NTYU - 7

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

STN - 90

Member
May 5, 2026
39
50
18
Bengaluru
தேடல் 7
_35252f5d-3beb-4df9-b9f4-a3eab6bc9a63.jpeg

அன்று தூரத்து உறவினர் மகனின் பாஸ்போர்ட் விஷயமாக திருநெல்வேலி காவல் நிலையத்திற்கு தன் உறவினரோடு வந்திருந்தான் விழிதீரன். வந்த வேலை முடிய வெளியேற போனவன் அங்கு பெஞ்சில் இருண்ட முகத்துடன் அமர்ந்திருக்கும் கிருஷிகாவை கண்டு திகைத்தவன் அங்கிருந்த காவலரிடம் அவளை பற்றி விசாரித்தான்.

அன்று சிஷ்யா மெட்ரிகுலேஷன் பள்ளியில் பார்த்த சிறுமி இன்று சற்றே வளர்ந்த பெண்ணாய் இன்னும் சில வருடங்களில் கன்னிப்பூவாய் மலர்ந்துவிடுபவள் போல தோன்றினாலும் அவள் கண்களில் இனம் புரியா ஏக்கம் விரவியிருந்தது.

திருநெல்வேலியில் உள்ள தனியார் பள்ளியில் சேர்ந்திருந்தவள் நேற்று மாலை பள்ளி முடிந்து வெளியேறியதும் கூட பயிலும் சக மாணவி ஒருவளின் உள்ளங்கையை காம்பஸ் கொண்டு கீறிவிட்டாளென காயமடைந்த மாணவியின் பெற்றோர் புகார் கொடுத்திருப்பதாக கூறினார். மேலும் கிருஷிகாவின் பெற்றோரை விசாரிக்க அவள் தந்தை இராணுவத்தில் பணிபுரிபவர் வருடத்திற்கு ஒரு முறை தான் ஊருக்கு வருவார்..தாய் மற்றும் தாத்தா பாட்டியுடன் இங்கு வசித்து வருவதாக கூறினார்.

ஏனோ அப்படியே விட்டு போக மனமின்றி கிருஷிகாவை நெருங்கினான் தீரன். அவனை ஏறெடுத்து பார்த்த கிருஷியின் கண்ணில் மின்னலடிக்க சட்டென்று தலை குனிந்தாள். அவளை நோட்டமிட்டபடி அருகில் அமர்ந்த தீரன்..

“உன் பேர் கிருஷிகா தான..?” என கேட்க ஆம் என தலையாட்டியது சிறு பூச்செண்டு. தீரன்..

“ஓகே இனி நான் உன்னை ருஷி ன்னு தான் கூப்பிடுவேன்..” என கனிவான கட்டளை கலந்த உரிமையில் கிருஷிகாவின் முகத்தில் உற்சாகம் தோன்றியது.

“ஆமா இங்க என்ன பண்ற..? உன் அம்மா எங்க..?

அம்மா இன்ஸ்பெக்டர்க்கிட்ட பேசிட்டிருகாங்க..

ஓ..நீ என்ன தப்பு பண்ண..?” பதிலின்றி தலை குனிந்திருந்தாள் ருஷி. அவள் தலையை ஆதுரமாய் தடவியவன்..

“என்னை உன் பெஸ்ட் பிரண்டா நினைச்சா சொல்லு ருஷி..” எனக்கூறியது சற்றே வேலை செய்ய..ருஷி..

“அது..வந்து..அந்த ஸ்வேதா கையில குத்திட்டேன்..

அப்படி அவ என்ன பண்ணினா..?” சம்பவம் நடந்ததிலிருந்து இவளை மட்டுமே அவள் அன்னை உட்பட கடிந்து கொண்டவர்களுக்கு மத்தியில் அவள் தரப்பினை கேட்டறியும் புதியவன் மீது ருஷிக்கு அறியா பாசம் பொங்கியது.

கண்கள் கலங்க..அவள்..

“என் அப்பா அம்மாவை பத்தி தப்பா சொன்னா அவ..எல்லாருக்கும் ஒரு அப்பா தான் இருப்பாங்க..ஆனா எனக்கு மட்டும் ஊருக்கு ஊர் அப்பா இருக்காங்க னு ஏதோ அவங்க அம்மா சொன்னதா சொன்னா..அதான் எனக்கும் ஒரே அப்பா தான் டி கிழிச்சி வச்சேன்..” என ருஷி கூறி முடித்ததும் பிஞ்சு மனதில் தேவையில்லாத நஞ்சை விதைத்தவர்களின் மேல் தீரனுக்கு அளவில்லா ஆத்திரம் பெருகியது. ருஷி செயல் தப்பில்லை என்று கூட தோன்றியது தீரனுக்கு. பின் அவளிடம்..

“இப்ப நீ எந்த ஸ்கூல் ல படிக்கிற..?

ஸ்ரீ சாரதா மெட்ரிக்குலேஷன்..

ஓகே..இனி யார் வந்து உன்க்கிட்ட உன் அப்பா அம்மா பத்தி தப்பா சொன்னாலும் உன் கோபத்தை பூரா திருப்பி பேசவேமுடியாதபடி உன் வார்த்தைகள் ல காட்டு..எக்காரணத்தை கொண்டும் இப்படி அடுத்தவங்கள ஹர்ட் பண்ண கூடாது..ஆமா உனக்கு தனியா போன் இருக்கா..?

இல்ல டேப் இருக்கு..அதுல தான் எல்லா ஸ்கூல் ஓரக்கும் பண்ணுவேன்..எங்க அம்மா, பாட்டி & தாத்தா நம்பர்களாம் இருக்கு தரவா..?” என ஆர்வத்துடன் கேட்ட சிறுமலரை ஆதுரத்துடன் பார்த்த தீரன்..

“அவங்களை டிஸ்டர்ப் பண்ண வேண்டாம்..நீ ஸ்கூல் ஒர்க் லாம் டெலிகிராம் லயும் செய்வியா..?

ம்ம்..

அப்ப உன் டெலிகிராம் ஐடி சொல்லு..” என அவளினதை கேட்டு வாங்கியவன் தன்னுடைய ஐடியை கொடுத்து இனி தினமும் டெலிகிராமில் மதியம் பள்ளி முடிந்து வீடு வந்தவுடன் பேசுவதாகவும் தன்னை பற்றி அவள் வீட்டினரிடம் கட்டாயம் தெரிவிக்க வேண்டும் என கூறினான் தீரன். பின்..

“அம்மா வர்ற டைம் ஆகும் போலயே..நான் வேற ஊருக்கு போகனும்..” என தன் கைக்கடிகாரத்தை பார்க்க ருஷி..

“நீங்க கிளம்புங்க அங்கிள்..ஐ ப்ராமிஸ் யூ..இனி யாரையும் அடிக்க மாட்டேன்..டெய்லி உங்ககிட்ட வந்து அப்டேட் பண்றேன்..” என அவன் கையில் தன் குட்டி உள்ளங்கையை வைத்து அழுத்த பாரமான மனதுடன் அவள் தோளை தட்டிக்கொடுத்து வெளியேறினான்.

அன்று முதல் மாலை ஓர் பத்து நிமிடம் அன்றைய நிகழ்வுகளை சுருக்கமாக தீரனிடம் கூறுவதை வழக்கமாக்கியிருந்தாள் ருஷி. தன் அன்னை மற்றும் தாத்தா பாட்டியிடம் தனக்கு ஒரு பெரிய பிரண்ட் இருப்பதாகவும் காவல் நிலையத்தில் தனக்கு எடுத்துரைத்ததை ஒரு வார்த்தை விடாமல் கூறி அவன் டெலிகிராம் ஐடியை காட்ட அதிலிருந்த நிலாக்குட்டி என்ற பெயரை பார்த்து அனுமதித்த அவள் அன்னை முதல் இரு நாட்களில் தன் மகளை நோட்டமிட்டார். மகளின் பதிலிலிருந்து அவள் சரியான நபருடன் தான் பேசிக்கொண்டிருக்கிறாள் என தெரிந்தாலும், அவள் பாட்டியிடம் ஒரு கண் வைத்துக்கொள்ளுமாறு கூறியிருந்தார். அந்த பத்து நிமிடம் தன் மகளின் உற்சாகத்தை கண்டு லைட்டாக பொறாமை கூட எட்டி பார்த்தது அவளன்னைக்கு.

தீரனிடம் பழக ஆரம்பித்ததும் மெல்ல கிருஷிகாவின் நடவடிக்கைகளில் ஒரு நிதானம், தெளிவு மற்றும் தன் கருத்தை பக்குவமாய் எடுத்துரைக்கும் பாங்கினை கண்டு அவள் குடும்பத்தினர் உற்சாகமடைந்தனர்.

நாட்கள் வேகமாய் நகர அன்று மதியம் வழக்கம் போல ருஷியை அழைத்தான் தீரன். அவள் எடுக்கவில்லை என்றதும் சற்றே தயங்கியவன் மீண்டும் தொடர்பு கொள்ள கிருஷிகா அழைப்பை ஏற்காததால் நாளை பேசிக்கொள்ளலாம் என விட்டு விட்டான். மறுநாளும் கிருஷிகா அழைப்பை ஏற்காமல் போகவே தீரனுக்கு சிறு சந்தேகம் வந்தது. இத்தனை நாட்களாக தன்னை தவிர்க்காதவள் நேற்றும் இன்றும் என்னவாயிற்று என மனம் குழம்பியது.

ஒரு வாரமாய் இது தொடர அவளுக்கு என்னவானதோ என்ற பயத்தில் அன்றே திருநெல்வேலிக்கு புறப்பட்டான். தவிப்புடன் சாரதா மெட்ரிகுலேஷனை நெருங்கி அங்கிருந்த காவலாளியின் அனுமதியுடன் பள்ளி முதல்வரை பார்க்க சென்றான்.

தீரனிடம் அவனை மற்றும் கிருஷிகாவை எப்படி தெரியும் என விசாரித்த முதல்வர் கிருஷிகாவின் வகுப்பு ஆசிரியரை அழைத்தார்.

அவர் வந்ததும் கிருஷிகாவை பற்றி விசாரிக்க பதிலுக்கு அவர்..

“பாஸ்ட் ஒன் மன்த்தா கரெக்டா ஸ்கூலுக்கு வந்துட்டிருந்த பொண்ணு..ஸ்வேதா விஷயத்துக்கப்புறம் நிறைய சேஞ்சஸ் அவக்கிட்ட, எல்லார்க்கிட்டயும் கைண்டா பேசறது, பழகறது படிப்பிலயும் சுட்டி..இப்ப ஒன் வீக்கா லீவ் போட்டிருக்கா..அவங்க வீட்டில கேட்டப்போ ஏதோ வைரல் பீஃவர் னு சொன்னாங்க மேம்..வேறெதுவும் எனக்கு தெரியாது..” என்றார். கிருஷிகாவிற்கு காய்ச்சல் என்றதும் உடனே அவளை பார்க்க வேண்டும் என துடித்த மனதை அடக்கவியலாமல் தவிப்புடன் அமர்ந்திருந்தான் தீரன்.

தீரனை சில நொடிகள் பார்த்த முதல்வர் ஆசிரியரிடம்..

“கிருஷி அம்மா நம்பர் தெரியுமா..?

தெரியும் மேம்..

கால் பண்ணி என்க்கிட்ட கொடுங்க..” எனக்கூற அவரும் அவ்வாறே அழைத்து தன் கைப்பேசியை கொடுத்தார்.

“ஹலோ..

சொல்லுங்க மேம்..

நான் சாரதா மெட்ரிக்குலேஷன் பிரின்சிபால் பேசறேன்..கிருஷிகா எப்படி இருக்கா..?

……..” மறுபக்கம் சொல்லபட்டதை கேட்டுக்கொண்டவர்..

“எங்க தரப்பிலிருந்து என்ன உதவினாலும் தயங்காம கேளுங்க..அவ அட்டென்டன்ஸ் லாம் நாங்க பார்த்துக்கறோம்..ஹோப் ஷீ ரெக்கவர் சூன்..டேக் கேர் ஆஃப் ஹர் மா..” என அழைப்பை அணைத்தார்.

வகுப்பாசிரியை அனுப்பி விட்டு தீரனிடம்..

“கிருஷிகா இப்ப காவேரி ஹாஸ்ப்பிடல் ல அட்மிட் ஆகியிருக்கா..காய்ச்சல் இன்னும் குறையலயாம்..சீஃப் டாக்டர் இன்னிக்கு வந்து பார்த்தபிறகு வைரல் பீவரா இல்ல வேறெதுவுமா னு தெரியும் னு சொன்னாங்க..

ரொம்ப நன்றி மேம்..” என எழுந்த தீரன் விரைந்தான் காவேரி மருத்துவமனையை நோக்கி.

பதினைந்து நிமிடங்களில் மருத்துவமனை வந்தவன் அங்கிருந்த வரவேற்பரையில் விசாரித்து கிருஷிகாவின் அறையை நோக்கி விரைந்தான்.

கதவை மெல்ல தட்டிவிட்டு காத்திருக்க..

“உள்ள வாங்க..” என்ற குரலில் உள்ளே நுழைந்த தீரன் மாணிக்கம் வேதாவை கண்டு திகைத்தான். அவர்களும் தீரனை எதிர்ப்பார்க்காததால் அதிர்ச்சியுடன் அவனை பார்த்தனர். கிட்டதட்ட இரரண்டரை ஆண்டுகள் கடந்து இன்று தான் நேரில் சந்தித்து கொண்டனர் மூவரும். தலைமுறை தலைமுறையாக தங்களுக்கான கௌரவத்துடன் வாழ்ந்து வந்தவர்களை தம் மகன் தவறு செய்தானா இல்லையா என விசாரிக்க கூட இடமளிக்காது ஒரு தலை பட்சமாய் தங்களை தண்டித்தது, கண் முன்னே பெற்ற மகனை அடித்து அவமானபடுத்தியது இன்றளவும் மறக்க முடியாமல் அழ வைத்தவனை பார்க்க கூட பிடிக்காது தலையை திருப்பி கொண்டார் வேதா. மாணிக்கத்திற்க்கும் அதே கோபம் இருந்தாலும் அவனையே உனக்கென்ன இங்கு வேலை என்பது போல பார்க்க, இருவரையும் பார்த்த தீரனுக்கு என்ன சொல்வதென்று தெரியாமல் தலை கவிழ்ந்தவன் மறு நொடி வாடிய இளந்தாமரை தண்டாய் மருந்தின் வீரியத்தில் அயர்ந்து உறங்கி கொண்டிருந்த கிருஷிகாவை கண்டு கண்கள் சற்றே கலங்கியது.

இவர்களுக்கும் கிருஷிகாவிற்கும் என்ன உறவு என குழம்பி தவித்தவனையே நோட்டமிட்ட மாணிக்கம் அவனிடம்..

“நீ தான் எங்க கிருவோட அந்த பிக் ப்ரண்டா..?” என கேட்க ஆம் என தலையசைத்தான் தீரன். அவர்..

“அப்போ டெய்லி என் பேத்திக்கிட்ட நிலாக்குட்டி னு பேசினது..?” என் பேத்தி எனும் மாணிக்கத்தின் கூற்றில் தீயை தொட்டது போல உடல் இறுக நின்றவன்..

“நான் தான்..” என்றான் தீரன். வாழ்க்கையில் முதல் முறை பயத்துடன் உதிர்க்கும் வார்த்தைகள். சில நிமிடங்கள் மௌனமாய் கரைய கிருஷிகா மெல்ல அசைந்தாள்.

அவளிடம் விரைய துடித்த உணர்வை கட்டுபடுத்தி தீரன் அவளையே பார்க்க..

“வே…ணா..நோ…நோ…” என தூக்கத்திலேயே கதறினாள் கிருஷிகா. வேதா அவள் கையை பிடித்து..

“கிருஷி..ஒன்னுமில்ல டா..இங்க பாரு..நா தாத்தா லாம் இருக்கோம்..அம்மாவும் அப்பாவும் இப்ப வந்துடுவாங்க..”என தேற்றவும் கிருவை விட துடித்து போனான் விழிதீரன். வினுயுகன் மகள் கிருஷிகா என்பதே தலையில் இடி இறங்கியதை போல அதிர்ச்சியுற்றவன் யாரை இனி வாழ்நாளில் பார்க்கவே கூடாது என நினைத்திருந்தானோ அவனும், அவனை சேர்ந்தோரும் இதோ கண் முன்னே.

அவன் மனம் தன் ருஷியை நாட, அவன் புத்தியோ விலகி செல்லும்படி பணிக்கவும் நீண்ட பெருமூச்செறிந்து வெளியே செல்ல எத்தனிக்க, கிருஷிகாவின் உடல் பயத்தில் தூக்கி போட செய்வதறியாமல் தவித்தனர் பெரியவர்கள். மாணிக்கம் வைத்தியரை அழைக்க ஓடினார். மறுநொடி அவளிடம் விரைந்து அவள் கைகளை பற்றினான் தீரன்.

“ருஷி..” எனும் தீரனின் ஒற்றை அழைப்பில் சிறுமியின் தேகம் விறைத்து மெல்ல அடங்குவதை நம்ப முடியாமல் நெடியவனை நிமிர்ந்து பார்த்தார் வேதா.

விரைவாக வந்த வைத்தியர் கிருஷிகாவை பரிசோதிக்க, உடன் வந்த தாதி அனைவரையும் வெளியே காத்திருக்கும்படி சொல்லவும் நகர்ந்த தீரனின் வலக்கை விரல்களை இறுக்கமாய் பற்றிக்கொண்டது அந்த தாமரை தண்டு. அதைக்கண்ட வைத்தியர் மாணிக்கத்திடம்..

“இவர் தான் கிருவோட அப்பாவா..?

இல்ல டாக்டர்..எனக்கு தெரிஞ்ச பையன்..கிருஷியோட பெஸ்ட் ப்ரண்ட்..

ஓகே..நீங்க இருங்க..” என அவளுக்கு கொடுக்க வேண்டிய மருந்துகளை சரிபார்த்தபடி இருந்த வைத்தியரிடம் தீரன்..

“ருஷிக்கு என்னாச்சு டாக்டர்..?

நத்திங் டு வொர்ரி..எதையோ இல்ல யாரையோ பார்த்து பயந்துருக்கா..பயத்துல வந்த காய்ச்சல் அதிகமாகி மயங்கினதும் உடனே இங்க அட்மிட் பண்ணாங்க..இப்ப காய்ச்சல் இல்ல. ஆனா அப்பப்போ பயத்துல அவளுக்கு உடம்பு ஷிவராகுது..எங்க சீஃப் கைக்ரியாடிஸ்ட் நாளைக்கு வர்றாரு..லெட்ஸ் ஹோப் பார் பெஸ்ட்..ஆமா இவ அம்மா எங்க..?

இன்சூரன்ஸ் சம்பந்தமா சில பைல்ஸ் எடுக்க வீடு வரைக்கும் போயிருக்கா டாக்டர்..இப்ப வந்துடுவா..” என வேதா சொல்லிக்கொண்டிருக்கும் போதே கதவை திறந்து வந்த கிருஷிகாவின் அன்னையை கண்டு தீரனுக்கு தன் காலடியில் தரையே நழுவியது போல உணர்வின்றி நின்றான்.

தொடரும்.
 
Last edited:

Author: STN - 90
Article Title: NTYU - 7
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

Gowri Karthikeyan

Well-known member
May 5, 2026
1,289
370
83
Chennai
நா நினைச்சேன்..... ருஷி ஓட அம்மா இந்த சந்தாவா தான் இருக்கும்னு......
அப்ப அப்பா யாரு ????
தீரனா ?????
ஆன அப்படியும் தெரியலையே.....
 
  • Love
Reactions: STN - 90