வரம் 12
ஜஸ்வர்யாவின் வீட்டில் உள்ள அனைவரும் சற்றே மாநிறம் தான். அதில் ஜஸ்வர்யாவும் ஒருத்தி. ஆனால் நவநீதன் நல்ல நிறம். காத்தவராயனோடு சேர்த்து அவர் சொந்தங்கள் யாருக்கும் நிறம் ஒரு குறையாகப் படாத போதும், ஜஸ்வர்யாவின் குடும்பத்திற்கு சற்றே தாழ்வு மனப்பான்மையாக இருந்தது. அதிலும் ரோஜாப் பூ நிறத்தில் அஞ்சனையின் அருகே அமர்ந்திருந்த துவாரகாயைப் பார்க்க சற்றே பொறாமையாக இருந்தது. பிடித்தமின்மை என்றும் சொல்லலாம்.
“மாப்பிள்ளை கூட வந்திருக்கிறது அவரோட அத்தை பொண்ணு தானே. அத்தனை அழகா இருக்கு. அவ இருக்கும் போது எப்படி நம்ம ஜஸ்வர்யாவை கட்டிக்கத் தயார் ஆனார்.” என்று ஒருவர் ஜஸ்வர்யாவை வைத்துக்கொண்டே கேட்க, அவளின் தாய்க்கு நியாயமான கோபம் வந்தது. ஆனால் அதை அவர் காட்டிய விதம் வேறு.
“என்ன அழகு இருந்து என்ன புண்ணியம், பிறப்பு சரியில்லையே. இப்பவரை அவளோட அப்பா யாருன்னு அவளுக்குத் தெரியாது. இதில் கொடுமை என்னென்னா அது அவங்க அம்மாவுக்கு கூடத் தெரியாதாம்.” என்று சொல்லி சிரிக்க, ஜஸ்வர்யாவை சபைக்கு அழைத்து வருவதற்காக வந்த துவாரகாவின் காதுகளில் தெள்ளத்தெளிவாக விழுந்தது இவை அனைத்தும்.
பெண் வீட்டார்கள் அனைவரும் பயம் கொள்ள, தன் காதில் விழுந்த எதையும் துவாரகா கண்டுகொண்டாள் இல்லை. சிறு வயதில் ஒருமுறை இதைப் போல் பேசியதற்காக ஒரு பெண்மணியின் மேல் கல்லைக் கொண்டு அடித்திருந்தாள். அப்போது அவளுக்கு பன்னிரண்டு வயது.
விஷயம் கேள்விப்பட்டதும் அவளைத் தன்னருகே அமர வைத்த நவநீதன், “எதுக்காக அந்த ஆன்ட்டியை அடிச்ச. அவங்க சொன்னது உண்மை தானே. உனக்கு உன்னோட அப்பா யாருன்னு தெரியாது தானே.” என்று பேசவும், கூடுதலாக அழுதாள் அவள்.
“இங்க பாரு துவாரகா, தன்னைப் போல் பிறரையும் நினைக்கணும். தன்னைப் போல் பிறருக்கும் வலிக்கும் னு நினைக்கிற ஆட்கள் எல்லாம் ரொம்பவே கம்மி. இப்ப உள்ள எல்லோருக்கும் மத்தவங்களை விட தானே எல்லா விதத்திலும் உயர்வா இருக்கணும் னு எண்ணம்.
ஒருத்தர் உயர்ந்த நிலையை அடைய இரண்டு வழி இருக்கு. ஒன்னு தான் சிரமப்பட்டு போராடி உயர்வான நிலையை அடைவது. இது ரொம்பக் கஷ்டமான வழி. இரண்டாவது ஏற்கனவே உயர்வான நிலையில் இருக்கிறவனை அதில் இருந்து தள்ளி விட்டுட்டு, அவன் இல்லாத நேரத்தில் தான் அந்த இடத்தைப் பிடிக்கிறது. இது ரொம்பவே சுலபம். அதனால் எல்லோரும் இதைச் செய்யத் தான் நினைக்கிறாங்க.”
“உனக்கு அப்பா இல்லாததால் அவங்க உன்னை விட உயர்ந்தவங்களாகிடப் போறது இல்லை. மாறா, அவங்க பேச்சில் கோபம் வந்து அவங்களை நீ அடிச்சா அப்ப அந்த இடத்தில் அவங்களை விட நீ தாழ்ந்து போயிடுற. இப்ப சொல்லு உனக்கு இப்படித்தான் தாழ்ந்து போகணுமா?” என்க, இல்லை எனத் தலையாட்டினாள் சிறுமி.
“இனி யாராவது உன்னோட அப்பா எங்க, உனக்கு அப்பா இல்லையான்னு கேட்டா என்ன சொல்லுவ?” நவநீதன் கேட்க, “ஆமா எனக்கு அப்பா கிடையாது. எனக்கு அப்பா யாருன்னு தெரியாது. நீ வேண்ணா செத்து சாமிகிட்ட போய் என் அப்பா யாருன்னு கேட்டுட்டு வரியான்னு கேட்கிறேன்.” என்க, சிரிப்போடு கடந்திருந்தான் நவநீதன்.
அன்று தொட்டு இன்று வரை இந்த விதமான கேள்வி, கிண்டல் என அனைத்திற்கும் பழகி இருந்தாள் துவாரகா. அந்த பழக்கம் கொடுத்த அமைதி இப்போது கை கொடுத்தது.
ஜஸ்வர்யா சபைக்கு வரவழைக்கப்பட காத்தவராயனுக்கு பெருமை தாங்கவில்லை. நவநீதன் ஒருமுறை பார்த்துக்கொண்டான். கண்ணப்பன், அஞ்சனைக்கு ஜஸ்வர்யாவின் தோற்றம் பிடித்தமாக இருக்க, எல்லாம் நல்ல விதமாகவே சென்றது, துவாரகாவை மாப்பிள்ளை வீட்டு சார்பில் ஐஸ்வர்யாவுக்கு பூ வைக்கச் சொல்லும் வரை.
“என்ன பேசுறீங்க, அந்தப் பொண்ணு எதுக்காக என் பொண்ணுக்கு பூ வைக்கணும்.” ஜஸ்வர்யாவின் தாய் வெடுக்கென்று கேட்க, சூழ்நிலை கனமாவதை உணர்ந்து, “என் மருமகளுக்கு நவநீதன், துவாரகா இரண்டு பேரும் ஒன்னு தான். அதனால் தான் சட்டுன்னு நினைப்பு இல்லாம சொல்லிட்டா. அஞ்சனை என்ன தான் நீ துவாரகாவை உன் பொண்ணு மாதிரி பார்த்தாலும், முறைன்னு ஒன்னு இருக்கு இல்ல. நீயே வந்து பூ வை.” என்று காத்தவராயன் சொல்ல, துவாரகாவின் கரத்தில் இருந்த பூவை அவரே வாங்கி வந்து ஐஸ்வர்யாவின் தலையில் வைத்துவிட்டார்.
நிச்சயம், திருமணம் என தனித்தனியாக வைக்கவேண்டாம். ஒன்றாகவே வைத்துக்கொள்வோம் என்று சபையில் காத்தவராயன் சொல்லிக்கொண்டிருக்க, “இந்தப் பொண்ணும், அவளோட அம்மாவும் உங்க வீட்டிலேயே தான் இருப்பாங்களா?” ஐஸ்வர்யாவின் சித்தப்பா முறை உள்ள ஒருவர் சபையில் வைத்தே பளிச்சென்று கேட்டு வைத்தார்.
அந்தக் கேள்வியில் அஞ்சனை, கண்ணப்பன் அவ்வளவு ஏன் நவநீதனுக்கு கூட கோபம் வந்தது. ஆனால் காத்தவராயன் அதையும் சிரித்தபடி சமாளித்தார்.
“என் பொண்ணும், பேத்தியும் இல்லாம என் குடும்பம் முழுமையடையாது ஐயா. அவங்க எப்பவும் எங்களோட தான் இருப்பாங்க.” சிரித்துக்கொண்டே என்றாலும் அழுத்தமாகச் சொல்லி இருந்தார்.
“மாமனார், மாமியார், மாமனாரோட அப்பான்னு உங்களுக்கு சேவை பண்றது கடமை. ஆனா மாமனாரோட தங்கச்சிக்கும் அவங்களோட பொண்ணுக்கும் சேவை செய்யணும் னு எங்க பொண்ணுக்கு என்ன தலை எழுத்து.” பெண்கள் கூட்டத்தில் இருந்து சத்தம் கேட்க, கடுப்பாக எழுந்தான் நவநீதன்.
“தம்பி” காத்தவராயன் அவனை அமர வைக்கப் பார்க்க, “ஐஸ்வர்யா நான் உங்ககிட்ட சில விஷயங்கள் பேசணும்.” என்றான்.
“பொண்ணுகிட்ட தனியா என்ன பேச வேண்டியது இருக்கு. அதெல்லாம் முடியாது.” ஐஸ்வர்யாவின் தாய் வேகமாக முன்னால் வந்தார்.
“தனியா எல்லாம் பேச வேண்டாம். எல்லோர் முன்னாடியும் வைச்சே சொல்றேன். என்னோட அத்தை மாதங்கி எனக்கு இன்னொரு அம்மா மாதிரி. அவங்களுக்கு என் அம்மாவுக்கு இணையான மரியாதை உங்ககிட்ட இருந்தும், உங்க குடும்பத்து ஆட்கள்கிட்ட இருந்தும் கிடைச்சே ஆகனும். அவங்களையோ அவங்க பொண்ணையோ குறைவா மதிப்பிடுறது, முன்ன போக விட்டு பின்ன பேசுறது, நக்கல் பண்றது மாதிரியான நினைப்பு இங்க இருக்கிற ஒருத்தர்கிட்ட இருந்தா கூட மன்னிக்கணும் இந்தக் கல்யாணம் நடக்காது.” அழுத்தம் திருத்தமாகச் சொன்னான்.
அத்தனை பேருக்கு நடுவில் அவன் குரல் ஓங்கி ஒலிக்க, ஊசி விழுந்தால் கூட கேட்கும் அளவு நிசப்தமானது அறை. ஐஸ்வர்யாவுக்கு நேருக்கு நேராகப் பேசும் அவனையும், தன்னால் திருமணப் பேச்சுவார்த்தை தடைபட்டுப் போகுமோ என்கிற பயத்தில் அஞ்சனையின் கரத்தை கெட்டியாகப் பிடித்துக்கொண்டு மருளும் விழிகளோடு நின்று கொண்டிருந்த துவாரகாவையும் அதிகம் பிடித்தது.
யார் என்ன சொல்வார்கள் என்கிற பயம் இல்லாமல் நேரே துவாரகா அருகில் வந்தவள் அவள் கரத்தைப் பிடித்து, “இவங்க டால் மாதிரி ரொம்ப அழகா இருக்காங்க. முறைக்கு இவங்க எனக்கு தங்கச்சி தானே வேணும். ஆனா பாருங்க, உங்க வீட்டுக்கு நான் வந்த பிறகு நானும் இவங்களும் டீம் சேர்ந்து உங்களை ஓட விடுவோம்.” என நவநீதனிடமே இயல்பாகச் சொன்னாள். அவள் தோரணை துவாரகாவிற்கு அதிகம் பிடித்தது. “அக்கா, மச்சான் ரொம்ப நல்லவர். உங்களை நல்லாப் பார்த்துப்பார்.” வேகமாக சர்ட்டிபிகேட் கொடுத்தாள்.
“பெரிய இடத்தில் இருந்து கேரக்டர் சர்ட்டிபிகேட் வந்திடுச்சு. அப்ப நான் கண்டிப்பா ஒத்துக்க தான் வேணும்.” ஐஸ்வர்யா சொல்லி சிரிக்க, சற்று முன் உண்டான கனம் மறந்து அங்கிருந்த பலரின் முகத்திலும் சந்தோஷம் வந்தது.
விஷேஷத்திற்கு வந்திருந்த அனைவரும் துவாரகா மீது கண் வைத்திருக்க, அதில் கேடு கெட்ட கண்ணாக மாறிப் போய் இருந்தான் மாயவன்.
வீட்டிற்கு வந்த பிறகு தாயிடம் அரை மணி நேரத்திற்கு ஐஸ்வர்யா புராணம் வாசித்துக்கொண்டிருந்தாள் துவாரகா. அதை சிரிப்புடன் கேட்டிருந்துவிட்டு, “நீ சொல்றதை வைச்சுப் பார்க்கும் போது, நல்ல பொண்ணா தான் இருக்கும் போல. நல்லபடியா எல்லாம் கூடி வந்து கல்யாணமும் நல்லபடியா நடக்கட்டும்.” உளமாறச் சொன்னார் மாதங்கி.
மாதங்கியிடம் முக்கியமான விஷயம் பேசுவதற்காக வந்திருந்த காத்தவராயன், மகளின் பெருந்தன்மையை நினைத்து மனதிற்குள் மருகினார். இந்தப் பெண்ணிற்கு எதற்காக எந்த ஒரு நல்லதும் நடக்காமல் போனது என வருந்தியவர் கடவுளையும் தன்னையும் நொந்தவண்ணம் எதுவும் பேசாமல் அங்கிருந்து நகர்ந்து சென்றார்.
திருமணம் முடிவானதைக் கொண்டாடும் விதமாக இரண்டு குடும்பங்களுக்கும் நடுவில் போக்குவரத்து நன்றாகவே இருந்தது. அப்படி வந்து போகும் போது துவாரகாவின் திருமணம் பற்றியும் அவளுக்கான ஒரு வரன் பற்றியும் காற்று வாக்கில் செய்தி வந்தது. காத்தவராயனுக்கு அந்த மாப்பிள்ளையைப் பற்றி நன்றாகத் தெரியும், பேத்திக்கு இப்படி ஒரு வாய்ப்பு என்றும் கிடைக்காது என்று அவராக நினைத்தவர் எப்படியாவது இந்த திருமணத்தை செய்துவைக்க வேண்டும் என்கிற நினைப்போடு ஒருநாள் இரவில் மகளின் அறையைத் தேடி வந்தார்.
“வாங்க தாத்தா.” என துவாரகா வரவேற்க, மாதங்கி அமைதியாய் சற்று இடைவெளி விட்டு நின்றுகொண்டிருந்தார். மகள் காண்பித்த ஒதுக்கம் நெஞ்சை சுட்டது. அவளுக்கும் கோபம் இருக்கும். அதைக் காண்பிக்கட்டும். சிறிது காலம்போனால் எல்லாம் சரியாகிவிடும் என்று மனதைத் தேற்றிக்கொண்டு, “அம்மாடி, நான் உன் அம்மாகிட்ட கொஞ்சம் பேசணும். நீ சமையல்கட்டில் உன் அத்தைக்கு கொஞ்சம் ஒத்தாசையா இரு போ.” என்று பேத்தியை வெளியே அனுப்பிவைத்துவிட்டு மகளிடம் பேச ஆரம்பித்தார்.
ஆரம்பித்த முதல் சில நிமிடங்கள் எல்லாம் மாதங்கியின் முகம் சாதாரணமாகத் தான் இருந்தது. ஆனால் அடுத்த சில நொடிகளில் வெகுண்டெழுந்திருந்தார்.
“இங்க பாருங்கப்பா, என் வாழ்க்கையை முடிவு பண்ற உரிமை உங்களுக்கு இருந்தது. உங்க பேரன் வாழ்க்கையை முடிவு பண்ணும் உரிமையை அவன் உங்களுக்கு கொடுத்திருந்தான். அந்த வகையில் அதையெல்லாம் உங்க விருப்பப்படி ஆட்டிப் படைச்சீங்க. ஆனா என்பொண்ணு விஷயம் அப்படிப்பட்டது கிடையாது.
இந்த ஊர் அவளைப் பத்தி ஆயிரம் பேசலாம். ஆனா என் பொண்ணோட தரமும், குணமும் என்னன்னு எனக்குத் தெரியும். அவளை எதுக்காக இரண்டாம் தாரமா கல்யாணம் பண்ணிக்கொடுக்கணும்.” சுருக்கென்று கேட்டார்.
“ஐஸ்வர்யா வீட்டில் நிச்சயம் பண்ண கல்யாணம் நடக்கிறதுக்குள்ள துவாரகாவுக்கு கல்யாணம் பண்ணி வைச்சா நல்லா இருக்குமேன்னு பிரியப்படுறாங்க. பொதுவா ஒரு வீட்டில் அண்ணன், தங்கச்சி இருந்தா தங்கச்சிக்கு பண்ணிட்டு தானே அண்ணனுக்குப் பண்ணுவாங்க. அந்த மாதிரி நினைச்சு தான் அவங்க சொல்றாங்க. எப்ப இருந்தாலும் நம்ம துவாரகாவுக்கு கல்யாணம் பண்ணி வைக்கத்தானே போறோம். அதை இப்பவே பண்ணி வைச்சா என்னன்னு தான் கேட்கிறேன்.” என்றார்.
“என் பொண்ணுக்கு கல்யாணம் பண்ணி வைக்காம காலத்துக்கும் உங்க கழுத்தில் பாரமா அவளை ஏத்தி வைக்கிறதில் எனக்கும் உடன்பாடு இல்ல தான். ஆனா யாரோ சிலருக்காக அவசரப்பட்டு கல்யாணம் பண்ணி வைக்க முடியாது. என் பொண்ணுக்கு இன்னும் சூது, வாது தெரியாது.
என்ன நடந்தாலும் அப்பா பார்த்துப்பார், அண்ணன் பார்த்துப்பாருன்னு நான் தான் ஏமாளியா வளர்ந்தேன்னா புத்தி கெட்டுப்போய் என் பொண்ணையும் அப்படி வளர்த்துட்டேன். அவளுக்கு வெளியுலகத்தில் பிழைக்கத் தெரியாது. அதைக் கொஞ்சம் கொஞ்சமா கத்துக்கொடுக்க நினைச்சிருக்கேன். எல்லாத்தையும் கத்துக்கிட்டு எப்ப இன்னொரு வீட்டில் போய் என் பொண்ணு சங்கடம் இல்லாம பிழைச்சுப்பான்னு நம்பிக்கை வருதோ அப்ப தான் அவளுக்கு கல்யாணம்.” உறுதியாய் சொன்னார் மாதங்கி.
“உன் பொண்ணுக்கு புத்தி எப்ப வேண்ணா வரும். ஆனா அந்த நேரம் இப்படியொரு நல்ல சம்பந்தம் அமையுமா?” காத்தவராயன் கோபமாகக் கேட்க, “நல்ல சம்பந்தமா, எது நல்ல சம்பந்தம். ஏற்கனவே கல்யாணம் ஆகி பொண்டாட்டியை சாவக்கொடுத்து இரண்டு மாசமே ஆன பச்சைப் பிள்ளையை வைச்சிருக்கிறவன் என் பொண்ணுக்கு நல்ல வரனா. அந்தப் பையன் வாழ வேண்டிய பையன் தான். வேற யாரையாவது கல்யாணம் பண்ணிக்கிட்டு நல்லபடியா வாழட்டும். அவனுக்கு என் பொண்ணு வேண்டாம்.” உறுதியாய் சொன்னார் மாதங்கி.
“பேச்செல்லாம் ரொம்ப பலமா இருக்கு மாதங்கி. உன் பொண்ணுன்னு பெருமையா பேசுற. உன் பொண்ணு அப்படி என்ன உசத்தி, அந்தப் பையன் அப்படி என்ன கீழே. உன் பொண்ணுக்கு அப்பா பெயர் தெரியாதவங்கிற பெரிய கருப்பு புள்ளி இருக்கு. அந்த வகையில் பார்த்தா அந்தப்பையனுக்கு இரண்டாவது கல்யாணம் என்பது எல்லாம் பெரிய விஷயமே இல்ல.
நல்ல குடும்பம், நல்ல பையன், செல்வாக்கும் பணபலமும் அதிகமுள்ள குடும்பம். அவங்க உன் பொண்ணை ஏத்துக்க நினைக்கிறதே பெரிய விஷயம். ரொம்ப யோசிக்காம சட்டு புட்டுன்னு சரின்னு சொல்லு. நான் போய் அந்த பையன் வீட்டில் பேசணும்.” என்றார் காத்தவராயன்.
“இவ்வளவு நேரம் முடியாதுன்னு நான் சொன்ன எதுவும் உங்க காதிலே விழலையாப்பா. உங்க பேரனைக் கல்யாணம் பண்ணிக்கிட்டு இந்த வீட்டுக்கு வரப்போற பேத்தி மேல இருக்கிற கண்மூடித்தனமான பாசத்தில் பாதியாச்சும் இத்தனை வருஷமா உங்க கண்ணு முன்னாடி வளர்ந்த என் பொண்ணு மேல இருந்திருந்தா இப்படியெல்லாம் பேசத் தோணுமா.
ஒரு பொண்ணுக்கு மாப்பிள்ளை பார்க்கிறது சின்னப்பிள்ளைங்க வியாபாரம் இல்ல. முதன்முதலில் கண்ணில்படும் ஒருத்தரையே முடிவு பண்றதுக்கு. பொண்ணோட மனசுக்குப் பிடிச்ச வரன் அமையும் வரை தொடர்ந்து வரன் பார்க்கும் பொறுமையும், சகிப்புத்தன்மையும் இருக்கிறவங்க மட்டும் தான் இதில் இறங்கணும். உங்களுக்கு அந்த பொறுமை இல்லன்னா என் பொண்ணோட பொறுப்பில் இருந்து விலகிக்கோங்க. என்னால் ஆனதை நான் பார்த்துக்கிறேன்.” மூச்சுவாங்க பேசினார் மாதங்கி.
“பெரிய வார்த்தை எல்லாம் பேசுற மாதங்கி. நான் இல்லாம, என் பையன் இல்லாம உன்பொண்ணைக் கரை சேர்த்திடுவியா நீ?” தானும் கோபம் வந்து கேட்டார் காத்தவராயன். அந்தக்கேள்வி மாதங்கியின் மனதைப் பாதித்தது.
“எனக்குன்னு யாரும் இல்ல தான். ஆனா என் பொண்ணுக்கு அவளுக்குப் பிடிச்ச நல்ல வாழ்க்கையை அமைச்சுக் கொடுக்கணும் என்கிற வைராக்கியம் எனக்குள்ள இருக்கு. அது ஒன்னுபோதும் என் பொண்ணை நானே கரையேத்திடுவேன்.” கோபமாகச் சொன்னார்.
“ஏன் மாதங்கி இப்படி ஆகிட்ட. முன்னாடியெல்லாம் அப்பா என்ன சொன்னாலும் தட்டாம கேட்பியே.” இறைஞ்சுதலாய் அவர் கேட்க, “அப்படிக் கேட்டதால் தான் பா, மனசறிஞ்சு எந்த தப்பும் செய்யாத போதும் கெட்டுப்போனவங்கிற அடையாளத்தோட வாழ்ந்துக்கிட்டு இருக்கேன். என்பொண்ணோட அப்பா, எனக்குத் தாலி கட்டி என்னோட வாழ்ந்த என்னோட புருஷன் கண்ணு முன்னாடி சுத்திக்கிட்டு இருந்தும் உங்களோட வார்த்தைக்கு மதிப்பு கொடுத்து என் பொண்ணை அப்பன் பேர் தெரியாதவ, தப்பான முறையில் பிறந்தவங்கிற பெயரோட வாழ விட்டு இருக்கேன்.” அழுகையோடு சொன்னார். பழைய விஷயங்கள் பேசப்பட்டதும் காத்தவராயனுக்கு மனதில் சுருக்கென்று குற்றவுணர்வு குத்தியது.
“என்ன மாதங்கி பெத்த தகப்பன்னு பார்க்காம, நடந்த எல்லாத்தையும் சொல்லி குத்திக்காட்டுற மாதிரி இருக்கு. என்ன ஓடுது உன் மனசில். ஒருவேளை உன் வாழ்க்கையை நான் கெடுத்த பாவத்துக்கு பழிவாங்கவும், உன் பொண்ணோட எதிர்காலத்துக்காகவும் யோசிச்சு நிச்சயம் பண்ண கல்யாணத்தை நிறுத்தி எப்படியாவது உன் பொண்ணை என் பேரனுக்கு கல்யாணம் பண்ணி வைச்சிடலாம் னு கனவு காணுதியா?” பழைய கசப்பான நினைவுகள் நினைவுகூறப்பட்டதால் உண்டான குற்றவுணர்வில் என்ன பேசுகிறோம் என்று புரியாமல், கண்டதையும் பேசி வைத்தார் காத்தவராயன்.
விரக்தியாகப் புன்னகைத்த மாதங்கி, “நீங்க சொன்ன வார்த்தைகளைக் கேட்டு என் காதும், மனசும் குளிர்ந்து போச்சு பா. நீங்க பெத்து வளர்த்து இந்நாள் வரைக்கும் நீங்க கிழிச்ச கோட்டைத் தாண்டி வராத உங்க பொண்ணு மேல நீங்க வைச்சிருக்கிற நம்பிக்கையைப் பார்க்கும் போது உடம்பெல்லாம் புல்லரிக்கிது.
என்னாலோ என் பொண்ணாலோ உங்க பேரன் வாழ்க்கையில் எந்தப் பிரச்சனையும் வராது. என் பொண்ணுக்கு சீக்கிரம் மாப்பிள்ளை பார்த்து கல்யாணம் பண்ணி வைக்க வேண்டியது என்னோட பொறுப்பு. நீங்க நிம்மதியா போங்க.” என்று கையெடுத்துக் கும்பிட, சோகமாக அந்த அறையை விட்டு வெளியே வந்தார்.
மகள் ஏதோ கோபத்தில் சொல்கிறாள் என்று காத்தவராயன் நினைத்திருக்க, அப்படியல்ல என்பதை சொல்லாமல் சொல்லும் விதமாய் மாதங்கி தானும் விலகி நின்று, மற்றவர்களையும் தங்களை நெருங்க விடாமல் தள்ளி நிறுத்தி வைத்தவர், ஊர் தரகர்கள் மூலம் மகளுக்காக வரனைத் தேடவும் ஆரம்பித்தார்.
யார் யாரையோ சரிகட்டி, தன் மேல் இருந்த சின்னச்சின்ன கறைகளைக் கூட களைந்து அக்மார்க் நல்ல வரனாக மாதங்கியின் முன்வந்து நின்றான் மாயவன்.