ஒரு கூட்டு கிளிகளின் கூட்டம்
அத்தியாயம் -1
அதிகாலை நேரம் குளித்து முடித்து சமையலறையில் தேநீரை தயாரித்துக்கொண்டிருந்தார் அகல்யா அந்த சமயத்தில் பின்னால் இருந்து வந்து அவரை கட்டிக்கொண்டாள் அவளது மூத்த மகள் கீர்த்தனா.
“என்னடி இவ்ளோ நேரத்தோட எழுந்திரிச்சிட்ட” என்று அவர் கேட்க “அம்மா நீங்க போடுற காஃபி என்னை எழுப்பி விட்டுருச்சுமா” என சொல்ல “ரொம்ப ஐஸ் வைக்காத உன்ன பத்தி எனக்கு தெரியாதா வாலு இப்ப என்ன பண்ணனும் ஏன் காலங்காத்தால வந்து ஐஸ் வைக்கிற”
” அம்மா உனக்கு வர வர என் மேல மரியாதையே இல்லை என்னை மதிக்கவே மாட்ற”
“ஆமா உனக்கு மரியாதை ஒன்னு தான் குறைச்சல் போடி போய் இந்த காஃபிய உங்க அப்பாவுக்கு கொடுத்துட்டு வா போ” என அவர் விரட்ட “சரி சரி ரொம்ப பண்ணாத நான் போறேன் இரு” எனக் கூறி தன் தந்தைக்கு காபி எடுத்துச் சென்றாள்.
தன் தந்தைக்கு காஃபி கொடுத்துவிட்டு தனது அறை நோக்கி சென்றாள் கீர்த்தனா. அங்கு அவளது தங்கை அவளது கரடி பொம்மையை கட்டிப்பிடித்துக் கொண்டு ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள். அவளைப் பார்த்து கடுப்புற்றவள் “எருமை மாடு மணி என்ன ஆச்சு இன்னும் எந்திரிக்காமல் என்ன பண்ற எழுந்திரிடி காலேஜ் நேரமாச்சு” என அவளை உலுக்கினாள் “என்னடி என்ன நேரமாச்சு” என அவள் கூற “ஒன்பது மணி ஆயிடுச்சு”என அவள் கூற பதறி அடித்து எழுந்த அவளது தங்கை மோஹிதாவை பார்த்து சிரித்த கீர்த்தனா “சும்மா சொன்னேன் டி மணி ஆறு தான் ஆகுது போய் குளி போ” “ஏண்டி உனக்கு இந்த கொலவெறி நீ எல்லாம் ஒரு அக்காவா உன்னை என்ன பண்ணுறேன்னு பாரு” என கூறியவள் தலையணையை தூக்கி எறிய இவள் அவளை அடிக்க என கலவரமாக ஆரம்பித்தது அந்த வீட்டின் காலைப்பொழுது.
அவர்களின் சத்தம் கேட்டு அவர்களுடைய அறைக்கு வந்த அகல்யா அவர்கள் இருவரையும் விலக்கி விட்டு இருவரையும் திட்டி விரட்டினார் மோஹிதா மீண்டும் தூங்கப்போக “ஏய் தூங்குமூஞ்சிப் போய் குளி டி மறுபடியும் தூங்கப் போவுது எருமை” என அகல்யா திட்டுவதையும் பொருட்படுத்தாது மீண்டும் படுக்கையில் விழுந்தாள் மோஹிதா இது எல்லாம் திருந்தாது என எண்ணிய அகல்யா அந்த இடத்தை விட்டு விலகி மீண்டும் சமையலறைக்குள் நுழைந்தார். ஒரு எட்டு மணி அளவில் இருவரும் ஆயத்தமாகி உணவு அருந்த வந்தனர் அவர்கள் அம்மா அகல்யா அவர்களுக்கான காலை உணவாக இட்லி சமைத்து வைத்திருக்க அதனை உண்டு முடித்து கிளம்ப எத்தனைக்க “ஏய் கீர்த்தி இருடி எங்க போற வீரா இன்னும் வரல கொஞ்சம் வெளியே போய் இருக்கான் ஒரு பத்து நிமிஷம் வெயிட் பண்ணு” என அகல்யா கூறவும் கீர்த்தனா “சரி” என்று விட மோஹிதா “அம்மா இது எந்த ஊர் நியாயம் இவளை மட்டும் மாமா கொண்டு போய் ஹாஸ்பிட்டல்ல விடுவாராம் நான் மட்டும் தனியாக போகனுமா”
“ஏய் நீ எங்கடி தனியா போற உங்க அப்பா கூட தானடி போற”
“சரி சரி விடு ஆனாலும் இந்த மாம்ஸ் என்ன ஒரு ஆளாக் கூட மதிக்க மாட்டாங்க இவள மட்டும் டெய்லி கூட்டிட்டு போறாங்க கேட்கிறதெல்லாம் வாங்கி தராங்க நான் யார் தான் இந்த வீட்ல” என்ன மோஹிதா கேட்க “நான் சொன்ன இல்ல மோஹி உன்னை நம்ம வீட்டு பக்கத்துல இருக்க குப்பை தொட்டியில இருந்து தான் தூக்கிட்டு வந்தாங்கன்னு கேக்குறியா நீ” என்றால் கீர்த்தனா. கீர்த்தனாவை பார்த்து “போடி” என பழிப்பு காட்டிவிட்டு காலேஜ் செல்ல தந்தையுடன் வண்டியில் ஏறி புறப்பட்டாள் மோஹிதா. அவர்கள் புறப்படவும் எதிரே புல்லட்டில் ஆண்மைக்குரிய முழு இலக்கணமாய் வந்து கொண்டிருந்தான் வீரராகவன் அவனை கண்டதும் மோகிதாவின் தந்தை வெங்கடாசலம் “வா வீரா போன வேலை என்ன ஆச்சு”
“எல்லா ஓகே தான் மாமா அந்த பாலா தான் சும்மா குடைச்சல் கொடுக்கிறான் விஜய்ய விட்டு என்னன்னு பாக்க சொல்லி இருக்கேன் அவன் பாத்துப்பான்” “ஆ சரி வீரா உள்ள போ கீர்த்தி உனக்காக தான் வெயிட் பண்றா” “ஆ சரி மாமா” எனக்கூறி அவர் சென்று விட வீரராகவன் கீர்த்தனாவை ஹாஸ்பிட்டலிற்கு அழைத்து சென்றான்.
மதுரை அலங்காநல்லூர் கிராமத்தில் வசிக்கும் சுந்தரேசன் குடும்பத்தை அறியாதவர்களே அந்த ஊரில் இருக்க முடியாது மதுரை நகரில் உள்ள பெரிய மனிதர்களுள் அவரும் ஒருவர் அவரது மனைவி தெய்வானை பார்க்கும்போது மதுரை மீனாட்சி அம்மையை பார்ப்பது போன்று தோன்றும் அவரது குணத்திலும் மீனாட்சி அம்மனையே ஒத்திருந்தார். சுந்தரேசன் தெய்வானை தம்பதிகளுக்கு மூன்று பிள்ளைகள் மூத்த மகன் கதிரேசன் அவரது மனைவி மீனாட்சி. கதிரேசன் மீனாட்சி தம்பதிகளுக்கு மூன்று பிள்ளைகள் அஸ்வந்த், பிரதிக்ஷா,மித்ரா தேவி. தெய்வானை சுந்தரேசன் தம்பதிகளுக்கு இரண்டாவது மகள் அகல்யா அவரது கணவர் வெங்கடாசலம் அவர்களுக்கு மூன்று பிள்ளைகள் கீர்த்தனா, மோஹிதா,சித்தார்த்.
தெய்வானை சுந்தரேசன் தம்பதிகளின் இளைய புதல்வன் வீரராகவன் வயது 30 தாண்டியும் இன்னும் திருமணம் ஆகவில்லை.
தெய்வானைக்கு தன் மகனுக்கு தனது மூத்த பேத்தி கீர்த்தனாவை திருமணம் செய்து வைக்க ஆசை அதைப் பற்றி அவர் பலமுறை சுந்தரேஸ்வரனிடம் கூறியுள்ளார் அதற்கு அவர் “பைத்தியம் மாதிரி பேசாத தெய்வா வீரா வயசு என்ன கீர்த்தி வயசு என்ன அதைவிட நம்ம வீரா ஓட படிப்பும் வேலையும் கீர்த்திக்கு எப்படி சரியா வரும் அவ டாக்டரா இருக்கா இவன் நம்ம ஊர்ல விவசாயம், ரைஸ்மில்னு சுத்துறான் ஸ்கூல் கூட முடிக்கல அவனுக்கு எப்படி அவள கல்யாணம் பண்ணுறது இத பத்தி நாம ஏதாவது பேசி கீர்த்திக்கு பிடிக்காமல் ஏதாவது சொன்னா நம்ம புள்ள தான் கஷ்டப்படுவான் நம்ம மகனுக்கு ஏத்த மாதிரி மகாலட்சுமி மாதிரி ஒரு பொண்ணா பார்த்து கல்யாணம் பண்ணி வைப்போம்”எங்க இவன் யாரை காட்டினாலும் வேணாம்னு சொல்றானே” என்றார் தெய்வானை. “கவலைப்படாத தெய்வா அவனுக்காக ஒருத்தி கண்டிப்பாக அவன் வாழ்க்கையில வருவா நீ ரொம்ப கவலைப் படாதே” என சமாதானம் செய்தார் சுந்தரேசன்.
கதிரேசன் வீட்டில் கதிரேசன் காலையிலே வயலுக்கு கிளம்பி விட அஷ்வந்த் பிரதிக்ஷா இருவரும் காலை உணவு உண்ண உணவு மேசைக்கு வந்த சமயம் வந்து ஏற்கனவே 5 பூரியை உண்டு விட்டு அடுத்த பூரிக்காக காத்துக் கொண்டிருந்தாள் மித்ரா. “ஏய் கேப்ஸிகம் என்ன காலையிலேயே ஒரு கட்டு கட்டுற போல பார்த்து ஸ்கூல்ல போய் தூங்க போற” என அஸ்வந்த் அவளை வம்பு இழுக்க “ஏய் என்ன கேப்ஸிகம் சொல்லாதடா எரும” என்றாள் மித்ரா “ஆமா அச்சு அவ பூசணிக்காய் மாதிரி இருக்கா அவள கேப்ஸிகம்னு சொன்னா கோபம் வராதா” என்று பிரதிக்ஷா கூற “அம்மா இந்த ரெண்டு பக்கிங்களையும் பாருங்களேன்” என்று அவர் அம்மா மீனாட்சியிடம் முறையிட்டாள் மித்ரா. “ஏய் உங்க ரெண்டு பேருக்கும் என்னடா பிரச்சனை” என அவர்களை திட்டி விட்டு “அதுங்க கெடக்குதுங்க பைத்தியங்கள் நீ சாப்பிடு செல்லம்” என மேலும் இரண்டு பூரியை வைத்துவிட்டு சென்றார். “அம்மா நீங்க அவளுக்கு ஒய்லியான ஃபுட் நிறைய குடுக்கிறீங்க அத எல்த்துக்கு நல்லது இல்ல”
“டேய் டாக்டர் அதெல்லாம் எனக்கு தெரியும் அவளுக்கு எல்த்தி புட்ஸ்சும் கொடுக்க தான் செய்றேன். இப்ப இதெல்லாம் சாப்பிடாம கிழவி ஆனதுக்கு அப்புறமா சாப்பிட போறா உனக்கு வேணும்னா சாப்பிடு இல்லன்னா இடத்த காலி பண்ணு” என்று மீனாட்சி சொல்ல “நல்லது சொன்னா யாரு கேக்குறா சரி சரி எனக்கு பூரி” டேய் அண்ணா இப்ப பூரி அன் எல்த்தி இல்லையா? என்றாள் பிரதிக்ஷா. அது எல்லாம் இல்லை என்றான் அஸ்வந்த் போடா கேடி என்று மீண்டும் உண்ண ஆரம்பித்திருந்தாள் மித்ரா. உணவை உண்டு முடித்துவிட்டு மித்து சீக்கிரம் வாடா உன்ன ஸ்கூல்ல விட்டுட்டு தான் நான் ஹாஸ்பிடல் போகணும் என்றான் அஸ்வந்த்.
“இருண்ணா வாரேன்” எனக் கூறி புத்தகப்பையுடன் வந்தவள் “அம்மா பை” (bye) என சொல்ல “பை (bye) செல்லம்” என மீனாட்சி செல்லம் கொஞ்சி அனுப்பி வைக்க அக்காவிடம் வந்தவள் “அக்கா பை (bye)” என்று கூற “பை (bye) டி கேப்ஸிகம்” என கூறி அவளது இருபக்க கன்னத்தையும் கிள்ளி வைக்க “பார்ட் டைம் சைக்கோ” (part time psycho) என தன் அக்காவை திட்டிக்கொண்டு வெளியே வந்தவள் தன் அண்ணனுடன் காரில் ஏறி பாடசாலை நோக்கி சென்றாள்.
கீர்த்தனா அஷ்வந்த் இருவரும் வர்மா ஹாஸ்பிடலில் வைத்தியர்களாக பணிபுரிகின்றனர் இருவரும் சிறுவயது முதலே ஒன்றாகவே சுற்றித்திரிந்ததால் இருவரும் உயிர் தோழர்களாக காணப்பட்டனர் அஷ்வந்த் கீர்த்தனா நட்பை பார்த்து பொறாமைப்படாதவர்களே இருக்க முடியாது எனும் வகையில் அவர்களது நட்பு காணப்பட்டது. மோஹிதா,பிரதிக்ஷா இருவரும் ஆர்கிடெக்சர் இறுதி ஆண்டில் கல்வி பயின்றுக்கொண்டிருந்தனர். மித்ரா சித்தார்த் இருவரும் பாடசாலையில் பிளஸ் டூ வகுப்பில் பயின்று கொண்டிருந்தனர்.மித்ரா தான் அந்த குடும்பத்தின் கடைக்குட்டி. அவளது அண்ணன்மார்களும் அக்காமார்களும் அவளை எந்நேரமும் வம்பிழுத்து கொண்டே இருப்பார்கள் ஆனால் அவர்கள் அனைவருக்கும் மித்ரா என்றால் அதீத பிரியம். பெரியோர்களுக்கு மித்ரா என்றால் அதிக செல்லம் இந்த அதீத செல்லத்தினாலே வெளியுலகம் பற்றி தெரியாத குழந்தையாகவே மித்ரா இருந்தாள். இவர்கள் அனைவரும் வீரராகவன் மீது அதிக பிரியமும் மரியாதையும் கொண்டிருந்தனர் சுந்தரேசன் குடும்பத்தினர் ஏழை பணக்காரன் வேறுபாடு காட்டாமல் அனைவருடனும் சமமாக பழகுபவர்கள். அதனாலே இவர்கள் வீட்டில் வீராகவனுக்கு உதவியாக பல வேலைகளை செய்யும் விஜய்யை அவர்கள் குடும்பத்தில் ஒருவனாகவே கருதினர். அதனாலேயே அவனுக்கு இந்த குடும்பத்தின் மீது அதீத விசுவாசம் இருந்தது. வீரராகவன் விஜய்யை வேலைக்காரனாக பார்த்ததே கிடையாது அவனது தம்பி போலவே விஜய்யை பார்த்தான் விஜய்க்கு பெற்றோர் உறவினர் என எவரும் இல்லை அவனுக்கு இந்த குடும்பத்தை பார்க்கும் போதெல்லாம் அவனின் மனதில் ஒரு ஏக்கமும் வலியும் ஏற்படும் அது எல்லாம் தேவையில்லை நீயும் இந்த குடும்பத்தின் ஒருவன் தான் என்பதை வார்த்தைகளில் சொல்லாமல் செயல்களில் காண்பித்தனர் சுந்தரேசன் குடும்பத்தினர்.

