STN - 90
Member
தேடல் இறுதி அத்தியாயம்.

Dzkou Valley, Nagaland.
தன் ஒவ்வொரு அணுவிலும் கலந்து தனக்குள் ஆர்ப்பரிக்கும் நண்பனின் நினைவுகளை கட்டுபடுத்த முடியாமல் திணறினான் தீரன். வெகு நேரமாய் தங்கள் அறையில் அசையாது அமர்ந்திருந்தவனின் நிலையை கண்டு செந்தா அவன் தோளை தொட்டு..
“EC என்னை பாருங்க..” அசைவேயில்லை அவனிடம்..முதல்முறையாக அவனை உரசியபடி அமர்ந்த செந்தாவின் மடியில் முகத்தை புதைத்து கதற தொடங்கினான்..இது வரை பொறுப்புள்ள குடும்ப தலைவனாய் பார்த்திருந்தவளுக்கு தன்னை மறந்து கண்ணீர் சிந்துவதை கண்டு அவளுக்கும் கண்கள் கசிந்தன. அவனை அழ விட்டபடி அமைதியாக அவன் தலையை தடவி கொடுத்தாள் செந்தா..நெடுநாள் சுமையை கண்ணீராய் தன் உரியவளிடம் முழுவதுமாக கொட்டி தீர்த்தான் தீரன்.
சில நிமிடங்களில் தன்னை மீட்டெடுத்து விலகி அமர்ந்தவனை கை விரித்து அழைக்க கண்கள் கசிய தன் இறைவியை அணைத்துக்கொண்டான். கணவன் மனைவியாய் இருவருக்கும் முதல் அணைப்பு. இரு உள்ளத்திலும் புரையோடியிருந்த காயங்களை ஆற்ற வல்ல பாச பிணைப்பு. இறுக்கி அணைத்து நின்ற கணவனின் முகத்தை இரு கைகளால் பற்றி இதழ்கள் உரசும் இடைவெளியில் பாவையவள் பார்க்க..கூர்மிகு விழிகளுக்கு சொந்தக்காரனே அவள் உயிரை தழுவும் பார்வையில் தடுமாறினான். கணவனின் கவர்ந்திழுக்கும் நயனங்களில் மெல்ல தன் இதழ்களை பதித்தாள் செந்தாழினி. மார்கழி பனியில் சியாச்சின் மலைப்பகுதியில் வெறும் காலோடு நின்ற உணர்வு இருவருக்கும். மரத்து போன இதயங்களில் வலிமையான மின்னல் கீற்றாய் முதல் முத்தம். கண்களை மூடி அனுபவித்தனர் இருவரும். இது சட்டென வந்த மாற்றமில்லை..அவனுடன் சண்டையிட்டு, பழகி, வாழ்ந்து பார்த்து வந்த நிலையான தன் கணவனிடம் ஓர் மனைவிக்கான உணர்வுகள் என துல்லியமாக எடுத்துரைக்க மனைவியின் அணைப்பில் கரைந்து நின்றான் தீரன். பின்னர் கட்டிலில் அவனோடு ஒட்டி படுத்தவள் கணவனை தன் நெஞ்சோடு தழுவிக்கொண்டாள். சில நிமிடங்களில் இருவரும் ஆழ்ந்த உறக்கத்திற்கு சென்றனர்.
தன் கைபேசி ஒலியில் விழித்த செந்தா, எடுத்து யாரென பார்க்க, அவள் அசைவில் தீரனும் கண் விழித்திருந்தான். ப்ரணவ் என்றதும் ஏற்று..
“ப்ரணவ்..
சாரி டு டிஸ்டர்ப் யூ செந்தா..நான் உங்க கூட கொஞ்சம் பேசனும்..ரூமுக்கு வரலாமா..?
வாங்க..” என்றாள். சில நிமிடங்களில் கதவை தட்டி உள்ளே வந்தவனை குழப்பமாக ஏறிட்டனர் இருவரும். தீரனின் சிவந்த கண்களை பார்த்ததும் புரிந்து கொண்டவன்..
“தீரா..உன்னை பாக்கும் போதெல்லாம் நீ என் வினுக்கு பண்ண அநியாயம் தான் ஞாபகம் வரும்..இந்த விஷயத்தை தவிர்த்து பாத்தா நீயும் கொஞ்சம் நல்லவன் தான்..ஏன் னா நியாயமா ஒருத்தனுக்கு கிடைக்க வேண்டிய தூய்மையான அன்பு பல பரிமாணங்கள் ல உனக்கு கொஞ்சம் அதிகமாகவே கிடைச்சிருக்கு..உன் அத்தை மக நிலன்யா டு தோ இந்த முத்து மக பெத்த ரத்தினம் வரை எல்லாரும் உன் மேல உயிரா இருக்காங்க..உன்னை ஒரு எதிரியா பாத்துட்டிருந்த வினுவே இப்ப மாறிட்டான்..ஏதோ ஒரு கரிஷ்மா இருக்கு டா உன்க்கிட்ட..இப்ப நான் சொல்ல போற விஷயம் நம்ம மூணு பேர் தவிர சாகுற வரை வேற யாருக்கும் தெரிய கூடாது..பர்ஸ்ட் டைம் என் வினுக்கு கூட தெரியாம நான் பண்றது அவன் நல்லதுக்கு தான்..” என தன் கைபேசியில் வீடியோ கால் போட மறுபுறம் ஏற்கபட தீரனிடம் கைபேசியை கொடுத்தான் ப்ரணவ்.
திரையை பார்த்த தீரனின் விழிகள் ஸ்தம்பித்து நின்றது..செந்தாவோ நெஞ்சில் கை வைத்தபடி அதிர்ந்து நின்றாள். பச்சை பசேலென மலைமுகடுகள் உரசும் அடர்ந்த வனப்பகுதியில் இருந்த ஒரே ஒரு வீட்டின் முன் விரிந்த புன்னகையுடன் கை காட்டி நின்றிருந்தான் ஷிவநந்தன்.
விழிகள் இமைக்க மறந்து நந்தனை தலை முதல் கால் வரை ஸ்கேன் செய்தும் வார்த்தைகள் வர மறுத்தது தீரனுக்கு. கண்களை துடைத்தபடி நந்தன்..
“தீரா..” என்றழைக்க உயிரை அசைக்கும் குரலில் தடுமாறி மடங்கி அமர்ந்தான் தீரன். ப்ரணவ் நந்தனிடம்..
“வில் கால் யூ பேக் நந்தன்..” என போனை அணைத்துவிட்டு தீரனுக்கருகில் அமர்ந்தான். அவனிடம்..
“உன் பிரண்ட் இன்னும் உயிரோட தான் இருக்கான் அன்ட் அவன் ஒரு RAW ஏஜன்ட்..” என்றதும் தீரனின் விழிகள் அதிர்ச்சியில் விரிந்தது. ப்ரணவ் தொடர்ந்து..
“அவன் உன் லைப்ல வந்தது கிருவை கடத்தி ட்ராமா பண்ணி அவன் பாஸ்ட்டை உனக்கு புரிய வச்சது வரை நிஜம்..அப்பயிருந்த நந்தனுக்கு உன் குடும்பத்தை பழி வாங்கனும் னு மட்டுமேயிருந்தது..ஆனா அவன் மாமா நவீனுக்கு இது பிடிக்கல..அப்போ நந்தன் அவருக்கு ஒரு ப்ராமிஸ் பண்ணான்..அவனுக்கு சின்ன வயசிலிருந்தே டிடெக்டிவ்/ப்ரைவேட் இன்வெஸ்டிகேஷன் ல தனி ஆர்வம் இருந்தது..சோ படிச்சு முடிச்சு ஒரு RAW ஏஜன்டா (தனியார் ரகசியத் துப்பறிவாளர்) சேவை செய்ய தான் ஆசை..எப்படியும் ஒரு பேசிக் டிகிரி வேணும்..அதுக்கு அஸ்திவாரமா கரஸ் ல படிச்சுக்கிட்டே ப்ராக்டிக்கலா அவன் குடும்பத்தை அழிச்ச உங்களோட சேர்ந்து வாழ்ந்து உங்களால அவன் இழந்த உறவுகளை தெரியபடுத்தி ஒரு உளவாளியா சரியான சமயத்துல அவனை வெளிப்படுத்திக்கிட்டான்.. உன் அத்தை, அப்பா தவிர நீங்கல்லாம் மனசார கூட யாருக்கும் கெட்டது நினைக்கமாட்டீங்க னு அவனுக்கு லேட்டா தான் புரிஞ்சுது..உன் நட்புல உருகுனான், நிலாவோட வில்பவர் ல அசந்து நின்னான்..வினுவோட காதல் ல அவன் முடிவையே மாத்திக்கிட்டான்..அப்புறம் நடந்ததெல்லாம் உங்களுக்கே தெரியும்..” என கூறி முடித்தான் ப்ரணவ். அன்டார்டிகாவின் பனிகட்டியாய் உறைந்திருந்த தீரனை உலுக்கி அவனிடம் பதமான சூட்டில் க்ரீன் டீ கப்பை கொடுத்தாள் செந்தா. மறுக்காமல் வாங்கி பருகியவன் சில நிமிடங்கள் கழித்து ப்ரணவ்விடம்..
“அன்னைக்கு அருவியில குதிச்சதுக்கப்புறம் என்ன நடந்தது..?
உங்களுக்கு உயிர் பயம் காட்டி கிருவை மேல கொண்டு வர்றதுக்குள்ள நிலா அருவி ல குதிப்பா னு இவன் நினைக்கவேயில்ல..உனக்கொன்னு தெரியுமா..?ஹி இஸ் ஏ குட் ஸ்விம்மர்..நீங்க இருக்கிற வரை தண்ணிக்குள் தம் பிடிச்சிட்டிருந்தவன் யாருமில்ல னு வெளிய வந்தப்போ நான் பாத்துட்டேன் அவனை..கரைக்கு வந்ததும் என்க்கிட்ட தன்னை பத்தி சுருக்கமா சொல்லி அவன் வந்த வேலை முடிஞ்சது..அவன் செத்துட்டதா சொன்னா தான் வினு நிலா இனி அவங்க வாழ்க்கைய பத்தி யோசிப்பாங்க..அதுமில்லாம உளவாளியா அவனை பத்தி எந்த தகவலும் அவன் குடும்பமேயிருந்தாலும் சொல்லக்கூடாது னு லீகலா என்னை கார்னர் பண்ணிட்டான்..” என்றான் ப்ரணவ். நெற்றியை சுருக்கி தீரன்..
“இப்ப என்க்கிட்ட ரிவீல் பண்ணதுக்கு ரீசன்..?
சிம்பிள்..யுவர் லவ் & பெயின் பாஃர் ஹிம்..நாம வாழ்ற பரபரப்பான யுகத்துல மெல்ல அவனை மறந்து உன் வாழ்க்கைய பாத்திருந்தா இப்பவும் அவன் உயிரோடிருக்கிற விஷயத்தை சொல்ல விட்டிருக்க மாட்டான்..ஆனா நீ..? உனக்குள்ள வாழ்ற இன்னொரு உயிரா அவனை இப்ப வரைக்கும் மறக்கல.. அவன் மேல நீ வச்சிருக்கிற அபரிமிதமான பாசத்துல லைட்டா வழுக்கி விழுந்துட்டான்..
இப்ப அவன் எங்கயிருக்கான்..?” என கேட்கும் போதே குரல் இறங்கியிருந்தது தீரனுக்கு. ப்ரணவ்..
“தெரியாது..எப்பவாவது லைக் இயர்லி ஒன்ஸ் எனக்கு மெசேஜ் பண்ணி உங்க எல்லாரையும் விசாரிப்பான்..நான் கான்டாக்ட் பண்ணா ரெஸ்பான்ஸ் இருக்காது..இன்னிக்கு சங்கீத் ல நான் பேசினது, நீ கலங்கி போனதெல்லாம் அனுப்புன வீடியோ பாத்து மனசு கேக்காம பர்ஸ்ட் டைம் என்னை கூப்பிட்டு வீடியோ கால் ல உன்னை பேச சொன்னான்..
அவன் நம்பர் கொடு..” என கேட்டு வாங்கிய தீரன் அவன் மொபைலிலிருந்து அழைத்தான்..சட்டென அழைப்பை ஏற்ற ஷிவ்நந்தனிடம்..
….
தீரா..” நீண்ட இடைவெளிக்கு பின் கேட்ட நண்பனின் குரலில் தன்னை கட்டுபடுத்திக்கொண்டு..
“இப்பவே நான் உன்னை பாக்கனும்..எங்க இருக்க..?
கமிங் ப்ரைடே நாகாலான்ட் டிசுகோவ் (Dzukou) பள்ளத்தாக்குல இருக்குற தனி வீட்டுக்கு(Lonely House) வா..தீரா என் விஷயம் நம்மை தவிர நீ யாருக்கும் முக்கியமா வினு நிலாக்கு சொல்லவே கூடாது..மத்தது நேர் ல பேசிப்போம்..ஐ ஹேவ் டு கோ நவ்..பை..ப்ரணவ்க்கிட்ட சொல்லிடு..” என அழைப்பை துண்டித்தான் நந்தன். ப்ரணவ் தீரனிடம்..
“உன்னை அவன்க்கிட்ட அனுப்புறது என் பொறுப்பு..இப்பவாவது நிம்மதியா தூங்கு..” என செந்தாவிடம் ஓர் தலையசைப்புடன் திரும்பியவனை தீரன் இறுக்கமாய் கட்டிக்கொண்டு..
“நீங்க எனக்கு எதிரிகளாவே இருந்திருக்கலாம்..இவ்வளவு நல்லவனுங்களா மாறி இப்பவும் என்னை சாவடிக்கிறீங்க டா..” என்றான்.
மறுநாள் ப்ரணவ் மான்யா வரவேற்பு பிரமாண்டமாய் நடைபெற்றது. பல்வேறு துறையை சார்ந்த புகழ் பெற்ற வல்லுனர்கள் அரசியல் பிரமுகர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி விடைபெற்றனர். நண்பகல் நேரம் விருந்தினர் மெல்ல குறைய மணமக்களை ஓய்வெடுக்க அறைக்கு அனுப்பி வைத்த உதய் பத்மினி தம் உறவினர்களை கவனிக்க சென்றனர்.
இதுவரை அடாவடியாய் துள்ளி திரிந்த மானொருவள் அமைதியின் திருவுருவமாய் முகத்தை புடவை தலைப்பில் மூடியபடி கட்டிலில் அமர்ந்திருந்தாள். உருகி உருகி பின்னால் சுற்றி கரம்பிடித்த தன் நாயகனை நினைத்ததும் பாவையவள் மேனியோ சில்லிட்ட பனிக்கட்டியாய் உறைந்து போனது. கதவு திறந்து உள்ளே நுழைந்த அவள் ப்ரஹாண் தாழிட்டு திரும்பி தன் மனைவியை பார்த்தான்.
தலை முதல் கால் வரை மோத்திச்சூர் லட்டுக்களால் பிடித்த இனிப்புச்சிலை போல் அமர்ந்திருந்தவளை நெருங்கி பொத்தென அவள் பக்கத்தில் விழுந்தான். கணவனின் அதிரடியில் எம்பி குதித்தாள் மான்யா. கண்களை விரித்து அவனை முறைக்க ப்ரணவ்..
“நவ் மை மான் இஸ் பேக்..அத விட்டு பொண்ணு மாதிரி வெட்கபட்டு தலைகுனிஞ்சி நீயாவே இல்ல..சரி அப்புறம்..?” என அவள் மடியில் சாவகாசமாக படுத்துக்கொண்டு அவள் முகத்தை பார்த்தவனை உருட்டி விட்டவள்..
“இன்னிக்கு ஒரு நாளாவது பொண்ணா பீஃல் பண்ணிக்கறேனே..? இந்த அடாவடியெல்லாம் நாளைலருந்து வச்சிப்போம் ஓகே..?
நீ ஒரு பொண்ணா நான் ஒரு பையனா விடிய விடிய பீஃல் பண்றதுக்கு தான் இந்த இரவு மான்..” என தாபத்துடன் அவளை நெருங்கும் கணவனை ஏறிட்டு பார்க்க முடியாது இறங்க முற்பட்டவளை தாவி பிடித்து தன் கைக்குள் கொண்டு வந்த ப்ரணவ்..
“எங்க ஓடுற..?” என அவளோடு மஞ்சத்தில் சரிந்தான். வளைந்திடாத இரும்புக் கம்பியாய் விறைப்புடன் நின்றவன் இவனா என வியக்கும் படி தன் மானின் மென்மையில் தன் வசமிழந்து இதுவரை அறிந்திராத இனிமையான உணர்வுகளை அவளுக்கு கடத்தி இனி என்றென்றும் அவள் உள்ளக்கோயிலில் ஒலிக்கும் ப்ரணவ மந்திரம் தானே எனும்படி அவளுள் கரைந்து போனான் மான்யாவின் ப்ரஹான்.
மறுநாள் அனைவரும் ஊருக்கு கிளம்பும் முன் ப்ரணவ் தீரனிடம் வந்து..
“எங்க எல்லாருக்கும் முன்ன கல்யாணம் பண்ணவன் நீ..இப்ப கல்யாணம் நடந்தது எனக்கு தான் பட் உங்களை டார்ஜிலிங்க்கு ஹனிமூன் அனுப்பி வச்சு புது ஹிஸ்ட்ரியை க்ரியேட் பண்ணலாம் னு இருக்கேன்..இதுல டிக்கட்ஸ் & ரிசார்ட் புக்கிங் டீட்டெய்ல்ஸ் லாம் இருக்கு..ஹேவ் ஏ லவ்லி மொமன்ட்ஸ் விழிதீரன் & செந்தாழினி..” என்றான் ப்ரணவ்..நண்பனை மெச்சுதலாய் பார்த்த வினு கிருஷிகாவை தங்களுடன் வைத்துக்கொள்ள நிலன்யாவிற்கு மகிழ்ச்சியில் கண்கள் கலங்கியது.
மகளிடம் ஆயிரம் பத்திரம் சொல்லிவிட்டு அனைவரிடமும் விடைபெற்று இருவரும் நாகாலாண்ட் கிளம்பினர்.
வடகிழக்கின் மலர்ப்பள்ளத்தாக்கு என பரவலாக அறியப்படும் டிசுகோவ்,நாகாலாந்து–மணிப்பூர் எல்லையில் அமைந்துள்ள அழகிய பள்ளத்தாக்காகும். இங்கு அரிய வகை Dzukou Lily மலர், அழகான ஓடைகள், மரகதப் பச்சை மலைத்தொடர்கள் என கண்களுக்கு விருந்தாய் மலையேற்றத்துக்கு உகந்த இடம்.
மலையுச்சியிலிருந்த அந்த ஒற்றை வீட்டை அடைந்த தீரன் செந்தா வை அந்தி வானத்தில் மின்னும் விண்மீனாய் பளீரிடும் புன்னகையுடன் வரவேற்றான் ஷிவநந்தன்.
மாண்டுவிட்டான் என நினைத்திருந்த உயிரானவன் கண்ணெதிரே..வார்த்தைகள் பஞ்சமாக உடல் நடுங்க தடுமாறிய தீரன் செந்தாவை பற்றி நின்றான்..நந்தன் ஓரடி எடுத்து வைக்கும் முன் சீறிப்பாயும் ஏவுகணை போல அவனிடம் விரைந்து தலை முதல் கால் வரை காற்றும் நுழையமுடியாமல் மிக இறுக்கமாக தழுவிக்கொண்டான் தீரன்.
நிமிடங்கள் நீண்டதேயொழிய தன் நண்பனை விட்டு நீங்கவில்லை தீரன். இது வேலைக்காகாது என செந்தா அங்கிருந்த சமையல் செய்யும் பையனிடம்..
“சோட்டா பையா சாய் மிலேங்கா க்யா..?
தோ மினிட் தீதி..” என அவன் செல்ல அவனை தொடர்ந்தாள்.
தன் கைகளை இறுக்க பற்றியபடி தோளில் சாய்ந்திருந்தவனிடம் நந்தன்..
“என் மேல கோபமா தீரனுக்கு..?
அடிச்சு கொல்றளவுக்கு இருக்கு..” என கூறியவனின் பதிலை கேட்டு சிரித்தவன்..
“எத்தனை தடவை சாகறது..?
வாயை மூடு டா..
சரி..நிலா வினு எப்படி இருக்காங்க..?
நீ ஆசபட்ட மாதிரி அம்சமாயிருக்காங்க..
தீரா..உன் அப்பா பண்ண தப்புக்கு உன்னை பழி வாங்க தான் வான்டட்டா உன் லைஃப் ல வந்தேன்..ஆனா பழக பழக தான் நீ யாரு னு புரிஞ்சுது..உன் அத்தை ய தவிர உன் வீட்டுல எல்லாரையும் ரொம்ப பிடிக்கும் டா..” என நிறுத்தியவனை ஏறிட்ட தீரன்..
“பழசு பேச வேண்டாம்..நவீன் மாமா எப்படி இருக்கார்..?
அவர் இறந்து ஒரு வருஷமாச்சு..
ஓ..இந்த ஜாப் உன் உயிருக்கே ரிஸ்க் இல்லையா..? இதை ஏன் டா சூஸ் பண்ணினே..?
என்னை நம்பி இந்த நாட்டை தவிர வேற யாரிருக்கா..?
அப்போ நான் யாரு டா உனக்கு..?
என்னை தவிர உனக்கு னு குடும்பம் இருக்கு ல்ல..?
இந்த வேலை வேணாம் ராஜீ..ம்ப்ச்..ஷிவா..என் கூட வந்துடு..உனக்கு ஒரு பொண்ணை பாத்து கல்யாணம் பண்ணி வச்சு என் கண் முன்னாடியே இரு டா..
அது சரிப்பட்டு வராது தீரா..என்னை என் போக்குல விடு..இந்த விஷயத்துல கம்பல் பண்ணாதே ப்ளீஸ்..தென் இந்த வருஷம் நிலா சேம்பியனாமே..செம்மல்ல..? “ பேச்சை திசை திருப்பும் நண்பனை புரிந்துக்கொண்ட தீரன் சில நொடிகளுக்கு பிறகு தன் மனைவியை தேட டீ மற்றும் பிஸ்கட்ஸ் உடன் வந்தாள் செந்தாழினி. அவள் பார்வையை தவிர்க்கும் நந்தனிடம்..
“உங்களுக்கு எந்த கில்ட்டும் வேணா..நிலா உங்களை பத்தி சொல்லும் போதே உங்களையும் புரிஞ்சுக்க முடிஞ்சுது..பி ப்ரீ..” என சற்று நகர்ந்தவளை நந்தன்..
“நான் உன்க்கிட்ட கொஞ்சம் பேசனும் செந்தாழினி..தனியா..” என்றதும், கப்புடன் எழுந்த தீரன் அந்த பையனிடம்..
“ஆவோ பாய்..இப்ப மை டர்ன் ஹே..” எனக்கூற அவன் முழித்தபடி..
“தீதி..?” என அவளை சுட்டி காட்ட அவனை இழுத்துக்கொண்டு..
“தீதிக்கோ பேதி ஹோ கயா..து ஆவோ..மே ஹூனா..? “என செல்லும் கணவனை தீயாய் இவள் முறைக்க நந்தன் விழுந்து விழுந்து சிரித்தான். பின் அவளிடம்..
“உன் லைஃப் ல நடந்தது..நீ அத கடந்து வந்தது..இதோ இப்ப என் தீரனுக்கு எல்லாமுமா நீ மாறுனது சாதாரண விஷயமில்ல..நீ அவன் லைஃப் ல வந்தது அவனுக்கு மிக பெரிய ப்ளஸ்ஸிங்..இதுவரைக்கும் நீ இழந்ததை அவன் உன் லைஃப்ல கொண்டு வந்துட்டான்..இனி அவன் ஆசபட்டதெல்லாம் அனுபவிக்க நீ தான் மனசு வைக்கனும்..இவனோட சேர்த்து எல்லாரையும் பாத்துக்கோ செந்தாழினி..
எங்க மேல இவ்வளவு அக்கறை காட்டுற நீங்க உங்க முடிவை மறுபரிசீலனை பண்ணலாமே..?
திஸ் இஸ் மை டெஸ்டினி..ஐ ம் வெரி மச் ஹாப்பி டு பி எ ரா ஏஜண்ட்..
ஓகே..கீப் இன் டச் நந்தன்..
ஷ்யூர்..நான் இப்ப கிளம்பனும்..” என எழுந்தனர். தீரன் செந்தாவிடம் விடைபெறும் முன்..
“உங்களுக்கு கோஹிமா ல இருக்குற ‘LA Colline Resort’ ல ஹனிமூன் சூட் புக் பண்ணியிருக்கேன்..இப்பவே கிளம்புங்க..நானும் போகனும்..” என இது வரை கலங்காதிருந்தவன் தீரனை பிரியும் வேளையில் இறுக கட்டியணைத்து தன் கண்ணீரை சுண்டி விட்டபடி..
“இனி நெக்ஸ்ட் மிஷன் ப்ரேக் ல உன்னை கான்டாக்ட் பண்றேன்..நடுவுல என்னை கான்டாக்ட் பண்ணாத என்ன..?
உனக்கு யாருமில்ல னு இனி நினைக்காதே..உனக்காக ப்ரணவ், நான் இவ முணு பேர் எப்பவுமே உன் சேஃப்டிக்கு ப்ரே பண்ணிட்டேயிருப்போம்..டேக் கேர் மச்சான்..” என நந்தன் கன்னத்தில் ஆழமாய் முத்தமிட்டு விலக, கண்கள் கலங்க அழகான புன்னகையுடன் தன் இலக்கை நோக்கி ஓடினான் ஷிவநந்தன்.
வரும் வழியில் இரவுணவை முடித்து இருவரும் ரிசார்ட்டை அடைந்தனர். தேன்நிலவுக்கான செட்டப்பில் தயாரயிருந்த அறையில் நுழைந்த இருவருக்கும் சிறு கலக்கம் தோன்றியது. தம் புதல்வியிடமிருந்து அழைப்பு வர போனை தீரனிடம் கொடுத்து தன் உடைகளை எடுத்துக்கொண்டு குளியலறை சென்றாள் செந்தா. மகளிடம் பேசியதில் மனம் லேசாக அப்படியே கட்டிலில் விழுந்தான்.
உயிர் நண்பனை கண் குளிர பார்த்து பேசி மகிழ்ச்சியின் உச்சத்தில் இக்கணம் சஞ்சரிப்பவனை குளித்து புத்தம் புதிய மலராய் தேன் வண்ண கலம்காரி லினன் புடவையணிந்து வந்தவளின் இடுப்பு மடிப்பில் தூள் துகள்களாக சிதறி போனான் யாழியை மீட்டுபவன்.
“EC..போய் குளிச்சிட்டு வாங்க..” குழலென வாசித்தவளின் குரலில் மயங்கிவன் அவளை நெருங்கி..
“அதென்ன EC..?
குளிச்சிட்டு வாங்க..சொல்றேன்..” என அவனை குளியறைக்குள் தள்ளினாள்.
சில நிமிடங்களில் வெளியே வந்தவன் ஜன்னல் கம்பியை பற்றிக்கொண்டு நின்ற தன் மலர்க்கொடியை நெருங்கி அவள் காதருகே..
“இப்ப சொல்லு..” என கேட்க திரும்பி தன்னவனை பார்த்த பார்வையில் தடுமாறி போனான். அவன் முகத்தை பற்றியவள்..
“உங்க அம்மா சரியா தான் பேர் வச்சிருகாங்க..விழிதீரன் னு..அதோட இங்லீஷ் வெர்ஷன் ஐ கரேஜன்..ஷார்ட்டா EC..
உன் இடுப்பு மடிப்புக்கு கூட நான் ஒரு பேர் வச்சிருக்கேன்..சொல்லட்டுமா..?” என அவளை இடுப்போடு அணைக்க வந்தவனிடமிருந்து விலகி நின்று..
“என்ன பேர்..?” என கேட்க தீரா மையலுடன் தீரன்..
“கிட்ட வா..சொல்றேன்..
அங்கிருந்தே சொல்லுங்க..” என்றவளை இரண்டேயெட்டில் நெருங்கி பிடித்த தீரன்..
“G H..ஜிஞ்சர் ஹிப்பி..இஞ்சி இடுப்பழகி டி நீ..” என
அவளை இடையோடு இறுக்கி அணைத்தபடி அவள் கண்களை தாபத்தோடு பார்த்தான்..மன்னவனின் உயிர் தீண்டலில் சிலிர்த்து கண்ணை மூடியிருந்த தன் சுந்தர யாழிப்பெண்ணை அள்ளிக்கொண்டவன் மென்மையான காமத்தோடு வலிமையான காதலை அவள் நாடி நரம்பெங்கும் ஊடுருவி செல்லும்படி தாளம் தப்பாது மீட்ட, அவன் காம இ(ச்)சையில் இவள் சிணுங்கி ஸ்ருதி சேர்க்க மாரனவனின் மலர்க்கணைகளில் குழைந்து நெகிழ்ந்து அவனுள் முழுவதுமாக தொலைந்து போனாள் விழிதீரனின் செந்தாழினி.
இரு இதயங்கள் மட்டுமே அறிந்த காதல்..
முட்டிக்கொண்டே மனங்களை இணைத்த காதல்..
சண்டையிலும் பிரியத்தை கண்ட காதல்..
காதலில் விழுந்து, காதலை தேடி, உயிர்க்காதலோடு கரை சேர்ந்த இம்மூன்று காதல் ஜோடிகளும் என்றுமே இதே மாறா காதலுடன் வாழ வேண்டுமென வாழ்த்தி விடை பெறுவோம்.

நன்றி..வணக்கம்..!!