அத்தியாயம் (24) எபிலாக்
திண்டுக்கல் திருமண மண்டபம் கலை கட்டியது. ஐங்கரனின் அப்பா அருணோதயம், அம்மா செல்வி, தம்பி குமரன், தம்பி மனைவி அமுதினி, அவர்கள் குழந்தை அபிமன்யு, தங்கை கீர்த்திகா மற்றும் உற்றார் உறவினர்கள் என்று அனைவரும் அந்த மண்டபத்தை நிறைத்திருந்தனர்.
மேடை மணம் வீசும் பூக்களால் அலங்கரிக்கப்பட்டிருக்க, புன்னகை முகமாக, மஞ்சள் வண்ண பட்டு உடுத்தி, மேடிட்ட வயிற்றுடன் அமர்ந்திருந்தாள் மாளவிகா.
ஆம் ஐங்கரன் மாளவிகாவிற்கு திருமணமாகி ஒன்றரை வருடமாகிறது. இப்போது மாளவிகா ஏழு மாதம் கர்ப்பமாக இருக்கின்றாள். அவளுக்கான வளைகாப்பு விழா தான் கோலாகலமாக நடக்கவிருக்கின்றது.
வருகை தர வேண்டியவர்கள் அனைவரும் வந்தாலும், ஐங்கரன் மாளவிகாவின் பார்வை வாயிலை தான் எதிர்பார்ப்போடும் நோக்கியது.
அவர்களின் எதிர்பார்ப்பிற்கு உரியவன் கருப்பு நிற காரில் வந்து இறங்கினான். வெள்ளை வேஷ்டி, நீல நிற சட்டையில் பேரழகனாக இருந்தான் ஸ்ரீதர்.
காரில் இருந்து முதலில் இறங்கியவன், காரின் பின்பக்கம் வந்து கதவை திறந்து விட தாவி வந்து அவன் கையில் குதித்தாள் அவன் செல்ல மகள் சிந்தூரி.
“அழகி!…” என்று அள்ளிக்கொண்ட தந்தையின் கன்னத்தில் செல்ல மகள் முத்தம் வைக்க,
தன் மாமனின் செல்லமான மகளை முறைத்துக் கொண்டு, தன் கையில் மகன் சரணுடன் இறங்கினாள் காயத்ரி.
சிந்தூரி, சரண் இருவரும் ஒற்றை பிரசவத்தில் கிடைத்த ரெட்டை முத்துக்கள். இருவருக்கும் ஒரு வயது முடிந்திருந்தது.
“என்னடி உன் மகள ஆசையா பாக்குற?.. என்ன மாதிரி அழகா இருக்கிறதாலயா?…” என்று ஸ்ரீதர் கேட்க
“என் மகளா.. உன் மகள்னு சொல்லு.. என்ன வெறுப்பேத்தவே உன்ன தன் பக்கம் இழுத்துக்கிட்டா.. வேணும்னே உன்ன கொஞ்சிக்கிட்டே இருக்கா…” என்று சொல்லி காயத்ரி உதட்டை சுழிக்க
“ஏன்டி ஒரு வயசு குழந்த, அதுவும் உன் குழந்த கூடவே சண்டைக்கு நிக்கிற.. யார் வந்தாலும் நான் உனக்கு மட்டும் தானே…” என்று சொல்லி ஸ்ரீதர் கண்ணடிக்க,
“பேச்சுக்குத்தான்!…” என்று காயத்ரி சொல்ல
“இன்னைக்கு ராத்திரி செயல்ல காட்டுறேன.. இப்போ உள்ள வா…” என்று அவள் தோளில் கையை போட்டு மண்டபத்தின் உள்ளே செல்ல,
ஸ்ரீதரின் சட்டை நிறத்தில் காயத்ரியும் நீலம் மற்றும் தங்கம் கலந்த நிறத்தில் பட்டுப்புடவை அணிந்து, அவள் மாமனின் ஒப்பனையில் அப்சரஸாக மின்ன, குழந்தை சிந்தூரிக்கு தங்க நிறத்தில் பிராக் அணிவித்து, அழகாக ஸ்ரீதரின் கையில் இருக்க, குழந்தை சரணுக்கும் தங்க நிறத்தில் சட்டையும், வெள்ளை நிறத்தில் குட்டி ஷார்ட்ஸ் அணிவித்து காயத்ரியின் கையில் பாந்தமாய் இருக்க, மண்டபத்தில் இருந்தவர்கள் அனைவரின் பார்வையும் அவர்கள் மீதுதான்.
ஐங்கரன் நண்பனை வரவேற்று, மேடைக்கு அழைத்துச் செல்ல, வளை பூட்டும் விழா இனிதே தொடங்கியது.
காயத்ரி குழந்தையை ஸ்ரீதரிடம் கொடுத்துவிட்டு, மாளவிகாவிற்கு நலங்கு வைத்து, இரண்டு கண்ணாடி வளையல்கள் போட்டவள், தன் தோளில் இருந்த பையில் இருந்து ஒரு நகைப்பெட்டியை எடுத்து, அதில் இருந்த தங்க வளையல்கள் இரண்டையும் போட்டு விட்டாள்.
அதை மாளவிகா மகிழ்வோடு ஏற்றுக் கொள்ள, ஐங்கரன் புன்னகையுடன் பார்த்திருந்தான்.
பின் ஸ்ரீதரும் காயத்ரியும் அருகருகே குழந்தைகளுடன் நின்று மாளவிகா ஐங்கரனுடன் புகைப்படம் எடுத்துவிட்டு, மேடையை விட்டு இறங்க முனைய, “ஒரு நிமிஷம் டா…” என்ற ஐங்கரன் ஸ்ரீதர் காயத்ரிக்காக எடுத்து வைத்திருந்த புதுத் துணிகள் அடங்கிய பையை கொடுத்து “ஹாப்பி அனிவர்சரி!…” என்று கொடுக்க
மறுக்காமல் புன்னகை முகமாக காயத்ரி வாங்கிக் கொண்டாள். “ரெண்டாவது கல்யாண நாள் தான்டா.. இதுக்கு எதுக்கு கிஃப்ட்…” என்று ஸ்ரீதர் கேட்க
“எத்தனாவது கல்யாண நாளா இருந்தா என்ன..இது கிஃப்ட் இல்ல, நான் என் தங்கச்சிக்கு செய்றேன்…” என்றான் ஐங்கரன்.
ஆம் ஸ்ரீதர் காயத்ரியின் முதலாவது திருமணநாள், குழந்தைகள் பிறந்ததிலிருந்து ஒவ்வொரு விசேஷம் என்று, காயத்ரியின் அண்ணனாக இருந்து அனைத்தும் செய்வது ஐங்கரன் தான்.
காயத்ரி தன் மாமனை கதி கலங்க வைக்க, அடிக்கடி “கோவிச்சுட்டு வீட்ட விட்டு போக அம்மா வீடு தான் இல்ல.. ஆனா அண்ணன் வீடு இருக்கு…” என்று சொல்லி வம்பு வளர்ப்பாள்.
“டேய் உங்க அண்ணன் தங்கச்சி பாசத்த தாங்க முடியலடா.. கொஞ்சம் அடக்கி வாசிங்க.. நீ இருக்கிற தைரியத்துல தான் இவ இப்பெல்லாம் என்கிட்ட சண்டைக்கு நிக்கிறா…” என்று ஸ்ரீதர் சொல்ல
“அதெல்லாம் அடக்கி வாசிக்க முடியாது.. நாங்க இப்படித்தான்…” என்ற ஐங்கரன் காயத்ரியுடன் கை அடித்துக் கொள்ள,
“டேய் உனக்கு கூட பிறந்த தங்கச்சி இருக்குடா.. அவளுக்கு தெரிஞ்சா நீ அவ்வளவுதான்…” என்று ஸ்ரீதர் சொல்ல
உடனே சுற்றும் முற்றும் அவன் சேட்டைக்காரன் தங்கச்சி தெரிகிறாளா என்று தேடினான் ஐங்கரன்.
“டேய் உன் திருவாய கொஞ்சம் மூடு..பொல்லாத ராங்கி.. அவகிட்ட பேச்சு வாங்க முடியாது…” என்று சொல்ல
“அந்த பயம் இருக்கட்டும்.. கீர்த்திகா இப்போ காலேஜ் தானே படிக்கிறா…?” என்று ஐங்கரன் தங்கையை பற்றி ஸ்ரீதர் விசாரிக்க
“ஆமாடா.. இன்னும் படிச்சு முடிக்கல.. ஆனா வீட்டுல கிளாஸ் சொல்லி குடுத்துட்டு.. தன்ன டீச்சருன்னு சொல்லிட்டு சுத்துறா…” என்று ஆரம்பித்து அவன் ஒற்றை தங்கையின் வீர தீர பராக்கிரமங்களை சொல்லிக் கொண்டிருந்தான்.
அதன் பின்னர் ஸ்ரீதர் காயத்ரியை அழைத்துச் சென்று சாப்பிட வைத்து, வழி அனுப்பி வைத்தான்.
*********
இரவானது.
ஸ்ரீதரின் வீட்டு மொட்டை மாடி.
அதே ஒற்றை நிலவு.
ஜில் என்ற பனி வாடை காற்று.
இதுவரை வாடகைக்கு இருந்த பாடசாலை சயின்ஸ் டீச்சர், வீட்டை காலி செய்திருக்க, வேறொருத்தருக்கு வீட்டை இப்போதைக்கு கொடுக்க வேண்டாம் என்று ஐங்கரனை தடுத்து, தனது இரண்டாவது திருமண நாளை இங்கே கொண்டாட வந்து விட்டான் ஸ்ரீதர்.
அவர்கள் வீட்டு மொட்டை மாடி எப்போதும் ஸ்பெஷல் அல்லவா, முதல் வருடம் காயத்ரிக்கு ரெட்டை குழந்தை பிறந்திருந்தால் முதலாவது திருமண நாளை இங்கு கொண்டாட முடியவில்லை.
இதோ இரண்டாவது திருமண நாள், அதோடு மாளவிகாவின் வளைகாப்பு என்று குடும்பத்துடன் திண்டுக்கல் வந்து விட்டான்.
கீழே அவர்கள் அறையில் குழந்தைகள் இருவரும் உறங்க, அவன் குட்டி மனைவியை மூன்றாம் இரவு கொண்டாட கடத்தி வந்து விட்டான்.
என்ன மூன்றாம் இரவா என்று குழப்பமா, அதை ஸ்ரீதர் தான் சொல்ல வேண்டும், கணக்கில் புலியான காயத்ரியவே அப்படி கூறி தான் பல இரவை கள்ள கணக்கில் சேர்த்து விட்டான்.
இதோ மாடியின் சுவற்றில் ஸ்ரீதர் சாய்ந்து நின்றிருக்க, அவன் வெற்று மார்பில் தன் மென் தனங்கள் அழுந்த அவனை கட்டிக் கொண்டு நின்றாள் காயத்ரி.
தன்னவளின் பின் இடையில் ஒரு கையும், முதுகில் ஒரு கையும் என்று படர விட்டு தன்னுடன் இறுக்கிக் கொண்டவன், அவள் நெற்றியில் அழுத்தி முத்தம் வைத்து “என் தேவதை எனக்கு பொண்டாட்டியாகி ரெண்டு வருஷமாச்சு…” என்று சொல்ல
“நான் இல்ல மாமா.. நீ தான் தேவதை…” என்று காயத்ரி சொல்ல
“நானா.. என்னடி சொல்ற?…” ஸ்ரீதர் சிரிப்போடு கேட்க
“ம்ம், ஆமா.. எனக்கு நீ ஆண் தேவதை மாமா.. நீ நினைச்சு இருந்தா அம்மா பிரச்சினை பண்ணுன அன்னைக்கே தாலி கட்டி, என் கூட வாழ்ந்திருக்க முடியும்.. ஆனா அப்படி பண்ணாம எதுக்கு ஊர விட்டு போன?.. உன் அக்கா சொன்னதுக்காகவா?…” என்று கேட்க
இல்லை என்று தலையாட்டியவன்,
“எனக்கு உன் மேல ஆச வந்ததால அப்போவே கட்டிக்கணும்னு தோணுச்சு.. ஆனா உன்ன வேற இடத்துக்கு கட்டி குடுக்குறதா இருந்தா அக்கா சொன்ன மாதிரியான ஒரு இடத்த தானே நானும் பாத்திருப்பேன்.. அப்போ அந்த மாதிரி நானும் இருக்கணும்னு தோணுச்சு.. அதான் நீயும் படிக்கணும் நானும் உனக்கு நிகரான மாப்பிள்ளையா வந்து நிக்கணும்னு போனேன்…” என்று சொல்ல
“அத தான் மாமா சொல்றேன்.. தேவதைங்க நமக்கு நல்லத மட்டுமே செய்வாங்க, நம்ம கனவுகள நிறைவேத்தி குடுப்பாங்க.. என்னோட கனவுகள நிறைவேத்தி குடுக்குற நீ தேவதை தானே… என்று காயத்ரி சொல்ல
“சரிதான்.. அப்படின்னா என்னோட சிறகுகள் உனக்காக மட்டும் தான்…” என்று சொல்லி அவள் நெற்றி முட்டினான்.
அவன் சிறகுகள் என்றும் அவளுக்காக மட்டுமே
எந்தன் சிறகுகள் உனக்காக 💕
*****
“தேவதையா இருந்தாலும், சாமியா இருந்தாலும் எனக்கு காணிக்க வேணும்…” என்றவன் பார்வையில் தாபம் அப்பட்டமாக தெரிய,
“என்னமோ எதுவுமே கிடைக்காத மாதிரி தான்.. காணிக்கைனா நானா குடுக்கணும், நீயா எடுத்துக்க கூடாது…” என்று கன்னம் சிவக்க அவளும் கூற
“அடியே சிங்காரி!.. நான் சொன்னத கவனிக்கலயா.. நானும் அத தான் சொல்றேன், காணிக்கையா நீயா குடுக்கணும்.. இன்னைக்கு நான் எதுவுமே பண்ண போறது இல்ல…” என்று கிசுகிசுப்பாக சொல்ல
“ஐயே ச்சீ!.. என்னால முடியாது…” என்று அவள் அவன் மார்பிலேயே முகத்தை புதைக்க
“அடியே என்னைக்கோ ஒரு நாள் குழந்தைங்க வயித்துல இருக்கும் போது கிடைச்சுது.. அதுக்கு பிறகு நீயா எதுவுமே குடுக்கல.. இன்னைக்காவது தயவு காட்டுடி…”என்று கெஞ்சவே ஆரம்பித்து விட்டான்.
‘ருசி காட்டுனது என் தப்பு தான்’ என்று மனதில் நொந்து கொள்ள தான் முடிந்தது காயத்ரியால்.
“கெஞ்சாத மாமா!…” என்ற பெண்ணவள் அவளாக எம்பி மன்னவனின் இதழ்களை முற்றுகையிட, காதல் முத்தத்தில் தொடங்கினால் காம யுத்ததில் தானே முடிய வேண்டும்.
தாரகையின் தொடையில் கையை போட்டு தூக்கிக் கொண்ட காளையவன் அங்கேயே அவன் அமைத்த டெண்ட்டுக்குள் தூக்கிச் சென்று, திரையை மூடி விட்டவன், தான் படுக்கையில் படுத்துக் கொண்டு தன் மீது மெல்லிடையாளை போட்டுக் கொண்டான்.
முதல் இரவின் போது அமைத்ததை போலவே டெண்டை சுற்றிலும் நிலவு போன்ற 3d விளக்குகள் ஒளி வீச, உள்ளே மல்லிகையும் முல்லையும் வாசம் பரப்ப, முத்த சத்தமும் முனகல் ஓசைகளும் வெளியே கேட்க கூடாது என்று தொலைபேசியில் காதல் பாடல்கள் ஒலிக்க,
கள்ளூறும் மலர் வேட்டையாட, கள்ளுண்ணும் வண்டு கண்கள் சொக்கி கிடந்தது.
முத்தாடிய சோர்வில் மூச்சு வாங்க மன்னவன் மார்பிலேயே மங்கையவள் சாய, சொர்க்க லோகம் கண்டு வந்தவன் கணக்கில்லாத முத்தங்களை வழங்கி, இளைப்பாறுகின்றேன் என்று தன்மீது கிடந்தவளை கீழே கிடந்தி, அவன் அருந்திய ஊட்டச்சத்து பாணத்தின் மூலம் அவளின் மொத்த சத்தையும் உறிஞ்சிக் கொண்டு, உணர்ச்சிகளை தட்டி எழுப்பி, தன் ஆதிக்கத்தை நிலைநாட்ட அவளை இவன் ஆள தொடங்கி விட்டான்.
முடிவில்லாத காதல் வாழ்வில் தித்திப்பான தாம்பத்தியத்தை இப்போதைக்கு திருப்தியாக முடித்துக் கொண்டவன், நங்கையவளின் அருகில் ஓய்ந்து படுத்து, காணாததை கண்டது போல் கூடலில் களைத்து, வேர்த்து, நெற்றி வகுட்டில் வைத்த குங்குமம் கலைந்து, கூந்தல் கலைந்து, கழுத்தில் தாலியும், காலில் கொலுசும், மெட்டியும் என்று வீண சிற்பாக இருந்தவள் தான் இன்ச் இன்சாக ரசித்து, கண்களினால் கொள்ளையிட்டுக் கொண்டிருந்தான்.
அப்போது சரியாக
ஈக்கி மின்னல் அடிக்குதடி – யாத்தே
ஈர கொல துடிக்குதடி – யாத்தே
ஈக்கி மின்னல் அடிக்குதடி- யாத்தே,
ஈர கொல துடிக்குதடி – யாத்தே
நச்சு மனம் மச்சினியோடு- மச்சினியோடு மருகுதடி…
அவ நெத்தியில வச்ச பொட்டுல என் நெஞ்சாங்குழியே ஒட்டுதே… அவ நெத்தியில வச்ச பொட்டுல என் நெஞ்சாங்குழியே ஒட்டுதே…
அவ பார்வையில் எழும்புகள் பல்பொடி ஆச்சே…
காட்டுச் சிறுக்கி, காட்டுச் சிறுக்கி, யார் காட்டுச் சிறுக்கி இவ..
மழை கொடுப்பாளோ…
இடி இடிப்பாளோ…
மாயமாய் போவாளோ…
யாரோ எவளோ, யாரோ எவளோ, யார் காட்டுச் சிறுக்கி இவ…
மழை கொடுப்பாளோ…
இடி இடிப்பாளோ…
மாயமாய் போவாளோ…
தண்டை அணிஞ்சவ கொண்டை சரிஞ்சதும் அண்ட சராசரம் போச்சு…
வண்டு தொடா முகம் கண்டு வனாந்தரம் வாங்குதே பெருமூச்சு!… என்று பாடல் ஒலிக்க
ஸ்ரீதரிடமும் பெரும் மூச்சு.
“என்ன மாமா?…” என்று காயத்ரி கேட்க
“இல்ல இந்த பாட்ட வேற மாதிரி பொருள்ல எழுதி இருப்பாங்க.. ஆனா எனக்கு சரியா பொருந்துதுல…” என்று சொல்லி அவள் காலை தூக்கி தன் மீது போட்டவன், பட்டு பாதம் தழுவிய கொலுசை வருடி “தண்டை அணிஞ்சவ கொண்டை சரிஞ்சதும் அண்ட சராசரம் போச்சு.. கொஞ்ச நேரம் முன்னாடி நான் மொத்தமா ஸ்தம்பிச்சு போகல…” என்று கல்மிஷ புன்னகையுடன் சொல்ல
“ச்சீ! காஜி மாமா.. எதையும் எதையும் சேத்து சொல்ற.. இது தான் தோணுச்சா…” என்று வெட்கத்துடன் காயத்ரி திட்ட
“சரி காதலா சொல்லவா.. இவ நெத்தியில வச்ச பொட்டுல, என் நெஞ்சாங்குழியே ஒட்டுதே.. இது ரொம்ப பொருத்தம்… என்றவன் எப்போதும் போல் அவள் நெற்றி பொட்டில் முத்தம் வைக்க,
கண்கள் மூடி அவன் சிறப்பு முத்ததை ரசித்தவளுக்கு தெரியுமே இன்று வரை அவள் நெற்றி பொட்டு இறுதியில் சென்று சேர்வது அவனிடம் தானே.
“ம்ம், பாட்டுல இருந்து வரிகள எடுத்து ஸ்கோர் பண்ற மாமா…” என்று காயத்ரி சொல்ல
“நானா யோசிச்சு ஒன்னு சொல்லவா.. ஆனா காஜினு திட்ட கூடாது…” என்று கேட்க
“எதுவோ ஏடா கூடமா வச்சிருக்க.. சொல்லு…”என்று அவள் சொல்ல
எழுந்து அமர்ந்தவன் அவள் பாதங்களில் முத்தம் வைத்து “பால்வண்ண சிப்பிக்கு வைர முலாம் பூசி, இந்த பத்து விரலுக்கும் கிரீடம் வைத்து… பால் கடலில் பொங்கிய அமிர்தத்தை உரைய வைத்து, பாதமாக உருமாற்ற உழைத்தவன் எவனோ?…
உடையவன் நானே!…
இந்த பதுமையின் பாதம் என் நெஞ்சில் பதியும் பருவப்பொழுதுக்காக, பகல் பொழுதை நித்தித்த வண்ணம் நெட்டி தள்ளுகின்றேன்… பெண்ணவளின் பாதம் பற்றும் பக்தனாக இருப்பதே இப்பதிவிரதனின் தவம்…” என்று ரசனையாக ஸ்ரீதர் கூற
“அட! நல்லா இருக்கே மாமா.. இதுல என்ன காஜி மீனிங்…?” என்று காயத்ரி கேட்க
“லைட்டா இருக்கு.. யோசி…” என்றவன் அவளின் அருகில் படுத்துக் கொள்ள,
அவன் நெஞ்சில் தலையை வைத்து யோசித்தவள், ஒரு கட்டத்தில் தூங்கி விட, தலையை தூக்கி பார்த்தவன் “யோசிக்க சொன்னா, தூங்கிட்டா…” என்று புன்னகை சிந்தி விட்டு,
அவளின் தூக்கம் கலையாமல் எழுத்து, அவளை பூப்போல தூக்கிக் கொண்டு, தங்களது அறைக்கு வந்து, கட்டிலில் கிடத்தியவன், தொட்டிலில் தூங்கிக் கொண்டிருந்த இரு குழந்தைகளையும் தூக்கி, சுவர் பக்கமாக படுக்க வைத்து விட்டு, நடுவில் அவன் படுத்துக் கொண்டு, ஒரு கையினால் மனைவியையும், மற்றைய கையினால் தன் இரு மக்களையும் அணைத்துக் கொண்டு நிம்மதியாக தூங்கினான்.
சுபம் 🙏
விர்சாலி 💕
இந்த கதையோட இரண்டாம் பகுதி ஐங்கரன் தங்கை கீர்த்திகா மற்றும் ஸ்ரீதர் வீட்டுக்கு வாடகைக்கு வரும் கணக்கு வாத்தி ஈஸ்வருக்குமான கதை வரும்.