NTYU - 3

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

STN - 90

Member
May 5, 2026
39
50
18
Bengaluru
தேடல் 3

IMG_20260305_072305_0.jpeg

தீரனுக்கு சொந்தமான வயல்வெளிகளில் மேற்கில் இரு ஏக்கர் பரப்பளவில் உள்ள வயல்வரப்பில் நீர் பற்றாக்குறையால் தரிசு நிலமாக இருப்பதால் அங்கிருந்த தரை மட்ட கிணறை தூர் வாரி நீர் ஊற்றுகள் நிறைய சுரப்பதை பார்த்து அங்கு ஆழ்துளை கிணறு (போர்வெல்) போட அதற்கான அனுமதி வேண்டி அன்று காலை ஆரல்வாய்மொழியில் உள்ள நீர்வள ஆதார துறை அலுவலகத்துக்கு நிலன்யாவோடு வந்திருந்தான் விழிதீரன்.

தலைமை அதிகாரி வருவதற்கு தாமதமாகும் என்பதால் அலுவலக வராண்டாவில் உள்ள இருக்கையில் இருவரும் அமர்ந்தனர். நிலா தன் மாமனிடம்..

“இந்த இடம் செம யா இருக்கு ல்ல மாம்ஸ்..?

அதுக்கென்ன இப்போ..?

ஒரு சின்ன ரைட் போகட்டா..இங்கயே க்ரவுண்டுக்குள்ளவே ப்ளீஸ்..” என கெஞ்சியவளை முறைத்தான் தீரன். அவன் முறைப்பில் அமைதியானவள் தன் போனை பார்க்க..அவளிடம் பைக் சாவியை கொடுத்து..

“கவனமா ஓட்டனும்..நான் பார்த்துட்டே இருப்பேன்..

தங்க மாம்ஸ்..” என அவன் தாடையை பிடித்து கொஞ்சியவள் குதூகலித்து ஓடவும் அங்கிருந்த பெண்களை விட உயரமாய், பாதாம் நிற மேனியதில் பாந்தமாக தழுவியிருந்த மெரூன் நிற டோலா சாஃப்ட் சில்க் புடவை பொன் நிற சன்ன கரையுடன், மீண்டும் மீண்டும் பார்க்க தூண்டும் அழகிய வானவில் ஒன்று சிறு முகச்சுளிப்புடன் இருவரையும் பார்த்து செல்வது தெரியாமல் பாசத்தை பிழிந்து கொண்டிருந்தனர் மாமன் மகனும் அத்தை மகளும்.

சொன்னதை கேட்கும் கிளிப்பிள்ளை போல ஒரு சுற்று ஓட்டியபின் தன் மாமனிடம் வந்து சத்தமில்லாமல் அமர்ந்துக்கொண்டாள் நிலா. ஆசியாவிவேயே அதி வேகமாக காற்று வீசக்கூடிய பேரூராட்சி ஆரல்வாய்மொழி என பேர் பெற்றதால் என்னவோ சில்லென வீசிய வேப்ப மர காற்றில் நிலா வலது கண்ணில் தூசி விழவும்..

“ஸ்ஸ்..” என கண்களை தேய்த்துக்கொண்டாள். தன் மொபைலில் மூழ்கியிருந்த தீரன் சட்டென நிமிர்ந்து பார்த்து..

“ஹேய் …ஏன் இப்படி கண்ணை கசக்குற..? கைய எடு..” என தட்டிவிட..நிலா..

“கண் ல ஏதோ தூசி விழுந்திருக்கு மாமா..

ஒரு நிமிஷம் இரு..” என எழுந்து நிலாவின் முகமருகே குனிந்து அவள் விழியில் ஊதிவிட்டான். போன் பேசியபடி வெளியே வந்த அதே வானவில்லின் கண்களுக்கு மீண்டும் இவர்கள் விருந்தாக கடுங்கோபத்துடன் தன் கேபினுக்கு திரும்பி சென்றது. ஊரின் எல்லையில் அமைந்திருந்த அலுவலகம் என்பதால் அங்கு பொதுவாக மக்கள் கூட்டம் அதிகமில்லாது ஒரு பூங்காவை போல காட்சியளிக்கும். பக்கத்தில் ஓர் சிற்றோடை ஓடுவதால் ஆங்காங்கே ஆணும் பெண்ணுமாய் காதல் எனும் பெயரில் அதன் புனிதத்தை கெடுக்கும் அவலத்தை அனுதினம் பார்த்து வெறுத்து போயிருந்தனர் அங்கு பணிபுரியும் பணியாளர்கள்.

சில நிமிடங்கள் கழித்து ப்யூன் தீரனை நெருங்கி..

“மேடம்..உங்களை கூப்பிட்டாங்க..” என சொல்லவும் தீரன் நிலா கேபினுக்குள் நுழைந்தனர்.

இடது கையால் தன் செயின் டாலரை திருப்பிக்கொண்டே முக்கியமான கோப்பில் பார்வையை பதித்து தலை நிமிர்ந்து பாராமல் இருந்த இள வண்ண மங்கை தலைமை அதிகாரியாக இருப்பாள் என சற்றும் எதிர்ப்பார்க்கவில்லை தீரன்.

தலை குனிந்த தாமரையை வியப்புடன் பார்த்து நின்றவனின் விழிகள் தானாக அங்குள்ள ‘செந்தாழினி..செயர் பொறியாளர்..நீர்வள ஆதார துறை’ எனும் பெயர் பலகையை கண்டு புருவங்களை உயரத்தினான்.

“என்ன விஷயமா என்னை பாக்க வந்திருக்கீங்க..?” அதே நிலையில் வாயசத்தவளின் குரல் வேணுகானமாய் காதுக்குள் ரீங்காரமிட சில நொடிகள் சிலையாகி நின்றான் தீரன். அசையா மாமனை கண்ட நிலா அவன் கையை பிடித்து உலுக்க..நிமிர்ந்து இருவரையும் கேள்வியாக பார்த்தாள் செந்தாழினி.

பிறக்கும் போதே இதே வனப்புடன் பிறந்தவளா இல்லை என் கண்களுக்கு மட்டுமே பேரழகாக தெரிகிறாளா என வந்த வேலையை மறந்து நின்றவன் நிலா உலுக்கவும்..நிதர்சனத்திற்கு வந்தான்..குரலை செருமிக்கொண்டு..

“நாங்க தோவாளை லிருந்து வர்றோம்..எங்க வயலுக்கு போர்வெல் போடற விஷயமா போன வாரமே அப்ளை பண்ணிருந்தேன்..இன்னிக்கு வர சொன்னாங்க..

ஓ..ஒரு நிமிஷம்..” என தன் அருகில் உள்ள ஒலி பட்டனை தட்ட அவளின் பிஏ வந்தாள். பார்ப்பதற்கு பால் பணியாரம் போல வடகத்திய சாயலில் இருந்த மான்யா விழிதீரனை கண்டு கண்களை விரித்தாள். செந்தாழினி..

“மான்யா..போர்வெல் பெர்மிஷன் சம்பந்தமா இவங்க பைஃல் எங்கே..?

இதோ..இங்கிருக்கு மேடம்..” என அலமாரியில் இருந்து எடுத்து கொடுத்தவளின் கண்கள் இன்னும் தீரனையே மொய்க்க நிலா சிரிப்பை மறைத்து அமைதியாக நின்றிருந்தாள்.

சில நிமிடங்கள் அந்த பைஃலை பார்வையிட்டவள் சட்டென மேஜையில் விட்டெறிந்து தீரனை பார்த்து..

“உங்க ஏரியாவில் இந்த வருஷம் மட்டுமே நிறைய பர்மிஷன் கொடுத்தாச்சு..இப்படி அங்கங்க போர் போட்டு நிலத்தடி நீரை உறிஞ்சி எடுத்தா வருங்கால சந்ததிங்களுக்கு தண்ணீர் கேப்சூல் ல தான் கிடைக்கும்..எனிவே இந்த வருஷம் கோட்டா ஓவர்..உங்க பைஃல் ரிஜக்டட்..நீங்க கிளம்பலாம்..” என வாசலை பார்த்து கை காட்டினாள் செந்தா.

பைஃலை தூக்கி போட்டதிலேயே சினம் மேலோங்க கட்டுபடுத்தி நின்றவன் அவள் மறுத்ததும்..சிவப்பேறிய விழிகளுடன்..

“என் பைஃலை நல்லா படிச்சு பாத்தீங்களா..?எங்க தோட்டத்து கிணறிலிருக்கிற தண்ணிய எடுக்க தான் பெர்மிஷன் கேட்டது..புதுசா ட்ரில் பண்றோம் னு நா சொல்லவேயில்லயே..” என கை கட்டியபடி கேட்டவனை கோபத்துடன் ஏறிட்டவள்..

“கிணறோ, வாய்க்காலோ புதுசா போர் போட பர்மிஷன் கிடைக்காது சார்..உங்களை மட்டுமே அட்ரஸ் பண்ண முடியாது..மான்யா நெக்ஸ்ட் வரச்சொல்லுங்க..” என தன் வேலைகளை கவனிக்க கடும் சீற்றத்துடன் நிலாவை இழுத்துக்கொண்டு வெளியேறினான் தீரன். மான்யா அவளிடம்..

“இப்ப வந்தவர் தோவாளை ஜமீன்தார் வம்ச பையன் மேம்..பையனுக்கு விவசாயம் தான் எல்லாம் அதும் இயற்க்கைக்கு உட்பட்டு தான் எதையும் செய்வாப்ல..ஒன் மோர் திங்..மோட்டார் ரேஸ் லயும் இவர் தான் எப்பவும் சாம்பியன்..” என தீரன் புகழ் பாட எழுந்து நின்ற செந்தா..

“ஸ்டாப் திஸ் நான்சன்ஸ்..படிச்சவங்க தானே அவங்கெல்லாம்..? பப்ளிக் ப்ளேஸ் ல எப்படி நடந்துக்கனும் னு தெரியாது..? இன்டீசன்ட் பெல்லோஸ்க்கு சர்டிபிகேட் வேற..உங்க வேலையை பாருங்க ப்ளீஸ்..”என பொரிந்து தள்ளியவளை குழப்பமாக பார்த்தபடி வெளியேறினாள் மான்யா.

“எக்ஸ்க்யூஸ் மி..” என்ற அழுத்தமான குரலில் செந்தா நிமிர்ந்து பார்க்க..அவள் விழிகளை மட்டுமே பார்த்தபடி உள்ளே வந்த தீரன்..

“முக்கியமான பேப்பர் மிஸ்ஸாயிடுச்சு..” என மேஜையை காட்ட, அதை எடுத்து தரும் முன் தீரன்..

“நானே எடுத்துக்கிறேன்..” என அவளருகில் வந்தவன் அவள் நகரும் முன் மறித்து அவள் இடையை தாண்டி பேப்பரை எடுத்தவாறே சற்று குனிந்து அவள் காதருகில்..

“இந்த பொசிஷன் ல நம்மை பார்க்குற மத்தவங்களுக்கு நான் உன்னை கட்டி பிடிச்சிருக்கிற மாதிரி தான் தெரியும்..ஆனா உண்மை என்ன னு..” என அவனை அறைய ஓங்கிய அவள் கரத்தை தடுத்து பிடித்தவன்..பேப்பரோடு அவளை வளைத்து பிடித்து..

“உன்னோட இந்த இம்மிடியட் டெம்பர்க்கு நிஜமாவே கிஸ்ஸடிச்சா என்ன னு தோணுது..” என அவள் கன்னத்தில் முத்தமிட நெருங்கியவன்..பின்..

“ஆனா உன்னை மாதிரி ஆத்திர அவசரத்துக்கு பிறந்தவன் நானில்ல..” என அவளை பட்டென உதறிவிட்டு வெளியேறினான்.

தீரனின் ஆளுமையும் தோற்றமும் வேறு கதை பேச சற்று முன்னர் ஏன் இப்பொழுதும் அறிமுகமில்லாத பெண்ணிடம் எல்லை மீறுவான் என கிஞ்சித்தும் எதிர்ப்பார்க்காத செந்தா சில நொடிகள் அசைவின்றி நின்றவள் மெல்ல தன் இருக்கையில் அமர்ந்தாள். ஆடவனின் அருகாமை தந்த அருவெறுப்பு, அதையும் தாண்டி அவளை வதைத்த வார்த்தைகள் ஆறா ரணமாய் நெஞ்சுக்குள் இறங்க மனதை ஒருநிலைபடுத்தி தன் வேலைகளில் கவனம் செலுத்தினாள் செந்தா.

கடுப்பான முகத்துடன் வண்டி ஓட்டிக்கொண்டிருந்த மாமனை எடை போட்டவாறே மொபைலில் செந்தாழினியின் முழு ப்ரபைலையும் அலசி ஆராய்ந்து கொண்டிருந்தாள் நிலன்யா.

போர்வெல் விஷயத்தை தற்காலிகமாக கைவிட்டவன் ஒரு வாரம் கழித்து ராஜீவ் நன்றாக தேறி வந்ததும் அவனுடன் தோவாளை ஏரியில் அடுத்த ஒரு வருடத்திற்கான மீன் பிடி டென்டர் மற்றும் ஏலம் விடப்படும் மையத்திற்கு வந்திருந்தான் தீரன். அவனுக்கே முன்னரே ஆத்ம நண்பனுடன் கால் மேல் கால் போட்டபடி நாற்காலியில் நன்றாக சாய்ந்து அமர்ந்திருந்தான் வினுயுகன்.

இரையை விழுங்கும் கழுகு பார்வையுடன் அமைதியாக முன் வரிசை இருக்கையில் சென்று அமர்ந்தனர் இருவரும். சற்று நேரத்தில் சாம்பல் நிற சில்க் காட்டன் புடவையில் மான்யாவுடன் வந்திறங்கிய செந்தாழினி கூட்டத்தின் நடுவே சென்று அமர்ந்தாள். தீரனின் புறம் பார்வையை சிறிதும் திருப்பாமல் படிவங்களில் பார்வையை பதித்த பாவையின் செயலில் தீரனுக்கு லேசாக புன்னகை அரும்பியது. தீரனை பார்த்து செந்தாவின் பின் நின்று சினேகமாய் கையசைத்த மான்யாவையே வெறித்து பார்த்தவாறு இருந்த பிரணவ் வை தற்செயலாக பார்த்தாள் மான்யா. சட்டென பார்வையை திருப்பிய மாயவனில் சிரிப்பு வர அவனை மட்டுமே பார்த்தபடி நின்றாள் மாயக்கன்னி.

ராஜீவிடம் தீரன்..

“எனக்கு இப்பவே ரிசல்ட் தெரிஞ்சிடுச்சு தல..

எங்கன டா..?

தோ அந்த பஃபூனுக்கு தான் நெக்ஸ்ட் இயர் கான்ட்ராக்ட்..

எப்படி கன்பார்மா சொல்றாய்..?

குறைச்சு வெயிட் செய்து நோக்காம்..பொறு..” என வசதியாக சாய்ந்து அமர்ந்தான் தீரன்.

பகைவனின் ஒவ்வொரு அசைவையும் ஏன் அவன் கள்ள சிரிப்பையும் கூர்மையாக உள்வாங்கியபடி சத்தமின்றி இருந்தான் யுகன்.

அனைவரும் வந்ததும் ஒவ்வொரு டென்டர்களாய் வாசித்து இறுதியில் வினுவின் நண்பன் சுகுமாருக்கு அடுத்த வருட முழுவதும் மீன் பிடி உரிமை வழங்கப்படும் என அறிவித்தாள் செந்தா.

அதே புன்னகையுடன் பாவையை விட்டு இம்மியும் விலகாது பார்வையை பதித்திருந்த தீரனின் விழிகள் செந்தாழினியின் கையை குலுக்கிய வண்ணம் நெடுநேரமாய் சிரித்து பேசிக்கொண்டிருந்த வினுவை கண்டு சட்டென தீக்கங்குளாய் மாறின.

சில நிமிடங்களில் கூட்டம் களைய தன் காரை நோக்கி சென்று கொண்டிருந்த செந்தா சட்டென குனிந்து சிறு கல்லை எடுத்து தீரனின் கால்களுக்கு அருகில் குறி பார்த்து அடித்தாள். என்ன நடந்தது என அனைவரும் திகைப்புடன் அவளையே பார்க்க சிறிதும் அசையாது அமர்ந்திருந்தவனை நோக்கி..

“உங்க கால் பக்கத்துல பெருச்சாளி ஒன்னு ஓடிச்சு..அதான் அடிச்சேன்..பாத்து பத்திரமா இருங்க..” என அளவான புன்னகையுடன் காரை நோக்கி செல்பவளை ரசனையுடன் பார்த்திருந்தான் தீரன்.

இருவரின் பேச்சை கேட்டு குழம்பிய ராஜீவன் தீரனை உலுக்கி..

“அடேய்..எந்தா இது..?

வழக்கம் போல நம்ம பக்கம் ஸ்பை வச்சி நம்ம ரேட்க்கு கீழ கோட் பண்ணி வாங்கிட்டான் அவன்..” என சாதாரணமாய் சொல்லவும் ராஜீவ்..

“யாரது..?

தெரிஞ்சி இனி என்ன யூஸ்..?கிளம்பலாம்..”என எழுந்தான் தீரன். ஆனால் அவன் மனமோ சற்று முன் ஏனோ தனக்கு உரிமைபட்டவளிடம் போல வேண்டாத எதிரியவன் கைக்குலுக்கியதையே நினைத்து நினைத்து வெறியேற்றிக்கொண்டிருந்தான். அத்தோடு இதற்கு ஒரு முடிவுரை வழங்கவும் ஆயத்தமானான்.

தொடரும்.
 
Last edited:

Author: STN - 90
Article Title: NTYU - 3
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

Gowri Karthikeyan

Well-known member
May 5, 2026
1,289
370
83
Chennai
அடடே....பிரணவ் ஓட ஆள் மான்யா தான் போலவே.....
ஆன ஏன் லவ் FAILURE போல சோகமா இருக்கான்.....
தீரன் என்னடா அதுக்குள்ள POSSESSIVENESS இப்படி பொங்குது🤭🤭🤭🤭🤭🤭
Hmm வினு ஜோடி தீரன் கூட க்ளோஸ் போல....தீரன் ஜோடி வினு ஓட பிரெண்ட் போலவே..... interesting.....

ஆமா இவங்களுக்கு என்ன சண்ட அப்படி????

செந்தா அவசர குடுக்கையா இருக்க
 
  • Haha
Reactions: STN - 90

STN - 90

Member
May 5, 2026
39
50
18
Bengaluru
அடடே....பிரணவ் ஓட ஆள் மான்யா தான் போலவே.....
ஆன ஏன் லவ் FAILURE போல சோகமா இருக்கான்.....
தீரன் என்னடா அதுக்குள்ள POSSESSIVENESS இப்படி பொங்குது🤭🤭🤭🤭🤭🤭
Hmm வினு ஜோடி தீரன் கூட க்ளோஸ் போல....தீரன் ஜோடி வினு ஓட பிரெண்ட் போலவே..... interesting.....

ஆமா இவங்களுக்கு என்ன சண்ட அப்படி????

செந்தா அவசர குடுக்கையா இருக்க
Nice analysis sis😂😂