே டெரர் பீஸா இருந்தான்.. இவன் ஒரு பொண்ணு கிட்ட இவ்வளவு பயப்படுறான்னா அவ என்ன அவ்வளவு பெரிய அப்பாடக்கரா? இப்படி ஒரு பயங்கரமான பீசையா காலத்துக்கும் இவன் தலையில கட்ட போறாங்க..? அடப்பாவமே.. இவனே பயப்படறான்னா அவ இவனுக்கு மேல ராங்கியா தான் இருக்கணும்.. ஐயோ பாவம்.. போலீஸ் அந்த ராட்சசி கிட்ட சிக்கி சின்னாபின்னமாக போறான்.. த்சு..த்சு..த்சு..த்சு..த்சு..' உச்சு கொட்டிய படி அவனை பாவமாக பார்த்திருந்தாள் சூர்யா.

"டாக்டர் அப்புறம் இன்னொரு விஷயம்.. இவங்களை பத்தின டீடெயில்ஸ்.. இங்கே இவங்க பேசுனது.. நடந்துக்கிட்டது.. இது எதுவுமே இங்க இருக்கிற நாலு சுவத்தை தாண்டி வெளியே போகக்கூடாது.. புரிஞ்சுதா..?"

"என்ன சார்.. இதெல்லாம் நீங்க சொல்லணுமா? இங்க இருக்கிறவங்களை பத்தி உங்களுக்கு தெரியாதா? நிச்சயமா எங்க பேஷன்ட் டீடைல்ஸை ரொம்ப கான்ஃபிடென்ஷியலா வச்சிருப்போம்.. வெளில யாருக்கும் தெரிய விடமாட்டோம்.. இங்கே வர்க் பண்ற ஸ்டாஃபுக்கு நான் கேரண்டி.. அப்புறம் இவங்களுக்கு இப்போ எந்த பிராப்ளமும் இல்லை.. இன்னைக்கே இவங்களை டிஸ்சார்ஜ் பண்ணி கூட்டிட்டு போகலாம்.."

"ஓ.. ஓகே டாக்டர்.. எப்பவும் போல இவங்களையும் தெய்வானை ட்ரஸ்ட் ஹாஸ்டல்ல தான் தங்க வைக்கணும். ஹாஸ்டல் வார்டன் கிட்டயும் அரசி கிட்டயும் பேசிட்டு நான் இவங்களை கூட்டிட்டு போறேன்.. நீங்க டிஸ்சார்ஜ் ஃபார்மாலிட்டிஸ்லாம் பார்க்க சொல்லுங்க.. எனக்கு கொஞ்சம் ஸ்டேஷனுக்கு போக வேண்டி இருக்கு.. நான் அங்க வேலை முடிஞ்சதும் திரும்ப வந்து இவங்களை கூட்டிட்டு போறேன்.. அதுக்குள்ள கொஞ்சம் அரசி கிட்டயும் சுதா கிட்டயும் விஷயத்தை சொல்லிடுங்க.. முடிஞ்சா இன்னிக்கே சுதா இவங்களை மீட் பண்ணட்டும்" என்றவன் மருத்துவரிடம் விடை பெற்று கிளம்பி விட்டான்.

சுனிதாவை அவன் சுதா என்று தான் அழைப்பான்.

மருத்துவர் "ஓகே யூ கேரி ஆன்" என்க அங்கிருந்து கிளம்பி மறுபடியும் காவல் நிலையத்துக்கு சென்றவன் அங்கு இருந்த அத்தனை பெண்களையும் டில்லி பாபுவின் மேல் புகார் எழுதிக் கையெழுத்து போட்டு கொடுக்க சொன்னான்.

அந்த மகளிர் விடுதியின் வார்டனை வரச்சொல்லி அவரிடம் "மேடம்.. மொத்தம் இங்க பத்து பொண்ணுங்க இருக்காங்க.. இவங்க அத்தனை பேருக்கும் நம்ம ஹாஸ்டல்ல ரூம்ஸ் இருக்கா..?" என்று கேட்க

"இல்ல தமிழ்.. ஹாஸ்டல்ல இப்போ ரெண்டு ரூம் தான் காலியா இருக்கு.. அந்த ரெண்டு ரூம்ல மேக்ஸிமம் நாலு நாலு பேர்னு கஷ்டப்பட்டு எட்டு பேரை தங்க வைக்கலாம்.. மீதி ரெண்டு பேரை இப்போதைக்கு நீங்க வேற எங்கேயாவது ரூம் எடுத்து தான் தங்க வைக்கணும்.."

"ஓகே தென்.. நீங்க இங்க இருக்கிற எட்டு பேரையும் ஹாஸ்டலுக்கு கூட்டிட்டு போயிருங்க.. அங்க அவங்களுக்கு அந்த ரூம்ஸை அலாட் பண்ணி கொடுத்துடுங்க.. நான் ஹாஸ்பிடல்ல இருக்கிற ரெண்டு பேரையும் வேற எங்கேயாவது ரூம்ல தங்க வைக்க ட்ரை பண்றேன்.. அரசியும் அங்க தானே இருக்கா.. அவ கிட்ட பேசி என்ன பண்ணலாம்னு பார்க்கிறேன்.." என்று சொன்னவன் அங்கு பக்கத்தில் நின்றிருந்த காவலரை அழைத்து..

"மணி அண்ணா. இவங்களை பத்திரமா ஹாஸ்டல்ல விட்டுட்டு வாங்க.. உங்க கூட சுரேஷையும் கூட்டிட்டு போங்க.." என்க

"எஸ் சார்" என்று விரைப்பாய் பதில் சொன்ன மணி.. சுரேஷ் என்ற இன்னொரு காவலரையும் அழைத்துக் கொண்டு அந்தப் பெண்களுடன் கிளம்பி விட்டார்..

தமிழும் இப்போது சூர்யாவையும் நிலாவையும் பாதுகாப்பாக எங்கு தங்க வைப்பது என்ற யோசனையுடனேயே ஜீப்பிலேறி மருத்துவமனைக்கு பயணப்பட்டான்..

அங்கு நிலா இருந்த அறைக்குள் நுழையும் போதே இடுப்பில் தன்னிரு கைகளை குற்றி அவனையே முறைத்து பார்த்துக் கொண்டு நின்றிருந்தாள் சுனிதா..

எப்போதும் அவள் இருக்கிறாளா என்று பார்வையை சுழல விட்டபடி வெகு ஜாக்கிரதையாக வருபவன் இன்று நிலா சூர்யாவை தங்க வைப்பது பற்றி யோசித்துக் கொண்டே வேகமாய் அறையின் உள்ளே வந்திருக்க வசமாக மாட்டிக் கொண்டான் சுனிதாவிடம்..

"ஐயோ இங்கே தான் இருக்காளா..? மாட்னேன் டா சாமி.." என்று நினைத்தவன் "ஹாய் சுதா பேபி.. எப்படி இருக்க?" என்று கேட்டான் சிரமப்பட்டு சாதாரணமாக முகத்தை வைத்துக் கொண்டு..

"ம்ம்.. பார்த்தா சாருக்கு எப்படி தெரியுது?" அவள் எகத்தாளமாய் கேட்க

"ம்ம்.. ரொம்ப கோவமா இருக்குற மாதிரி தெரியுது.. ஏன் பேபி?" சற்று முன்னர் நிலாவை மிரட்டி கொண்டிருந்த தமிழா இவன் என்று ஆச்சரியமாய் இருந்தது சூர்யாவுக்கு.

"பின்ன? கோவப்படாம கொஞ்சுவாங்களாக்கும்..? எவ்வளவு நாளா அவுட்டிங் போகணும்ன்னு கூப்பிட்டுட்டு இருக்கேன்.. ஒவ்வொரு முறையும் ஏதாவது ஒரு காரணம் சொல்லி வராமலே இருந்த.. ஒரு வழியா இந்த வீக் எண்டு தான் வரேன்னு சொல்லி ஒத்துக்கிட்டே.. நான் கிளம்புனப்போ உனக்கு ஃபோன் பண்ணேனே.. என்ன சொன்னே நீ?"

அவள் போலீஸிடமே விசாரணையை தொடங்க அவனோ "என்ன சொன்னேன்?" என்று திருத்திருவென விழித்தான்..

"நீ மாலுக்கு போய் ஷாப்பிங் பண்ணிக்கிட்டே இரு.. நான் வந்து ஜாயின் பண்ணிக்கிறேன்னு சொன்னல்ல..?"

"ஓ அப்படியா சொன்னேன்..?" என்று அவன் கேட்க இன்னும் தீவிரமாய் முறைத்தாள் அவனை..

"அப்படித்தான் சொன்னே.. ஆனா வரவே இல்ல.."

"இல்ல பேபி.. நான் கொஞ்சம் லேட்டா வந்தேன்.. அதுக்குள்ள நீ கெளம்பிட்ட.. போல.." என்று அவன் சமாளிக்க பார்க்க

அவளோ "ஓ..சார் லேட்டா வந்தீங்களா? எவ்ளோ லேட்டா வந்தீங்க சார்?"அவள் மீண்டும் விசாரணையை தொடர

"அது ஒரு ஒன் ஹவர் கழிச்சு வந்தேன்டா.. நீ அங்க இல்ல.."

அவன் உண்மை போல சொல்ல அவள் அவனை மார்பின் குறுக்கே கையை கட்டிக்கொண்டு உற்றுப் பார்க்க "ஓ.. ஒருவேளை டூ ஹவர்ஸ் ஆயிடுச்சோ?" என்று அவன் மறுபடியும் மாற்றிப் பேச

அவளோ பார்வையை மாற்றாமல் "அங்க நாலு மணி நேரம் பைத்தியக்காரி மாதிரி ஷாப்பிங் பண்ணிக்கிட்டே இருந்தேன்.. டேய்.. ஷாப்பிங் பண்றதுக்கு ஒரு அளவில்லையாடா? ஷாப்பிங் ஃப்ரீக் நானே அன்னைக்கு நொந்து போயிட்டேன்னா பாத்துக்க.. ஐயோ உன்னை கட்டிக்கிட்டு நான் என்ன பண்ணப் போறேன்னு தெரியலையே.. பயமா இருக்குடா.." அவள் அழவே ஆரம்பித்து விட்டாள்..

"என்ன பேபி நீ.. எத்தனை பேருக்கு கௌன்சலிங் குடுக்கற? நீ இப்படி புலம்பலாமா? இன்னைக்கு நடந்த ரெஸ்க்யூ ஆபரேஷனுக்கு பிளான் பண்றதுல தான் டைம் போயிருச்சு.. சாரி பேபி.. அடுத்த வீக்கென்ட் நிச்சயமா காம்பன்சேட் பண்ணிடறேன்.. ஃபுல் டே உனக்கு தான்.." என்றவனைப் பார்த்து பெரிய கும்பிடாய் போட்டாள் அவள்..

"ஐயா சாமி.. அடுத்த வாரம் எங்க.. கோவிலா? உனக்காக பார்த்து பார்த்து அப்படியே சாமியாரா போக வேண்டியதுதான்.. நீ உன் வேலையையே பாரு.. எப்படியும் இன்னும் ரெண்டு மாசத்துல நமக்கு கல்யாணம் ஆயிடும்.. அப்புறம் வச்சிக்கறேன் உனக்கு கச்சேரி.. எங்க அப்பா கிட்ட நான் அப்பவே சொன்னேன்.. இந்த ஆளு ரொம்ப சின்சியர் போலீஸா இருக்கான்.. இவனெல்லாம் ஹஸ்பண்ட் மெட்டீரியலே கிடையாது.. இந்த கல்யாணம் வேண்டாம்னு சொன்னேன்.. பாசத்தைக் காட்டி மிரட்டி ஐஜி சோமசுந்தரம் என்னை உன் தலையில கட்டுறதுக்கு முடிவு பண்ணிட்டார்.. இல்லனா உன்னை மாதிரி ஒரு ஒர்க்கஹாலிக்கை பத்தி எல்லாம் நான் யோசிச்சு இருக்கவே மாட்டேன்.. இப்ப நீ தான்னு ஃபிக்ஸ் ஆயிட்டேன்.. எனக்கு வேற வழி கிடையாது.. அடியே சுனிதா.. உனக்கு இது தேவையா டி?" புலம்பி தள்ளினாள் அவள்..

அதற்குள் அவள் பின்னால் நின்று இவர்கள் உரையாடலை கேட்டு சிரித்துக் கொண்டிருந்த அரசி "அண்ணா.. ஏன் ணா அவளை இப்படி படுத்துற? வர முடியும்ன்னா அவகிட்ட கமிட் பண்ணு.. கமிட் பண்ணிட்டு வரலைன்னா கஷ்டமா இருக்காதா?" தன் நண்பிக்காக பரிந்து பேசினாள் அவள்..

"இல்லடா நிஜமாவே அந்த பிளானிங்ல மாட்டிக்கிட்டேன்டா.. நம்ம கேஷவ் மதன் அவங்க ரெண்டு பேரும் சின்சியரா இந்த ஆபரேஷனுக்காக பிளான் பண்ண தொடங்கிட்டாங்க.. அவங்களுக்கு கொஞ்சம் ஐடியாஸ் குடுத்துட்டு கிளம்பனும்னு தான் நினைச்சேன்.. ஆனா பேச பேச ரொம்ப டைம் ஆயிடுச்சு.. எப்படியும் அவ வெயிட் பண்ணிட்டு கிளம்பி போயிருப்பான்னு தான் நான் வரல.. சாரி சுதா.. நெக்ஸ்ட் டைம் நிச்சயமா இப்படி பண்ண மாட்டேன்.."

"ஓகே ஓகே நம்ம விஷயத்தை அப்புறம் பார்க்கலாம்.. முதல்ல இந்த ஆபரேஷனையாவது ஒழுங்கா முடிச்சீங்களா? அங்க இருந்த எல்லா பொண்ணுங்களையும் காப்பாத்திட்டீங்களா..?"

இப்போது சுனிதாவின் முகம் தமிழின் முகத்தை விட அழுத்தமாகவும் இறுக்கமாகவும் இருந்தது..

அவளுக்கு இந்த அப்பாவி பெண்களை இந்த நிலைக்கு ஆளாக்கும் அந்த கயவர்களை எண்ணும் போதே அவர்களை கொன்று போட்டு விடும் ஆத்திரம் வரும்.. அந்த நரகத்தில் இருக்கும் போதும் அடிமைகளாய் வெளியே வந்த பிறகும் பயந்து பயந்து சாகும் கோழைகளாய் இருப்பவர்களோடு பேசி பேசி அவர்கள் வாழ்க்கையில் டில்லி பாபு போன்ற ஈனப்பிறவிகளை எதிர்த்துப் போராட உந்துதலாய் இருப்பவள் அவள்..

ஆனாலும் அவர்களை இந்த நிலைக்கு தள்ளும் அந்த கயவர்களை எண்ணும் போது ஒரு காளி அவதாரமே எடுத்து அவர்களை வதம் செய்தால் என்ன என்று தான் தோன்றும் அவளுக்கு..

"ம்ம்.. அவங்களையெல்லாம் ஹாஸ்டலுக்கு அனுப்பிட்டேன்.. நீ அப்புறமா ஹாஸ்டலுக்கு போயி அவங்களுக்கு எல்லாம் கவுன்சிலிங் கொடுத்துரு.. நீ நிலாவை பாத்தியா? அவ தான் ரொம்ப டிஸ்டர்ப்டா இருக்கா.. சின்ன பொண்ணு.. ஒரு மாசமா தான் அந்த இடத்தில இருக்கா.. அவளால இதை கடந்து போகவே முடியல.. இன்னைக்கு ரெண்டு வாட்டி ஸ்யூசைட் அட்டெம்ப்ட் பண்ணிட்டா.."

"ம்ம்.. தெரியும்.. நான் பேசினேன்.. ரொம்ப உடைஞ்சு போயிருக்கா.. சுக்கு நூறா நொறுங்கி போயிருக்கா.." என்று அவள் சொல்லிக் கொண்டிருக்கும் போதே அரசி "ஆமா அண்ணா.. அவளோட இருந்த அந்த கிழட்டு நாய் அவளை ரொம்ப கொடுமை படுத்திருக்கான்.. உடம்பு முழுக்க காயமா இருக்கு.. பாவம் ணா அவ.."

"ஹூம்.. " ஒரு பெருமூச்சை விட்டவன் "கொஞ்சம் கொஞ்சமா சரி பண்ணலாம்.. எவ்வளவுதான் இவனுங்களை அழிக்க நினைச்சாலும் எங்கிருந்து திரும்பத் திரும்ப முளைச்சு வரானுங்கன்னு தெரியல.. நிறைய பொண்ணுங்களோட வாழ்க்கையை கெடுத்து குட்டி சுவராக்கி வச்சிருக்கானுங்க.."

"பின்ன வராம என்ன செய்வாங்க? அவங்களுக்கு சிவியரா தண்டனை கொடுக்க முடியுதா? தப்பு பண்ணவனை கொஞ்ச நாள் ஜெயில்ல போடுற மாதிரி போட்டுட்டு அதுக்கப்புறம் ரிலீஸ் பண்ணி அவங்களுக்கு மறுவாழ்வுன்னு பேசிகிட்டு இருக்குற உலகம் தானே இது.. இதை எல்லாம் பார்க்கும்போது சில சமயம் இவங்களை எல்லாம் தேடிப்போய் நம்மளே போட்டு தள்ளிட்டா என்னன்னு தோணுது.."

சுனிதா சொன்னதை கேட்டு அரசி "அடியேய்.. அப்படியெல்லாம் எதுவும் பண்ணிடாத டி.. போலீஸ்காரனுக்கு பொண்டாட்டியாக போற.. கடைசில கொலை கேஸ்ல என் அண்ணனே உன்னை அரெஸ்ட் பண்ற மாதிரி வச்சிராத.." என்க

"உங்க அண்ணனோட இருக்குறதுக்கு ஜெயிலே பரவால்ல.. கொஞ்சம் இன்ட்ரஸ்டிங்காவாவது இருக்கும்.. ரொமான்ஸ்னா என்ன வெலைன்னு கேப்பாரு உன் அண்ணன்.." என்று அவள் நக்கலாய் பேச அவனோ அவளை தீவிரமாய் முறைத்தான்.. "ரொம்ப ஓவரா பேசுற டி.. கல்யாணத்துக்கு அப்பறம் பாரு அய்யாவோட பெர்ஃபார்மன்ஸை.." என்றான் காலரை தூக்கிவிட்டபடி..

"ம்க்கும்.. இந்த டயலாக்குக்கு எல்லாம் ஒன்னும் குறைச்சல் இல்லை.. மொதல்ல நம்ம கல்யாணத்தன்னிக்கு தாலி கட்ட கரெக்ட் டைமுக்கு வர்றியான்னு பார்க்கிறேன்.." என்று சலித்துக் கொண்டாள்..

அவள் சொன்னதைக் கேட்டு இதழுக்குள் சிரிப்பை அடக்கிய அரசி "அண்ணா.. போற போக்கை பார்த்தா உனக்கு வாழ்க்கையில அடி ரொம்ப பலமா இருக்கும் போல.." என்க

"அதுதான் எனக்கு எப்பவோ தெரியுமே.. ஐஜி சார் என்னைக்கு என்னை கூப்பிட்டு இந்த சுறுசுறுவத்தியை என் தலையில கட்டுறேன்னு சொன்னாரோ அன்னிக்கே நான் ஒரு அண்டர்ஸ்டாண்டிங்க்கு வந்துட்டேன் டா அரசி.." என்றான் அவன்..

"ரெண்டு பேரும் சண்டை போட்டது போதும்.. அண்ணா.. கொஞ்சம் சீரியஸா பேசுவோம்.. மொத்தம் எத்தனை பொண்ணுங்க..? வார்டனை ரூம்ஸ் இருக்கான்னு கேட்டீங்களா?"

அரசி கேட்க "மொத்தம் பத்து பொண்ணுங்க டா.. ரெண்டு ரூம் தான் இருக்குன்னு சொன்னாங்க.. அதிலேயே எட்டு பொண்ணுங்க அட்ஜஸ்ட் பண்ணி தான் தங்கணும்.. இவங்க ரெண்டு பேரையும் வேற எங்கேயாவது ரூம் எடுத்து தங்க வைக்கலாம்ன்னு பார்க்கிறேன்.." என்றான்.

அப்போது சுனிதா இடையிட்டு "இல்ல தமிழ்.. தனியா ரூம் எடுத்து தங்குறது சரிப்பட்டு வராது.. அந்த டில்லி பாபுவை நீ அரெஸ்ட் பண்ணி இருக்க.. ஆனா அந்த இடத்துக்கு போன நிறைய ஆம்பளைங்க இன்னும் ஊருக்குள்ள திரிஞ்சிக்கிட்டு தான் இருக்காங்க.. அவங்க யாராவது இவங்களை பார்த்து ஏதாவது பேசினா மறுபடியும் இவங்க டிஸ்டர்ப் ஆயிடுவாங்க.. இப்போதைக்கு இவங்க கொஞ்சம் ஸ்ட்ராங்கா மாறுற வரைக்கும் ஏதாவது ஒரு சேஃபான அவங்க எல்லாம் அக்ஸஸ் பண்ண முடியாத இடத்துல இருக்கிறது தான் நல்லது.. அப்படி பாத்தா ஒன்னு எங்க வீட்டுக்கு வரலாம்.. இல்லனா உங்க வீட்டுக்கு கூட்டிட்டு போகலாம். ஆனா எங்க வீட்ல இப்போ கல்யாணத்துக்காக ரெனோவேஷன் பண்ணிட்டு இருக்காங்க.. நானும் அப்பாவுமே ஃபார்ம் ஹவுஸ்ல தான் தங்கிட்டிருக்கிறோம்.. அதனால பேசாம இவங்க ரெண்டு பேரையும் உங்க வீட்டுக்கு கூட்டிட்டு போயிரு.."

அவள் இப்படி சொல்லிக் கொண்டிருக்கும்போதே பின்னால் இருந்த நிலா "முடியாது.. நான் ஒரு போலீஸ்காரன் வீட்ல வந்து தங்கமாட்டேன்.. அதுக்கு என்னை இப்படியே சாக விட்டுடுங்க.. நான் செத்துப் போறேன்.." என்று அலறினாள்.

நீர் உறையும்..
 
Top Bottom