வரம் 15
திருமணம் முடிந்து ஏழெட்டு மாதங்கள் கடந்திருந்தது. காலை எழுந்தால் உடல்வலியால் இரவு எப்போது வரும் என்று காத்திருப்பாள். இரவு வந்தால் மனவலியோடு காலை எப்போது வரும் என்று காத்திருப்பாள். அப்படியான நிலையை தான் மாயவனோடான திருமண வாழ்க்கை அவளுக்கு கொடுத்தது. கஷ்டமாக இருந்தாலும், ஆறுதல் சொல்ல அருகே ஆள் இல்லாமல் போனாலும் ஒவ்வொரு நாளையும் சிரமத்தோடு கடந்து போய்க்கொண்டு இருந்தாள்.
குழந்தை வந்துவிட்டால் கொஞ்சம் நிலைமை மாறலாம் என வழக்கமான தமிழ்ப்பெண்ணாக அவளுக்கு அவளே சமாதானம் சொல்லிக்கொண்டாள். குழந்தை என்ன கடவுளே வந்தாலும் அந்த வீட்டில் அவள் நிலைமை மாறாது என்பதை அவள் அறிந்திருக்கவில்லை.
அன்று இரவு அதிசயித்திலும் அதிசயமாக இரவு உணவை ஹோட்டலில் இருந்து வாங்கி வந்திருந்தான் பத்மன். அதனால் இரவு வேலைகள் விரைவில் முடிந்துவிட சீக்கிரமாகவே அறைக்கு வந்தாள் துவாரகா.
கடந்து போன மாதங்களில் கணவனுடான நெருக்கம் என்றாலே ஒவ்வாமையாகிப் போனது துவாரகாவிற்கு. அந்த வகையில் கண்டதைப் படித்துவிட்டும், பார்த்துவிட்டும் வந்து அவளைப் போட்டு படுத்தி எடுப்பான். வன்முறை அதிகமாக தலைகாட்டும். கணவனின் முரட்டுத்தனம் பிடிக்கவில்லை என்றாலும் எத்தனை சொல்லியும் அவன் கேட்கவில்லை என்பதால் துவாரகா தான் அதற்கு பழகிக்கொள்ள வேண்டியதாக இருந்தது. இப்போதெல்லாம் நாள் முழுக்க வேலையே செய்துகொண்டிருந்தாலும் பரவாயில்லை கணவன் தன் அருகே வராமல் இருந்தால் போதும் என்று நினைக்கும் அளவிற்கு வந்திருந்தாள்.
அறைக்குள் வந்த மனைவியின் கரத்தைப் பிடித்து இழுத்து, தன் மடியில் அமர்த்திக்கொண்டான் மாயவன். அவனுக்கு எப்போதும் அவளை உரசிக்கொண்டே இருக்க வேண்டும். அறைக்குள் மட்டும் அல்ல, வெளியே சென்றாலும் யார் பார்க்கிறார்கள் என்கிற எந்தக் கவலையும் இல்லாமல் ஒட்டி உரசுவான், சில நேரம் எல்லை மீறவும் செய்வான். முதலில் துவாரகா எதிர்ப்பு காட்டி அடிவாங்கிக்கொண்டாள். பின்வந்த நாட்களில் அழ ஆரம்பித்து விட, தன் செய்கைகளை குறைத்துக்கொண்டான். ஆனாலும் முற்றிலுமாக நிறுத்தவில்லை. தன் வார்த்தைகளுக்கு இல்லாமல் போனாலும் தன் கண்ணீருக்காவது கணவனிடம் மதிப்பு இருக்கிறதே என்று மனதைத் தேற்றிக்கொண்டாள் துவாரகா.
அவளைத் தன் மேல் அமர்த்திக்கொண்டு சின்னச்சின்ன எல்லை மீறலுடன், “நான் உன்கிட்ட கொஞ்சம் பேசணும் துவாரகா.” என்க, “சொல்லுங்க.” என்றவளின் கண்கள் கடிகாரத்தை தான் பார்த்தது. விடியல் எப்போது வரும், தனக்கு விடுதலை எப்போது கிடைக்கும் என்னும் நோக்கம் இருந்தது அவள் பார்வையில்.
“இந்தப் புத்தகத்தைப் பார்த்து இருக்கியா?” என்றபடி வயதுவந்தோருக்கான புத்தகத்தை எடுத்துக்காட்ட, அதன் அட்டைப்படமே முகம் சுழிக்கும் படி இருந்தது துவாரகாவுக்கு.
கூண்டுக்கிளி அவளுக்கு அவள் தாயும், அத்தையும் சொன்ன விஷயங்கள் தான் தெரியும். மற்ற யாவும் அவள் கணவன் கற்றுக்கொடுத்தது தான். அதுவே அவளுக்கு அதிகப்படி என்னும் போது இதை வேறு வாங்கி வந்திருக்கிறானே என்று பயந்தாள். இந்தப் புத்தகத்தைப் பற்றி ஒரு பேய் படத்தில் பார்த்த நினைவு வந்தது அவளுக்கு.
கணவன், மனைவி இருவருக்கும் குறையாத ஆசை இருக்கும் போது எதுவும் தவறில்லை தான். ஆனால் ஒருவர் அலைகடல் போன்ற ஆசையுடனும், இன்னொருவர் குளத்து நீர் அளவிலான நினைப்பிலும் இருந்தால் யாரோ ஒருவருக்கு நிராசை கிடைப்பது உறுதி.
“இதைத் திறந்து பார். நான் குளிச்சுட்டு வரேன்.” என்றுவிட்டு அவன் கடந்து போக அவள் அமைதியாக இருந்தாள்.
“நான் கேள்வி கேட்டு பதில் வரலன்னா கடுப்பாகிடுவேன் துவாரகா. அப்புறம் என்ன மாதிரி நடந்துப்பேன்னு உனக்கே தெரியும்.” என்க, பயந்து போய் புத்தகத்தை கையில் எடுத்தாள். அதற்கே அவள் உடல் எங்கும் கூசிப்போனது.
கணவன், மனைவி உறவிற்குள் ஒளிவு மறைவிற்கும் அசிங்கத்திற்கும் இடம் இல்லை. எல்லாவற்றையும் தெரிந்து கொள்ள வேண்டும் என்று நினைப்பத்தில் எந்த தவறும் கிடையாது. அதற்காகத் தான் அந்தக் காலத்தில் கோவில் சிற்பங்களில் சிலை வடித்து வைத்தார்கள் என்கிற அத்தையின் வார்த்தைகளை மனதிற்குள் கொண்டு வந்து பெரும் சிரமப்பட்டு புத்தகத்தை திறந்தாள். அதன்பிறகே அது அவள் எதிர்பார்த்த புத்தகம் இல்லை வேறு என்று புரிந்தது அவளுக்கு.
வயது வித்தியாசம் இல்லாமல், உறவுமுறை கண்ணியம் இல்லாமல், மூன்று, நான்கு எண்ணிக்கையில் என அலங்கோலமாக இருந்த படங்கள் அவளுக்கு வாந்தி வர வைக்கும் போல் இருந்தது. தன் கையில் இருந்த புத்தகத்தை அந்த அறையின் மூலையில் அவள் தூக்கிப் போடுவதற்கும் மாயவன் வருவதற்கும் சரியாக இருந்தது.
“என்ன துவாரகா படம் எல்லாத்தையும் பார்த்து முடிச்சுட்ட போல இருக்கு. எப்படியோ என்னோட பாதி வேலையை குறைச்சுட்ட. இப்ப உனக்கே புரிஞ்சிருக்கும். இனி நாம என்ன செஞ்சாலும் அது இந்த உலகத்தில் எங்கேயும் நடக்காதது இல்லன்னு.” என்று நிறுத்தினான்.
“உண்மையைச் சொல்லுங்க. உங்களுக்கு ஏற்கனவே வேற பொண்ணுங்களோட தொடர்பு இருந்ததா? கல்யாணம் ஆன அன்னைக்கு உங்களுக்கு என்னை தெரிஞ்சுக்கிறதில் தான் ஆர்வம் இருந்தது. சின்ன தடுமாற்றம் கூட உங்ககிட்ட இல்ல. அப்ப அதைப் பத்தி நான் பெருசா எடுத்துக்கல. ஆனா உங்களோட பேரார்வம், இந்த மாதிரியான மோசமான புத்தகங்கள் எல்லாம் பார்க்கும் போது எனக்கு பயமா இருக்கு.” என்றாள்.
“எதுக்கு துவாரகா பயம். நான் இதுக்கு அடிமை ஆகிட்டா என்ன பண்றதுன்னா? அந்தக் கவலையே உனக்கு வேண்டாம். நான் மட்டும் இல்ல என் அண்ணனும் எப்பவோ இதுக்கு அடிமை தான். ஆனா பார்த்தா தெரியுதா, இல்ல தானே. கல்யாணம் ஆகி இத்தனை மாசம் ஆகிடுச்சு. உனக்கு என்னால் எந்தப் பிரச்சனையும் இல்ல தானே.” மனசாட்சியே இன்றிக் கேட்டான்.
“இதெல்லாம் வேண்டாம், தப்புத் தப்பா இருக்கு.” அழுகையோடு குரல் கரகரக்க சொன்னாள் பெண். பின்னால் இருந்து அவளைப் பிடித்தபடி, “என்ன தப்பு. இந்த உலகத்திலேயே ஒரே ஒருத்தர் மட்டும் பண்ணா தான் எதுவும் தப்பு. நிறைய பேர் பண்ணா அது சமுதாய மாற்றம். இன்னைக்கு இதே மாதிரி நீ, நான், அண்ணன், அண்ணி நாலு பேரும்.” என்று சொல்லி முடிப்பதற்கு முன்னால் ச்சீ என்று இகழ்ந்த துவாரகா அவன் பிடியில் இருந்து விலகிவந்து அவனைப் பளார் என்று அறைந்திருந்தாள்.
அடிபட்ட இடத்தை கைகளால் தேய்த்துவிட்டவன், அவளையே பார்த்தபடி நிற்க, “விளையாட்டுக்கு கூட இப்படியெல்லாம் சொல்லாதீங்க. எனக்கு மனசு தாங்காது.” என்றாள்.
“விளையாட்டுன்னு யாரு சொன்னது?” என்றபடி கதவைத் திறந்துகொண்டு பத்மன், சுரேகா வந்தனர். அவர்கள் இருவரும அணிந்திருந்த உடையைக் கண்டதும் அருவருப்பின் உச்சத்தில் நிஜமாகவே வாந்தி வந்துவிட்டது துவாரகாவிற்கு.
“என்னடா இது?” பத்மன் தம்பியை எரிச்சலாகப் பார்க்க, “உனக்கு என்ன உன்னை என்னை மாதிரியே அண்ணி அமைஞ்சுட்டாங்க. எனக்கு அப்படியா? கடமை, கண்ணியம், கட்டுப்பாடு, ஒழுக்கம், நேர்மைன்னு பேசுற பொண்ணு இல்ல பொண்டாட்டியா வாய்ச்சிருக்கா. அவளைத் தேத்தி கொண்டு வர நாள் எடுக்கும் தான்.” என்றான்.
“இன்னும் எத்தனை நாள் தான் அமைதியா இருக்கிறது. இப்ப சொல்றது தான், உன் பொண்டாட்டியை சரிபண்ணிட்டு என் பொண்டாட்டிகிட்ட வா.” என்றுவிட்டு பத்மன் சென்றுவிட அவன் சொல்லிச்சென்ற வார்த்தையில் தலையிலே இடி விழுந்தது போல் அமர்ந்தாள் துவாரகா. மாயவன் வந்து அவளைத் தொட, உள்ளிருந்து வெளிவந்த கோபத்தின் பலனாய் அவன் முகத்திலே காறி உமிழ்ந்தாள். பொங்கிய கோபத்தில் அவன் ஓங்கி அறைய சுவற்றில் மோதி மயங்கி விழுந்தாள் துவாரகா. அன்றைய நாள் அப்படியே முடிந்தது.
அடுத்த நாளில் இருந்து ஏனடா உயிர்வாழ்கிறோம் என்னும் நினைப்பில் தான் சென்றது அவளின் வாழ்க்கை. எப்போது பார் அதைப் பற்றியே பேசி சாவடித்தான் மாயவன்.
“இந்த வீட்டில் நடக்கும் எந்த விஷயமும் நம்மைத் தாண்டி வெளியே போகாது. அதனால் வெளியே தெரிஞ்சா என்னாகுமோன்னு பயப்படாத. வாழுறது ஒரு வாழ்க்கை. அதில் எவ்வளவு முடியுமோ அந்தளவுக்கு எல்லா வித சந்தோஷங்களையும் அனுபவிச்சு வாழனும்.
இதை ஏன் தப்பா பார்க்கிற. உன் கண்ணுக்கு பின்னால் எத்தனை வீடுகளில் இது நடக்கிதுன்னு உனக்குத் தெரியுமா? நமக்கு சந்தோஷம் கொடுக்கிதுன்னா எதுவும் தப்பில்லை.” என்று சொந்த மனைவியின் மூளையைச் சலவை செய்வதை வேலையாய் வைத்திருந்தான் மாயவன்.
அவனுக்கு அத்தனை அழகான மனைவியை பங்குபோட விருப்பம் இல்லை தான். ஆனால் அவன் ஒரு வாத்து. அவனுக்கு தனியாக எந்த திறமையும் கிடையாது. அண்ணனோடு இருந்து அவன் சொல்வதை செய்து அவன் மூலம் கிடைக்கும் பணத்தில் வாழ்வது தான் அவனால் முடியும். கடைசி வரை அண்ணனின் தயவு வேண்டும் என்பதற்காக இந்தளவு இறங்கி வந்திருந்தான்.
தன் பேச்சிற்கு மனைவி மறுக்கும் ஒவ்வொரு நாளும் பயங்கர தண்டனைகள் கொடுத்தான். உடம்பில் காயங்கள் இல்லாத இடம் மிகக்குறைவாகவே இருந்தது. அடுப்புக்கு தப்பி வானலியில் விழ வைப்பதற்காக தான் இத்தனையும் செய்கிறான் என்று புரியாமல் இல்லை. அவன் உண்மை முகம் தெரிந்த சில நாட்களில் அவனோடு இணைவதற்கு பயங்கர எதிர்ப்பு காட்டினாள் துவாரகா. ஆனால் அவன் உடல் வலிமைக்கு முன்னால் அவளால் சின்ன துரும்பையும் அசைக்க முடியவில்லை.
விருந்து உபச்சாரங்கள் எல்லாம் முடிந்து இருந்ததால் நேரில் வந்து போகும் உறவினர்களின் எண்ணிக்கையும் வெகுவாகக் குறைந்திருந்தது. துவாரகாவின் செல்போனையும் உடைத்து வைத்துவிட்டு, அவளைத் தேடி போன் செய்யும் ஒரே நபரான மாதங்கியிடம் தன் முன்னால் வைத்தே அவளைப் பேசவிடுவான்.
யாரிடம் சென்று என்னவென்று சொல்லி இவனைத் திருத்துவது என்று நாளும் பொழுதும் வருத்தத்தில் ஆழ்ந்தாள் துவாரகா. கணவன் என்கிற ஒருவன் இல்லாமல் தன் தாய் வாழ்நாள் முழுக்க பட்ட பாடு அவளை மாயவனை விட்டு நீங்க நினைக்கவிடவில்லை.
தகப்பன் இல்லாமல் வளர்ந்தவன் அதனால் இப்படி இருக்கிறான் என்று நினைத்து சமாதானம் செய்துகொள்ளப் பார்க்கும் ஒவ்வொரு முறையும் அம்மாவுக்கு இணையான அண்ணியுடன் அவன் வைத்திருக்கும் தகாத உறவு முள்ளாய் நெஞ்சைக் குத்தியது.
கணவன் இல்லாமல் சமுதாயத்தின் கேலிப் பார்வையில் வாழ்வதற்கும் விருப்பம் இல்லை, கேடுகெட்டவனோடு வாழவும் பிடிக்கவில்லை என நிலையான முடிவு எடுக்க முடியாமல் தடுமாறிக்கொண்டிருந்தவள் நிலையான முடிவுக்கு வரும் நாளும் வந்தது.
“இன்னும் எத்தனை நாளுக்கு நான் காத்திருக்கணும் சொல்லு. என்னால் முடியாது. பேசாம இந்த மாத்திரையை அவ குடிக்கிற தண்ணீயில் கலந்துவிடு.” என்று போதை மாத்திரை ஒன்றை பத்மன் தம்பியிடம் நீட்ட, அதைப் பார்த்த நொடி அந்த வீட்டில் ஒரு நொடி கூட இருக்க முடியாது என்று இருள் என்று கூடப் பார்க்காமல் கதவைத் திறந்துகொண்டு ஓடப்பார்த்தாள் துவாரகா. அவளை விட வேகமாக வந்து அவள் வாயைப் பொத்தி வீட்டின் உள்ளே தூக்கிச்சென்றான் மாயவன். அன்றைய இரவு கனவில் கூட நினைத்துப் பார்த்திடாத சித்தரவதையை உணர்ந்தாள் பெண்.
காலையில் கண்விழித்தவள் இதற்கு மேலும் உயிரோடு இருக்கக் கூடாது என்னும் நினைப்பில் தங்கள் அறைக்குள் வந்து கத்தியால் கையை வெட்டிக்கொள்ளப் பார்க்க, மாற்றுசாவி கொண்டு அறையின் கதவைத் திறந்து வந்த பத்மன் அவள் கரத்தில் இருந்த கத்தியைப் பிடுங்கிக்கொண்டு, “போன மானத்துக்காக உயிரை விடத் துணிஞ்ச நீ, போகப்போற மானத்துக்காக உயிரைக் காப்பாத்தி வைப்பேன்னு நினைக்கிறேன்.” என்றபடி முந்தைய நாள் இரவு நால்வருமாக இருந்த வீடியோ, தனியாக துவாரகா குளிக்கும் போது, புடவை மாற்றும் போது, மாயவோடு மனைவியாக வாழ்ந்த போது எடுத்த பல வீடியோக்களை காண்பித்தான்.
முன்னெப்போதும் இல்லாத அளவு பதறிப்போன துவாரகா அதிர்ந்து போய் மெத்தையில் அமர, “முதலில் ஒரு மாதிரி தான் இருக்கும். போகப் போக சரியாகிடும். என் பொண்டாட்டியும் பொண்ணு தானே. அவளை மாதிரி வாழ்க்கையை வாழப்பாரு. இல்ல செத்து தான் போவேன், இல்ல எங்களை அம்பலப்படுத்துவேன்னு சொன்னா, இன்னைக்கு என் செல்போனில் மட்டும் இருக்கும் இந்த வீடியோ ஊரில் உள்ள ஒவ்வொரு வாலிபப்பசங்க செல்போனிலும் இருக்கும். அப்புறம் உன் இஷ்டம்.” என்றுவிட்டு அவன் சென்றுவிட, சூன்யமாகிப் போன வாழ்க்கையில் அடுத்து என்ன செய்வது என்று புரியாமல் இருந்தவளை நோக்கி கோபமாக வந்தான் மாயவன்.
“என்ன தைரியம் இருந்தா சாகப்பார்ப்ப. உன்னோட உடம்பு எனக்கு சொந்தமானது. என்ன தைரியத்தில் அதை அழிச்சுக்கப் பார்க்க” என பெல்ட்டால் உள்காயமாக படும் அளவு படுத்தி எடுத்துவிட்டான்.
எப்படி இந்த நரகத்தில் இருந்து தப்பிக்க என பயந்து போய் இருந்த மகளை தன் உயிரைக் கொடுத்து காப்பாற்றுவதற்காக வந்து சேர்ந்தார் மாதங்கி.

Author: துவாரகா
Article Title: Episode 15
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.