Skip to content
இன்றோ, அதெல்லாம் முடிந்த கதையாயிற்று, கேள்வி கேட்டுக்கொண்டு வரும் வேலை வேண்டாம் சரியோ என்று, மனத்துக்கு அதட்டல் விட்டுக்கொண்டான்.
எல்லாமே , தேம்ஸ் பாலத்தில் மூச்சு வாங்க வாங்கப் பரிதவிப்போடு ஓடிக்கொண்டிருந்தவளை இன்னார் என்று அடையாளம் கண்டுகொண்ட கணத்தில் தொடங்கியது. ‘எனக்கு நீ நெருக்கமானவள்’ என்று நினைக்க நொடிகள் போதும் என்பவனாயிற்றே!
அக்கணமே, அவன் இதயத்தின் ஆழத்தில் எங்கோ தனக்கென்று ஒரு இடம் பிடித்துச் சுருண்டு கிடந்த அவள்பாலான உணர்வுகள் மேலெழுந்திருந்தன. நாள்கள் கடக்க கடக்க அவன் வசமிருந்த இதயம் அந்தக் குட்டி உணர்வுக் குவியல் வசத்தில் அகப்பட்டுப் போயிற்று.
இதெல்லாம் சாத்தியமா? நீ நினைத்தால் சரியா? அவள் இதயம் அவள் வசம்தான் இருக்கிறது என்பதில் என்ன நிச்சயம் உனக்கு என்றெல்லாம் கேள்விகள் எழாதும் இல்லை. அந்தப் பிடிவாதம் கொண்டவனோ எதற்குமே பதில் சொல்ல முயலவில்லை. அந்தளவுக்கு அவன் நெஞ்சுக்கூட்டினுள் உள்ள அவன் குட்டி இதயத்தைத் தன் வசமாக்கிவிட்டிருந்தாள், துர்க்கா. அவ்வளவும்தான்.
பளிச்சென்று எரிந்த மின்விளக்குகள் துணையோடு கடைக்கண்ணால் அவளைப் பார்த்தான், ஏதன். அவள் முறைத்த முகம் துல்லியமாக அவள் மனத்தைச் சொல்வதாகப்பட்டது. அவனுக்கு உரித்தான அவள் மனம் வெடுசுடுவென்று இருக்கிறதே! அந்த வலு உரிமையான எண்ணமும், விசுக்கென்ற நடையோடு கூடிய அவள் உடல் மொழியும் சிரிப்பை உண்டுபண்ணியது. மிகவும் கவனமாக அடக்கிக்கொண்டான்.
சென்ற வேகத்தில் கார் கதவைத் திறந்து அவள் ஏறும் வரை காத்திருந்தான். அவளோ, கணம் தயங்கினாள், ஆனாலும் அவன் முகம் பார்க்கவில்லை. ஏறியமர்ந்துவிட்டாள்.
“தேங்க்யூ!” என்ற அவள் முணுமுணுப்பை வாங்கிக்கொண்டே வந்து சாரதியாசனத்தை நிறைத்தவன் பார்வை, முறைப்பில் இறுகிச் சற்றே குவிந்திருந்த அவள் உதடுகளில் பட்டு அவசரமாக விலகிக்கொண்டது. தாமதியாது காரை இயக்கினான். அவனுள் வந்த தடுமாற்றத்தை இலாவகமாக மறைத்து நிதானமாகச் செலுத்திப் பாதையில் ஏறினான்.
“நீ டாட் கதைக்கேக்க சொல்லியிருக்கோணும் துர்கா.” திடுமென்று ஆரம்பித்தான்.
அதுவரை நேரே பாதையைப் பார்த்திருந்தவள், அவன் எதைக் குறிப்பிடுகிறான் என்று பிடிபடாததில் புருவ முடிச்சோடு பார்த்தாள்.
அவன் பார்வையும் அவள் முகத்தில் மோதி முன்னே நேராகியது.
‘வலு சீரியஸான ஆள் போல இருக்கிற வடிவப்பார்.’ மனத்துள் சொல்லிக்கொண்டான்.
“இல்ல, உனக்கு எங்க வேலை செய்ய விருப்பம் எண்டு சொன்னனீதானே? அந்த செக்சனில வேலை தரேல்ல எண்டோன்ன சொல்லி இருக்கோணும்தானே?” என்று படபடத்தவனைக் கோபமாகப் பார்த்தாள்.
“என்ன நீங்க இப்பிடிக் கதைக்கிறீங்க? சேர்வ் பண்ணுறது வேலை இல்லையா என்ன? முதல் எவ்வளவு பொறுப்பாச் செய்யோணும்? இஞ்ச பாருங்க, எனக்கு உண்மையில் ரெஸ்டோரண்ட் வேலைகளில முன் அனுபவம் இல்ல. அப்படியிருக்க அவர்…அந்தப் பீட்டர் சொன்னதில ஒரு பிழையும் இல்ல. உண்மையாவே இப்ப விருப்பமாத்தான் இந்த வேலையச் செய்யிறன். இதில நீங்க இப்பிடி ரியாக்ட் பண்ண அங்க ஒண்டுமே இல்லை.” என்று அவள் அறுத்துறுத்துச் சொன்னவிதம் அவன் வாயைக் கட்டிப் போட்டிட்டு.
தான் சொன்னத்திற்கு ஏதாவது பதில் சொல்வானோ என்று அவளையும் மீறியே எதிர்ப்பார்த்தது, அவள் மனம். அவன் முகம் பார்த்தாள். சில நொடிகள்தான் அங்கிருந்த இறுக்கத்தில் இவள் பார்வை நேராகியிருந்தது.
அதன்பின் அவனாகக் கதைப்பான் என்று எதிர்பார்த்தாள். நடக்கவில்லை. இவளுக்கு அவனோடு என்ன கதைக்க இருக்கு என்றும் விளங்கவில்லை.
வார்த்தைளற்ற மௌனத்தின் ஆட்சியில் பயணித்து அவள் வீட்டின் முன்னால் காரை நிறுத்திவிட்டு அவளைப் பார்த்தான்,ஏதன்.
அந்தப் பார்வை, அதில் இருந்த தீர்க்கம், ஆழம், அவளுக்கோ எதுவோ போலிருந்தது. துர்கா மிகவுமே தடுமாற்றமாக உணர்ந்தாள். ஆண் பெண் என்ற வேறுபாடு அவள் பார்த்ததில்லை. அப்படிப்பட்ட அறிமுகங்களில், பழக்கங்களில் நல்ல நட்பாகிய ஆண்கள் எவரும் அவள் இதயம் வரை வந்து பிரத்தியேகமாகக் கவனம் பெற்றதில்லை, மெலிதாகத் தட்டிச் சென்றதும் இல்லை. நன்றாகச் சைட் அடிப்பாள், அதையும் சுவாரசியமாக கலப்பாக வீட்டில் பகிர்ந்துகொள்ளுவாள். அந்த எல்லையில் அது நின்றும் விடும்.
இப்போ, அவளையறியாது எச்சிலை விழுங்கி , பார்வையை அப்பாலும் இப்பாலும் நகர்த்தித் தன்னைச் சுதாரித்தவள், “என்ன அப்பிடிப் பார்க்கிறீங்க?” கேட்டவள் குரலில்,பார்வையில் துடுக்குத் தெரிந்தது.
அவன் உதட்டோரம் நகைப்பில் சுருங்கியது. இரசனைமிக்கப் பார்வையும் நெற்றி ஏறியிறங்கியதும், ‘நீ ஏன் பெண்ணே என்னை சைட் அடிக்கக்கூடாது’ என்று கேட்டுவிட்டதா? துர்கா பக்கென்று அதிர்ந்து விட்டாள்.
“ ஐயோ என்ர அம்மா! வேணாம் இந்த விபரீத விளையாட்டு!” தமிழால் சொன்ன வேகத்தில் இறங்கிவிட்டாள்.
கணமே என்றாலும் அவள் விழிகளில் தெரிந்த இரசனை இவனை இதமாய் வருடியது. தானும் இறங்கினான். மிக்க நன்றி என்றவள், விடைபெற்று, ஒரு இரவு வணக்கத்தைச் சொல்லிவிட்டு நகர எத்தனித்தாள்.
“துர்கா!” என்றபடி அவள் அருகண்மையில் வந்து நின்றவன், தன் வலக்கரத்தை அவள் புறமாக நீட்டினான்.
அவள் கை கொடுத்தாள். மென்மையாகப் பற்றியவன், “எப்ப என்ன எண்டாலும் எனக்குச் சொல்லலாம் துர்கா, எப்பவும் உனக்காக வர நான் இருக்கிறன் எண்டு மறந்திராத சரியா?” அவள் முகம் அதிர்ந்தது போலிருக்கவும், “ஃப்ரெண்ட் எண்டா இதைக் கூடச் சொல்லாட்டி எப்பிடி?” அவன் இடக்கண் கண்ணிமைக்கும் கணங்கள் சிமிட்டிவிட்டு பழையபடியாகின. அதேநேரம், கரத்தில் சிறு அழுத்தம் கொடுத்தவன் விடுவித்தும் இருந்தான்.
“சந்திப்பமே, குட் நைட்!” அவள் தோளில் சிறு தட்டோடு நடந்தவன் தாமதிக்கவில்லை, விர்ரென்று கிளம்பிய கார் பார்வையிலிருந்து மறையும் வரை நின்றுவிட்டுத்தான் உள்ளே சென்றாள் துர்கா.
அவளே பிரித்துணரா வகையில், அந்தக் கண்சிமிட்டலும் அக்கணம் ஒலித்த “சந்திப்பமே” என்ற ஒற்றைச் சொல்லும் ஏதோவொரு வகையில் அவள் இதயத்தை உரசிச் சென்றிருந்தன., கல
error: Alert: Content selection is disabled!!