NTYU - 9

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

STN - 90

Member
May 5, 2026
39
50
18
Bengaluru
தேடல் 9

1774497432513.png

கிருஷிகாவிற்கு நடந்தவற்றை முழுவதுமாக தலைமை மனநல மருத்துவரிடம் எடுத்துரைத்து மேற்கொண்டு என்ன சிகிச்சை முறைகளை பின்பற்ற வேண்டும் என கேட்டுக்கொண்டார் வைத்தியர்.

கிருவுக்கான அடுத்த கட்ட சிகிச்சை தொடங்கியது. விஷயம் தெரிந்தது போல காட்டிக்கொள்ளாது ஆனால் பசையிழந்த முகத்துடன் சாதாரணமாக மகளுக்கு பணிவிடை செய்பவள் மேல் ஒரு கண்ணை வைத்தவன் அன்று மாலையில் மாணிக்கம் மற்றும் வேதாவை தனியே சந்தித்தான் தீரன்.

இது வரை தீரன் பால் கொண்டிருந்த வெறுப்பு கடந்த ஒரு வார காலமாய் அவன் கிருஷிகாவின் மேல் வைத்திருக்கும் பாசத்தை கண்டு பெரியவர்களுக்கு சிறு விருப்பாய் மாறியது நிஜமே, ஆனால் தன் மகன் விஷயத்தில் அவனை மன்னிக்க தயாராயில்லை. அவர்களுக்கு என்ன வேண்டும் என கேட்டு வாங்கி வந்தவன் தனக்கான டீக்கப்பை எடுத்து பருக தொடங்கினான். பின்பு மாணிக்கத்தை பார்த்து..

“நமக்குள்ள நடந்ததை திரும்ப நினைச்சு வெறுப்பை வளர்த்து தள்ளி நின்னு எந்த லாபமும் இல்ல னு இப்ப நல்லா புரிஞ்சுக்கிட்டேன்.. கடவுள் புண்ணியத்துல என் குட்டி மாவும் இப்ப சந்தோஷமாயிருக்கா..” எனும் போதே வேதாவின் முகம் இருண்டது. சிறு தடுமாற்றத்துடன் தொடர்ந்த தீரன்..

“எனக்கு நிலன்யாவும், கிருஷிகாவும் வேற வேற இல்ல..அவளை முதல்ல நான் பார்த்தது சிஷ்யா ஸ்கூல்ல தான்..அப்ப அவ அம்மா யாருன்னே தெரியாது..ஆனா ருஷி மேல எனக்கு ஒரு தனிப்பிரியம் இருந்தது..அதுக்கப்புறம் நடந்ததெல்லாம் உங்களுக்கே தெரியும். இப்பவும் உங்க பையனை பார்த்தா என்னால சாதரணமா பேச முடியுமா னு தெரியல..ஆனா அப்ப இருந்த ஆத்திரம் இப்ப இல்ல..இவங்களை சுத்தி நீங்க அரணா இருக்கிறதால உங்ககிட்ட தான் இதை கேக்க முடியும்..எனக்கு வேற வழி தெரியல..ருஷி விஷயமா நான் ஒரு முடிவெடுத்திருக்கேன்..இங்க ஆரல்வாய்மொழி ல உங்க வீட்டுக்கு ஒரு தெரு தள்ளி தனியா ஒரு வீடு வாடகைக்கு எடுத்து தற்காலிகமா நான் எங்க அம்மாவை கூட்டிட்டு வந்து இங்க தங்கலாம் னு இருக்கேன்..இது தற்காலிகமான முடிவு தான், மே பி ருஷி கம்ப்ளீட்டா குணமாகுற வரைக்கும்..புது மனுஷங்க, என் அம்மா அத்தை, நிலா, ராஜீவன் னு ஸ்கூல் லீவ் டைம் ல ருஷி ஹாப்பியா இருப்பா..ஆரல்வாய்மொழி டு திருநெல்வேலி போறது னா உங்களுக்கும் சிரமம்..இது னா பக்கத்திலேயே உங்க பேத்திய வச்சு பாத்துக்கலாம்..இது ருஷிக்காக மட்டுமே..அவ பழையபடி மாறியதும் கண்டிப்பா நான் கிளம்பிடுவேன்..அதுவரைக்கும் இதுக்கு நீங்களும் ஒத்துக்கிட்டு அவ அம்மாட்ட சம்மதம் வாங்கி தரமுடியுமா..?” என கை கூப்பி கேட்டவனை கை கட்டியபடி பார்த்தனர்.

ஓரிரு நிமிடங்கள் மௌனமாய் கரைய மாணிக்கம்..

“தலைமுறை தலைமுறையா உங்களவுக்கு பேரும் புகழும் இல்ல னாலும் ஓரளவுக்கு கவுரவத்தோடும் மானத்தோடும் வாழ்ந்த பரம்பரையில வந்தவன் தம்பி நான்..எனக்கடுத்து என் மகன்..இப்பவும் என் மகன் தப்பு செஞ்சிருக்க மாட்டான் னு என் உள்மனம் அடிச்சு சொல்லுது..ஆனா அன்னிகிருந்த சூழ்நிலை ல உங்க பொண்ணை மருமகளா ஏத்துக்க நாங்க தயாரா தான் இருந்தோம்..உன்னை மாதிரி பழி வெறி, குடும்ப கவுரவம் னு பாத்து பாதிக்கபட்டவங்களை கேட்கறத விட்டு அவங்கள உயிரோடு சாகடிச்ச ஈன ஜென்மம் நானில்ல.. இப்ப வரைக்கும் என் பையன் கடந்து வந்த பாதை சொல்ல முடியாத ரணத்தை கொடுத்திருக்கு..அதும் இல்லாம ஒரு பொண்ணு பின்புலம் என்ன ஏது னு தெரியாம உனக்கு பிடிச்சிருக்கு னு ஒரே காரணத்துக்காக எங்க செந்தா க்கு தாலி கட்டுன பாரு..இதையெல்லாம் எங்க வினுவோ, செந்தாவோ மன்னிச்சாலும் நாங்க செத்தாலும் உன்னை மன்னிக்கவே மாட்டோம்..பிறந்ததிலிருந்து வாழ்ந்த மண்ணை, நேசிச்ச உறவுகளை விட்டு தப்பே செய்யாம பேர் கெட்டு ஊரை விட்டு போய் பாரு..அப்ப புரியும் எங்க வேதனை..ஆனா இதெல்லாம் எங்களுக்கும் உனக்கும் மத்தியில தீராத கணக்கு..இத விட்டு இப்போ எங்க பேத்திக்காக நாங்க இறங்கி வர்றோம்..ஆனா உன் வீட்டுக்கு ருஷியை அனுப்ப எங்களுக்கே இஷ்டமில்ல..ஸ்கூல் முடிஞ்சு அவ எங்க வீட்டுல இருக்கட்டும்..நீ பார்க்கனும் னா அவளை ஸ்கூல்ல பாத்துக்க..இங்க தனியா வீடு எடுத்து தங்கறது உன் விருப்பம் ஆனா ருஷியை உன்க்கிட்ட விட முடியாது..வேறென்ன..? “ என வார்த்தைகளால் விளாசியவரை இமைக்காமல் பார்த்தாள் தீரன்.

அன்று அவன் செய்த பாதகத்தை உணர்ந்திருந்தாலும் தன் வீட்டு பிள்ளையும் பாதிக்கபட்டிருந்தாளே என மனம் கூக்குரலிட..இவர்களை விட அவன் யாழிக்கு செய்தது கொடுமை என கேட்டதில் நெஞ்சில் முள் குத்தியது போல வலித்தது. தன்னை மற்றொரு அன்னையாய் பாவிக்கும் ருஷிக்காக எதையும் செய்ய தயாரானான் தீரன். அவர்களை நோக்கி வந்தவன்..

“கொஞ்சம் எழுந்து நிற்க முடியுமா..? “ என கேட்க, வேதா..

“ஏன் அன்னிக்கு அடிக்காம விட்டோமே னு இப்ப அடிக்க போறியா..?

ப்ளீஸ்..” என அவன் இரைஞ்சவும் புரியாமல் எழுந்து நின்றனர் இருவரும். அவர்கள் காலில் சாஷ்டாங்கமாக விழுந்து விட்டான் தீரன். அது மக்கள் கூட்டமாக திரளும் புகழ்மிக்க காபிஷாப். பலர் பார்க்க ஒரு ஜமீன்தார் வீட்டு வாரிசு தங்கள் காலில் விழுவான் என கொஞ்சமும் எதிர்ப்பார்க்காத மாணிக்கம் பதட்டத்துடன் அவனை தூக்கி நிறுத்தினார். எழுந்தும் கை கூப்பியபடி நின்ற இளைஞனை கண்டு மனம் பதற கைகளை இறக்கிவிட்டார் வேதா. கலக்கமடைந்த விழிகளுடன் தீரன்..

“நான் அன்னிக்கு கொஞ்சம் நிதானமா யோசிச்சிருக்கனும்..காலம் கடந்த ஞானோதயம்..ம்ப்ச்..அட்லீஸ்ட் சாயங்காலம் ஸ்கூல் விட்டு வர்றப்ப நான் கூட்டிட்டு வந்து உங்க வீட்டுல விடுறேனே..மாசத்துல இரண்டு வாட்டி ருஷி என் குடும்ப ஆட்களோட என் கூட இருக்க நீங்களும் அவ அம்மாவும் அனுமதிக்க முடியுமா ப்ளீஸ்..? இது எனக்காக மட்டுமில்ல ருஷியோட மென்டல் ஹெல்த் ஸ்டெபிளிட்டிக்கும் தான் கேக்குறேன் ங்க..ப்ளீஸ் வேணா உங்க பையனை கூப்பிடுங்க..அவன் காலிலயும் விழறேன்..ஆனா என் ருஷிக்காக இதை மட்டுமாவது என்னை செய்ய விடுங்க ப்ளீஸ்..” என தன்னை மறந்து கெஞ்சி நின்றவனை அசந்து போய் பார்த்தனர் இருவரும்.

அவன் தோளை அணைத்தபடி மாணிக்கம்..

“செந்தாழினியை நாங்க எப்ப முதன் முதலா பார்த்தோம் ன்றது தனிக்கதை..ஆனா அவ கணவனை இழந்தவ..” என்றதும் உச்சபட்ச திகைப்பில் பேச்சற்று நின்றான் தீரன். அவன் கையை பிடித்த மாணிக்கம்..

“அவளை பத்தி தெரியாம நீ தாலி கட்டினதை எங்களாலயே ஏத்துக்க முடியாதப்போ அவள நினைச்சு பாருங்க..அவ கதையை நான் பொறுமையா சொல்றேன்..எங்களை விட இதுல முடிவெடுக்க வேண்டியது செந்தா..அவக்கிட்ட கேட்டுட்டு சொல்றோம்..ஆனா இப்பவும் நாம எதிரிங்க தான்..” என இயல்பாக பேசிக்கொண்டே நடந்தவரை பார்த்து தீரனின் மனம் குற்ற குறுகுறுப்பில் தவித்தது. வாழ்வில் முதல் முறையாக வினுயுகன் நல்லவனோ என யோசிக்க ஆரம்பித்தான். மேலும் தன் யாழி ஓர் விதவை என அறிந்ததும் நெஞ்சம் அடைத்தது தீரனுக்கு.

விஷயத்தை கேள்விப்பட்ட செந்தா வானத்துக்கும் பூமிக்கும் குதித்தாள்..அவர்களிடம்..

“இவ மட்டும் அவன்க்கிட்ட சாயாம இருந்திருந்தா அவனை உண்டு இல்ல னு பண்ணிருப்பேன்..அவன் யாரு என் பொண்ணு விஷயத்துல முடிவெடுக்க..? கொஞ்ச கொஞ்சமா கிருவை என்க்கிட்டயிருந்து பிரிக்க பாக்குறான்..அவன் மூஞ்சும் அவனும், உடம்பெல்லாம் விஷம்..அனகோன்டா வாயன்..அப்படியே முழுசா முழுங்கி ஏப்பம் விட்ருவான் ராஸ்கல்..” என வரைமுறையின்றி தீரனை திட்டிக்கொண்டிருந்தவளை கண்டு மொபைலை சைலன்டாக ஆன் செய்து மறுபக்கம் கேட்டுக்கொண்டிருந்த தீரனின் எதிர்வினை எவ்வாறு இருக்குமோ என சற்று பீதியுடன் செந்தாவை பார்த்தார் மாணிக்கம்.

கிருஷிகாவிற்காக என எவ்வளவு எடுத்து சொல்லியும் சிறிதும் கருத்தில் கொள்ளாது அவளை அவனுடன் அனுப்ப முடியாது என அடம்பிடித்தாள் செந்தா.

வேதாவின் கைப்பேசி ஒலிக்க காதில் வைத்தவரிடம் தீரன்..

“ஸ்பீக்கர் ஆன் பண்ணுங்க மா..” என்றதும் வேதா அப்படியே செய்தார்.

“அங்கிள்..நான் இன்னும் அந்த ஹோட்டல் ல தான் இருக்கேன்..அந்த மேடம்க்கிட்ட முக்கியமான விஷயம் அதும் ருஷியை பத்தி தான் பேசனும்..வெரி பர்சனல்..கொஞ்சம் வரச்சொல்றீங்களா..?

பச்சை பச்சையா புளுகுறான் ப்பா அவன்..நாம தான் எல்லாமே பாத்தோமே..இவனையெல்லாம் நம்பவே முடியாது..நான் வரமாட்டேன்..வைடா போனை..” என பதிலுக்கு இவள் கத்தவும் பட்டென எதிர்முனை துண்டிக்க பட்டது. ஏனோ வேதாவிற்கு மட்டும் செந்தாழினி விழிதீரனிடம் காட்டும் கோபமுகம் ஒரு வித அவர்களுக்கேயான உடைமையுணர்வாய் தோன்றியது.

அன்றைய தினம் முழுவதும் மருத்துவமனை வராத தீரன் மறுநாளும் எட்டி கூட பார்க்கவில்ல. தீரனை காணாமல் முரண்டு பிடிக்க தொடங்கிய கிருஷிகா ஒரு கட்டத்தில் உணவை மறுத்து, மருந்து மாத்திரைகளை தவிர்க்க, அவளை கெஞ்சி, கொஞ்சி, மிரட்டி, பயங்காட்டி, அழுது புரண்டு என அத்தனை வித்தைகளை காட்டியும் சிறிதும் மசியாமல் தன் பிடியில் உறுதியாக இருந்தாள்.

மாணிக்கம், வேதா ஏன் மருத்துவர், தாதி உள்பட அனைவரும் பலமுறை அழைத்தும் அழைப்பை ஏற்கவில்லை தீரன். ஊன் உறக்கமின்றி மருந்தும் இல்லாமல் கிருஷிகாவின் இரத்த கொதிப்பு மிகவும் குறைந்து அவள் மயங்கி விழும் முன் தீரனுக்கு அழைப்பு விடுத்தாள் செந்தா.

உடனே எடுக்கப்பட்டு மறுமுனை அமைதியாய் இருக்க..செந்தா..

“கிருக்கு லோ பிபி வந்து மயங்குற நிலைமைல இருக்கா..நீ என்ன சொன்னாலும் கேக்குறேன்..முதல்ல இங்க வா ப்ளீஸ்..” என முடிக்கும் முன்னரே அழைப்பு துண்டிக்க பட்டதை நம்பமுடியாமல் பார்த்தாள் செந்தா.

மின்னல் வேகமோ, ஊடுருவும் ஒளி வேகமோ பின்னுக்கு தள்ளி மறு நிமிடம் உள்ளே பிரவேசித்தான் தீரன். அனைவரும் அவனை அதிர்வுடன் பார்க்க, அவனோ கிருவிடம் விரைந்து வந்தவன் அருகிலிருந்த வேதாவிடம்..

“ம்மா அந்த கஞ்சியை வாங்கி கொடுங்க..” என கேட்க செந்தாவிடமிருந்து வாங்கி கொடுத்தார் வேதா.

கிருவின் கன்னத்தை தட்டியபடி அவளுக்கு கதை சொல்லி கஞ்சி ஊட்டுபவனை செந்தா உட்பட பெரியவர்களும் சுவாரசியமாக பார்த்தனர். இரு தினங்களாய் சிரிக்க மறந்த பிறைநிலா இன்று கலகலவென சிரித்து பேசிக்கொண்டிருப்பதை கண்டு லேசாக வயிறெறிய சுண்டிவிட்ட கண்ணீருடன வெளியேறினாள் செந்தாழினி.

மருந்து மாத்திரைகளை கொடுத்து மதியம் வரை அவளுடன் இருந்தவன் மாணிக்கத்திடம்..

“எனக்கு சில திங்க்ஸ் வாங்கனும்.. பத்து நிமிஷத்துல வந்துடறேன், கொஞ்சம் பாத்துக்கங்க..” என்றவன் விறுவிறுவென தன் கைப்பேசியில் அவன் தங்கியிருந்த அறை எண்ணை குறிப்பிட்டு உடனே வருமாறு செய்தி அனுப்பிவிட்டு வெளியேறினான்.

அவன் செய்தியை படித்து காண்டான செந்தா உடனே அவனுக்கு அழைத்து..

“ஹோட்டலுக்கெல்லாம் வர முடியாது..நீ சொன்ன காபி ஷாப்க்கு வா..” என இவள் கத்த பதிலுக்கு..

“நான் கூப்பிட்டப்பவே வந்திருந்தா காபிஷாப்..இப்ப நீ இங்க தான் வரனும்..இல்ல நான் வரவே மாட்டேன் அங்க..இன்னும் 10 மினிட்ஸ் ல நான் திரும்ப ஹாஸ்ப்பிட்டல் போகனும்..டைமில்ல..நான் லைன் ல வெயிட் பண்றேன்..சீக்கிரமா வா..” என போன் ஸ்பீக்கரை ஆன் செய்து மேஜையில் வைத்தான்.

சில நிமிடங்களில் கதவு தட்டும் சத்தம் கேட்டு..

“உள்ள வா..” என்றான் தீரன். ஒருவித நம்பகத்தன்மையற்ற அச்சத்துடன் உள்ளே நுழைந்தவளை கண்டு அவளை அடித்து கொல்லும் ஆத்திரம் வந்தது அவனுக்கு. இருப்பினும்..

“ருஷியை இன்னும் ஆறு மாசத்துக்கு நான் தான் ஈவ்னிங் பிக் அப் பண்ணுவேன்..

நான் முடியாது னு சொன்னா உன் சீப் கேம்மை என்க்கிட்ட ஆடுவ இல்லியா..?

ஆப்ஃகோர்ஸ்..

இது தான் பெத்தவளுக்கும், நேத்து வந்த உனக்கும் வித்தியாசம்..நான் தீவிரமா வெறுக்குற உனனையவே என் கிருக்காக கூப்பிட்டேன்..ஆனா நீ உன் போலி பாசத்தை வச்சு சீப்பா விளையாடுற..” என்றவளின் கழுத்தை கடுங்கோபத்துடன் அழுத்தி பிடித்தான் தீரன்.


தொடரும்.
 
Last edited:

Author: STN - 90
Article Title: NTYU - 9
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

Gowri Karthikeyan

Well-known member
May 5, 2026
1,290
384
83
Chennai
இப்ப தான் புரியுது இதுங்க ரெண்டும் எப்பவும் திருந்தாதுங்க🤦🤦🤦🤦🤦
 
  • Haha
Reactions: STN - 90