அத்தியாயம் 23
ஸ்ரீதரின் குடும்பம் சென்னை வந்து இரண்டு நாட்களானது.
தங்களது அறையில், வெற்று மேனியுடன், பெட்ஷீட்டை மட்டுமே ஆடையாக கொண்டு, நன்கு உறங்கிக் கொண்டிருந்தாள் காயத்ரி.
குளியல் அறையில் இருந்து தலையை துவட்டிக் கொண்டே வந்த ஸ்ரீதர், தன் குட்டி மனைவியை பார்த்து மந்தகாச புன்னகை பூத்தவன், தனக்கான உடையை அணிந்து கொண்டே “காயூக்குட்டி! எந்திரிடி!…” என்று அவளை எழுப்ப
அவனின் ஒற்றை குரலுக்கு எழும்பும் நிலையில் அவள் இல்லை போலும்.
உடைகள் அனைத்தையும் அணிந்தவன், சட்டையை போடாமல், கை இல்லாத வெள்ளை பனியன், கருநீல நிற பேண்டுடன் காயத்ரியை நெருங்கி, அவளின் அருகில் படுக்கையில் படுத்து கொண்டவன்,
ஒருக்களித்து படுத்திருந்தவளின் காது மடலில் தன் நாவை சுழற்றி கூசச் செய்ய, கூச்சம் தாங்க முடியாமல் நெளிந்த பெண்ணவள் “ம்ஹீம்! மாமா!…” என்று சிணுங்கி கணவனின் முகத்தை விலக்கி விட
“எந்திரிடி.. இன்னைக்கு முக்கியமான ஒரு இடத்துக்கு போகணும்.. ராத்திரி ஒரு ரவுண்டு தானடி அதுக்கே இந்த அளவுக்கு சோந்து படுத்திருக்க…” என்று அவளின் பட்டு கன்னத்தில் முத்தம் வைக்க
“தெரியல மாமா.. தூக்கம் தூக்கமா வருது.. எங்க போறதா இருந்தாலும் கொஞ்ச நேரம் கழிச்சு போகலாம்…” என்று செல்லம் கொஞ்சியது அவனது கிளி.
“அதெல்லாம் முடியாது.. உடனே கிளம்பனும்.. ரெடியாகு…” என்று அவனும் சொல்ல
நிமிர்ந்து படுத்து, கண்ணை திறந்து, தன் மன்னவன் முகம் பார்த்தவள், அவனின் பனியனை பிடித்து இழுக்க, அவனும் அவளின் இழப்பிற்கு சென்று, மூச்சுக்காற்றை கலக்க விட்டு, முகத்தோடு முகம் இழைத்து நிற்க
“முக்கியமான இடம்னு சொல்ற.. அப்புறம் என்ன மட்டும் தனியா ரெடியாக சொல்றது சரியா.. எப்பவும் நீதானே ரெடி பண்ணுவே…” என்று அவனின் முரட்டு இதழோடு தன் மென் இதழை உறவாட விட்டு சின்ன குரலில் கேட்க
ஸ்ரீதரும் கிறங்கிப்போன குரலில் “சரிடி.. நீ குளிச்சிட்டு வா.. நானே ரெடி பண்றேன்…” என்று ஆழந்த குரலில் சொல்ல
“முடியாது.. நீயே குளிக்க வச்சு, ரெடி பண்ணி விடு…” என்று அவள் சொல்ல
“வேணாம்டி.. நான் இப்போ இருக்கிற நிலைக்கு பாத்ரூம் விட்டு வெளிய வர வன் ஹவர் ஆகும்…” என்று ஸ்ரீதர் சொல்ல
“மண்டு மாமா!.. நானும் அதுக்கு தான் அடி போடுறேன்…” என்ற காயத்ரி அவனின் தடித்த இதழ்களை தன் மொட்டு இதழ்களால் சிறை பிடித்து சுவைக்க ஆரம்பிக்க
தானாக சிக்கிய தன் சிங்காரியை சும்மா விடுவானா அவன். முத்தத்தை நிறுத்தாமல் அவளை தன் கைகளில் அள்ளிக்கொண்டு, குளியல் அறைக்குள் புகுந்து கொண்டான். அங்கு நீர் சிந்தும் சத்தத்தை தாண்டி, முத்தம் சிந்தும் சத்தங்களும்… முனகல்களும்…மோகன பிதற்றல்களும் தான் அதிகமாக கேட்டது.
ஸ்ரீதர் கூறியது போன்றே ஒரு மணி நேரம் கழித்து, கூடலை முடித்து, காயத்ரியை குளிக்க வைத்து, வெளியே தூக்கி வந்தான்.
அதன் பின் தானும் கருநீல நிற பேண்ட், வெள்ளை நிற சட்டையில் தயாராகி,
பென்சில் ஸ்கெர்ட்டுடன் இன்-செய்த வெள்ளை நிற சட்டை, அதன் மேல் ஒரு ஸ்டைலான பிளேஸர்,காலுக்கு ஹை-ஹீல்ஸ் என்று காயத்ரிக்கு அணிவித்து, அவளின் நீண்ட கூந்தலை அள்ளி போனி டையில் போட்டு, முகத்திற்கு மெல்லிய நாகரீக ஒப்பனை செய்து, பார்க்க நவநாகரீக அலுவலக யுவதியாக மாற்றியிருந்தான்.
“என்னாச்சி மாமா.. இப்படி ரெடி பண்ணி வச்சிருக்க.. உன் ஆஃபீஸ்ல மீட்டிங்கா.. அங்கயா போறோம்…” என்று கேட்க
“இல்ல.. எங்கன்னு நீயே தெரிஞ்சுப்ப…” என்று சொன்ன ஸ்ரீதர் காயத்ரியை அழைத்துக் கொண்டு ஹாலுக்கு வர,
அங்கு பட்டுப்புடவையில் கமலமும் பத்மினியும் தயாராகி இருக்க, கூடவே ஐங்கரனும் இளம் நீளம் நிற சட்டை, கருப்பு நிற பேண்டில் தயாராகி நின்றான்.
காயத்ரியை மேற்கொண்டு யோசிக்க விடாமல், அனைவரையும் அழைத்துக்கொண்டு காரில் ஏறி புறப்பட்டான் ஸ்ரீதர்.
அவன் கார் அவனது அலுவலகத்திற்கு எதிரே இருந்த கட்டிடத்தின் முன்பு நிற்க, கார் நின்ற இடத்தை கவனிக்காமல் எதிரே இருந்த ஸ்ரீதரின் அலுவலக கட்டடத்தை பார்த்துவிட்டு “உன் ஆஃபீஸ் மீட்டிங்கானு கேட்டேனே மாமா.. அது சரி இங்க எதுக்கு கார நிறுத்தியிருக்க.. உன் ஆஃபீஸ் பார்க்கிங் ஏடியா என்னாச்சு?…” என்று கேட்டுக் கொண்டே காரில் இருந்து இறங்க
“ரொம்ப பேசாம வாடி!…” என்றவன் அவள் கையோடு தன் கைவிரல்களை கோர்த்துக் கொண்டு அந்த கட்டிடத்தின் வாயிலில் போய் நிற்க,
அப்போதுதான் அந்த கட்டிடத்தையும், அதன் பெயரையும் பார்த்தாள் காயத்ரி.
ஜி.எஸ் ஆடிட் & அக்கவுண்டிங் என்று பெயர் பலகை இருக்க, தான் நினைப்பது சரிதானா என்பதை கிரகித்துக் கொள்ள முடியாமல் “மா..மா!.. மாமா!.. இது என் ஆஃபிஸா?…” என்று மகிழ்ச்சி, இன்ப அதிர்ச்சி, குதுகலம், என கலந்த கலவையாக காயத்ரி கேட்க
“ம்ம்.. ஆமா காயத்ரி ஸ்ரீதர் அதுதான் ஜி. எஸ்.. அதோ…!” தன் அலுவலகத்தை காட்டியவன் எஸ். ஜி ஸ்ரீதர் காயத்ரி…” என்று சொல்ல
“எனக்கு எதுக்கு மாமா இப்போ தனி ஆஃபிஸ்…” கட்டிடத்தை சுற்றி ஆர்வமாக விழிகளை மேய விட்டு கேட்க
“ஆடிட்டராகி டெலாய்ட் நிறுவனத்துல வேலை செய்யணும் என்றது உன்னோட ஆசையா இருக்கலாம்.. ஆனா அதே மாதிரி நிறுவனத்துக்கு உன்ன சி.இ.ஓ ஆக்கணும் என்றது என்னோட ஆசை.. அதுக்கு தான் இந்த ஆஃபீஸ்…” என்று அவளை தோளோடு அணைத்து கூற
ஆனந்த கண்ணீர் விழிகளை நிறைக்க, அளவு கடந்த காதலை அதே விழிகளில் தேக்கி “ஏன் மாமா?…” என்று அவன் விழிகளை பார்த்து கேட்டிருந்தாள் காயத்ரி.
“ஏன்னா நீ என்னோட அக்கா பொண்ணு காயூகுட்டி…” என்று அதே காதலுடன் ஸ்ரீதர் சொல்ல
அந்த பதிலில் காயத்ரி அகமகிழ்ந்தாள் என்றால், பத்மினி குற்ற உணர்ச்சியில் குறுகிப்போனார்.
ஆக காயத்ரியை நேசித்த பின்னர் இந்த ஆசை அவனுக்கு வரவில்லை, அக்கா மகளாக இருக்கும் போதே அவளின் எதிர்கால கனவை சேமிக்க தொடங்கி விட்டான் தன் தம்பி என்பது புரிந்தது.
அவர் விட்ட வார்த்தையை போல் அவரின் நாத்தனார் மகனுக்கு காயத்ரியை கட்டிக் கொடுத்திருந்தால் ஒருவேளை வசதியாக வாழ்ந்திருக்கலாம்.
ஆனால் இப்படி தனி நிறுவனம் அமைத்துக் கொடுத்து, சிம்மாசனத்தில் அமர வைத்து அழகு பார்த்திருப்பானா என்றால், அது கண்டிப்பாக இல்லை. அது தெரிந்ததால் தானோ உள்ளம் சுட்டது பத்மினிக்கு.
ஒருவரின் விழிகளில் ஒருவர் தொலைந்து கொண்டிருக்க “டேய் நல்ல நேரம் போகுது.. ரிபன வெட்டுங்க…” என்று ஐங்கரன் சொல்லவும் தான் சுற்ற உணர்ந்தனர் ஸ்ரீதரும் காயத்ரியும்.
ஸ்ரீதர் மனைவியை அழைத்துக்கொண்டு சற்று உள்ளே செல்ல, அங்கு கறுப்பு ஜீன்ஸ் வெள்ளை சட்டையில் மாளவிகா புன்னகை முகமாக, கையில் ரோஜா பூங்கொத்தோடு நின்றிருந்தாள்.
அவளின் பார்வை ஒரு நொடி ஐங்கரனில் படிந்து மீள, அந்த கள்வனோ வைத்த கண்ணை எடுக்காமல் அவளையே பார்த்திருந்தான்.
மாளவிகா “கங்கிராஜுலேஷன்ஸ் காயத்ரி!…” என்று சொல்லி பூங்கொத்தை காயத்ரியிடம் கொடுக்க, விரிந்த புன்னகையுடன் அவளும் “தேங்க்ஸ்!…” என்று வாங்கிக் கொண்டாள்.
ஸ்ரீதரின் அலுவலக ஊழியர்கள், அவனது தொழில்துறை நண்பர்கள் என்று அனைவரும் வருகை தந்திருந்தனர். ஸ்ரீதரின் உயர்வை நினைத்து கமலமும் பத்மினியும் மனம் பூரித்து நின்றனர்.
ஸ்ரீதரின் அலுவலகத்தில் வேலை செய்யும் சேலை அணிந்த பெண் ஒருத்தி வெல்வெட் துணியில் இருந்த கத்திரிக்கோலை நீட்ட, மகிழ்வாக தன் வலது கையால் அதை எடுத்துக் கொண்ட காயத்ரி ஸ்ரீதரின் முகம் பார்த்து “மாமா!…” என்க
அவளின் மனம் புரிந்தவன் அவளின் கையோடு தன் வலது கையை வைக்க, ஆர்ப்பரித்த மகிழ்வோடு, குறுக்காக கட்டியிருந்த சிவப்பு நிற ரிபனை வெட்டினாள் காயத்ரி.
அனைவரும் கைதட்டி வாழ்த்து சொல்ல, புன்னகையுடன் அதை ஏற்றுக் கொண்டவளின் கையைப் பிடித்து உள்ளே அழைத்துச் சென்றான் ஸ்ரீதர்.
வரவேற்பு அறை, ஊழியர்கள் அமர்ந்து வேலை செய்யும் பகுதி, என்று அனைத்தையும் தாண்டி காயத்ரி ஸ்ரீதர் சி. இ. ஓ என்று தங்கநிற தகட்டில் கருப்பு நிறத்தில் அவளின் பெயர் மின்ன அது அவளுக்கான தனி அறை என்பது புரிந்தது.
அந்த கண்ணாடி அறையின் கதவை திறந்து முதலில் உள்ளே சென்ற ஸ்ரீதர், அந்த கதவை பிடித்துக் கொண்டு “வெல்கம் சி. இ. ஓ மேடம்!…” என்று தலையை குனிந்து சொல்ல
“மாமா!…” என்று விழி சுருக்கி புன்னகையுடன் சொன்னவளுக்கு நாணச் சிவப்பை மறைப்பது கஷ்டமாக இருந்தது.
அதே நேரம் என் கணவன் என்று கர்வமாக இருந்தது.
அந்த அறையில் இருந்த ஆள் உயர குத்து விளக்குக்கு எண்ணெய் ஊற்றி, திரி போட்டு இருக்க, ஒரு பெண் மெழுகுவர்த்தியை கொடுக்க, அதை வாங்கி காயத்ரியிடம் கொடுத்தவன் “ம்ம் ஏத்து…!” என்று சொல்ல
மாமனின் கையில் இருந்து அதை வாங்காமல், அவன் கையோடு தன் கையை இணைத்துக் கொள்ள, இருவருமாக தீபம் ஏற்றி இனிய துவக்கத்தை வரவேற்றனர்.
அதன் பின் கமலம், பத்மினி, மாளவிகா, ஐங்கரன் என்று அனைவரும் ஐந்து திரிகளையும் ஏற்றிவிட்டனர்.
சிறப்பு விருந்தினர்கள் என்று யாரும் வந்திருக்கவில்லை. ஸ்ரீதரின் முன்னாள் முதலாளி வீரேந்திர ராவ்வால் இப்போது வர முடியாத நிலை என்பதால், மற்றவர்களை விட தங்கள் குடும்ப உறுப்பினர்களே முதன்மை என்று நினைத்து விட்டான்.
அமுதினி கர்ப்பமாக இருப்பதால் அவளும் குமரனும் வரவில்லை.
தீபம் ஏற்றி முடிய, காயத்ரியின் தோளில் கையை போட்டு, அங்கு இருந்த கண்ணாடி மேஜைக்கு அழைத்து வந்தான் ஸ்ரீதர். அங்கு இருந்த கருப்பு நிற ரோலிங் சேரில் காயத்ரியை அமர வைத்து, வெள்ளை ஆர்க்கிட், சிகப்பு ரோஜா கலந்த சிறிய பூங்கொத்தை அவளின் கையில் கொடுத்து “ஹாப்பி பர்த்டே மை பொண்டாட்டி!…” என்று கொடுக்க
அப்போதுதான் இன்று தனக்கு பிறந்தநாள் என்பதே காயத்ரிக்கு நினைவு வந்தது.ஆக தனக்கு பிறந்தநாள் பரிசாக இந்த அலுவலகத்தை கொடுக்க தான் இரவு, பகல் பாராமல், தன்னையும் கவனிக்காமல், தன் மாமன் பாடுபட்டதா, அதை புரிந்து கொள்ளாமல் சிறுபிள்ளைதனமாக நடந்து கொண்ட தன் மீதே கடுப்பானது அவளுக்கு.
காயத்ரிக்கு வார்த்தைகளே வரவில்லை, ஆனந்த கண்ணீர் கண்களை நிறைக்க “ஐ லவ் யூ மாமா!…” என்று ஓராயிரம் காதல் மொழிகளை தன் ஒற்றை குரலில் தேக்கி கூற
அத்தனை பேரில் முன்பும் தன் பிரியமானவள் சொன்ன ஐ லவ் யூவில் வெட்கச் சிரிப்பு வந்து தொலைத்தது ஆடவனுக்கு. அதை அழகாக தன் மீசைக்கு அடியில் மறைத்துக் கொண்டவன்,
பேச்சை மாற்ற “சி.இ.ஓ மேடம் நீங்க ஆறு மாசம் வேலைக்கு போனா போதும்.. அதுவரைக்கும் என் சின்ன கம்பெனிக்கு ஆடிட்டிங் பண்ணுங்க.. அது மட்டும் இல்ல என் வெல்விஷர் ஆசியா வீவ் காட்டன் எம்.டி அவங்க கம்பெனிக்கும் ஆடிட் பாக்க சொல்லியிருக்காங்க.. ஆறு மாசம் முடிஞ்சதும் உங்க நிறுவனத்த மொத்தமா டேக் ஓவர் பண்ணிக்குங்க, உங்களுக்கு ஈசியா இருக்கும்…” என்று தன் திட்டத்தை கூறியவன்
“இரு வீரேந்திரன் பேசணும்னு சொன்னாங்க…” என்று அவனுக்கு வீடியோ கால் எடுத்து “ஹாய்! வீரேந்திரன்…” என்று சொல்ல
அந்தப்பக்கம் இருந்த அழகானோ “ஹாய் ஸ்ரீ!.. எல்லாம் ஓகேவா.. சாரி மேன் என் வைஃப்க்கு டெலிவரி டைம் அதான் வர முடியல…” என்று சொல்ல
“இட்ஸ் ஓகே வீரேந்திரன்.. அதான் ஏற்கனவே சொன்னிங்களே.. நீங்க இப்போ அங்க இருக்க வேண்டியது அவசியம்.. இங்க எல்லாம் ஓகே…”என்றவன்
காயத்ரியின் பின் வந்து அவளின் தோளுக்கு குனிந்து “இவங்க தான் ஜி.எஸ் ஆடிட் & அக்கவுண்டிங் சி.இ.ஓ…” என்று சொல்ல
“ஹாய் மா! கங்கிராஜுலேஷன்ஸ்!.. அண்ட் ஹாப்பி பர்த்டே!…” என்று வீரேந்திரன் சொல்ல
“ஹாய் சார்!.. தேங்க்யூ சோ மச்!…” என்று காயத்ரி சொல்ல
“ஸ்ரீ சொன்னாங்களா?.. என் கம்பெனி ஆடிட்டிங் வொர்க்கும் நீங்கதான் பாக்கணும்…” என்று சொல்ல
“சொன்னாங்க சார்..உங்க வேர்ல்ட் லெவல் கம்பெனி ஆடிட்டிங் வொர்க்க என்ன நம்பி தந்திருக்கீங்க.. கண்டிப்பா உங்க நம்பிக்கைய காப்பாத்துவேன்…” என்று சொல்ல
“எதுக்கும் ஒரு தொடக்கம் இருக்கணுமே.. அது நானா இருக்கேனே.. ஆல் தி பெஸ்ட்!…” என்று காயத்ரியிடம் சொன்னவன்
“ஓகே ஸ்ரீ நான் முடியும் போது நேர்ல ஒரு முறை வாரேன்…” என்றவன் “இந்தர்!” என்ற அவன் வஞ்சிக்கொடியின் அழைப்பில் “பாய் ஸ்ரீ!…” என ஃபோனை வைத்துவிட்டு காதல் மனைவியை தேடி சென்றான்.
தொலைபேசியை வைத்த ஸ்ரீதர் “ஹேப்பியா?…” என்று கேட்க
“எவ்வளவு சந்தோஷமாக இருக்கேன்னு வார்த்தையால சொல்ல முடியாது மாமா…” என நெகிழ்ந்து சொன்னவள், கணவனின் கையை இறுக்க பிடித்துக் கொண்டாள்.
அவளுக்கு அவனை கட்டிப்பிடிக்க வேண்டும் என்று தான் தோன்றியது. அனைவரின் முன்பும் முடியாதே அதனால் கையை பிடித்துக் கொண்டாள்.
தோரணையாக அந்த கதிரையில் அமர்ந்திருக்கும் தன் மகளையும், அவளை ரசித்துப் பார்க்கும் தம்பியையும் மனதில் நெட்டி முறித்து, திருஷ்டி சுத்தி கொண்டார் பத்மினி.
தன் கையை இறுகப்பற்றியிருந்த தன் உயிரானவளின் கையை விடாமல் “சப்ரைஸ் இதோட முடியல…” என்று சொன்னவன் அவளை அழைத்துக்கொண்டு வெளியே வர,
ஸ்ரீதருடனே அனைவரும் வெளியே வந்தனர். அங்கு சிகப்பு நிற ஹூண்டாய் கிரெட்டா கார் வெள்ளை ரிபனால் அலங்காரிக்கப்பட்டு நின்றது.
அதை பார்த்து விழி விரித்து நின்றவளிடம் “என்னோட கிஃப்ட்…” என்று சொல்லி அதன் சாவியை கையில் வைக்க
அதை வாங்கியவள் “மாமா!…” என அவன் முகம் பார்த்தபடி மயங்கி அவன் மீதே சரிந்தாள்.
“காயூக்குட்டி!…” என்று தன்னில் அவளை தாங்கிக் கொண்டவன், கையில் துவண்டு கிடந்தவளின் கன்னத்தை “காயூ குட்டி! மாமாவ பாருடி!…” என்று தட்ட, அவளிடம் உணர்வில்லை.
“ஐயோ காயத்ரி! என்னாச்சுடி…” என்று பத்தினியும் பதற
கமலம் “ஸ்ரீ ஹாஸ்பிடல் கொண்டு போகலாம்.. அதிர்ச்சிக்கு மேல அதிர்ச்சி கொடுத்ததால மயங்கி இருப்பா…” என்று சொல்ல
ஸ்ரீதரும் அவளை கையில் தூக்கியவன் தன் காரில் பின் சீட்டில் படுக்க வைக்க, பத்தினி அவளின் தலையை மடியில் தாங்கிக் கொண்டார். கமலம் முன் சீட்டில் ஏறிக்கொள்ள,
ஐங்கரன் “நான் இங்க பாத்துக்கிறேன்.. நீ காயத்ரிக்கு என்னன்னு பாரு…” என்று சொல்ல
சரியென தலையை ஆட்டியவன், காரை புயல் வேகத்தில் கிளப்பிக் கொண்டு சென்று, அருகில் இருந்த மருத்துவமனையில் காயத்திரியை அட்மின் செய்திருந்தான்.
மருத்துவர் தனி அறையில் காயத்ரியை முழுதாக பரிசோதித்து விட்டு, ஸ்ரீதரை தனது அறைக்கு அழைத்து சில கேள்விகள் கேட்டவர் “கங்கிராஜுலேசன் ஸ்ரீதர்!.. நீங்க அப்பாவாக போறீங்க.. உங்க வைஃப் ப்ரெக்னன்ட்டா இருக்காங்க…” என்று நற்செய்தியை கூற
ஸ்ரீதருக்கோ பூமியே அவன் காலடியில் தான் சுழல்கின்றதோ என்னும் வகையில் விண்ணில் பறக்கும் உணர்வு.
அவன் சின்ன குட்டி சிங்காரியின் வயிற்றில் அவன் குட்டி உயிர் உருவாகியுள்ளது. அவன் உள்ளத்தின் உவகையை கூறத்தான் வேண்டுமா. முகத்தில் அப்படி ஒரு பிரகாசம்.
மலர்ந்த புன்னகையுடன் “தேங்க்ஸ் டாக்டர்!…” என்று மருத்துவரின் கையைப் பிடித்து கூறியவன், மின்னல் வேகத்தில் காயத்ரி இருந்த அறையை நோக்கி ஓடியிருந்தான்.
கமலம், பத்மினிக்கு மகிழ்ச்சிக்கு மேல் மகிழ்ச்சி. சொல்லப்போனால் உலகில் உள்ள ஒட்டுமொத்த சந்தோஷமும் அவர்கள் வீட்டில் குடியேறி விட்டதாக எண்ணி மகிழ்ந்து, கடவுளுக்கு நன்றி கூறிக் கொண்டனர்.
இங்கு வேகமாக காயத்ரியின் அருகே நெருங்கிய ஸ்ரீதரே விழி மூடி, தேவதையாக படுத்திருந்த தன்னவளின் அழகு வதனத்தில் பார்வையை பதித்து, மெது மெதுவாக கீழ் இறக்கி, அவர்களின் வாரிசு ஜெனித்த மங்கையவளின் மணி வயிற்றில் பார்வையை நிலைக்க விட்டு, பின் அவள் முகத்தை ஆசையாக… காதலாக… ரசனையாக… பார்த்து, எப்போதும் போல் அவளின் நெற்றி பொட்டில் அழுத்தி நீண்ட நெடிய முத்தம் வைத்தான்…
முத்தத்தை முடிக்காமல், அப்படியே தன் ஒற்றை கையை எடுத்து மனைவியின் தன் மகவை தாங்கும் அடிவயிற்றை மிருதுவாக வருடினான். உடல் சிலிர்த்து அடங்கியது. அவன் தந்தை, அதுவும் அவன் காதல் கண்மணியின் வயிற்றில் அவன் உயிர். எந்த உவமையை இங்கு சொன்னாலும் அவன் உணர்வுகளை விவரித்து விட முடியாது.
நெற்றி முத்தத்தை முடித்துக் கொண்டவன், பின் காயத்ரியின் இரு கன்னத்திலும் மாற்றி மாற்றி முத்தம் வைத்தான்.
அவன் ஓயாமல் வழங்கிய முத்த அச்சாரத்தால் கண்விழித்த காயத்ரி “மாமா என்னாச்சு?…” என்று மசக்கையின் மயக்கத்தில் மெதுவாக கேட்க
அவனோ முடிந்தவரை பற்கள் தெரிய சிரித்துக் கொண்டிருந்தான்.
“மாமா ஏன் சிரிக்கிற?.. திடீர்னு மயக்கம் வந்துருச்சு.. இன்ப அதிர்ச்சியில மயங்கி விழுந்த ஒரே ஆள் நானாத்தான் இருப்பேன் போல…” என்று சொல்ல
“நீ மயங்கி விழுந்ததே இன்ப அதிர்ச்சி தான்…”என்றவன் தன் வலது கையால் அவளின் வலது கையை எடுத்து, அவள் மணி வயிற்றில் வைத்து, அவளின் கையின் மீது இருந்த தன் கையினால் மென்மையாக, மிக மிக மென்மையாக அழுத்தி “நீ அம்மாவாக போற.. தேங்க்ஸ்டி நீ தந்த சர்ப்ரைஸ்க்கு.. நம்ம குழந்த இங்க இருக்கு.. நான் அப்பாவா ப்ரமோட் ஆகிட்டேன்…” என நெகிழ்வாக கூற
தான் கேட்ட செய்தியை உள்வாங்கிக் கொண்டவளின் இதயம் எம்பி குதித்தது சந்தோஷத்தில். தாங்க முடியாத சந்தோஷத்தில் மெல்ல மெல்ல சத்தம் போட்டு சிரித்தவள் “மா..மாமா!…” என்று காதலாக அழைக்க
இதற்காகத்தான் இதழ்களை விட்டு வைத்தேன் என்பது போல், குனிந்து அவளின் இதழ்களைக் கவ்விக் கொண்டான். மிருதுவான, மென்மையான முத்தம்…
தேன் கலந்த பாலை நிறுத்தி நிதானமாக சுவைப்பது போன்று அழகாக அன்பின் வெளிப்பாடாக… அவர்கள் இருவரின் இதயத்தின் மகிழ்வின், உள்ளத்தின் நெகிழ்வின் வெளிப்பாடாக… என்று ஆழமான முத்தம்.
மனைவியை சிரமப்படுத்த விரும்பாமல் முத்தத்தை முடித்துக் கொண்டவன், கண்கள் மூடி, நெற்றி முட்டி, மூச்சுக்காற்றை உறவாட விட்டு, அமைதியாக இருக்க,
“நான் தான் உன் கிட்ட சொல்லணும் நீ அப்பாவாகிட்டனு.. ஆனா இங்க நீ என்கிட்ட சொல்ற நான் அம்மாவாகிட்டேனு…” என்று காயத்ரி சொல்ல
“நான் சொல்றது தான்டி சரியா இருக்கும்.. ஒரு குழந்தையா உன்ன என் கையில தாங்கினேன்.. இப்போ நம்ம குழந்தைய நீ உன் வயித்துல தாங்குற.. இத நான் தானே சொல்லணும்.. லவ் யூ டி!.. லவ் யூ டீப்லி,எண்ட்லெஸ்லி.. எனக்காகவே பிறந்து, எனக்கான மொத்த சந்தோஷத்தையும் கொட்டி தந்திருக்க, உனக்கு என்ன வேணும் கேளு.. தெரியும் இன்னைக்கு நான் கொடுத்த ஆஃபீஸ், கார் இது எதுவும் உனக்கு ஒரு பொருட்டே இல்ல.. உனக்கு பிடிச்சத கேளு…” என்று கரகரத்த குரலில் கூற
“எனக்கு என்ன வேணும்னு உனக்கு தெரியும் மாமா.. உன்ன தவிர எனக்கு வேற எதுவும் பெருசு இல்ல.. உன் அருகாமைய தவிர என்ன சந்தோஷப்படுத்துறது எதுவும் இல்ல…” என்று சொல்ல
அவள் நெற்றியில் முத்தம் வைத்து நிமிர்ந்தவன் “இந்த நிமிஷத்துல இருந்து நான் உன்னோட மட்டும்தான்.. அதான் உன் ஆஃபீஸ கூட என் ஆஃபீஸ் எதுக்கவே அமைச்சேன்.. அதுக்காகத்தான் உன்ன விட்டு விலகி இருக்க வேண்டியதா போச்சு.. இப்போ எல்லாம் முடிஞ்சுது.. ஒரு சராசரி புருஷனா காலையில பத்து மணிக்கு ஆஃபீஸ் போயிட்டு, அஞ்சு மணிக்கு என் பொண்டாட்டிய தேடி ஓடி வந்துடுவேன்.. அதுக்கு இடையில எப்போ என் மகாராணிக்கு நான் தேவைப்பட்டாலும் ஒரு சொடுக்கு போட்டா ஓடோடி வந்துருவேன்…” என்று காதலுடன் உறுதியாக சொல்ல
“உன் நினைப்புல என்ன தவிர வேற எதுவுமே இருக்காதா மாமா…” என்று அவனை ஆழ்ந்து பார்த்து காயத்ரி கேட்க
“என் மனசு, மூள எல்லாத்துலயும் நீதானடி இருக்க.. பிறகு வேற நினைப்பு எப்படி வரும்…” என்று ஸ்ரீதர் சொல்ல
அன்பையும் அதிகப்படியான காதலையும் யாரேனும் வேண்டாம் என்று சொல்வார்களா? ஆனால் காயத்ரிக்கு போதும் என்று தோன்றியது. அவள் மாமனின் காதலிலும் அளப்பரிய அன்பிலும் மூச்சு முட்டியது.
இருவரின் பார்வையும் காதலாக கவ்வி நிற்க, கதவை திறந்து கொண்டு உள்ளே வந்தனர் கமலம், பத்மினி, அவர்களுடன் காயத்ரியின் ஆஃபீஸ் திறப்பு விழாவிற்கு வந்தவர்களை கவனித்து விட்டு வந்த ஐங்கரன் மாளவிகாவும்.
கமலம், பத்மினி காயத்ரியை கட்டி அணைத்து, கன்னம் வழித்து, நெட்டி முறித்து, மகிழ்ச்சியை தெரிவிக்க.
ஐங்கரன், மாளவிக்கா வாழ்த்து கூறினர்.
புன்னகை முகமாக, கொஞ்சம் வெட்கம்… கொஞ்சம் கர்வம்… நிறைய சந்தோஷம்… நிறைய ஆசைகளுடன் அமர்ந்திருந்தனர் ஸ்ரீதர் காயத்ரி.