8. தாமரை இலையுள் உறையும் தண்ணீராய்..!!

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

STN - 72

Active member
Staff member
Jan 20, 2026
137
164
43
Chennai
உறை நீர்- 8

மெல்ல மெல்ல கண்விழித்தாள் நிலா.. கண்களை சிமிட்டி அரை கண்ணை திறந்தும் இமைகள் இன்னும் அழுத்த மறுபடியும் அழுத்தமாய் கண்ணை மூடி திறந்தவளுக்கு முகம் எங்கும் நீர்த்திவலைகளின் ஈரம் படிந்த உணர்வு..

அப்போதுதான் தான் மயங்கி விழுந்தது நினைவுக்கு வந்தது.. முகத்தில் தண்ணீர் தெளித்து தன்னை எழுப்பி இருக்கிறார்கள் என்று விளங்கியது.. சுற்றிமுற்றி விழி திறந்து பார்க்க ஒரு அறையின் கட்டிலில் படுத்திருந்தாள் அவள்..

அவள் அருகில் தெய்வானை அவள் தலையை வருடியபடி அமர்ந்திருந்தார்..

"ஏன்டா மா.. என்ன ஆச்சு? திடீர்னு மயக்கம் போட்டு விழுந்துட்ட.. எங்களுக்கெல்லாம் ஒன்னுமே புரியல.." என்றவர் தமிழரசியின் பக்கம் திரும்பி

"ஏன் மா அரசி.. இந்த பொண்ணுக்கு இன்னும் உடம்பு சரியாகலையா? இன்னும் கொஞ்ச நாள் ஹாஸ்பிடல்ல இருக்கணுமா?" என்றார்.

"இல்லம்மா.. அவளுக்கு ஒரு பிராப்ளமும் இல்ல.. டாக்டர் நல்லா செக் பண்ணிட்டாங்க.. நானும் செக் பண்ணிட்டேன்.. கைல ஆழமா வெட்டல.. காயம் லேசா தான் இருந்துச்சு‌‌.. மயக்கம் போட்டு விழுந்ததற்கு வேற எதுவும் காரணம் இருக்கும்மா.." என்று அவள் சொல்லிக் கொண்டிருக்க தமிழோ ஏதோ தீவிர யோசனையில் இருந்தான்..

அப்படியே அவர்கள் பேசுவதை கவனித்துக் கொண்டிருந்த நிலாவின் பார்வை தமிழின் பின்னால் நின்று கொண்டிருந்த அவனுடைய மாமன் ஜெகன்னாதன் முகத்தில் நிலைத்தது..

அவரை கண்ட நொடி மறுபடியும் அவள் முகத்தில் கலவர ரேகைகள்..

அதை கண்டுக்கொண்ட தமிழ் அவள் பார்வை சென்ற திசையை தொடர்ந்து அது தன் மாமன் மேல் நிலைத்திருப்பதைக் கண்டு அதிர்ந்து போனான்..

அந்தப் பார்வையில் அவ்வளவு வெறுப்பு.. ஆத்திரம்.. எரிச்சல்.. எல்லாம் கலந்திருந்தது.. கூடவே வேதனையும் கவலையும் குழப்பமும் அந்த விழிகளில் நிறைந்திருந்தது.. அவர் முகத்திலும் கொஞ்சம் பதட்டம் நிறைந்த குழப்ப ரேகைகள் தெரியவும் அவனுக்கோ ரயில் பெட்டியாய் நிலா சொல்லி இருந்த விஷயங்கள் மனதிற்குள் ஓடின..

அவன் மாமா ஜெகந்நாதன்.. அவரும் ஒரு ஐபிஎஸ் அதிகாரி தான்.. அவர் பணிக்காலத்தின் இறுதியில் இருப்பவர்.. இன்னும் இரண்டு மாதங்களில் பணியிலிருந்து ஓய்வு பெறுகிறார்.

காக்கி சட்டையில் தன் மாமனை பார்க்கும் போது அவன் மாமனின் கம்பீரம்.. ஆளுமை.. மிடுக்கு.. பணியில் அவருடைய நேர்மை.. திறமை.. எல்லாவற்றுக்கும் மேல் தன் பணி நிமித்தம் அவர் செய்த சாதனைகள்.. சாகசங்கள்.. அதைப்பற்றி அவர் சொல்லும் கதைகள்.. என அத்தனை குணங்களும் சிறு வயதிலிருந்தே அவனை பெரிதாய் ஈர்த்திருந்தன..

அவன் காவல்துறையை தன் பணியிடமாய் தேர்ந்தெடுத்ததற்கு அவர்தான் முக்கிய காரணமாய் இருந்தார்..

அவனை பொறுத்தவரை அவனுடைய ஹீரோ அவர்.. தன் அன்னை தந்தையிடம் அவன் வளர்ந்ததை விட மாமன் மடியில் தான் அதிகம் விளையாடி கதை கேட்டு வளர்ந்திருக்கிறான்.. எல்லாம் அதிரடி ஆக்சன் கதைகளாக தான் இருக்கும்.. இன்று அந்த மாமனுக்கு வேறு முகம் இருக்குமோ என்ற எண்ணம் அவனுக்குள் ஒரு பூகம்பத்தையே விளைவித்து கொண்டிருந்தது..

இங்கே நிலாவுக்கோ உள்ளுக்குள் புயல் அடித்துக் கொண்டிருந்தது.. 'எவ்வளவு அழகான குடும்பம்.. என்னை காப்பாத்தி அவங்க வீட்டுக்கு கூட்டிட்டு வந்து தங்க வச்சு இருக்காங்க.. இங்கேயா நான் இந்த ஆளை பாக்கணும்.. ஐயோ கடவுளே.. இந்த இடத்தை விட்டு முதல்ல நான் போகணும்..'

உண்மையை சொல்லி அந்த ஆளை உண்டு இல்லை என்று செய்து விட அவள் மனம் துடித்துக் கொண்டுதான் இருந்தது.. ஆனால் உண்மையை உடைத்துச் சொன்னால் இந்தக் குடும்பத்துக்குள் பெரிய ப்ரளயமே உண்டாகும். அதை அவள் விரும்பவில்லை.. அந்த ஆள் செய்த பாவத்துக்கு அவன் குடும்பம் ஏன் தண்டனையை அனுபவிக்க வேண்டும் என்ற எண்ணம் தான் அவளுக்கு..

தான் அனுபவித்த கொடுமைகள் தன்னுடனேயே போகட்டும்.. இங்கு இருக்கும் இந்த நல்லவர்கள் எக்காரணத்தைக் கொண்டும் அந்த வேதனையிலும் துடிப்பிலும் ஒரு சதவீதம் கூட அனுபவிக்க கூடாது என்பதில் தீர்மானமாய் இருந்தாள் அவள்.. இங்கிருந்து எப்படியாவது வெளியே போய்விட்டால் எந்த பிரச்சனையும் இருக்காது என்று முடிவு செய்து கொண்டாள்..

அவர்கள் திரும்ப ஏதாவது கேள்வி கேட்பார்களோ என்ற பயத்தில் மறுபடியும் தூங்கிப் போக விழைவது போல் கண்ணை மூடிக்கொள்ள..

"அவளுக்கு இன்னும் டயர்ட்னஸ் போகலன்னு நினைக்கிறேன்.. இப்ப தூங்கட்டும்.. மேபி ஃபட்டிக்னால கூட மயக்கம் வந்து இருக்கலாம்.. நாமெல்லாம் வெளில போலாம்.. யாராவது ஒருத்தர் மட்டும் இங்க இருந்தா போதும்.." என்று அரசி சொல்லிவிட

சூர்யா "நான் இருக்கேன் அவளோட.." என்க

தமிழை தவிர மற்ற அனைவரும் வெளியே சென்றார்கள்..

தமிழ் சூர்யாவின் அருகில் வந்து "அவ தூங்கட்டும்.. ஆனா அதுக்கு முன்னாடி நான் அவகிட்ட ரெண்டு மூணு கேள்வி கேட்கணும்.. கேட்டுட்டு போயிடுறேன்.. அப்புறம் தூங்கட்டும்.." என்று நிலாவை ஆழ்ந்து பார்த்தபடி சொன்னான்..

நிலாவுக்கு புரிந்து போனது.. அவன் தன் முகமாறுதல்களை கவனித்து விட்டான் என்று..

"சூரி.. எனக்கு ரொம்ப மயக்கமா டயர்டா இருக்கு.. என்னால இப்ப எதுவும் பதில் சொல்ல முடியாது.. எதுவா இருந்தாலும் தூங்கி எழுந்துக்கிறேனே.." என்றாள்..

தமிழுக்கோ அவளின் தடுமாற்றத்திலிருந்தே அவள் தன் மனதில் ஏதோ பெரிய உண்மையை மறைத்திருக்கிறாள் என்பது ஊர்ஜிதமானது..

அந்த உண்மை அவளுக்குள் சுழலாய் மாறி அவளை சுழட்டிக் கொண்டிருக்கிறது என்பதை தெளிவாகப் புரிந்து கொண்டவன் நிச்சயமாக உள்ளுக்குள் அந்த உண்மையை வைத்துக் கொண்டு அவளால் உறங்கவே முடியாது என்று உணர்ந்திருந்தான்..

நடிக்கிறாள்.. ஏன் நடிக்கிறாள்.. எதற்கு நடிக்கிறாள்.. என்பது இருவருக்கு தான் தெரியும்.. ஒன்று அவள்.. இன்னொன்று தன்னுடைய மாமன்.. இருவரில் யாரை கேட்டாலும் உண்மை வெளிவரப் போவதில்லை.. இங்கே தானே இருக்க போகிறாள்.. தன்னிடம் சிக்காமல் போய்விடுவாளா என்ன..? பார்த்துக் கொள்ளலாம் என்று எண்ணியவன்

"சரி.. நான் அப்புறம் கேட்டுக்குறேன்.." என்று சூர்யாவிடம் சொல்லிவிட்டு வெளியே வந்தான்..

அங்கே சுனிதா குழந்தையை தூக்கிய படி நின்று கொண்டிருந்தாள்..

கார்த்தி அக்கா அக்கா என்று சொல்லி அழுது கொண்டிருக்க அவன் அருகில் சென்ற தமிழ் "அக்காக்கு ஒன்னும் இல்லடா செல்லம்.. கொஞ்சம் தூக்கம் வந்துருச்சு. தூங்கி எழுந்ததும் ஃப்ரெஷா ஆயிடுவாங்க.. அப்புறம் உன்னோட விளையாடுவாங்க.. ஓகேவா?" என்க சட்டென அழுகையை நிறுத்திக் கொண்டான் அந்த குட்டி பையன்..

ஆனால் இன்னும் கூட அவன் முகம் உம்மென்று தான் இருந்தது.. அதை கண்ட தமிழுக்கோ மனம் ஆறவே இல்லை.. இந்த வயதில் அவனுக்குத்தான் எவ்வளவு வலிகள்..

"ம்ம்.. கார்த்தி குட்டி சிரிக்க மாட்டீங்களா? கார்த்தி குட்டி சிரிக்க என்ன பண்ணலாம்? ஹா...ன்.. பைக்ல ரைட் போயிட்டு வரலாமா?" என்று அவன் கேட்டது தான் தாமதம்.. உடனேவே அவன் முகம் பிரகாசமாக மலர இதழ் விரித்து சிரித்தபடி தமிழிடம் தாவி இருந்தான் கார்த்திக்..

அதில் தானும் மனம் திறந்து சிரித்தவன் அவனை தூக்கிக் கொண்டு தன் வண்டி அருகே சென்றான்.. அவனுடைய ட்ரையம்ஃப் டைகர் பைக் நிஜமாகவே ஒரு புலி போல கம்பீரமாய் நின்றிருந்தது அங்கே..

அதை கார்த்திக் ஆசையாய் பார்க்க வண்டியில் ஏறி அமர்ந்த தமிழ் அவனை முன்னே அமர வைக்க அதில் அமர்ந்ததுமே "நான் ஓட்டுவேன் நான் ஓட்டுவேன்" என்று உற்சாகமாய் கத்தினான் கார்த்திக்..

"ம்ம்.. ஓட்டலாம் ஓட்டலாம்.. இப்ப கார்த்தி சின்ன பையன் இல்ல..? 18 இயர்ஸ் ஆகி கார்த்தி அங்கிள் மாதிரி ஆன உடனே ஓட்டலாம்.. இப்ப அங்கிள் ஓட்டறேன்.. கார்த்தி ஜாலியா ரைட் பண்ணிட்டு வருவானாம்.. ஹேப்பியா செல்லம்..?" என்று கேட்க

"ஸூப்பர் ஹேப்பி.." என்று காற்றில் கையை ஆட்டியபடி கத்திய கார்த்தி அவனை வண்டியை கிளப்பச் சொல்லி அவன் கையை உந்த அவனும் சந்தோஷமாய் வண்டியை கிளப்பி கொண்டு போனான்.. காக்கிச்சட்டை அணிந்த தன் மாமாவோடு இப்படி அவன் சிறு வயதில் வண்டியில் அமர்ந்து உற்சாகமாய் ஊர்வலம் வந்த பொழுதுகள் அவன் நினைவில் நிழலாடின..

ஆனால் இப்போது அந்த மாமனின் சரித்திரத்தில் ஏதேனும் கரும்புள்ளி இருக்குமோ என்று தோன்றிய சிறு நினைப்பே அவனை மொத்தமாய் அடித்து சாய்த்து விட்டிருந்தது..

வெகு காலமாய் தன் மாமா தன் அத்தையோடு ஒட்டுதல் இல்லாமல் இருப்பது போல் அவனுக்கு தோன்ற எங்கே அவரின் கடந்த காலம் அவனால் ஜீரணிக்க முடியாதபடி கசப்பான இருண்ட காலமாக இருந்திருக்குமோ என்று பயந்தான் அவன்..

மறுபுறம் தன் மாமனை அப்படி ஒரு கயவனாக எண்ணிக்கூட பார்க்க முடியவில்லை அவனால்.. குழப்பமான சிந்தனைகளுடனே வண்டியை ஓட்டிக் கொண்டு இருந்தான் அவன்..

அன்று மதியம் சுனிதா தன் வீட்டிற்கு கிளம்பி விட நிலா கார்த்தி சூர்யா மூவரும் தங்குவதற்கு ஒரு அறையை அந்த வீட்டில் கொடுத்திருந்தார்கள்..

அந்த அறைக்குள் தனிமை கிடைத்ததுமே சூர்யாவிடம் நிலா "சூரி.. நம்ம யாருக்கும் தெரியாம இங்கிருந்து கிளம்பி எங்கேயாவது போயிடலாம் டி.." என்று சொல்ல சூர்யாவோ அதைக் கேட்டு அதிர்ந்து போனாள்..

"என்னடி சொல்ற? இங்க பாரு அந்த டில்லி பாபுவை மட்டும்தான் அரெஸ்ட் பண்ணி இருக்காங்க.. அவனோட நெறைய கையாளுங்க இன்னும் வெளியில தான் சுத்திக்கிட்டு இருக்காங்க.. நம்ம வெளியில போனா மறுபடியும் அந்த சாக்கடைக்குள்ளே இழுத்துட்டு போய் தள்ளிடுவாங்கடி.. அது மட்டும் இல்லாம நமக்கு அந்த ஹாஸ்டல்ல இடம் இல்லைன்னாலும் நம்ம பாதுகாப்புக்காக வேற எங்கேயும் அனுப்பாம இங்க அவங்க வீட்டிலயே நம்மள தங்க வச்சிருக்காங்க.. இப்படிப்பட்ட நல்ல மனுஷங்களை ஏமாத்திட்டு எப்படிடி வெளிய போக முடியும்..? அவங்க நம்ம வெளியில போறதுக்கு அனுமதிக்க மாட்டாங்க.. அதுவும் நம்ம சொல்லாம போனா ரொம்ப வருத்தப்படுவாங்க நிலா.."

சூர்யா சொன்னதை கேட்டவள் "இல்ல சூரி.. நம்ம இங்க இருந்தா தான் இந்த குடும்பத்தில பல பிரச்சினைங்க வரும்.. நம்ம இங்க இருந்து கிளம்பிடலாம்.. இங்கே இருக்க வேண்டாம்.. சொன்னா கேளு.."

அவள் இப்படி சொல்லிக் கொண்டிருக்கும் போதே அந்த அறைக்குள் கையைத் தட்டியபடி ஒரு பெண் நுழைந்து இருந்தாள்.

உடலை இறுக்கி பிடித்தாற் போல் கருப்பு நிற ஸ்லீவ்லீஸ் டாப் அணிந்திருந்தாள்.. அதன் கழுத்து அவளின் ஆபத்தான ஆழங்களை வெளிச்சம் போட்டு காட்டிக்கொண்டிருந்தது.. இறுக்கமான பாதி தொடையோடு நின்றுவிட்ட ஷார்ட்ஸ் என ஸ்டைல் ஐகான் போல இருந்தவளை தொடர்ந்து அவள் பின்னாலேயே இன்னொரு இளம் பெண்ணும் உள்ளே வந்திருந்தாள்..

அந்த பெண்ணோ தழைய தழைய கட்டிய புடவை.. இடை வரை வாரி பின்னலிட்ட கூந்தல்.. முகத்தில் அதிக ஒப்பனை இல்லாமல் கண்களில் மை மட்டும் பூசி நெற்றியில் வட்ட பொட்டு என முதலாமவளுக்கு முரணான நடை உடை பாவனையுடன் வந்து நின்றாள்..

"வெரி குட் டெசிஷன்.. பரவால்லையே.. உன்னை மாதிரி பணத் தேவைக்காக உடம்பை வித்து வாழற ஒரு பொண்ணு இந்த மாதிரி கௌரவமான ஒரு வீட்ல இருந்தா அந்த குடும்பத்துக்கு பிரச்சனை வரும்னு கரெக்ட்டா புரிஞ்சு வெச்சுக்கிட்டு இருக்க.. நீ சொன்னது தான் கரெக்ட்.. நீ இங்க இருந்தா ஒழுங்கா இருக்கிற எங்க பேர் எல்லாமும் கெட்டுப் போயிடும்.. அதனால சொல்லாம கொள்ளாம யாருக்கும் தெரியாம இங்க இருந்து ஓடி போயிரு.. இதுதான் உங்களுக்கும் நல்லது.. எங்களுக்கும் நல்லது.."

இப்படி அவள் பேசிக் கொண்டிருக்கும் போதே "ரியா வாயை மூடு.." என்று சொல்லியபடி அந்த அறைக்குள் நுழைந்து இருந்தான் தமிழ்..

நீர் உறையும்..
 
Last edited by a moderator:

Author: STN - 72
Article Title: 8. தாமரை இலையுள் உறையும் தண்ணீராய்..!!
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

Sudhakar

Member
Apr 20, 2026
56
46
18

என்னடா தமிழ் குடும்பத்திலேயே நிறைய குழப்பம் இருக்கும் போலவே🤔🤔
 
  • Haha
Reactions: STN - 72

STN - 72

Active member
Staff member
Jan 20, 2026
137
164
43
Chennai
என்னடா தமிழ் குடும்பத்திலேயே நிறைய குழப்பம் இருக்கும் போலவே🤔🤔
குழப்பம் நிறைந்த குடும்பம் தான்..😅 ஆனா கதை முடியும் போது குழப்பம் எல்லாம் தெளிவாகிடும்.🤩
 
Gowri Karthikeyan

Well-known member
May 5, 2026
1,289
383
83
Chennai
இதுங்க ரெண்டும் அத்தை பெத்த ரத்தினங்களா????
சூரியாக்கு தெரியும் இல்ல அந்த போலீஸ் யாருனு🤔🤔🤔...
இல்ல நிலாக்கு மட்டும் தான் தெரியுமா அந்த ஆளை????
சூர்யா தானே சொன்னா நிலா பயப்பட காரணம் அந்த ஆளும் ஒரு போலீசு அப்படின்னு
 
  • Love
Reactions: STN - 72

STN - 72

Active member
Staff member
Jan 20, 2026
137
164
43
Chennai
இதுங்க ரெண்டும் அத்தை பெத்த ரத்தினங்களா????
சூரியாக்கு தெரியும் இல்ல அந்த போலீஸ் யாருனு🤔🤔🤔...
இல்ல நிலாக்கு மட்டும் தான் தெரியுமா அந்த ஆளை????
சூர்யா தானே சொன்னா நிலா பயப்பட காரணம் அந்த ஆளும் ஒரு போலீசு அப்படின்னு
.. சூர்யாவிற்கு நிலா சொல்லி தான் அந்த போலீஸ் மேட்டர் தெரியும்.. ..
 
Gaya Naga

Well-known member
Mar 2, 2026
246
282
63
Hyderabad
அந்த போலீஸ் வேற.தமிழ் மாமா கிடையாது.May be அவள் பிறப்பு ரகசியம் சம்பந்த பட்டவரா இருக்கலாம்.(அவள் அம்மா ?? and this மாமா?)🤔🤔
 
  • Love
Reactions: STN - 72

STN - 72

Active member
Staff member
Jan 20, 2026
137
164
43
Chennai
அந்த போலீஸ் வேற.தமிழ் மாமா கிடையாது.May be அவள் பிறப்பு ரகசியம் சம்பந்த பட்டவரா இருக்கலாம்.(அவள் அம்மா ?? and this மாமா?)🤔🤔
சீக்கிரம் தெரிஞ்சுடும் சிஸ்😍🥰♥