NTYU - 12

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

STN - 90

Member
May 5, 2026
39
50
18
Bengaluru
தேடல் 12

file_00000000020471faa496c4fdaaade800.png

ஒரு மாதம் கழித்து வந்த மகனுக்கு பிடித்ததை சமைத்து கொடுத்து பசுவை தேடும் கன்று போய் கன்றை பின்தொடரும் பசுவாய் அவனையே சுற்றி வந்தார் வேதா. இவர்களின் பின்னே எக்ஸ்ட்ரா இளங்கன்று என இவர்களை பார்க்க பார்க்க தெவிட்டவில்லை மாணிக்கம் செந்தாவிற்கு.

மறுநாள் குடும்பமாக அனைவரும் திருச்செந்தூர் சென்று ஜெயந்திநாதரை தரிசித்து பின் கடற்கரையில் சில நேரம் செலவிட்டு இரவு வீட்டிற்கு திரும்பினர். வினு வந்தபின் வீட்டுக்கே ஒரு உயிர்ப்பு வந்தது போல கிருஷிகாவுடன் விளையாடுவது, அப்பாவை மன்த்லி செக்அப் கூட்டி செல்வது இன்னும் மற்ற வேலைகள் என தன்னை எப்போதுமே பிசியாக வைத்துக்கொண்டான்.

செந்தாழினி திருநெல்வேலி கிளம்பிவிட அந்த வாரம் முழுவதும் வினு, ப்ரணவ் மற்றும் வேதா மாணிக்கத்துடன் தன் நேரத்தை செலவழித்தாள் கிரு. தினம் தன் சிம்பாவிடம் நடந்ததை சொல்லவும் தவறுவதில்லை. அவள் தீரனுடன் பேசும் சமயங்களில் நாசுக்காக வினு அவ்விடத்தை விட்டு சென்று விடுவான். வார இறுதியில் கிருஷிகாவை செந்தாவிடம் விட்டு வந்தான் வினு.

இரு வாரங்கள் கடந்து தன் பள்ளிக்கு எவ்வித சஞ்சலமும் இல்லாமல் ஆர்வமாக சென்றாள் கிருஷிகா. மதியம் பள்ளி முடிந்து தனக்காக வெளியே காத்திருந்த தீரனிடம் ஓடி வந்தாள். அவள் புத்தக பையை வாங்கி தன் தோளில் மாட்டியபடி தீரன்..

“என்ன குட்டி மேடம் பேஸ் ஜொலிக்குது..?

உனக்கு தெரியுமா சிம்பா..2 வீக்ஸ் லீவ் ல என் DIY க்ளாஸ் ல கொடுத்த ஹோம்ஒர்க்கை மறந்துட்டேன்..நேத்து நானும் அம்மாவும் நைட் முழுக்க உட்கார்ந்து ரெடி பண்ணோம்..அதுல என்னோடது தான் பெஸ்ட் னு இன்னிக்கு க்ளாஸ் மேம் அப்ரிசியேட் பண்ணாங்க..

வெரி குட்..எங்க அந்த சார்ட் காட்டு..பாப்போம்..” என தீரன் கேட்க கிரு தன் பையிலிருந்து எடுத்து கொடுத்தாள். திருநெல்வேலி சுற்றியுள்ள நகர்ப்புறங்களில் உள்ள ஏரி கால்வாய்கள் தூர் வாரி மழை நீரை சேகரித்தல் மற்றும் முடிந்தவரை நீர் வேண்டி மண்ணில் ஆழமாய் தோண்டுவதை குறைக்க வேண்டும் என சுட்டி காட்டி படு நேர்த்தியாய் வரையபட்டு அழகாக தாயும் மகளும் கலந்து தங்கள் கை வண்ணத்தை காட்டியிருந்தனர். அதை பார்த்த தீரனுக்கு வியப்பாக இருந்தது. ஸ்கூல் ப்ராஜக்ட் எனில் எத்தனையோ தலைப்புகள் இருக்க இயற்கையை மீட்டெடுக்க தன்னுயிரானவர்களும் தன்னை போல இருப்பதில் இதமாக உணர்ந்தான் தீரன். கிரு..

“நான் கூட வின்ட் மில் ப்ராஜக்ட் பண்ணலாம் ம்மா னு கேட்டேன் சிம்பா..அம்மா தான் இத சூஸ் பண்ணாங்க..எனக்கும் பர்ஸ்ட் ப்ளேஸ் கிடைச்சுது..” என சிலாகித்தாள். அவள் மகிழ்ச்சியில் தானும் மகிழ்ந்தவன் மனதில் தன்னை வம்பிழுக்கவே செந்தா இதை எடுத்திருக்கிறாள் என கண்டு கொண்டான். தீரன்..

“ஓகே கிளம்பலாமா..ஹெல்மெட் போடு ருஷி..” என பைக்கில் அமர, கிருவும் அவன் பின் அமர்ந்து இடுப்பை கட்டிக்கொள்ளவும் ஆரல்வாய்மொழி நோக்கி விரைந்தான் விழிதீரன்.

வழிநெடுக பார்க்கும் இடங்களை பற்றி சுவாரசியமாக விளக்கியபடி வினு வீட்டு வாயிலை அடைந்தவன் கிருவிடம்..

“கரெக்டா 5.00 மணிக்கு ரெடியாயிடு ருஷி..நான் வந்துடறேன்..” என கூறிவிட்டு பண்ணை வீட்டிற்கு சென்றான். சரியாக ஐந்து மணிக்கு வந்தான் தீரன். வீட்டு வாசலிலே மாணிக்கத்துடன் நின்றிருந்த கிரு அவன் வண்டியில் ஏறிக்கொள்ள, மாணிக்கம்..

“ருஷிக்காக தினம் நீ அப் அன்ட் டவுன் பிக் அப் பண்றத பார்த்தா சச்தோஷமாயிருக்கு..ஆனா என் பையனை தாண்டி உன்னை வீட்டுக்குள்ள வா னு சொல்லுறளவு பரந்த மனசு எனக்கில்லப்பா..உனக்கு புரியும் னு நினைக்கிறேன்..

உங்க வீடு மட்டுமில்ல இப்ப போற யாழி வீட்டுக்குள்ள கூட போகமாட்டேன் அங்கிள்..இப்ப உங்க பையனை பாத்தாலுமே எனக்கு அந்த கோபம் இருக்குமா னு தெரியல ஆனா சகஜமா பேச நாளாகும்..நேரம் வரும்போது பார்த்துப்போம்..டைம் பீயிங் எனக்கு ருஷி கூட இருக்கனும்..அது தான் இந்த 3 மணி நேர டிராவல் டைம்..ஓகே டைமாச்சு..நாங்க கிளம்புறோம் அங்கிள்..

பத்திரமா போயிட்டு வாங்க..” என வழியனுப்பினார். வாரந்தோறும் கிருவுடன் கிடைக்கும் 3 மணி நேரத்தில் வீரம், வலிமை, மனோதிடம் சார்ந்த கதைகளை சொல்லிக்கொண்டு அவளை நித்தம் மெருகேற்றியபடி தன் கடமையை சரி வர செய்தான் தீரன்.

மறுநாள் விடுமுறை என்பதால் கிருவை விட வந்த தீரன் மாணிக்கத்திடம்..

“நாளைக்கு ஒரு நாள் ருஷியை எங்க வீட்டுக்கு கூட்டிட்டு போயிட்டு வரட்டுமா..?” என கேட்க, அவர்..

“எனக்கு ஓகே..எதுக்கும் செந்தா, வினுக்கிட்ட கேட்டு நீ பிக் அப் பண்ண வரும் போது சொல்றேன்..” என்றார். செந்தா சரி, அது ஏன் வினு என உள்ளுக்குள் சுள்ளென கோபம் முளைத்தாலும் அமைதியாக புறப்பட்டான் தீரன். ஒரு மணி நேரங்கழித்து அழைக்க வந்த தீரனிடம் மாணிக்கம்..

“செந்தாக்கு விருப்பமேயில்ல, வினு கேட்டுக்கிட்டதுக்காக சம்மதிச்சா..ஆனா மார்னிங் கூட்டிட்டு போய் ஈவ்னிங் இங்க வந்து விடச்சொன்னா தீரன்..”எனக்கூறவும் சட்டென ஏதோ சொல்ல வந்தவன் பின் பேச்சின்றி ருஷியை செந்தாவிடம் விட்டு சில நிமிடங்களில் அவளுக்கு அழைப்பு விடுத்தான். அன்று மருத்துவமனையில் பார்த்ததோடு சரி அதன்பின் முற்றிலுமாக தொடர்பின்றி இருந்தவன் திடீரென அழைக்கவும் ஏற்று காதில் வைத்தாள்.

“ஹலோ..

….

லைன் ல இருக்கியா..?

ஏன் உனக்கு தெரியலயா..?

ருஷி எங்க இருக்கா..?

ஹோம்ஒர்க் பண்றா..என்ன விஷயம் சீக்கிரமா சொல்லு..

கொஞ்சம் தள்ளி வர்றியா..?

நான் கிச்சன் ல இருக்கேன்..

ஆமா ருஷிய என் கூட அனுப்ப உனக்கு எக்ஸ்ட்ரா துடுப்பு வந்து ஓகே சொல்லனுமா..?

கண்டிப்பா..அந்த துடுப்பு இல்ல னா இந்த படகு எப்பவோ மூழ்கியிருக்கும்..

உன்னை சார்ந்த விஷயங்கள்ல மத்தவங்க முடிவெடுக்கறது
இதுவே முதலும் கடைசியுமா இருக்கனும் யாழி..மீறுனா நீ வேற தீரனை பார்ப்ப..

என்னை அதிகாரம் பண்ற உரிமையை உனக்கு நான் இன்னும் கொடுக்கல மிஸ்டர்..ஆமா நீ கட்டின கயிறை என் செயினோட கட்டியிருந்தேன் தான்..இனி வேறொருவன் பார்வை என் மேல தப்பா படக்கூடாது னு..என் டம்மி புருஷன் இப்பவரைக்கும் ஆர்மி ல இருக்காரு னு ஊருக்கு நிருபிக்கனும் அவ்வளவுதான்..உன் மேல எனக்கு தனிப்பட்ட ஆசையோ காதலோ எதுவுமே இல்லை..உன்னையும் சேர்த்து இந்த ஆம்பிளைங்க மேல எனக்கு சுத்தமா நம்பிக்கையே இல்ல..நீயா ஏதோ கற்பனை பண்ணிட்டு உன் வாழ்க்கைய வீணாக்காத..என் பொண்ணு விஷயத்துல இன்னும் ஆறு மாசம் தான் டைம்..அதுக்கப்புறம் உன் கண்ணுல கூட படமாட்டோம்..ருஷிக்கிட்ட தெரியற சின்ன சின்ன மாற்றங்களை வச்சு தான் உன்னை அவள பாக்கவே அலோவ் பண்ணேன்..இந்த லிமிட் ல நீயும் நின்னு கொஞ்சம் கொஞ்சமா அவக்கிட்டயிருந்து விலக பாரு..நான் சொல்ல வேண்டியதை தெளிவா சொல்லிட்டேன்..அவ்ளோ தான்..”என பட்டாசாய் பொரிந்து தள்ளினாள் செந்தா. என்றுமில்லாத அமைதியான குரலில் தீரன்..

“நிலா ருஷிய ஒரு தடவை மீட் பண்ணனும் னு சொன்னா..அவளை இங்க வரவைச்சு தேவையில்லாத நினைவுகள் வரவேணாமே னு தான் ருஷியை தோவாளை கூட்டிட்டு போக வா னு கேட்டேன்..பரவால்ல நாங்க வீடியோ கால் ல பேசிக்கிறோம்..உங்க விஷயத்துல ஓவரா நடந்துக்கிட்டதுக்கு சாரி..இனி உங்க லைப் ல என் தலையீடு இருக்காதுங்க..என் வழிய இனி நான் பாத்துக்கறேன்..அப்படி சொல்வேன் னு நினைச்சியா..? டாமிட்.. நீ என்னடி எனக்கு உரிமை கொடுக்குறது..?உன்னை முதன் முதலா பாத்தப்பவோ எனக்குள்ள நீ எப்படி வந்தியோ, அதே உன் மனசுல எனக்கும் ஓர் இடமிருக்கு னு உன் கண்ணே புரிய வச்சுது..இப்ப நீ என்க்கிட்ட போட்ட வேஷமெல்லாம் நம்பி விட்டுப்போக நானொன்னும் நீ வெறுக்கிற ஆண் வர்க்கத்தை சேர்ந்தவன் கிடையாது..உன்னை மட்டுமே உனக்காகவே லவ் பண்ற நீ பார்த்த கேட்டகிரி ல வராத ஆம்பிளை..புரிஞ்சுதா..? எனக்கு பவுண்ட்ரி செட் பண்ண ட்ரை பண்ணாத..இப்பவும் சொல்றேன் நீயா என்க்கிட்ட வரவரைக்கும் நானா உன்னை டிஸ்டர்ப் பண்ண மாட்டேன். ஆனா எனக்கு மனைவி குழந்தை னா அது நீயும் ருஷி மட்டுந்தான்..நல்லா மைண்ட் ல ஏத்திக்கோ..”என பட்டென போனை அணைத்தான் தீரன். தன் பாக்கெட்டிலிருந்த செந்தாவின் தங்க சங்கிலியின் இருமுனைகளும் நான்கு வருடங்களுக்கு முன் அவன் கட்டிய தாலிக்கயிற்றோடு கோர்த்திருந்ததை ஒரு முறை தடவி பார்த்து கொண்டான் தீரன். கிருவை மருத்துவமனையில் அவசரமாக சேர்க்கும் போது போதிய பணமின்றி மாணிக்கத்திடம் கூட தன் சுய மரியாதையை விட்டுக்கொடுக்காமல் தன் செயினை அடகு வைத்திருந்தாள் செந்தா..பிறகு மீட்டுக்கொள்ளலாம் என இருந்த வேளையில் அதன் ரசீது மருந்து பில்லோடு தீரன் கையில் கிடைக்க, உடனே அக்கடைக்கு சென்று பணத்தை கட்டி செயினை கையில் வாங்கி பார்த்தவனுக்கு மகிழ்ச்சியில் கண்கள் குளமாயின. செந்தா மனதில் சிறு தீப்பொறியென அவனும் வீற்றிருக்கிறான் என்பதே அவனுக்கு இவ்வுலகை வென்றது போலிருந்தது. அதை வைத்து தான் அன்று ஹோட்டலில் அவளிடம் சற்று எல்லை மீறியதும். மறுமுனையில் சில நொடிகள் போனை வெறித்தவள் நீண்ட பெருமூச்செறிந்து பாரம் நீங்கிய மனதுடன் தன் வேலைகளை கவனிக்கலானாள்.

தீரன் சொன்ன சொல் தவறாமல் செந்தாவின் புறம் தன் நிழலை கூட படரவிடாதபடி திண்ணமாய் கடைபிடித்தான். கிருஷிகாவை கொண்டு விடுவது, வருவது மட்டுமே தனது பணி என தன் ஆசைகளை மறைத்துக்கொண்டு அவ்வப்போது கிடைக்கும் நேரங்களில் தோவாளை சென்று அனைவரையும் பார்த்துவிட்டு ஆரல்வாய்மொழிக்கு ஓடி வந்துவிடுவான்.. அன்றும் வழக்கம் போல பயண நேரத்தில் ஓர் மரத்தடியில் வண்டியை நிறுத்தி கிருஷிகாவை நிலன்யாவுடன் வீடியோ காலில் பேச வைத்தான். கயவர்கள் சூழ் உலகில் இன்றளவும் சிறு மொட்டுக்களை தங்கள் கேவலமான இச்சைக்காக கசக்கி எறிவதை செய்தியாக படிக்கும் போதே மனம் பதைக்கிறதே, இதுவே தெரிந்த வேண்டிய பெண் என்றால்..தன்னை போல ஓர் சூழலில் மாட்டிக்கொண்ட அப்பாவி கிருவின் மீது இயல்பான பாசத்துடன் பேச ஆரம்பித்தாள் நிலா. இது தினமும் தொடர இப்போது தீரனை விட நிலாவிடம் அதிகம் ஒட்டிக்கொண்டாள் கிரு.

கிரு நிலா அரட்டை சேட்டைகள் செந்தா தொடங்கி வினு வரை அனைவருக்கும் தெரிந்திருந்தது. வழக்கம் போல நிலா பேரை கேட்டாலும் கிணற்றில் போட்ட கல்லை போல சலனமற்ற முகத்தோடு வளைய வரும் மகனிடம் எதையும் கண்டு பிடிக்க முடியாமல் தவிப்பார் வேதா.

அன்று பணியிலிருந்து வீடு திரும்பிய செந்தா, பக்கத்து வீட்டு சியாமளா வீட்டை காலி செய்வதை கண்டு ‘எந்த தடிமாடோட வேலையோ தெரியலயே’ என நினைத்தபடி வீட்டினுள் நுழைந்தாள். கிரு விஷயமறிந்து சியாமளாவோடான தொடர்பு முற்றிலும் முறித்திருந்தாள் செந்தா. ருஷியை வாசலில் இறக்கி விட்ட தீரனும் இதை கண்டு ‘ஓ துடுப்பு ஓவரா பாதுகாக்குது போலயே..இருக்கட்டும் இருக்கட்டும்..’ என திரும்பினான்.

நான்கு வருடங்களுக்கு முன்னால் தோவாளை மோட்டார் பந்தயத்தில் ஆக்ரோஷமாய் முட்டி மோதிக்கொண்ட இரு கறுஞ்சிறுத்தைகள் இப்போது ஒரே ஊரில் இருந்தும் இதுவரை நேரில் சந்தித்து கொள்ளவில்லை..எதிரியின் மூச்சுக்காற்று வைத்தே அவ்விடத்தை விட்டு நாசுக்காய் நழுவி செல்வதில் இருவருமே கை தேர்ந்த கேடிகளே.


தொடரும்.
 
Last edited:

Author: STN - 90
Article Title: NTYU - 12
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
  • Like
Reactions: latharaju

Gowri Karthikeyan

Well-known member
May 5, 2026
1,290
384
83
Chennai
ஆமாங்க ரைட்டர்.....சரியான கேடிங்க தான் ரெண்டு பேரும்.....
ஆன இவங்க ரெண்டு பேரும் இப்படி சண்டை பிடிக்க காரணம் என்னனு தான் தெரியல
 
  • Haha
Reactions: STN - 90