NTYU - 8

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

STN - 90

Member
May 5, 2026
39
50
18
Bengaluru
தேடல் 8
file_0000000012dc71fa8c40facee16b4e1d.png

தன் மகளின் கையை பிடித்து கொண்டிருப்பவனை நிமிர்ந்து பார்த்த செந்தாழினியின் விழிகள் உச்சபட்ச திகைப்பில் விரிந்தது..இவன்..இங்கே..ஏன்..எப்படி என பல கேள்விகள் மின்னி மறைய சற்றும் யோசிக்காமல் அவனிடம் விரைந்து அவன் சட்டையை பற்றி..

“உனக்கென்ன இங்க வேலை..? வெளிய போ முதல்ல..” என அவனை இழுக்க தடுமாறிய தீரன் காலூன்றி நிற்கும் முன் கடுங்கோபத்துடன் மீண்டும் இழுத்த செந்தாவின் செயலில் நிலை தடுமாறி கீழே விழுந்தான்.

கிருஷிகாவின் அன்னை செந்தாழினி..அவளின் கணவன் வினுயுகன்..ஒரு கணம் தலை சுற்றுவது போல கிறுகிறுக்க அருகிலிருந்த நாற்காலியை பிடிமானத்திற்கு பிடித்தவாறு எழுந்து நிற்க முடியாமல் தள்ளாடினான். இந்நிலையிலும் சிறு மொட்டின் விரல்கள் அவன் கையை இறுக்கி பிடித்திருக்க நெஞ்சில் கை வைத்தபடி தன் மகளையே பார்த்தாள் செந்தா. கண்ணோரம் நீர் கசிய அதை துடைக்க வரும் முன் அவள் கண்ணீரை துடைத்த தீரனை கொல்லும் வெறி வந்தது அவளுக்கு.

அவனிடமிருந்து கிருவின் கையை பிரிக்க முயன்று தோற்றாள் செந்தா. அதற்க்குள் வைத்தியர் வந்துவிட செந்தாவின் செயலை கண்டு திகைத்தவர்..

“என்ன பண்றீங்க செந்தாழினி..? உங்க பொண்ணு அவருக்கு மட்டும் தான் ரெஸ்பாண்ட் பண்றா..சீக்கிரம் குணமாகனுமா வேண்டாமா..?” என கண்டிக்க..சட்டென கையை விட்டாள் செந்தா. வேதா மாணிக்கத்திடம்..

“பாத்துக்கங்க..” என கண் கலங்க ஓடி செல்பவளை கண்டு தீரனுக்கும் மனம் ரணமாய் வலித்தாலும் தான் கட்டிய தாலியை எறிந்து தான் அதிகம் வெறுக்கும் ஒருவனை மணந்திருக்கிறாளே என்ற ஆங்காரமும் தலைக்கேறியது.

வினுயுகன் செந்தாழினி உறவை நினைத்து கூட பார்க்க முடியவில்லை தீரனுக்கு..மெல்ல மெல்ல தன் உணர்வுகளை கட்டுக்குள் கொண்டு வர பாடுபட்டான். ருஷி உறங்கியதும் மெல்ல கைகளை விடுவித்து கொண்டு வெளியே வந்தான்.

சற்று தள்ளி தலையில் கை வைத்து அமர்ந்திருந்த செந்தாழினியின் தோளை அணைத்தபடி அவளை தேற்றும் வேதாவை பார்த்தவன்..அமைதியாக மருத்துவமனை வாயிலை அடைந்தான். அங்கிருந்த வேப்ப மர நிழலில் உள்ள இருக்கையில் சற்றே சாய்ந்து கண்களை மூடியவனுக்கு அன்னையிடமிருந்து அழைப்பு வர நண்பனுக்கு உதவியாய் திருநெல்வேலி வந்திருப்பதாக கூறினான்.

ருஷியை தவிர அவளின் குடும்பத்தார் அதுவும் வினுவை நேரில் சந்திக்க நேர்ந்தால்..ஏனெனில் கடந்த காலங்களில் அவனின் அசுரத்தனமான வளர்ச்சியை அரசல் புரசலாக கேட்டிருக்கிறானே..ஆனால் தன் யாழியின் கணவனாய்..தலையை உதறிக்கொண்டு நிமிர்ந்தான் தீரன்.

அதற்க்குள் பதட்டத்துடன் தன்னை நோக்கி வரும் மாணிக்கத்தை கண்டு எழுந்தவன்..

“ருஷி எழுந்துட்டாளா..?

ஆமா..ஆனா தேம்பி அழுதுட்டேயிருக்கா..கொஞ்சம் வரமுடியுமா னு டாக்டர் கேக்குறாரு..வா ப்பா ப்ளீஸ்..” என முடிப்பதற்க்குள் உள்ளே விரைந்தான் தீரன்.

தன் அன்னையின் நெஞ்சில் தலை சாய்ந்தபடி அழுது கொண்டேயிருந்தவளை கண்டு தயங்கி நின்றான் தீரன்..இவனை கண்டதும் வெறுப்புடன் முகத்தை திருப்பிய பெண்களை கண்டு கொள்ளாமல் ருஷியை பார்க்க, இவனை கண்டதும் ருஷியின் அழுகை அதிகமாக..ஓடி வந்தவன் அவளிடம்..

“ருஷி..” என அழைக்க அந்த மந்திர சொல்லில் சட்டென அவன் கைகளில் தன் முகத்தை புதைத்து கொண்டாள் கிருஷிகா. ஈன்றெடுத்த அன்னையின் அரவணைப்பை தாண்டி சம்பந்தமில்லாத வேறொருவனின் கைகளில் தன் மகள் சரணடைந்ததில் ஓர் அன்னையாய் பலமாய் அடி வாங்கினாள் செந்தாழினி.

அலைப்புறும் விழிகள் அவள் உணர்வுகளை வெளிப்படையாக உணர்த்திட தீரனுக்குமே இது புரியாத ஒன்றாய் இருந்தது. தன்னிடம் இப்படி ஒண்டிக்கொள்வாள் ருஷி என அவன் கனவிலும் நினைக்கவில்லை.

வைத்தியரின் பரிந்துரையின் பேரில் ருஷி அருகிலேயே இருந்தான் தீரன்.

ராஜீவனை அழைத்து தான் வருவதற்கு சில நாட்கள் ஆகும், வந்து சொல்வதாய் அதுவரை அங்கே அனைவரையும் பார்த்து கொள்ளுமாறு கூறினான்.

ருஷி உறங்கும் சமயங்களில் தனக்கான உடைகளை வாங்கியவன் அருகிலேயே ரூம் எடுத்து குளித்து இங்கு வந்துவிடுவான். அவளை பார்த்தது முதல் பசி, தூக்கம் பின்னுக்கு தள்ளப்பட்டு கிடைக்கும் சொற்ப சமயத்தில் தன்னை கவனித்துக்கொண்டான் தீரன். அவன் வேண்டிக்கொள்வது ஒன்றே ஒன்று..ருஷி குணமாகும் வரை வினுவை பார்க்க கூடாது என்பதே.

தீரனின் அருகாமையால் கிருஷிகாவின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் தென்பட அனைவருமே ஆசைவாசமடைந்தனர். பெரியவர் அனைவரையும் அழைத்த வைத்தியர்..

“கிருஷிகா உடலளவுல எந்த பிரச்சினையும் இல்ல..ஆனா அவ மென்டலா ரொம்ப டிஸ்டர்ப் ஆகியிருக்கா..அவளை நல்லா புரிஞ்சுகிட்டு அவ போக்கிலேயே போய் அவ எதனால பயப்படுறா னு தெரிஞ்சா தான் மேற்கொண்டு ட்ரீட் பண்ணமுடியும்..அதுக்கு நீங்க தான் மனசு வைக்கனும் செந்தாழினி..ஒரு அம்மாவா இல்லாம அவ பிரண்டா அவக்கிட்ட பேசி பாருங்க..” என கூறவும் அங்கே மயான அமைதி நிலவியது. சில நிமிடங்கள் கழித்து செந்தா..

“ஒரு சிங்கிள் பேரன்ட் டா கிருஷிக்கிட்ட ஆரம்பத்திலிருந்து கனிவை விட கண்டிப்பை அதிகமா காட்டி வளர்ந்திருக்கேன் டாக்டர்..எனக்கு நடந்த.. “ என சிறு இடைவெளி விட்டவளின் கரத்தை ஆதரவாக பற்றினார் வேதா.

சிங்கிள் பேரன்ட் என்றதுமே விலுக்கென நிமிர்ந்து அவளை பார்த்தவன் கண்கள் நீர் கோர்த்து பேச முடியாமல் திணறுபவளை கண்டு இவன் கைகள் இறுகியது.

ஒருவாறு தன்னை சுதாரித்துக்கொண்டு செந்தா..

“என் பாஸ்ட் பத்தி பேச விரும்பல..என்னை விட இவன்க்கிட்ட..” என்றவளை விழிகளால் எரித்தவனை அசட்டை செய்து அவள்..

“என் பொண்ணு கம்பர்டபிளா ஏன் பீஃல் பண்றா னு தெரியல..சோ அவனே பேசட்டும்..ஆனா என் மக பூரணமா குணமானதும் என் பொண்ணை பார்க்கறது பேசறது னு இனி இருக்கவே கூடாது..ஓகே வா னு கேட்டு சொல்லுங்க டாக்டர்..” என்றாள் செந்தா. என்ன சொல்வது என விழித்த மருத்துவரை பார்த்து தீரன்..

“எனக்கு ஓகே டாக்டர்..அவ நல்லாருந்தா அதுவே போதும்..நான் பேசி பார்க்கிறேன்..” என்றவன் வேகமாக வெளியேறினான்.

தீரனை பார்த்ததும் கண்கள் மின்ன ஆனந்த யாழை மீட்டும் ருஷியை கண்டு மலர்ந்த முகத்துடன்..

“ஜூஸ் குடிக்கிறியா டா..?

வேண்டாம் சிம்பா..”(Simba - The Lion Guard) அவள் ப்ரத்யேக அழைப்பில் சிரித்தவன்..அவள் கைகளை தன் உங்ளங்கைக்குள் அழுத்தி கொடுத்து அவள் மனம் நோகாதவாறு எப்படி கேட்க என யோசித்த தீரன்..மெல்ல..

“சரி சிம்பா தவிர ருஷி பெஸ்ட் பிரண்ட்ஸ் யாரு..?

ம்ம்..துளிரினி, ஆகாஷ் தான் க்ளோஸ் பிரண்ட்ஸ்..உனக்கு..?

என் பிரண்ட் ராஜீவன்..ஓகே ருஷி வீட்டில யாரெல்லாம் இருக்காங்க..? “ என்று கேட்டவனை வைத்தியர் அறை கணினியில் இவர்களை பார்த்து கொண்டிருந்த யாழினிக்கு வெறியேறியது. ருஷி..

“நானும் அம்மாவும் மட்டும் தான்..வினு மாமா அப்பப்போ வருவாங்க, அவரோட பிரண்ட் பிரணவ் அங்கிளும் வருவாங்க..செம வைப்பா(vibe)இருக்கும்..புது புது பைக் ல நிறைய ரைட் போவேன்..மாமா கூட நிறைய வாட்டி திருச்செந்தூர் போயிருக்கேன் தெரியுமா..? ஐ லவ் தட் சீ & முருகன்..” என சிலாகித்து கூறியவளிடம் தன் உள்ளக்குமுறலை மறைத்து சிரித்த முகத்துடன்..

“அப்புறம்..?

தாத்தா பாட்டி அப்பப்போ வருவாங்க..இல்ல நானும் அம்மாவும் அவங்க வீட்டுக்கு போவோம்..” என்றாள் ருஷி. அவள் பயத்தை கண்டறியும் முன் தன் மனப்பாரத்தை அடியோடு குறைத்தவளின் கைகளை பூரிப்புடன் பற்றியவன்..

“ஸ்கூல் முடிஞ்சு ருஷி என்க்கூட பேசறப்போ யார் இருப்பா கூட..?

மோஸ்ட்லி பாட்டி இல்ல பக்கத்து பிளாட் சியாமளா ஆன்டி..” என கூறும் போதே அவள் முகம் மாறியது. தீரனிடமிருந்து பட்டென கையை உருவிக்கொண்டு கண்களை இறுக்க மூடிக்கொண்டாள் ருஷி. அவளை கூர்மையாக அவதானித்தபடி தீரன் அவள் தோளை தொடும் முன்..

“நோ..நோ..வேணா..வேணா..ப்ளீஸ்..” என பயத்துடன் பின்னால் நகர்ந்தவளை பார்த்து ஸ்தம்பித்து நின்றுவிட்டான் தீரன். இருவரையும் பார்த்து கொண்டிருந்த யாழினியின் நெஞ்சம் படபடவென அடிக்க தொடங்கியது.

ருஷிக்கு என்ன நடந்திருக்கும் என அனுமானித்தாலும் பக்குவமாய் அவளை கையாளவேண்டும் என தீரன்..

“ருஷி..இங்க பாரு..

….

நாம பெஸ்ட் பிரண்ட்ஸ் தான..? மை ருஷி ஆல்வேஸ் குட் கேர்ள்..நமக்குள்ள நோ சீக்ரட்ஸ்..எதுவாயிருந்தாலும் என்க்கிட்ட சொல்லு டா..நான் பார்த்துப்பேன் என் ருஷிக்குட்டிய..” என அவள் தோளை தட்டிக்கொடுக்க உடல் நடுங்கியது ருஷிக்கு. தீரனின் அரவணைப்பில் சற்று தெளிந்தவள்..

“போன வாரம் சியாமளா ஆன்டி வீட்டுல இருந்தப்போ அங்க வந்த ஆன்டியோட பிரண்ட் சகாயம் என்க்கிட்ட..” என அழுகையினூடே தடுமாறியவளை வாரி அணைத்து கொண்டான் விழிதீரன். சட்டென கலங்காத விழிகள் இதோ இப்போது தன் ருஷிக்காய் கண்ணீர் சிந்தியது.

தீரனின் அணைப்பிலிருந்தவாறே ருஷி..

“சிம்பா..உனக்கு ஒன்னு தெரியுமா..? எனக்கு இந்த வோர்ல்ட் ல ரொம்ப பிடிச்சது அம்மா தான்..என்க்கிட்ட ரொம்ப கைன்டா இருப்பாங்க, கேட்டது வாங்கி குடுப்பாங்க, எனக்கு நிறைய கதை சொல்வாங்க, டேஸ்டியா சமைப்பாங்க..குட் டச், பேட் டச் கூட சொல்லி கொடுத்திருகாங்க..ஆனா அந்த அங்கிள் என்க்கிட்ட..”என சொல்ல வந்தவளின் வாயை பொத்தியவன்..

“போதும் டா..

வெயிட் சிம்பா..நான் அப்பவும் என்னை டிபன்ட் பண்ணிக்க ட்ரை பண்ணேன்..ஆனா அது…பிடிக்கல..ஆன்டியை கூப்பிடலாம் னா அவங்க கடைக்கு போயிருந்தாங்க..பயத்துல எனக்கு மயக்கமே வந்திருச்சு..அப்போ பர்ஸ்ட் டைம் ஓடிப்போய் அம்மாவை ஹக் பண்ணிக்கனும் னு தோணுச்சு சிம்பா..ஆனா நான் பண்ணமாட்டேன்..எப்பவுமே நான் தான் தப்பு பண்ண மாதிரி என்னையவே ப்ளேம் பண்ணுவாங்க..நீ ஸ்வேதா விஷயத்துல அவ என்ன பண்ணா னு கேட்ட தானே..? அப்ப தா நீ எனக்கு இன்னொரு அம்மா வா தெரிஞ்ச..நீ எப்பவுமே என் கூடவே இருப்பியா..?” என கேட்டவளை அணைத்தபடி பேச்சற்று சமைந்தான் தீரன்.

அனைத்தையும் கேட்டு முடித்த செந்தா மூச்சு விட மறந்தது போல அசையாது அமர்ந்திருந்தாள். தனக்கு நேர்ந்தது போல தன் மகளுக்குமா என கண்ணீர் ஆறாய் பெருக பெற்ற தாயிடம் மட்டுமே பகிரக்கூடியதான விஷயத்தை அயலான் ஒருவன் அன்னையாய் மாறி அவளை பேச வைத்திருக்கிறான் எனில் தன் மகள் வளர்ப்பில் பெரிதும் சறுக்கியதை உணர்ந்ததும் பட்டென கேவல் வெடிக்க வாயை பொத்தியவள் எழுந்து வெளியே ஓடினாள். தங்கள் வீட்டு பேத்தியென வலம் வருபவளுக்கு நடந்த கொடூரத்தை நினைத்து உறைந்திருந்தனர் மாணிக்கம் வேதாவும். யாழியின் தவிப்பை உணர்ந்து அவள் பின்னாலேயே ஓடினார் வேதா.


தொடரும்.
 
Last edited:

Author: STN - 90
Article Title: NTYU - 8
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

Gowri Karthikeyan

Well-known member
May 5, 2026
1,289
370
83
Chennai
Aww செந்தா ஓட கண்டிப்புக்கு இப்படி ஒரு பின்னணி இருக்குன்னு நினைக்கல.....
அச்சோ ருஷி பாவம்......
 
  • Love
Reactions: STN - 90