NTYU - 22

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

STN - 90

Member
May 5, 2026
39
50
18
Bengaluru
NTYU 22

file_00000000e71071fa8750058a0cee3617.png

ஸ்ரீ தேவி முத்தாரம்மன் தசரா திருவிழா ஆரம்பமாவதையொட்டி தோவாளை நகரமே விழாக்கோலம் பூண்டிருந்தது. ஹோன்டா நிறுவனம் சார்பில் நடத்தபடும் 2026 ம் ஆண்டுக்கான மோட்டார் ரேஸ் பந்தயத்தில் பங்கேற்க இளவட்டங்கள் ஆர்வத்துடன் காத்திருந்தனர்.

பல வருடங்கள் கழித்து விழிதீரனும் வினுயுகனும் மோதிக்கொள்ளும் களயுத்தம். முன்பை போல பகை, அகந்தை எதுவுமின்றி விளையாட்டு நெறியுடன் திறமையுள்ளவன் ஜெயிக்கட்டும் என இரு இளைஞர்களும் களத்தில் இறங்கினர். மோட்டார் பந்தயம் என்றால் உயிரை விடும் நிலன்யா அவள் சுவாசமும் உயிரும் மோதிக்கொள்வதை அறிந்து தூத்துக்குடியில் நடக்கும் உணவுத்திருவிழாவில் கட்டாயம் பங்கேற்க வேண்டும் என சப்பை காரணம் கூறி இரு நாட்களுக்கு முன்பே கிளம்பியிருந்தாள்.

இம்முறை சர்வதேச அளவில் பந்தயம் நடைபெறுவதால் ஆங்காங்கே பிரமாண்ட திரைகள் வைத்து போட்டியினை நேருக்கு நேர் ஒளிபரப்ப ஏற்பாடு செய்யபட்டிருந்தது.

இருபுறமும் மக்கள் கை தட்டி வீரர்களை உற்சாகபடுத்த இரு சிவப்பு ரோஜாக்களை தீரன் மற்றும் வினுவிடம் கொடுத்த கிருஷிகா..

“ஆல் தி பெஸ்ட் சிம்பா & வினு மாமா..”என்றாள். இரு இளைஞர்களின் உறவுகள் பேதமின்றி தங்களுக்குள் சிரித்து பேசி போட்டியை காண தயாராகினர். போட்டி ஆரம்பிக்க சில நிமிடங்கள் இருக்கும் நிலையில் நிலாவை அழைத்த தீரன்..

“நிலாக்குட்டி..

ரெடியா மாமா..?

ஆன் மார்க்..

கப்போட வா..இன்னைக்கு நைட் வந்துடுவேன்..

ம்ம்..” என போனை தன் அன்னையிடம் கொடுத்தான். அடுத்த நொடி ப்ரணவ் அலைபேசியில் அழைப்பு வர ‘நிலன்யா’ என தெரிந்து வினுவின் காதில் வைத்தான். யாரென முழித்தவனின் காதில்..

“இந்த முறையாவது நேர்மையா விளையாடுங்ங்….க..ஆல் தி பெஸ்ட்..விண்வெளி நாயகா..” என்று டக்கென அவள் வைத்ததும் ‘இவள..’ என பற்களை நறநறவென கடித்தவன் போட்டிக்கு தயாரானான்.

போட்டி தொடங்கியதும் சீறி பாய்ந்த வீரர்களால் அவ்விடமே மண்புழுதி நிறைந்து காணபட்டது..ஒவ்வொரு வளைவிலும் முந்தி செல்பவரின் பேரை அறிவித்துக்கொண்டே கை தட்டி உற்சாகபடுத்திக்கொண்டிருந்தனர் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள். வெற்றிக்கோப்பையை பறிக்க போவது தீரனா, வினுவா யார் என ஆர்வத்துடன் மக்கள் பார்த்திருக்க சரிசமமாய் இருவரும் ஒருவரை ஒருவர் முந்தி செல்ல இறுதிக்கோட்டை அடைய சில அடிகள் இருக்கும் நிலையில் தீரனும் வினுவும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்து சற்று பின் வாங்க காற்றை கிழித்துக்கொண்டு இருவரையும் தாண்டி பறந்து வெற்றி இலக்கை தொட்டது ஒரு புதிய உருவம்.

இருவரின் கண்களும் பேரதிர்ச்சியில் மின்ன..இது யாரடா நம்மை தாண்டி ஒருவன் என தீரனும் வினுவும் திகைப்பில் அவனை நெருங்கி வந்தனர்.

முகம் முழுதும் கறுப்பு நிற தலைக்கவசம் மறைத்திருக்க கழுத்து முதல் கால் வரை முழுத்தோலினாலான கறுப்பு ஜாக்கெட், முட்டி வரை மூடப்பட்டிருந்த ரேஸிங் பூட்ஸ் என இன்னுமே தன் வண்டியில் நம்பிக்கையுடன் ஒய்யாரமாய் அமர்ந்திருப்பவன் யார்..? என ஒட்டு மொத்த தோவாளையே ஆர்வத்துடன் பார்க்க நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் இவர்களை நெருங்கினர்.

சில நிமிடங்களில் மேடைக்கு வந்த திருநெல்வேலி ஹோன்டா கிளை நிறுவன மேலாளர்..

“ஹலோ மக்களே..விறுவிறுப்பா நடந்து முடிஞ்ச இந்த காம்படிஷன் ல வின் பண்ணது..புது முகம்..நியு பைஃன்ட் ஆப் திஸ் இயர் னு கூட சொல்லலாம்..ஆனா உங்களுக்கு தெரிஞ்சவங்க தான்..நிலன்யா..” என அந்த இடமே அதிரும்படி உரத்த குரலில் கூற, வினு மற்றும் தீரன் ஒரு சேர காதில் கேட்டதை நம்பமுடியாமல் தலைக்கவசத்தை கழற்றிய வீராங்கனையை கண் சிமிட்டாமல் பார்த்தனர். இங்கு கமலா நெஞ்சில் கை வைத்து சற்று பின்னால் நகர அவரை பிடித்து நின்ற மரகதம் முகத்தில் கர்வம் மின்னியது. கிருஷிகா மகிழ்ச்சியில் துள்ளி குதிக்க..ப்ரணவ் உட்பட செந்தா வரை அனைவருக்கும் எதிர்பாராத இன்ப அதிர்ச்சியே. வெற்றி பெற்ற நிலன்யாவோடு தீரன், வினுவை மேடைக்கு அழைக்க வேலும், மயிலும் இரு புறம் துணையாய் அவளுடன் நடக்க..வாழ்நாள் கனவை சாதித்த பூரிப்பில் மிடுக்குடன் தலை நிமிர்ந்து தன்னுயிரானவர்களுடன் மேடையேறினாள் நிலன்யா.

வெற்றிக்கோப்பையை நிலன்யாவிற்கு வழங்கிய போது மக்களின் கரவொலி அரங்கம் தாண்டி எதிரொலித்தது. சற்று முன் நிகழ்ந்த அதிசயத்தை உள்வாங்கும் முன் பளிச்சிடும் கண்களும் நினைத்ததை முடித்த திருப்தியும் முகத்தில் பிரதிபலிக்க அடக்கி ஆளும் பெண் சிங்கமாய் வெற்றிக்கோப்பையை பற்றி உயர்த்தி காட்டிய தம் மனை மகளை/காதலியை கண்டு இருவரின் உள்ளமும் தித்திப்பாக இனித்தன. கோப்பையுடன் இருவரையும் பார்த்தவள் சற்று முன்னே நடந்து மைக்கை பற்றி..

“ஹாய் மக்களே..எனக்கு பொதுவெளில பேசி பழக்கமில்ல..சிம்பிளா முடிச்சிடுறேன்..வழக்கமா என் மாமா தவறினா வினுயுகன் னு கப்பை தூக்குனவங்க மத்தியில முதல் பொண்ணா நம்ம ஊரை ரெப்பிரசன்ட் பண்ணி நான் ஜெயிச்ச இந்த வெற்றியை முழுக்க முழுக்க என் தீரன் மாமாக்கு சமர்ப்பிக்கிறேன்..மாமா வீட்டு போல்ட் நட்டும் சீறி பாயும் தானே...ஜஸ்ட் கம்பர் வீட்டு ரெபரன்ஸ்..ஆனா எனக்குள்ள இந்த ஆசையை விதைச்சது வினுயுகன்..சின்ன வயசிலிருந்து இப்ப வரை இந்த பீல்டுல தனக்கு னு தனி இடத்தை பிடிச்சும் இன்னும் புதுசு புதுசா கத்துக்கிட்டு நிக்காம ஓடிட்டிருக்கிற யுகன் மை கிரேட்டஸ்ட் இன்ஸ்பிரேஷன்..என்ன கடைசியில இந்த லோக்கல் ட்ர்ம்ப்பும் புடினும் (Trump, Putin)மாறி மாறி சப்போர்ட் பண்ணிக்கிட்டதுல நான் முன்னாடி வந்துட்டேன்..நன்றி..” என இரு இளைஞர்களை பார்த்து கண்ணடித்து கூறியவளை ‘அடிங்’ என விழிகளில் மிரட்டிக்கொண்டிருந்தான் வினு. தீரனுக்கு தன் நிலாக்குட்டியின் வெற்றியில், தன்னை பெருமைபடுத்தியதில் கண்கள் லேசாக கலங்கின.

மேடையை விட்டு இறங்கி தன் அத்தை மற்றும் அன்னையிடம் சென்று கோப்பையை கொடுத்து ஆசீர்வாதம் பெறும் நிலன்யாவை கேமராக்கள் படம் பிடித்தன..ஒரே நாளில் தலைப்பு செய்தியாக மாறி போயிருந்தாள் நிலன்யா.

நிலாவின் தோளில் கை போட்டபடி தீரன்..

“எங்க ட்ரெய்னிங் எடுத்த நிலா..?

கோயம்புத்தூர் ஆட்டோ ஸ்போர்ட்ஸ் க்ளப் ல நான் மெம்பர் மாமா..அங்க ஆரம்பிச்சது என் பயிற்சி..அலிஷா அப்துல்லா, ஆனம் அசீம் போல பேமஸ் வுமன் பைக்கர்ஸை ரோல் மாடலா எடுத்துட்டு தொடர்ந்து ட்ரெயினிங் எடுத்தேன்..முறையா FMSCI லைசன்ஸ் கூட வாங்கிட்டேன் (Federation of Motor Sports Clubs of India)..இது என் முதல் வெற்றி..” என வளவளக்கும் தன் செல்ல ரௌடிப்பேபியை ரசித்தபடி அவர்களை கடந்து சென்றான் வினுயுகன்.

கோப்பையுடன் நுழைந்த மருமகளை வாயிலில் நிறுத்தி பெரிய பூசணிக்காயை வைத்து திருஷ்டி கழித்தார் கமலா. வாழும் காலத்திலேயே தன் வீட்டில் ஒரு வாரிசு வரலாறு படைத்து விட்டதை எண்ணி எண்ணி புளங்காகிதம் அடைந்தான் தீரன். அதீத மகிழ்ச்சியோ/துக்கமோ அவன் பகிர்வது தன் ஆருயிர் நண்பனிடம் அல்லவா..? அருவிக்கரையில் பூக்களை தூவி..

“இந்த வருஷம் சாம்பியன் நம்ம நிலா..மேடையில அவ பேசினது கேட்கும் போ எப்படி இருந்தது தெரியுமா..? கூடிய சீக்கிரம் நீ ஆசைபட்டதை போல அவ வாழ்க்கையை அமைச்சு கொடுப்பேன் டா..” என சலசலக்கும் அருவியினை பார்த்து பேசியவன் சில நிமிடங்கள் கழித்து தன் வீட்டிற்கு கிளம்பினான்.

இரு வாரங்கள் கடந்த நிலையில் ஆரல்வாய்மொழியில் உள்ள VN Riderz அலுவலகத்திற்கு வந்தாள் நிலன்யா. வரவேற்பு பகுதியிலிருந்த பெண்ணிடம்..

“உங்க எம்.டியை பாக்கனும்..

அப்பாயின்ட்மென்ட் இருக்கா..?

இல்லை..நிலன்யா னு சொல்லுங்க..” என இவள் கூறியதும் அப்பெண் இன்டர்காமில் அழைத்து விவரத்தை கூறி பின் நிலாவிடம்..

“நீங்க போலாம்..ரைட் சைட்..” என கை காட்ட அழகிய லேமினேடட் பளபளக்கும் மெரூன் நிற ப்ளைவுட் கதவில் VN Riderz
அடுத்து Trust on Every Turn என பொன்னிற எழுத்துக்களில் மின்ன கதவை தட்டினாள் நிலா.

“கம் இன்..” என்ற கந்தர்வ குரல் ஆளை மயக்கினாலும் அசராது அவனெதிரே வந்து நின்றாள். ஆலிவ் பச்சை நிற முழுக்கை சட்டை, அடர் பச்சை நிற பார்மல் பேண்ட், அளவாய் ட்ரிம் செய்த மீசையுடன், கருமமே கண்ணாய் மானிட்டரில் கண்களை பதித்து பிஸ்தா ரோலை போல மிளிரும் பேரழகனை அப்படியே சுருட்டி கொள்ள தூண்டிய மனதை வெறுத்து அடக்க படாதபாடு பட்டாள் நிலா. அவளை ஒரு முறை ஏறிட்டு பார்த்த வினு சிறு புன்னகையுடன்..

“சிட்..” என கையை காட்ட அமர்ந்தாள். பின் வினு..

“என்ன சாம்பியன்..என்னை அதுவும் ஏமாத்தி கப் வாங்குறவனை பாக்க வந்திருக்கீங்க..?

உண்மையை அக்சப்ட் பண்ணிட்டு அத திருத்திக்குற குணம் தான் நல்ல தலைமைக்கு அழகு சார்..

ஆஹான்..என்ன விஷயம்..?

மோட்டார் ரேஸ் ட்ரெய்னிங் விஷயமா நம்ம ஊர் பொண்ணுங்களுக்கு இலவசமா எனக்கு தெரிஞ்சதை சொல்லி தரவும் என் அனுபவங்களை எடுத்து சொல்லவும் எனக்கு ஒரு ஸ்பாட் தேவைப்படுது..அது உங்க கம்பெனி மூலமா நிறைவேறினா மக்களுக்கு இன்னும் அதிகமா ரீச் ஆகும்..சோ என்னையும் ஒரு சைலன்ட் பார்ட்னரா VN ல சேர்க்க முடியுமா..?” என தான் வந்த காரணத்தை சொல்லி அவனை பார்த்தாள் நிலா. சலனமற்ற முகத்துடன் அவனோ..

“ஓ இப்ப தொழில் ரீதியா உள்ள இறங்கி என்னை எதிர்க்க தயாராயிட்டீங்க..ரைட்..?

ஹலோ..நல்ல விஷயத்துல சுயநலமில்லாத என் பங்களிப்பும் இருக்கனும் ன்றது மட்டும் தான் என் ஆசை, மத்தபடி உங்க மன்னாரு கம்பெனியை திவாலாக்க நினைக்கல..” என காரசாரமாய் பதிலளித்தவளை கண்டு பொங்கிய சிரிப்பை சாமார்த்தியமாக மறைத்தவன்..

“தெரிஞ்சும் ஏன் மேடம் திவாலான மன்னாரு கம்பெனில சேர ஆசபடறீங்க..?

வேண்டப்பட்ட பொண்ணாச்சே னு கொஞ்சங் கூட வச்சி பாக்காம உடனே உடனே வார்த்தைகள் ல திருப்பி கொடுத்துடனும் இல்ல..?

இல்லியா பின்ன..? ஆமா அப்படி என்ன நீங்க எனக்கு வேண்டப்பட்ட கேட்டகிரி..? “ என வந்ததிலிருந்து அவளை தவிர்த்தவன் எதிர்ப்பார்ப்பு நிறைந்த விழிகளுடன் அவளை நேருக்கு நேர் பார்த்து கேட்க..அவன் விழி பாவனையில் தடுமாறிய நிலா..

“உங்கள பத்தி தெரிஞ்சும் சின்ன நப்பாசையில வந்தேன் பாருங்க..என்னை சொல்லனும்..தேங்க்யூ பாஃர் எவ்ரிதிங்..” என நிலா கரம் குவித்து எழுந்து கொள்ள ப்ரணவ் உள்ளே நுழைந்தான். நிலா வை பார்த்து..

“என்ன அண்டை நாட்டு இளவரசி இந்த பக்கம்..?

ம்ம்..ஆடாம எப்படி ஜெயிக்கறது னு டிப்ஸ் கேட்டுட்டு போலாம் னு வந்தேன்..

தோ பார்றா..ஆகாயத்துல பறந்து வந்து கப்படிச்சவங்க தான் எங்களுக்கு க்ளாஸ் எடுக்கனும்..மீட்டிங் டைம் ஆச்சு டா..” என வினுவை பார்த்து கூற க்ரீம் கலர் பிளேசரை எடுத்து மாட்டியபடி வினு அவளை தாண்டி செல்ல ப்ரணவ் அவளிடம்..

“இந்த கம்பெனி ஓனரே நீ தான்..பேருக்கு தான் அவன் MD..நீ கேட்டு வந்ததை ஆல்ரெடி அவன் இம்ப்ளிமென்ட் பண்ணிட்டான் முதலாளி மேடம்..இன்னும் ரெண்டு நாள் ல அபிசியலா உனக்கு மெயில் வரும்..இவ்வளவு கான்பிடன்சியல் மேட்டர் சொல்லிருக்கேன்..என்னையும் கவனிச்சுக்கோங்க மேடம்..” என வெளியேற கண்களில் கண்ணீர் பெருகியது நிலாவிற்கு.

மறந்து விட்டுப்போன அலைபேசியை எடுக்க வந்த வினு தன் லயம் இன்னும் சோக ஸவரத்தில் மிதப்பதை கண்டு அவளை நெருங்கி கன்னத்தை துடைத்து..

“இந்த கம்பெனி என்ன..என்னையவே உன்க்கிட்ட கொடுத்து ரொம்ப நாளாச்சு..கிளம்பு..டேக் கேர் லயா..” என அவள் உச்சந்தலையை லேசாக கலைத்தபடி செல்பவனின் நேசத்தில் நெக்குருகி நின்றுவிட்டாள் யுகனின் பிரிய யுகி.

1778220515028.png

தொடரும்
 

Author: STN - 90
Article Title: NTYU - 22
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
  • Like
Reactions: ஷமீம்