தேடல் 16

ஒரு மணி நேர பயணத்தை வெறும் முப்பது நிமிடங்களில் கடந்து செந்தாவின் வீட்டில் வந்திறங்கிய தீரன் வண்டியை அப்படியே உதறிவிட்டு உள்ளே பாய்ந்தான். அவனை கண்டதும் கொலை வெறியுடன் அவனை நெருங்கி சட்டை காலரை கொத்தாக பிடித்த செந்தா..
“ரெண்டு மணி நேரமா என் பொண்ணை காணோம்..கொஞ்ச நேரத்துக்கு முன்ன எவனோ ஒருத்தன் கால் பண்ணி உன்க்கிட்ட பேசனும் ன்றான்..உண்மையா உன் மேல பாசத்தை வச்சதுக்கு திரும்ப திரும்ப எங்களையே..எத்தனை வாட்டி டா..?” என ஆங்கார குரலில் அவனை உலுக்கியெடுத்தாள் செந்தா. அவளை விலக்க முடியாமல் திணறினர் அனைவரும். ப்ரணவ் செந்தாவை வலுக்கட்டாயமாக விலக்க முயல அவனை மறு கையால் தள்ளி விட்டவள் ஒற்றை விரலை நீட்டி..
“கிட்ட வந்தீங்க கொன்றுவன்..தள்ளி போங்க..” என ப்ரணவை எச்சரித்தவள் தீரனிடம் திரும்பி..
“சொல்லு இப்ப யார்க்கிட்ட உரண்டை இழுத்து வச்ச..?“ என அவன் தோள்களை பற்றி உலுக்க இதுவரை தன்னவளின் உள்ளகுமுறல்களை அமைதியாக எதிர்கொண்டவன் அவளை விலக்கி நிறுத்தி மாணிக்கம் வேதாவிடம்..
“இவ போன் எங்க..?” என கேட்க வேதா..
“இந்தா தீரா..” என கொடுத்தார். சரியாக செந்தாவின் அலைபேசி மீண்டும் ஒலிக்கவும் சட்டென எடுத்தான் தீரன்..மறுமுனை ஆழ்ந்த மௌனம்..தீரனுக்கோ கடக்கும் ஒவ்வொரு நொடியும் யுகமாய் கழிய..
“யார் நீ..?” என கேட்க அவன் அசட்டு துணிவில் அனைவரும் அவனை குழப்பத்துடன் பார்க்க..மறுமுனையில் வெடிக்கும் புன்னகை சத்தம்..அப்புன்னகை குரல் சிறிது சிறிதாய் தேய்ந்து பின் கடின தொனியில்..
“இன்னும் அரைமணி நேரத்துல இங்கிருக்கிற உலக்கை அருவி வியூ பாயிண்டுக்கு நீ உடனே வரனும்..அப்படி வந்தா உன் ஆசை மகளை கடைசியா ஒரு தடவை உயிரோட பார்க்கலாம்..யுவர் டைம் ஸ்டார்ட்ஸ் நவ்..” என்று கூறி பட்டென வைக்கவும் தீரன் மாணிக்கம் வேதாவை பார்த்து..
“என்னை உலக்கை அருவிக்கு வரச்சொல்றான்..நான் போறேன்..நீங்க இவள பாத்துக்கங்க..” என செந்தாவை அவர்களிடம் தள்ளி விட்டு வெளியே ஓடினான். ப்ரணவ் மூலம் அங்கு நடப்பதை தெரிந்து கொண்ட வினு..
“மச்சான் அவனை தனியா விடாத..ஆத்திரக்காரன்..நீயும் கூட போ..நான் அங்கேயே வந்துடறேன்..
நீ எங்க இருக்க..?
பாதி வழில இறங்கி அந்த சகாயம் நாயை பாத்துட்டு திரும்பவும் வண்டி ஏறிட்டேன்..அவனால அசைய கூட முடியல..இது யாரு புதுசா னு தெரியல..நீ உடனே கிளம்பு போ..” என போனை அணைத்துவிட ப்ரணவ் மாணிக்கத்திடம்..
“ப்பா..நீங்க இவங்களை கூட்டிட்டு பின்னாடியே வாங்க..நான் அவனோட போறேன்..” என வெளியேறினான். தீரனை தொடர்ந்து ப்ரணவ், பின்னால் தன் காரில் வேதா செந்தாவுடன் மாணிக்கமும் உலக்கை அருவிக்கு பின்தொடர்ந்தனர்.
சிறியதுமின்றி மிக பெரியதுமின்றி தோவாளை நகரத்திற்கு சற்று தொலைவில் ஓடும் நீண்ட கால்வாய் முடியுமிடத்தில் அமைந்துள்ள ஆள் நடமாட்டம் அதிகமில்லாத உலக்கை அருவி ஓங்கி உயர்ந்த பாறைகளின் வழியே பேரிரைச்சலுடன் தரையை நோக்கி ஓடியது.
அங்கிருந்து சற்று தள்ளி இருந்த ஓர் பாறை விளிம்பில் முனை வழியாக இரும்பினாலான சிறு ராட்டினத்தின் வழியே தடிமனான தாம்புகயிறால் இணைக்கப்பட்ட ஓர் இரும்பு கூண்டில் அந்தரத்தில் தொங்கியபடி மயங்கிய நிலையில் இருந்தாள் கிருஷிகா. கயிற்றின் மறுமுனை பாறைக்கு மேலே உள்ள மற்றொரு பாறாங்கல்லின் மேல் சாய்ந்து கருமை நிற உடையில் முகத்தில் முமமூடியோடு அமர்ந்திருந்த நீண்ட உருவத்தின் பக்கத்திலுள்ள உயரமான பாறையை சுற்றி பிணைக்கபட்டிருந்தது. கையில் கூர்மையான கத்தியுடன் கயிற்றை லேசாக பிடித்தபடி அவ்வுருவத்தின் கண்களில் மின்னுவது என்னவோ..? தன் இரையை துடிக்க துடிக்க வேட்டையாட காத்திருந்தது.
பொழுது சாய தொடங்கியதும் மழை வரும் அறிகுறியாய் ஊதக்காற்று வீச தன் மகளை எண்ணி நடுங்கிக்கொண்டிருந்த தாய்க்கு நிகராக பெறாத மகளுக்கு தகப்பனாய் அவளை விட பதைபதக்கும் உள்ளத்தை முயன்று அடக்கியவாறே உலக்கை அருவியை அடைந்தான் தீரன். சுற்றும் முற்றும் பார்வையை வீசியவனுக்கு சற்று தொலைவில் அருவிக்கருகில் கூண்டு போல ஏதோ ஒன்று ஊசலாடுவதை கண்டு அச்சத்தில் முகம் வெளுத்தது. சர சரவென பாறை வழியாக நீர்வீழ்ச்சியின் மேற்பரப்பை அடைந்தவனுக்கு குறுக்கே கட்டப்பட்டிருந்த நீளமான இரும்பு கம்பி தடையாக இருக்க அதை தாண்டும் வேளையில் சரெலென உடலில் மின்சாரம் பாய்ந்ததில் துள்ளி கீழே விழுந்தான் தீரன். தாங்கக்கூடிய அளவாக இருந்தமையால் சட்டென எழுந்தவன் கண்ணில் பட்டான் அவன். மங்கிய வெளிச்சத்தில் யார் அவன் என அடையாளம் காணமுடியாது தலை முதல் கால் வரை மறைத்திருந்தவன்..
“அந்த கம்பியை தாண்டி வர ட்ரை பண்ணா அடுத்த நொடி உன் பொண்ணு ஜல சமாதியாயிடுவா உஷார்..
யாரு டா நீ..?எதுக்காக என் பொண்ணை கடத்தி வச்சிருக்க..?”
என கேட்கவும் ப்ரணவ் தீரனை நெருங்கியிருந்தான். ப்ரணவை தொடர்ந்து..
“கிரு..” என உரக்க கத்தியபடி செந்தா ஓடி வந்தாள். பின்னால் மாணிக்கம் வேதா விரைந்து வந்தனர். மயங்கிய நிலையில் உயிருக்கு ஊசலாடிக்கொண்டிருக்கும் மகளை பார்த்ததும் பெருங்கேவலுடன் இரும்பு கம்பியை தாண்ட முற்பட்டவளை பிடித்து தன் கைக்குள் வைத்துக்கொண்டான் தீரன். அவனிடமிருந்து விடுபட திமிறியவளை ப்ரணவ்..
“கரண்ட் கம்பி செந்தா..கிரு அவன்க்கிட்டயிருக்கா..கொஞ்சம் அமைதியாயிரு ப்ளீஸ்..”என எச்சரித்தான்.
தீரனிடம் விலகி சற்று முன்னே வந்து மண்டியிட்டு தடுமாறும் குரலுடன் கறுப்பு உருவத்தை நோக்கி கைக்கூப்பியபடி..
“நீங்க யாரு ஏன் என் பொண்ணை கடத்தினீங்க தெரியல..அவளுக்கு வெர்டிகோ இருக்கு..தயவு செய்து என் பொண்ணை என்க்கிட்ட கொடுத்துடுங்க..” என கதறினாள் செந்தா. கண்ணுக்குள் பொத்தி பாதுகாக்க நினைத்த தன் இரு உயிர்கள் இன்று எவனோ ஒருவன் கையில் சிக்கிக்கொண்டு அல்லாடுவதை சகிக்க முடியாத தீரனுக்கு தான் அப்படியே நீரில் பாய்ந்தால் என்ன என தோன்றியது. தன் குறியில் மட்டுமே கவனமாய் இருந்தவன்..
“ஆபீசரம்மா ஒருவகையில நீயும் என்னை மாதிரி பாதிக்கபட்டவ தான்..உனக்கும் சேர்த்து தான் இந்த போராட்டமே..என்ன உன் பொண்ணு தான் என் ட்ரம்ப் கார்ட்..எனக்கு வேற வழியில்ல..அமைதியா நான் சொல்றபடி கேட்டு நடந்தா சேதாரம் கம்மி…இல்ல..? “ என கூண்டை சில அடிகள் கீழே இறக்கவும்..நடுங்கும் குரலில் செந்தா..
“இல்ல. இல்ல..உங்க பேச்சை மீறமாட்டேன்..என் பொண்ண எதுவும் பண்ணிடாதீங்க..”எனக்கூற அவனோ..
“திரும்பவும் சொல்றேன்..என்னை சுத்தி ஹெவி கரண்ட் பாசாகுற இரும்பு கம்பி இருக்கு..உங்க வீரத்தை காமிக்க நினைச்சா சாம்பல் தான்..அப்புறம் எதுக்கு இந்த கடத்தல் டிராமா னு தெரிஞ்சுக்கனுமில்லயா..? சுமார் 20 வருஷங்களுக்கு முன்னாடி ஜமீன் வம்சம் விதைச்சது இப்ப இவங்க தலையில் விடிஞ்சிருக்கு..” என தீரனை சுட்டி காட்டி கடத்தலுக்கான பின்னனி கதையை கூற தொடங்கினான் அவன்.
சத்தியமங்கலம் காட்டுக்கு பக்கத்திலுள்ள சிறிய மலை கிராமம் கடம்பூர். ஏறக்குறைய 150 லிருந்து 200 குடும்பங்கள் ஒற்றுமையாய் வாழ்ந்து வரும் மலைப்பகுதி. இவர்களின் பிரதான தொழிலே விவசாயம். கிராமத்தின் எல்லைப்பகுதியில் அமைந்துள்ள அரண்யகாளிதேவி ஆலயத்தில் வருடந்தோறும் நடைபெறும் மாசி மக திருவிழாவிற்கு ஈரோடு, சேலம், கோவை, கரூர் என பக்தர் கூட்டம் அலைமோதும். வெகு விமரிசையாக கொண்டாடபடும் திருவிழாவின் இறுதி நாளன்று அம்மனுக்கு பச்சை பட்டாடை உடுத்தி பச்சை மரகத கற்கள் பதித்த ஆபரணங்களை சாற்றி ஊர் பெண்கள் அனைவரும் கும்மியாடி பொங்கல் வைத்து விழாவை சிறப்பாக முடித்து வைப்பர்.
அன்னை அரண்யகாளிதேவியை பரம்பரை பரம்பரையாக சேவித்து வழிபட்டு வரும் முக்குலத்தோர் குலத்தை சேர்ந்த சபாபதி தலைமை அதிகாரியாக நியமிக்கப்பட்டு கோயிலின் முழு பொறுப்பும் அவரிடம் ஒப்படைக்கபட்டிருந்தது. தெய்வ பணியை மேற்கொண்டாலும் படித்த பட்டதாரியான அவர் மற்ற நேரங்களில் பகுதி விரிவுரையாளராக ஈரோட்டில் உள்ள புகழ் மிக்க கல்லூரிகளில் பணியாற்றி வந்தார். அவர் மனைவி தேவிகா. அவர்களுக்கு ஒரு மகள் நிவேதிதா மற்றும் மகன் ஷிவநந்தன். மகள் நிவேதிதா கணிதவியல் முதலாமாண்டு மாணவி..நந்தன் ஆறாம் வகுப்பு படிக்கின்றான்..மாசி திருவிழா மற்றும் விசேஷ சமயங்களில் சபாபதி மேற்பார்வையில் சிறப்பு பூஜைகள் நடைபெறும்..ஏனைய நாட்களில் மற்ற பூசாரிகள் பார்த்து கொள்வர்.
வழக்கமாய் அவ்வருட திருவிழாவிற்கு தன் குடும்பத்தோடு தோவாளையிலிருந்து சத்தியமங்கலத்தில் உள்ள தன் தூரத்து உறவினரான பங்காளி முருகன் வீட்டிற்கு வந்திருந்தார் வேலாயுதம் விழிதீரனின் தந்தை. தீரன் பிறந்து கிட்டதட்ட பத்து வருடங்களாகியும் மனதுக்கேற்ற வரன் அமையாததால் காளி தேவியின் அருள் பெற வேண்டி அவ்வருடம் மரகதம் பால் குடம் எடுப்பதாக வேண்டிக்கொண்டார் கமலா. அண்ணியின் வேண்டுகோளை நிறைவேற்ற அன்று விடியற்காலையில் குளித்து புது தாவணி பாவாடையணிந்து குடத்துடன் கோயிலுக்கு வந்தாள் மரகதம்.
அங்குள்ள அரசமரத்தினடியில் வீற்றிருக்கும் நாகர் சிலைகள் சுற்றும் தூய்மைபடுத்தி எள்ளெண்ணெயில் தீபமேற்றி கொண்டிருந்த அழகு பதுமையின் பொலிவில் மரகதமே அசந்து நின்றுவிட்டாள். பாந்தமான அழகுடன் தெய்வீக சிரிப்புமாய் சிறியவரை வம்பிழுத்தபடி கோயிலை சுற்றி சுற்றி வரும் செப்பு சிலை நிவேதிதாவின் ஸ்வர்ண மேனி நிறத்தில் சற்று பொறாமையே ஏற்பட்டது மரகதத்திற்க்கு..அம்மனுக்கு தீபமேற்றி வழிபட்டவள் அங்கு மற்ற பால்குடம் எடுக்கும் பெண்கள் வரிசையில் நின்றுக்கொண்டாள்.
கமலா மற்றும் வேலாயுதம் தம் மகன் தீரனுடன் பூஜைக்கு தேவையான சாமான்களோடு அவளை நெருங்கினர். தம்மை நாடி வருவோரின் குறை தீர்க்கும் இரட்சினியாய் பச்சை பட்டுடுத்தி பிரத்தியேகமான மரகத கற்களால் ஆன அட்டிகை ஆபரணங்களுடன் அம்மன் ஜொலிப்பதை காண கோடி கண்கள் போதாது என தோன்றியது அனைவருக்கும்.
மரகதம் என பெயர் வைத்ததாலோ என்னவோ அம்மன் கழுத்தில் வீற்றிருந்த அட்டிகையில் மனதை தொலைத்த மரகதம் அதை காட்டி தன் அண்ணி கமலாவிடம்..
“எனக்கும் இதே மாதிரி அட்டிகை செஞ்சு குடுங்க அண்ணி..
அதுக்கென்னடா…கண்டிப்பா செஞ்சுடலாம் உன் கல்யாணத்துக்கு..பயபக்தியோடு வேண்டிக்கோ..” என்றார் கமலா. தீபாராதனை முடிந்ததும் பிரசாதத்துடன் கிளம்பினர் வேலாயுதம் குடும்பத்தார்.
மறுநாள் பெண்கள் கும்மியாடி பொங்கல் வைக்க வழக்கம் போல அம்மனை தரிசிக்க வந்த மரகதத்திற்கு அம்மன் கழுத்திலிருந்த மாலையை பூசாரி கொடுக்க கண்கள் பனிக்க வாங்கி கொண்டாள். பொங்கல் வைத்து அம்மன் காளிதேவி கடம்பூரை சுற்றி வர ஊரப்பெண்கள் ஒன்று கூடி அம்மனுக்கு குலைவையிட்டு பொங்கல் படைத்தனர்.
கோயில் திண்ணையில் உட்கார்ந்திருந்த மக்களிடையே சிறு சலசலப்பு ஏற்பட வேலாயுதம் பக்கத்திலிருந்தவரிடம் என்னென்று விசாரிக்க..
“விஷேஷநாள் அதுமா அம்மன் கழுத்திலிருந்த மரகத கல் அட்டிகை காணோமாம்..” என கேட்டதும் அதிர்ச்சியடைந்தனர் வேலாயுதம் குடும்பத்தினர். தம் பங்குக்கு கோயிலை சுற்றி தேடி எங்கும் கிடைக்காததால் கோயில் மண்டபத்தை அடைந்தனர்.
சுற்றி கடம்பூர் கிராமத்தின் ஊர் பெரியவர்கள் இருக்க நடுவில் வெளிறிய முகத்துடன் சபாபதி மற்றும் வழக்கமாக பூஜை செய்யும் பூசாரியும் நின்றிருந்தனர். அனைவரையும் மிரட்சியாக பார்த்தபடி தன் தந்தையின் கைகளை கெட்டியாக பிடித்து நின்றான் ஷிவநந்தன்.
தொடரும்.