• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

NTYU - 1

STN - 90

New member
தேடல் 1

IMG-20260212-WA0028.jpg

‘தாயே திரிசூலி..அங்காள மாரி..
ஓம்காரி மாரியம்மா..’ என தூரத்தில் பாட்டு சத்தத்துடன் மேள தாளங்கள் ஒலிக்க..‘வ்ரூம்…வ்ரூம்’ என காற்றை கிழித்துக்கொண்டு அந்த பைபாஸ் சாலையில் இருசக்கர வாகனங்கள் பறந்து கொண்டிருந்தன. மலர் சாகுபடி மற்றும் மலர் சந்தைக்கு பெயர் போன தோவாளையில் உள்ள ஸ்ரீதேவிமுத்தாரம்மன் கோவிலின் தசரா மற்றும் மகிசாசூரசம்ஹாரம் விழாவின் இறுதி நாள் இன்று.

அவ்வூரில் உள்ள இளவட்டங்கள் ஆர்வத்துடன் மோட்டார் பந்தயத்தில் கலந்து கொண்டு ஒருவருக்கொருவர் முந்திக்கொண்டும் பின்னடைந்தும் வெற்றி இலக்கை நோக்கி ஓடிக்கொண்டிருந்தனர்.

தலைக்கவசம் அணிந்தபடி பின்னால் திரும்பி ஒரு பார்வை பார்த்து மேலும் வேகத்தை கூட்டியபடி வேங்கையென பாய்ந்து கொண்டிருந்தான் விழிதீரன். பெயருக்கேற்றார் போல கூர்மிகு ஈட்டியென வீசும் பார்வைக்கு சொந்தக்காரன்..ஆஜானுபாகுவான ஆண்மகனுக்குரிய சராசரி உயரம், கட்டுக்கோப்பான உடலமைப்பு, திராவிட நிறத்தில் மேலும் மெருகேறியிருக்கும் களையான முகத்துடன் பொன் விளையும் பயிர்களை பல ஏக்கர் கணக்கில் பயிரிட்டு வரும் இளம் விவசாயி, பாரம்பரியமான ஜமீன்தார் வம்சா வழி வந்தவன்..இன்றும் இவன் சொல்லே அவ்வூரில் வேத வாக்கு.

சட்டென தீரனின் வண்டியை தாண்டி சென்றான் ஒருவன்..அவன் பின்னால் அமர்ந்திருந்தவன் தீரனை பார்த்து..

“எலே தீரா…நீ ஜெயிச்சா ஆரவாய்மொழி ல இருக்குற இவனோட கடை உனக்கு தான்..அதே நாங்க ஜெயிச்சா உன் அத்தை மகளை இவனுக்கு கட்டி தர்றியா..? “ என கேட்கவும் தீரனின் விழிகள் கனலை கக்கியது. தன் தலைக்கவசத்தின் கண்ணாடியை சற்று உயர்த்தி..

“எலேய் அல்லக்கை..போட்டி உங்களுக்கும் எனக்கும் தான் இருக்கனும்..வீட்டிலுள்ள பிள்ளைகள இழுத்தே னு வை?” என சற்று முன்னேறி அவர்களை பார்த்து கூற..வண்டி ஓட்டியபடியே தன் தலைக்கவசத்தை ஒரு கையால் கழற்றி பின்னாலிருந்த நண்பனிடம் கொடுத்தவன் தீரனை பார்த்து..

“இழுத்தா..என்ன டா பண்ணுவ..? உன் முன்னாடியே ஒரு நாள் அவளை தூக்கறனா இல்லயா னு பார்றா..” என்று தீரனை தாண்டி கொண்டு மின்னலென பாய்ந்தான். அவன் வினுயுகன். பார்ப்பவர்கள் அது ஆணாக இருப்பினும் பெண்ணாக இருப்பினும் மீண்டும் ஒரு முறை திரும்பி பார்க்க வைக்கும் அழகான ஆளுமையான தோற்றங்கொண்ட நவீன தேரோட்டி வில்லன் இவன்.

அவ்வூர் தாசில்தார் மாணிக்கம் மற்றும் வேதா அவர்களின் அருந்தவபுதல்வன்..வேதா தோவாளை அரசு மேல்நிலைப்பள்ளியில் தமிழாசிரியையாக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். மாணிக்கம் விருப்ப ஓய்வு வாங்கிக்கொண்டு மக்களுக்கு தன்னால் முடிந்த உதவிகளை செய்து வருகிறார். அதற்கான முயற்சியாய் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடவும் இன்றளவும் இரு குடும்பங்களும் மோதி கொள்கின்றன.

தவமாய் தவமாயிருந்து திருமணமாகி பத்து வருடங்கள் கழித்து பிறந்தவன் என்பதாலும், தமிழ்க்கடவுள் முருகனின் பால் கொண்ட அபரிதமான பக்தியியாலும் வினுயுகன் என தன் மகனுக்கு பெயரிட்டு மகிழ்ந்தனர் மாணிக்கம் வேதா..சிறு வயது முதலே இவனும் படிப்பில் ஆர்வமின்றி பெயருக்கேற்ப இளம்வயதில் சைக்கிளில் தொடங்கி படிப்படியாக இன்று கனரக வாகனங்களை லாவகமாய் ஓட்டுமளவிற்கு தேர்ச்சி பெற்றவன் வினுயுகன். தன் பெற்றோரிடம் பெரும் தொகையை கடனாய் பெற்று மோட்டார் உதிரி பாகங்களை வாங்கி விற்கும் சிறு கடையாக ஆரம்பித்து இன்று பல கிளைகளை தோவாளை, நாகர்கோவில், ஆரல்வாய்மொழி என சுற்று வட்டாரங்களில் விரிவுபடுத்தி கணிசமான லாபத்துடன் வெற்றிகரமாக நடத்தி வரும் தொழிலதிபன்.

பணம், பெயர், புகழ் என அனைத்துமே எளிதாய் கிடைத்திட தனக்கென ஒரு பாதையை வகுத்து கொள்ளாமல் ஊரிலுள்ள வயது பெண்களை வம்பிழுத்து கொண்டும், ஊரில் கலவரம் நேரும் சமயங்களில் நியாயம் தர்மம் பார்க்காது எதிராளியை அடித்து துவம்சம் செய்வது என அவன் பெற்றோருக்கும் அடங்காமல் திரியும் தோவாளை மைனர் சிங்கம் வினுயுகன்.

வருடா வருடம் நடைபெறும் இந்த இரு சக்கர வாகன பந்தயத்தில் தான் இரு ஆண்களின் மானமும் மனமும் அடங்கியுள்ளதோ என போட்டி போட்டுக்கொண்டு மாறி மாறி வளைவுகளில் முந்திக்கொண்டிருந்தனர்..இறுதி இலக்கை எட்டிப்பிடிக்க இன்னும் சில நிமிடங்களே இருக்கையில் வினு தன் நண்பனிடம்..

“பிரணவ்..நான் சொன்ன மாதிரி செட் பண்ணிட்ட தானே..?”

“கவலைபடாத வினு, அடுத்த யூ டர்ன் ல கண்டிப்பா அவன் டயர் பஞ்சராயிடும்..இந்த வருஷம் நாம தான் வின்னர்ஸ்..நீ டென்ஷனாகமா ஓட்டுடா..” என வினுவை தட்டிக்கொடுத்தான் அவனின் உயிர் நண்பன் பிரணவ்.

சில மணி துளிகள் கடந்து மிக சரியாய் தீரனின் வண்டி சக்கரம் கூர்மிகு ஆணியில் பட்டு சாலையோரமாக இழுத்துக்கொண்டு விடப்பட்டான்.

“ஹே…ஹே…” என கூச்சலிட்டபடியே அவனை தாண்டி சென்ற அரக்கர்களை அடித்து கொள்ளும் ஆத்திரத்துடன் பார்த்து கொண்டிருந்தவனை…

“தீரா….இவ்விட நோக்கு..” என்ற ஒரு கந்தர்வ குரல் ஹரிவராசனம் பாட துள்ளி எழுந்தான் விழிதீரன்.

ஆளுயரத்திற்கு மண்டி கிடந்த புதர்களிலிருந்து தன் நவீன ரக பைக்குடன் கீற்றாய் வெளிவந்தான் ராஜீவன் நாயர். தீரனின் யாவுமானவன், பால்ய சிநேகிதன். தீரனை நெருங்கி பைக்கை திருப்பி சற்று பின்னால் தள்ள, தாவி ஏறினான் விழிதீரன்.

“எப்படி தலை..கரெக்டா வண்டியோட வந்து நிக்கற?..” என வினுவை பின்னால் துரத்தியபடி சீறி பாய்ந்தான் தீரன். நண்பனின் தலையில் தலைக்கவசத்தை மாட்டியபடி..

“மோட்டார் ரேஸ் எங்கில் தல தான டா..” என மலையாளங்கொஞ்சும் தமிழில் கூறினான் ராஜீவ். இதோ வெற்றி நம் கையில் என நினைக்கும் முன்னரே சில மணித்துளிகள் இடைவெளியில் தட்டி பறித்த தீரனையும் ராஜீவனையும் கண்டு ஓர் நொடி திகைத்த வினு, மறுநொடி தன் வண்டியிலுள்ள இரும்பு கம்பியை எடுத்துக்கொண்டு வேகமாய் தீரனை நெருங்கினான்.

தூரத்திலேயே அவனை கண்டுக்கொண்ட தீரன் அவனை தடுக்கும் முன்னரே தன்னை மறைத்தபடி நின்ற ராஜிவனின் தோல் பட்டையில் பலமாய் விழுந்தது இரும்பு கம்பி..வலியில் துடித்தபடி கீழே சரிந்தவனை ஒரு கையால் தாங்கி பிடித்த தீரன் வெறிக்கொண்டு வினுவின் காலை தட்டிவிட தடுமாறி பின்னால் விழுந்தானவன்.

விழுந்த வேகத்தில் எழுந்த வினு தீரனை தாக்கும் முன் அவனை இறுக்கி பிடித்து நின்றான் பிரணவ்.

அவனிடமிருந்து திமிறியவன்..

“விடு டா என்னை…இன்னைக்கே இதுக்கு ஒரு முடிவு கட்டுறேன் நானா அவனா னு..? “ என்றவனை தடுத்த பிரணவ்..

“இப்ப சூழ்நிலை சரியில்ல..அவன் ஆளுங்க வந்துட்டுருக்காங்க பாரு..வா போலாம்..” என தன் நண்பனை தரதரவென இழுத்துக்கொண்டு வண்டியிலேற்றி கிளம்பவும் தீரனின் ஆட்கள் விரைந்து வந்தனர்.

அடிபட்டு வலியில் துடித்தவனை காரில் கிடத்திய தீரன்..

“ரவி..என் வண்டியை எடுத்துட்டு கிருபா ஹாஸ்ப்பிடல்க்கு வந்துடு..” என்றவாறு காரை வேகமாக ஓட்டினான்.

லேசான தசை வீக்கம் தான், கவலைபடும்படி எதுவுமில்லை என தெரிந்த பின்னரே ஆசுவாசமடைந்தான் தீரன். அதற்குள் விஷயத்தை கேள்விபட்டு ஓடி வந்தார் தீரனின் அத்தை மரகதம்.

தம் மருமகனுக்கு என்னாயிற்றோ என பதறியபடி தீரனை தேடினார். தூரத்தில் அவனை கண்டதும் நெஞ்சை பிடித்தபடி தீரனிடம் விரைந்து அவன்.முகம் கை கால்கள் என ஆராய்ந்தபடி..

“யய்யா எஞ்சாமி..என்ன லே ஆச்சு..?”
என நீர் திரண்ட கண்களுடன் கேட்ட அத்தையை தழுவிக்கொண்ட தீரன்..

“எனக்கு ஒன்னுமில்ல, நம்ம தலைக்கு தான் தோல் பட்டை ல அடிபட்டிருக்கு..

“அந்த கட்டையில போறவன் வேலையா லே இத..?” என அத்தை கேட்கவும் ஆமென தலையசைத்தான் தீரன்.

வாய்க்குள் வினுயுகனை பலமாக அர்ச்சித்தபடி சிறு கண்ணாடி வழியாக ராஜீவனை எட்டி பார்த்தார் மரகதம்.. தன் மருமகனுக்கு நினைவு தெரிந்தது முதல் இன்று வரை நிழல் போல காத்து வருபவன் விரைவாக தேறி வரவேண்டும் என முத்தாரம்மனுக்கு வேண்டுதல் வைத்து அருகிலிருந்த நாற்காலியில் அமர்ந்தார்.

சில நிமிடங்களில் வெளி வந்த வைத்தியர் கவலைப்படும் படி எதுவுமில்லை சற்று ஓய்வெடுத்தால் குணமாகிவிடும், இப்போதே வீட்டுக்கு அழைத்து செல்லலாம் எனக்கூற..சற்று தெளிந்த மனதோடு மருத்துவமனையில் இருந்து தன் நண்பனை தென்னந்தோப்பு வீட்டுக்கு அழைத்து வந்தான் தீரன்.

விழிதீரன் ராஜீவன் நட்பு வரலாறு அலாதியானது. விழிதீரனின் பெற்றோர் வேலாயுதம் கமலா. தன் உடன் பிறந்த ஒரே தங்கையான மரகதத்தை ஆரல்வாய்மொழியில் உள்ள செல்வந்தர் குடும்பத்தை சேர்ந்த வேந்தனுக்கு மணம் முடித்து வைத்தார்.

மணமாகி இரு வருடங்கள் கடந்தும் குழந்தையில்லாமல் தவித்த மரகதத்தின் வயிற்றில் பிறையாய் வந்தவள் தான் நிலன்யா..அவ்வருட முத்தாரமன் கோவில் விழாவில் எழுந்த ஜாதி கலவரத்தில் ஈடுபட்டிருந்த கயவர்களை அடக்கும் போது எதிர்பாராவிதமாக வேலாயுதமும் வேந்தனும் இறந்து விட, அன்றிலிருந்து இன்று வரை மரகதம், கமலா அரவணைப்பில் வளர்ந்தவனே தீரன்.

அறியா வயதில் தந்தையை பறிகொடுத்து அவருக்கு 30ம் நாள் பூஜை படையலிட்டு வரும் போது இடுகாடு வாயிலில் எலும்பும் தோளுமாய் பசியில் வாடியபடி நின்றிருந்த பதின் வயது சிறுவனை கண்டதும் மரகதம் யார் என விசாரிக்க, அச்சிறுவனின் கண்களோ படையலையே பார்க்க, சட்டென அத்தை வைத்திருந்த சம்படத்தில் கை விட்டு இரு இனிப்பு வடைகளை எடுத்து அவனிடம் நீட்டினான் தீரன். கண்கள் மின்ன பட்டென வாங்கிக்கொண்டு தீரனின் கை பிடித்தவாறு சாப்பிடுபவனை அமர வைத்து பசியாற்றிய மரகதம்..

“உன்ன பாத்தா இந்த ஊர்க்கார பய மாறி தெரியலயே யாரு லே நீ…?

என்ட பேரு ராஜீவன்..ஊரு கொல்லம்.. போன மாசம் இங்க பூ வாங்க வந்த அச்சன் அம்மை சண்டையில மாண்டு போயி..எனக்கி யாருமில்லா இப்போ..” என அவன் சொல்லும்போதே தன்னையுமறியாமல் அவன் கையை இறுக பற்றினான் தீரன். அன்று இணைந்த கைகள் இன்றும் கை கோர்த்து சுய உழைப்பில் முன்னேறி ஒருவருக்கொருவர் துணையாய் நின்று இன்று விஸ்வருபமாய் ஓங்கி நிற்கின்றது. ராஜீவன் ஏதுவாக படுக்க உதவிய தீரன்..

“ஒழுங்கா ரெஸ்ட் எடு..முக்கியமான வேலயிருக்கு..முடிச்சிட்டு வந்துடறேன்..” என நகரப்போனவனை தடுத்த ராஜீவ்..

“மதி டா..அவனை ஒன்னும் செய்யன்டா..என் மேல ப்ரோமிஸ்..“ என்று கூறியவனை முறைத்து நின்றான் தீரன். மரகதம்..

“தீரா..அவே சொல்றதும் சரி தான்..பொறவு பாப்போம்..விட்டு பிடி..கடைய வேற அப்படியே விட்டு வந்துட்டேன்..நிலா வந்துட்டாளா னு தெரியல..?..” என சொல்லும் போதே ஐந்தரை அடியில் செதுக்கி வைத்த அம்மன் சிலை போல நிலவை மிஞ்சும் ஒளிக்கொண்ட விழிகளுமாய் ஓடி வந்த இள எல்லோரா சிற்பமொன்று தீரனை இறுக கட்டிக்கொண்டது.

எதிர்பாராது வந்து மோதிய பஞ்சு குவியலின் பாரம் தாங்காமல் தடுமாறிய தீரனின் முதுகை தாங்கி பிடித்திருந்தான் ராஜீவ். தீரன் தலை குனிந்து பார்க்க வளர்ந்த டோரா பொம்மை ஒன்று அவனை நிமிர்ந்து பார்த்து..

“கங்கிராட்ஸ் மாமூ..” என கூறியவளின் தலையை இதமாக தடவி சற்று தள்ளி நிறுத்தியவன்..

“எக்ஸாம் பீஃஸ் கட்டிட்டியா நிலன்யா..?

கட்டிட்டேன்..கட்டிட்டேன், ப்ரிப்பேர் ஆயிட்டும் இருக்கேன்..” என்றவள் ராஜீவ் அருகில் வந்து..

“எப்படி இருக்கீங்க..?

பைஃன், ஞான் சரியாயிட்டு வரும்வர குறைச்சு இவனை பிடிச்சு நிறுத்து..

ஷ்யூர்..டேக் கேர்..” என தன் மாமனருகில் வந்து அவன் கையிலிருந்த பைக் சாவியை எடுத்தவள்..

“எது வேணும் னாலும் நடந்து போய் வாங்கிக்க மாமூ…வாம்மா ராஜா மட்டும் தான் கடையில இருக்கான்..” என மரகதத்தை இழுத்து கொண்டு செல்லும் ஐஸ்க்ரீம் சிலையின் செயலில் இரு இளைஞர்களுக்கும் சிரிப்பு வந்தது. தீரன்..

“ஏய் டோரா பேபி, புது பைக் பத்திரம்..” என்றான். தன் அத்தை மகளின் பைக் மீதான ஆர்வத்திலேயே தீரனுக்கு பைக் மீதும் மோட்டார் பந்தயங்களில் கலந்து கொள்ளும் ஆர்வமும் வந்திருந்தது. சிறு வயதில் நிலன்யாவின் கை பிடித்து ஊரை சுற்றி வரும் வேளையில் தங்களை கடக்கும் இரு சக்கர வாகனங்களை ஆர்வத்துடன் பார்த்து அதை பற்றியே ஓயாது கேள்வி கேட்டுக்கொண்டும் பேசிக்கொண்டும் வருவாள். பி.எச்எம் (B.HM..Bachelor of Hotel Management) இரண்டாம் ஆண்டு பயிலும் நிலன்யாவின் லட்சியமே தேசிய அளவில் மோட்டார் பந்தய போட்டியில் எப்படியாவது கலந்து கொண்டு முதலிடம் வருவது தான். அதற்கான பயிற்சியை மேற்கொள்ள தன் அன்னையை சரிகட்டி இப்போது தீரனின் சம்மதம் பெற தவமிருக்கிறாள்.


தொடரும்.
 
Last edited:
Top Bottom