வரம் 14
காவலர் மூலம் விஷயம் தெரிந்துகொண்ட நவநீதனுக்கு மாயவன் மேல் கொலைவெறி வந்தது உண்மை. ஏற்கனவே அவன் செய்த தவறுகளுக்கு தண்டனை கொடுக்க முடியாத கடுப்பில் இருந்தவன் என்பதால் அவன் மூர்க்கம் கூடிக்கொண்டே போனது.
கண்ணப்பன் தான் நிலைமை புரிந்தவராக, “எங்க துவாரகா பணத்து மேல ஆசைப்படுற பொண்ணு இல்ல சார். அவளுக்கு பணம் தேவையா இருந்தா எங்க வீட்டிலேயே எடுத்திருப்பா. வீட்டில் கையிருப்பு எப்பவும் இருக்கும். அது எங்க இருக்கும் னு கூட அவளுக்கு நல்லாவே தெரியும். அப்படி இருக்க இந்தக் குற்றச்சாட்டு பொய்யானதுன்னு தான் தோணுது எனக்கு.
நேத்து தான் எங்க துவாரகாவுக்கும் அந்த மாயவனுக்கும் எந்த சம்பந்தமும் இல்லன்னு பேசி முடிச்சோம். இன்னைக்கு இப்படி ஒரு கேஸ் என் மருமகப்பொண்ணு மேல கொடுத்திருக்கான்னா அதில் உண்மைத்தன்மை எந்தளவுக்கு இருக்கும் னு நான் சொல்லித்தான் புரியணுமா உங்களுக்கு.” என்க, பல வழக்குகள் பார்த்திருந்த எஸ்ஐக்கும் கண்ணப்பனின் வார்த்தையில் இருந்த நியாயம் புரியத்தான் செய்தது. இருந்தாலும் துவாரகாவிடம் பேசாமல் அவளிடம் வாக்குமூலம் வாங்காமல் இந்த வழக்கு முடியாது என்பதால் அவள் கண்விழிப்பதற்காகக் காத்திருந்தார்.
அடுத்த அரை மணி நேரத்தில் கண்விழித்த துவாரகாவிடம், “உன்னோட புருஷன்.” என்று எஸ்ஐ ஆரம்பிக்க, “முன்னாள் புருஷன்னு சொல்லுங்க சார்.” என்று திருத்தினான் அருகே நின்றிருந்த நவநீதன்.
அவனை ஒருபார்வை, அவனைப் பார்க்க பிடிக்காமல் முகத்தை வேறு பக்கம் வைத்து படுத்திருந்த துவாரகாவை ஒருபார்வை என பார்த்த எஸ்ஐ, “உன்னோட முன்னாள் புருஷன் மாயவன் உன்மேல பத்து இலட்சம் பணத்தை திருடிட்டதா கம்ப்ளைண்ட் கொடுத்திருக்கான். இதைப் பத்தி நீ ஏதாவது சொல்லணுமா மா?” என்க, அங்கிருந்த யாரும் எதிர்பாரா வகையில், “ஆமா சார், அந்தப் பணத்தை நான் தான் திருடினேன்.” என்றாள் துவாரகா.
“துவா.” நவநீதன் ஆச்சர்யமாகப் பார்க்க, “அந்த பத்து இலட்சம் பணமும் அந்த மாயவன் ஒரு அப்பாவிப் பொண்ணை மிரட்டி அவகிட்ட இருந்து வாங்கின பணம். அவளோட சக்திக்கு மீறி கந்துவட்டிக்கு கடன் வாங்கிட்டு வந்து கொடுத்திருந்தா. கண்டிப்பா அவளால் கடனை திரும்பக் கட்ட முடியாது. எதுக்காக பயந்து மாயவனுக்கு பணம் கொடுத்தாளோ அந்த மானத்துக்கு பயந்து கடைசியில் அவ தற்கொலை தான் பண்ணிப்பான்னு எனக்குத் தோணுச்சு.
அவளைச் சாக விட எனக்கு மனசு இல்ல. எப்படியாவது பணத்தை அந்தப்பொண்ணுகிட்டையே திரும்பக் கொடுக்கணும் னு நினைச்சேன். ஆனா அந்த வீட்டை விட்டு வெளியே வர எனக்கு சந்தர்ப்பம் கிடைக்கவே இல்லை. அந்த நேரத்தில் தான் எங்க அம்மா செத்த செய்தி கிடைச்சது.
இதை விட்டா வேற சந்தர்ப்பம் கிடைக்காதுன்னு பணத்தேட அந்த வீட்டை விட்டு வெளியே வந்தவ எங்க வீட்டுக்கு வரதுக்கு முன்னாடி அந்தப்பொண்ணு வேலை செய்யுற இடத்துக்குப் போய் அவங்களைப் பார்த்து பணத்தை கொடுத்துட்டு வந்தேன்.” என்றாள்.
“மாயவன் அந்தப் பொண்ணை என்ன சொல்லி மிரட்டினான். அதோட அந்த வீட்டில் இருந்து வெளியே வரமுடியாத அளவு ஏதோ பிரச்சனைன்னு சொன்னியே அதுக்கு என்னம்மா அர்த்தம். உனக்கு அந்த வீட்டில் ஏதாவது கொடுமை நடந்ததா?” என எஸ்ஐ கேட்கும் போது என்னவோ பதில் சொல்ல வந்தாள் துவாரகா. ஆனால் தான் முந்திக்கொண்ட நவநீதன், “அதெல்லாம் தேவையில்லை சார். நீங்க வந்த கேஸ் பத்தின தகவல் உங்களுக்கு கிடைச்சது இல்ல. அதோட நிறுத்திக்கலாம்.” என்றான்.
“அப்படியெல்லாம் விட முடியாது சார். மாயவன் கம்ப்ளைண்ட் பண்ண பத்து இலட்சத்துக்கு கணக்கு காட்டியாகணும். எந்தப் பொண்ணுகிட்ட பணத்தைக் கொண்டு போய் கொடுத்தாங்களோ அந்தப் பொண்ணு அட்ரஸை சொல்லச் சொல்லுங்க. நான் அவங்ககிட்ட விசாரிச்சுக்கிறேன்.” என்க, பயந்துபோனாள் துவாரகா.
“அதெல்லாம் வேண்டாம் சார். நான் திருடினதை ஒத்துக்கிறேன். பணத்துக்கு ஈடா என் கல்யாணத்துக்கு தாத்தா, மாமா இரண்டு பேரும் போட்ட நகைகள் ஐம்பது பவுன் அந்த வீட்டில் தான் இருக்கு. அதை அவங்களையே வைச்சுக்க சொல்லுங்க.” என்றாள்.
“அம்பது பவுன் னா இன்னைக்கு நேரத்துக்கு ஐம்பது இலட்சத்துக்கும் மேலம்மா.” எஸ்ஐ பதற, “எனக்கும் தெரியும் சார். ஆனா இப்ப இருக்கிற நிலைக்கு இந்த கேஸில் இருந்து தப்பிக்க இது தான் ஒரே வழி.” என்றாள். அவள் பெயர் சொல்ல விரும்பாத அந்தப் பெண்ணைக் காப்பாற்ற நினைக்கிறாள் என்பதைப் புரிந்துகொண்ட எஸ்ஐ, கண்ணப்பனைப் பார்த்து, “எனக்கு உங்களை நல்லாவே தெரியும். உங்க அப்பா எனக்கு நிறையவே உதவி செஞ்சிருக்கார். அவருக்கான நன்றிக்கடனா இந்த உதவியை செய்யுறேன். நீங்க ஒரு பத்து இலட்ச ரூபாய் ஏற்பாடு பண்ணிட்டு என்கிட்ட சொல்லுங்க. நாம இரண்டு பேருமா மாயவன் வீட்டுக்குப் போய் பணத்தைக் கொடுத்துட்டு உங்க மருமக நகைகளை வாங்கிட்டு வந்திடலாம்.” என்றார்.
“உங்களைப் பார்த்ததும் வாங்க, உங்களுக்காக தான் காத்திருந்தேன். எடுத்துட்டு போங்கன்னு நகைகளை தூக்கிக்கொடுப்பாங்களாக்கும். செத்தவன் நெத்தியில் இருக்கும் ஒத்த ரூபா காசைக் கூட திருடும் கூட்டம் அதுங்க.” கடும் கோபத்தில் சொன்னான் நவநீதன்.
“எல்லாத்துக்கும் ஒரு வழி இருக்கு தம்பி. எடுத்தோம் கவிழ்த்தோம் னு செய்யாம, முறைப்படி செஞ்சா யாரையும் ஜெயிக்கலாம். கண்ணப்பன் சார் நீங்க உங்களுக்குத் தெரிஞ்ச பெரியவங்க சிலரையும் கூட்டிக்கிட்டு வாங்க. நாம எல்லாத்தையும் சரி பண்ணிடலாம்.” என்றுவிட்டு கிளம்பினார் எஸ்ஐ.
அவரோடு சேர்த்து தந்தையும் வெளியே சென்றுவிட்டதை உறுதி செய்துகொண்டு, “எனக்கான தண்டனையா உன்னோட சாவை நிர்ணயிச்சியா துவாரகா. அப்படி ஒரு நினைப்பு இருந்தா அதை இந்த நிமிஷமே அழிச்சிடு. இன்னொரு தடவை இந்த மாதிரி ஏதாவது முட்டாள்தனம் பண்ண, எந்த யோசனையும் இல்லாம நானும் உன் பின்னாடி வந்திடுவேன்.” என்றவனை அதிர்வாய் பார்த்தாள் துவாரகா.
“சும்மா மிரட்டுறேன், எதுவும் பண்ணிக்கமாட்டேன்னு நினைக்காத. இனி பூமியில் இந்த நவநீதனோட ஆயுட்காலத்தை நிர்ணயிக்கப் போறது உன்னோட ஆயுள் தான்.
என்னோட ஆயுள் மட்டும் இல்ல, நிம்மதி, சந்தோஷம், வாழ்க்கை எல்லாமே உன்கையில் தான் இருக்கு. உன் கையில் மட்டும் தான் இருக்கு.” என்றுவிட்டு அந்த அறையில் ஒரு ஓரமாக அமர்ந்துகொண்டான்.
“எதுக்கு இதெல்லாம்?” துவாரகா கேட்க, “உலகத்தில் நடக்கிற எல்லாத்துக்கும் ஏதாச்சும் காரணம் இருந்தே ஆகனும் னு கட்டாயமா என்ன?” என்றவன் செல்போனில் கவனமாக, அவனையே பார்த்துக்கொண்டிருந்த துவாரகாவுக்கு கடந்த காலநினைவுகள்.
இப்போது போன்று இதற்கு முன்னரும் ஒருமுறை அவள் தற்கொலை முயற்சி செய்திருக்கிறாள். ஆனால் அவள் அறைக்குள் வைக்கப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமரா உதவியோடு அதைக் கவனித்த மாயவன் அடுத்து எப்போதும் அவள் அந்த மாதிரி கிறுக்குத்தனம் செய்துவிடக் கூடாது என்பதற்காக செய்த அட்டூளியங்களை நினைக்க நினைக்க நிஜத்தில் அவள் உடல் தன்னால் நடுங்கியது.
அதைக் கவனித்த நவநீதன், தன் இரண்டு கரங்களாலும் அவள் கால்களை இறுக்கமாகப் பிடித்துக்கொள்ள, அவன் தொடுஉணர்விலும் அவன் கையில் இருந்து இறங்கிய உடல்வெப்பத்திலும் அவள் சிந்தனை சிதறியது. பலனாக நடுக்கமும் நின்றது. அதை அவள் உணரவில்லை. ஆனால் அவன் உணர்ந்தான்.
“இதுக்காகவே சீக்கிரம் உன்னைக் கல்யாணம் பண்ணிக்கனும் போல.” நவநீதன் இலகுவாகச் சொல்ல, “கல்யாணமா?” அதிர்வாய் கேட்டாள் துவாரகா.
“ஒரே விஷயத்துக்கு எத்தனை முறை ஷாக் ஆவ. நான் தான் நேத்தே தெளிவா சொன்னேனே. நம்ம கல்யாணம் நடக்கப் போறதும் உறுதி. ஆண் ஒன்னு, பெண் ஒன்னுன்னு இரண்டு குழந்தைங்க பிறக்கப்போறதும் உறுதி. தேதி மட்டும் உன் விருப்பம்.” என்றான். அடுத்து அவனிடம் எதையும் பேசப்பிடிக்காமல் திரும்பி படுத்துக்கொண்டாள் துவாரகா.
அன்றைய இரவு அங்கேயே தங்கி இருக்க, இரவு உணவு முடிந்த பின்னர் பாதுகாப்பு நடவடிக்கையாக அறையின் கதவைப் பூட்டிக்கொண்டு அவள் திறந்துவிடாத வண்ணம் அருகிலேயே நாற்காலியைப் போட்டுக்கொண்டு அமர்ந்திருந்தவனைப் பார்க்க துவாரகாவுக்கு கொஞ்சமே கொஞ்சம் சிரிப்பு வரும் போல் இருந்தது.
நவநீதன் நன்றாக உறங்கிவிட துவாரகாவுக்கு உறக்கம் வரவில்லை. இன்று இல்லை அவள் நன்றாக உறங்கி பல காலங்கள் ஆகி இருந்தது. முந்தைய நாள் அவள் நன்றாக உறங்கியது கூட எடுத்துக்கொண்ட மாத்திரைகளின் பலனாகத் தான். ஜன்னல் அருகே வந்து நின்று இருள் சூழ்ந்த வானத்தை வெறித்துப்பார்த்தவளுக்கு அவளின் இருளான கடந்தகாலம் கண் முன் வந்தது.
“யாரையும் எதிர்த்து பேசக்கூடாது, புருஷன் சொல்பேச்சு கேட்டு நடந்துக்கணும், என்ன நடந்தாலும் கோபப்படக்கூடாது.” என்று பலர் சொன்ன ஒரே விதமான அறிவுரைகளோடு தான் அவள் மாயவன் வீட்டிற்கு வாழ வந்தது.
அவளை விட்டுவிட்டு அவளின் சொந்தங்கள் கிளம்பிய சிறிது நேரத்திலேயே அவள் நகைகள் அனைத்தும் அவளுக்குப் பாரமாக இருக்கும் என்று காரணம் சொல்லி அனைத்தையும் வாங்கிக்கொண்டு தான் மட்டுமே திறக்கக்கூடிய லாக்கரில் வைத்தான் மாயவன். துவாரகா எதுவும் பேசவில்லை.
மஞ்சள் தாலியின் ஈரம் கூட காயாத புது மருமகள் என்றும் பாராமல் திருமணத்திற்கு வருகை புரிந்த சொந்தங்களால் கலைந்து கிடந்த வீட்டை சுத்தம் செய்ய வைத்தாள் சுரேகா. பத்மன் எத்தனை சொல்லியும் கேளாமல் மாலை நான்கு மணிக்கே அவளை அறைக்குள் அழைத்துச் சென்றான் மாயவன்.
அடுத்த நாள் காலையில் வாடிய மலராக, எழுந்து நடந்து சென்று தனக்காக ஒரு கோப்பை தேநீர் கூட தயார் செய்து குடிக்க முடியாமல் இருந்தவளின் அறைக்குள் கொஞ்சம் கூட நாகரிகம் பார்க்காமல் கதவை பெயருக்கு கூட தட்டாமல் திறந்து கொண்டு வந்த சுரேகா, துவாரகாவின் இயலாமையுடன் கூடிய தோற்றத்தைப் பார்த்து நக்கலாக சிரித்துவிட்டு, காலை நேர வேலைகள் அடுக்கிக்கொண்டே போக, “நாளையில் இருந்து செய்யவா?” தடுமாற்றத்தோடு கேட்டாள் துவாரகா.
“அப்ப இன்னைக்கு நாள் முழுக்க எல்லாரும் பட்டினி கிடக்கிறதா? எல்லாப் பொண்ணுங்களும் கடந்து வரும் சூழ்நிலை தானே இதெல்லாம். சும்மா சும்மா காரணம் சொல்லிக்கிட்டு இருக்காம போய் வேலையைப் பார்.” என்றுவிட்டு ஹாலில் அமர்ந்து டீவி பார்க்கத் துவங்கினாள் அந்த சூர்ப்பனகை.
அன்று தொட்டு துவாரகா அந்த வீட்டின் சம்பளம் இல்லாத வேலைக்காரியாகிப்போனாள். வேலை செய்யும் பழக்கத்தில் நைட்டியுடனோ, கொண்டையிட்ட தலைமுடியுடனோ அவள் இருந்தால் கொஞ்சம் கூட கருணை இல்லாமல் பளார் என்று அறைந்துவிடுவான் மாயவன்.
அவனுக்கு பெண்கள் காலையில் எழுந்து குளித்து தயாராகி தலை நிறை பூ வைத்த பின்னால் தான் சமையலறைக்குள்ளே செல்ல வேண்டும். பெண்களின் உடல் ஆண்கள் ரசிப்பதற்காக, பெண்கள் உடலின் எனர்ஜி தங்களுக்கு வேலை செய்வதற்காக என்று நினைக்கும் கற்கால கூட்டத்தைச் சேர்ந்தவன் அவன். பத்மனும் அப்படித்தான் என்பதை தன்னைப் போலவே அலங்கார பொம்மையாக சுற்றி வரும் சுரேகாவைப் பார்த்து நினைத்துக்கொள்வாள் துவாரகா.
“எல்லா வீடும் நம்ம வீடு மாதிரி இருக்காது. எல்லா மனுஷங்களும் நம்ம வீட்டு மனுஷங்க மாதிரி இருக்க மாட்டாங்க. ஒவ்வொருத்தர் ஒவ்வொரு மாதிரி. இதை மனசில் வைச்சுக்கிட்டாலே உனக்கு பல விஷயம் புரியும்.” என்ற தாயின் புத்திமதியை வைத்து, “ஓரகத்தி மேல் வளைந்து வேலை செய்யப் பிடிக்காதவள், கணவன் முரடன் அவனுக்குப் பிடித்தமாதிரி நடந்துகொள்ளும் வரை தனக்குப் பிரச்சனை இல்லை.” என்று நம்பிக்கொண்டிருந்தாள்.
சில நாட்களாக கணவனும் அவன் அண்ணனும் சின்னக்குரலில் தன்னைப் பற்றி ஏதோ பேசிக்கொண்டிருக்கிறார்கள் என்பதை கவனித்தாள் துவாரகா. என்னவாக இருந்தாலும் என்னிடம் நேரடியாக பேசலாமே என நினைத்தவள், மாயவன் அதைப்பற்றி நேரடியாக அவளிடம் பேசிய அன்று உயிரோடு மரித்துப்போனாள்.