Debate Hub - Nov & Dec

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

Goms

Well-known member
May 22, 2025
674
442
63
Chennai
அப்படி அனைத்து விதத்திலும் தேடித்தேடி திருமணம் செய்தாலும்.... விவாகரத்து என்பது அதிகமானது ஏனோ??
@Mrs. Jeevakan Rathika சொன்னது போல பல காரணங்கள் உண்டு. சரியான புரிதல் இருவருக்கும் இடையே இல்லாமல் இருந்தாலும், அவசரப்பட்டு முடிவெடுப்பதும் கூட காரணமாய் இருக்கலாம். அத்தோடு, கணவன், மனைவி பிரச்சனையை அவர்களே பேசி தீர்க்க முயலவேண்டும். இல்லாமல் மூன்றாம் மனிதரிடம் போய் நின்றால் அது மேலும் பல சிக்கலைத்தரும் என்று தெரிந்திருக்க வேண்டும். அதை பெற்றோர்தான் சொல்லிக் கொடுக்க வேண்டும்.
 

Goms

Well-known member
May 22, 2025
674
442
63
Chennai
@KAMATSHI NARENDRAN
சகோதரி நீங்க பொருளாதார ரீதியாக முன்னேறி இருக்கும் பெண்களிடம் சுதந்திரமும், தன்னம்பிக்கையும் அதிகமாக இருக்குன்னு சொல்லி இருக்கீங்க. சரிதான். அவர்கள் அந்த தன்னம்பிக்கையினாலேயே வாழ்க்கையை எதிர்கொள்ள தயங்குவதில்லை என்கிறேன். அது தந்த சுதந்திரத்தில் அவர்களால் சரியான துணையை தேர்ந்தெடுக்கவும் முடிகிறதுதானே?

அந்த சுதந்திரத்தினால், அல்லது அது தந்த ஈகோவால் அவர்கள் பிடிக்கும் வரை சேர்ந்திருப்போம், பிடிக்கவில்லை என்றால் பிரிந்து விடுவோம் என்றும், அவர்கள் சுதந்திரத்திற்குள் கணவன், குழந்தை என்று யாரையும் கொண்டு வர விரும்பவில்லை என்றும் சொல்லியிருக்கீங்க. இது இன்றைய காலக்கட்டத்தில் 100ல் ஒரு 5 சதவிகிதம் பேர் இருக்கலாம். இவர்களைக் கொண்டு நாம் அதிகம் கருத்து சொல்ல வேண்டாம் என்று நான் நினைக்கிறேன்.

ஆனால் இந்த பொருளாதார சுதந்திரம் பெண்கள் தங்கள் திருமணத்தைத் தள்ளிப்போட உதவுகிறது. அதாவது, தனக்கான தேவைகளை தானே பூர்த்தி செய்து கொள்வது, உதாரணமாக நகை, கார்; அதனால் இன்றைய கால கட்டத்தில் நிறைய திருமணம் கால தாமதமாக நடக்கிறது என்று வேண்டுமானால் சொல்லலாம்.

கல்யாணம் ஆகி குழந்தை பெத்துக்கிட்டா தங்கள் கேரியரில் ஜெயிக்க முடியாதுன்னு நினைக்கிறாங்கன்னு சொல்லியிருக்கீங்க. இதுவும் வெகு சிலருக்கு மட்டுமே இருக்கலாம். ஏனென்றால், இதையும் திருமணத்திற்கு பேசும் போதே தனக்கு வருபவரிடம் கலந்து பேசிதானே முடிவெடுக்கிறார்கள். இப்போதெல்லாம் வீட்டுக்கு ஒரு குழந்தை தான் இருக்கு, அது கூட நிறைய காரணங்களால் மருத்துவ உதவியால் மட்டுமே நிகழ்கிறது. இதையும் பெண்கள் அறிந்துதான் இருக்கிறார்கள்.

இங்கு பதிவு செய்யப்பட்டது என்னுடைய தனிப்பட்ட கருத்து மட்டுமே.
 

Mrs. Jeevakan Rathika

Active member
Aug 21, 2025
173
166
43
France
@Mrs. Jeevakan Rathika சொன்னது போல பல காரணங்கள் உண்டு. சரியான புரிதல் இருவருக்கும் இடையே இல்லாமல் இருந்தாலும், அவசரப்பட்டு முடிவெடுப்பதும் கூட காரணமாய் இருக்கலாம். அத்தோடு, கணவன், மனைவி பிரச்சனையை அவர்களே பேசி தீர்க்க முயலவேண்டும். இல்லாமல் மூன்றாம் மனிதரிடம் போய் நின்றால் அது மேலும் பல சிக்கலைத்தரும் என்று தெரிந்திருக்க வேண்டும். அதை பெற்றோர்தான் சொல்லிக் கொடுக்க வேண்டும்.
நிச்
 

Ananthi.C

Well-known member
Mar 19, 2025
821
602
93
Madurai Tamil Nadu
சில பெண்களின் பேராசை, முன்யோசனை இல்லாமல் நடத்தல், மனக் கட்டுப்பாடு இல்லாதிருத்தல், பணிவு இன்மை, மற்றவருக்காக யோசிக்காமல் நடந்துகொள்ளல் இப்படியான குணங்களால் தான் விவாகரத்து ஏற்படுகிறது எனது கருத்து.
ஆமாம்... மற்றவர்களுக்காக யோசிக்காமல் நடப்பதென்பது குடும்ப வாழ்க்கைக்கு ஒத்துவராத கொள்கை ஆச்சே.... அதனால் தான் அவர்கள் அதை சுமையாக கருதுகிறார்கள் என்கிறேன்...
 

Ananthi.C

Well-known member
Mar 19, 2025
821
602
93
Madurai Tamil Nadu
@Mrs. Jeevakan Rathika சொன்னது போல பல காரணங்கள் உண்டு. சரியான புரிதல் இருவருக்கும் இடையே இல்லாமல் இருந்தாலும், அவசரப்பட்டு முடிவெடுப்பதும் கூட காரணமாய் இருக்கலாம். அத்தோடு, கணவன், மனைவி பிரச்சனையை அவர்களே பேசி தீர்க்க முயலவேண்டும். இல்லாமல் மூன்றாம் மனிதரிடம் போய் நின்றால் அது மேலும் பல சிக்கலைத்தரும் என்று தெரிந்திருக்க வேண்டும். அதை பெற்றோர்தான் சொல்லிக் கொடுக்க வேண்டும்.
பெற்றோர் சொல்லிக்கொடுப்பதை எந்தவித ஆராய்ச்சியும் இல்லாமல் ஏற்றுக்கொண்ட தலைமுறை இப்போ இல்லை.... நாம் சொல்லித்தருவதை விட சமூகத்தில் நிகழும் நிகழ்வுகளின் தாக்கமே அதிகம்,..... அதனால் அவர்களின் கருத்துக்கு எதிரான இடங்களை ஒரு தளையாக மட்டுமே பார்க்கிறார்கள்.....
 

Goms

Well-known member
May 22, 2025
674
442
63
Chennai
எந்த இடத்திலும் எந்த சூழ்நிலையிலும் தன்னோட தனித்தன்மை அடையாளம் இரண்டையும் விட்டுக்கொடுத்திட கூடாதுங்குற பிடிவாதம் அதிகமா இருக்குன்னு தான் எனக்கு தோணுது....
இதற்கு காரணம் தன் முந்தைய தலைமுறை பெண்களின் வாழ்க்கையில் அவர்களின் உணர்வுகள் மதிக்கப்படாமல் போனதும்.... அவர்கள் விட்டுக்கொடுத்து சென்றால் மட்டுமே குடும்ப அமைப்பு குலையாமல் இருக்கும் ....அதுவே பெண்ணின் கடமை என்று சமுதாயம் அவர்களின் மேல் குத்திய முத்திரையும் தான்....
இன்று கல்வியறிவு வளர்ந்ததால் அல்ல உலகம் சுருங்கியதால்....
அதாவது அன்று பெண்கள் படித்திருந்தாலும் நல்ல பதவியில் இருந்தாலும் அவர்கள் வாழ்ந்த சமுதாயத்தின் பெரும்பான்மையான கருத்தையே ஏற்று பிடிக்கவில்லை என்றாலும் அதன்படி வாழ்ந்து முடித்தார்கள்....
ஆனால் இன்று உலகம் ஒவ்வொருவரின் கையில் அலைபேசி வழியில் உள்ளது... அதனால் வெவ்வேறு விதமான கலாச்சாரமும்... அங்கு பெண்களுக்கு கிடைக்கும் சுதந்திரம் போக்கும் .... இவர்களின் புத்தியில் பதிந்து நாமும் நமக்கான அடையாளத்துடன் வாழ்வதற்கு என்ன செய்ய வேண்டும் என்று மட்டும் சிந்திக்கின்றது....திருமண உறவில் இருவருக்கும் எல்லாவித உரிமையும் கடமையும் பொறுப்புகளும்... ஏன் விட்டுக்கொடுத்தல் கூட சம அளவில் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள்...
பொருளாதார சுதந்திரம் இருப்பதால் எதையும் சகித்துக் கொண்டு வாழ வேண்டிய அவசியம் இல்லை என்பது அவர்களின் கொள்கையாக கூட இருக்கிறது...

"எந்த இடத்திலும், எந்த சூழ்நிலையிலும் தன்னோட தனித்தன்மை, அடையாளம் இரண்டையும் விட்டுக்கொடுத்திடக் கூடாதுங்குற பிடிவாதம் அதிகமா இருக்கு"ன்னு சொல்லியிருக்கீங்க.

தனித்தன்மை, அடையாளம் என்பதெல்லாம் என்ன? எனக்குத் தெரிந்தவரை, நன்றாக பாடும் திறமை உள்ள பெண் என்றால் கச்சேரியில் அல்லது சினிமாவில் தொடர்ந்து பாடுவது, நாட்டியத்தில் சிறந்த பெண் தன் நடனத்தை தொடர்வது போன்றதாக இருந்தாலும் சரி, வேலையில் சிறந்த பதவி வகிப்பதாக இருந்தாலும் அதை தொடர வேண்டும், அல்லது அதில் மேலும் முன்னேற வேண்டுமென்று நினைத்தாலும் (இதுவெல்லாம் சில உதாரணங்கள் மட்டுமே) அதற்காக பிடிவாதம் பிடித்தால், அதை பெண்களின் முன்னேற்றமாக பார்ப்பதில் தவறில்லைதானே? அதற்குத் தகுந்த துணையை எதிர்பார்த்து, கலந்து பேசி, கல்யாணம் செய்யும் அளவு காலம் முன்னேறி விட்டது என்று தான் நினைக்கிறேன். 😀

"முந்தைய தலைமுறை பெண்களின் வாழ்க்கையில் அவர்கள் உணர்வுகள் பாதிக்கப்படாமல் போனது, அவர்கள் விட்டுக் கொடுத்து சென்றால் மட்டுமே குடும்ப அமைப்பு குலையாமல் இருக்கும், அதுவே பெண்களின் கடமை, முத்திரை" என்று சொன்ன நீங்கள், ஆரம்பத்திலேயே முந்திய தலைமுறை என்று சொல்லிவிட்டதால் இதற்கு விவாதம் தேவையில்லைதானே?😜

"இன்றைய உலகம் சுருங்கி உள்ளங்கையில் அலைபேசி வடிவில் அடங்கி விட்டது" என்றும் "அதனால் விதவிதமான கலாச்சாரமும், சுதந்திரமும் அதிகரித்து தனக்கான அடையாளத்துடன் வாழ என்ன செய்ய வேண்டும் என்று மட்டுமே சிந்திக்கிறார்கள்" என்றும் சொல்லி இருக்கீங்க. அவர்களின் அடையாளம் தன்னை மேம்படுத்தவோ, சமுதாயத்தை சீர்படுத்தவோ இருக்குமானால் அவர்கள் சிந்தனையை நாமும் வரவேற்பதில் தவறில்லையே?😀 நல்ல விதத்தில் முன்னேற விரும்புபவர்கள் கைபேசியை நல்ல விதத்தில் பயன்படுத்துவார்கள் தானே 😂 (கைபேசி பயன்பாட்டைப் பற்றி என்றால் தனியான விவாதம் தான் வைக்க வேண்டும், நிறைய பட்டி மன்றங்கள் ஏற்கனவே தொலைக்காட்சியில் வந்துவிட்டது😂)

"திருமண உறவில் எல்லா விதமான உரிமையும், கடமையும், பொறுப்புகளும், ஏன் விட்டுக்கொடுத்தலும் சம அளவு இருக்க வேண்டுமென்று இன்றைய பெண்கள் எதிர்பார்க்கிறார்கள்" என்றும் சொல்லியிருக்கீங்க. இதில் தவறு இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. ஏனென்றால், எப்போதும் ஒரு கை தட்டி ஓசை வராதல்லவா?😀 பெண் தனக்குச் சமமாக படிச்சிருக்கணும், சம்பாதிக்கணும், என்று எதிர் பார்க்கும் ஆணும் குடும்பத்து உரிமை, கடமை, பொறுப்பு, விட்டுக் கொடுத்தலில் சமமாக இருக்கட்டுமே😀 உண்மையை சொல்லுங்க, இது காலத்தைக் கடந்த நம் அனைவரின் எதிர்பார்ப்பும்தானே?😜

"பொருளாதார சுதந்திரம் இருப்பதால் எதையும் சகித்துக் கொண்டு வாழ வேண்டிய அவசியமில்லை என்பது அவர்களின் கொள்கையாக இருக்கிறது" என்று நீங்கள் சொல்லியிருப்பதில் எதையும் என்று எதைக் குறிப்பாக சொல்லவருகிறீர்கள் என்பது பொறுத்துதான் விவாதிக்க முடியும். உதாரணமாக, கணவன் அதிகமாக குடித்துவிட்டு வந்து தினமும் மனைவி, குழந்தைகளை அடிக்கிறான் என்றால், அவனை திருத்த முடியாது என்று தெரிந்துவிட்டால், அதை எந்தப் பெண்ணும் சகித்து வாழ விரும்ப மாட்டாள், பொருளாதாரம் குறைவாக இருக்கும் பெண்கள் கூட அந்த நரகத்திலிருந்து வெளிவரவே விரும்புவாள். அதை நாமும் ஆதரிப்போம் தானே?😀

பொதுவாக சகிப்புத்தன்மை, பொறுமை இரண்டும் ஆண்களை விட பெண்களுக்கு மிக, மிக அதிகம் என்பதை அனைவரும் ஒத்துக்கொள்வீர்கள் என்று நம்புகிறேன். ஒத்துக்கொள்ளாதவர்கள் கீழ் கண்ட உண்மையை உணர்ந்தால் அது புரியும்.
குழந்தையை கருவில் தாங்கி பிறக்கச் செய்யும் பாக்கியம் பெண் இனத்துக்கு கடவுள் கொடுத்த வரம் ஏனென்றால் அந்த கால கட்டத்தில் உடல் மற்றும் மன ரீதியாக எவ்வளவு மாற்றங்களை எதிர்கொள்கிறாள் பெண். இதற்கு அவளது பொறுமையும், சகிப்புத்தன்மையும் முக்கியக் காரணம் தானே? கடவுளின் படைப்பில் இது மனித இனத்திற்கு மட்டுமல்ல மற்ற உயிரினங்களுக்கும் தானே பொருந்துகிறது. அவைகளும் கஷ்டப்பட்டு குட்டியை ஈன்றெடுத்தோ அல்லது முட்டைப்போட்டு அடைகாத்தோ தனது தாய்மையை வெளிப்படுத்துகிறதே ..... எவ்வளவு ஆச்சர்யமான விஷயம் 🥰
 

Goms

Well-known member
May 22, 2025
674
442
63
Chennai
அப்படி அனைத்து விதத்திலும் தேடித்தேடி திருமணம் செய்தாலும்.... விவாகரத்து என்பது அதிகமானது ஏனோ??

ஹலோ, ஹலோ, ஆனந்தி சகோதரி, முதலில் திருமணத்திற்கான பார்வையை பற்றி மட்டும்தான் விவாதிக்கிறோம் 😜 நீங்க take diversion என்று விவாகரத்துப் போயிட்டீங்க 😜 இது செல்லாது, செல்லாது 🤣🤣🤣

நாங்க வேற வரிஞ்சு கட்டிக்கிட்டு பதில் சொல்லப் போயிட்டோம்😜😂. திருமணத்திற்கான பார்வையை மட்டும் கண்ணாடி போட்டுப் பாருங்கமா......🤣🤣🤣
 

Goms

Well-known member
May 22, 2025
674
442
63
Chennai
பெற்றோர் சொல்லிக்கொடுப்பதை எந்தவித ஆராய்ச்சியும் இல்லாமல் ஏற்றுக்கொண்ட தலைமுறை இப்போ இல்லை.... நாம் சொல்லித்தருவதை விட சமூகத்தில் நிகழும் நிகழ்வுகளின் தாக்கமே அதிகம்,..... அதனால் அவர்களின் கருத்துக்கு எதிரான இடங்களை ஒரு தளையாக மட்டுமே பார்க்கிறார்கள்.....

பெற்றோர் சொல்லிக் கொடுப்பதை ஆராய்ச்சி செய்து ஏற்பது இன்றைய தலைமுறைக்கு ஏற்றதாக இருக்கலாம். நெருப்பு சுடும் என்று சொல்லிக் கொடுப்பதில் தவறென்ன?😜 அதையும் தொட்டுப்பார்த்துதான் உணர்வேன் என்றால் என்ன செய்ய முடியும்.... இப்படிப்பட்ட ஆராய்ச்சி செய்பவர்கள் ஆராய்ச்சி முடிவும் சுடும் என்ற முடிவு தானே தரும்?😀

கருத்துக்கு எதிரான இடங்களைத் தளையாக பார்த்து தேங்கி விட மாட்டார்கள் என்கிறோம் 😜 இதற்கும் ஆராய்ச்சி செய்து தளையை களைவார்கள்மா😜 ஐ.நா. சபையில் கூட 30 சதவிகிதம் பெண்களுக்கு இடம் கொடுத்து கருத்துச் சொல்ல வாய்ப்பு கொடுத்திருக்காங்கமா. 😂
 

ரோசி கஜன்

Administrator
Staff member
Nov 11, 2018
1,727
1,147
113
ஆழமான, சிந்திக்க வைக்கும்படியான அதேநேரம் சுவாரசியமான விவாதம் தொடங்கியுள்ளதே! 👏இரசித்து வாசிக்கிறேன்.😻 கலந்துகொண்டிருக்கும் ஓவ்வொருவருக்கும் அன்பும் நன்றியும்! 🙏விவாதத்தை வளர்த்துச் செல்லும் விதம், வார்த்தையாடல்கள் மெச்சும்படியுள்ளது. 👏 தயக்கமே வேண்டாம் வந்து கதையுங்கோ மக்களே! உங்கள் ஒவ்வொருவர் பார்வையையும் அறியக் காத்திருக்கிறோம்.
 

Goms

Well-known member
May 22, 2025
674
442
63
Chennai
ஆழமான, சிந்திக்க வைக்கும்படியான அதேநேரம் சுவாரசியமான விவாதம் தொடங்கியுள்ளதே! 👏இரசித்து வாசிக்கிறேன்.😻 கலந்துகொண்டிருக்கும் ஓவ்வொருவருக்கும் அன்பும் நன்றியும்! 🙏விவாதத்தை வளர்த்துச் செல்லும் விதம், வார்த்தையாடல்கள் மெச்சும்படியுள்ளது. 👏 தயக்கமே வேண்டாம் வந்து கதையுங்கோ மக்களே! உங்கள் ஒவ்வொருவர் பார்வையையும் அறியக் காத்திருக்கிறோம்.
கதைகளை வாசிக்கும் அனைவரும் கலந்து கொண்டு தங்கள் கருத்துகளை பதிவிட்டால் நம்முடைய பார்வைகள் இன்னும் விசாலப்படலாம். 😄😄

அல்லது விவாதத்திற்கு ஆதரவாகவோ, எதிர்த்தோ கருத்துப்புள்ளி பதிந்தாலும் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும் சகோதரிகளே 😂😂😂