• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

NTYU - 27

STN - 90

New member
தேடல் 27

சிறு பெண்ணாய் அவளை கண்ட நாள் முதல் சொல்லாமல் நெஞ்சுக்குள் புகுந்த உணர்வு அது காதலென்று உணரும் முன்னரே, நினைத்துப் பார்க்க விரும்பாத பல நிகழ்வுகளை கடந்து, நெடுங்காலம் காத்திருந்த அரிய பொக்கிஷமாய் இன்று தன் மனைவியாக தோளோடு தோள் உரசி நிற்பவளை புன்னகையுடன் நோக்கியவன் திரும்பி கருணை கடலாய் மகனை என்றுமே அரவணைத்துக்கொள்ளும் கந்தப்பனிடம் தங்களை என்றென்றும் ரட்சிக்கும்படி மனமுருக வேண்டினான் வினுயுகன். தன் மகனுக்கு பிடித்தமான வாழ்க்கை அமைந்தால் செந்தூர் ஆண்டவருக்கு மரகத வேல் சாற்றுவதாக வேண்டிக்கொண்டிருந்தார் வேதா. அதன் படி மூன்றரை அடி நீளமுள்ள மரகத கற்கள் பதிக்கப்பட்ட வேலை மணமக்கள் ஆண்டவரிடம் சமர்ப்பித்து பன்னீர் இலை விபூதியை பிரசாதமாக பெற்றுக்கொண்டனர்.

திருமணம் முடிந்த கையோடு அனைவரும் தோவாளைக்கு புறப்பட்டனர். இடையில் அருவிக்கரையில் நிறுத்தி தங்கள் வாழ்வை மலர செய்த மன்னனுக்கு பூக்கள் தூவி வணங்கி வினுயுகன் வீட்டை நோக்கி புறப்பட்டனர். தீரனை தவிர மற்றவர் கிளம்பவும் செந்தாழினி அவனுடன் இருந்து கொண்டாள். கண்கள் கலங்க தன் தோழனை நினைவு கூர்ந்தவனை சிறிது நேரம் கழித்து செந்தா..

“ரெண்டு நாள் ல ரிசப்ஷன்..நிறைய வேலையிருக்கு..கிளம்பலாமா..?” எனக்கேட்டவளை திரும்பி பார்த்தவன்
அமைதியாக அவளுடன் கிளம்பினான்.

வினு வீட்டில் நிலன்யா விளக்கேற்றி மணமக்களுக்கு பாலும் பழமும் கொடுக்கபட்டு அன்று மாலையே மறுவீடு (நிலன்யா வீட்டிற்கு) செல்ல ஏற்பாடாயிருக்க அவர்களை ஓய்வெடுக்குமாறு அனுப்பி வைத்தார் வேதா.

மாலை மறுவீடு வந்த மணமக்களை வரவேற்க அனைவரும் வாசலில் காத்திருக்க காரிலிருந்து இறங்கிய வினுயுகனுக்கு அன்று தீரன் தன் கழுத்தை பிடித்து இழுத்து வந்தது ஏனோ நினைவில் வர முகம் இருண்டது..திடீர் தம்பியை சரியாக உணர்ந்துக்கொண்டு அவன் முன் சென்று சிரம் தாழ்த்தி கரம் குவித்து உள்ளே அழைக்கும் முன் ஆரத்தி தட்டுடன் இருந்த செந்தா கணவனிடம்..

“கைய கீழ இறக்குங்க..” என சத்தமாக ஆணையிட அனைவரும் கலவரத்துடன் பார்த்தனர். தீரன் அவளை முறைக்க..செந்தா வினுவிடம்..

“நீங்க இப்ப இந்த வீட்டு மருமகன்..சோ அவரு தலை குனிஞ்சு நின்னா அது உங்களுக்காகவே இருக்கட்டுமே, உங்களுக்கும் அவமானம் தான்..ஆல்ரெடி ரெண்டு தடவை பெரியவங்க கால் ல விழுந்துட்டாரு..போதுமே..” எனக்கூற சன்ன சிரிப்புடன் சரியென தலையாட்டினான் வினு.

கமலாவிற்கு இனி தன் மகனின் வாழ்வும் மலர்ந்துவிடும் என மகிழ்ச்சியுடன் மணமக்களை வரவேற்று உபசரித்தார். தீரனின் மனமோ உள்ளே குத்தாட்டம் போட வெளியில் நடிகன் சத்யராஜ் போல முகத்தை வைத்துக்கொண்டான்.

வினுயுகன் நிலன்யா சாந்தி முகூர்த்தத்திற்கென ப்ரணவ் மற்றும் தீரன் மேற்பார்வையில் நிலன்யா அறையில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்க பழுப்பு நிற சாப்ட் சில்க் புடவை மஞ்சள் நிற ஜரிகை பார்டருடன் தளர பின்னிய பின்னலில் அளவான மொட்டு குண்டுமல்லி சரங்களென மிதமான ஒப்பனையுடன் முதன்முறையாக மனைவியாய் கணவனிடம் தனிமையும் உரிமையும் எனும் நினைவே அவள் நெஞ்சில் சற்று குளிர் பரப்ப கலவரத்துடன் முழித்து நின்றவளை பார்த்த செந்தாழினி அவள் உள்ளங்கைகளை அழுந்த பற்றி..

“இந்த வயசிலேயே தனியா ஒரு பைஃவ் ஸ்டார் ஓட்டல் ஆரம்பிச்சு அடுத்தடுத்து னு முன்னேறி ஓடிட்டிருக்கும் ஐ கரேஜனோட (Eye Couragen..விழி தீரன் in English) நிலாக்குட்டிக்கு கொஞ்சங் கூட நெர்வஸ்னஸ் வரக்கூடாது.. நார்மலாயிரு நிலா..” என அவளை அனுப்பி வைத்தாள்.

நிலாவை அனுப்பிவிட்டு தன்னறைக்கு திரும்பிய செந்தா கட்டிலில் தந்தையும் மகளும் ஏதோ ஓவியம் வரைந்து கொண்டிருப்பதை பார்க்கவே அழகோவியமாக இருந்தது..மேலும் தலை குனிந்த நிலையில் தாளை பார்த்து வரையும் அவனின் இமைகள் வானில் நேர்க்கோட்டில் பறக்கும் புள்ளினங்களை போல அழகாக இருக்க..’மஸ்காரா போட்டு மயக்குறானே..’ என மனதின் ஓர் மூலையில் விஜய் ஆன்டனி வேறு தாளம் போட தன் கணவனின் இமைகளை இமைக்காமல் பார்த்து நின்ற மனைவியை கண்டு தீரன் குரல் செருமினான். அவன் சத்தத்தில் மீண்ட செந்தா கட்டில் போர்வைகளை மாற்ற ஆரம்பித்தாள்.

தன் அறைக்குள் நுழைந்த நிலன்யா காலியாய் இருந்த கட்டிலை பார்த்து எங்கே தன்னவன் என தேட..அவள் பின்னிருந்து கதவை தாழ் போட்டபடி கைகளை மார்புக்கு குறுக்கே கட்டிக்கொண்டு இவளையே பார்த்து நின்றான் அந்த அல்லியின் வேந்தன்.

வெண்மை நிற பிராண்டட் காட்டன் சட்டையில் மேலிருந்த இரு பட்டன்கள் சற்றே திறந்த நிலையில்,
சிறு கரையிட்ட வெள்ளை வேட்டியணிந்து
மனதை கொள்ளை கொள்ளும் பேரழகனின் கண்களை முதன்முறையாக எதிர்கொள்ள முடியாமல் தவித்து தவிர்த்து நின்றாள் நிலா.

மனைவியின் நாணம் கணவனாய் அவன் உணர்வுகளை கிளர்த்தெழ செய்தாலும் அவள் தவிப்பை போக்க..

“லயா..” என அழைக்க, இரண்டேயெழுத்துக்குள் 1000 தேன் மிட்டாய்களை புதைத்தது போல தன் பெயரை கணவனின் குரலில் கேட்டு அசந்து நின்றாள்.

“ஹேய்..என்னை பாரு..” என வினு அவளருகில் வர சட்டென பின் நகர்ந்தவளின் இடையை அழுத்தி பிடித்தான் வினு. மன்னவனின் உயிர் தீண்டலில் உடல் சிலிர்த்து கண்களை மூடி நின்றவளை கைகளில் ஏந்திய வினு அவளோடு மஞ்சத்தில் சரிந்தான்.

நெற்றியில் ஆரம்பித்த இதழொற்றல் மெல்ல மெல்ல முன்னேற இரும்பு தலைவனின் மென்மையான தீண்டலில் நிலைகுலைந்து போன தரைநிலா தன் அல்லி ராஜனையே இறுக பற்றிக்கொள்ள மலருக்கு வலிக்காமல் தேன் அருந்தும் வண்டாய் நிலாவின் ஒவ்வொரு துடிப்புக்கும்
தன்னையே ஆக்ஸிஜனாய் கொடுத்து பதிலுக்கு தன்னவளை
பூமிக்காற்றும் தீண்டாதபடி
தனக்குள் ஆழமாகப் புதைத்துக்கொண்டான் லயாவின் யுகன்.

பிறைநிலா பருவத்தில் முகிழ்ந்த காதல் இடையில் ஏற்பட்ட வலியில் பதுங்கிய வல்லமையோடு தம் துறைகளில் ஆழமாய் வேரூன்றி உள்ளுக்குள் புதைத்து வைத்த உயிர் நேசத்தை மீட்டெடுத்து முழுமதியாய் ஒளி வீசி இவர்கள் இருவர் அல்ல
ஒருவரே என ஈருடல் ஓர் உயிரில் சங்கமித்து இரு பரிமாணங்களில்
முழுமை பெற்றது.

அதிகாலையில் முதலில் விழித்த வினு தன்னை கட்டிக்கொண்டு ஆழ்ந்த நித்திரையில் இருந்த மனைவியின் இதழ்களை மெதுவாய் முத்தமிட்டு, அவளைத் தொந்தரவு செய்யாமல் சற்றே விலகி எழுந்தான்.

குளித்து தயாராகி வந்தவன், இன்னும் கனவுலகில் திளைத்துக் கொண்டிருந்த மனைவியை மென்மையாக அழைத்தான். விருப்பமின்றி அசைந்தவள் திடீரென கண் திறந்து பார்த்தாள்.

எதிரே காலை கதிரவனாய் மன்னனின் வசீகர முகம் ஒரு புறம் நேற்றிரவு அவன் சொல்லிக் கொடுத்த இனிய “பாடங்கள்” நினைவாக மனதை சிவக்கச் செய்ய..வெட்கம் தாங்காமல் போர்வையை இழுத்து தன்னை மறைத்துக் கொண்டாள்.

“இப்படி லாம் நீ பண்ணா திரும்ப நானும் உன் கூட குளிக்க வேண்டியிருக்கும்..” என அவள் மீது சாய்ந்த கணவனை தள்ளிவிட்டு எழுந்த நிலா ஓடியே போனாள். புது மண தம்பதியர் நேரமே எழுந்து அழகாகத் தயாராகி படிகளில் இறங்கி வருவதைக் கண்டு செந்தாவின் விழிகள் ஆச்சரியத்தில் விரிந்தன.

மரகதம், இதுவரை காணாத பொலிவுடன் ஜொலிக்கும் மகளின் முகத்தைப் பார்த்தவுடன், அவர் மனம் ஆனந்த அலைகளில் திளைத்தது.

தன் மருமகளிடம் கமலா..

“நிலா..விளக்கேத்தி சாமி கும்பிட்டு வாடா..நீங்களும் போங்க மாப்பிள்ளை..” என இருவரையும் அனுப்பி வைத்தார்.

வயல் வேலை முடித்து தீரன் வந்ததும் வெகு நாட்களுக்கு பிறகு அவர்களின் உணவு மேஜையே கலகலவென ஒருவருக்கொருவர் சீண்டிக்கொண்டும் கூடவே நாதஸ்வரமாய் சிறு குயிலின் ஓசையும் என அவர்களின் ஆரவாரம் வாசலை தாண்டி ஒலித்தது. ஒரு காலத்தில் மோட்டார் பந்தயத்தில் எதிரும் புதிருமாய் சண்டையிட்டு கொண்ட காளையர் இவர்கள் தானா என அதிசயிக்கும் வண்ணம் இருவரின் அந்நியோன்யம் அனைவரின் மனதை கவர்ந்தது.

மறுநாள் காலை தொடங்கி நெருங்கிய சொந்த பந்தங்கள் புது மண தம்பதியரை அழைத்து விருந்து கொடுக்க இரவு வீடு திரும்பியவர்களுக்கு சீரகம் ஓமம் போட்டு காய்ச்சிய இளஞ்சூடான நீரை கொடுத்த செந்தா நிலாவிடம்..

“பாலாத்தி தரவா நிலா..?

ஐயோ அக்கா..எதுமே வேணாம்..” என தன் அறைக்கு சென்றாள். மடிக்கணினியில் வேலையாயிருந்த கணவனை தொந்தரவு செய்யாமல் குளித்து வந்தவள் அவனருகே அமரவும்..வினு..

“பைவ் மினிட்ஸ் லயா..

நோ ப்ராப்ளம்..” என கணவனை ஒட்டிக்கொண்டு படுத்துவிட்டாள். ஒரு வாரமாய் தொடர்ச்சியாக ஓய்வு தூக்கமின்றி இருந்தமையால் சடுதியில் உறங்கிய மனைவியை நேராக படுக்கவைத்து தன் கைவளைவுக்குள் அவளை கொண்டு வந்து இருவருக்கும் சேர்த்து போர்த்திக்கொண்டு வினுவும் படுத்து விட்டான்.

மறுநாள் மாலை வினுயுகன் நிலன்யா வரவேற்பு ஆரல்வாய்மொழியில் உள்ள
ஸ்ரீ மணி மஹாலில் மிக பிரமாண்டமாக நடைபெற்றது. புகழ் பெற்ற நிகழ்ச்சி மேலாண்மை குழுவிடம் விழிதீரன் ஒப்படைத்தமையால் அனைத்தும் படு நேர்த்தியாக அரங்கேற வரவேற்ப்பிற்கு வந்திருந்த அனைவரும் மணமக்களை வாழ்த்தி திருப்தியுடன் விடைபெற ஹாலில் ஓர் ஓரமான இருக்கையில் சாய்ந்தபடி விழிதீரன் அனைவரையும் கண்காணித்து கொண்டிருந்தான். இனி அவள் நிலாக்குட்டி அல்ல வினுயுகனின் மனைவி..ஷிவநந்தனின் மனைவியான தருணத்தில் கூட அவளை வேறு வீட்டு பெண்ணாய் நினைக்க தோன்றவில்லையே..இதோ தன் மூத்த மகள் இன்று புகுந்த வீட்டுக்கு செல்கிறாள்..இனி எங்களுக்கும் அவளுக்குமான தொடர்பு ஒரு அளவீடு தான் எனும் நினைவே மனதை பிழிய கண்களை மூடியவனின் கன்னத்தில் நீர்க்கோடுகள்.

அவ்வப்போது தன் கணவனை ஓரக்கண்ணால் அளந்து கொண்டிருந்த செந்தா கிருஷிகாவை அவனிடம் அனுப்பிவிட்டு இவளும் பின் தொடர்ந்தாள். தன் சிம்பாவின் கையை பிடித்தபடி கதை பேசிக்கொண்டிருக்கும் மகள் ஒருபுறம் மனைவி மறுபுறம் நடுவில் மகனென நிறைவான குடும்பஸ்தனாய் தன் மகனை காண்கையில் கமலாவிற்கு கண்களில் கண்ணீர் குளம் கட்டியது.

மேடையிலிருந்தாலும் தன் பிரியமான எதிரியை பார்த்த வினு கிடைத்த சிறு ஓய்வு நேரத்தில் தன்னவளிடம்..

“உன் மாமனுக்கு என்னவாம்..?

என்னை பிரிஞ்சி இருக்க போகுதில்ல..அதான்..

ஏன் நம்ம வீடு நிலா லயா இருக்கு..?

மாமாவை வம்பிழுக்கல னா தூக்கம் வராதா உங்களுக்கு..?

அவனை வம்பிழுக்குறதே அவன் மேல அம்பு பாயறதுக்குதான்..

அது புரிஞ்சி தான் அமைதியாயிருக்கோம்..

இல்லை னா..?

ஹெவியா தண்டனை கிடைக்கும்..என் கோர்ட் ல..என் ஸ்டைல் ல்ல..” என அவன் மட்டுமே பார்க்கும் படி நாக்கால் கன்னத்தை சுழற்றி சிரித்தவளிடம் சொக்கி தான் போனான் லயாவின் லியோ.

வரவேற்பு முடியும் தருவாயில் வந்த மான்யாவை வரவேற்ற செந்தா..

“ஆர் யூ ஆல்ரைட்..?

எனக்கென்ன..பைஃன்..
காலைல தான் ஜோத்பூரிலிருந்து வந்தேன் டா..டிராவல் டயர்ட்..

சரி வா..” என அவளுடன் மேடையில் ஏற வினு, லயாவின் ஈடு ஜோடி அழகை கண்களில் நிரப்பிக்கொண்டு மனதார வாழ்த்தியவள் இறங்கி செல்லும் முன் ப்ரணவ்விடம் கண் காட்ட அவளை கண்டும் காணாது நின்றான் ப்ரணவ். தளர்ந்து செல்லும் மான்யாவை பார்த்த வினு அவளிடம் பேச வேண்டும் என மனதில் குறித்து கொண்டான்.

கிடைத்த தனிமையில் ப்ரணவை சந்தித்த மான்யா அவனிடம் ஒரு கார்டை கொடுத்து..

“நாளைக்கு இந்த இடத்துக்கு வா..என் காதலை ப்ருவ் பண்ண நான் ரெடி..பயப்பட வேண்டாம்..என் கசின் வீடு தான்..அவன் இப்ப ஜெய்பூர் ல இருக்கான்..” என்றவள் அவன் பதிலை கேட்க மனமின்றி சட்டென வெளியேறினாள். இதுவும் ஒரு வகை நாடகமோ என சந்தேகம் வந்தாலும் எது வரை அவளின் காதலின் ஆழம் என அளந்து பார்க்கவே ஆசைபட்டான் மான்யாவின் ப்ராணநாதன்.

தொடரும்.

IMG_20260520_102920.jpg
 
Top Bottom