தேடல் 4
ஒவ்வொரு வருடமும் மார்கழி தொடங்கி மாதம் முழுவதும் அதிகாலையிலேயே நீராடி அங்குள்ள ஸ்ரீ கிருஷ்ணசுவாமி திருக்கோயிலுக்கு சென்று திருப்பாவை பாடி பகவான் ஸ்ரீ கிருஷ்ணரை வணங்குவதை வழக்கமாக வைத்திருந்தாள் நிலன்யா.
பெரும்பாலும் தன் மாமனோடு, தவறினால் தன் அன்னை மற்றும் அத்தையுடன் தவறாமல் சென்று விடுவாள்.
இறுதியாண்டு முடித்து தனது நீண்ட நாள் கனவான தேசிய அளவிலான மோட்டார் பந்தயத்தில் ஒரே ஒரு முறை கலந்துக்கொள்ள வேண்டும் என்பதே அவளின் முதன்மையான வேண்டுதல்.
அன்று சனிக்கிழமை கல்லூரி விடுமுறை என்பதால் நிலாவோடு அவள் தோழிகளும் சேர்ந்து கொள்ள அதிகாலையில் தன் மாமா மெய்க்காப்பாளனாய் பின்னால் மெல்ல நடந்து வர ஏதோ நாட்டின் ஜனாதிபதியை அரவணைத்து பாதுகாக்கும் சீஃப் கமாண்டோ போல கெத்துடன் தோழிகள் புடை சூழ கோயிலுக்குள் நுழைந்தாள்.
சில நிமிடங்களில் தீரனுக்கு அழைப்பு வரவே, மொபைலை காதில் வைத்தபடி வெளியே வந்தான். வாழைத்தோப்பில் இரவோடு இரவாக குலை தள்ளிய மரங்களை மட்டும் வெட்டி வீசியுள்ளனர் கயவர்கள் என கேட்டதும் நெஞ்சம் பதறியது அவனுக்கு.
தன் மாமனை தேடி வந்த நிலன்யாவை பார்த்து..
“நிலா..நம்ம வாழை மரங்களை யாரோ வெட்டி எறிஞ்சிருகாங்க..நான் சீக்கிரமா போகனும். உடனே கிளம்பு..” என கூறவும் அதிர்ந்தாள் நிலா. கோயிலை திரும்பி பார்த்துவிட்டு..
“இன்னும் பூஜை முடியல மாமா..தவறாம பூஜையில கலந்துக்கிட்டு வர்றேன்..அதான் விடிஞ்சிடுச்சே..பிரண்ட்ஸ் கூட சேஃபா வந்துடறேன்..நீ போய் பாரு..
“ம்ப்ச் உன்ன விட்டு எப்படி..?” என தயங்கியவனை..
“இது நம்ம ஊரு மாமா..அதும் தீரன் மாமன் பொண்ணுக்கிட்ட யாராவது வாலாட்ட முடியுமா..?பூஜை முடிஞ்சதும் சேஃபா வந்துடறேன்..” என அனுப்பி வைத்தாள் இதோடு தன் தலையெழுத்து மாறப்போவதை அறியாமல்.
தன் வாழைத்தோப்பில் நுழைந்தவன் மண்ணில் சாய்ந்த மரங்களை கண்டு அவன் நெஞ்சில் இரத்தம் வடிந்தது. காவலுக்கு படுத்திருந்தவனை நெருங்கி விசாரிக்கலாம் என்றால் அவன் முழு போதையில் இருந்தான். பார்த்து பார்த்து வளர்த்த வாழை கன்றுகளை நாசமாக்கியவர்களை கொல்லும் வெறி வந்தது தீரனுக்கு. ஒருவாறு மனதை தேற்றி அடுத்து என்ன என யோசிக்கலானான் தீரன்.
திருப்பாவை பூஜை முடிந்து வீட்டிற்கு வந்து கொண்டிருந்தாள் நிலா. தோழிகள் அனைவரும் அவர்கள் வீட்டிற்கு செல்ல தனியே தங்கள் வீதிக்கருகில் வந்து கொண்டிருந்தவளை தாண்டி சென்று நின்ற காரில் முகமூடி போட்டு இறங்கிய ஒருவன் அவள் வாயை பொத்தி அவள் திமிற திமிற அவளை காருக்குள் தள்ளி அவள் முகத்தருகே மயக்கமருந்து ஸ்ப்ரே அடிக்க மயங்கி சரிந்தாள் நிலா. அவளை சரியாக உட்கார வைத்தவன்.
“வண்டியை எடு டா..அண்ணன் சொன்ன ஸ்பாட்டுக்கு போ..” என சொல்ல கார் சீறி பாய்ந்தது.
வாழை மரங்களை அப்புறப்படுத்தி தனக்கு பரிச்சயமான நண்பனின் உதவியுடன் அன்றே அவன் தோப்பு மற்றும் வயவ்வெளிக்கு சிசிடிவி கேமரா பொருத்துவது தொடர்பாக பேசி முடித்து வீடு வர நண்பகல் ஆனது.
தனியே வந்த தீரனிடம் கமலா..
“நிலா எங்க தம்பி..?” என கேட்டதும் திக்கென்றிருந்தது தீரனுக்கு. வேகமாக விருந்தகத்தை நோக்கி ஓடினான். உணவு பரிமாறி கொண்டிருந்த அத்தையை நெருங்கி..
“அத்தை நிலா இங்க வந்துச்சா..?
இல்லயே..உன் கூட தான கோயிலுக்கு வந்துச்சு..? “ என கூறவும் தலையில் கை வைத்து அமர்ந்து விட்டான் தீரன். அவள் மொபைலுக்கு அழைப்பு விடுக்க அணைத்து வைக்கபட்டிருப்பதாய் தகவல் வந்ததும்
மூச்சு விடவும் மறந்து அமர்ந்திருந்தவனை நெருங்கி மரகதம்..
“ராசா..நிலா எங்க யா..?” என கேட்டது தான் தாமதம் தன் தலையில் ஓங்கி ஓங்கி அடித்து கதறினான். நெஞ்சை அழுந்த பற்றியபடி தன் மருமகனையே வெறித்தார் மரகதம்.
‘நிலாக்குட்டி எங்க டா இருக்க..? உன்னை பத்திரமா பாத்துக்காம விட்டேனே..’என இதயம் இடைவிடாமல் ஓலமிட ஓங்கிய குரலில் வெடித்து அழுதவனின் குரலில் பதறியடித்து ஓடி வந்தார் கமலா. ஓரிரு நிமிடங்களில் தன் உணர்வுகளை அடக்கியவன் அத்தையை நெருங்கி அவர் கைகளை இறுக பற்றினான் தீரன்.
“என்னை நம்புங்க அத்தை, வந்தா நான் நம்ம நிலாக்குட்டியோட தான் வருவேன்..ம்மா பார்த்துக்கோ..” என்றவன் புயலென வெளியேறி தன் பைக்கில் சீறி பாய்ந்தான்.
மின்னல் வேகத்தில் வினுயுகன் வீட்டை நெருங்கியவனுக்கு பூட்டபட்டிருந்த இரும்பு கேட் வரவேற்க, பக்கத்தில் விசாரித்தான் தீரன். வீட்டு விசேஷமாய் குடும்பமாக அனைவரும் இரு தினங்களுக்கு முன் கன்னியாகுமரி சென்றுள்ளனர்..நாளை வரக்கூடும் என தெரிவிக்க குழம்பி நின்றான்.
விஷயத்தை கேள்விபட்டு ஓடோடி வந்தான் ராஜீவன். அடுத்த கட்டமாய் தெரிந்தவர், தெரியாதவர்களையெல்லாம் விடாமல் அழைத்து நிலா அங்கே வந்தாளா என விசாரித்தபடியே மாலை வரை பைக்கில் தோவாளை நகரத்தை சுற்றி சுற்றி வந்தனர்.
அப்பொழுது ராஜீவனுக்கு அழைப்பு வர, கேட்ட செய்தியில் அதிர்ச்சியில் தீரனின் தோளை அழுத்தினான். நண்பனின் அதிர்வை கண்டு கலக்கத்துடன் தீரன்..
“என்ன டா..?
நிலா ன்ற மொபைல் ல லாஸ்ட் காட்டின டவர் செக்கர்கிரி மலைப்பிரதேசமாம் டா..” எனக்கூற ஒரு கணம் தீரனின் பைக் அல்லாடியது. சட்டென வண்டியை கட்டுக்குள் கொண்டு வந்தவன் காற்றை கிழித்து கொண்டு பறந்தான் மலையை நோக்கி.
இதற்க்குள் ராஜீவ் கமலாவிடம் விஷயத்தை சொல்லவும்
வாசலையே வெறிக்க பார்த்தபடி இருந்த மரகதத்தை எப்படி தேற்றுவது என தவித்தவர் பக்குவமாக எடுத்துரைத்து அவரையும் கூட்டிக்கொண்டு கிளம்பினார்.
தோவாளை அருகிலுள்ள செக்கர்கிரி மலைப்பகுதி பல குகைகளை கொண்ட சிறிய மலையாகும்..மலை மேல் ஸ்ரீ சுப்ரமணிய சுவாமி திருக்கோயில் உள்ளது. மலைப்பாதையில் தீரனின் வண்டி சீறி பாய அங்குள்ள மரத்தில் கிழிந்தபடி ஊசலாடிக்கொண்டிருந்த நிலாவின் துப்பட்டா வை கண்டு கண்கள் சிவக்க வண்டியை அப்படியே தரையில் போட்டவன் அந்த மரத்தை நோக்கி ஓடினான். வண்டியோடு தடுமாறி விழுந்த ராஜீவன் மெல்ல எழுந்து அமர்ந்தான்.
மலைப்பாதையிலிருந்து சற்று தள்ளி மண்டிய புல் புதர்கள் மறைந்திருந்த ஒர் குகையில் கை, கால்கள் கட்டபட்டு வாயில் ப்ளாஸ்டர் ஒட்டப்பட்டு மயங்கி கிடந்தாள் நிலா.
மெல்ல விழிப்பு வர முயன்று கண்ணை திறந்து பார்த்தவளுக்கு தன்னை இறுக்கி அணைத்தபடி தன் தோளின் மேல் முகத்தை மறைத்தவாறு படுத்திருந்த உருவத்தை கண்டு திடுக்கிட்டவளின் உடல் தூக்கி வாரி போட்டது..அவள் அசைவில் சற்று நகர்ந்த உருவத்தை பார்க்க மேல் சட்டையின்றி கண் மூடியிருந்த வினுயுகனை கண்டு
அதிர்ச்சியில் கண்கள் விரிந்தன.
இருவரின் ஆடைகளும் கசங்கிய நிலையில் தங்களுக்குள் என்ன நடந்திருக்கும் என பட்டவர்த்தனமாய் புரிய நிலா கண்களில் கண்ணீர் நிற்காமல் வழிந்தது.
வெளியே தன் மாமனின் குரல் தொலைவில் கேட்க, இப்படி ஒரு கோலத்தில் தங்களை பார்ப்பதா என வேகமாக நகர்ந்து வினுவை இடித்து தள்ளினாள். அளவுக்கதிமாக போதை மருந்தை உட்கொண்டிருந்தவனால் சட்டென இமைகள் திறக்க முடியாமல்..
“ல…யா…ஐ…ஐ..ல….யூ…இ..னி நீ எனக்கு..மட்டு..தா…” என வார்த்தைகள் தடுமாற, கண்களை சுழற்றி அனத்திக்கொண்டேயிருந்தான்..சில நிமிடங்கள் கழித்து வெகு அருகில் தீரனின் குரல் கேட்டு பட்டென கண் விழித்த வினுயுகனுக்கு மருந்தின் வீரியத்தில் தலை சுற்ற, மெல்ல எழுந்தான். இது எந்த இடம்..? தான் எப்படி இங்கே..? என தலையை பலமாக உலுக்கியவன் சுற்றிலும் பார்க்க வேகமாக தன்னை திருப்பி மறைத்துக்கொண்டாள் நிலா. ஓர் நொடி உடல் விறைத்து அவனுள் இரத்தம் உறைந்தது தன்னுயிரானவளின் நிலையை கண்டு..குனிந்து தன்னை பார்த்தவனுக்கு அனைத்தும் விளங்க முதல் முறை பயம் தொற்றிக்கொள்ள தன் நெஞ்சை பிடித்தபடி சுற்றும் முற்றும் பார்த்தான்..இவர்களை தவிர யாருமில்லை என கண்டு கொண்டவன் தூக்கியெறிந்த தன் சட்டையை எடுத்துக்கொண்டு நிலாவை நெருங்கினான்.
உடல் குலுங்குவதில் தன் குமரியவளின் அழுகை இவன் நெஞ்சில் தீயை அள்ளி கொட்டினாலும் அவளை திருப்ப முயல, மேலும் ஒடுங்கி ஒதுங்கியவளை விடாமல் பற்றி அவள் கை மற்றும் கால் கட்டுகளை அவிழ்த்து விட்டான். அவன் சட்டையை அவளுக்கு போர்த்தி சுற்றி வந்து வாயில் ஒட்டியிருந்த ப்ளாஸ்டரை எடுக்க முனைய, கை காட்டி நிறுத்தியவள்..ப்ளாஸ்டரை மெல்ல எடுத்தாள்.
நொடிகள் யுகங்களாய் நீள, கனத்த அமைதியை உடைத்த நிலா..
“ஊரே உன்னை பொறுக்கி னு சொன்னப்போ எனக்குள்ள சின்ன நப்பாசை..இல்ல நீ பொண்ணுங்க விஷயத்துல நல்லவன் னு..ஆனா இப்போ..?..என் நம்பிக்கை பாழா போனாலும் உன் மேல நான் வச்சிருந்த காதல் உண்மையானது யுகன்..இனியாவது எனக்கு நல்லது பண்ணனும் நினைச்சா நான் சாகுற வரை என் கண் முன்னாடி வராத..போ..போடா இங்கிருந்து..என் மாமா வர்றதுக்குள்ள ஓடிப்போ..போ..”கையெடுத்து கும்பிட்டு தரையில் சரிந்தவளை அடிபட்ட பார்வையுடன் பார்த்து நின்றான் வினு.
“லயா..நான்..” என சொல்ல வருவதற்கு முன் மின்னல் வேகத்தில் குகையினுள் நுழைந்தான் தீரன். தன் மாமனை சற்றும் எதிர்ப்பார்க்காத நிலா சட்டென வினுயுகனின் பின்னால் தன்னை மறைத்து கொண்டாள்.
பிறந்தது முதல் இப்போது வரை தன் உயிரென உள்ளங்கையில் தாங்கி நிற்பவனை விட்டு தன் முன்னே தான் அறவே வெறுக்கும் கயவனின் பின் ஒளிந்து கொண்டது கட்டுக்கடங்காத கோபத்தை கிளப்பியது தீரனுக்கு.
இரண்டே எட்டில் அவர்களை அணுகி வினுவின் தலைமுடியை கொத்தாக பற்றி இழுத்த தீரனை தடுத்து அவன் கையை தட்டிவிட்ட வினு..
“நானே வர்றேன்..போ..” என கூறவும் அவனை ஓங்கி அறைந்தான் தீரன். தடுமாறி கீழே விழுந்த வினுவை புரட்டி எடுத்தான். வினுவை யோசிக்க கூட அவகாசம் கொடுக்காமல் சராமாரியாக தாக்கியதில் உடல் முழுவதும் சதைகள் கிழிந்து இரத்தம் சொட்ட மயக்கம் வந்தது வினுவிற்கு. இந்நிலையிலும் தீரனை வெளுக்க திடமிருந்தும் தன் நிலவிற்காக அடங்கி போனான். மாமனின் ருத்ர தாண்டவத்தை காண பொறுக்காமல் இடையில் வந்த நிலாவை ஒரு கையால் நில் என தடுத்தான் தீரன்.
வினுவின் சட்டையை இறுக்கி பிடித்தவாறு அழுகையில் கரைந்தவளை பார்க்க கொல்லும் வெறி வந்தது தீரனுக்கு. தன் சட்டையை கழற்றி அவளிடம் வீசியவன்..
“அந்த கருமத்தை தூக்கியெறிஞ்சிட்டு இத போட்டு வெளில வா. “ என உத்தரவிட்டபடி வினுவை இழுத்துக்கொண்டு வெளியேறினான்.
இதற்க்குள் கமலா, மரகதம் மற்றும் ராஜீவன் வந்து விட..நண்பனை தடுத்து தீரன்..
“அத்தை நிலாவை கூட்டிட்டு வாங்க..ராஜ் இவன் அம்மா அப்பாக்கு போனை போட்டு உடனே இங்க வரச்சொல்லு..” என ஐயனாராய் உறுமினான்.
உள்ளே தன் மகளை பார்த்ததும் அனைத்தும் விளங்க வாயை பொத்தி அழுதார் மரகதம். அவரை தட்டி கொடுத்து இருவரையும் வெளியே அழைத்து வந்தார் கமலா.
பாதி திறந்து மூடிய விழிகளுக்குள் தன் நிலவை மட்டுமே பார்த்திருந்த வினுவை ஏறெடுத்தும் பாராமல் தன் தாயின் மடியில் அடைக்கலமாயிருந்தாள் நிலா.
சில நிமிடங்கள் கழித்து இவர்களை தேடி வந்த செந்தாழினியை கண்டு தீரனின் விழிகள் இடுங்கியது. அவளுடன் சில ஊர் பெரியவர்களும் வந்தனர்.
அடிபட்டு தரையில் கிடக்கும் வினுவை பார்த்து சினம் தலைக்கேற ஓர் நொடி அனைவரையும் பார்த்து பின் நிலாவை கண்டதும் அதிர்வுடன் நெஞ்சில் கை வைத்து நின்றாள். சில நொடிகளில் தன்னை மீட்டெடுத்து வினுவிடம் ஓடினாள். அவனை எழுப்பி உட்கார வைத்து ஓரமாக கிடந்த அவன் சட்டையை போர்த்திவிட்டு கனல் வீசும் பார்வையுடன் தீரனை நோக்கினாள்.
பதிலுக்கு குறையாத ஆக்ரோஷத்துடன் அவளை எரித்தவனிடம்..
“அவர் தப்பு பண்ணிருக்காரா இல்லியா ன்றது அப்புறம்..ஆனா இவரை அடிக்க உனக்கென்ன உரிமையிருக்கு..?” என கேட்க..
“முதல்ல நீ யாரு அவனுக்கு..? “ என நேரடியாக கேட்கவும் சற்று தடுமாறி பின்..
“அவர் வீட்டில தான் நான் குடியிருக்கேன்..அங்கிள் ஆன்டி வந்துட்டுருக்காங்க..இப்ப சொல்லு..
என் வீட்டு பொண்ணு மேல கைய வச்சவன ஆர்த்தி எடுக்க சொல்றியா..? ராஜ் அவளை போக சொல்லுடா..
ஹலோ..இது உங்க ஊர் பஞ்சாயத்து இல்ல..நான் 3 வருஷமா இவங்க வீட்டில குடியிருக்கேன்..இது வரை என் கண்ணை தாண்டி எப்பவுமே பார்க்காத நல்ல மனுஷன். அவரு போய் அதும் உன் வீட்டு பொண்ணை..” என சொல்ல வரும் முன் அவள் குரல்வளையை அழுத்தி பிடித்திருந்தான் தீரன்.
தொடரும்.

Last edited:
Author: STN - 90
Article Title: NTYU - 4
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.