எந்தன் சிறகுகள் உனக்காக 💕 அத்தியாயம் 08

அத்தியாயம் 08

முதல் இதழ் முத்தம் தன் மாமனிடம் வாங்கிய பின்னர் அவனிடம் கண்ணாமூச்சி ஆடிக் கொண்டிருந்தாள் காயத்ரி .

அன்றைய நாள் அவளை விட்டவன், எப்படியும் அடுத்த நாள் பொட்டு வைத்து விடச் சொல்லி தன்னிடம் தானே வந்து நிற்பாள் என்று காத்திருக்க, காயத்ரி வரவில்லை.

ஸ்ரீதருக்கு தான் தினமும் காலையில் குடிக்கும் காஃபி குடிக்காமல் விட்டால் உடல் நடுங்குவது போல், அவள் நெற்றி தொடாத அவன் விரல்களும் நடுங்க ஆரம்பித்தன. 

இருந்தும் அவளது உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்தவன், கல்லூரி சென்று வரட்டும் மாலை போல் பேசிக்கொள்ளலாம் என்று வயலுக்கு சென்று விட்டான். 

ஸ்ரீதரின் வண்டி சத்தம் கேட்ட பின்னர் தான் அறையை விட்டு வெளியே வந்தாள் காயத்ரி.

எப்போதும் பார்த்து பார்த்து தயாராகுபவள், இப்போது ஏனோ தானோ என்று தயாராகிக் கொண்டு வந்திருந்தாள். நெற்றியில் பொட்டு இல்லை, அவள் தொட்டு வைக்காத பொட்டை வைக்க தோற்றவில்லையோ என்னவோ. 

நேற்றைய தூக்கத்தை தலயணைக்கு தானம் கொடுத்ததால் விழிகள் இரண்டும் சிவந்து காணப்பட்டது.

அவள் சிறு மொட்டு இதழ்களும் வழக்கத்திற்கு மாறாக லேசாக சிவந்து தான் இருந்தது.

காரணம் காளையவன் கொடுத்த முத்தம் மட்டும் இல்லை, இரவு முழுவதும் குறுகுறுத்த தன் இதழ்களை அடிக்கடி அழுத்தி துடைத்து விட்டதன் பலன் அது.

கல்லூரி சென்றவளுக்கு பாடத்தில் சரியாக கவனம் குவியவில்லை. மனம் முழுவதும் மாமனே நிரம்பி வழிந்தான்.

‘அச்சோ மாமா! என்ன பண்ணி வச்சிருக்கீங்க…’ என்று சொல்லி, மேஜையில் இரு கைகளையும் கட்டிக் கொண்டு, அதில் கன்னத்தை வைத்து தனக்குள்ளேயே கேட்டுக் கொண்டாள். 

அவன் நேற்று கொடுத்த இதழ் முத்தம். அதை நினைத்துப் பார்க்கும் போது இப்போது தேனாய் தித்தித்தது. கீழ உட்டை கடித்து வெக்கப்பட்டு கொண்டாள். 

‘மாமா எனக்கும் உங்கள ரொம்ப பிடிக்கும்.. ஆனா என்ன கல்யாணம் பண்ணிக்கிற அளவுக்கு உங்களுக்கு என்ன பிடிக்கும்னு இப்ப தான் தெரியுது…’ என்று தனக்குள் சொன்னவளுக்கு 

அவள் இன்னொரு மனமோ (‘உன்ன கட்டிக்கிறேன்னு அவர் சொல்லவே இல்லையே…) என்க 

‘ஆமால்ல.. என்ன ரொம்ப பிடிக்கும்னு முத்தம் கொடுத்தாங்க.. லிப்ல கிஸ் பண்ணுனா ப்ரொபோஸ் பண்ணுன மாதிரி தானே…’ என்று இவள் பதில் சொல்ல 

(‘ஐ லவ் யூ கூட சொல்லல இது ப்ரொபோஸலா…’) என்று அது கேட்க 

‘அதுதானே! ரொம்ப பிடிக்கும்னு முத்தம் கொடுத்தாங்க.. கட்டிக்கிறேன்னு சொல்லவும் இல்ல.. ஐ லவ் யூ சொல்லவும் இல்ல…’ என்று இவள் மனதுக்குள் வாட 

(‘சரி இப்ப போய் கேட்டுடு’) என்று அது சொல்ல 

‘எப்படி முடியும்.. மாமாவ பாத்தாலே படபடப்பா வருது.. வெக்கமா வருது.. இதெல்லாம் எனக்கு புதுசு.. ரொம்ப தவிப்பாவும் குழப்பமாவும் இருக்கு…’ என்று இவள் சொல்ல 

(‘அப்போ ஒரு தெளிவு கிடைக்கிற வரைக்கும் தள்ளியே இரு.. முத்தம் கொடுக்க தெரிஞ்சவருக்கு உன்ன தேடி வந்து எதுக்கு கொடுத்தேன்னு சொல்லி புரிய வைக்க தெரியாதா என்ன…’) என்று காயத்ரியை நன்கு குழப்பி விட்டது அவளது மற்றும் ஒரு மனது. 

கல்லூரி விட்டு வீட்டிற்கு வந்தவள் தன் அறையிலேயே அடைந்து கொண்டாள்.

மாலை வீட்டிற்கு வந்த ஸ்ரீதர் எப்போதும் போல் உள்ளே வரும்போது “காயூ குட்டி!…” என்று அவளை அழைத்துக் கொண்டே வர, 

கூப்பிட்ட குரலுக்கு வந்து நிற்கும் அவன் புள்ளிமான் துள்ளி குதித்து வரவில்லை. 

அதற்கு பதிலாக பத்மினி தான் காஃபியுடன் வந்தவர் “இந்தாடா.. அவ காலேஜ் இருந்து வந்ததுல இருந்து ரூம்லயே இருக்கா.. அசதியா இருக்குமோ என்னவோ.. ரெட்ட படிப்பு படிக்கிறால்ல…” என்று சொல்ல 

அசதி அதிகப்படியான படிப்பு சுமையினால் கிடையாது, அவன் கொடுத்த ஒற்றை முத்தத்தை சுமக்க முடியாமல் தான் ஒழிந்து இருக்கின்றாள் என்பது அவனுக்கு மட்டும் தானே தெரியும். 

எதுவும் கூறாமல் தமக்கையிடம் காஃபியை வாங்கி பருகியவன், “சரி வந்து ரொம்ப நேரம் ஆச்சு தானே.. படிக்கிற ஐடியா இல்லையா என்ன.. கதவ தட்டி வரச் சொல்லுக்கா…” என்று சொல்ல 

பத்மினியும் சென்று பூட்டி இருந்த கதவை தட்டியவர் “காயத்ரி எவ்வளவு நேரம் தான் படுத்திருப்ப.. எந்திரிச்சு வா காஃபி குடிக்கலாம்…” என்று கூப்பிட, 

காயத்ரியும் வெகு நேரம் அறையிலேயே அடைந்து கிடக்க பிடிக்காமல் வெளியே வந்தாள்.

அவள் அறைக் கதவையே பார்த்துக் கொண்டிருந்தவன், அவள் வரவும் அவளை ஆழ்ந்து பார்க்க, ஒரு நிமிடம் ஹாலில் இருந்தவனை பார்த்து விட்டு தலையை குனிந்து கொண்டாள்.

அவனே சென்று அவளை அழைத்து இருக்க முடியும், அவன் குரல் கேட்டால் நிச்சயம் உள்ளிருந்தே பதில் சொல்லிவிட்டு, வெளியே வராமல் இருந்து விடுவாள் என்பதால் தான் தமக்கையை அனுப்பி வைத்தான். 

அவன் நினைப்பு சரிதான் என்பது போல் இப்போது காஃபி குடிக்கத்தான் வேண்டுமா என்ற தடுமாற்றத்தோடு, ஹாலில் அமராமல் அன்னையின் பின்னே மறைந்து கொண்டே சமையல் அறைக்குள் சென்று விட்டாள்.

அவளது நடவடிக்கையில் அவனது மீசைக்கடியில் கள்ளச் சிரிப்பு, 

காஃபியை குடித்து முடித்தவன், தனது அறைக்குச் சென்ற மறுநொடி, “காயூ குட்டி!.. காயூ!…” என்று அவள் பெயரை ஏலம் போட 

காயத்ரிக்கு பதிலாக வந்து நின்றது பத்மினி தான். அவள் தான் மாமனை அவன் அறையில் சந்திக்க துணிவு இல்லாமல் தாயை அனுப்பி வைத்தாள்.

“என்னடா?…” என்று வந்து நின்ற தமக்கை பார்த்து திருத்திருவென விழித்தவன் 

“அது.. என்னோட வேஷ்டிய காணோம்.. காயூ தானே மடிச்சு வச்சா அதான் கூப்பிட்டேன்…” என்று சொல்ல 

“இப்ப என்ன உன் வேட்டிய காணோம்.. அத நான் எடுத்து தர மாட்டேனா…” என்று சொன்ன பத்மினி அலமாரியை திறந்து அதில் இருந்தவற்றை எடுத்துக்காட்ட

“இல்ல.. இது இல்ல…” 

“அப்ப இதுவா…” என்று மற்றொன்றை எடுத்துக்காட்ட 

“இல்ல இதுவும் இல்ல…” என்று சொல்லி அவரை ஒரு வழியாக்க, 

“என்னடா ஏதாவது ஒன்ன கட்ட வேண்டியது தானே.. எப்பவுமே நீ கூப்பிட்ட குரலுக்கு, ஆலம்பனானு வந்து நிக்கிறவ, இன்னைக்கு என்னவோ சோந்து போய் ஒரே இடத்துல இருக்காளேனு நான் வந்தேன்.. இதுக்கு மேல என்னால தேட முடியாது.. அவளையே அனுப்பி வைக்கிறேன்…” என்று பத்மினி சொல்ல 

“நானும் அதுக்கு தான் அவள கூப்பிட்டேன்.. மடிச்சு வெச்ச அவ வந்தா அடுத்த நிமிஷமே எடுத்து கொடுத்துடுவா…” என்று ஸ்ரீதர் சொல்ல 

“சரி இரு, அவளையே வரச் சொல்றேன்…” என்ற பத்மினி கீழே சென்று 

காயத்ரியிடம் “அடியே அவனோட வேட்டி எதுவோ வேணுமாம்.. இருந்தது எல்லாத்தையும் எடுத்து போட்டுட்டேன்.. அது எதுவும் இல்லைன்னு சொல்றான்.. உனக்கு தான் தெரியுமாம் போய் என்னன்னு பாத்து எடுத்துக் குடு…” என்று சொல்ல 

அவள் தான் எல்லாவற்றையும் நேர்த்தியாக அடுக்கி வைத்திருந்தாளே, மேலோட்டமாக பார்த்தாலே எடுத்து விடலாம். அப்படி இருந்தும் தான் வேண்டும் என்று அழைக்கின்றான் என்றால் எதற்கு என்று புரியாமலா போகும்.

இத்தனை நாட்கள் இல்லாமல் அவன் அறைக்கு செல்ல வேண்டும் என்றதும் கால்கள் பலம் இழந்ததைப் போல் நடுங்கியது, இதயம் வேகமாக துடிக்க, உடல் முழுவதும் சீறிப்பாய்ந்த இரத்தத்தினால் வியர்வை முத்துக்கள் அரும்ப ஆரம்பித்தது. 

அவள் அணிந்திருந்த சுடிதாரை இரண்டு பக்கமும் இறுக பிடித்து கசக்கி, தன் உள்ளங்கை வியர்வையை துடைத்துக் கொண்டவள், கைகள் இரண்டையும் பிசைந்து கொண்டே அவன் அரை கதவு வரை வந்தாள்.

கதவு நிலையில் ஒற்றை கையை வைத்து, லேசாக எட்டி அவன் எங்கே என்று கண்களால் தேடிக் கொண்டே, நிலையில் இருந்த கையை எடுத்து முன்னுக்கு இரண்டு மூன்று அடிகள் வைத்து, விழிகளை அறையில் ஓட விட, பின் இருந்து கதவு சாத்தப்பட்டது. 

இதயம் தூக்கி வாரி போட திடுக்கிட்டு திரும்பி பார்த்தாள்.

ஸ்ரீதர் தான் வேஷ்டி மற்றும் கையில்லாத பனியனுடன், தோளில் துண்டை போட்டுக்கொண்டு, கைகள் இரண்டையும் கட்டிக்கொண்டு அவளையே பார்த்திருந்தான். 

“என்னடி சிங்காரி! மாமன அவாய்ட் பண்ற போல…” என்று புருவத்தை உயர்த்தி கேட்க 

“ஹா! ம்ம், ம்ஹூம்…” என்று மட்டும் தான் பதில் வந்தது அவளிடம்.

“என்ன ம்ம், ம்ஹூம்?…” என்று ஆழ்ந்த குரலில் கேட்டுக் கொண்டே ஒவ்வொரு அடியாக எடுத்து வைத்து அவன் முன்னேற, 

அவனை விழி விரித்து பார்த்துக் கொண்டே ஒவ்வொரு அடியாக எடுத்து வைத்து பின்னால் சென்றாள் பெண்ணவள். 

அவளின் மருண்ட விழிகளும், சிவந்த கன்னங்களும் என்று சம்மந்தம் இல்லாத அவள் உணர்வுகளை இதழ்களுக்குள் ஒழிந்த புன்னகையுடன் பார்த்தபடி “என்னாச்சுடி.. எதுக்கு இந்த பயம்?…” என்று கேட்க 

“அது.. நேத்து.. முத்தம்…” அவள் வார்த்தைகள் கோர்த்துக் கொண்டே பின் இருந்த சுவரில் முட்டி நிற்க, 

தன் இரு கைகளையும் அவளின் இரு பக்கமும் வைத்து, அவளை சுவற்றுடன் சிறை பிடித்தவன், தன் சூடான மூச்சு காற்றை அவள் முன் உச்சியில் மோத விட்டு, “ஏன் பிடிக்கலயா?…” என்று கேட்க 

அவனின் நெருக்கத்தில் நெஞ்சு படபடவென அடித்துக் கொள்ள, இமை தாழ்த்தி நின்றிருந்தவள், அவனை நிமிர்ந்து பார்க்க 

“மாமன கட்டிக் மாட்டயா?…” என்று கேட்டவன் சற்று தயங்கி “வயசு கூடனு நினைக்குறயா?…” என்று கேட்க 

“மாமா!…” என்று அவனை கட்டிக் கொண்டவள் “நேத்து புடிச்சிருக்குனு சொன்னீங்க, அதான் குழப்பத்துல இருந்தேன்.. என் மாமான கட்டிக்க எனக்கு கசக்கவா போகுது…” என்று சொல்ல 

அவளாக தன்னை அணைத்து, மார்பில் தலை சாய்த்து, தன் மனதை கூற, சந்தோஷத்தில திக்கு முக்காடி போனான் ஆடவன். 

அவள் கன்னங்கள் இரண்டையும் தன் கைகளில் தாங்கியவன் “பிடிச்சிருக்குன்னு சொல்லி லிப் கிஸ் பண்ணி இருக்கேன்.. இதுல என்ன குழப்பம்.. சரி இப்போ தெளிவா சொல்றேன் நல்லா கேட்டுக்க.. ஐ லவ் யூ!.. நீ எனக்குள்ள வந்து ரொம்ப நாளாச்சு.. உள்ளுக்குள்ள இருந்துட்டு என்னைய ரொம்ப ஆட்டி படைச்சுட்ட.. இந்த காதலோட தனியா போராட முடியல.. நீயும் கூட துணைக்கு வாரயா?.. என்ன கல்யாணம் பண்ணிக்க சம்மதமா?…” என்று அவன் ஒட்டுமொத்த காதலையும் கண்களில் தேக்கி, உருக்கமாக கேட்க 

அவன் வார்த்தைகள் கொடுத்த கிளர்ச்சியையும், அவன் பார்வை வீச்சையும் தாங்க முடியாமல், இமைகளை பட்டாம்பூச்சியாக அடித்துக் கொள்ள, அவன் முகம் பார்த்து பதில் சொல்ல முடியாமல் நாணம் வந்து தடுக்க,

அவள் பார்வையை அவன் பரந்த மார்புக்கு மாற்றியவள் “மாமா! விடுங்க…” என்று சிணுங்க 

“முடியாது, பதில் சொல்லு…” அவன் அடம்பிடிக்க 

“நான் சொல்ல தான் வேணுமா.. நான் உங்க காயூ குட்டி மாமா…” 

“வேணாம் தான்.. அதான் நேத்து கேக்காமலே முத்தம் குடுத்தேன்.. அதுக்குத்தான் மேடம் என் முன்னாடியே வராம ஆட்டம் காட்டுனீங்க…” என்று கொடுப்பினுள் நாக்கை சுழற்றி சொல்ல

“அது.. சட்டென இழுத்து வச்சு கொடுத்தா, பயம் வரும்ல.. இப்போ கூட இப்படி புடிச்சு வச்சுக்கிட்டு பதில் சொல்லுனா எப்படி மாமா…” என்று அவள் நெளிய 

அவள் கன்னத்தில் இருந்த கைகள் இரண்டையும் எடுத்தவன், சுவற்றில் கையை குற்றி, அவள் முன்னுடலோடு முட்டி நின்றவன் “சரி இப்போ சொல்லு…” என்க 

அவனின் இவ்வாறான தொடுகையில், உடல் முழுதும் மின்சாரம் பாய, எங்கிருந்து வார்த்தைகள் வர, இதுவரை வந்த சொற்கள் கூட மறந்து போய்விட, வாயை திறந்தால் காற்று மட்டுமே வந்தது. 

அவனை பாவமாக அவள் பார்க்க, குறும்பாக சிரித்துக்கொண்டவன் 

“சொல்லுடி?…” என்றான் இன்னும் அவளை சுவற்றுடன் அழுத்திக்கொண்டே,

அவனுக்குமே பெண்மையின் மென்மைகள் போதையூட்ட, விழிகள் சொருக கிறக்கத்தில் இருந்தான்.

“மாமா!.. மூச்சு.. முட்டுது…” என்று தட்டு தடுமாறி பெண்ணவள் சொல்ல 

“எனக்கும் எங்க எங்கவோ முட்டுது தான்…” என்றவன் இது சரி பட்டு வராது என்று 

அவளை விட்டு சுவரில் சாய்ந்து கொண்டவன், தலையை கோதிக் கொண்டு, ஆழ மூச்செடுத்தவன் 

“இப்போ சொல்லு?…” என்க 

அவன் என்ன கேட்டான் என்பதே மறந்து போக, வேகமாக மூச்சு வாங்கிக் கொண்டிருந்த பாவை 

“என்ன?…” என்று கேட்க 

“அடியே!…” என்று பெண்ணவளை இழுத்து தன் மீது சாய்த்துக் கொண்டவன் 

“என்ன புடிச்சிருக்கா?.. இதெல்லாம் புடிச்சிருக்கா?.. தாய் மாமன் என்றத தாண்டி என்ன உன் புருஷனா பாக்க முடியுமா?…” என்று கேட்டவன் 

“உன் மனசு எனக்கு புரியுது, இருந்தாலும் உன் வாயல சொல்லு…” என்று அவள் கீழ் இதழை தன் இரண்டு விரல்களால் இழுத்து விட்டு கேட்க 

“பருவம் அடைஞ்ச நாள் வச்சு எனக்கு நீங்க தான் மாமா என் உலகமே.. என் உசுரு இருக்கிற வரைக்கும், இந்த கைக்குள்ள பாசமா, பாதுகாப்பா இருக்க போறேன்னா.. என்ன விட அதிர்ஷ்டசாலி வேற யார் இருக்க முடியுமா மாமா…” என்று சொல்லிக் கொண்டே திரும்பி அவன் கைகள் இரண்டையும் எடுத்து, தன் வயிற்றோடு கட்டிக் கொண்டவள் கன்னங்கள் வெட்கத்தில் சிவக்க, “எனக்கு உங்கள கட்டிக்க சம்மதம் மாமா…” என்று சொல்ல 

“நான் நம்ப மாட்டேன்.. நான் கேட்டதுக்காக சம்மதம்னு சொல்ற…” என்று ஸ்ரீதர் சொல்ல 

அவன் கைக்குள்ளாகவே மீண்டும் அவன் புறம் திரும்பியவள் “இல்ல மாமா.. எனக்கு உங்கள ரொம்ப பிடிக்கும்…” என்று சொல்ல 

“இது செல்லாது.. எனக்கு உன்ன ரொம்ப பிடிக்கும்னு நான் நேத்து எப்படி சொன்னேன்.. நீயும் அதே மாதிரி சொல்லு நம்புறேன்…” என்று சொல்ல 

அவன் மறைமுகமாக முத்தம் கேட்கவும் வாயைப் பிளந்தவள் “அஹ்ஹா!, என்னால முடியாது…” என்று சொல்ல 

“அப்போ நம்ப மாட்டேன், போடி!…” என்றவன், அவள் இடையில் தன் இரு கைகளையும் பதித்து, மேலும் தன்னுடன் அவளை அழுத்திக் கொள்ள 

“இது தான்.. போடினு.. விரட்டி விடுறதா…” என்று அவளும் அவனின் கையாலுகையில் மூச்சு வாங்கி கேட்க 

“ஆமா, உனக்கு என்ன புடிக்கும்னா நான் சொன்ன மாதிரி சொல்லு…” என்றவன் அதரங்கள் அவள் கழுத்து வளைவில் பயணிக்க, 

தன் கால்களை நிலத்தோடு அழுத்திய பெண்ணவள் “மாமா!.. முத்தம் கேட்டுட்டு என்னெல்லாம் பண்றீங்க.. இப்படி பண்ணுனா எப்படி?…” என்று புது சுகத்தின் தாக்கத்தில் தடுமாறி ஒரு வழியாக சொல்லி முடிக்க 

“நான் இப்படி தான் பண்ணுவேன்.. வேற இடத்துக்கு என் உதடுகள் போகக் கூடாதுன்னா.. உன் உதட்டுக்குள்ள பூட்டி வச்சுக்க…” என்று சொன்னவனும் அவள் வாசத்தில், ஸ்பரிசத்தில், மதி மயங்கி தான் இருந்தான்.

அவள் கழுத்தில் ஊர்ந்த ஆடவன் இதழ்கள், அங்கு முத்தம் வைத்துக் கொண்டே, கீழே இறங்க, 

அவன் கொடுக்கும் சுக வேதனை தாங்க முடியாதவள், அவன் முகத்தைப் பற்றி, தானாகவே தன் இதழ்களை அவன் அதரங்களுடன் பூட்டிக்கொண்டாள்.

பாலோடு தேன் சேர்ந்ததை போல்… பட்டாம்பூச்சி சிறகு விரித்ததை போல்… 

நிலவை மேகம் உரசுவதை போல்… இனிமையான, இதமான முத்தம்.

பெண்ணவளால் வழங்கப்பட்ட மென் முத்தம், ஆடவனால் வன்முத்தமாக பருவ மாற்றம் அடைந்தது.

கடலோடு நதி சேர்ந்ததை போல்… கன்று குட்டி தாய் மடி முட்டியதை போல்… 

கரையோடு கடலலைகள் அடித்துக் கொண்டதை போல்… ஆழமான, ஆவேசமான, நீளமான முத்தம்.

 

error: Alert: Content selection is disabled!!