தேடல் 26
அண்ட சராசரத்தையே தன் தலையில் தூக்கி வைத்தது போல சற்று முன் நடந்த நிகழ்வில் நிலைகுலைந்து போன வினுயுகன் மடங்கி அமர்ந்து தன் கைகளால் முகத்தை மறைத்துக்கொண்டான். நிழலாக இருந்த தன் வாழ்க்கைக்கு நிஜமாய் வரமாய் தன் காதலி மீண்டும் உயிர் கொடுப்பாள் என கனவிலும் நினைக்கவில்லை அவன்..’உடலால் சேர்ந்திருப்பது தான் காதலா..என்றுமே என் உள்ளத்தின் அரசி தானே அவள்..?’என்ற நினைவுடன் காலம் தள்ளி விட நினைத்தவனுக்கு தன் நிறைவேறா கனவை வண்ணமயமாய் அரங்கேற்றியவளின் மேல் இன்னுமே மையல் அதிகரிக்க தான் செய்தது.
அமைதியாக வினுவை பார்த்திருந்தவளுக்கு அவன் இன்னுமே நிமிராமல் அவன் முதுகு குலுங்கியதை கண்டு நிலா..
“யுகன்..” என அவனை பிடித்து எழுப்பும் முன் விலகி எழுந்தவன் ஓங்கி அவள் கன்னத்தில் அறைந்திருந்தான். உள்ளம் அதிர, உடல் தடுமாற அவன் கொடுத்த அடியில் பொறி கலங்கி நின்றாலும் அவனை விட்டு தன் பார்வையை விலக்காது கன்னத்தில் கை வைத்து நிற்பவளை காண பொறுக்காது..
“நான் தப்பு செஞ்சேன் னு யார் நம்பியிருந்தாலும் எனக்கு பெருசா வலிச்சிருக்காது..ஆனா நீ..நீ..?..” என அவளை அடிக்க கை ஓங்கியவன் சட்டென தரையில் ஓங்கி ஓங்கி அடித்தான். அவன் பதிலடியில் பதறிய நிலா அவன் கைகளை பிடிக்க முற்பட அவள் முதுகில் அடித்து..
“நீயும் என்னை தப்பானவன் னு நினைச்ச பாரு..இப்ப வரைக்கும் ஆறல தெரியுமா..? ஷிவநந்தன் உண்மைய சொல்ற வரைக்கும் நான் ஒரு நாள் கூட நிம்மதியா இருந்ததேயில்ல..ஒவ்வொரு நொடியும் என் லயாவை நானே கெடுத்தேனா னு என்னை நானே கேள்வி கேட்டு ஆமா, இல்ல னு நரகம் டி..நரகம்..அப்படியே தப்பா நடந்திருந்தாலும் என்னை விட்டு போறளவுக்கு உன்னால எப்படி முடிஞ்சுது..?“ என கண்ணீரோடே வினு மேலும் நாலு சாத்து சாத்த, வலியில் துடித்தாலும் தன்னுயிரானவனின் தீரா வலிக்கு சற்று இதம் கிடைக்கட்டும் என அமைதியாக நின்றாள் நிலா. அடித்தவனுக்கே கை வலிக்க காட்டிக்கொள்ளாமல் நிற்பளின் மீது மேலும் சினம் பொங்க..
“உனக்கு நான் வந்து சொல்லி தான் உன்னை பத்தி தெரிஞ்சுக்கனுமா..? உனக்கா சுயபுத்தியில்லயா..?எவனோ ஏன் உன் மாமன் சொன்னா அதை மீற மாட்டீங்க..னு தெரிஞ்சும் ஏன் டி காலேஜ் படிக்கிறப்போ என்னை முழுங்குற மாதிரி பார்த்த..?உணர்வும் உயிருமா எனக்குள்ள நிறைஞ்ச உன் வாழ்க்கையில என் இடத்துக்கு வந்தவன் என்னை புரிஞ்சிகிட்டான் ஆனா நீ திரும்ப உயிர விட பாத்தே..? அப்படி பார்த்தா நான் அன்னைக்கே செத்து போயிருக்கனும்..ஆனா தப்பே செய்யாம என்னை பெத்த பாவத்துக்கு தண்டனை அனுபவிச்ச என் அம்மா அப்பாக்கு கடைசி வரை அவங்க பையனாவே இருக்கனும் னு உள்ளுக்குள்ள நடைபிணமா வெளிய பழசை மறந்து வாழ்றவனா நடிக்க ஆரம்பிச்சேன்..இப்ப கூட இவ்வளவு அடிகள் வாங்கியும் உன் மனசிலிருக்கிறதை ஓபனா சொல்றியா பாரு..உனக்குள்ளயே வச்சு வச்சு அது ஒரு நாள் வெடிக்கும் போது என்னையும் கூட சேர்த்து உன்னோட கூட்டிட்டு போயிடு..போதும் டா சாமி..முடியல..” என கையெடுத்து கும்பிட்டு இது வரை யாரிடமும் வெளிபடுத்தாத தன் காயங்களை, வேதனையை அவள் காலடியில் சமர்ப்பித்து அவளிடம் முழுவதுமாக கொட்டி தீர்த்தான்.
நிமிடங்கள் நொடிகளாக கரைய இன்னுமே கன்னத்தில் கை வைத்தபடி உதட்டில் ரத்தம் சிறிது கசிய அசையாமல் தரையில் அமர்ந்திருந்தவளை நிமிர்ந்து பார்த்தவன் மேலும் தவிக்க விடாமல் தனக்குள் வாரி புதைத்துக்கொண்டான் வினு. காதலிக்க தொடங்கியது முதல் இக்கணம் வரையிலான பிரிவின் ஏக்கமும், முடிவில்லா காதலும் சுமந்த இரு இதயங்களின் உயிர் சங்கமம்.
அவள் தோள்களில் பட்டு தெறித்த அவனின் கண்ணீர் துளிகள் நிலாவை மேலும் இறுக வைக்க கண்களை இறுக்க மூடியபடி கண்ணீரை கட்டுபடுத்த முயன்றாள். ஆசையாசையாய் காதலை சொல்ல வந்தவள் குற்ற குறுகுறுப்பில் மேலும் அமிழ்ந்து தன்னவனை கூட தழுவாது தனக்குள் மறுகி நிற்பவளிடம் வினு..
“போதும் லயா..குறைந்த பட்சம் என்க்கிட்டயாவது நீ நீயாயிரு..இப்ப கூட என் பிரிசன்ஸ் உனக்கு ஸ்பெஷலா தெரியல னா இந்த வாழ்க்கையே வெறுத்து போகுது..” என உச்சபட்ச விரக்தியில் அவளிடமிருந்து விலகி எழுந்தவனின் கரத்தை இழுத்து தன் மடியில் விழ வைத்தவள் அவனை ஆரத்தழுவிக்கொண்டாள். தடுப்பை உடைத்த வெள்ளமாய் கண்ணீர் பெருக தன் நெஞ்சை தஞ்சமாக்கி கதறிய அவளை உள்ளம் பாரமாக தட்டிக்கொடுத்தான் வினு.
காலமெல்லாம் அவன் மார்பில் இளைப்பாற வேண்டும் என்ற ஆசை அவளுக்குள் நிறைந்திருக்க..
அவள் மடியில் துயில் கொள்ள அவனோ காத்து கிடந்தான். சில நிமிடங்கள் கழித்து தன்னிலை மீண்ட நிலன்யா நிமிர்ந்து தன்னுயிரானவனை பார்க்க அவனும் இவளை தான் பார்த்து கொண்டிருந்தான்.
உலகத்திலேயே உயரமான மலைக்கிராமத்தில் எழில் கொஞ்சும் மலைமுகடுகளுக்கிடையில் ஒளி வீசும் முழுமதியும், காதலிக்க தொடங்கியதிலிருந்து கண்டிராத நெருக்கத்துடன் பூமியில் பிறந்த மன்மதனும் ரதிதேவியும் ஈடில்லா காதலை கண்களில் தேக்கி ஒருவரின் பிடியில் மற்றவர் எனும் அழகிய தருணம். இப்போதும் அவள் விழி வீச்சை தாங்கவியலாது அவள் புடவையின் தலைப்பை தடவி..
“நீ ஹோட்டலியர் தானே..? ஏதோ பொட்டிக் வச்சிருக்கிற மாதிரி யூனிக்கா சேரீஸ் கட்டுறியே..எப்படி..? “ என பேச்சை மாற்றியவனிடம் புன்சிரிப்புடன் இரு கைகளை விரித்தாள் நிலன்யா.
இதற்காகவே காத்திருந்தவன் போல தன் லயாவிடம் சரணடைந்தான் யுகன். அவன் உச்சந்தலையில் நாடியை பதித்து..
“டாடி’ஸ் லிட்டில் பிரின்சஸ் னு சொல்வாங்க ல்ல..எனக்கு அப்பா இல்லைங்கறதே மறக்க வைச்சது என் மாமா..ஆனா என் மாமாவுமே இதோ இந்த கை வரைக்கும் தான்..ஆனா நீங்க..?” என சிறு இடைவெளிவிட்டு அவனை விலக்கியவள் தன் நெஞ்சை சுட்டிக்காட்டி..
“இங்க வரை..” என மீண்டும் நெஞ்சோடு அவனை அணைத்துக்கொண்டு..
“இப்ப சொல்லுங்க..யார் என்கிட்ட ரொம்ப க்ளோஸ்..?
யாருக்கு நான் முன்னுரிமை கொடுத்திருக்கேனாம்..ம்ம்..?” என உரிமையுடன் தட்டிக்கேட்டவளை மிதப்புடன் பார்த்த வினு..
“கொடுக்கலை னா உன்னை யார் விட்டா..?” என்றவன் அவளின் கன்னத்தில் தன் விரல் தடம் பதிந்திருப்பதை கண்டு தன்னையே திட்டிக்கொண்டவன் சட்டென
அவள் இதழ்களை தன் இதழ்களால் மென்மையாக மூடி, உயிராய் நேசித்த காதலை அவளுக்குள் சொல்லாமல் சொல்லிக் கொடுத்தான்.
தலைவனின் முதல் இதழொற்றலில் தலைவி சித்தம் தடுமாறி அவன் தோள்களை இறுக பற்றிக்கொள்ள முழுமதியும் நாணங்கொண்டு மேகத்தில் தன்னை மறைத்து கொண்டது.
இன்னுமே அவன் முகம் பார்க்க தயங்கி தலை குனிந்திருப்பவளின் மடியில் படுத்து கொண்ட வினு..
“ஆமா இங்க தனியாவா வந்த..?” என கேட்க..அவள்..
“மாமா காசா வரைக்கும் வந்து ட்ராப் பண்ணிச்சு..
சரி..இந்த வாழைமட்டை எப்படி திடீர் னு இப்படி பத்திக்கிச்சு..?” என தங்களை சுட்டி காட்டி கேட்க பதிலுக்கு நிலா..
“ம்ம்..லாஸ்ட் ஒன் மன்த்தா இந்த ரப்பர் டயர் பின்னாடி சுத்துனேன் ல்ல..அதான் பக்குனு பத்திகிச்சு..
யார் டி ரப்பர் டயர்..?
வேற யாரு மன்னார் & கோ ஓனர் தான்..” என அவனை தள்ளிவிட்டு எழுந்து ஓடியவளை துரத்தினான் வினு.
தன் பேக்பேக்கை திறந்து சிறிய ஹாட்பாக்சை எடுத்த நிலா அதை திறந்து வினுவிடம் கொடுக்க வியப்பில் விழி விரித்தான்..அவனுக்கு மிகவும் பிடித்த இனிப்பான முந்திரி கொத்தை தானே சமைத்து எடுத்து வந்திருந்தாள் நிலா.
ஒன்றை எடுத்து சுவைத்து பார்த்தவன் அதன் ருசியில் மயங்கி டப்பாவுடன் கீழே அமர்ந்துக்கொள்ள அவன் தோளில் சாய்ந்தவாறு தன் மாமன் நடத்திய லீலைகளை எடுத்துரைக்க அமைதியாக கேட்ட வினு..
“ஓ..அதான் மேடம் என்னை ஆசையா பாக்க வந்தீங்களோ..?
ஆசையா பாக்க மட்டும் வரல கண்ணா..கரெக்ட் பண்ணி கையோட கூட்டி போக வந்தேன்..ஆனா இதுக்கு முன்னாடியே மாமா வந்து உங்கள பாத்து பேசினது, நீங்க ரெண்டு பேரும் கூட்டு சேர்ந்து விட்டு கொடுக்க நினைச்சது, ஏர் ஸ்டன்ட் ல வந்து ஒரு காட்டு காட்டிட்டு போனது இப்படி னு கொஞ்ச கொஞ்சமா என்னை உங்ககிட்ட இழந்துட்டேன் யுகன்..ஷிவ்நந்தனை தாண்டி வேறெதுவும் யோசிக்கவே கூடாது னு இருந்தவளை உங்க தூய்மையான அன்பு அசைச்சு பாத்ததுங்க..இது தான் உண்மை..” என மீண்டும் அவனை தழுவிக்கொண்டாள் நிலா. வினு..
“ஐ க்னோ யூ லயா..டைமாச்சு கிளம்பலாமா..?
ம்ம்..” என எழும் முன் அவனிடம்..
“நான் கேட்ட கேள்விக்கு இன்னும் பதில் சொல்லவேயில்லையே நீங்க..?
என்னது..?
கல்யாணம்..?
இனிமே தான் நடக்க போகுதா..?
ஓ..அப்படி வர்றீங்க..
ஆல்வேய்ஸ் லவ் யூ நிலன்யா..மை லவ்லி லயா..” என அவள் நெற்றியில் முத்தமிட்டவன் தன் பைக்கில் அவளோடு காசாக்கு பறந்தான் வினுயுகன்.
காசாவிலிருந்து தோவாளை செல்லும் வரை பச்சிளங்குழந்தையை மார்போடு அரவணைத்து பாதுகாக்கும் தாயை போல நிலாவை பார்த்து பார்த்து கவனித்து கொண்டான் வினு. எல்லை மீறாத அணைப்புகள் + முத்தங்கள், நினைக்கும் போதெல்லாம் கையோடு கை கோர்த்து தன் நெஞ்சருகே அழுத்திக்கொள்ளும் வளர்ந்த குழந்தையை இன்னும் அதிகமாக பிடித்தது நிலன்யாவிற்கு.
நாட்கள் கண்சிமிட்டும் வேகத்தில் நகர, பெரியவர்கள் தீர்மானித்தபடி வினுயுகன்–நிலன்யா திருமணம், எம்பெருமான் முருகனின் இரண்டாம் படைவீடான கடலலைகள் விளையாடும் திருச்செந்தூரில், விடியற்கால பிரம்ம முகூர்த்தத்தில் இனிதே நடைபெற்றது. மணமக்களுக்கான ப்ரீமியம் பட்டு காம்போவில்(Combo)
கரும்பச்சை நிறப் பட்டுப்புடவையும், அதே நிறப் பட்டுச் சட்டை, வெள்ளி ஜரிகை வேட்டியும் அணிந்து கழுத்தில் செண்பகப்பூ மாலைகளோடு அக்னியை ஏழு முறை வலம் வந்து அமர்ந்தனர். வானத்து தேவர்கள், தேவகன்னியர்கள் அருள்வழங்க, நெருங்கிய சொந்தங்கள் அட்சதை தூவி வாழ்த்த, தன் இன்னுயிர் காதலி நிலன்யாவின் கழுத்தில் மங்கள நாண் பூட்டி, அவளை தன் சரிபாதியாக்கிக் கொண்டான் வினுயுகன். ஏனோ தாலி ஏறிய மறுநொடி இருவரின் கண்களுமே சற்று கலங்க, மணமக்கள் பின் நின்றிருந்த ப்ரணவ் இருவர் தோள்களிலும் தன் கரங்களை வைத்து அழுத்தினான். புகைப்படகலைஞர் இக்காட்சியை அழகாக படம் பிடிக்க அனைவரின் நெஞ்சில் மகிழ்ச்சி நிரம்பியது. இதோ கொட்டிவிடவா என விழ தயாராயிருந்த கண்ணீரை உள்ளிழுத்தபடி தன் நிலாக்குட்டியின் வாழ்க்கையை வசந்தமாக்க வந்தவனை வாஞ்சையுடன் பாத்து நின்றான் விழிதீரன். பின்னே கேட்ட..
“என்ன தங்கச்சி மணிமேகல ய கட்டிக்கொடுத்த பீலிங்கா..?கண்ணை தொட மேன்..ஏற்கனவே தாமிரபரணி ல கரைபுரண்டோடுது..” என கற்கண்டு தட்டை எடுத்து செல்லும் தன் நையாண்டி நாயகியை முறைக்க முயன்று அவளின் மாம்பழ நிற பட்டுபுடவை பாந்தாமாக படிந்திருக்கும் இடையை கண்டு இவன் இதயம் இரண்டாய் பிரிந்து திசைக்கொன்றாய் தாவியது.
மாணிக்கம் மற்றும் வேதாவை கையில் பிடிக்க முடியாதளவு தங்கள் வயதை மறந்து ஒரே மகனின் திருமண வைபவத்தில் மகிழ்ச்சியும் சிரிப்புமாய் இங்குமங்கும் ஓடிக்கொண்டிருக்க மரகதம் கமலாவிற்கு தங்கள் கடமை நிறைவாக முடிந்ததை நினைத்து முருகனை மனமுருக வேண்டினர்.
தொடரும்.

Author: STN - 90
Article Title: NTYU - 26
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.